எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 25, 2018

என்னென்னமோ நடக்குதுங்க!

நம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா? சொல்றேன் கேளுங்க! கிளம்பறச்சே எங்கிட்டே என்னென்ன வேணும்னு கேட்டுப்பார். நானும் அப்பாவியாய்ச் சொல்வேன்! எதெது வேண்டாம், இருக்குனும் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லி இருப்பேன். சரினு அவரும் மார்க்கெட்டுக்குப் போயிட்டுக் காய்கறி எல்லாம் வாங்கி வருவார். வந்ததும் காய்களைப் பிரித்துக் கொட்டினால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

எது வேண்டாம்னு அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னேனோ அது கட்டாயமாய் இருக்கும்! அது மட்டுமா? பச்சை மிளகாயில் மூன்று வகை! கேட்டால் ஒண்ணு நாட்டு மிளகாயாம். அதனால் வாங்கினாராம்! அத்தோடு விட்டாரா! இல்லையே! இன்னொரு இடத்தில் அதே மிளகாய் விலை குறைச்சுக் கொடுத்தாங்களாம்! விலை குறைச்சலாய் இருந்தால் வாங்கிப் போட வேண்டியது தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்கிட்டார். போனால் போறதுனு பார்த்தால் நீளம் நீளமாய் வெள்ளரிக்காய் போலச் சில, பல பச்சை மிளகாய்கள் கண்ணில் படும். இது என்னனு கேட்டால்  ஹெஹெஹெஹெஹெ னு சிரிச்சுட்டே இதை முதலில் வாங்கிட்டேனா! அப்புறமாப் பார்த்தால் மார்க்கெட் உள்ளே அந்த மிளகாய் இருந்தது! அதான் என்பார். என்னத்தைச் செய்யறது! அரைச்சுப் பூசிக் கொண்டு குளிக்கவா முடியும்?

காரட் இருக்குனு சொல்லி இருப்பேன். இவர் அரைக்கிலோ காரட் வாங்கி இருப்பார். நான் தான் வேண்டாம்னு சொன்னேனேனு கேட்டால் எனக்குச் சந்தேகமா இருந்தது! வேணும்னு சொன்னியா, வேண்டாம்னு சொன்னியானு தெரியலை! சரி எதுக்கும் இருக்கட்டும்னு வாங்கிட்டேன் என்பார். இதை என்ன செய்யறதுன்னா சப்பாத்திக் கூட்டில் போடலாம், சாலட் பண்ணலாம் என அடுக்குவார். சப்பாத்திக் கூட்டில் எங்க ரெண்டு பேருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரே ஒரு காரட் போடலாம். அதுவே மற்றக் காய்களோடு சேர்ந்து கூட்டு நிறைய ஆயிடும். ராத்திரி வேளைக்கு எவ்வளவு சாப்பிட முடியும்? ஒரு உ.கி ஒரு காரட், ஒரு தக்காளி, ஒரு வெங்காயம் ஆகியவற்றுக்கே ஒரு பெரிய கிண்ணம் நிறையக் கூட்டு வரும். ரங்க்ஸ் போட்டுக்கறது அரைக் கரண்டி தான். எனக்கே எல்லாத்தையும் போடாதேனு வேறே சொல்லுவார்! சாலட் பண்ணினாலும் இரண்டு காரட்டே அதிகம். ஏன்னா அவருக்கு நறுக்கணும். எனக்கோ துருவணும். துருவினால் காரட் கூட ஆகும். ஆனால் அவருக்குப் பிடிக்காது! ஆகவே நறுக்குவேன். இரண்டே அதிகம்! :))))

அப்புறமா அந்தக் கூட்டைக் குளிர்சாதனப் பெட்டியில் எல்லாம் வைச்சுச் சாப்பிடுவதில்லை. ஆகவே மாவு இருந்தால் இரண்டு ரொட்டியைப் பண்ணி அந்தக் கூட்டோடு குடியிருப்பின் பாதுகாவலர் இருந்தால் கூப்பிட்டுக் கொடுக்கலாம். அவ்வளவு தான். இதே தான் காய்கள் விஷயத்திலும்! வெள்ளைக் கத்திரிக்காய் தனியா வங்கி இருந்தால் வயலெட் கத்திரிக்காய் வேறே இருக்கும். குண்டுக் கத்திரி இருந்தால் நீளக் கத்திரி வேறே இருக்கும். இது ஒரு நாளைக்கு, அது ஒரு நாளைக்குனு வைச்சுக்கோ! என்னால் சும்மாச் சும்மா மார்க்கெட் போக முடியுமா என்பார். வெள்ளைக் கத்திரிக்காயே இரண்டு நாட்களுக்கு வரும்!  என்றாலும் நானும் கத்திரிக்காய் வாரம் எல்லாம் கொண்டாடிப் பார்ப்பேன். ஒரு நாளைக்குக் கத்திரிக்காய் வதக்கல், சப்பாத்திக்குத் தொட்டுக்க ஸ்டஃப் கத்திரிக்காய், கத்திரிக்காய்க் கூட்டு+மோர்க்குழம்பு, கத்திரிக்காய்ப் பொரித்த கூட்டு,கத்திரிக்காய்த் துவையல், பச்சடி, புளி கொத்சு  சின்னக் கத்திரிக்காய் எனில் ரசவாங்கினு பண்ணிட்டு உப்புமா, பொங்கலுக்கு கொத்சுவும் பண்ணுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்க பைங்கன் பர்த்தாவும் செய்துடுவேன்.  அப்படியும்   தீரலைனா  என்ன செய்யறது? இன்னைக்குக்கூடச் சப்பாத்திக்குக் கத்திரிக்காய் ஸ்டஃப் தான். குஜராத்தி பாணி!

