எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 23, 2018

குறை ஒன்றுமில்லை கோவிந்தா!

இன்னிக்கு என்னோட பிறந்த நாளைத் தொண்டர்களும், குண்டர்களும் அமோகமாக் கொண்டாடுவதை முகநூல் வழியாகவும், வாட்சப், மற்றும் இணைய வழிச் செய்திகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி! பிறந்த நாள் என்பதே கொண்டாடி அறியாத என் போன்றோர் குழந்தைகளாலும் மற்றும் இணையத்தின் வாயிலாகவும் பிறந்த நாள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் எனக்கு மூணு பிறந்த நாள். இந்த மாசம் என்னோட கல்யாண நாளையும் பிறந்த நாள்னு நினைச்சுட்டுப் பலர் அன்னிக்கே கொண்டாடிட்டாங்க! அதைச் சேர்த்தால் நாலு பிறந்த நாள். நால் பெரும் விழா எடுக்க வேண்டியது தான்! :))))

அண்ணாக்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் பிறந்த நாள் பரிசா எது கொடுத்தாலும் வாங்கிக்கறேன். முத்து, பவளம், வைரம், வைடூரியம், கோமேதகம், பச்சை, சிவப்பு என்னும் கெம்பு, நீலம், புஷ்பராகம் என எதானாலும் ஓகே! அதே போல் வஸ்த்ரகலா எடுத்துக் கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஆரெம்கேவியின் புதிய திருமணப்பட்டுத் தான் எடுத்துத் தருவேனு வாங்கித் தரவங்க கிட்டேயும் வாங்கிப்பேன். எதானாலும் பரவாயில்லைங்க! தங்கக்காசு, தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், காசுகள் (இது வரைக்கும் வெள்ளியைச் சேர்த்ததில்லை; அதை மட்டும் ஏன் விடணும்) எதானாலும் உங்க சக்திக்கு ஏற்றாற்போல் கொடுத்திடுங்க.

எனக்குக் குறை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் இந்தக் கணினி படுத்தும் பாட்டில் பதிவுகளே போட முடியறதில்லை! எல்லாம் இந்தப் புதுக்கணினி படுத்தற பாடு தான்! ஏற்கெனவே போன வருஷம் அம்பேரிக்காவிலிருந்து சென்னை வந்ததும் சாமான்களை ட்ராலியில் வைச்சுத் தள்ளும்போது back pack பாக் பாக்கில் வைச்சிருந்த மடிக்கணினி அப்படியே கீழே விழுந்துடுச்சு. வெளிப்படையாக் காயம் ஒண்ணும் இல்லைனாலும் உள்ளே வேறே ஏதானும் பிரச்னையா என்னனு தெரியலை! எப்போப் பார்த்தாலும் இணைய இணைப்பில் பிரச்னை! வந்து வந்து போயிட்டு இருக்கும். சரி போகட்டும்னு எப்படியோ அதோடயே சமாளிச்சுட்டு வந்தால் திடீர்னு ஒரு நாள்  அதோட மவுஸ் வேலை செய்யாமல் போய் அப்புறமாப் பழைய லாப்டாப்பின் ரிசீவரையும் மவுஸையும் வைச்சுப் பயன்படுத்தினேன். இப்போ ஒரு வாரமா ஒரே தொந்திரவு!இணையமே சரியா வரலை!  திறந்து உடனே வந்தால் உள்ளே போனதும் இணைப்பு இல்லைனு எரர் காட்டும். இல்லைனா பாதி தட்டச்சும்போது, பாதிக் கருத்துச் சொல்லும்போது எனப் படுத்தல் தாங்கலை!

