எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 17, 2018

எச்சரிக்கை! முப்பெரும் விழா விரைவில்!

என்னடா காணோமேனு நினைச்சீங்களா? எங்கேயும் போகலை! இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (?) வைத்தேன். சில, பல புத்தகங்களைப் பார்க்கையில் அதில் உட்கார்ந்து விட்டேன். பயப்படாதீங்க! நாவலோ, பயணக்கட்டுரைகளோ, ஆன்மிகப் புத்தகங்களோ இல்லை. எல்லாம் சமையல் புத்தகங்கள். அதிலே ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சதிலே இணையத்துக்கு வந்தால் முகநூலை மட்டும் ஒரு பார்வை/ஒரு பார்வைன்னா ஒரே பார்வை தான் பார்த்துட்டுப் போயிடுவேன்.அதிலே இருந்து ஏதானும் பார்த்துச் சமைச்சுட்டு உங்களுக்கும் காட்டுவேன்னு நினைச்சுப் பயப்படாதீங்க! இப்போதைக்கு உங்களை எல்லாம் பயமுறுத்தறதா இல்லை.  எது படிச்சாலும் அதிலே என் பாணியில் ஒரு சில மாற்றங்கள் செய்துடுவேன்.:)

ஹிஹிஹிஹி, எங்க பொண்ணு அன்னையர் தினத்துக்குத் தாமதமா வாழ்த்துத் தெரிவிச்சதைப் பார்த்துட்டு எல்லோரும் இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்னு தப்பா நினைச்சுட்டு இருக்காங்க. நான் இன்னும் பிறக்கவே இல்லைங்க!      இன்னிக்கு எல்லோரும் எனக்குப் பிறந்த நாள்னு நினைச்சு வாழ்த்துத் தெரிவிச்சிருக்காங்களா! ஹெஹெஹெஹெஹெ இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இல்லை, இல்லைனு பலதரம் சொல்லிட்டேன். ஆனாலும் தம்பிங்கள் எல்லாம் இத்தனை உஷாரா நம்ம பிறந்த நாளைக் கொண்டாடுவது பார்த்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!  ஆனால் வசூலைத் தான்காணோம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லோரும் ஒழுங்கா அனுப்பி வைங்கப்பா! சீக்கிரத்தில் முப்பெரும் விழா அரம்பிக்கும்!

இன்னிக்கு நம்ம ரங்குவைப் பார்க்கப் போனோம். பெரிய ரங்குவைப் பார்த்து சுமார் 4 மாசம் ஆகி விட்டதே! ஜனவரியில் போனது தான்! அப்புறமாச் சின்ன ரங்கு இங்கே வந்து தரிசனம் கொடுத்துட்டுப் போனார். ஆனாலும் பெரிய ரங்குவைப் பார்க்கணுமே! கிளம்பும்போதே நாலு மணி ஆகிவிட்டதே! ஆகவே மூத்த குடிமக்கள் தரிசன நேரம் வந்துடுமேனு நினைச்சுட்டேப் போனேன். அதே மாதிரி ஆயிடுச்சு! என்றாலும் அந்த வரிசையில் முன்னால் சுமார் ஐம்பது பேர்தான் நின்னுட்டு இருந்ததால் அங்கேயே நின்னோம். நாலே காலுக்கெல்லாம் வரிசை நகர ஆரம்பிச்சது. உள்ளே போகும் இடத்தில் இடது பக்கமாக இலவச சேவையில் வருபவர்களும் வலது பக்கமா ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கினவங்களும் நுழையும் இடத்தில் வந்து கலந்ததில் கொஞ்சம் சலசலப்பு வழக்கம் போல். முன்னால் அவசரமாப் போக விரும்பியவர்களை விட்டுட்டோம். மெதுவா உள்ளே போறச்சேயே நம்பெருமாளைப் பார்த்துண்டாச்சு. எப்போவும் போல் புன்சிரிப்புடன் வரவேற்றார். பட்டாசாரியார்கள் அதிகம் விரட்டவில்லை. பெரிய ரங்குவின் முகதரிசனம், பாத தரிசனம் நல்லாக் கிடைச்சது. முடிச்சுட்டு வெளியே வந்து தீர்த்தம் வாங்கிக் கொண்டு துளசி கொடுப்பவரைக் காணோம். ஆகவே வெளியே வந்தோம்.

