எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 07, 2017

விமரிசனங்கள் குறித்து ஒரு விமரிசனம். :)

என்னனு பார்க்கிறீங்களா? இப்போது எல்லாம் பதிவுகள் எழுதினாலும் சரி, கதைகள், கட்டுரைகள், கவிதைகள்னு எது பகிர்ந்தாலும் சரி எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லிடறாங்க. நல்லவேளையா நான் கவிதை எல்லாம் எழுதறதில்லை. பிழைச்சேன்! ஆனாலும் நான் எழுதறதை அனைவரும் பாராட்டியே எழுதறதைப் பார்க்கையில் உண்மையிலேயே நல்லா இருக்கானு சந்தேகம் வரத் தான் செய்கிறது. இந்த விஷயத்தில் "காலச்சக்கரம் நரசிம்மா"வைப் பாராட்டியே ஆகணும். நான் குற்றம் சுமத்தி எழுதி இருந்த போதிலும் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் (அதாவது தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல்) அருமையான பதிலை எழுதி, மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை நிரூபித்து விட்டார்.

ஏனெனில் இப்போதெல்லாம் எல்லோரும் எல்லாவற்றையும் பாராட்டி விடுவது ஒன்றே சரி என நினைக்கிறார்கள். உண்மையைச் சொன்னாலோ, குற்றம் குறைகளைச் சுட்டினாலோ எழுதியவர்   மனம் வருந்துவார் என்பது மட்டும் இல்லை. அதன் எதிர் விளைவுகளைத் தாங்கவும் யாரும் விரும்புவதில்லை. ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கின்றனர். ஏனெனில் உண்மையைச் சொன்னால் எல்லோருமே, " சரி, தப்பா இருந்தால் திருத்திக்கறேன்." னு சொல்வதில்லை. "உன்னை யார் கூப்பிட்டாங்க?  நீ யார் சொல்வதற்கு?" என்பதே முதல் கேள்வியாக இருக்கும்! அடுத்ததாக, "உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! இஷ்டமிருந்தால் படி! இல்லைனா இங்கேருந்து ஓடு!" என்பதே அடுத்த பதிலாக இருக்கும். இது நான் இரு வருடங்கள் முன்னர் ஒருத்தரின் முகநூல் பதிவில் உள்ள தவறைக் குறிப்பிட்டபோது அனுபவித்த ஒன்று. அதன் பின்னர் அவங்களை நட்பு வட்டத்திலிருந்தே விலக்கி விட்டேன். ஏனெனில் படித்தால் நமக்கு அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டத் தோன்றும். ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடனேயே விமரிசனம் எழுதி வருகிறேன்.

நாம் நினைத்ததை, எழுத எண்ணியதை வேறு யாரேனும் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதை ஆமோதித்துச் சொல்கிறேன். முன்னைப் போல் நானாக என் மனதில் தோன்றுவதைச் சொல்வதில்லை. இப்போவும் அப்படியே நேரடியாத் தான் தட்டச்சு செய்து வருகிறேன் என்றாலும் எழுதியதை, கருத்துச் சொன்னதை ஒரு முறை படித்துவிட்டுப் பரவாயில்லையா, அனுப்பலாமா என யோசித்தே பப்ளிஷ் கொடுக்கிறேன். இது கொஞ்சம் புதுசு தான்! ஆனாலும் என் சுபாவம் தெரிந்த நண்பர்களிடம் அப்படி நடந்து கொள்வதில்லை! அதை அவங்களும் புரிந்து கொண்டிருப்பாங்க! எழுத்துப் பிழைகளைக் கூட இப்போதெல்லாம் சுட்டிக் காட்டுவதை நிறுத்தி விட்டேன். :) இது என் சுபாவம் அல்ல என்றாலும் இனி இப்படித் தான் என்னும் முடிவு!

பொதுவாக யாருடைய எழுத்தை நாம் விமரிசித்தோமோ அவர்களிடம் இருந்து  இம்மாதிரி பதில்களைக் கேட்டால் அவமானப்பட்டதாக ஓர் உணர்வு விமரிசனம் செய்தவர்களுக்கு இருக்கும். யோசித்துப் பார்த்தால் இவ்வகையான பதில்களும் ஒரு வகையில் விமரிசனங்களே! அதைத் தள்ளிவிட்டுப் போவது தான் சரி.  நான் ராமாயணம் எழுதும்போது கடுமையான விமரிசனங்களைச் சந்தித்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தக்க பதிலும் கொடுத்திருக்கிறேன். அதற்காக என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கியதாக இன்று வரை நினைக்கவில்லை. ஆனால் ஒரு சிலரின் எழுத்தை நாம் விமரிசித்தால் அப்படி அர்த்தம் வருகிறது. என்றாலும் எத்தகைய விமரிசனம் வந்தாலும் நான் தாங்கிக் கொள்ள மனோபலத்தை இறைவன் கொடுக்க வேண்டும். அதைத் தான் வேண்டிக் கொள்கிறேன்.

