எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 25, 2014

இந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா?





போன வாரம் சென்னை போனப்போ (ஹிஹிஹி விசா ரெனிவலுக்காகப் போனோம்) முதல்நாள் தம்பி வீடு, மைத்துனன் வீடுனு சாப்பிட்டுக் கழிச்சாச்சு. மறுநாள் விசா ரெனிவலுக்கான நேர்காணல் முடிஞ்சு கைரேகைகள் இன்னபிற சமாசாரங்களைக் கொடுத்துட்டு ரயிலுக்கு வரும் முன்னர் நம்ம இஷ்டமான சங்கீதாவிலே சாப்பாடு வாங்கலாம்னு போனோம். மீ எப்போவும் மு.ஜா. மு. அ. ஆகையால் தயிர் சாதம் போதும்னு சொல்ல, ரங்க்ஸும் தனக்கும் அதுவே போதும்னு இரண்டு தயிர்சாதம் வாங்கினார்.  அங்கே காஃபி நல்லா இருக்கும்.  ஃபில்டர் காஃபி என்பதால் இரண்டு காஃபியும் ஃப்ளாஸ்க்கிலே (ஃப்ளாஸ்க் கையோட எடுத்துட்டுப் போயிடுவோமே!  வீட்டிலிருந்து கிளம்பினால் காஃபியும் வீட்டிலேயே போட்டு எடுத்துட்டுப் போயிடுவோம்) வாங்கிக் கொண்டோம்.

தயிர்சாதம் கொடுத்தது ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில்.  அதைப் பார்க்கையிலேயே எனக்கு நம, நமவென்றிருந்தது. நான் சாப்பிடுவது எல்லாம் கொஞ்சம் தான். ஹிஹிஹி, நேரில் பார்த்தவங்க நம்பமாட்டேன்னு சொல்லிக்கிறது காதிலே விழுது!  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்க மருத்துவரும் அதைத் தான் சொல்றார்.  ஒரு வாரத்துக்கு எல்லாரையும் பக்கத்திலே உட்கார்த்தி வைச்சுட்டுச் சாப்பிடணும்னு முடிவு செய்திருக்கேன். சாப்பாடு கொஞ்சம் தான் சாப்பிடுவேன் என்றாலும் அந்த டப்பாவில் இருக்கும் தயிர்சாதம் என் ஒருத்திக்கே போறாது போல் இருந்தது. ரங்க்ஸுக்கு எப்படிப் போதும்?

ஒரு தீப்பெட்டி சைஸ் டப்பாவில் ஒரே ஒரு ஸ்பூன் சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர், அல்லது பாலை விட்டு, இரண்டு உடைச்ச மு.ப. இரண்டு பச்சை திராக்ஷை, இரண்டு காய்ந்த கிஸ்மிஸ், ஒரு டீஸ்பூன் மாதுளை முத்துக்கள் போட்டு லூஸாகப்( அதாவது தளரப் பிசைந்து) பிசைந்து வைச்சிருந்திருக்காங்க.  இது வீட்டில் போய்த் தான் தெரியும்.  வீடு வரும் வரை ரயிலில் பொதுப் பெட்டியில் முன்பதிவு என்பதால் சாப்பிட வசதி இல்லைனு பிரிக்கலை.  (முன் கூட்டித் திட்டமிடாததால் ஏசி கிடைக்கவில்லை. ) எனக்கு அந்த தயிர்சாதப் பார்சலைப் பார்த்ததிலே இருந்து மன உளைச்சல் தாங்கலை.  நல்லவேளையாக ரயிலில் இட்லி விற்றுக் கொண்டு வந்தாங்க. ஒரு பாக்கெட் இட்லி கேட்டேன். ரங்க்ஸுக்கோ இரண்டுமாக வீணாகிவிடும்னு கவலை. ஆனால் எனக்கு சர்வ நிச்சயமாய் இதெல்லாம் பத்தாதுனு தெரிஞ்சு போச்சு. ஆகையால் பிடிவாதம் பிடிச்சேன்.

