எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 04, 2017

அன்றொரு நாள் முறுக்குச் சுற்றும் பொழுதினிலே!

தலைப்புச் சும்மா எல்லோரையும் கவரவென்று வைத்திருக்கேன். துணியில் கட்டி வைச்சிருக்கும் அரைச்ச மாவு.


சுற்றிய முறுக்குகள்


எண்ணெயில் வேகும் முறுக்குகள்


வெந்து எடுத்த முறுக்குகள்! 


இந்த வருஷம் பண்டிகைகள் கிடையாது! ஆகவே உம்மாச்சி பேரைச் சொல்லி பட்சணம் தின்ன முடியாட்டியும் நம்ம பேரிலேயே சொல்லிப் பண்ணிக்கலாம்னு ஒரு நாள் முடிவு செய்து வழக்கம் போல் என்னுடைய முறைப்படிப் புழுங்கல் அரிசியை ஊற வைச்சு அரைச்சேன். அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைச்சுட்டுப் பின்னர் நீரெல்லாம் வடிஞ்சப்புறமா உளுத்தமாவு, ஜீரகம், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்குச் சுற்றினேன். மேலுள்ள படங்களில் அதைத் தான் பார்க்கறீங்க!

என்ன இதுவும் ஒரு சமையல் வலைப்பக்கமா மாறிடுச்சேனு நினைக்கறீங்களா? அப்படி எல்லாம் இல்லை! என்னையும் அறியாமல் ஒரு வாரம் பதிவுகள் ஏதும் இல்லாமல் கடந்து விட்டிருக்கிறது! அதை நேற்றுத் தான் கவனித்தேன். இத்தனைக்கும் தினமும் இணையத்துக்கு வந்தும், என்னுடைய பதிவுகளையும் வலைப்பக்கத்தையும் பார்த்தும் இதைக் கவனிக்கவில்லை! பார்ப்பதற்கும், கவனிப்பதற்கும் வேறுபாடு உண்டே! ஆனால் நேற்றுப் பதிவு போடும் மனநிலையில் இல்லை.  ஆகவே எதுவும் எழுதவில்லை. என்னோட "யார் யாரை மன்னிப்பது!" என்னும் பதிவிற்குப் பின்னூட்டம் கொடுக்க முடியாமையால்  பானுமதி வெங்கடேஸ்வரன் என்னிடம் தொலைபேசியில் கூறி இருந்தபடி பதிவை நேற்றுத்   தான் போட்டிருக்கிறார். அதுவும் எனக்கு அப்டேட் ஆனது இன்னிக்குத் தான்!

இன்னும் அவர் கூறியபடி என்னுடைய "மோகமுள்" தி.ஜா. நாவலின் விமரிசனத்துக்கான பதில் பதிவு வரணும்! பார்ப்போம். விரைவில் போடுவார் என நினைக்கிறேன். எழுதறதுக்கு விஷயம் இருந்தும், பல பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருந்தும் எதையும் பகிர மனம் வரவில்லை. காரணம் தெரியாத உடல்சோர்வு, மனச்சோர்வு! மனச்சோர்வால் உடல் சோர்வா, அல்லது உடல் சோர்வால் மனச்சோர்வா? புரியலை! மனச்சோர்வு தான் உடலையும் செயல்பட வைக்க முடியாமல் தடுக்கிறது என நினைக்கிறேன்.

எங்கே பார்த்தாலும் ஒரே போராட்டம்! கூச்சல், குழப்பம்! தொலைக்காட்சியில் லயிக்கலாம் என்றால் அதிலே இன்னமும் ஜாஸ்தியா இருக்கு! தினசரிகள் நல்லவேளையா வாங்குவதில்லை. ஐபாடில் நான் படிப்பதும் இல்லை. தினசரிகள், மாதாந்தரிகள் படிப்பதை எல்லாம் நிறுத்தி விட்டேன். நாட்டில் நடப்பது எதுவும் சரியாக இல்லை! இளைஞர்கள் சரியான பாதையில் தான் செல்கின்றார்களா? கவலையாக இருக்கிறது! எல்லாம் கிடக்க வீட்டில் புத்தக அலமாரியைச் சுத்தம் செய்யணும்னு அம்பேரிக்காவில் இருந்து வந்ததிலிருந்து நினைச்சுட்டு இருக்கேன். ஆனால் புத்தக அலமாரியைத் திறந்தால் அதிலேயே அப்படியே உட்கார்ந்துடுவோமோனு ஒரு தயக்கம்! லேசில் முடியாது! தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரங்க்ஸ் சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டு இப்போ எப்படிவேணாப் போனு தண்ணி தெளிச்சு விட்டுட்டார்! சுறுசுறுப்பு வந்து அதையானும் ஒழுங்காச் செய்வேனா என எனக்கே யோசனையா இருக்கு! அந்த அளவுக்கு இயலாமை!