அதோட இல்லாமல் இங்கே என்னமோ தினம் தினம் மழை கொட்டறாப்போல மேகங்கள் உருண்டு திரண்டு வந்து பயமுறுத்திப் பெரிய பெரிய இடிகளைப் போட வைக்கும். காற்று வேறே! லேசாக் காத்தடிச்சாலே இங்கே மின்சாரத்தை நிறுத்துவாங்க! இதுக்குக் கேட்கணுமா! மின்சாரம் வேறே 2,3 மணி நேரங்கள் இருக்காது. எல்லாம் கிடக்க இ கலப்பைப் பிரச்னை. ஒரு வழியா அதைப் புது மடிக்கணினியில் இன்ஸ்டால் பண்ணினா இந்த "ண்" அப்புறமா "ணா"னு வராது. ணாஆ என்று வரும். இல்லைனா ணா௶ இப்படி வரும். இருக்கிறேன் என அடிக்க முயன்றால் இருக்கிறேண் என்றோ அல்லது இருக்கிறே௶ஃப் என்றோ வரும்.   சரினு சுரதா மூலம் தட்டச்சிச் சில மாற்றங்களை மட்டும் இ கலப்பையைத் திறந்து சரி செய்து! ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா! இப்படி ஒரு மாசமாப் போயிட்டு இருக்கையில் திடீரென இன்று காலையில் இருந்து மடிக்கணினி புதுசில் இணைய இணைப்பே வரலை! ஏன்னு தெரியலை.

ஆனால் அதே சமயம் மொபைலில் வாட்சப், முகநூல் எல்லாம் திறக்குது. ஐ பாடிலும் திறக்குது. கணினி மருத்துவரிடம் சொன்னால் சிக்னல் சரியா வந்திருக்காதுனு சொன்னார். சரினு மோடம் இருக்கும் அறைக்கேக் கணினியை எடுத்துப் போய்ப் பார்த்து சோதனை செய்தாச்சு! ம்ஹூம், சுத்தம்! அசைந்தே கொடுக்கலை. இணைப்புக் கொடுப்பவர்களிடம் சொன்னால் உங்க கணினியில் தான் பிரச்னை! எல்லோருக்கும் நல்லா வருது என்கிறார்கள். அதுவும் உண்மை தானே! மொபைலில் நல்லாத் தானே வருது! சரினு இப்போப் பழைய மடிக்கணினியை எடுத்து வைச்சுச் சோதிச்சுப் பார்த்தால் அதிலே இணைய இணைப்பு ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மென்று வருது! வேகமாயும் இருக்கு! இது என்ன குழப்பம்னு புரியலை! அதோடு அதிலே இ கலப்பையும் நல்லா இருப்பதாலே தட்டச்சுவதும் நேரடியாகத் தட்டச்சலாம்!

இந்தப் பெரிய குறையைத் தவிர வேறே குறை ஒன்றுமில்லை கோவிந்தா! நல்லபடியாக எல்லாம் நடக்கணும். உலக க்ஷேமத்துக்காகப் பிரார்த்தனைகள். நானே சமைச்சுக்கறேனே எனச் சில, பல சமயங்கள் நினைச்சாலும் அந்த அளவுக்கான உடல், மனம் தெம்பை இறைவன் கொடுத்திருக்கானே என அவனுக்கு நன்றியும் செலுத்துகிறேன்.

குறை ஒன்றுமில்லை கோவிந்தா! 

71 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள். மறுபடியும் இங்கேயும் சொல்லிக்கறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நன்னிஹை!:)

      Delete
  2. வஸ்த்ரகலால்லாம் ஓல்ட் பேஷன் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு? கொடுக்காம இருந்துடாதீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)))))

      Delete
  3. மடிக்கணினி கீழே விழுவதற்கும் இணையம் சரியாக வராமல் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லையே...

    ReplyDelete
    Replies
    1. அது தெரியுமே! அப்போ ஏன் இணைய இணைப்பு அதில் மட்டும் சரியா வரதில்லை? என்னோட கணினி மருத்துவரும் கூறிவிட்டார். கணினியில் கோளாறு இருக்க வாய்ப்பே இல்லைனு! செர்வர் பிரச்னைன்னா மத்ததுக்கு மட்டும் எப்படி இணைப்பு வரும்? :(ஒண்ணும் புரியலை!