நான் கேட்டப்போ இட்லி பார்சல் தீர்ந்து போச்சு. எடுத்துட்டு வரேன்னு போனவர் போனவர் தான். விருத்தாசலம் வரும் வரை வரவே இல்லை. விருத்தாசலத்தில் ஸ்டேஷன் கான்டீன்காரங்க வேறே பிடுங்கி எடுத்தாங்க. அது எப்படி இருக்குமோனு சந்தேகத்திலே வாங்கலை.  ஒருவழியா ஐஆர்சிடிசி காரரே கொண்டு வரவும் ஒரு பாக்கெட் இட்லி வாங்கினால் சட்னி இல்லையாம்.  இரவு/மாலை ஆறரைக்கு அப்புறமா நோ சட்னி டேயாம். சாம்பார்னு அரைக்கரண்டி ஒரு திரவம் உள்ள பாக்கெட்டைக் கொடுத்தார். ரங்க்ஸை இப்போச் சாப்பிடப் போறீங்களானு கேட்டதுக்கு இல்லை வீட்டிலே போய்த் தான் எனச் சொல்லிவிட்டார். நல்லவேளையா வீட்டிலே ஃப்ரிஜில் சட்னி, மிளகாய்ப்பொடி எல்லாம் இருந்தது.  வீட்டிலேயே சாப்பிட்டுக்கலாம்னு நானும் உள்ளே வைச்சுட்டேன்.  வீட்டுக்கு வர அன்னிக்கு ராத்திரி ஒன்பதரை மணி ஆச்சு. ஒரு மணி நேரம் ரயில் தாமதம்.

வீட்டிலே வந்து சாதம் டப்பாவைத் திறந்தால் ஒரே ஒரு ஸ்பூன் தான் சாதம் இருக்கும் போல! ஒரே கொட, கொட!  வயிற்றெரிச்சல்.  இட்லியைப் பிரிச்சால் நாலு இட்லி. நல்ல வேளையா சுமாரான சைசில் இருந்தன.  ரங்க்ஸ் இட்லி வேண்டாம்னு சொல்ல, கஷ்டப்பட்டு மி.பொ. சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன்.  அந்தக் கொட, கொட தயிர்சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு ரங்க்ஸ் சொன்னார்.  "அரிசி போட மறந்துட்டாங்க போல! வெறும் தயிரோ/பாலோ தான் இருக்கு இதிலே! " என்றாரே பார்க்கலாம்!

இந்தச் சாப்பாடு விலை என்ன தெரியுமா?  ஒரு தயிர்சாதம் 50 ரூபாய். கொள்ளையிலும் கொள்ளை மஹா, மெகா, அநியாயக் கொள்ளையா இருக்கு!
என்னதான் விலைவாசி ஏறி இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?  அங்கே டிஃபன் நல்லா இருக்கும் என்பதால் ரங்க்ஸ் வேறே ஹோட்டல்களுக்குப் போகவும் சம்மதிக்க  மாட்டார்.  அதான் கஷ்டமே!  இன்னொருத்தர் முழுச் சாப்பாடு வாங்கினார். அவருக்கு முழுச்சாப்பாடு மட்டும் எப்படிக் கொடுத்தாங்கங்கறீங்க?  ஒரு கையகல ப்ளாஸ்டிக் தட்டிலே

மூணு ஸ்பூன் சாதம்,

அரை ஸ்பூன் பச்சைப்பயறுபோட்ட கீரை

அரை ஸ்பூன் சாம்பார்,

அரை ஸ்பூன் ரசம்

கால் ஸ்பூன் மோர்/தயிர்

நோ ஊறுகாய்

ஒரு சின்ன அப்பளம்

இதுக்கு அவங்க வாங்கற காசு 150 ரூபாய்.  பேர் முழுச்சாப்பாடு.  இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர் இல்லையா?  அம்மா உணவகத்தில் கூட்டம் கூடுவதன் காரணமே அன்று தான் புரிய வந்தது. :(

33 comments:

  1. நான் இருக்கிறேன்... நான் இருக்கிறேன்... வேறு வழியில்லை... பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்... வயிறு சுத்தமாக, திரவத்தை உடனே குடித்தால் தான் நல்லது... (ஹிஹி...)

    ReplyDelete
  2. ஜாபிதா:

    1. உம்மை விட ரங்க்ஸ் பகாசுரன்.

