எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 19, 2014

என் கேள்விக்கு என்ன பதில்?? கேள்விகள் முடிவடைந்தன! :)

"இ" சாருக்காகவும் கேள்விப் பதிவுகளைப் படிக்காத மற்ற நண்பர்களுக்காகவும்

பதிவு 1

பதிவு 2

பதிவு 3

16. உங்கள் கணவரை/மனைவியை முதன் முதல் எப்போது சந்தீத்தீர்கள்?  பெண் பார்த்தல்/பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி இல்லாமல் பார்த்தது மட்டும்! :)

17. உங்கள் பதின்ம வயதில் டேட்டிங் எனப்படும் பழக்கம் உண்டா?  அதற்கு உங்கள் பெற்றோரின் கருத்து என்னவாக இருந்தது?? திருமணம் என்பது எப்படி மதிக்கப்பட்டது?

18. உங்கள் பள்ளி நாட்களில் ஏற்பட்ட மிகுந்த நகைச்சுவையான சம்பவம் என்ன?

19. உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு எப்படி? நட்பாகவா?  மிகவும் மதிப்பாகவா?  ஒரு தோழனைப் போல் அல்லது தோழியைப் போல்??? அவர்கள் பீடத்திலிருந்து இறங்காமல் இருந்தார்களா?

20. குழந்தைப் பருவத்தில் சந்தோஷமாகவே இருந்தீர்களா?  இப்போது உள்ள தொழில் நுட்ப முன்னேற்றங்களால் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை மிக எளிதாக மாறி உள்ளது.  இந்த வித்தியாசம் நன்மையா, தீமையா?

கேள்விகள் முடிவடைந்தன.  இது எதுக்குனு கேட்பவர்களுக்கு பதில்
இல்லை, போங்க! :)))))

14 comments:

 1. 16. முதலில் சந்தித்ததும் பார்த்ததும் பெண் பார்த்தல் நிகழ்ச்சியில்... பிறகு No...!

  17. 'டேட்டிங்'யா...? கல்யாணம் வரையில் மூச்சு விடக் கூடாது...! திருமணம் - இன்றைக்கு பணங்கள் சேருவது போல் அல்லாமல், மனங்களின் சங்கமமாக மதிக்கப்பட்டது...! தந்தைக்கு பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை "வரதட்சனை"யாக்கும்...!

  18. ஒன்றா...? இரண்டா...? எடுத்துச் சொல்ல...?

  19. அவர்கள் பீடத்திலிருந்து இறங்க நாங்கள் விடுவதில்லை... பெற்றோருடனான உறவு என்றும் அன்பான, மதிப்பான நட்பு...!

  20. குழந்தைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதும், நன்மை தீமையும் நம் வளர்ப்பில்...! // குழந்தை ஞானி இந்த இருவரும் தவிர - இங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு...! ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும்... ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும்... இதுதான் ஞான சித்தர் பாட்டு (படம் : படையப்பா)

  ReplyDelete
 2. 16.என் கணவர் எங்களுக்கு சொந்தம், குடுமப் நண்பர்கள் மாமியார் குடும்பம்.

  அப்புறம் என் ச்கோதரி மூத்த மருமகள், நான் நான்காவது மருமகள்.

  பார்த்து இருக்கிறேன் திருமணத்திற்கு முன்பே ஆனால் பேசியது இல்லை. அவர்கள் தான் எனக்கு என்பது பெரியவர்கள் முன்பே முடிவு செய்து விட்டார்கள்.

  17. இந்த கேள்வி அப்போது எனக்கோ என் பெற்றோர்களுக்கோ தெரியாது அப்புறம் அவர்கள் கருத்து எப்படி சொல்லி இருப்பார்கள்.

  திருமணம் புனிதமாக கருதினார்கள்.
  இரண்டு குடுமபங்களின் நல்லுறவு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.மருமகன்
  நல்ல பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும், கடவுள் பக்தி நிறைந்த நல்ல குடும்பமாக இருக்க வேண்டும் அதுதான் அவர்கள் விருப்பம்.

  18.பள்ளிப் பருவம் மிகவும் மகிழ்ச்சியானது எப்போதும் மகிழ்ச்சி, மகிழ்ச்சி தான். நினைத்தலே இனிக்கும் நாட்கள்.

