எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 11, 2014

"பொடி" விஷயம், தொடர்கிறது! அமெரிக்காக் காரங்க எல்லாம் வந்து படிங்கப்பா! :)

நம்ம சகோதர(ரி)ப் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அமெரிக்காவிலே போய் எப்படி சாம்பார்ப் பொடிக்கு அரைச்சீங்க, பகிர்ந்துக்குங்கனு (தெரியாத்தனமா?) கேட்டிருக்காங்க.  சும்மாவே வம்பு வளர்க்கும் நமக்குக் கேட்கணுமா? இப்படியான அழைப்புக்குத் தானே காத்திருக்கோம்! மாவு மெஷினெல்லாம் அமெரிக்காவிலே பார்க்கவே இல்லை.  ஆனால் மாவெல்லாம் கிடைக்குது. எங்கே அரைக்கிறாங்கனு புரியலை! நாங்க அமெரிக்கா போயிட்டா, தமிழ்நாட்டு இட்லி, சாம்பாரை விட்டுடுவோமா என்ன?  அங்கேயும் போய் அதையே தானே சாப்பிடுவோம்.   ஏதோ ஒரு தரம், இரண்டு தரம் இந்தியா வரச்சே சாம்பார்ப் பொடி கொண்டு போகலாம்.  அங்கேயே இருக்கிறவங்க என்ன செய்யறதாம்??

அமெரிக்காவிலே பொடி அரைக்க முதல்லே மிக்சி வேணும்.  ஹிஹிஹி, அந்த மிக்சியும் அமெரிக்க, சீனத் தயாரிப்பாய் இல்லாமல் இந்தியத் தயாரிப்பாக அங்கே உள்ள 120வோல்டுக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யும்படியான தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கணும்.  இப்போத் தான் ப்ரீத்தி, "நான் காரண்டி"னு சொல்லிட்டு இருக்காளே!  அதை நம்பலாம்.  ஜாஸ்தி தொந்திரவு செய்யறதில்லை.  சமர்த்துக்குட்டி!  பிள்ளை கிட்டே அமெரிக்க மிக்சி இருக்கு. அவர் அதைத் தான் நம்புவார்.  ஆனால் மருமகள் நம்ம கட்சி.  ப்ரீத்தியே சிநேகிதி!  என்னதான் ப்ரீத்தி நான் காரன்டினு சொன்னாலும், தும்மலுக்கும், இருமலுக்கும் நான்(அதாவது கீதா சாம்பசிவமாகிய நான்) காரன்டி இல்லை. தும்மல், இருமல் வந்தால் உங்க பாடு!


பொண்ணுட்டயும் ப்ரீத்தி தான்.  ஆகவே தோழர்களே, தோழிகளே, முதல்லே நல்லதொரு மிக்சியைத் தேர்ந்தெடுங்கள். அப்புறமா நீங்க அரைக்கப் போறது சாம்பார் பொடியா, ரசப் பொடியானு முடிவு பண்ணிக்குங்க.  ரெண்டும் ஒண்ணுதானேங்கறவங்க எதுக்கும் கவலைப்படவே வேண்டாம்.  உங்க ஊரிலே இருக்கும் இந்தியன் ஸ்டோரில் கிடைக்கும் ரக, ரகமான மிளகாய்ப் பொடியை வாங்கி எதில் காரம் ஜாஸ்தினு கண்டு பிடிச்சுக்குங்க.  ஏன்னா அதுக்குத் தகுந்த தனியாப் பொடி வேணுமே!

இப்போ முதல்லே கொஞ்சம் போல சோதனைக்கு அரைச்சுப் பாருங்க.  ஒரு சின்னக் கிண்ணம் அதாவது நூறு கிராம் மிளகாய்ப் பொடி என்றால்

அதுக்கு தனியாப் பொடி 300 கிராம்

மஞ்சள் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்

மேலே சொன்ன மூணையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.  தனியே வைக்கவும்.