    2. அவர் ஒரு சிக்கனாதிபதி.

    3. சென்னை வந்தும் என்னை பார்க்காமல் திரும்பியதின் ஊழ்வினை.

    4. வழக்க்ம் போல உண்மை விளம்புகிறீர்கள். அனியாயம் தான்.

    ReplyDelete
  3. //ஃபில்டர் காஃபி என்பதால் இரண்டு காஃபியும் ஃப்ளாஸ்க்கிலே (ஃப்ளாஸ்க் கையோட எடுத்துட்டுப் போயிடுவோமே! ///

    'போயிடுவோமே', சரி; பையை யார் தூக்கிட்டு வருவாங்கங்கங்கறது தான் கேள்வி. :)))

    ReplyDelete
  4. சங்கீதா சாப்பாடு? தயிர் சாதம் சாப்பிட சங்கீதா எதற்கு!!!! அப்படி என்ன ஸ்பெஷல்? ஊ...ஹூம்! இதுவே இருவேறு சந்கீதாக்களில் வெவ்வேறு மாதிரி சாப்பாடு ருசி இருக்கிறது... காஃபி நன்றாக இருக்கும்.

    //"அரிசி போட மறந்துட்டாங்க போல! வெறும் தயிரோ/பாலோ தான் இருக்கு இதிலே! " என்றாரே பார்க்கலாம்!//

    :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    பதிவு முழுவதும் படித்ததும்தான் சாரம் விளங்கியது! இவர்கள் என்றில்லை,எல்லா ஹோட்டல்களுமே அடிப்பது மகா கொள்ளை. ஒரே மாதிரி மெனு.... ஒரே மாதிரி ருசி....


    ReplyDelete
  5. வாங்க டிடி, நான் எப்போதும் அதிகமாய் திரவ உணவே எடுத்துப்பேன். :))) மாதுளை ஜூஸ், அன்னாசி ஜூஸ் அப்படினு! அன்னிக்கு என்னமோ பசிக்குமோனு தோணினதிலே தயிர்சாதத்துக்கு ஓட்டுப் போட்டேன். :)

    ReplyDelete
  6. நீங்க வேறே "இ" சார், பகாசுரனாவது,ஒண்ணாவது! சின்னக் குழந்தைக்குக் கூடப் பத்தாது அந்த சாப்பாடு! காக்காய்க்குக்கூட நாங்க இன்னும் கொஞ்சம் தாராளமாவே போடுவோம்! :)))

    ReplyDelete
  7. சென்னை வந்து பலரைப் பார்க்க முடியறதில்லை. :)))) பனையூருக்கு எங்கே வரது! :)))) அதுக்கு நான் சென்னையிலே பத்து நாளாவது தங்கினால் தான். தம்பி பிள்ளை கல்யாணத்தை எதிர்பார்த்துட்டு இருக்கேன். அப்போப் பார்க்கலாம். :)

    எப்போவுமே உண்மையை விளம்பறதாலே எதிரிகளும் நிறைய ஆயிடறாங்களே "இ" சார். :))))

    ReplyDelete
  8. ஜீவி சார், அதெல்லாம்போட்டியே போட்டதில்லை. என்னோட ஷோல்டர் பை, சாப்பாடுப் பை, என் ஹான்ட் பாக் என்னிடம் இருக்கும். அவரோட ஷோல்டர் பை, தண்ணீர் பாட்டில், காஃபி ஃப்ளாஸ்க் அடங்கிய பை, மற்றும் சாமான்கள் அடங்கிய மற்றொரு பை அவர் கிட்டே! லிஃப்டிலே கீழே இறங்கினதும் ஆட்டோ நிக்கும். ஏறிக்க வேண்டியது தான். ஶ்ரீரங்கத்தில் பிரச்னை ஏதும் இல்லை. ப்ளாட்ஃபார்ம் ஸ்லோப் கிட்டே நிறுத்துவார். அப்படியே ஏற வேண்டியது தான்.
    திரும்புகையில் எழும்பூர் வரச்சே அநேகமா காஃபி மட்டும் தான் சங்கீதாவிலே வாங்கி வைச்சுப்போம். வழக்கமா வீட்டிலே தோசை மாவு ஏதானும் வைச்சிருப்பேன். வந்து சமைச்சுச் சாப்பிட்டுக்கலாம். இம்முறைப் பயணம் திட்டமிடாததால் முன்கூட்டி எதுவும் செய்யலை. அதனால் வாங்கும்படி நேர்ந்தது. இல்லைனா வாங்கிச் சாப்பிடறது எப்போவானும் தான். :))))