அதோடு இதெல்லாம் பண்ணும்போது சப்பாத்திக்குனு வாங்கற காய்கள் மிஞ்சிப் போகும்! முள்ளங்கி ரொட்டிக்குத் தொட்டுக்க சப்ஜி பண்ண வாங்கி இருப்பார். நான் கத்திரிக்காயிலே மூழ்கி முத்தெடுக்கையில் முள்ளங்கி எங்கே நினைவுக்கு வரது? அதே மாதிரி அதிசயமாக் குடை மிளகாய் வாங்கி இருப்பார். குடை மிளகாய்க் கறி செய்யலாம் என்றால் ம்ஹூம், வேண்டாம் எனக்குப் பிடிக்காது தான்!   வர வரச் சொப்பு வைச்சுத் தான் சமைக்க வேண்டி இருக்கு! இது மட்டுமில்லை! இட்லி, தோசை மாவும் அப்படியே! இன்னிக்கு அரைச்சால் நாளையோட தீர்க்கணும்னு சொல்லுவார்! குறைந்த பட்சம் இரண்டு ஆழாக்காவது அரிசி போட்டால் தான் கிரைண்டரில் அரைக்கலாம். சரினு இவர் சொல்லிட்டே இருக்காரேனு போன முறை மிக்சியில் அரைச்சேன். தோசை சாப்பிடவே முடியலை! அம்பேரிக்காவிலே கொடுக்கிற தோசை மாதிரி தூள் தூளாய் உதிருது.   இட்லி நம்ம ஏடிஎம்  செய்யற இட்லியை விட மோசம்! ஏடிஎம் பார்த்தால் அதை வைச்சே என்னை அடிச்சிருப்பாங்க! :)

வர வர என்ன சமைப்பது, எப்படிச் சமைப்பதுனு எதுவும் புரியலை!  நாளைக்கு மார்க்கெட்டுக்குப் போகணும். என்ன செய்யப் போறாரோ தெரியலை! :)))) அடி வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கேன்! :)))))) 

இதெல்லாம் போக இந்தக் கணினி படுத்தும் பாடு! சொல்ல முடியலை! பொதுவாச் சாயந்திரம் ஆறு மணிக்கு அப்புறமாக் கணினியைத் திறக்கறதில்லை. அதனாலோ என்னமோ தெரியலை இன்னிக்குத் திறந்து உட்கார்ந்து மெயிலைத் திறக்கும்போது  "your connection is not private! Attackers are using your account to hack your mail password, bank account details, credit card details" அப்படினு முழ நீளம் ஒரு செய்தி! மறுபடி ரீலோட் செய்யுனு சொன்னதால் செய்தால் சுத்தம்!  இணைய இணைப்பே இல்லைனு சத்தியம் பண்ணுது! சரினு ப்ரவுசரை மூடிட்டு  மறுபடி க்ரோமைத் திறந்து மெயிலைத் திறந்தால் ஏற்கெனவே பாஸ்வேர்ட் போட்டிருந்த மெயில் இன்பாக்ஸ் வந்தது. சரினு இன்னொரு ஐடியையும் சோதிச்சேன். அங்கேயும் முதல்லே இப்படி வந்தது. அப்புறமா க்ரோமை மூடிட்டு மறுபடி திறந்து மெயில் க்ளிக் செய்தால் அந்த ஐடியோட இன் பாக்ஸ் வருது! இது என்னங்க மாஜிக் வேலை!

அதோட இல்லாமல் நாங்க எந்தக் கணக்கும் கணினி மூலமாச் செய்யறதில்லை என்பதோடு க்ரெடிட் கார்டெல்லாம் வைச்சுக்கவும் இல்லை. என்னவோ போங்க! வர வர இந்த டெக்னாலஜி படுத்தும் பாடு! :)))) அந்தச் செய்தியை இங்கே காப்பி, பேஸ்ட் செய்து போடலாம்னு பார்த்தால் ம்ஹூம், காப்பி, பேஸ்டே பண்ண முடியலை! :( 

58 comments:

 1. ஆத்தாடி இந்த வயிற்றுப்பசியை அடக்குவதற்குள் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெஹெ, ஜாலியா இல்லையோ! ரசிக்கணும் கில்லர்ஜி!

