எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 29, 2017

கொலு பார்க்க வாங்க எல்லோரும்! :) நோ சுண்டல்!நான் சென்ற சில கொலுப் படங்கள்! மேலே இருப்பது திருவானைக்காவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு கொலு!


இது நம்ம பதிவர் வெங்கட் நாகராஜ் வீட்டுக்கொலு! ஆதி வெங்கட் வைத்திருப்பது. லேசர் விளக்குகள் போட்டிருப்பதால் எனக்கு எடுக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம். அதனால்  படம் தெளிவாக இல்லையோ? ஏதோ ஒண்ணு நொ.கு.ச.சா. என்று முணுமுணுப்பது கேட்கிறது. இது  இரண்டும் அலைபேசியில் எடுத்தது. அடுத்ததாக காமிரா மூலம் எடுத்த படங்கள்! ஶ்ரீரங்கம் கோயிலின் கொலுப் படங்கள்.  ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கின்றனர். சென்னை மயிலையிலிருந்து இதற்கெனத் தனியாக ஆட்கள் வந்து வைப்பதாகச் சொல்கின்றனர். மாலை சென்றால் கூட்டம் தாங்காது என்று காலை செல்லச் சொன்னார் திரு வெங்கட். அவர் சொன்னபடி முந்தாநாள் காலை பத்தரை மணி போலப் போனோம். சுமார் ஐம்பது பேருக்குள் தான் இருந்தார்கள் என்றாலும் படம் எடுக்க முடியாமல் மறைக்கத் தான் செய்தார்கள்! :(

ஹிஹிஹி, தோசைப்படம் வந்துடுச்சு! முந்தாநாள் இலுப்பச்சட்டி தோசை வார்த்தேன். காமாட்சி அம்மா சொல்றாப்போல் இரட்டை விளிம்பு தோசை! அதைப் படம் எடுத்ததே நினைவில் இல்லை! 


தட்டில் தோசை, தொட்டுக்கத் தக்காளித் தொக்கு! :) 


கோவில் கொலுவில் ஒரு பகுதியில் வைத்திருப்பது! இவை அனைத்தும் தசாவதாரக் கொலு!


தனித்தனியான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் பொம்மைகள். மேலே உள்ள கொலுவின் கீழ்ப்பகுதிஇன்னும் இருக்கு. மற்றப் படங்கள் நாளை பகிர்கிறேன்.  இவை எல்லாமும் தசாவதாரத்தைச் சொல்லும் கொலு. மற்றவை நாளை. 

65 comments:

 1. படங்கள் அருமை
  சுண்டல் இல்லாவிட்டாலும் தோசையாவது கிடைத்ததே...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, கில்லர்ஜி, தோசை இருக்கு இல்ல! அதை மறந்துட்டேன்! :)

   Delete
 2. வீட்டுக்கொலு கோவில் கொலு ரெண்டும் அழகு .வீட்டுக்கொலு படங்கள் க்ளியரா இருந்திருந்தா ஒவ்வொண்ணையும் ரசிச்சி பார்த்திருக்கலாம் .நவராத்திரிக்கு முந்தி குறளகம்ல பொம்மை எக்சிபிஷன் போடுவாங்க தவறாம போவோம் நானும் அம்மாவும் ..
  இப்போ பேப்பர் குவில்லிங் ளையும் கொலு பொம்மைங்கள செய்றாங்கன்னு கேள்விப்பட்டேன் ஆனா குட்டி குட்டி மண் பொம்மைகள் தான் அழகு .
  அந்த ரெண்டு அடுக்கு தோசை எப்படி ??? சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், அது ஏன்னு தெரியலை! செல்லில் எடுத்தால் இப்படித் தான் ஷேக் ஆகிறது. :( அதுக்காகவே காமிராவை எடுத்துச் சரி பண்ணி வைச்சிருக்கேன். ஆனால் வெளியே போறச்சே எடுத்துண்டு போகலை! கோயில் கொலு பார்க்கப் போகும்போது மட்டும் எடுத்துச் சென்றேன்.

   Delete
 3. என்ன ரெண்டு கொலுப்படங்களும் ஆடிடிச்சு? சும்மா சொல்லக்கூடாது, ரெட்டை விளிம்பு தோசையை அட்டஹாசமா படம் எடுத்திருக்கீங்க. தக்காளி தொக்கு என் கண்ணுக்குத் தெரியலையே. கற்பனை பண்ணச் சொல்றீங்களா?