எப்போவும் போல் தொண்டைமான் மேட்டில் ஏறணும்னு நினைச்சுப் போனால் அந்த வழியை மூடிட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பக்கத்தில் விஷ்வக்சேனர் சந்நிதிக்கு அருகே குறுகலான படிக்கட்டுகள். ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இடையே இரண்டு அடி உயரம். மொத்தம் மூன்றே படிக்கட்டுகள். ஆனால் ஒவ்வொன்றும் ஏற முடியவில்லை. கடைசிப் படிக்கட்டில் இருந்து மேலே தரையில் கால் வைக்க நம்ம ரங்க்ஸே திணறிட்டார். எப்படியோ ஏறிட்டு என்னையும் ஏத்தி விட்டார். இது என்ன அநியாயம், கோயிலுக்கு வயசானவங்க எத்தனை பேர் வருவாங்கனு நினச்சோம். பேசாமல் வந்த வழியிலேயே போகச் சொல்லலாம். முன்னால் எல்லாம் அப்படித் தான் போயிருக்கோம். அப்போ வேறே அறங்காவலர், வேறே அதிகாரி! இப்போ வேறே அறங்காவலர், வேறே அதிகாரி.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி மாத்தறாங்க. முன்னால் எல்லாம் சீட்டு வாங்குவதற்கே கிளி மண்டபத்தில் வாங்கினால் போதும். சீக்கிரம் உள்ளே போயிடலாம். இப்போல்லாம் கொடி மரம் அருகே சீட்டு வாங்க நிக்கணும்.
அப்புறமா அங்கிருந்து பாட்டரி காரில் தாயார் சந்நிதிக்குப் போய் அங்கே சீட்டு வாங்கி தரிசனம் செய்தோம். பெருமாளை தரிசிக்கக் கூட்டம் இருந்ததால் 250 ரூ சீட்டில் தான் போகணும்னு நினைச்சது. ஆனால் அப்படி இல்லாமல் பெருமாள் மூத்த குடிமக்களுக்கான வரிசையில் இலவச சேவை செய்துட்டுப் போனு சொல்லிட்டார். ஆனால் தாயார் இன்னிக்கு 50 ரூ கட்டிப் பார்க்கும்படி செய்துட்டா! :) என்றாலும் அவள் மேனியில் அலங்கரித்த மல்லிகைப் பூப் பிரசாதம் கிடைத்தது. மஞ்சள், சடாரி சாதித்ததும் பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயில் வடக்கு வாசல் வழியே வெளியே வந்து குடும்ப ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம். 

32 comments:

 1. நல்லவேளை பதிவு போட்டீங்க... நான்கூட பத்திரிக்கையில் அறிவிப்பு விடலாம்னு நினைச்சுட்டேன்...

  இனி சமையல் மிரட்டல் ஆரம்பமா ?

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, கில்லர்ஜி, பயப்படறீங்க போல! எழுதி வைச்ச சமையல் குறிப்புக்களே இன்னும் போடலை! :) காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பிலே பெயர் வந்துடுமோனு தான் ஓடோடி வந்தேன்! :)

   Delete
 2. நுங்கு தின்ற மாதிரி பதிவு - குளுகுளு..ன்னு...

  ஆனா - பெரிய ரங்கு, சின்ன ரங்கு..
  அங்கு இங்கு.. ன்னு சொல்லிட்டு
  எங்கு..ன்னு சொல்லலையே...

  இதோட முடிஞ்சதா உங்க பங்கு?..

  எங்கு.. ந்னு சொல்லியிருந்தா
  நாங்களும் அங்கு தங்கு தடையில்லாம
  போய்ட்டு வந்து போடுவோமே
  புதுசா பதிவில ஒரு பங்கு!..

  நாங்களும் ஊதுவோமே -
  வெற்றி.. வெற்றி..ன்னு வெள்ளைச் சங்கு!..