இப்போ இதுக்கு மேல் சாமான்கள்

து பருப்பு  ஒரு சின்ன குழிக்கரண்டி

க.பருப்பு அரைக்கரண்டி

மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்

இந்த சாமான்களை நன்கு வெயில்(ஹிஹி வெயில் அடிச்சால் உங்க அதிர்ஷ்டம்) காய வைங்க.  சரி, வெயிலே இல்லைனா என்ன செய்யறதா? ஒண்ணும் செய்ய வேண்டாம்.  ஒரு வாணலியை எடுங்க.  அடுப்பில் வைங்க. மேலே சொன்ன து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கோங்க.  வறுத்ததைக் கொஞ்ச நேரம் ஆற விடுங்க.  ஆறிடுச்சா?  இப்போ மிக்சி ஜாரில் போட்டு அரைங்க. மைக்ரோவேவில் வைச்சால் காந்திப்போயிடுது.  நேரம் சரியா செட் பண்ணத் தெரியலை.    ஆகவே வறுக்கிறதே நல்லது. நல்லாப் பொடியானதும் ஏற்கெனவே கலந்திருக்கிற கலவையில் போட்டு நல்லாக் கலங்க.  மறுபடி ஒரு தரம் மிக்சியில் போட்டு ஒரே சுத்து சுத்திட்டு ஒரு காத்துப் புகாத டப்பாவில் போட்டு வைங்க.   அரைக் கிலோ பொடி தேறும்.  இது குறைந்தது பதினைந்து நாட்களுக்கு மேல் வரும்.  இதிலேயே மிளகு, தனியா, துபருப்பு மட்டும் போட்டு அரைச்சால் ரசப்பொடி. ரசப்பொடி பண்ணறதா இருந்தால் கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்க்க வேண்டாம்.  இரண்டுக்கும் ஒரே பொடி எனில் மேலே சொன்னாப்போல் பண்ணி வைக்கலாம்.  செரியா? :)))

25 comments:

 1. பயன் தரும் பொடி விஷயத்திற்கு நன்றி அம்மா!

  ReplyDelete
 2. தொழில்நுட்பத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்திருக்கும் நீங்கள் அமலாக்கப் பிரிவின் கண்காணிப்பு வளையத்தினுள் வருவீர்கள்.
  😊😊😊

  ReplyDelete
 3. இதே அளவுதான் எங்கள் வீட்டிலும். ரசப்பொடி அரைத்த காலங்கள் போச்! ஒரே பொடி!

  ReplyDelete
 4. சோதனைக்கு அரைத்துப் பார்ப்போம்...! பயனுள்ள தகவலுக்கு நன்றி அம்மா...

  ReplyDelete
 5. பொடி விஷயங்களையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியதற்கு நன்றிகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 6. sUPER POST. ENAKKE .PODI. ARAIKKA Asai vanthu vittathu:)
  thanks geetha.

  ReplyDelete
 7. வாங்க கவிநயா, அபூர்வமா வந்திருக்கீங்க! :)

  ReplyDelete
 8. கடைசிபெஞ்ச்!, ஹாஹாஹாஹா! வரேன், வரேன்.

  ReplyDelete
 9. வாங்க ஶ்ரீராம், எங்க பொண்ணுக்கு இப்போவும் ரசப் பொடி தனியா வேணும். :))) நான் பண்ணறதே ரசப் பொடிதானே! :))))

  ReplyDelete
 10. டிடி, முயற்சி செய்ங்க.

  ReplyDelete
 11. வாங்க வல்லி, செய்து பாருங்க.

  ReplyDelete
 12. சாம்பார் பொடி பதிவு போட்டதற்கு நன்றி மேடம். நான் போகும் பொது எடுத்துப் போவேன். இல்லையென்றால் யாரிடமாவது கொடுத்து அனுப்புவதும் உண்டு. இந்த மாதிரி முயன்று பார்க்கலாம். முதலில் இங்கே ரிஹர்சல் பார்க்கிறேன். நடைமுறைப் படுத்த எளிதாக இருக்கும்.
  என் விருப்பத்திற்கினங்க 'வாஷிங்டனில் சாம்பார்பொடி' பதிவு எழுதியமைக்கு நன்றி கீதா மேடம்.

  ReplyDelete
 13. பொடிப்பொடியான விஷயம் தான். இருப்பினும் விஸ்வரூப தரிஸனம். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 14. மைக்ரோவேவில் தட்டில் சாமான்களைப் பரத்தி ஒரு நிமிடம் வைத்தால் போதும, சாம்பார் பொடிக்கு. வத்தல் குழம்பு, புளிக்குழம்புக்கு முதலில் ஒருநிமிடம் வைத்து , பின் திற்ந்து அதை கிளறி விட்டு விட்டு மறுமடியும் ஒருமுறை வைத்தால் போதும்.
  உங்கள் ரசப்பொடி, சாம்பார் பொடிக்கு சீரகம் வைக்க வேண்டாமா?