   Delete
 2. காய்கறி வாங்கப் போனால் அங்கு பசுபசுவென காய்கறிகளைக் கண்டால் எனக்கும் வாங்கத்தான் தோன்றும். நான் வாங்குவதில் மறுநாளே சமைக்க வேண்டியதாய் நிறைய வாங்கி விடுவேன் என்பார் பாஸ்! உடனே செலவு செய்து ஆகவேண்டும் என்பது போல.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், அதே, அதே, சபாபதே! உங்க பாஸ் சொல்றதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். கீரையும் வாங்கிட்டு, பூஷணிக்காயும், வாழைத்தண்டும், பிஞ்சு வெண்டைக்காயும் சேர்த்து வாங்கினால் எதை முதல்லே சமைப்பது? அதிலும் வாழைத்தண்டைக் குளிர்சாதனப் பெட்டியில் எல்லாம் வைச்சால் சரியா இருக்குமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒரு வழியா நான் சொல்லுவதைப் புரிஞ்சுண்டீங்களே!:)))))))

   Delete
  2. பூசனிக்காய் சாம்பார், கீரை பொரியல்,வாழைத்தண்டு கூட்டு, வெண்டைக்காய் பச்சடி செய்யலாம்.கர்ர்.

   Delete
  3. வீட்டிலேஇருப்பது இரண்டே நபர்கள் ஜேகே அண்ணா. இதில் நான் சாம்பாரைக் கொஞ்சம் போல் ஒரு ஸ்பூன் மட்டும் (நம்ம ரங்க்ஸ் சொல்வது) ஊத்திப்பேன். பூஷணிக்காய் பத்து ரூபாய்க்கு வாங்கறதையும் சாம்பாரிலே தானாகப் போட முடியுமா என்ன? சென்னை மாதிரியோ திருவனந்தபுரம் மாதிரியோ இளைச்சுப் போன பூஷணி பத்தை இங்கெல்லாம் கொடுப்பதில்லை. அதிலேயே நான் ஒரு நாள் மோர்க்கூட்டு, ஒரு நாள் மொளகூட்டல் அல்லது கடலைப்பருப்பு மட்டும் போட்டுக் கூட்டு, அடுத்த நாள் தஞ்சாவூர்ப் பாணி ரசவாங்கினு பண்ணுவேன். அல்லது மிச்சம் இருக்கும் பூஷணிக்காயை ஒரு நாள் சாம்பாருக்கும் ஒரு நாள் மோர்க்குழம்புக்கும் பயன்படுத்திப்பேன். வாழைத்தண்டுக் கூட்டும் கீரைப் பொரியலும் சேர்த்துச் செய்தால் சாப்பிடுவது யார்? பத்து ரூபாய்க்கு வாங்கும் கீரை எனக்கு இரண்டு நாட்களுக்கு தாராளமாய் வரும். அதுவே போதும்! அதோடு வாழைத் தண்டுக் கூட்டும் பண்ணினால் சாப்பிட வயிறு கடன் வாங்கணும். வெண்டைக்காய்ப் பச்சடிக்கு மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது மூன்று போடலாம்! மிச்சம்? என்ன செய்யறதாம்? யாரானும் வந்தால் தான் ஒரு கறியுடன் சேர்த்து ஒரு கூட்டுப் பண்ணுவேன். நாங்க ரெண்டு பேர் எனில் ஒரு கறி அல்லது ஒரு கூட்டே அதிகம்! :)))) கொஞ்சமாய் இருக்குப் போல் தோன்றினால் அப்பளம் வாட்டியோ அல்லது பொரித்தோ வைச்சுடுவேன். இல்லைனா சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல் வறுத்து வைப்பேன். :))))

   Delete
  4. சாப்பாடுச் செலவும் சரி, செய்வதும் சரி என்னைப் பொறுத்தவரை எளிமையாக இருக்கும். என்னிக்கானும் அவியல், உ.கி.காரக்கறி, சே.கி. ரோஸ்ட் எனப் பண்ணுவோம்.அன்னிக்குக் கூடவே கஷாயமும் சேர்த்துக் கொதிக்க வைச்சுடணும். இல்லைனா அஜீரணம் ஆயிடுமோனு பயம்!

   Delete
 3. கத்தரிக்காய் பற்றி பேசினால் அழுதுடுவேன்! எவ்வளவு வெரைட்டி சொல்றீங்க... ஹு...................................ம்...... ரொம்ப போராட்டம் செய்தால் மறுநாள் இங்கு கத்தரிக்காய் செய்யப்படும். எல்லாம் எனக்கே போடப்படும்! ("கேப்பியா? கேப்பியா? இன்னொருவாட்டி கேப்பியா?!!!!") நான் மட்டுமே கத்தரிக்காய் சாப்பிடும் ஜீவன் வீட்டில்.

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெ, ஶ்ரீராம், முன்னால் எல்லாம் கத்திரிக்காய் அவ்வளவு பிடிக்காது. இப்போத் தான் திருச்சி வந்தப்புறமாக் கத்திரிக்காயை ரசிச்சுச் சாப்பிடறார். சந்தோஷப் பட்டால் கத்திரிக்காய் வாரம் கொண்டாடும்படி ஆயிடுது!

   Delete
  2. மகா பெரியவர் கத்தரிக்காய் கறி சாப்பிடுவதை விட்ட கதை ஞாபகம் வந்தது.
   அத தெரியாது என்றால் விவரமாக மெயில் அனுப்புகிறேன்.