இப்போது யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் ஒரு சிலரின் பதிவுகளில் முக்கியமாக முகநூல் பதிவுகளில் விமரிசனங்களுக்கு வரும் பதிலைப் பார்த்தால் இப்படித் தோன்றியது! தனிப்பட்ட தாக்குதல்கள், ஜாதியைக் குறித்த இகழ்ச்சி என்றே பேசுகிறார்கள். பேசுவதற்கும், எழுதுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே! ஆக்கபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்தால் அனைவருக்கும் நன்மை தரும்! அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏசுவதால் என்ன நடக்கப் போகிறது! அதோடு பதிவுகள் போடுவதையும் குறைத்திருக்கிறேன். வாரம் இரண்டு அல்லது மூன்று எனக் கணக்கில் கொண்டு வர உத்தேசம்! 

46 comments:

 1. நீங்கள் சொல்வதை 100% ஆமோதிக்கிறேன். விமரிசித்தால் மனம் புண்படுமோ என்று நானும் சில இடங்களில் எனக்குப் பிடித்த பகுதியை மட்டும் பாராட்டி விட்டுப் போய் விடுகிறேன்.

  முக நூலில் ஜாதி குறித்து புண்படும்படி விமர்சனம் செய்வது தவறு தான்! அதுவும் அரசியல்வாதிகள் போலவே செயல்படுகிறார்கள் - யாரை விமர்சித்தால் பதில் வராது, அனைவருக்கும் பிடிக்கும், எட்செரா...

  நீங்க பாட்டுக்கு எழுதுங்க... ஆக்கபூர்வமாக.. கீதையின் பாதையில்... :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, சில இடங்களில் அப்படித் தான் போக வேண்டி இருக்கு! இல்லைனா கடுமையான விமரிசனங்களை எதிர் நோக்க வேண்டி இருக்கு. அப்புறமா அதுக்குப் பதில் சொல்வதே வேலை ஆயிடும்! :) முகநூலில் அதிகம் தான்!

   Delete
 2. "காலச்சக்கரம் நரசிம்மா" - இதைப் படித்தவுடன், போனவாரம் 5 மணி நேரம் செலவழித்துப் படித்த காலச்சக்கரம் நரசிம்மாவின் 'ரங்கராட்டினம்' புதினம் ஞாபகம் வந்துவிட்டது. அதில் அவர், பன்னீராயிரம் வைணவர்கள் அழிந்துபட்டதைத் தொட்டுச் செல்கிறார் (ஸ்ரீவேணுகோபாலன் போல், உற்சவர்- நம்பெருமாள் நீண்ட பயணத்தை விவரிக்காமல், ஐந்து குழி-மூணு வாசல் என்பதை எடுத்துக்கொண்டு அந்தக் காலகட்ட அரசியலை எழுதியிருக்கிறார்). அதைப் பற்றி விமரிசனம் எழுதலாம் என்று நினைத்தேன். அப்புறம் 'எங்கே எழுதுவது' என்று விட்டுவிட்டேன்.

  "நமக்கு அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டத் தோன்றும்" - என் பெண், தன் டிரஸ் அல்லது மற்றது எப்படி இருக்குன்னு கேட்கும்போது, நானும் உண்மையான விமரிசகன் மாதிரி, 'இது சரியில்லை, அது பரவாயில்லை' என்றெல்லாம் சொல்லுவேன். அதற்கு அவள், 'அப்பா... பொதுவா மற்றவங்க டிரஸையோ (தெரிந்தவங்க) அல்லது ஏதாவதையோ நாமே பாராட்டணும். அவங்க கேட்டாங்கன்னா, அப்போவும் பாராட்டித்தான் சொல்லணும்' அப்படின்னு சொல்லுவா. அதுனால சில சமயம், நானே, 'WOW Excellentஆ இருக்கு, amazingஆ இருக்கு'ன்னு சொல்லும்போது, 'Now you have learnt, but சொல்லும்போது மனசுலேர்ந்து சொல்றமாதிரி சொல்லுங்க' என்பாள்.