      Delete
  4. குறைகள் சரியானால் சரிதான். புதிய மடிக்கணினியை ஓ எஸ் மறுபடி ரீ இன்ஸ்டால் செய்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க? வின்டோஸ் 10 அதிலே! பாக் அப் சிடி எதுவும் இல்லை. ஆன்லைனிலேயே ரீ இன்ஸ்டால் பண்ணணும் போல! பாஸ்வேர்ட் கீ கேட்கும்! அது பையருக்குத் தான் தெரியும்! தெரியுமா இல்லை மறந்திருப்பாரானு தெரியலை! முன்னால் உள்ள இந்த மடிக்கணினிக்கு ரெகவரி சிடி இருக்கு. ஆனால் இது வின்டோஸ் 7 ஹோம் பிரிமியம்!

      Delete
    2. ப்ராடக்ட் கீ என்பதற்கு பாஸ்வேர்ட் கீ எனத் தப்பாய்ச் சொல்லிட்டேன்.

      Delete
    3. கீசாக்கா கொம்பியூட்டர் பற்றி எல்லாம் பேசுறா:))

      Delete
    4. அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ப்ளாட்டினம் உங்களுக்கு பிடிக்காது போல ஆகவே அதனை குறிப்பிடவில்லை போலும்.

    என்ன செய்வது ? என்னால் கொடுக்க முடிந்தது இதுவே. ஆகவே உங்களுக்கு பிடிக்காததை பரிசு கொடுக்காமல் வாழ்த்து மட்டும் கூறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! என்னாது பரிசு இல்லையா? நொ.கு.ச.சா.? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொண்டு வந்ததைக் கொடுத்துட்டுப் போங்க! :)))))

      Delete
    2. கில்லர்ஜி சரியா சொன்னீங்க இப்ப பிளாட்டினம் தான் தங்கத்தையும் விட உயர்ந்த நகை...அதனால்...

      கீதாக்கா உங்களுக்குப் பிளாட்டினத்துல பரிசு அனுப்பிருக்கேன் பாருங்க...கிடைச்சுதானு சொல்லுங்க...எல்லா நாளும் பிறந்த நாள் தானே என்னிக்கு அனுப்பினா என்ன சொல்லுங்க...இல்லையா

      [http://jollyhoo.com/wp-content/uploads/2012/12/Nayanthara-Launch-Jos-Alukkas-Platinum-Jewellery-Collection-63.jpg]

      நயன் லாஞ்ச் பண்ணினதாக்கும்!!!

      கீதா

      Delete
    3. வாங்க தி/கீதா, காலம்பர நான் வந்தப்போ யாரும் இல்லை! நீங்க அப்புறமா வரச்சே நான் அவசரத்தில் இருந்தேன். :)))) அது சரி, நயன் லாஞ்ச் பண்ணினால் என்ன? சிறப்பு? நமக்கு அதெல்லாம் பிடிக்காது!

      Delete
  6. நிறைவே அருள்வாய் கோவிந்தா!..

    பெரிய ரங்கும் சிறிய ரங்கும் அருகிருந்து காப்பதற்கு பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நன்னி, நன்னி! ரங்குவுக்காகத் தானேஇங்கே வந்ததே!

      Delete
  7. அப்புறம் தனியா சுவர் ஏறிக் குதிப்பது சிரமமாக இருக்கிறது...

    ஓட்டை உடைசலை சீக்கிரமாக சரிசெய்து விட்டு
    உடனடியாக மேடைக்கு வரவும்!...

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே துரை சார்! ஒரு வாரமாக் கணினியைத் திறந்து வைச்சுட்டு இணைப்புக் கிடைக்காம வாயைப் பிளந்துட்டு ஈ ஓட்டிட்டு உட்கார்ந்திருக்கேன்.ஆறரைக்கு அப்புறமா சாவகாசமா வரும் ஆனா வராது! இன்னிக்கு அதுவும் இல்லை! ரொம்பப் புலம்ப வேண்டாம்னு பார்த்தா எங்கே! :)))))) நம்ம ராசி! :)))))

      Delete
    2. ஹாஹாஹா, இன்னிக்குத் தனியாவே ஏறிக் குதிக்காமல் நேராகவே உள்ளே நுழைஞ்சாச்சு! :))))

      Delete
    3. அப்படிச் சொல்லுங்க துரை அண்ணா...இன்னிக்கு கூடவே குதிச்சும் கீதாக்கா பதிலே சொல்லலையாக்கும்....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      கீதா

      Delete
    4. ஹிஹிஹி, கஞ்சி வேறே அழைச்சது! பால்காரர் ஒரு பக்கம்! :))))

      Delete
  8. தங்களது மடிக்கணியில் பையருடைய WiFi இணைப்பு விவரங்கள் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். Windows 10 அவ்வப்போது அதை இருக்கிறதா என்று சரிபார்க்கும் போது இல்லை என்ற நிலை கிடைக்கும்.