என்னடா ஒரே புலம்பல்னு நினைக்காதீங்க! இந்தப் பதிவே "எண்ணங்கள்" தானே! ஆகவே என் "எண்ணங்கள்" தான் பகிரப்படுகின்றன.  இப்போ பானுமதியின் பதிவுக்கு பதில் போடணும்! எதை முன்னால் செய்யப் போகிறேன் என்று புரியலை!

இன்று "ஓணம்" கொண்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் ஓணத்திருநாள் வாழ்த்துகள்.

35 comments:

 1. முறுக்கு சுத்தரதுன்னா ப்ளாக் எழுதறதுன்னு நினைச்சேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, தம்பி இல்லைனா வருவீங்களா என்ன என்னோட பதிவுக்கெல்லாம்!

   Delete
 2. முறுக்கு வச்சுக்கூட பதிவு போடுறீங்க நான்தான் விசயமில்லாமல் அலையிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, முறுக்கு மட்டும் இல்லையே! நிறையச் சுத்தி இருக்கேனே, படிக்கலை?

   Delete

 3. சுட்ட முறுக்கை நீங்கள் வைச்சு சாப்பிட்டுவிட்டு அதை பற்றி பதிவை மட்டும் போடுவது நியாயமா என்ன? உங்கள் பதிவை படிக்கும் எங்களுக்கும் பகிர்வதுதானே சரி

  ReplyDelete
 4. முருக்கு ரொம்ப நல்லா வந்துருக்கு. என் ஹஸ்பண்ட் ரெடி பண்ணற முருக்கு மாவே ரொம்ப வாசனையா நல்லாருக்கும். அவள்டகூடச் சொல்லொவேன், மாவு ரெடிபண்ணி அதுல சீப்பி பண்ணினாலும் போதும்னு.

  சில நாட்களில் சோர்வு வரத்தான் செய்யும். பதிவு எழுதினால் பின்னூட்டம் மூலமா திருப்பி எனர்ஜி வந்துடும்.

  இல்லைனா, உயிரின் மதிப்பு தெரியாதவர்கள் மருத்துவம் படிச்சால் என்ன படிக்காட்டா என்ன என்று ஒரு இடுகை போட்டால் சுடச்சுட நிறைய பின்னூட்டங்கள் வந்து உங்களைச் சுறுசுறுப்பாக்கிடும்.

  ReplyDelete
  Replies
  1. முறுக்கு இன்னும் நல்லா வரும்! இப்போல்லாம் இதுவே பெரிய விஷயமா இருக்கு! உங்களுக்கு என்ன இருந்தாலும் உங்க ஹஸ்பன்ட் செய்யறது தான் பிடிக்கும். இல்லைனா உங்க அம்மா! அது சரி, உங்க சமையலை எப்படிச் சாப்பிடறீங்க? :))))))) நீங்க சொல்ற மாதிரி இடுகை போடத் தான் ஆசை! வேணாம்னு தான்! :)

   Delete
  2. "உங்க சமையலை எப்படிச் சாப்பிடறீங்க" - சில நாட்கள் நல்லாருக்கும், திருப்தியா இருக்கும். பல நாட்கள் தயார் செய்வதில் உள்ள ஆர்வம் சாப்பிடுவதில் இருக்காது. நேரத்துக்கு சாப்பாடு என்னால் ரெடிபண்ண முடியாது. ஹஸ்பண்ட் பண்ணி நான் சாப்பிடுவதுபோல் வராது. ஆனா இதைப்பற்றியெல்லாம் நினைக்காமல் இருந்தால்தான் மனம் நிம்மதியா இருக்கும்.

   Delete
  3. இல்லைனா, உயிரின் மதிப்பு தெரியாதவர்கள் மருத்துவம் படிச்சால் என்ன படிக்காட்டா என்ன என்று ஒரு இடுகை போட்டால் சுடச்சுட நிறைய பின்னூட்டங்கள் வந்து உங்களைச் சுறுசுறுப்பாக்கிடும்.// நெல்லை இந்த வரிகளை ரசித்தேன். ஏன்ன இதுதான் உண்மை!!!

