எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 25, 2014

நாங்களும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்போமுல்ல!


சில மாதங்களாக ஏழரையிலிருந்து எட்டரை வரைக்கும் கணினியைக் கட்டாயமாய் மூடிடுவதால் (அந்த நேரம் இரவுச் சாப்பாடு தயார் செய்து சாப்பிடும் நேரம் வேறே) வேறே வழியில்லாமல் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறேன்.  எட்டரைக்கு அப்புறமா அவசியம் இருந்தால் தான் கணினியைத் திறப்பதுனு வைச்சிருக்கேன்.  ஆகையால் சாப்பாடு முடிஞ்சதும் உடனே படுத்துக்கக் கூடாது என்பதால் இதிலே உட்காரும்படி ஆயிருக்கு.  :))))

எட்டு மணிக்கு "தெய்வமகள்" என்ற பெயரிலே ஒரு தொடர் வருது.  அதிலே கதாநாயகியாக நடிக்கும் பெண்  சத்யப்ரியா என்ற பெயரில் வருகிறார். அவரைத் தான் தெய்வமகள்னு ஏகத்துக்கு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்காங்க.  ஆனால் உண்மையில் பார்த்தால் அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் தான் உண்மையில் வெளுத்துக்கட்டுகிறார். இந்த சத்யப்ரியா ஆரம்பத்தில் கதாநாயகனை எதிர்ப்பதற்காக ஏதோ கொஞ்சம் சாமர்த்தியத்தைக் காட்டறாப்போல் இருந்ததோடு சரி.  அவ்வளவு தான்.  அதுக்கப்புறமா எப்போப் பார்த்தாலும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வித விதமான உடையில் வந்து போகிறார்.

முரட்டுத் தனம் நிறைந்தவனாகச் சொல்லப்படும் கதாநாயகனைத் திருத்த ஒண்ணும் செய்யலை (இனிமேல் வருமோ?) என்பதோடு மாமனார், மாமியாரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யறமாதிரித் தெரியலை.  ஒரே ஒருநாள் அவங்க படுக்கை அறையைச் சுத்தம் செய்து கொடுத்ததோடு சரி. கணவனின் அண்ணியின் சுயரூபம் தெரிஞ்சே தங்கையைக் கல்யாணம் செய்து தர மாட்டேன்னு சொன்ன சத்யப்ரியாவுக்கு இப்போ தானே அந்த இடத்துக்கு வந்தப்புறமும் அந்த அண்ணி காரக்டரின் சுயரூபம் பத்திப் புரியாமல் போனது ஏன்?

அதை எல்லாம் கண்டு பிடிக்க ஒரு முயற்சியும் எடுக்கலை என்பதோடு சிறிதளவு சந்தேகமும் படாமல் மண்ணாந்தையாக இருப்பதோடு அந்த அண்ணியிடமே போய் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.  தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதே அந்த அண்ணியின் குறிக்கோள் என்பது தெரிந்தும் அதை எல்லாம் புரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சத்தமாகக் கணவனோடு வாக்குவாதம் பண்ணுவதும், வெளியே கேட்பாங்களோ என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாததும், வீட்டில் நடப்பது குறித்த கவனமே இல்லாததும் ஹிஹிஹிஹி! சகிக்கலை! :)))))))))  இப்படி ஒரு அசடான காரக்டரைக் கதாநாயகியாப் போட்டிருக்காங்களேனு நினைச்சு சிப்புச் சிப்பா வருது.