    கணிணி மருத்துவரைக் கொண்டு அந்த இணைப்பை disable செய்து முயற்சி செய்து பாருங்கள்.

    WiFi இல்லாமல் நேரடி modem cable இணைப்பு பயன் படுத்திப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கஜேகே அண்ணா, நீங்க சொல்லி இருக்கும் செய்தி புதிது. கணினி மருத்துவரிடம் சொல்றேன். வைஃபை இல்லாமல் நேரடி இணைப்பா? ம்ம்ம்ம்ம்??? பார்க்கிறேன்.

      Delete
    2. அக்கா என் கணினியிலும் இந்தப் பிரச்சனை இருந்தது. அப்போ என் மச்சினர் அவர்தான் என் கணினித் தோழிக்குக் குடும்ப நல மருத்துவர் சொன்னது....வைஃபை இல்லாமல் நேரடியாகக் கனெக்ட் பண்ணுங்கனு....அந்த கனெக்ஷன் வயர் தானே தரேன்னு சொன்னார்...இல்லைனா இங்கு வீட்டில் நிறைய உண்டு அதைக் கனெக்ட் செய்து தரேனு சொன்னார் தராமல் அம்பேரிக்கா போயாச்!!...

      கீதா

      Delete
    3. ஜேகே அண்ணா, நீங்க சொல்லி இருப்பது நடப்பது சாத்தியம் இல்லை எனக் கணினி மருத்துவர் கூறிவிட்டார். அவரும் ஶ்ரீராம் மாதிரி ஓஎஸ் மறுபடியும் போடச் சொல்றார். என்ன பிரச்னைனா இந்த வின்டோஸ் 10 ரெகவரி டிஸ்க் இல்லை! வின்டோஸ் 7 இருக்கு! அது இந்த மடிக்கணினியிலே என் பெயரிலேயே போட்டிருப்பதால் மறுபடி அதில் போடுவது பிரச்னையாக ஆயிடும்னு பயம். ஒரு முறை கணினியிலேயே போட்டுட்டு மைக்ரோசாஃப்ட் பிடிச்சுட்டாங்க! அலர்ட் செய்தி வந்து உடனே துண்டிச்சுட்டாங்க! :( இங்கே கணினி மருத்துவரே அவரோட வின்டோஸ் 7 போட்டுத் தரேன் என்கிறார். பயமில்லை என்கிறார். யோசிக்கணும்!

      Delete
    4. தி/கீதா கேபிள் மூலம் இணைப்பு வேண்டாம்னு சொல்லிட்டார். அவர் சொல்வது அந்த மடிக்கணினி "டெல்" கம்பெனியோடது 6 ஜிபி ராம் இருக்குனு சொல்றார். ஆகவே அதில் வேகம் நல்லா வரணும்னா ரீ இன்ஸ்டால் பண்ணினால் போதும்னு சொல்றார்.

      Delete
  9. கீதா சாம்பசிவம் மேடம் இன்றா உங்கள் ஆங்கில தேதி பிறந்தநாள்? என் மனைவிக்கு இன்றுதான். உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். தங்கள் ஆசி எல்லோரிடமும் இருப்பதாக.