   Delete
  3. அது என்ன? படிச்சிருப்பேன், மறந்துடுச்சுனு நினைக்கிறேன். :)

   Delete
 4. கணினி, வலைத்தளம் சம்பந்தமாக எனக்கு வினோதமாக ஒரு பிரச்னை. எங்கள் பிளாக்கில் வரும் பின்னூட்டங்கள் எனக்கு மெயிலுக்கு வந்துவிடும். இன்று காலைக்குப் பிறகு வரவில்லை. தளம் சென்றுதான் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. செட்டிங்ஸ் போய்ப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. எங்கள் தளத்திலேயே நான் 'பின் தொடரும்' ஆப்ஷனை க்ளிக் செய்யணும் போல! மற்ற தளங்களின் பின்னூட்டம் எல்லாம் சமத்தா வருது!

  ReplyDelete
  Replies
  1. அதே, அதே, இங்கேயும் அதே தான்! தானே சரியாகும்னு விட்டுட்டேன்! எதுக்குனு கவலைப்படறது! :))))

   Delete
  2. ஶ்ரீராம், என்னவோ நடக்குது இணைய உலகில் என்பது வரை சரிதான். நீங்கல்லாம் எழுதின கருத்துகள் மட்டுமில்லாமல் நான் அதற்குக் கொடுத்த பதில்களும் என்னோட மெயில் பாக்ஸுக்கு வரலை!:))) இப்போக் கொஞ்ச நேரமா மத்தவங்க பதிவின் கருத்துகளும் வரவில்லை. :)))) வேதாளம் வேலையோ! :)))))

   Delete
  3. இன்னிக்கு மத்தவங்க கருத்து தொடரப் போட்டிருந்தவை வந்திருக்கு. ஆனால் என்னோட பதிவின் கமென்ட்கள் எல்லாம் இங்கே உள்ளே வந்து தான் பார்க்கிறேன். :)

   Delete
 5. Windows 10 reload செய்தால் தான் சரியாகும் என்று தோன்றுகிறது. கணிணி மருத்துவரைக் கூப்பிட்டு ஒரு partition உண்டாக்கி அதில் Linux install செய்து கொள்ளுங்கள். Linuxஉம் windowsஉம் மாற்றி உபயோகிக்கலாம்.Mail மற்றும் browsing, Linuxல் செய்யலாம்.பதிவு தட்டச்சு செய்ய windows உபயோகிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஜேகே அண்ணா, இருமுறை லினக்ஸ் போட்டுத்தரச் சொல்லிக் கேட்டாச்சு! அதெல்லாம் உங்களுக்குச் சரியா வராதுனு சொல்லிட்டார். முந்தாநாள் வந்தப்போக் கூடக் கேட்டேன். :))))

   Delete
  2. அப்போது உங்கள் கணிணி மருத்துவர் வெறும் ஓமியோபதி போல. வேறு மருத்துவரைக் கூப்பிட்டு பாருங்கள். அல்லது ரஞ்சனி நாராயணன், டிடி அவர்களை consult செய்யலாம்.

   Delete
  3. நல்ல மருத்துவர் தான். ஆனால் பலரும் சென்னையிலே கூட லினக்ஸ் என்றால் வேண்டாம் என்று சொல்லும் கணினி மருத்துவர்களே அதிகம்! :))))

   Delete
  4. பையர் வின்டோஸ் 7 பைரேடட் வெர்ஷன் எல்லாம் போட வேண்டாம்னு சொல்லிட்டார். அதிலேயே ரெகவரி ஆப்ஷன் இருக்காம். நேத்திக்குச் சொன்னார். அது மாதிரி செய்து பார்க்கணும். இப்போல்லாம் ரெகவரி சிடியோ அல்லது ஒரிஜினல் சிடியோ கொடுப்பதில்லையாம். அவங்களே ஓ.எஸ். பதிஞ்சுட்டு அதிலே ரெகவரி ஆப்ஷன் கொடுக்கிறாங்களாம். நாம் அந்த ஆப்ஷனைக் "க்ளிக்" செய்து எல்லாவற்றையும் பென் டிரைவ் அல்லது சிடி மூலம் காப்பி பண்ணிட்டுப் பின்னர் ரீ இன்ஸ்டால் செய்யணும். பார்ப்போம்.!

   Delete
  5. Use 8Gb or 16 GB pen drive. You can get ISO file. This can be used for recovery any time.

   Delete
 6. ஒண்ணு நாட்டு மிளகாயாம். அதனால் வாங்கினாராம்! அத்தோடு விட்டாரா! இல்லையே! இன்னொரு இடத்தில் அதே மிளகாய் விலை குறைச்சுக் கொடுத்தாங்களாம்! விலை குறைச்சலாய் இருந்தால் வாங்கிப் போட வேண்டியது தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்கிட்டார். போனால் போறதுனு பார்த்தால் நீளம் நீளமாய் வெள்ளரிக்காய் போலச் சில, பல பச்சை மிளகாய்கள் கண்ணில் படும். இது என்னனு கேட்டால் ஹெஹெஹெஹெஹெ னு சிரிச்சுட்டே இதை முதலில் வாங்கிட்டேனா! அப்புறமாப் பார்த்தால் மார்க்கெட் உள்ளே அந்த மிளகாய் இருந்தது! அதான் என்பார். என்னத்தைச் செய்யறது! அரைச்சுப் பூசிக் கொண்டு குளிக்கவா முடியும்?//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...சிரிச்சு முடில கீதாக்கா...மத்ததையும் படிச்சு சிரிச்சுட்டுருக்கேன் இதோ வரேன்

  நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆஆஆஅ?!! ஹிஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹே தி/கீதா, நீங்க அஞ்சாவது!ஃபர்ஷ்ட்ட்டு எல்லாம் இல்லை!