அதே அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் ஒவ்வொரு முறையும் மாமியாரை சாமர்த்தியமாக மடக்குவதோடு இல்லாமல் அக்கா பட்ட கடனையும் தீர்த்து விடுகிறார்.  தங்கைக்குப் பள்ளிக்குக் கட்டணம் கட்டுகிறார். உண்மையில் குடும்பத்துக்காகப் பாடுபடுவது லூஸு காரக்டராக இருந்த இவர் தான்.   இவர் தான் தெய்வ மகள். அம்மா, அக்கா, தங்கை ஒதுக்கியும் தன் பிறந்த வீட்டுக்காகச் செய்வது இவர் தான். சத்யப்ரியா இல்லை. சத்யப்ரியாவுக்குச்  சம்பளமும் இல்லையே; அம்மாவும் தங்கையும் என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் அதைக் குறித்து நினைக்கக் கூட இல்லாமல் அவர் பாட்டுக்குக் கணவன் வீட்டில் தன் ஓரகத்தியிடம் தன்மானத்தை விட்டுக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். இவரா தெய்வ மகள்? ஒண்ணு தொடரின் தலைப்பை மாத்தணும், இல்லையானா கதாநாயகி தாரிணியாக நடிக்கும் பெண் தான்னு மாத்தணும்.  இவர் எப்போ எல்லாத்தையும் கவனிச்சுக் கணவனைத் திருத்தி, குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்து, கணவனின் அண்ணியையும் ஜெயிச்சு............

கடவுளே, இருக்கிற இருப்பைப் பார்த்தால் இந்த சீரியல் இன்னும் மூணு வருஷமாவது வரும் போலிருக்கே!!!  என்னத்தைச் சொல்றது! மறந்துட்டேனே.  டிஆர்பியிலே இது ஹிட் லிஸ்டிலே இருக்கிறதாச் சொன்ன ஹரன் பிரசன்னாவுக்குத் தான் இது பிடிக்கும்னு நினைக்கிறேன்! :P :P :P  :))))))))))))

14 comments:

 1. //வேறே வழியில்லாமல் //

  வேற வழியே இல்லையா? அப்படியாவது பார்த்துதான் ஆகணுமா!

  ReplyDelete
 2. ஶ்ரீராம், அதிலே சில நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. இருக்கிறது ரெண்டு பேர். அவர் ஒரு இடத்திலே, நான் ஒரு இடத்திலேனு இருக்கணும். இரண்டு ஃபேன் ஓடும். மின்சாரச் சிக்கனம் ஒரு பாயின்ட். அதோடு தனித்தனியா உட்கார்ந்து இருப்பது தவிர்க்கணும் என்பதும் கூட.

  அந்த நேரம் அவர் சீரியல்கள் பார்ப்பார். நான் ஏதாவது புத்தகம் படித்தாலும் வசனங்கள் காதில் விழும். கணினியில் உட்கார்ந்தாலும் அங்கே தான் உட்காருவேன். பல சமயங்களில் மத்தியான நேரங்களில் கூட சினிமா இப்படிக் கணினியும், தொலைக்காட்சியும்னு பார்க்கிறதே வழக்கமாகிப் போச்சு.

  அதோடு சிரிக்கவும் கொஞ்சம் விஷயம் வேணுமில்லையா? இந்த அபத்தங்கள் மூலம் ரசிகத் தன்மை எப்படி இருக்குனும் தெரிஞ்சுக்கலாமே!

  ஹிஹி, பதில் நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளமாப் போச்சோ!:))))

  ReplyDelete
 3. உங்களுக்குப் பொறுமை இருந்தால் சரி! :)))

  ReplyDelete
 4. ஹிஹிஹி, சகிப்புத் தன்மை ஜாஸ்தி! :))))) நடுநடுவில் பாத்திரம் தேய்க்கிறது, கிச்சனில் தண்ணீர் பிடிச்சு வைக்கிறதுனு எழுந்து போறதும் உண்டு! :)))) உண்மையான ரசிகர் நம்ம ரங்க்ஸ் தான். அதோட இல்லாமல் அவங்களோட பிரச்னைகளுக்காகக் கவலையும் படுவார். :)))))

  ReplyDelete
 5. என்னோட எம் ஐ எல் எம் ஜி ஆர் படம் பார்ப்பது போல! சமயங்களில் இங்கிருந்தே "பின்னால் ஆளு..." என்றெல்லாம் எச்சரிக்கை செய்வார்!