  பதிவு நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 15. வாங்க ராஜலக்ஷ்மி, பாராட்டுக்கு நன்றி. வீட்டில் இந்தியாவில் இருக்கையிலேயே பல சமயங்களில் பொடி அரைக்க முடிவதில்லை. அப்போதெல்லாம் இந்த முறையைத் தான் பின்பற்றுவேன். ஆனால் மிளகாய்ப் பொடி அதாவது மிளகாயை அரைத்து வாங்கிய பொடியாக மட்டுமே இருக்கும். கடையில் விற்கும் சக்தி, ஆச்சி, ஆஷீர்வாத் போன்ற மிளகாய்ப் பொடி இல்லை. :))) அவற்றில் ஊறுகாய் போட்டால் கூட எங்களுக்குப் பிடிப்பதில்லை. :)) ஆகவே நான் அரைகிலோ மிளகாய் வாங்கி நன்கு காய வைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டுவிடுவேன்.

  ReplyDelete
 16. நன்றி வைகோ சார். பொடி விஷயம்னு சும்மா விட முடியுமா, சொல்லுங்க! :)))

  ReplyDelete
 17. வாங்க கோமதி அரசு, பல நாட்கள் ஆகிவிட்டன பார்த்து. வருகைக்கு நன்றி. சீரகம் இதற்கு நான் சேர்ப்பதில்லை. சாம்பாரில் ஜீரகம் சேர்த்தால் மசாலா வாசனை வராப்போல ஒரு எண்ணம். ரசத்துக்கு ஜீரகம் தாளிப்பில் சேர்ப்பேன். அல்லது ஜீரகப் பொடி தனியா வைச்சிருக்கேன். அதை இறக்கும்போது போடுவேன். :)))

  ReplyDelete
 18. மைக்ரோவேவ் என்னை ஏமாற்றுகிறது. ஆகையால் ரிஸ்க் எடுப்பதில்லை. :)))) எதுக்கு வம்பு! :))))

  ReplyDelete
 19. தஞ்சையிலும் மதுரையிலும் நான்தான் மெஷினுக்குப் போய் சாம்பார்ப்பொடி அரைத்து வருவேன். முதலில் மசாலா வாசனை இல்லையேன்னு செக் செய்ய வேண்டும்! ('அதெல்லாம் இல்லை'ன்னு அவர்கள் சொல்வதை நம்பக் கூடாது!) அப்புறம் அரைத்தபிறகு தட்டித் தட்டி எல்லாவற்றையும் சேகரம் செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். அப்புறம் ஒரு நீளமான இடத்தில் கொட்டி ஒரு பெரிய அகப்பை போல வைத்திருப்பார்கள், அதால் நீவி நீவி ஆற வைக்க வேண்டும். அப்புறம் நமது பாத்திரத்தில் சேகரம் செய்துகொண்டு வீடு திரும்ப வேண்டும்! இந்தக் குழந்தைதான் அந்த வேலையை எப்போதும் அப்பாவியாய்ச் செய்து வந்தது அந்தக்காலத்தில்!

  ReplyDelete
 20. @ஶ்ரீராம், ஹிஹிஹி, நானெல்லாம் கல்யாணம் ஆன வரைக்கும் மாவு மெஷினுக்கோ, அல்லது ஏதேனும் சாமான் வாங்கக் கடைக்கோ போனதில்லை. தெரு முக்கில் இருக்கும் மெஷினுக்கு அம்மாவே போவாங்க. இல்லைனா வீட்டியில் கையால் சுற்றும் கல் இயந்திரம் இருந்தது. அம்மா அதில் மிளகாய்ப் பொடி திரித்துப் பார்த்திருக்கேன். கொழுக்கட்டை, மாவிளக்கு, அரிசிமாவு, போன்ற பலவற்றிற்கும் அம்மா அதிலேயே செய்து பார்த்திருக்கேன். :))))

  ReplyDelete
 21. கல்யாணம் ஆகியும் முதல் நான்கு வருடங்கள் சாம்பார்ப் பொடினு மாமியார் கிட்டே இருந்தும், ரசப்பொடினு அம்மா கிட்டே இருந்தும் பொடி வந்துடும். இதெல்லாம் அதுக்கு அப்புறமாத் தான் ஆரம்பமே!

  ReplyDelete
 22. ஆனால் அப்போவும் மீ த குழந்தை ஒன்லி! :)))))

  ReplyDelete
 23. அட! அமெரிக்காவில் பொடி அரைப்பது பற்றி இங்கேயே எழுதிட்டீங்களா? இங்கும் இதைப்போல செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 24. இந்த மாதிரி பொடி செய்முறையும் நன்றாக இருக்கிறது...

  செய்து பார்த்துட்டா போச்சு..

  ReplyDelete
 25. பொடி செய்வது எப்படி....

  நல்லாத்தான் சொல்லி கொடுக்கறீங்க! :)

  ReplyDelete