    ReplyDelete
  9. ஆமாம் ஶ்ரீராம், தயிர்சாதம் எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும். சங்கீதா எதுக்கு? அது தான் நானும் சொல்றேன். ஆனால் பாருங்க நம்ம ரங்க்ஸுக்கு ஒரு டேஸ்ட் பழகிடுத்துன்னா விட மாட்டார். அங்கே தான் திரும்பப் போவார். இப்போ எடுத்திருக்கும் சபதம்! இனி சங்கீதா டிஃபனுக்கு மட்டுமே! சாப்பாட்டுக்கு இல்லை! னு.

    ReplyDelete
  10. இதுவே அடையாறு சங்கீதான்னா சகிக்காது. மைலாப்பூர் சங்கீதாவிலே சுமாரா இருக்கு! நீங்க சொன்ன இருவேறு சங்கீதாவிலே இவை எந்த சங்கீதாவைச் சேர்ந்ததுனு புரியலை ஶ்ரீராம். :))))

    ReplyDelete
  11. எல்லா ஹோட்டல்களிலும் இப்படினு சொல்ல முடியலை. வசந்த பவனில் தயிர்சாதம் 60 ரூனு வாங்கினாலும் ஒரு ப்ளேட் நிறையவே இருக்கு. அதோடு ஊறுகாய், ஏதானும் ஒரு கூட்டு என்றும் கொடுக்கிறாங்க. சரவணபவன் என்றால் வயிறு நிறையாது. நாங்க சரவணபவன் வாசலை மிதிக்கிறதில்லை. :))) யாரானும் அழைச்சுட்டுப் போனால் கூட தாண்டித் தான் போவோம். :))))

    ReplyDelete
  12. காசை கொள்ளையடிக்கும் பல உணவகங்கள் நல்ல சாப்பாடு போடுவது இல்லை! இதில் இப்போது சங்கீதாவும் சேர்ந்துவிட்டது! மைலாப்பூர் சங்கீதா! சுத்த வேஸ்ட் ஆகிவிட்டது!

    ReplyDelete
  13. சென்னை வந்திருந்தீர்களா. அப்போ எப்ப இங்க விசிட்... ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல்னு இவர் சரவணபவன்,ஒகடேன்னு ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார். பரிபூர்ண்மா ஒத்துக்காது. சென்னையில் ஹோட்டல்கள் மோசமாகி ரொம்பநாளாச்சு. இதே சங்கீதா துபாயில் தரும் உபசாரத்தைப் பார்க்கணும். எவ்வளவு நன்றாக இருக்கும். அங்கே சுத்தம் இல்லாவிட்டால் உணவு இன்ஸ்பெகடர் வந்துடுவார். அளவும் சரியாக இருக்கும். பாவம் பசியில் என்ன கஷ்டப்பட்டீர்களோ.

    ReplyDelete
  14. எல்லா இடங்களிலும் விலை உயர்ந்துவிட்டது. ஒருகாலத்தில் பெங்களூரில் பத்து ரூபாய்க்கு இரண்டு இட்லி ஒரு காப்பி கிடைக்கும். ஆனால் இப்போது இட்லி ஒன்று பத்து ரூபாய். ஆனால் இங்கு நீங்கள் சொல்வது போல அளவைக் குறைப்பதில்லை. பெரிய இட்லியாகவே இருக்கிறது.
    பிரபலமான உணவகங்களிலேயே இப்படி செய்தால் எப்படி?
    ஒருமுறை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருக்கும் சரவணபவனில் இரண்டு செட் சப்பாத்திக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்தோம். ரயிலில் பிரித்த பின்தான் தெரிந்தது ஒரு செட் தான் இருந்தது.

    யார் கேட்பார்கள் இந்த அநியாயத்தை?