  ஶ்ரீரங்கம் கோவில் கொலுப்படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. படங்கள் ஆடியது பற்றி மேலே படிச்சுக்குங்க. ஹிஹிஹி, தக்காளித் தொக்கைப் போட்டுப் படம் எடுக்க மறந்திருக்கேன். நீங்க கற்பனையே பண்ணிக்குங்க! இதுக்கு முன்னாடியும் அப்பாதுரைக்காக இந்த தோசை பண்ணும்போது படம் எடுத்திருக்கேன். எங்க வீடுகளிலே இலுப்பச்சட்டி தோசை என்போம். :))))

   Delete
  2. நானும் காமாட்சி அம்மாவை நினைவுகூறும் விதமாத்தான் ரெட்டை விளிம்பு தோசைன்னு சொன்னேன். நாங்க சொல்வதும் இலுப்புச்சட்டி தோசை. செய்வதும் இலுப்புச்சட்டிலதான் (தோசைக்கல்ல இல்லை. தோசைக்கல்னா முறுகலான ஊத்தாப்பமாயிடும்)

   Delete
  3. யெஸ் நாங்களும் இலுப்பச்சட்டி தோசைனுதான் சொல்லுவோம்....ஆனால் இரண்டு விளிம்பு வருவது என்னவோ உண்மைதான்..நெல்லை.இலுப்பச்சட்டியிலதான் செய்யணும்....

   கீதா

   Delete
  4. வாங்க கீதா/தில்லையகத்து, இலுப்பச்சட்டி தோசைன்னாத் தெரியாதவங்க தென்மாவட்டங்களில் இருக்க மாட்டாங்க! :) எங்க புக்ககத்தில் இது வழக்கம் இல்லை. நான் இதில் தோசை வார்ப்பதைப் பார்த்து அவங்க சிரிப்பாங்க! :)

   Delete
 4. http://sivamgss.blogspot.in/2012/08/blog-post_6562.html

  நெ.த. இந்தப் பதிவிலே இரட்டை விளிம்பு நல்லாவே தெரியும் பாருங்க!

  http://sivamgss.blogspot.in/2016/08/blog-post_24.html

  ரஞ்சனிக்காகப் போட்ட மீள் பதிவு! :)

  ReplyDelete
 5. இரட்டை விளிம்பு தோசையா வார்க்கும் முறை வேறா

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் இல்லை ஐயா, மேலே கொடுத்துள்ள சுட்டிகளில் சென்று பாருங்கள்!

   Delete
 6. அவசரம். கிளம்பிங் ஃபார் சுண்டல் கலெக்ஷன். ஸோ... ரசித்தேன் மட்டும்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், பத்து நாட்கள் கலெக்‌ஷன் எல்லாம் முடிஞ்சதா? நல்ல கலெக்‌ஷனா? இந்த வருஷம் இங்கே ரொம்ப டல்லு! :)

   Delete
 7. தசாவதாரக் கொலு படங்கள் மிக அருமை தோசையும் அருமை அதனால் தான் சுண்டல் இல்லை என்று சொல்லிட்டீங்களா

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, வாங்க பூவிழி, நம்ம வீட்டிலே இந்த வருஷம் கொலு வைக்கலை! அதனால் நோ சுண்டல்! :)

   Delete
 8. படங்களை ரசித்தேன். நான் நிறைய கொலுக்களுக்கு இந்த முறை சென்று வந்தாலும் படாமல் ஒன்றிரண்டுதான் எடுத்தேன். இலுப்பைச்சட்டி தோசை முயற்சிக்க ஆசையாக இருக்கிறது. மாவு அதிகம் செலவு!!!

  ReplyDelete
  Replies
  1. //வந்தாலும் படாமல் ஒன்றிரண்டுதான் // என்ன இது? என்ன இது? என்ன இது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹிஹிஹிஹி, மாட்டிக்கிட்டாரே தும்பட்டிக்கா பட்டர்! :)

   இலுப்பச்சட்டி தோசைக்கு மாவு அதிகம் செல்வா? யார் சொன்னாங்க? அதே ஒரு கரண்டி மாவு தான்! தோசை ஊத்தப்பமாக வார்த்தால் நல்லா உப்பிக்குமே! தெரியாது? உங்க வீட்டில் உப்பாதா? அன்றே அரைத்து அன்றே வார்க்கும் தோசை கொஞ்சம் மெலிதா வரும். புளிப்பு வந்து விட்டால் தோசை, இட்லி இரண்டுமே நாம் விடும் கரண்டி அளவை விட உப்பலாக வருமே! மறுபடி போய் தோசை, இட்லி பண்ணிப் பிராக்டிஸ் பண்ணுங்க! :))))))

   Delete
  2. ஸ்ரீராம்.... கீ.சா அவங்க சொல்லியிருக்காங்கன்னு பிராக்டிஸ் பண்ணாதீங்க. எண்ணெய் ரொம்ப விடணும். கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் 1 அல்லது ரொம்ப அதிகமாப்போனா 2 சாப்பிட்டாலே போதும். நாங்க இதுக்கு இட்லி மிளகாய்ப்பொடி தொட்டுக்குவோம். கீ.சா அவங்க என்ன தொட்டுப்பாங்கன்னு தெரியலை. இதைப் பொதுவா மாவு கொஞ்சம் புளிச்சப்பறம்தான் பண்ணுவாங்க.