  நீங்க சொல்றது, 'உங்க கருத்து உங்களுக்கு, என்னோட கருத்து எனக்கு'. பெரும்பாலானவர்கள், எதிர் கருத்து தெரிவிப்பவர்களை எதிரியாத்தான் பார்க்கிறாங்க. என்ன செய்ய? நட்பு முக்கியமா அல்லது நம்ம கருத்து முக்கியமா? 'நட்பு'தான் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. என்னைப் பொறுத்தவரை நண்பர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்துவதில் தான் உண்மையான நட்பு இருக்கிறது என்பேன் நெ.த. தவறை மறைப்பதில் அவர் தவறு செய்திருக்கோம் என்பதையே உணராமல் அல்லவா போயிடும்! என்றாலும் இப்போது ஒரு சில பதிவுகளில் நான் விரிவான பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கிறேன். இது கொஞ்சம் சிரமமானது தான்! ஆனாலும் தவிர்க்க முடியலை!

   Delete
  2. என் பெண்ணோ, பிள்ளையோ, கணவரோ யாராக இருந்தாலும் எனக்குப் பிடிச்சிருந்தால் தான் நான் நல்லா இருக்குனு சொல்வேன். இதில் நீங்க சொல்றாப்போல் எங்க பெண் அம்மாவுக்குத் திருப்தி இல்லை எனக் குறைப்படுவாள். ஆனால் அவள் இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்! அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும். பிறர் மனம் புண்படப் பேசுவது வேறு. தவறுகளைச் சுட்டிக் காட்டுவது என்பது வேறு! என்னைப் பொறுத்தவரையில் இப்படித் தான் நினைக்கிறேன்.

   Delete
  3. காலச்சக்கரம் நரசிம்மாவின் கதைகளை நான் படித்தவரை விமரிசனம் செய்திருக்கிறேன். நீங்க படிக்கவில்லை போலும்.

   Delete
  4. படித்தமாதிரியும் இருக்கு (அவர் அதற்கு பின்னூட்டம் போட்டிருந்தமாதிரி ஞாபகம்) படிக்காதமாதிரியும் இருக்கு. அந்தச் சுட்டி கொடுக்கவேண்டியதுதானே

   Delete
  5. தரேன்! அநேகமாப் படிச்சிருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன். :)

   Delete
  6. http://sivamgss.blogspot.in/2015/06/blog-post_19.html

   இன்னும் ஒரு பதிவில் அவரே கருத்துச் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன். அது கிடைக்கவில்லை! அதாவது தேட முடியலை! :)

   Delete
 3. விமர்சனத்துக்கும், நட்புக்கும் பந்தமில்லை அதாவது என்னைப் பொருத்தவரை...

  மனதில் தோன்றும் உண்மையான கருத்தை முன் வைக்காமலும், தெரிந்தும் பிழைகளை சுட்டிக்காட்டாமல் மறைந்து ஒழிவதும், முகத்தாட்சினியத்துக்காக... "நல்லாருக்கு" என்று எழுதிப்போவதும் ஒரு நல்ல பதிவருக்கு அழகல்ல!

  இவ்வகையில் எனக்கு திரு. ஜியெம்பி ஐயா அவர்களை மிகவும் பிடிக்கும்.

  பாராட்டுவதிலும், எதிர் கருத்து சொல்வதிலும் உண்மையாக இருப்பார்.

  நானும் அப்படி இருக்க விரும்புகிறேன், இருக்கிறேன் பிறருக்காக நமது கொள்கையை மாற்றிக்கொள்வது சரியல்ல... உங்கள் மனதில் தோன்றும் உண்மை கருத்துகளை எழுதுங்கள் அதுவே என்னைப்போன்ற கத்துக்குட்டி பதிவர்களை செம்மை படுத்தும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவைப் பொறுத்தவரையில் அப்படித் தான் எழுதி வருகிறேன் கில்லர்ஜி! ஏனெனில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை நான் உணர்ந்திருப்பதால். மற்றபடி ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு சில பதிவுகளில் அநாவசிய வாக்குவாதம், தவறான புரிதல்! ஆகவே கொஞ்சம் இழுத்துப் பிடிக்கிறேன். இன்றைய உங்கள் பதிவில் கூடத்தவறைச் சுட்டிக் காட்டி இருக்கேன். :)

   Delete
  2. எனக்கு தெரியும் இதை நான் முழுமையாக நம்புகிறேன்.