  19. மீண்டும் பிறப்பு இருந்தால் இதே தாய் தந்தையரிடம் தான் பிறக்க வேண்டும். என் அப்பா மிகவும் தோழமையுடன் இருப்பார்கள். என் அம்மா கண்டிப்பும் கனிவும் நிறைந்தவர்கள்.
  வாழ்க்கை பாடத்தை மிக அழகாய் சொல்லிக் கொடுத்தவர்கள்.
  என்றும் மன பீடத்தில் உயர்ந்த இடத்தில் தான்.

  20. என் குழந்தை பருவம் மகிழ்ச்சியானது. இன்று தொழில்நுடபம் குழந்தைகளுக்கு மிகவும் நன்மையே. போட்டிகள் நிறைந்த உலகில் இருக்கிறார்கள்
  அவர்கள் கல்விக்கும், மற்றும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தொழில்நுடபம் உதவுகிறது. ஆனால் குழந்தைகள் அதை அளவோடு, முறையோடு பயன்படுத்தினால் வாழ்வில் வளம் பெறுவார்கள்.

  ReplyDelete
 3. 16) நா(ங்கள்)ன் முதலில் பார்த்து விட்டதால்தான் திருமணம்!

  17) இல்லை.

  18) நான்காம் வகுப்புப் படிக்கும்போது மதிய உணவு இடைவேளையில் க்ரூப் பிரித்துப் படிக்க வைப்பார்கள். அப்போது அவரவர்களுக்கு ஒரு நிரந்தர இடம் ரிசர்வ் செய்து வைத்திருப்போம். அப்படியான எங்கள் இடத்தில் ஒருநாள் ஷோபா என்ற மூன்றாம் வகுப்புப் பெண் (லீடர்) ஆக்ரமிக்க, சண்டை நடந்து டீச்சர் வரை போய் ஒரு பொய் சொல்லி அவளுக்குத் திட்டு வாங்கிக் கொடுத்தது!

  19) மதிப்பாகவும், பயத்துடனும் அப்பாவிடம். அம்மாவிடம் நட்பாக!

  20) மிக சந்தோஷமாகவே இருந்தோம். இன்றைய மாறுதல் காலத்தின் கட்டாயம். இவர்களுக்கு இதுதான் சொர்க்கம். வருங்காலம் வேறு மாதிரியும் இருக்கலாம்!

  ReplyDelete
 4. //கேள்விகள் முடிவடைந்தன. //

  மிக்க மகிழ்ச்சி.

  சில கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? அதை எப்படிச் சொல்வது? என திக்குமுக்காடிப்போவதால் எதற்குமே நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

  ஏனெனில் நான் என் மனதில் உள்ளதை அப்படியே ஒளிவு மறைவு ஏதும் இன்றி உளறிடக் கூடியவன்.

  எப்போதும் உண்மையே பேச விரும்புபவன்.

  ஆனால் உண்மைகள் எப்போதுமே வேப்பங்காய் போலக் கசப்பானவை.

  அதனால் இத்துடன் நான் எஸ்கேப். ;)))))

  [என் பள்ளிவாழ்க்கை அனுபவத்தையே, நீங்க இன்னும் முழுசாப் படித்து முடிக்கவில்லை, என்பதை நினைவூட்டுகிறேன்.

  அடுத்துத் தொடர வேண்டிய இடம்:

  http://gopu1949.blogspot.in/2012/03/3.html ]

  ReplyDelete
 5. முதல் 15 வினாக்களை கோட்டை விட்டதால், மவுனம்

  ReplyDelete
 6. "இ" சார், வலைப்பக்கத்தில் வலது பக்கம் பாருங்க. என் கேள்விக்கு என்ன பதில்னு ஆரம்பிச்சிருப்பேன். முதல் பதிவு. இல்லைனா இந்தப் பதிவிலேயே உங்களுக்காகச் சுட்டி கொடுக்கிறேன். பதில் கொடுங்க, உங்க பதில் முக்கியம். :))))

  ReplyDelete
 7. வாங்க டிடி, எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையா பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

  இதெல்லாம் அமெரிக்கப் பள்ளியில் குழந்தைகளின் ப்ராஜெக்டுக்காகக்கேட்கச் சொல்லிக் கொடுத்த கேள்விகள். :)))))
  ஆங்கிலத்தில் இருந்தவற்றைத் தமிழில் முழி பெயர்த்தேன். :))))

  ReplyDelete
 8. நன்றி கோமதி அரசு, அங்கெல்லாம் டேட்டிங் இல்லாமல் ஏது வாழ்க்கை?? :)))))நமக்கு இதெல்லாம் புதுசு. அருமையான பதில்களுக்கு நன்றி.