   Delete
  3. அதெல்லாம் தைரியமாப் பிராக்டிஸ் பண்ணுங்க ஶ்ரீராம்! நெ.த. சொல்றதை எல்லாம் கேட்காதீங்க. ஒரு கரண்டி மாவு தான் என்பதால் 3 வரை தாராளமாகச் சாப்பிடலாம்.

   நெ.த. நான் தான் தக்காளித் தொக்குனு மேலே சொல்லி இருக்கேனே! ஆனால் இதுக்கு வெங்காயச் சட்னியும் நன்றாக இருக்கும். இரண்டும் இருந்தால் சொர்க்கம் பக்கத்தில்! :) மி.பொடி என்னமோ எனக்கு ஒத்துக்கறதில்லை! :)

   Delete
  4. //படாமல் ஒன்றிரண்டுதான் //

   படங்கள் ஒன்றிரண்டுதான் என்று படிக்கவும். ஹிஹிஹி...

   Delete
  5. //எண்ணெய் ரொம்ப விடணும். கொஞ்சம் நேரம் எடுக்கும்.//

   எண்ணெய் விடவும் சாப்பிடவும் தயங்க மாட்டேன் நெல்லை... நேரம் எடுக்கும் என்றால்தான் கடுப்ஸ்!

   Delete
  6. ​/மி.பொடி என்னமோ எனக்கு ஒத்துக்கறதில்லை! :)//

   ஒத்துக்குதோ இல்லையோ.. அதுதான் வாய்க்குது!!!!

   Delete
  7. நான் எப்படியாவது ஏதேனும் சட்னி அரைச்சுடுவேன். இல்லைனா தோசை இறங்காது! :)

   Delete
 9. கோயில் படங்கள் அட்டகாசம்!

  முதல் இரு படங்கள் நடனம் புரிகின்றன!!! கொலுனா நடனம் வேண்டாமோ?!!!! ஹிஹிஹிஹி இல்லையா அக்கா?!!

  அப்புறம் இப்படி இலுப்பச் சட்டி தோசையை (இரு விளிம்பு தோசை ஆமாம் எனக்கும் எப்போதும் அப்படித்தான் வரும்) நாவில் நீர் ஊற வைச்சுட்டீங்களே!! ரொம்பப் பிடிக்கும்...அப்புறம் தக்காளித் தொக்கைக் காணலியே...அது ரெடியாவதற்குள் ஃபோட்டோ ஷூட் நடத்திட்டீங்களோ அக்கா?!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா/தில்லையகத்து! அது என்னமோ அலைபேசியில் எனக்கு எடுக்கையில் படம் ஆடுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதே கையால் தானே காமிராவில் எடுக்கிறோம். அது என்னமோ சரியா வருது!

   ஹிஹிஹி, அப்புறமாத் தக்காளித் தொக்கு! ஏற்கெனவே பண்ணி வைச்சுப்பேன். தட்டிலே போடும் முன்னர் படம் எடுத்திருக்கேன்! அதையே நெல்லை சொல்லித் தான் கண்டு பிடிச்சேன். :)

   Delete
 10. படங்கள் எல்லாம் வெகு அருமை!! இந்த முறை கொலு இல்லை, புது ஊரானதால் வேறு எங்கும் செல்லவும் இல்லை -அந்தக் குறையை போக்கி விட்டது உங்கள் பதிவு

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா! நல்வரவு. அக்கம்பக்கம் பழக்கம் இல்லைனாக் கூட கொலுவுக்குக் கூப்பிடறவங்க சிலர் உண்டு! உங்க பகுதியிலே இல்லையோ? ஆனால் பெரும்பாலும் முதல் அழைப்பை நாம் தான் செய்ய வேண்டி இருக்கு! அவங்களா வந்து கூப்பிடறவங்க கொஞ்சம் கம்மிதான்! எங்க வீட்டிலும் இம்முறை கொலு இல்லை.