   ஆனா பதிவு எழுதினா முத்திரை குத்துவாங்க...எதுக்கு வம்பு... அனாவசியமான கமென்டுகள் வரும்...அதுக்குப் பதில் தட்டிக்கிட்டிருந்தா அதுவே சோர்வாகிடும்!!!!ஆனா அக்காவுக்கு அப்படியான கமென்டுகள் வருமானு தெரியலை....

   கீதாக்கா சொல்லியிருப்பது போல் இளைஞர்கள் யாரும் நல்ல பாதையில் செல்வதாகத் தெரியவில்லை. அவர்களின் எதிர்காலமும் தான்.இதை ஊதிவிட ஒரு கூட்டம் இருக்கே!! முன்னேற்றப் பாதையில் இருப்பதாகத் தெரியலை...

   கீதா

   Delete
  4. //ஆனா அக்காவுக்கு அப்படியான கமென்டுகள் வருமானு தெரியலை....// நிறைய வரும், வந்திருக்கு! முகநூலிலும் சிலர் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் குறைத்துக் கொண்டு வருகிறேன். என்றாலும் தமிழ்நாடு போகும் போக்கு மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. :( தவறான பாதையில் இளைஞர்கள் வழிநடத்தப்படுகின்றனர். சரியான ஆளுமை நிறைந்த தலைமை இல்லை.

   Delete
 5. ஆஆங் கீதாக்கா... இம்முறையும் ஸ்ரீராமுக்குப் போட்டியாஆஆஆஆஆஆ?:) ஏன் ஞாயிற்றுக் கிழமை போட்டிருக்கலாம் இல்ல செவ்வாய்கூடப் போட்டிருக்கலாம் அது எதுக்கு திங்களிலேயே?:) ஹா ஹா ஹா விட மாட்டேன்ன்ன்ன் இப்பவே போகிறேஎன் காண்ட் கோர்ட்டுக்கு நேக்கு நீதி தேவை.. எனக்கு தெரிஞ்சதெல்லாம்.. கடமை நேர்மை எருமை:)...

  இருப்பினும் முறுக்கு சூப்பர்ர்... துணியில் கட்டியிருப்பது புது முறை..:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா, இது தற்செயல்! அப்புறமாத் தான் நினைச்சேன்! கோர்ட்டுக்குப் போங்க! அடுத்தவாரமும் விட மாட்டோமுல்ல! துணியில் மாவைக் கட்டுவது நீர் விட்டு அரைப்பதால்! அந்த நீரெல்லாம் போக்குவதற்காக! பொதுவாக அரிசியை ஊற வைச்சுக் கொஞ்சம் காய வைச்சு அரைச்சு முறுக்கு செய்வாங்க! அது பச்சரிசி! ஆனால் நான் இட்லிக்கு வாங்கும் புழுங்கல் அரிசியில் முறுக்கு செய்தேன்! :)

   Delete
 6. ///அன்றொரு நாள் முறுக்குச் சுற்றும் பொழுதினிலே!//
  தலையும் சுற்றியதோ.. ஹா ஹா ஹா வர வர எல்லோரும் தலைப்பில் கவர்ச்சி காட்டீனம்:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எழுதற விஷயத்தை விடத் தலைப்பு தானே அனைவரையும் இழுக்குது! :)

   Delete
 7. அன்றொரு நாள்....சுற்றும் பொழுதினிலே! ன்னு வைத்திருந்தால் இன்னும் கன்னா பின்னானு கவரலாமோ?!! :-))
  மனச் சோர்வும் உடற் சோர்வும் நீங்க ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்... Sailing in the same boat தான்....

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், திருச்சியை/ஶ்ரீரங்கத்தை விட்டுச் சென்னை போனதில் சோர்வா? விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்!