  ReplyDelete
 9. ஶ்ரீராம், 16 ஆம் கேள்விக்கான பதில் சூப்பர்! :))))) நல்லா இருக்கு எல்லா பதில்களும்.

  ReplyDelete
 10. வைகோ சார், கொஞ்சம் வேலை, இணையத்தில் அமர நேரம் கிடைக்கிறது வர வர முடியாமல் போகிறது. உட்காரும் நேரத்தில் நம்ம பாட்டைப் பார்த்துக்கவே நேரம் போயிடுது. அதான் எங்கும் விசிட் செய்ய முடியலை. "எங்களு"க்கு மட்டும் போயிட்டு வரேன். :)

  ReplyDelete

 11. இந்த ஐந்து கேல்விகளின் முதல் தொடரிலேயே ஏன் எதற்கு என்று தெரியாமல் பதில் சொல்வதில்லை என்று எழுதி இருந்தேன். ஆனால் என் பல பதிவுகளில் இவற்றுக்கான பதில்களைக் கேட்காமலேயே கொடுத்திருக்கிறேன். அமெரிக்கக் குழந்தைகளின் ப்ராஜெக்ட்டுக்கான கேள்விகளை வைத்து ஐந்து பதிவு தேற்றிவிட்டீர்கள். ஏனோ நெல் உமி கதை நினைவுக்கு வருகிறது.உடல் நிலை சற்றுச் சரியில்லை. வலைக்கு வருவதே அரிதாகும் போலிருக்கிறது.

  ReplyDelete
 12. வாங்க ஜிஎம்பி சார், மொத்தக் கேள்விகளையும் சேர்த்துக் கேட்டால் பதில் எழுதுவது கஷ்டம், இல்லையா? அதான் பிரிச்சுக் கொடுத்தேன். பதிவு தேத்துவது என்பதை உங்கள் பின்னூட்டத்தின் மூலமே புரிந்து கொண்டேன். :))))) எனக்கு வேறு நோக்கம் இல்லை. :)))

  உங்கள் உடல்நிலை குணமானதும் இணையத்துக்கு வாருங்கள். கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லணும்னு கட்டாயம் எல்லாம் எதுவும் இல்லை. நட்பின் உரிமையில் விளையாட்டாகத் தான் கேட்டிருந்தேன். :)))))))

  ReplyDelete
 13. உங்கள் குழந்தைப் பருவத்தில் முதல் பள்ளி அனுபவம் எப்படி இருந்தது?

  ~ அருமையாக இருந்தது. செக்கானூரணியில் வித்யாரம்பம். அடுத்த வீட்டு லீலா டீச்சர் மடியில் படுத்து உறங்கி விட்டேன். ஐந்து வகுப்புகளுக்கு ஒரே கிளாஸ். நான் மட்டும் சட்டை போட்டு வருவதால், காலர் ஸ்டிஃப்பாக நிமிர்ந்து நிற்கும். இருபது வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்தார்கள். அவருடைய கணவன் அப்பாவின் சக உத்யோகஸ்தர். ராஜூ காரில் கொண்டு விட்டான் என்று டீச்சர் மாய்ந்து போனாள்.

  2.வயதானதும், பதின்ம வயதில், அதாவது டீன் ஏஜ் எனப்படும் பருவத்தில் உங்க டீச்சர் வீட்டுப்பாடம் நிறையக் கொடுத்து  ஒரு வழி பண்ணிட்டாங்களா?  இல்லைனா கொடுக்கிற வீட்டுப்பாடத்தைச் சமர்த்தாச் செய்யும் டைப்பா நீங்க?

  ~ கணக்கு வீட்டுப்பாடம் செய்யமாட்டேன். திருவேங்கிடத்தான் தான் குலதெய்வம் என்று நாமம் போட்டு வரும் வி.கே.ஆர். ஐயர் மற்றவர் வீட்டுப்பாடத்தைத் திருத்தச்சொல்லி என்னிடம் வேலை வாங்குவார். மற்ற வீட்டுப்பாடங்களும் இழுபறி தான். பள்ளியில் புதுக்கோட்டை ராஜாவுக்கும் எனக்கும் தனி மரியாதை. மற்றவர்கள் கெடுத்து விடுவார்களோ என்று தனி அமர்வு; மற்றவர்களை கெடுத்து விடுவேனோ எனக்கும் அந்த மரியாதை.