   Delete
 7. இங்க ஒருத்தி வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு உக்காந்துருக்கேன் இந்த கீதா என்னனா சிப்போ சிப்புனு சிரிக்கறாளாம்....நு கீதாக்கா மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குதே!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, ஒருவழியா இன்னிக்குக் காய் வாங்கிட்டார். ஆனால் பாருங்க அதே கத்திரி, வெண்டை தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 8. "your connection is not private! Attackers are using your account to hack your mail password, bank account details, credit card details" //

  இது எங்களுக்கும் வருது....அவ்வப்போது. இப்பத்தான் சமீபத்தில் பாஸ்வேர்ட் மாத்தி செக்யூரிட்டி எல்லாம் செக் செய்து என்று....

  ஒரு ஐடி க்ளோஸ் பண்ணிட்டு மத்தொண்ணு திறந்தா சில சமயம் பழசே வரும் ஆனா திரும்ப மூடிடும்....அது முதல்ல சரியா க்ளோஸ் ஆகியிருக்காது அதனால அப்படி வருது கீதாக்கா...கூகுள் ல ரெண்டு ஐடி வைச்சு இப்படி மாத்திப் போகும் போது சில சமயம் இப்படி நேர்வதுண்டு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மூணு ஐடிக்கும் இதே மாதிரி வந்தது. இன்னிக்கு வரலை! இன்னிக்குத் தானே சரியாயிடுச்சு போல! :)))))

   Delete
 9. திருமணமான புதிதில் எனக்குக் கத்தரிக்காய் பிடிக்கும் எனற செய்தியை எப்படியோ என் மாமியார் வீட்டில் தெரிந்துகொண்டு விட்டார்கள். அப்புறம் என்ன, ஒருநாள் நீலக் கத்தரிக்காய், ஒருநாள் பச்சைக் கத்தரிக்காய், ஒருநாள் வெள்ளைக் கத்தரிக்காய், ஒருநாள் கத்தரிக்காய் சாம்பார், ஒருநாள் கத்தரிக்காய் கொண்டைக்கடலை கூட்டு, ஒருநாள் கத்தரிக்காய் ஊறுகாய் என்று தலை நிமிர முடியாமல் செய்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள். 'மாப்பிள்ளைக்குப் போடு, அவருக்குப் பிடிக்கும்' என்று சாக்கு வேறு! அப்பப்பா.. அந்த நேரம் பார்த்து, 'கத்தரிக்காய் சாப்பிட்டால் சொரியாசிஸ் வரும்' என்று யாரோ சொல்லப்போக, நான் பிழைத்தேன்! உங்களவரிடல் சொல்லுங்கள்!
  -இராய செல்லப்பா சென்னை

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்லப்பா சார், கத்திரிக்காய் உங்களை இங்கே வரவழைத்து விட்டது. சருமப் பிரச்னை இருப்பவர்கள் தான் கத்திரிக்காய் சாப்பிடக் கூடாதுனு சொல்வாங்க. இல்லைனா கத்திரிக்காய் சாப்பிடலாம். நான் இன்னும் இந்தக் கத்திரிக்காய் ஊறுகாய், தொக்கு னு எல்லாம் சொல்றாங்களே அது மட்டும் போட்டுப் பார்க்கலை!

   Delete
 10. இருவருக்குச் சமைப்பது அதுவும் சாய்ஸஸ் இருந்தால், பிடித்தல் பிடிக்காது இருந்தால் கொஞ்சம் கஷ்டம்தான் அக்கா.

  எங்க வீட்டுல பிடிக்கும் பிடிக்காது என்பது இல்லை பையன் வரை. அதனால என்ன பண்ணினாலும் ஓகே தான் யார் ஆர்டர் செய்யறாங்களோ அதுவே அன்றைய மெனு.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டிலே பொதுவா அவர் சொல்வது தான் சமைப்பேன். எனக்கு எதுவானாலும் ஓகே. ஒரு கரண்டி ரசமும், அப்பளமும் இருந்தால் போதும்! :)))

   Delete
 11. நான் எழுந்துக்கும்போது எங்கள் பிளாக் இடுகை வருவதில்லை. அது வரும்போது நான் நடக்கச் சென்றிருப்பேன்.

  இங்க வந்தா காய்கறி பிரச்சனை, அதைவிட இன்னும் நீங்காத கணினிப் பிரச்சனை....

  இப்போ இரண்டு நாளா மறநாளுக்கு வேண்டிய காயை முந்தினநாள் வாங்கறேன். ஒரு வாரத்துக்கு வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது எங்க ஊரோடு போச்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. அன்னன்னிக்கு வாங்கறது இருக்கும் இடத்தைப் பொறுத்து. பொதுவா நான் 4 நாளைக்கு மேலே வாங்கக் கூடாதுனு சொல்வேன். ஆனால் மார்க்கெட் போனால் கண்ணில் பார்க்கும் காய்களை எல்லாம் வாங்கிடுவார். அதுவும் காலை ஏழரைக்குப்போனால் மார்க்கெட்டே எங்க வீட்டுக்கு வந்துடும். :))))

   Delete
  2. எனக்கும் காய்கறி வாங்கும்போது, எல்லாம் வாங்கத் தோணும். அதுனால, இன்னைக்கு இந்த மெனு என நிச்சயம் பண்ணிட்டு (அதாவது நாளைக்கு), அதுக்கு ஏற்ப காய வாங்கறேன்.