  ReplyDelete
  Replies
  1. அட, அந்த ரங்கு இருப்பது இங்கு தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தொடர்ந்து படிச்சிருந்தாப் புரிஞ்சிருக்கும். பெரிய ரங்கு=ரங்கநாதர், சின்ன ரங்கு=நம்பெருமாள், ரங்க்ஸ்=நம்ம மறுபாதி! :)))) என்ன போங்க! அரிச்சுவடியிலே இருந்து பாடம் எடுக்க வேண்டி இருக்கு! :))))))

   Delete
  2. >>> அட, அந்த ரங்கு இருப்பது இங்கு தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... <<<

   அந்த ரங்கு இந்த ரங்கு ...ன்னு நீங்க எழுதும் போதே புரியாததா!...
   அந்த ரங்கன் எனது அந்தரங்கன் அல்லவா!...

   காலைல.. வந்து பார்த்தப்போ காற்றோட்டமா இருந்தது..

   சரி.. இன்னும் காஃபி உபசாரம் எல்லாம் முடியலை.. போல இருக்குன்னு நெனைச்சுண்டேன்..

   இப்போ நல்லா விஸ்தாரமா போர்டுல எழுதிப் போட்டு... ஆகா.. மகிழ்ச்சி..

   (நல்லவேளை... பெஞ்சு மேல ஏத்தி விடலை!..)

   Delete
  3. ஹாஹாஹாஹா!

   Delete
 3. வாங்க... புத்தகங்களில் மூழ்குவது ஆரோக்யமான விஷயம். ஆனால் படித்ததைப் பகிரவில்லை என்றால் பசித்த புலி தின்னும் அபாயம் உண்டு!!!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் அப்படிப் படிக்க ஆரம்பிக்கலை! இந்த மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்கள் கொடுத்த இலவச இணைப்பையே இன்னும் சரி செய்யலை! எது வேணும், எது வேண்டாம்னு பார்த்துட்டு இருக்கேன், இருக்கேன், ஒரு வாரமாப் பார்க்கிறேன். :) அப்புறமா எங்கே விமரிசனம் எழுதறது? படிக்கவே ஆரம்பிக்கலை!

   Delete
 4. நீங்க இன்று ரங்குவைப் பார்த்தீங்களா? இன்று எதிர்பாராவிதமாக தணிக்கை சற்றே முன்னதாக முடிய, (நாளையும் தொடரும்) கோகத்தாவிலிருந்து வந்திருந்த என் பாஸின் மாமா மீசைப்பெருமாளைப் பார்க்க ஆசைப்பட்டதால் பாஸ் அவர் அம்மாவுடன் அவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிய குடும்ப ஆட்டோவில் நானும் தொற்றிக் கொண்டு போய் மீசைப்பெருமாளைப் பார்த்து வந்தேன். கூட வே. தாயாரையும், யோகநரசிம்மரையும்.

  ReplyDelete
  Replies
  1. 2010 அல்லது ஒன்பதாம் ஆண்டு? சரியா நினைவில் இல்லை! மீசைக்காரப் பெருமாளைப் பார்க்க அப்போப் போனது தான்! அதுவும் ஒரு மே 17 ஆம் தேதி தான்! அப்போல்லாம் மாசம் ஒரு தரம் சென்னை முக்கிய நகரைச் சுற்றியுள்ள கோயில்கள் போவோம். ஒரு வாரம் காளிகாம்பாளைப் பார்த்தால் அடுத்த வாரம் சென்ன கேசவர்! கந்த கோட்டம் ஒரு நாள்! இப்படிப் போயிட்டு வருவோம்.

   Delete
 5. நீங்கள் அரங்கனைப் பார்த்தால் நானும் பார்த்த மாதிரி.
  தாயார் மல்லி கொடுத்தாளா. பாக்கியமே பாக்கியம்.
  வழக்கம் போல இன்னிக்கும் வழ்த்திட்டு, 23 ஆம் தேதியும் வாழ்த்தறேன்.
  அன்பு கீதா நலமோடு சந்தோஷமாக இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, பட்டாசாரியாரின் மனம் சம்பந்தப்பட்டது. சில சமயங்களில் எதுவுமே கொடுக்க மாட்டார். :) மஞ்சள் கிடைச்சுடும் எப்படியும்! பூவெல்லாம் இம்மாதிரி அபூர்வமாக் கிடைக்கும்.

   Delete
 6. அன்றைக்குத் தெரிஞ்சதால நிம்மதியா ஆச்சு...சரி உடல் நலம் பிரச்சனை இல்லை. புத்தகத்துக்குள முங்கி இருந்ததுல தெரியலைனு.