  இப்போ தொழில் நுட்பம் முன்னேறி வருகிறது.  சின்னக் குழந்தைக்குக் கூடத் தொழில் நுட்பம் விரைவில் கற்க முடிகிறது.  ஆனால் முப்பது வருடங்கள் முன்னர் இந்தத் தொழில் நுட்பம் என்பது தெரியாது இல்லையா? இந்தத் தொழில் நுட்ப உதவி இல்லாமல் உங்களால் பள்ளிப் பாடங்களை, அதற்கான வீட்டுப்பாடங்களை சிரமம் இல்லாமல் செய்ய முடிந்ததா?

  ~ சிரமம் என்றால் என்ன என்று கூட தெரியாத அறியாமை.

  உங்க பள்ளியிலே சீருடை உண்டா?  அப்படின்னா என்ன மாதிரி சீருடை?  உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா! (சல்வார் குர்த்தா கடந்த முப்பது வருடங்களிலே தான் பிரபலம்)

  ~ சீருடை கிடையாது. இஷ்டம். இஸ்திரி டவரா இஸ்திரி.

  5.உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார்? அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம்.  நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார்?  என்ன விதத்தில் உங்களைக் கவர்ந்தார்?

  ~ பாலு சார்! பாரதியாரை பற்றி பேசவைத்தார். 60 வருடம் கழித்து அந்த பள்ளிக்குப் போனபோது அவருடைய மகன் வந்திருந்தார். பேசி மகிழ்ந்தோம். ஒரு இந்து சிறுவன் நபிகள் நாயகத்தைப் பற்றி பேசவைத்து என்னை அசத்தி விட்டான். முன்மாதிரி: மஹா ராஜ ராஜ ஶ்ரீ. ஏ. ஶ்ரீனிவாச ராகவன். சம்ஸ்கிருத /ஹிந்தி பேராசிரியர். மஹா வித்துவான். பிற்காலம் சாந்தி நிகேதனில் சம்ஸ்கிருத பேராசிரியர்.
  அவருடைய ஆங்கில/சம்ஸ்கிருத/ ஹிந்தி/ தமிழ் உச்சரிப்பு உன்னதம். கற்பிக்கும் பண்பு அபாரம்.

  ReplyDelete
 14. உங்கள் கணவரை/மனைவியை முதன் முதல் எப்போது சந்தீத்தீர்கள்?  பெண் பார்த்தல்/பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி இல்லாமல் பார்த்தது மட்டும்! :)

  ~ என் பத்தாம் பசலி அத்திம்பேருக்கு காட்டுகிற சாக்கில் சந்தித்து விட்டு வந்தேன்.

  உங்கள் பதின்ம வயதில் டேட்டிங் எனப்படும் பழக்கம் உண்டா?  அதற்கு உங்கள் பெற்றோரின் கருத்து என்னவாக இருந்தது?? திருமணம் என்பது எப்படி மதிக்கப்பட்டது?

  ~ அகத்தில் உண்டு; முகத்தில் தெரியாது. அப்பா அடித்திருப்பார்.திருமணத்துக்கு ம்ட்டும் தான் மதிப்பு.

  எனினும் மற்றபடியான உறவுகளை பற்றி ஜாடைமாடையாக தெரியும்.

  உங்கள் பள்ளி நாட்களில் ஏற்பட்ட மிகுந்த நகைச்சுவையான சம்பவம் என்ன?

  ~ என்னை போலீஸ் போலி அரெஸ்ட் செய்தது.

  உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு எப்படி? நட்பாகவா?  மிகவும் மதிப்பாகவா?  ஒரு தோழனைப் போல் அல்லது தோழியைப் போல்??? அவர்கள் பீடத்திலிருந்து இறங்காமல் இருந்தார்களா?

  ~ அப்பா பீடத்தில். அம்மாவின் மடியில் நாங்கள். மதிப்பு தான். தோழமை, நட்பு முதன்மை படுத்த வில்லை.

  குழந்தைப் பருவத்தில் சந்தோஷமாகவே இருந்தீர்களா?  இப்போது உள்ள தொழில் நுட்ப முன்னேற்றங்களால் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை மிக எளிதாக மாறி உள்ளது.  இந்த வித்தியாசம் நன்மையா, தீமையா?

  ~ ஆம். எப்போதும் சந்தோஷம். இப்போது உள்ள தொழில் நுட்ப முன்னேற்றங்களால் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை மிக குழப்பமாக மாறி உள்ளது.  

  இந்த வித்தியாசம் நன்மையா, தீமையா?

  ~ கலந்து கட்டி. வயதானவர்களின் பொறுப்புகளிலிருந்து நம் சமூகம் நழுவுகிறது. பலி கடா: வளரும் தலைமுறை.

  ReplyDelete