   ஆனாலும் சமையல் வேலை என்பது கடினமானது, கடும் உழைப்பைக் கோருவது.

   Delete
  3. இந்த மெனுவைத் தேர்ந்தெடுக்கிறது தான் எங்க வீட்டிலே பெரிய பிரச்னை! தினம் தினம் அரை மணி நேரம் யோசிச்சுப் பின்னர் சாயந்திரம் என்ன செய்யப் போறோம் என்பதற்கேற்பக் காலை சமையல் முடிவெடுக்கப் படும். :))) ஏனெனில் குழம்போ, சாம்பாரோ வைச்சால் மிஞ்சினால் சாயந்திரம் சப்பாத்தி பண்ணினால் அல்லது ரவா கிச்சடி, ஜவ்வரிசிக் கிச்சடி, புளி உப்புமானு பண்ணினால் செலவாகாது. ரவா கிச்சடிக்காவது நான் கொஞ்சம் தொட்டுப்பேன். ரங்க்ஸ் ம்ஹூம்! அப்புறம் மறுநாள் அந்தக் குழம்பைக் கொட்டணும். ஆகவே என்னிக்கு இட்லி, தோசை, அடைனு சாயந்திரம் பண்ணுவேனோ அன்னிக்குத் தான் இவை எல்லாம். மற்ற நாட்கள் இல்லை!

   Delete
 12. ரொம்பவும் சுவாரஸ்யம்! ஆனாலும் அனேக‌மாய் எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதை தான்! [ என் வீடு உள்பட‌!!]

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வீட்டுக்கு வீடு வாசப்படி தானே! இப்போல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் மாடிப்படி! :))))

   Delete
 13. முதல் விஷயம்...
  இந்தப் பதிவைப் படிச்சதும்

  அப்புசாமி கீதா பாட்டி(???...)
  அடடா... சீதா பாட்டி அல்லவா!.. அவங்க தான் நினைவுக்கு வந்தாங்க...

  அப்புறம் ...
  கத்ரிக்காயில இவ்வளவுதானா... இல்லே, இன்னும் பாக்கி இருக்கா!...
  முதல்ல அதை ஃபைசல் பண்ணிட்டு அப்புறம் பைங்கன் தொக்கு பண்ணுங்க!...

  அப்புறம், கடைசியா -
  காப்பி, பேஸ்டே பண்ண முடியலை! :(

  காபியைத் தான் ஏற்கனவே.... சரி.. சரி.. அத விடுங்கோ!..
  அப்புறம் எதுக்கு காபியை பேஸ்ட் பண்ணோனும்!?...

  ReplyDelete
  Replies
  1. // அப்புசாமி கீதா பாட்டி(???...)
   அடடா... சீதா பாட்டி அல்லவா!.. அவங்க தான் நினைவுக்கு வந்தாங்க...//

   துரை ஸார்... அப்புசாமி கதையில் கீதாப்பாட்டி உண்டு. ரசகுண்டுவின் பாட்டி. வில்லி!!

   :)))

   Delete
  2. கத்திரிக்காயிலே இன்னும் ஏதேனும் விட்டுப் போயிருக்கா யோசிக்கிறேன். ம்ம்ம்ம்ம்? கத்திரிக்காய் சிதம்பரம் கொத்சு! அதை விட்டுட்டேன் போல! :))))ஹாஹா தொக்கு எப்படிப் பண்ணறதாம்? ஒருவேளை கொத்சுவைத் தான் தொக்குனு சொல்றாங்களா?

   காபியை எங்கே பேஸ்ட் பண்ணறது! எனக்கு கூகிளிடமிருந்து வந்த மிரட்டலை காப்பி பண்ண நினைச்சா முடியலை.

   அப்புசாமி, சீதாப்பாட்டி நினைவு வந்ததா? ஹாஹாஹா, அங்கே பாருங்க ஶ்ரீராம் நைஸாக என்னைக் கீதாப்பாட்டினு சொல்லிட்டு வில்லினும் சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டார்! அதை முதல்லே என்னனு கேளுங்க! :))))))

   Delete
  3. ஆமாம். கீதாப்பாட்டி தான் சமையல் நிபுணி்.

   Delete
  4. ஹாஹாஹாஹா!

   Delete
 14. //எது வேண்டாம்னு அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னேனோ அது கட்டாயமாய் இருக்கும்! //

  இங்கும் அப்படியே!
  வேணும் என்பதை சமை மீதியை பற்றி கவலைப்படாதே தூக்கி போடு என்பார்கள்.நிறைய ஏன் வாங்க்கி வந்தீர்கள் என்றால் நல்லா இருக்கிறதை எடுத்து கொண்டு கெட்டு போனதை தூக்கி எறி.

  வெள்ளிக்கிழமை மார்கெட் (சந்தை) வீட்டுக்கு அருகில் பச்சை காய்கறிகள் வாங்கு வாங்கு என்று சொல்வார்கள் வாங்கினால் என்னதான் குளிர்சாதானபெட்டியில் வைத்தாலும் காய்கறி தாங்கனுமே!