  நானும் இப்படிச் சமையல் குறிப்புகளை அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதுண்டு. குறிப்பாகப் பாட்டியின் குறிப்புகள். எனக்கும் பெண்டிங்க் இருக்கு வீட்டு க்ளீனிங்க்.

  அதென்ன முப்பெரும் விழா? சமையல் விழாவா? ஹா ஹா ஹா ஹா எப்ப பாரு திங்க தான் !!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்குத் தான் என்னோட பதிவுகளைத் தொடர்ந்து படிக்கணும்னு சொல்லிட்டே இருக்கேன். இப்போப் பாருங்க, முப்பெரும் விழா ஆரம்பிக்கப் போற நேரத்திலே விளக்கம் கேட்டுட்டு இருக்கீங்க! :)))) ஹிஹிஹி ஒண்ணு என்னோட செர்டிஃபிகேட்டில் உள்ள பிறந்த தேதி! இன்னொண்ணு என்னோட உண்மையான பிறந்த தேதி. இன்னொண்ணு என்னோட நக்ஷத்திரப் பிறந்த நாள். மூணையும் ஒண்ணாச் சேர்த்து ஒரு காலத்தில் நம்மத் தொண்டர்/குண்டர் படை எல்லாம் கொண்டாடும்! இப்போ யாருமே இல்லை! :))))) ஒரே ஒருத்தர் நாமக்கல் சிபி மட்டும் முகநூலில் இருக்கார்!

   Delete
 7. நான் இன்னும் பிறக்கவே இல்லைங்க! //

  பொறக்கவே இல்லையா!! அப்ப எபில நீங்க ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊ சொல்ல முடியாடே ஹெ ஹெ ஹெ ஹெ....அங்க இப்ப சுவர் ஏறிக் குதிக்கணுமாக்கும்.. நீங்க பொறந்திருந்தா தவழ்ந்து வரவே நேரம் ஆகிடும் அப்புறம் எப்ப்டி சுவர் ஏறிக் குதிப்பீங்க...சரி சரி பொறந்ததும் சொல்லுங்க அதுக்கு முன்னாடி உங்க டைம் சொல்லிடுங்க அப்பத்தானே நான் ஒரு செகண்டு முன்னாடி பொறக்கன்மே. பின்னாடினா நீங்க ஒத்துக்கமாட்டீங்க ஹா ஹா ஹா பொறந்ததும் சொல்லிடுங்க நான் பாராசுட் அனுப்பி வைக்கிறேன் கிஃப்டா...எபில குதிக்க....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் குதிச்சுடுவேன்! ஆனாப் போட்டி இல்லைனா போரடிக்குது! :)))))

   Delete
 8. அருமை . அருமை..:) நேக்குத்தெரியும் கீசாக்க்கா காணாமல் போகல்ல:) ஒளிச்சிருக்கிறா என:) அதனாலதான் மீ தேடவில்லையாக்கும்:) பூஸோ கொக்கோ:))

  ReplyDelete
  Replies
  1. ம்க்க்க்கும், சவாலே, சமாளிப்ஸ்! இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! :)))))

   Delete
 9. உங்களுக்கு சமையல் புத்தகங்கள் அகப்பட்டதைப் படுச்சப்போ, நான் உங்கு தூரப்போட்ட மீனாட்சி சமையல் புத்தகங்களும் மற்ற சமையல் புத்தகங்களும் நினைவுக்கு வந்தன

  ReplyDelete
  Replies
  1. தூக்கிப் போடும் முன்னர் எனக்கு அனுப்பி இருக்கலாம்! :(

   Delete
 10. பிறந்தநாள் வசூலா? மொய் விருந்து கிடைக்காமல் இந்தக் காலத்தில் யார் பரிசுப் பொருட்கள் தருவா?

  ReplyDelete
  Replies
  1. மொய் முதல்லே, விருந்து அப்புறமா! :)))) நம்ம பாலிசியே அதான்!

   Delete
 11. ஶ்ரீரங்கம் கோவிலில் தரிசன டிக்கெட் கொடுக்கும் இடம் மாறிவிட்டதா? உபயோகமான தகவல்.