   Delete
 11. எங்கள் வீட்டில் தோசை என்றால் இலுப்பச் சட்டி தோசை தான். ஒன்ஸ் இன் எ ப்ளூ மூன் வேறு ஏதாவது வெரைட்டியாக தோசை கிடைக்கலாம். அப்படியான வெரைட்டிகளும் கம்பு தோசை, வரகு தோசை என்று ஏதாவது நவதானிய சமாச்சாரமாய் இருக்கும். நவதானிய சமாச்சாரங்கள் தோசைக்கு லாயக்கில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. தோசைக்கென்றே வரித்த சுவைக்கு லாயக்கில்லை என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

  சேலம் ஒன்றாம் அக்கிரகார வீதியும், பெரிய கடைத் தெருவையும் இணைக்கும் சின்ன ரோடில் மலபார் ஹோட்டல் என்று சின்ன உணவகம். மணக்க மணக்க நெய் தோசை போடுவார்கள். பெளர்ணமி நிலவு சைஸ்ஸில் தான் இருக்கும். சுற்றிலும் நெய் முறுவலில் நடுவில் மெத் மெத் என்று. தொட்டுக்க கெட்டி சட்னி என்று ஒரு சின்ன கரண்டியில் எடுத்து தோசை நடுவில் கரண்டியை ஒரு உலுக்கு உலுக்குவார்கள். பசக்கென்று தோசையில் விழுதாய் நிமிர்ந்து நிற்கும் சட்னி. 1958--ல் நெய் தோசையின் விலை 4 அணா.

  இன்றைக்கும் நினைவில் நிற்கும் நெய் தோசை அது. நெய்யை விட்டு தோசையைக் கறுக்காத டெக்னிக் அது. மலபார் ஹோட்டல் மாதிரி தெருக்கு தெரு இருந்த சின்னச் சின்ன உணவகங்களை பெரிய பெரிய ஹோட்டல்கள் கபளீகரம் பண்ணி விட்டன.

  கும்பகோணம் நகரத்திற்குள் நிறைய மெஸ்களைப் பார்த்தது ஒரு ஆறுதல். பச்சை பசேரென்று வாழை இலைப் போட்டு நீர் தெளித்து சுடச்சுட இட்லிகளை எடுத்து வைக்கும் அழகே அழகு. தொட்ட்டுக்கொள்ள கடப்பா வியாழக்கிழமை மட்டும். அன்று மட்டும் கடப்பாக்காக வீட்டு ஜனங்கள் கூட ஒரு தூக்கைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். கால் மணி நேரத்தில் கடப்பா சட்டியே காலியாகி விடும் என்பதினால் வீட்டில் பல் தேய்த்த கையோடு தலை கூட வாராத, சட்டை பட்டனை சரியாகப் போட்டுக் கொள்ளாத கூட்டம் அம்மும்.

  உப்பிலியப்பன் கோயில் போன்ற சுற்று வட்டார ஊர்களில் காலை 8 மணிக்குத் தான் மெஸ்ஸைத் திறந்து 9-க்கெல்லாம் மூடி விடுகிறார்கள். இட்லி, தோசை அயிட்டங்கள்?.. மூச்! உப்புமா, பொங்கல் (வடை நிச்சயம்) இவை தான் அதிகம். கோயிலுக்கு நுழையும் முன்பே சொல்லி வைத்திருந்தால் தான் அதுவும் கிடைக்கும். டிகிரி காப்பிக்கு பெயர் பெற்ற ஊரில் சுற்று வட்டார ஊர்களில் காலை காப்பிக்கு பஞ்சம். டீக்கடை தண்ணிக் காப்பி தான்.

  சுற்றியிருக்கும் ஒவ்வொரு ஊரும் ஒரு கிராமம். கோயில்களுக்கு பஞ்சமில்லாத ஊர்கள் என்பதினால் கோயிலுக்கு வரும் கூட்டத்தை நம்பி இந்த மாதிரி மெஸ்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீவி சார், இலுப்பச்சட்டி தோசைக்கு நீங்களும் ரசிகர்னு தெரியாது! நல்வரவு! எங்க வீட்டில் எல்லாவிதமான தோசைகளும் உண்டு. ஆனால் அன்றே அரைத்து அன்றே வார்க்கும் தோசைக்கு எல்லோருமே ரசிகர்கள்! அதுக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னி அல்லது புளி மிளகாய் வேணும்! :) வெங்காய ஊத்தப்பம், மசால் தோசை எல்லாமும் வீட்டிலேயே செய்துடுவேன். சிறுதானியங்களில் தோசை, அடை, இட்லி, குழி அப்பம் எல்லாம் பண்ணிக் கொண்டிருந்து விட்டு இப்போத் தான் வேண்டாம்னு கஞ்சிக்கு மாறி இருக்கோம். சிறு தானிய தோசைகளும், அடைகளும் நன்றாகவே இருக்கும். உங்களுக்குப் பிடிக்கலை போல!