   Delete
 8. ஹூஸ்டனில் பையரும் பெண்ணும் தண்ணீரிலே தவிக்கிறாங்க. நீங்க இங்கே முறுக்கு சுடுறீங்க. நாங்க ஓணம் கொண்டாடியாச்சு
  ​ நான் முறுக்கு சுத்ததுன்னா ​​flashback என்று நினைத்தேன்.​
  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. நீங்க அன்றாடம் செய்திகளைப் பார்ப்பதில்லை போல! எங்களுக்கு அன்றாடம் பிள்ளை, பெண்ணிடம் இருந்தும் தகவல்கள் வருவதோடு தொலைக்காட்சி மூலமும் தெரிந்து கொண்டு விடுகிறோம். அதோடு இது சுமார் ஒரு மாதம் முன்பு சுற்றியவை! கிட்டத்தட்ட ஃப்ளாஷ்பாக் தான்! :) இதை விட முன்னால் செய்ததெல்லாம் கூடப் பதிவுகளாக வந்திருக்கு.

   Delete
 9. இம்மாதிரி கை முறுக்கு சுற்றுவது கடினமாமே

  ReplyDelete
  Replies
  1. தெரியலை. மதுரையில் பள்ளியில் படிக்கையில் எங்களோடு குடி இருந்த மாமி புழுங்கல் அரிசியைக் கல்லுரலில் அரைத்துச் செய்வார். அப்போது கற்றுக் கொள்ள ஆரம்பித்தது. அப்போவெல்லாம் ஒரு சுற்று முறுக்கு ஆள்காட்டி விரல் அளவுக்கு தடிமனாக இருக்கணும்னு சொல்வாங்க. ஆனால் என் புக்ககத்தில் பச்சரிசியை இடித்துச் செய்வதோடு சுற்றும் மெலிதாக இருக்கும். அவங்க என்னைக் கேலி செய்வாங்க. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றின் அளவை மாற்றினேன். ஓரளவு தடிமனாக அதே சமயம் ரொம்ப மெலிதாக இருக்காத வண்ணம் பார்த்துப்பேன். :)

   Delete
 10. எல்லாத்தையும் முறுக்கிச் சுத்தியிருக்கீங்க..

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரையா, கொக்கா! சரியான புரிதல்.

   Delete
 11. கைதேர்ந்தவர்களால் மட்டுமே இவ்வளவு அழகாக முறுக்கு சுற்ற முடியும். முறுக்கு மாவுக்கு அளவுகள் தராதது வருத்தம்!!!!!!

  என்ன கவலை? விடுங்க... எல்லாம் சரி ஆயிடும்.

  //தினசரிகள், மாதாந்தரிகள் படிப்பதை எல்லாம் நிறுத்தி விட்டேன். நாட்டில் நடப்பது எதுவும் சரியாக இல்லை!//

  அப்போ எங்கள் பாஸிட்டிவ் பதிவுகள் மட்டும் படியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், அளவெல்லாம் முன்பே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். கை தேர்ந்தவள் எல்லாம் இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! :) உங்க பாசிடிவ் பதிவுகளைப் படித்து வருகிறேனே!

   Delete
 12. ஆஹா !! சூப்பரா இருக்கு ..எனக்கு எல்லாம் அச்சில் போட்டாலே சரிவராது :)
  நீங்க அந்த ரெண்டு சுற்று தாம்புக்கயிறு ஷேப் எப்படி கொண்டுவந்திங்கன்னு இன்னொரு பதிவாவே வீடியோ பதிவா போடுங்க :)

  புழுங்கலரிசி மாவு கூட உடைச்ச கடலை அரைச்சி பவுடராக்கி சேர்த்தேன் முன்பொருமுறை ஆனா இப்படி வெள்ளையா வரல

  துணியில் கட்டுறது செய்யும்போது சட்னி டால் சேர்க்க வேணாம்போலிருக்கு ..


  //

  எங்கே பார்த்தாலும் ஒரே போராட்டம்! கூச்சல், குழப்பம்! தொலைக்காட்சியில் லயிக்கலாம் என்றால் அதிலே இன்னமும் ஜாஸ்தியா இருக்கு!
  //

  அதே அதே நியூஸ் பார்க்கறதை தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்கேன் ..சில விஷயங்களில் கருத்து சொல்லவும் பயமா இருக்கு ..

  மனசோர்வுத்தான் :(

  குதிரை போல பிளைண்டர்ஸ் மாட்டிட்டு போனாலும் காது எல்லாத்தையும் கேக்குது ...

  ReplyDelete
  Replies
  1. //நீங்க அந்த ரெண்டு சுற்று தாம்புக்கயிறு ஷேப் எப்படி கொண்டுவந்திங்கன்னு இன்னொரு பதிவாவே வீடியோ பதிவா போடுங்க :)// இதுக்கே இப்படின்னா முன்னே சுற்றினதைத் தேர்வடம்னு சொல்வீங்க!