  ReplyDelete
 6. ஹிஹிஹி,உங்க எம் ஐ எல் மாதிரி எங்க மாமியாரும், எங்க மன்னியும். மன்னியை விட்டா தொலைக்காட்சிக்குள்ளேயே போயிடுவாங்க. வில்லனை, கடங்காரா, நாசமாப் போக னு எல்லாம் திட்டுவாங்க. ஒரே உணர்ச்சி வசம் தான்! :)))))

  ReplyDelete
 7. நீங்களும் பார்ப்பதால் டிஆர்பி இன்னும் எகிறும் அம்மா...!

  வரும் நாட்களில் அவருக்கு நீங்கள் செய்யும் வேலைகளை குடுக்காமல் இருந்தால் சரி....! ஹிஹி...

  ReplyDelete
 8. ஹாஹாஹா டிடி, அவராலே அத்தனை எல்லாம் பொறுமையாச் செய்ய முடியாது. :)))) அதனால் இந்த வேலைக்கெல்லாம் அவர் வரவே மாட்டார். :)))

  அது சரி, நான் ஒருதரம் பார்த்தால் நூறு தரம் பார்த்தாப்பலயா? டிஆர்பி ரேட் அதான் எகிறும்னு சொல்றீங்களா? :)))))

  ReplyDelete

 9. சில தொடர்கள் பார்ப்பதுண்டு. இதில் என்ன சௌகரியம் என்றால் தொடர்களைப் பார்க்காமல் பத்து நாள் விட்டுப் போயிருந்தாலும் என்றாவது ஒரு நாள் பார்த்தாலும் போதும் எதுவும் மிஸ் ஆகி இருக்காது, என்ன மாதிரி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன என்பது தெரிந்து கொள்ளலாமே.

  ReplyDelete
 10. நான் பார்ப்பதே இல்லை! :)

  ReplyDelete
 11. அதெல்லாம் ஒரு மாசம் பார்க்கலைனாக் கூடக் கவலையே பட்டுக்க மாட்டோம் ஜிஎம்பிசார். அதான் கிளம்பின இடத்தை விட்டு நகரவே நகராதே! ஆனால் இந்தத் தொடரைப் போன்ற அபத்தக் களஞ்சியத்தைப்பார்த்ததே இல்லை! :( நம்பவே முடியாத காட்சிகள்; வசனங்கள், அது எப்படி ஒவ்வொரு தரமும் வில்லிக்கு மட்டும் எல்லாம் கைக்குக் கிடைக்கிறாப்போல் வசதி பண்ணிக் கொடுக்கிறாங்க இந்த அசட்டுக் கதாநாயகர்கள்னு நினைச்சால் வயித்தெரிச்சலா இருக்கு.

  ReplyDelete
 12. இந்த அழகிலே கதாநாயகன் எம்பிஏ படிச்சிருக்கானாம். ஆனால் அரசாங்க உத்தியோகம் தான் வேணும்னு லஞ்சம் கொடுத்து அரசாங்க உத்தியோகத்தில் கிளார்க் வேலை! தண்டமான கதாநாயகன். உருப்படியா இந்தப் படிப்பின் மூலம் எவ்வளவு சாதிச்சிருக்கலாம்?

  கதாநாயகி அதைவிட தண்டம், ஃபினிஷிங் ஸ்கூல்னு சொல்றாங்க. அப்படிப் படிச்சுட்டு தண்டமா வந்துட்டுப் போறா! :))))

  ReplyDelete
 13. வாங்க வெங்கட், பார்க்காதீங்க, அப்புறமா உயர்கல்வியிலேயே நம்பிக்கை இல்லாமல் போயிடும்! :))))))

  ReplyDelete
 14. தொடர்கள் பார்ப்பதில்லை.
  தப்பித்தேன் :))

  ReplyDelete