   Delete
  2. இந்தக் "கடப்பா" என்னும் வஸ்து எங்களுக்கு என்னமோ பிடிக்கிறதில்லை! கடப்பா போடும் அன்னிக்கு ஓட்டலுக்குப் போகும்படி நேர்ந்தால் தலையில் அடிச்சுக்கணும் போலிருக்கும்! :) அவ்வளவு பூண்டு போட்டுச் சாப்பிட முடியறதில்லை என்பதோடு இட்லி, தோசைக்குச் சரியான துணையாகவும் தெரியறதில்லை. சில கல்யாணங்களில் கூட கல்யாணத்தன்று காலை இட்லிக்குக் கடப்பா போடறாங்க! சட்னியையும் மிளகாய்ப் பொடியையும் வைத்து ஒப்பேற்றுவோம். :) கும்பகோணத்திலும் காலை ஐந்து மணிக்குக் கூடக் காஃபி கிடைப்பது கடினமே! டீக்கடைகளில் மட்டும் நெஸ்கஃபே காஃபி கிடைக்கும். ஹோட்டல்களில் எல்லாம் ஆறரை ஆகிவிடுகிறது. இது ஐந்து வருஷத்துக்கு முந்தைய நிலை. இப்போது இன்னும் மோசமாக இருக்கும். நாங்க இப்போல்லாம் திருச்சியிலேருந்து செல்வதால் டிஃபன், காஃபி, சாப்பாடு கையிலே கொண்டு போயிடறோம்.

   Delete
  3. இலுப்பச்சட்டி தோசைக்கு நான் தான் ரசிகர் மன்றப் பொருளாளர். எல்லா தோசையும் எனக்கே. சாப்பிடத் தெரிகிறதே தவிர வார்க்க வரவில்லை. ஹ்ம்.

   Delete
  4. ஜீவி அவர்கள் எழுதியிருப்பதை படித்துக் கொண்டே இருக்கலாம். (இருந்தாலும் அவர் சொல்லியிருக்கும் தோசை சாப்பிட்ட நிறைவு வருமா தெரியவில்லை.. :-)

   Delete
  5. சர்.. கடப்பா என்றால் என்ன?

   Delete
  6. கும்பகோணம் டிகிரி காபி எல்லாம் சும்மா உடான்ஸ்.
   நல்ல காபி கர்நாடகாவில் கிடைக்கிறது என்பதே என் அனுபவம். (பெங்களூரில் அல்ல)

   Delete
  7. ஜீவி சார்... கும்பகோணத்துலயும் உப்பிலியப்பன் கோவிலிலும் (அந்த ஊரிலும்) எங்க மெஸ் இருக்கு? கொஞ்சம் டீடெயிலும் சேர்த்தீங்கன்னா, டிராவல் பண்ணும்போது உபயோகமா இருக்கும். இல்லைனா, கும்பகோணத்துல ஃபேமஸ்னு ஒரு கடைக்குப் போய், சிவனே (பெருமாளே)ன்னு ஏதோ சாப்பிட்டோம் வந்தோம்னு ஆயிடும்.

   உங்கள் எழுத்தைப் படிக்கும்போதே சாப்பிட்ட நிறைவு.

   Delete
  8. உப்பிலியப்பன் கோயிலில் சின்னதா ஒரு ஓட்டல் இருக்கு நெ.த. எந்தப் பக்கம்னு நினைவில் இல்லை. கும்பகோணத்தில் எங்கே சாப்பிட்டாலும் அறுவை தான். என்றாலும் பெரிய கடைத்தெரு வெங்கட்ரமணாவும், கும்பேஸ்வரர் கோயில் பக்கத்தில் உள்ள அர்ச்சனாவும் கொஞ்சம் பரவாயில்லை ரகம். இப்போப் புதுசா ஒரு மெஸ்/ஹோட்டல் முகநூலில் விலாசம் கொடுத்தாங்க. என் மைத்துனரும் ஓர்ப்படியும் கும்பகோணம் போனப்போ அங்கே சாப்பிடறதுக்குனு தொலைபேசியில் கேட்டதுக்கு முன் பதிவு பண்ணி இருக்கணும்னு சொல்லிட்டாங்க! முன்பதிவு பண்ணிட்டு நாம போக முடியலைனா என்ன செய்ய முடியும்!

   Delete
  9. வைத்தீசுவரன் கோயிலில் கோயில் வாசலிலேயே தையல்நாயகி விலாஸ் கணேசய்யர் என்பவரால் நடத்தப்பட்டு வந்தது. இப்போ அதையும் மூடிட்டாங்க! சிதம்பரம்னா கீழவீதி கிருஷ்ண விலாஸ்! கொஞ்சம் பரவாயில்லை ரகம்!