  அப்புறம் அனைத்தையும் வீணாக்காமல் சமைக்க வேண்டும் என்ற என் கவலை. போதுமடாசாமி என்று இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, எல்லோரும் ஒரே மாதிரி இருப்பாங்க போல! எனக்கும் காய்கள் தீர்க்கணுமேனு தான் கவலை. இரண்டு வேளை டிஃபன் எனில் ஒரு வேளை சப்பாத்தி செய்து காய் பண்ணித் தீர்த்துடலாம். ஆனால் காலை கட்டாயமாய்க் கஞ்சி என்று ஆனப்புறம் ஒரே வேளை டிஃபன்! இதிலே சப்பாத்திக்குனு வாங்கற காய்கள் மட்டுமில்லாம்,கொ.க. ப.ப. மொச்சை, த.ப. ப.ப. போன்றவை எல்லாம் பண்ணறதே இல்லைனு வேறே புகார் கிளம்பும்.காயோடு இந்தப் பருப்பு வகைகளும் பண்ணினால் சாப்பிட முடியறதில்லை! ஏதேனும் ஒண்ணு தான் பண்ண வேண்டி இருக்கு! :))))

   Delete
 15. நீங்களும் சேர்ந்து மார்கட்டுக்குப் போனால் என்னவாம்?:) ரெண்டு கிலோ குறைஞ்சிடுவீங்களாஆஆஆஆஅ இல்ல வெயிலுக்குக் கறுத்திடுவீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாவம் மாமா.. இந்த வெய்யிலுக்குள்ளால போய் போய் வாங்கி வருவதை.. ஏசிக்குள்ள இருந்தபடி குறைசொல்லி ஊரெல்லாம் நோட்டிஸ் அடிச்சு ஒட்டிக் கொண்டிருக்கிறா:)).. விட மாட்டேன்ன் மாமாவுக்கு நீதி கேட்டு தேம்ம்ஸ் கரையில்.. அதே மரக்கறிகளை துவையல் பண்ணி சப்பிடுவேன்ன்ன்ன்ன்ன்ன்:))...

  அதுசரி இல்லாததை மட்டும் ஜொள்ளி அனுப்பாமல் எதுக்கு இருக்கிறதையும் சொல்லி அவரை ரெஸ்ட்டுப் பண்றீங்க:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:)) மொத்தத் தப்பும் உங்களுடையது.. ஆனா அவரை மட்டும் குறை ஜொள்ளுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

  என் ஆத்துக்காரர்.. கடைக்காரர் பாவம் ..., வியாபாரம் இல்லாமல் இருக்கிறாரே எனவும் பொருட்கள்[தேவையில்லாமல்] அவரிடம் வாங்கி வந்திருக்கிறார் ஹா ஹா ஹா:))

  ReplyDelete
  Replies
  1. //நீங்களும் சேர்ந்து மார்கட்டுக்குப் போனால் என்னவாம்?:) // அதைத் தானே நானும் கேட்டுட்டு இருக்கேன்! ம்ஹூம், மாட்டாரே! கேட்டால் அந்தக் கூட்டத்தில் காய்களை வண்டியில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டு வெளியே வருவதே பெரிய விஷயம். இதில் உன்னை வேறே பின்னால் உட்கார்த்தி வைத்துக் கொண்டு போக முடியுமா என்பார். அதோடு கிளம்புவது காலை ஏழரை மணி! திரும்பி வர ஒன்பது மணி ஆகும். அதன் பின்னர் நான் வீடு சுத்தம் செய்து குளிச்சுச் சமைக்கணும்! :))) இல்லாததை மட்டும் தான் சொல்லி இருப்பேன். காரட் இருக்கானு கேட்பார். இருக்குனு சொன்னால் அன்னிக்குக் காரட் நிச்சயம் வீட்டுக்கு வரும்! :) சொ.செ.சூ.

   Delete
 16. இந்த மாதிரி தொந்தரவு வேண்டாமென்றுதான் என் மனைவியே கடைக்குபோய் வேண்டியதைவாங்குவாள் நான் தலையிடுவதில்லை. படித்த நகர வாசிகளான உங்களுக்கே இப்படிஎன்றால் கிராமவாசிகளை தொழில் நுட்ப வேலைகளில் கட்டாயப்படுத்தினால் எப்படி இருக்கும் மோடி வாழ்க

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் பக்கத்தில் கடைகள் இருக்கின்றன. அதோடு இல்லாமல் சிறு வியாபாரிகளும் விற்பனை செய்பவர்கள் நடைமேடையில் உட்கார்ந்திருப்பார்கள். எங்க குடியிருப்பு வளாகத்துக்கே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து ஒருத்தர் தினசரிக் காய்கள் கொண்டு வருகிறார். ஆனால் இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. அவரே பார்த்து பேரம் பேசி வாங்கணும். வணிக வளாகங்களில் இருக்கும் காய்கறிகளை வாங்க அவருக்குப் பிடிக்காது! :))))