   Delete
  3. கில்லர்ஜி... விமரிசனத்தைப் பற்றி குறைகூறி நான் பார்த்ததில்லை. தவறான புரிதல் இருந்தால் அவர் நிலையை விளக்குவாறே தவிர எதிர் கருத்தையும் நட்பையும் போட்டுக் குழப்பிக்கமாட்டார். ஜி எம் பி சாரும் அப்படித்தான் (இவர்கள் இருவரும்தான் எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது). இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

   Delete
  4. கில்லர்ஜி என்னைத் தான் மனதில் தோன்றுவதை எழுதச் சொல்லி இருக்கார். நானும் அவர் பதிவில் ரசிக்க முடியாததை ரசிக்க முடியலைனு சொல்லிடுவேன். ஏனெனில் அவருக்குப் புரியும் என்பதால் தான்! :)

   Delete
  5. என் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களை தனிப்பட்ட முறையில் யார் சாடினாலும் எனக்குப் பிடிக்காது. அப்படியான பின்னூட்டத்தை அனுமதிக்காது மட்டுறுத்தி விடுவேன். பின்னூட்டம் போடுபவர்களுக்குள் நட்புறவை வளர்க்கவும் என் பதில் பின்னூட்டங்கள் மூலம் முயற்சிப்பேன்.
   என்னைப் பொருத்த மட்டில் என் பதிவுகளை வாசித்து கருத்திடுபவர்கள் தான் முக்கியம். அவர்கள் என் மரியாதைக்குரியவர்கள். பொதுவெளியில் அவர்களின் மரியாதை காக்கப்படாமல் போக விடவே மாட்டேன்.

   பதிவர்கள், பின்னூட்டமிடுபவர்கள் எல்லோருக்குமே ஒரு எதிக்ஸ் வேண்டும். எவனையோ எவனோ தனிப்பட்ட முறையில் தாக்குகிறான், நமக்கென்ன ஆச்சு என்று இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தானும் நுழைந்து நியாயங்களைச் சொல்லி முறைப்படுத்த முன்வந்தால் இப்படிப்பட்ட அனாவசிய தாக்குதல்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பும் கருத்துக்களை மனம் திறந்து விவாதிக்கவும் வழி ஏற்படும்.

   எல்லாவற்றையும் விட பதிவு போட்டவரின் பொறுப்புகள் தாம் அதிகம். தனக்கு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தவும், கையாளவும் அவருக்குத் திறமை வேண்டும்.

   நட்புக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று கருத்துக்களை விவாதிக்கூடாது என்றில்லை. கருத்துக்களைக் கூட விவாதிக்கக் கூட முடியவில்லை என்றால் அது நட்புக்கு இலக்கணமா என்ன?.. கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு தானே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நட்பு பேண வேண்டும்?..

   எதிரும் புதிருமாக கருத்துக் கொண்டுள்ளோரிடம் தான் நட்பே சுவாரஸ்யப்படும். அந்த மேலான நட்பின் பெருமையும் சம்பந்தப்பட்ட இருவரிடமும் மரியாதையுடன் பேணி காக்கப்படும்.

   உதாரணம்: பெரியார் -- ராஜாஜி

   Delete
  6. வாங்க ஜீவி சார், என் பதிவுகளில் விவாதங்கள் நடைபெற நான் ஒத்துழைப்பதில்லை. ஒரு முறை "சிதம்பர ரகசியம்" தொடர் என் ஆன்மிகப் பதிவுகள் பக்கம் எழுதும்போது கடுமையான வாத, விவாதம் நடந்து தமிழ்மணத்தின் சூடான பதிவுகளில் முதலிடமும் பெற்றது! என்றாலும் நான் அதை அதிகம் பொருட்படுத்தவில்லை. சரித்திர, வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம்! அதன் பின்னர் ராமாயணம் தொடர் எழுதும்போதும் நடந்தது! இரு முறைகளிலும் என்னைத் தான் கேள்வி கேட்டிருந்தார்கள்! ஆகவே பிறருக்குப் பாதிப்பு இல்லை. இதற்காகவே நான் சில, பல கருத்துக்களைத் தவிர்த்துவிடுவேன். மற்றபடி நட்பு இருந்தால் இம்மாதிரி மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களிடம் அந்த நட்பு பகையாக மாறும் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை! ஆனாலும் எனக்கு அப்படி நடந்திருக்கிறது; நடந்தும் வருகிறது! :) ஆனால் நான் இதைப் பொருட்படுத்துவதில்லை. கணவன், மனைவி, தாய், மகள், தகப்பன், பிள்ளை ஆகியோரிடமே கருத்து வேறுபாடு உண்டு என்கையில் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? ஒத்த கருத்துள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிலும் அவர்கள் ஒத்திருப்பார்கள் எனச் சொல்ல முடியாது! அப்படி இருந்தால் ஒருவர் மற்றவரை முழுமையாக ஆக்கிரமித்து விட்டாரோ என எனக்குத் தோன்றும்!