    ReplyDelete
  15. தயிர் சாதத்தில் சாதம் தேடும்படியாகத் தான் இருக்கிறது. இப்பல்லாம் மிக்சட் ரைஸ் , மினி மீல்ஸ் என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் கொள்ளை இருக்கிறதே. அந்த லாவைப் பார்ஹ்த்தால் நம் பசி இன்னும் ஜாஸ்தியாகி விடும்.

    ReplyDelete
  16. என் பங்குக்கு நானும் சொல்றேன்!.. நீங்க சொல்லியிருக்கிறது ரொம்ப நியாயம்!.. சங்கீதாவில் ஒரு தடவை ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.. இரண்டு வாய் குடிச்சுட்டுப் பாத்தா ஒரு பெரிய கட்டெறும்பு மிதக்கிறது!.. பேரரைக் கூப்பிட்டுச் சொன்னால், கண் முன்னாடி எறும்பை எடுத்துட்டு நீட்டறார்.. கோபப்பட்டு மேலாளாரைக் கூப்பிட்டுச் சொன்னால்,;'நீங்க ஒரு கஸ்டமர் இல்லாத போனா ஒண்ணும் குறையாதுங்கற மாதிரி பதில்'.. சங்கீதாவை நெருங்குவதே இல்லை இந்த மாதிரி ட்ரீட்மென்ட்டினால்.

    ReplyDelete
  17. தளிர் சுரேஷ்,இப்போ மயிலாப்பூர் சங்கீதா போயே இரு வருடங்கள் ஆகிவிட்டன. இங்கேயும் எந்த ஹோட்டலிலும் சகிக்காது! :))))

    ReplyDelete
  18. ஆமாம் வல்லி, சென்னைக்கு இருநாள் பயணமாகப் போனோம். நேத்திக்கு ஒருவழியா விசா ஸ்டாம்பிங் முடிஞ்சு பாஸ்போர்ட்டும் கிடைச்சாச்சு. யு.எஸ். போறதைப் பத்தி இப்போ முடிவு செய்ய முடியாது. ஜூலையில் மாமனாருக்குத் திதி வரும். அதன் பின்னர் தான் யோசிக்கணும். :))))

    ReplyDelete
  19. வாங்க ரஞ்சனி, நீண்ட நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றி. சென்ட்ரல் சரவணபவன் அப்படினு இல்லை; எந்த சரவண பவன் போனாலும் வயிறு நிறையாத டிஃபன் தான்கிடைக்கும். ரயிலில் போறவங்க அவசரத்தில் கவனிக்க மாட்டாங்கனு இப்படி ஏமாத்தலும் உண்டு.

    ரயிலிலேயே ஐஆர்சிடிசி காரங்க கொண்டு வரும் காஃபி, டீ போன்ற பானங்கள் அவங்க சொல்லி இருக்கும் அளவுப்படி கொடுக்கிறதில்லை. அரை கப் தான் கொடுப்பாங்க. நானெல்லாம் சண்டை போட்டு வாங்குவேன். காசு கொடுக்கிறோமே. தேநீருக்கு ஏழு ரூபாயும், காஃபிக்கு பத்து ரூபாயும் வாங்கறாங்க. ஆனால் அரை கப் தான். புகார் கொடுப்பேன்னு சொன்னதும் கப் முழுதும் கிடைக்கும். இப்படி மிச்சம் வருவதை இந்த வென்டார்கள் தனியாக் காசு பார்க்கிறாங்க.

    ReplyDelete
  20. அட, பார்வதி, வாங்க, சித்திரைத் திருநாளுக்குக் கொடியேத்தம் ஆயிடுச்சா? பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. :)))) நீங்க பார்க்கிற, கேட்கிற எல்லாத்தையும் கூடுதலாகச் சேகரிக்கபப்ட்ட தகவல்களோடு பகிர்ந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  21. சங்கீதா என்ற பெயரிலே நிறைய இருக்கிறதாலே இது எந்த சங்கீதானு தெரியலை பார்வதி! :)))) இங்கே திருச்சியிலும் மெயின்கார்ட் கேட்டில் ஒரு சங்கீதா இருக்கு. என் மைத்துனர் ரொம்ப சிபாரிசு செய்தாரேனு ஒரு நாள் இரவு மைத்துனர் பையரோடு போயிட்டு!! ஹிஹிஹி, சுமார் ரகம் தான். :)))))

    ReplyDelete
  22. எனக்குத்தெரிஞ்சு பாண்டி பஜார் கீதா கஃபேயை அடிச்சுக்க முடியாது. அதிலும் சாம்பாரில் குளிக்கும் மினி இட்லிகள், அடை, அவியல், ஃபில்டர் காஃபி!!