   Delete
  10. அப்பாதுரை, படங்களைப் பற்றி இங்கே சொல்லவேண்டிய பதிலை அடுத்த பதிவில் சொல்லிட்டேன். பரவாயில்லை! :) இலுப்பச்சட்டி தோசை வார்ப்பது ரொம்பவே எளிது! நீங்களே பொருளாளரா இருங்க! :)

   Delete
  11. நெய் தோசை எனக்குத் தெரிந்து மதுரையில் ஒரு காலத்தில் நல்லா இருக்கும்! இப்போல்லாம் மதுரையில் நல்ல ஓட்டல்களே இல்லை. கோபு ஐயங்கார் தவிர்த்து! அங்கேயும் பல சமயங்களில் காலை வாருகிறார்கள்.

   Delete
  12. கடப்பா சாப்பிட்டிருப்பீங்க, பெயர் தெரிஞ்சிருக்காது. பாசிப்பருப்பு+உருளைக்கிழங்கு+வெங்காயம்+பூண்டு மசாலாக்கள் சேர்த்துப் பண்ணுவாங்க. அந்த மசாலா வாடையும் பூண்டின் வாடையும் தூக்கி அடிக்கும். பூண்டு பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடுவாங்க. என்றாலும் தோசை, இட்லிக்கு அது சரியான துணையா எனக்குத் தெரியலை! :))

   Delete
  13. காஃபி பத்தி நீங்க சொல்வது சரிதான் அப்பாதுரை! கும்பகோணம் காஃபி என்றால் சிக்கரி 50% கலந்தே தருவாங்க! அதைத் தான் டிகிரி காஃபினு சொல்றாங்க! சிகரி வாசனையில் காஃபி தொண்டையிலேயே இறங்காது. நீங்க சொல்றாப்போல் கர்நாடகாவில் மங்களூரில் நாங்க ஜனதா டீலக்ஸ் என்னும் ஓட்டலில் காஃபி சாப்பிட்டோம் பாருங்க! அதான் காஃபி! அதே போல் ராயல் நேபாள் ஏர்வேஸில் கொடுத்த காஃபி அடுத்ததாக! ஷிர்டி உட்லண்ட்ஸில் சாப்பிட்ட காஃபி!

   Delete
  14. கடப்பா என்பது கடலைமாவு ரெண்டு ஸ்பூன் சேர்த்தாலே போதும்தானே? எப்பவோ மதுரைல சாப்பிட்டது! எங்க அக்கா அடிக்கடி செய்வார்கள்.

   Delete
  15. மதுரையில் சில நல்ல ஹோட்டல்கள் உண்டு. நெய் தோசை ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடுவதில்லை நான். கோபு ஐயங்கார்க் கடை எல்லாம் "பெயர் போன" கடை!

   Delete
  16. கடைசியாய் எந்த ஹோட்டலில் "நல்ல காஃபி" சாப்பிட்டேன்? நினைவில்லை! கும்பகோணம் டிகிரி காஃபி ஒரு பம்மாத்து என்பதுதான் என் அபிப்பிராயமும்!

   Delete
  17. கஷ்டம், கஷ்டம், கடப்பாவுக்கு அப்படி எல்லாம் சுலபமா செய்முறை இல்லை! :) நான் செய்யறேனோ இல்லையோ செய்முறை தரேன் உங்களுக்கு! சுமார் 100 கிராம் பூண்டாவது வேணும் அதுக்கு!

   Delete
  18. கோபு ஐயங்கார் "பெயர் போனது" போனது தான்! :)

   Delete
 12. கொலுவில் தோசையா?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, தோசை பண்ணும்போது படம் எடுத்திருக்கேன். நினைவே இல்லை. அப்லோட் பண்ணும்போது சேர்ந்து வந்திருக்கு. இங்கே பப்ளிஷ் பண்ணறச்சேயும் வந்திருக்கு. சரினு விட்டுட்டேன். எடுக்கலை! கொலுவா இருந்தா என்ன? தோசை எப்போ வேணாச் சாப்பிடலாமே!

   Delete
 13. கொலு படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி அரசு!

   Delete
 14. //கொலுவில் தோசையா?//

  இதான் துரைஜி ஸ்டைல். சகஜமாக எதைப்பற்றியும் எழுதிக் கொண்டு வந்து 'கபால்'ன்னு சிரிக்க வைப்பார். மற்றவர்களை சிரிக்க வைத்து, அவர்கள் சிரிக்கும் தருணம், சிரிக்க வைத்தவர் சிரிக்க மாட்டார் என்பது உலகார்ந்த தத்துவம்.