   Delete
 4. நீங்கள் சொல்வது உண்மை. எதிர்க்கருத்து எதிரிக்கருத்து ஒருபுறம். ஒருவர் எழுதி இருப்பதை படிக்கும்போது நமக்கு என்ன தோன்றுகிறதோ, அதை எழுதுவோம். படிப்பவருக்கு பதிவுக்கு சம்பந்தமில்லை என்று தோன்றி விடும். நண்பர் ஒருவர் பதிவில் ஒரு சிறு குறை, குறை என்பதைவிட திருத்தம் செய்ய முற்பட்டு எனக்கு நீண்ட விளக்கம் அளித்திருந்தார். அடுத்த முறையிலிருந்து மாறி விட்டேன்! கருத்தா முக்கியம்? நண்பர்கள்தான் முக்கியம். வலையும் எழுத்தும் இன்று இருக்கும். நாளை நிற்கும். இங்கு ஏற்பட்ட நட்பை அல்ப காரணங்களுக்காக இழக்க எனக்குப் பிடிப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், உடம்புக்கு என்ன? இப்போப் பரவாயில்லையா? நான் நிறையப் பட்டாச்சு! ஆனாலும் திருத்திக்க முடியலை! இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைச்சு வரேன்.

   Delete
 5. சில நேரங்களில் சிலரின் பதிவுகள் /முகநூல் இற்றைகள் தவறான முன்னுதாரணமாக அமைந்திடக்கூடாதில்லையாக்கா அந்த காரணத்துக்காகவும் நான் பல சமயம் மனதில் பட்டதை தயங்கியாவது சொல்லிடுவேன் ..ஆனா இந்த முகநூல் ரொம்ப ஸ்ட்ரெஸ் நாம் விரும்பாததெல்லாம்(மதசாதி/ ரீதியா சண்டை அம்மாடியோ இவ்ளோ அழுக்கையும் மனுஷங்க எப்படி தூக்கி திரிகிறார்களோ :( கண்முன்னே படுவதால் ரெண்டு ஐடியையும் டிஅக்டிவேட் செஞ்சிட்டேன் .. ஒரு பதிவில் இரண்டு சற்று உடல்வாகு பெரிய டீனேஜ் பெண்களை கிண்டலடித்தார் ஒருவர் ..பின்னூட்டத்தில்ஒருவர் வருத்தத்துடன் பாவம்னு சொல்ல அதை பார்த்து 5 பேர் அதை தொடரவும் அடுத்த 10 நிமிடத்தில் ஸ்டேட்டஸ் அழிக்கப்பட்டது .அவர் ஆரம்பிக்காட்டி அது கேலி கிண்டலாக தொடர்ந்திருக்கும் ..சில நேரத்தில் கண்டனங்களை சொல்வதில் தப்பில்லைக்கா ..
  நிறையபேருக்கு நான் உட்பட தப்புன்னு தெரியாம செஞ்சிடுவோம் அது சுட்டிக்காட்டப்படாவிட்டால் திருத்திக்கொள்ள முடியாமலே போயிடும் .அதனால் மனதில் பட்டதை சொல்லுங்க .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், நானும் பார்த்துப்பேன். யாரிடம் சொல்லலாம், யாரிடம் சொல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டே சொல்லி வருகிறேன். உங்கள் பின்னூட்டங்கள், பதிவுகளிலும் அப்படியே! :)

   Delete
 6. பல இடங்களில் உங்கள் கருத்தினைச் சொன்னால், உடனே தனிமனிதத் தாக்குதல்கள் தொடங்கி விடும்... பெரும்பாலும் என்னுடைய கருத்தினை நான் சொல்வதே இல்லை! :)

  ReplyDelete
  Replies
  1. வலையுலகில் எந்த கான்ட்ரவர்ஷியல் கருத்தையும் வெளிப்படுத்தாத, அத்தகைய பின்னூட்டங்களின் குறிப்பிட்ட வரிகளைக் கண்டுகொள்ளாமல் (without acknowledging) கடந்து செல்வது வெங்கட்டின் அபூர்வகுணம். நான் அனேகமாக இதனைப் பார்த்ததில்லை. ஒருவேளை வட நாட்டில் ரொம்பகாலம் வசிப்பவர்களின் மனதும் விசாலமாகிவிடுகிறதோ? தில்லியில் வசிக்கும் உறவினரிடத்தும் இந்தக் குணங்களைக் கண்டிருக்கிறேன்.