    ReplyDelete
  23. தாம்பரம் பட்ஸ் ஹோட்டலிலும் மினி இட்லிகள், வெங்காய ஊத்தப்பம் நல்லா இருக்கும். :)))

    ReplyDelete
  24. தாம்பரம் 'பட்ஸ் ஓட்டல் நன்றாக இருக்கும். மயிலை சங்கீதாவில் பாபா கோவில் சென்று திரும்பும்போது மூன்று வாரங்களுக்கு முன்னால் சாப்பிட்டோம். டிஃபன்தான். நாட் பேட்! கிண்டி சங்கீதா மட்டம்!

    ReplyDelete
  25. வெங்காய ஊத்தப்பம் செய்யும் கடைகளைப் பற்றி தனி ஒரு பதிவே எழுத வேண்டும்!:))))

    ReplyDelete
  26. மறு வரவுக்கு நன்றி ஶ்ரீராம், ஊத்தப்பம் இழுத்துட்டு வந்ததோ? எழுதுங்க, நானும் எண்ணங்களைப் பகிர்ந்துக்கறேன். :))))

    ReplyDelete
  27. முன்பெல்லாம் பத்து ரூபாய்க்கு காலை உணவே முடித்துவிடலாம்... இப்போது விலைவாசி எகிறிவிட்டது. அதிலும் தரமான சாப்பாடு என்று நாம் பலரையும் ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பதே சரி....

    ReplyDelete
  28. பெரும்பாலான சென்னை உணவகங்களில் அதிலும் முக்கியமாக ரயில் நிலையங்களில் இருக்கும் உணவகங்களில் அரை ஸ்பூன் சாதம் தான் இருக்கிறது - விலையும் அதிகம்....

    கேட்டால் விலைவாசி அதிகம் என்று சொல்லி விடுகிறார்கள்.......

    //அரிசி போட மறந்துட்டாங்க போல!” - :)))))))))))

    ReplyDelete
  29. வாங்க ராஜலக்ஷ்மி, உங்க பின்னூட்டத்தை இப்போத் தான் பார்க்கிறேன். மினி மீல்ஸ் பரவாயில்லையோனு தோணும் எனக்கு! :)))) நாலைந்து கலந்த சாதம், ஒரு சப்பாத்தி இருக்கும் என்பதால் அதற்கு மேல் சாப்பிட முடியாது. :))))

    ReplyDelete
  30. ஸ்கூல் பையன்,

    //நாம் பலரையும் ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பதே சரி....//

    நாம் பலரும் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பதே சரி! இல்லையா? :))))))

    ReplyDelete
  31. வாங்க வெங்கட், ரயில்வே வெஜிடேரியன் ஸ்டாலில் கொஞ்சம் பரவாயில்லாமல் கொடுப்பாங்க. ஆனால் சுவையும், தரமும் தான் பல சமயங்களில் நல்லா இருக்காது. :)))) இல்லைனா அங்கேயே நம்பிச் சாப்பிடலாம்.

    ReplyDelete

  32. சிலர் உயிர் வாழச் சாப்பிடுகிறார்கள். சிலர் சாப்பிட உயிர் வாழ்கிறார்கள். நீங்கள்.? ஹி ஹி ஹி ..!

    ReplyDelete
  33. வாங்க ஜிஎம்பி சார், நாங்க பசித்தால் சாப்பிடும் ரகம். ஒருவேளை சாப்பாடு இல்லாமல் இருக்கலாம் தான். ஆனால் மாத்திரைகள் எல்லாம் எடுத்துக்கணுமே! :) அதுக்காக எதையானும் சாப்பிட்டுத் தான் ஆகணும். :))))

    ReplyDelete