  மூலவர் தரினம் கிடைத்ததா? என்னடா கோவில் தரிசனப் பதிவுக் காணோமே என்று நினைத்தேன்

  ReplyDelete
  Replies
  1. அது இடம் மாறி இரண்டு வருஷம் ஆச்சுனு நினைக்கிறேன். முன்னேயே ஓர் முறை எழுதின நினைவு. இம்முறை வெளியேறும் வழி தொண்டைமான் மேட்டில் இருந்து பக்கத்துப் படிக்கட்டுகளுக்கு மாறினது தான்! ரொம்பக் கஷ்டமான படிக்கட்டுகள்! ஏறுவது கஷ்டம்னா இறங்கும்போது முடியாதவங்க உட்கார்ந்து உட்கார்ந்து தான் இறங்கணும்! மூலவரை நன்றாகப் பார்த்தேன். ஆச்சு, அடுத்த மாசம் ஜேஷ்டாபிஷேகம்னு மூலவரை எண்ணெய்க்காப்பில் முழுக விட்டு மூடிடுவாங்க. அதுக்கு முன்னாடி ஒரு தரம் போக முடியுமானு பார்க்கணும்!

   Delete
 12. மீசைக்காரர் அவர் மனைவி, யோகநரசிம்மர் என்று எல்லோருமே குளுகுளு ஏஸியில் அமர்ந்து அருள்பாலித்தார்கள். வெளியில் வந்ததும் வெப்பம் தாக்க, மறுபடி உள்ளே ஓடி அருள் பெறலாமா என்று நினைத்தால் துரத்தி விட்டு விடுகிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் - உண்மையிலேயே அவன் அருகில் இருந்து சேவை செய்பவர்களுக்கு உஷ்ணம் தாங்குவதில்லை. அதற்காகவும், பக்தர்கள் நிறைய வருவதால் ஏற்படும் வெப்பத்திற்காகவும்தான் குளு குளு என்று செய்துவைக்கிறார்கள்.

   ஆமாம், கஜேந்திரவரதர், ஆண்டாள் சன்னிதிகள் பற்றிச் சொல்லவில்லையே. இராமர், ரங்கனாதர் (மந்நாதர்) தரிசனம் கிடைத்ததா? மந்நாதர் தரிசனம் அபூர்வம்.. சன்னிதி சாத்தியே இருக்கும்.

   பிரசாதம் வாங்கினதைப் பற்றி மூச்சு விடாதவர்களை பசித்த புலி தின்னட்டும் என்றும் சுஜாதா வார்த்தைகளிலேயே சொல்லலாம்னு பார்த்த இது எங்கள் ஸ்ரீராம். அதனால் விட்டுடறேன்.

   உங்களுக்குத் தெரியுமா... இந்தக் கோவில், இரு கோவில்களாக இருந்தது, ஒன்றாகிவிட்டது. இரண்டு த்வஜஸ்தம்பங்கள் (யோக நரசிம்மர் கோவிலுக்கு ஒன்று, வெங்கட கிருஷ்ணன் கோவிலுக்கு ஒன்று) உள்ள கோவில் இது ஒன்றுதான் என நினைக்கிறேன்.

   Delete
  2. இங்கேயும் ரங்கு ஏ.சி.யில் தான் உட்கார்ந்திருக்கார் பல வருடங்களாக!

   Delete
 13. அதுதானே பார்த்தேன் அழைப்பு விட்டும் கீதாமேடம்வரவில்லையே என்று

  ReplyDelete
  Replies
  1. வரேன், வரேன் போறாத குறைக்குக் கணினி வேறே தொல்லை தாங்கலை! :(

   Delete
 14. எங்கே சொல்லாமல் கொள்ளாமல் இளவரசர் ஹாரியின் திருமண விழாவில் கலந்து கொள்ள லண்டன் போய் விட்டீர்களோ என்று நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, லண்டன் போக ஆசை தான்! ஆனால் யார் கூட்டிட்டுப் போவாங்க! :)))) ஹாரி கல்யாணத்துக்கு மைசூர்ப்பாகு கிளறக் கூப்பிட்டிருந்தாங்க, வரலைனுட்டேன். :)

   Delete
 15. அழகு. சிறப்பான பதிவு. வாழ்த்துகள். நன்றாக எழுதியுள்ளீர்கள். படித்தேன், ரசித்தேன்.

  பயணங்கள் பலவிதம் - 03
  https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-03.html
  #சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

  ReplyDelete