   Delete
  2. //படித்த நகர வாசிகளான உங்களுக்கே இப்படிஎன்றால் கிராமவாசிகளை தொழில் நுட்ப வேலைகளில் கட்டாயப்படுத்தினால் எப்படி இருக்கும் மோடி வாழ்க// அது சரி, இதிலே தொழில்நுட்பம் எங்கேருந்து வந்தது? மோதி எங்கேருந்து வந்தார்? எந்தக் கிராமவாசியைத் தொழில் நுட்பத்திலே கட்டாயப் படுத்தினேன்?பார்க்கப் போனால் கிராமங்களில் தான் அன்ட்ராயிட் அலைபேசிகள், ஸ்மார்ட் ஃபோன்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. அவங்க தான் தொழில் நுட்பத்திலும் சிறந்து இருக்கிறார்கள்.இதுக்கும் மோதிக்கும் என்னசம்பந்தம் என்று கூறினால் புரிந்து கொள்வேன். எனக்குப் பசி எடுக்கலைனாக் கூட மோதியைக் காரணம் சொல்லணும் போல! :))))))))

   Delete
  3. மறந்துட்டேனே, எங்க கிராமத்துக் கோயில் பூசாரியும், பெருமாள் கோயில் பட்டாசாரியாரும் மொபைல் மூலமாகவே வங்கிக் கணக்கை செயல்படுத்துகின்றனர். எனக்கு இன்னமும் அதெல்லாம் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. பலரும் ஆன்லைன் மூலமே பயணச்சீட்டு முன்பதிவும் செய்யறாங்க! ஆனால் நாங்க ரயில் நிலையம் போய்த் தான் பயணச்சீட்டு முன்பதிவு செய்யறோம்.

   Delete
 17. பின்னூட்டம்லாம் படிச்சி ..ஹாஹ்ஹா .ஆகமொத்தம் பெரும்பாலான வீடுகளில் மார்க்கெட்டிங் நிலவரம் சேம் .
  எங்க வீட்ல தக்காளி வெங்காயம் தயிர் வெள்ளரி இந்த இங்கிலீஷ் வெஜிஸ் மட்டுமே அலைமோதும் ஏன்னா நான் ஆசிய கடைகளுக்கு நானே போய் வாங்கிடுவேன் ..எழுதி கொடுத்தாலும் காணாமப்போட்டுட்டு வீட்ல இருக்கற பொருளே தூக்கிட்டு வருவார் :)

  ஒருதரம் அஞ்சு கட்டு கொத்தமல்லியை வச்சி நான் பட்ட பாடு இருக்கே ..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா,வரலையே முடியலையோ னு நினைச்சேன். வந்தாச்சா? நல்வரவு. நல்வரவு. ஹிஹிஹி, நம்மோடு ஜோடியாச் சொல்ல ஆட்கள் இருப்பது தெரிஞ்சதும் எத்தனை சந்தோஷமா இருக்கு. கோமதி அரசு வேறே சொல்லி இருக்காங்க. நீங்களாவது ஒரு ஐந்து கட்டுக் கொத்துமல்லி தான் சொல்றீங்க! எனக்கு அதை விட மோசம்! கொத்துமல்லி மாலை கட்டிப் போடாதது தான் பாக்கி! கொத்துமல்லி சீசன் வந்தாலே குலை நடுங்கும்! :)))))

   Delete
 18. எனக்கும் இந்த மிரட்டல் வந்தது. எல்லாத்தையும் அணைச்சதில்
  எழுதி வைத்திருந்த கதையும் போச்சு.
  அப்பாடி இவ்வளவு சமையலா.
  கடவுளே சமையலறையை விட்டு வெளியே வருவது எப்போது கீதாமா.

  உலகில் கணவன்மார்களை ஒரே மாதிரிப் படைத்திருக்கார்
  பகவான்.
  காய்கறிக் கடைக்காரன் லாபம் தான்.
  பச்சை மிளகாயை அரைச்சுப் பூசிண்டால்.
  கடவுளே சிரித்து மாளலை.
  அற்புதம் கீதா.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, உங்களையும் மிரட்டியதா? சரிதான். இவ்வளவு சமையலும் ஒரே நாளில் செய்வேனா என்ன? மாறுபட்ட சமையல் குறிப்புகளைச் சொன்னேன். அம்புடுதேன். இங்கே என்னைப் பார்க்கிறவங்க என்ன இந்த மாமி எப்போப் பார்த்தாலும் கணினி முன்னாடியே உட்கார்ந்திருக்கானு யோசிப்பாங்க! ஹெஹெஹெ! சமையல் மிஞ்சிப் போனால் அரை மணி நேரம்! :))) சாயந்திரம் ஏழு மணியிலிருந்து ஏழரைக்குள் இரண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சுடுவோம். ஆகவே ஒரு நாளைக் காஃபி, டீ போடும் நேரம் தவிர்த்து சமையலறையில் ஒன்றரை மணி நேரம் இருந்தால் பெரிசு! :))))

   Delete
 19. ஆவ் என் கமெண்டை காணோம்

  ReplyDelete
  Replies
  1. காலம்பர கணினியை அணைச்சப்புறம் இப்போத் தான் இரண்டு மணிக்குத் திறந்தேன். இன்னிக்கு உதிரி மல்லிப்பூ தொடுக்கும் வேலை வேறே சேர்ந்து கொண்டது. ஆகையால் கணினிக்கு வர முடியலை! :))) உங்க கமென்ட் இப்போத் தான் பார்த்தேன்.

   Delete