   அப்புறமா இந்தப் பொட்டுக்கடலை மாவைச் சேர்ப்பது! நானும் சேர்ப்பேன். ஆனால் முறுக்கில் இல்லை. தட்டையில்! அரைத்த புழுங்கலரிசி மாவோடு கொஞ்சம் உளுத்த மாவு,பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் காரம், உப்பு, பெருங்காய், தேங்காய்க் கீற்று, ஊற வைத்த கடலைப்பருப்புச் சேர்த்துப் பிசைந்து தட்டை தட்டுவேன். பச்சரிசி மாவிலும் தட்டை பண்ணலாம். அதுக்கும் பொட்டுக்கடலை மாவு சேர்க்கலாம். :)

   Delete
 13. வழக்கம் போல முடிவு செய்து என்று படித்து விட்டு சிரித்துக்கொண்டேன் தவறில்லையே?

  விஸ்வநாதன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஸ்வா, தாராளமாச் சிரிக்கலாம். தப்பில்லை. :)

   Delete
 14. கருத்து 2 போட்டு நெட் போக எல்லாம் போச்சு..இப்போ மீண்டும்..

  முறுக்கு ரொம்ப அழகா இருக்கு கீதாக்கா....ஹை நானும் புழுங்கலரிசியில்தான் செய்வேன். திருனெல்வேலி பக்கம் புழுங்கலரிசியில்தான் செய்வார்கள். கிருஷ்ணஜெயந்தி அன்று மட்டும்தான் பச்சரிசி மாவில்...

  இப்படித்தான் துணியில் போட்டு மூட்டை கட்டி அப்புறம் உ மாவு சேர்த்து...ரொம்ப அழகா சுத்தியிருக்கீங்கக்கா...தட்டையும் கூட புழுங்கலரிசியில்தான் ..நன்றாக இருக்கும்...

  எனக்கு இவ்வளவு அழகா சுத்த வராது..நா ஊறுது....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தட்டை, முறுக்கு இரண்டுமே புழுங்கலரிசியில் செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன். சுட்டி தேடிப் பார்க்கிறேன். கிருஷ்ண ஜயந்தி அன்று நிவேதனத்துக்குப் பச்சரிசி மாவு தான்! இன்னும் பலரும் எங்களோட பின்னூட்டங்கள் வெளியிடலையேனு கேட்கிறாங்க. முக்கியமாய் மதுரைத் தமிழன். யாரோடதும் ஸ்பாமில் கூட இல்லை. மற்றபடி வந்தவற்றை வெளியிட்டு விடுகிறேன். அப்பாதுரை கூடக் கமென்ட் கொடுப்பது எங்கே போகிறது எனத் தெரியவில்லை என்றார். இன்னிக்கு வந்திருக்கு.

   Delete
 15. தலைப்பு ரொம்பவே கவர்ச்சிதான்!! ரசித்தோம்..

  முறுக்கு அழகாக இருக்கிறது.சகோதரி! சோர்வு நீங்கி சீக்கிறம் எழுதுங்க...இதிலும் சோர்வு தெரியலை என்பது வேறு விஷயம். ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன், சோர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கணும் இல்லையா! நம் சோர்வு அனைவரையும் சோர்வடைய வைக்கக் கூடாதே! ரொம்ப நன்றி.

   Delete
 16. //இன்னும் அவர் கூறியபடி என்னுடைய "மோகமுள்" தி.ஜா. நாவலின் விமரிசனத்துக்கான பதில் பதிவு வரணும்! பார்ப்போம். விரைவில் போடுவார் என நினைக்கிறேன்.//

  என்ன எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதை உங்களிடம் தொலைபேசியில் தெரிவித்து விட்டதால் எழுதவில்லை.

  ReplyDelete
 17. அரசியல்வாதிகள் தேவை இல்லாமல் மாணவர்களை முறுக்கி விடுகிறார்கநாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் மனம் வருத்தத்தான் செய்கிறது.

  ReplyDelete
 18. என் மாமியார் புழுங்கல் அரிசியில்தான் முறுக்கு செய்வார்கள்.

  சில நேரங்களில் உடல் சொல்வதை கேட்க வேண்டி உள்ளது.
  மனமும் ஒருசேர சோர்வாய் இருக்கும் போது வானத்தையும், பற்வைகளையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறேன்.

  ReplyDelete