   Delete
  2. வாங்க வெங்கட், நீங்க எப்போவுமே கருத்துச் சொல்வதைத் தவிர்த்து வருகிறீர்கள்! நானெல்லாம் ஆரம்பத்திலிருந்து அப்படி இல்லையே! அதான்! விளக்கம் சொல்ல வேண்டி இருக்கு! :)

   Delete
  3. நெ.த. வடநாட்டில் வசிப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கா என்ன? நாங்களும் வட நாட்டில் வசித்தவர்கள் தானே! வெங்கட் மாதிரி தில்லியிலேயே இருக்கவில்லை. வெங்கட்டின் சுபாவமே அதான்னு நினைக்கிறேன்.

   Delete
  4. //வெங்கட்டின் சுபாவமே அதான்னு நினைக்கிறேன்//

   :) No Comments!

   Delete
 7. உண்மையான பதிவு இது. நாம் அடுத்தவருக்கு சொல்வதுபோல, நமக்கு அடுத்தவர் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளப் பழகோணும். இன்னொன்று தவறைச் சுட்டிக் காட்டுவது நல்லதுதானே, ஒரு சிலரைத்தவிர பெரும்பாலும் ஏனையோர் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் தான் இருக்கினம் என நினைக்கிறேன்..

  இன்னும் ஒரு பிரச்சனை இருக்கிறது, சிலர் சொந்தக் கதையை , வேறு ஒருவரின் கதைபோல எழுதிவிட்டு பொஷிடிவ்வான கொமெண்ட்ஸ் ஐ எதிர்பார்க்கிறார்கள்.. நாம் இது யாரோ ஒருவருடைய கதைதானே என நினைச்சு.. உள்ளதை சுட்டிக் காட்டும்போது.. அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.

  விமர்சனம் சொல்லும்போது அல்லது பிழையைச் சுட்டிக் காட்டும்போதும், அடுத்தவர் மனம் புண்படாதபடி சொல்ல வேண்டும் எனத்தான் நான் நினைப்பேன்.. ஏனெனில் உலகில் தவறு செய்யாதோர் உண்டோ.

  ஆனாலும் கீதாக்கா உங்கள் மனதில் இருக்கும் பயம் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா, நீங்க சொல்வது உண்மை தான். நானும் பல சமயங்களில் உண்மைக் கதையை எழுதி இருக்கேன் ஆனால் சில மாற்றங்களுடன்! அடுத்தவர் மனம் புண்படாதபடிக்கு சொன்னாலும் புரிஞ்சுக்கறவங்க தான் புரிஞ்சுப்பாங்க! எல்லோரும் இல்லை. ஒருத்தர் மொழிபெயர்ப்புனு சொல்லி சும்மா தமிழ் ஃபான்டில் இருந்ததை ஹிந்தி ஃபான்டில் மாத்தி இருந்தாங்க. அதை மொழிபெயர்ப்புனு சொல்ல முடியாது! ஃபான்ட் கன்வெர்ஷன் என்றேன். உடனே கன்னாபின்னாவென எனக்குத் திட்டு! நீ ரொம்பத் தெரிஞ்சவளோ! அறிவாளியோ, உன்னையார் கூப்பிட்டாங்க இங்கே கருத்துச் சொல்ல என்று! அதுக்கப்புறமா அவங்களை நட்பு வட்டத்திலிருந்தே நீக்கி விட்டேன். :) தமிழை ஹிந்தியில் மாத்தறதுன்னா தமிழ்வார்த்தையை அப்படியே ஹிந்தியில் எழுதுவது இல்லை! அதற்கேற்ற ஹிந்தி வார்த்தைகளைப் போட்டுத் தமிழ்ப் பதிவின் ஜீவனைக் கொண்டு வரணும்! ஆங்கிலத்தில் ammaa என்பது தமிழில் அம்மா என்று வரும்! அது மொழிபெயர்ப்பு இல்லையே! ஆனால் அதைப் புரிஞ்சுக்கலை! :)

   Delete
 8. ஹிஹி.. நீங்க கவிதை எழுதலேனா நீங்க மட்டுமா பிழைச்சீங்க?