  ReplyDelete
 15. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு முந்தின தெருவில் ஒரு அற்புதமான மெஸ் இருக்கிறது. பெயர் ஞாபகமில்லை. கணேஷ் மெஸ்ஸோ என்னவோ.
  ஒப்பிலியப்பன் கோயில் கோபுர வாசலுக்கு நேர் எதிராக இருக்கும் தெரு சன்னதி தெரு. சன்னதித் தெருக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் பிரியும் இரண்டு தெருக்களிலும் மெஸ்கள் இருக்கின்றன. நேம் போர்டு எல்லாம் கிடையாது.
  வலப்பக்கம் இருக்கும் மெஸ் ஒரு கல்யாண மண்டபத்திற்கு அடுத்து இருக்கும். இடப்பக்க மெஸ் ஒரு சின்ன வீட்டில் இருக்கும். மாமி மெஸ் என்றால் எல்லோருக்கும் வழி காட்டுவார்கள். இத்தனை பேர் வருகிறோம் எடுத்து வையுங்கள் முன்னாலேயே சொல்லி விட்டால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். கும்பகோண வழக்கப்படி எல்லா மெஸ்களிலும் சாப்பிட்ட வாழை இலையை நீங்கள் தான் எடுத்துப் போட வேண்டும்.

  கோபுரவாசலுக்கு எதிரிலிருக்கும் சன்னதித் தெருவில் நிறைய தங்குமிடங்கள் உண்டு. அவற்றில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம தங்கும்விடுதி ஃபேமஸ். கும்பகோணத்தில் தங்காமல் ஒப்பிலியப்பன் கோயில் ஊரிலேயே தங்கி விட்டால் மதியம், மாலை, அடுத்த நாள் அதிகாலை என்று பல நேரங்களில் கோயிலில் பெருமாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். இங்கிருந்து மற்ற அருகாமை கோயிலுக்கு வேனில் சென்று வரலாம். சென்ற தடவை என் மனைவி, மகனுடன் இந்த ஆசிரம விடுதியில் தான் தங்கி தரிசனம் செய்தோம். இரண்டு படுக்கை ரூம் வாடகை ரூ.1000/-. நகரில் இருக்கும் காசி இண்டர்நேஷனிலும் இதே வாடகை தான். ஆண்டவன் ஆசிரம் விடுதியில் தங்க ஊரிலிருந்து கிளம்புகையிலேயே தொலைபேசியில் சொல்லி விட்டால் ரூம் ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள்.
  போன் நெ. 0435- 2463138

  அருள்மிகு ஒப்பிலியப்பன் எங்கள் குலதெய்வமாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. காசி இன்டர்நேஷனலை விட "ராயாஸ்" நல்லா இருக்கு. அங்கேயே பின்னால் இருக்கும் ரெஸ்டாரன்டில் சாப்பிடலாம். அருமையான சாப்பாடு! வட, தென் இந்திய உணவு வகைகள்!

   Delete
  2. நீங்கள் சொல்வது சரிதான்.

   Delete
  3. //ஜீவி சார்... கும்பகோணத்துலயும் உப்பிலியப்பன் கோவிலிலும் (அந்த ஊரிலும்) எங்க மெஸ் இருக்கு? கொஞ்சம் டீடெயிலும் சேர்த்தீங்கன்னா, டிராவல் பண்ணும்போது உபயோகமா இருக்கும். இல்லைனா, கும்பகோணத்துல ஃபேமஸ்னு ஒரு கடைக்குப் போய், சிவனே (பெருமாளே)ன்னு ஏதோ சாப்பிட்டோம் வந்தோம்னு ஆயிடும்.//

   நெல்லைத் தமிழனாரே! என்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா?..

   Delete
 16. கும்பேஸ்வரர் கோயில் என்றாலே சன்னதியில் இருக்கும் மங்களாம்பிகா ஓட்டல் நினைவுக்கு வரலியா? அட்டகாசமான டிபன். வெங்கட்ரமணா மற்ற ஊர்கள் பெரிய ஹோட்டல் போலிருக்கும்.

  இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே கும்பகோண அந்தக்கால பஞ்சாமி ஓட்டல் நினைவுக்கு வருகிறது. எழுத்தாளர் எம்விவிக்கு ரொம்பவும் பிடித்த ஓட்டல்.

  ReplyDelete
  Replies
  1. மங்களாம்பிகா ஓட்டல் பெரியவர் இருந்தவரைக்கும் ஓகே! அப்போ அங்கே காஃபி குடிச்சோம். சுத்தமான பசும்பால் காஃபினு போர்டிலே போட்டிருந்தது. அவங்க கொடுத்ததும் அதான்! ஆனால் இப்போ இடமும் மாறி உள்ளே கோயில் கடைகள் இருக்கும் இடமும் போனப்புறம் சுகம் இல்லை. பழைய இடத்திலே ஒரு மழைக்காலத்தில் மேலே இருந்து மழை நீர் கொட்டிக் கொண்டிருக்கையில் சாப்பிட்டிருக்கோம். அவங்க கிட்டே இருந்து இட்லி, கொத்சு ரயிலுக்குக் கட்டி எடுத்துப் போவோம். சாப்பாடு வெங்கட்ரமணாவில் பத்து மணிக்கெல்லாம் நிவேதனம் முடிச்சுக் காக்காய்க்குப் போட்டுட்டு முதல் ஆளாச் சாப்பிடுவோம்! அங்கேயும் சாம்பார் சாதம், தயிர் சாதம் பொட்டலங்கள் கிடைக்கும். டிஃபனும் கிடைக்கும்.