  ReplyDelete
 9. இதுக்கு போயி அலட்டிக்கலாமா? (அப்படின்னு கவிதையே இருக்கு!)

  ReplyDelete
 10. ஹிஹி.. பாலகணேஷ் எழுதியதைப் படிச்சுப் பாருன்க்க.

  ReplyDelete
 11. சில இடங்களில் கருத்தைக் கூற வரும்போது நான் மிகவும் யோசித்தே கூறுகிறேன். விமர்சனம் தொடர்பான அலசல் நடுநிலையோடு உள்ளதைக் கண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா, பொதுவாகவே யோசித்துச் சொல்வது தான் நல்லது என்றே நினைக்கிறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

   Delete
 12. இந்தப்பதிவுக்குக்கருத்து சொல்ல மனம்தயங்குகிறது என்பதிவுகள் பலவும் வெகுஜனக் கருத்தோடு ஒத்துப் போகிறது என்று சொல்ல முடியாதுஅதேபோல் பல கருத்துகளைக் கொண்டுவரும் பதிவுகளில் கூடுமானவரை என் கருத்தை கூறு வேன் ஆனால் எப்போதும் யார்மனதையும் நோகடிக்கும் எண்ணம் இல்லை கருத்து சொல்ல வேண்டாம் என்று நினைத்தே கருத்து கூறி விட்டேன்

  ReplyDelete
  Replies
  1. தாராளமாய் உங்கள் கருத்தைப் பகிரலாம் ஐயா! எனக்கு அதில் எந்தவிதமான மன வருத்தமும் ஏற்படாது! :) கடுமையான கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆகையால் உங்கள் மென்மையான மறுப்பு என்னை எதுவும் செய்யாது!

   Delete
 13. நேத்து மட்டும் இங்கே மூணு பின்னூட்டம் எழுதியிருக்கேன்.. ஹ்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்பாதுரை, அதிசயமா இது ஒண்ணு தான் வந்திருக்கு! :) என்ன சொன்னீங்க? எதுக்கும் என்னோட மெயிலுக்கும் அனுப்பி வைங்களேன். இதிலே வரலைனா காப்பி, பேஸ்ட் பண்ணறேன். அவர்கள் உண்மைகள் கிட்டேக் கூட அதான் சொன்னேன்! பானுமதியும் சரியா வரதில்லைனு தான் சொல்றார். :)

   Delete
  2. ஹிஹி.. அதாவது.. "நல்லவேளையா நான் கவிதை எல்லாம் எழுதறதில்லை. பிழைச்சேன்!"னு எழுதியிருக்கீங்களே.. நீங்க மட்டுமானு கேட்டேன் அம்புட்டு தான்.

   Delete
  3. பாலகணேஷ் எழுதியிருக்கிறதைப் படியுங்கனு சொன்னேன் அடுத்த பின்னூட்டத்துல.. :-)

   Delete
  4. பாலகணேஷ் எழுதி இருப்பதையும் படிச்சேன்! நன்றி அப்பாதுரை! :)

   Delete
 14. நேத்து மட்டும் இங்கே மூணு பின்னூட்டம் எழுதினேன்..

  ReplyDelete
 15. //ஆனாலும் நான் எழுதறதை அனைவரும் பாராட்டியே எழுதறதைப் பார்க்கையில் உண்மையிலேயே நல்லா இருக்கானு சந்தேகம் வரத் தான் செய்கிறது.//

  எனக்கும் சமயங்களில் அப்படி தோன்றும். நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவுகளுக்கு பெரிதாக பாராட்டுகள் கிடைக்காது. அத்தனை திருப்தி தராத பதிவுகளுக்கு கொஞ்சம் அதிகமாக பாராட்டுகள் வரும்.

  நீங்கள் மனதை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் மனதுக்கு பட்டதை எழுதுங்கள். நியாயமான விமர்சங்களுக்குஎப்போதுமே மரியாதை உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, தொலைபேசி விசாரித்தமைக்கு நன்றி. அலட்டிக்கல்லாம் இல்லை! என்றாலும் அவ்வப்போது கொஞ்சம் சோர்வு வரத் தான் செய்கிறது. பொதுவா மொக்கைகளுக்கே மவுசு அதிகம்! :)

   Delete
 16. இப்போதுதான் இதைப் படித்தேன். இன்றைய சூழலில் ரொம்பவும் relevant-ஆன ஒரு விஷயத்தை தொட்டிருக்கிறீர்கள். நான் சில சமயம் பதிவுகளை விடவும் பதிவுக்கான பின்னூட்டங்களை, அல்லது பின்னோட்டங்களைப் பார்வையிடுவது வழக்கம். ஒவ்வொருவரும் எப்படி வண்டி ஓட்டுகிறார்கள் என்பது தெரியவரும்! என்னுடைய கமெண்ட்டும் இப்படிப்பார்க்கப்படும் என்பதும் தெரியும்.