   Delete
  2. ரொம்ப அவசரம். ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம். பகல் நேர வண்டி. டிபன் கட்டி கையில் எடுத்திண்டு போகணும் என்றால் ஸ்டேஷனுக்கு எதிரேயே சில சின்ன ஓட்டல்கள் இருக்கின்றன.
   பெரிய ஓட்டல் டிபனுக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை. இட்லி, சட்னி, சாம்பார், எண்ணை மிளகாய் பொடி (இப்பொழுதெல்லாம் இதுக்கு மட்டும் தனிக்காசு) எல்லாம் உண்டு.

   கும்பகோணத்தில் ஏறினால் விழுப்புரத்தில் இட்லியை மி.பொடியில் ஒரு புரட்டு புரட்டி விண்டு விண்டு சாப்பிட ஏதுவாக இருக்கும்.

   Delete
  3. //கொலுவில் தோசையா?//

   ச்ச்சே... நான் போன ஒரு கொலுவிலும் எனக்கு வாய்க்கவில்லை!!!!

   மங்களாம்பிகா - நான் தஞ்சை மங்களாம்பிகாவில் சாப்பிட்டிருக்கிறேன். பித்தளை டம்ளர்களில் காஃபி தருவார்கள். சில ஹோட்டல்களில், - மங்களாம்பிகாவிலுமா என்பது நினைவில் இல்லை - காஃபியை ஊற்றி டபராவுக்குள் டம்ளரைக் கவிழ்த்துக் கொண்டுவந்து சூடாய்க் கொடுப்பார்கள். டம்ளரை நிமிர்த்துவதே ஒரு சாதனை!

   Delete
  4. நாங்க அப்படி எந்த ஹோட்டலிலும் கும்பகோணத்தில் வாங்கினதில்லை. வாங்கினால் மங்களாம்பிகாவில் இட்லி, கொத்சு, மி.பொடி எண்ணெய் தனியாக் காசு வாங்கிண்டு கொடுப்பாங்க! இல்லைனா வெங்கட்ரமணாவில் தயிர் சாதம்!

   Delete
  5. ஶ்ரீராம், ரெண்டு தோசை படம் போட்டாலும் போட்டேன், சும்மாக் கருத்து மழை பொழிகிறது! அநேகமா எல்லா ஓட்டல்களையும் பத்தி அலசியாச்சு. யாரானும் தாம்பரம் பட்ஸ் ஓட்டலில் (இப்போ இல்லை) ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டிருக்கீங்களா? அதே போல் ஹைகோர்ட் எதிரே அம்பீஸ் கஃபே? ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம்? அங்கே இருக்கும் காதி பவனில் சுடச் சுடக் காரசாரமான கொண்டைக்கடலைச் சுண்டலோடு, சூடான சுக்குமல்லிக் காஃபி?

   Delete
  6. தாம்பரம் பட்ஸ் ஹோட்டலில் அந்தக்காலத்தில் நான் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாயிருக்கும். இப்பவும் அந்த ஹோட்டல் அங்கே இருக்கு. இப்போது சுவை எப்படியோ, தெரியாது. சமீபத்தில் அங்கு சாப்பிட்டதில்லை. சேலையூர் கொலுவுக்குச் சென்று வரும்போது தாம்பரம் வழியாக வந்தேன். அப்போது அந்த பட்ஸ் ஹோட்டல் கண்ணில் பட்டு நினைவுகளைக் கிளப்பியது!

   Delete
  7. ஶ்ரீராம், தாம்பரத்தில் பட்ஸ் ஹோட்டல் இன்னும் இருக்கா என்ன? நாங்க தேடினோமே! ஒருவேளை அன்று விடுமுறையோ? தெரியலை! அதே போல் பாண்டிபஜாரில் கீதா கஃபேயிலும் அடை, அவியல், காஃபி நன்றாக இருக்கும். இப்போக் கொஞ்சம் ஹோட்டலின் முகமே மாறி இருக்கு! ஆள் மாறிட்டாங்களானு கேட்டதுக்கு இல்லைனாங்க! ஆனால் அப்படித் தெரியலை! :)

   Delete
  8. பட்ஸ் ஓட்டல் இருக்கு. சென்ற வியாழனுக்கு முந்தைய வியாழன் பாண்டி பஜார் கீதா கஃபேயில் சாப்பிட்டோம். ம்.......ம்..... ஓகே!

   Delete