  பெரும்பாலும் நான் காணும் ஒரு pattern இதுதான்: ’நீ எனக்குக் கைதட்டு. நான் உனக்குத்தட்டுகிறேன்.. என்ன!’ என்கிற சிறுபிள்ளைத்தனமான நிலைப்பாடு அது. நான் அனைவரையும் இப்படி சொல்லவில்லை. உண்மையாக, உணர்வுபூர்வமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். நான் சொல்லவருவது என்னவெனில், ஒரு பதிவைப் படித்தவுடன் இதற்கு கருத்தொன்று எழுதவேண்டும் என மனதில் தோன்றி, உண்மையாகக் கொஞ்சம் எழுதினால் போதும். நித்ய பூஜை போல் எல்லாவற்றிற்கும் கமெண்ட் போட்டே ஆகவேண்டும் எனத் தன்னைத் தானே வாசகர் நிர்ப்பந்தித்துகொள்ளக்கூடாது எனத் தோன்றுகிறது.

  மேலும் மிகையான வார்த்தைகள், அதீதப் புகழ்ச்சி தவிர்க்கப்படவேண்டும். சரியான வார்த்தைகள் கையாளப்பட்டால் (இதற்கு கொஞ்சம் skill தேவைப்படுகிறது. நாளடைவில் வரும்), கருத்து கச்சிதமாக அமையும். சில சமயங்களில் பின்னூட்டம் கொஞ்சம் விஸ்தாரமாய் நீளும்; விஷய ஆழத்தைப்பொருத்தது அது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், நீங்க சொல்வது சரியே! யாரும் உண்மையான விமரிசனத்தை ஏற்பதில்லை. ஏற்க மறுக்கிறார்கள். அல்லது என்னை உனக்குப் பிடிக்கவில்லை என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கறாங்க. நானும் எல்லாத்துக்கும் கருத்துக்களை எதிர்பார்ப்பதில்லை! எனக்கு அப்படி வருவதும் இல்லை! பதிவின் மையக்கருத்தை ஒட்டியே பின்னூட்டங்கள் அமையும்!

   Delete
 17. துளசி: பெரும்பாலும் எதிர்கருத்துகளைச் சொல்வதில்லை...வலைஉலகில் சில சமயம் அது தவறாகப் பார்க்கப் படுகிறது. எனவே அதை எல்லாத்தையும் விட நட்பூ முக்கியம் என்று சென்றுவிடுவேன்..

  கீதா: நான் சில சமயம் எதிர்க்கருத்து வைப்பதுண்டு. மென்மையாகத்தான்...அதுவும் வெகு குறைவுதான்...ஆனால் பல கருத்துகள் சொல்வதில்லை. அது தனிமனித அல்லது சாதியைச் சாடி வருவதால் வைப்பதில்லை. எதிர்க்கருத்துகள் என்றாலே எதிரிக் கருத்துகள் என்றுதான் இங்கு வைக்கப்படுகிறது. என்னைப் பொருத்தவரை நட்பிற்கும் எதிர்க்கருத்துகளுக்கும், விவாதங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது கருத்துப் பரிமாற்றமே அல்லாமல் ஒருவருக்கொருவருக்கான தாக்குதல் அல்ல என்பது என் கருத்து. எனவே எதிர்க்கருத்துகளை நாங்கள் வரவேற்போம்...உங்கள் கருத்துகளை ஏற்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நட்பு முக்கியம் தான் துளசிதரன். ஆனால் உண்மையான நட்பு தவறைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளும் என்பது என் கருத்து! எல்லோரும் இதை ஏற்பதில்லை என்பதையும் அறிந்தே பல சமயங்களிலும் என்னையும் அறியாமல் சுட்டுகிறேன்.

   எதிர்க்கருத்துக்களை எதிரிக்கருத்தாகப் பார்க்காமல் ஏற்க வேண்டும் கீதா! மற்றபடி நீங்களும் கவனமாகவே கையாள்கிறீர்கள்! எனக்குச் சில சமயங்களில் இந்த ஜாக்கிரதை உணர்வையும் மீறிச் சொல்லி விடுகிறேன். :)

   Delete