    நேற்று கிளம்பி இன்று வந்துசேர்ந்துவிட்டேன். (டோம்). எல்லாம் டிஸ்கனெக்ட் செய்யும்போது கொஞ்சம் சஞ்சலம் இருந்தது. கிட்டத்தட்ட 23 வருடங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு கிளம்புகிறோமே என்று. நேற்று இரவு மொபைலை டிஸ்கனெக்ட் செய்தபோது என்னுடன் 20 வருடங்களுக்கு மேல் இருந்ததைப் பிரியும் வருத்தம் இருந்தது. மாற்றம் என்பது மானிடத் த்த்துவமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ஓ அண்ணியும் அஞ்சாம் நெம்பரோ நெல்லைத்தமிழன்?.. நாங்களும் வாழ்த்துச் சொன்னோம் என மறக்காமல் சொல்லிடுங்கோ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      Delete
    2. //எனக்குக் குறை எல்லாம் எதுவும் இல்லை.//

      அதானே யாமெல்லாம் இருக்கையில் குறை ஏது?:) சரி சரி இன்று பிறந்தநாள் ச்சோ முறைக்கக்கூடா ஜிரியுங்கோ:)).

      குறை ஒன்றுமில்லை எனச் சொல்லிச் சொல்லியே.. வாழ்த்துப் போஸ்ட் முழுக்க ஒரே புலம்பல்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதெல்லாம் இருக்கட்டும் எங்கே கேக்? எங்கே சுவீட்ஸ்? எங்களை ஓவராப் பேய்க்காட்டுறீங்க?:) நெடுகவும் பொறுக்க மாட்டோம் பொயிங்கிடுவோம்ம்.. அந்தக் கீரை வடையையவது ரெசிப்பியுடன் போடுங்கோ:))

      Delete
    3. நெல்லை... உங்கள் துணைவியாருக்கு எங்கள் வாழ்த்துகளும்.

      Delete
    4. முதல்லே உங்கமனைவிக்கு என்னோட ஆசிகள், வாழ்த்துகள். குறை ஒன்றுமில்லாமல் நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகள், பேரன், பேத்திகளோடு நிறை வாழ்க்கை வாழ வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

      Delete
    5. தமிழ்நாட்டில் அல்லது நீங்கள் விரும்பும் இடத்தில் உங்கள் வாழ்க்கை அமோகமாக சந்தோஷத்துடனும் மன நிம்மதியுடனும் நோய், நொடி இல்லாமல் வாழப் பிரார்த்தனைகள் நெ.த.

      Delete
    6. அதிரடி, கேக் வெட்டியெல்லாம் பி.நா. கொண்டாடுவது இல்லை. :)))) நான் பி.நா. கொண்டாடுவதே இப்போப் பத்து, பனிரண்டு வருடமாகத் தான், இணைய நண்பர்கள் வாயிலாக!

      Delete
    7. இந்தக் கணினி படுத்தல் பத்திச் சொல்லிச் சொல்லி எனக்கே அலுத்துவிட்டது அதிரடி, அதனால் தான் சுமார் ஒரு மாசமாகப் படுத்தினாலும் பேசாமல் இருந்தேன். நேத்திக்குச் சுத்தம்! இணையமே வரலை! எல்லாம் மொபைல் மூலம் பார்த்துக்க வேண்டி இருந்தது. அதில் எல்லா இ மெயில் இணைப்பும் கொடுத்துக்கலை, அப்புறமா அது வேறே தொந்திரவா இருக்கும்! சும்மா மெயில் வந்துட்டே இருக்கும்! :)))))

      Delete
    8. அதிரா - ஓ அண்ணியும் அஞ்சாம் நெம்பரோ நெல்லைத்தமிழன்?.. - அது 'தண்ணி' அல்லவோ... (அண்ணன் மனைவி அண்ணி, தம்பி மனைவி?). இல்லை எனக்கு மட்டும்தான் நாட்கள் கூடுகிறது, உங்களுக்குக் கூடவில்லையோ?

      Delete
    9. மிக்க நன்றி கீசா மேடம். //நீங்கள் விரும்பும் இடத்தில்// - அது எது என்பதில்தான் ஒரே குழப்பம். வாழ்க்கை அதை இன்னும் கோடி காண்பிக்கவில்லை. இப்போ பசங்களுக்கு எது சரி, எது வசதி என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது.

      Delete
    10. ஓ நெல்லை விஷஸ் சொல்லிடுங்க....தம்பி உங்க ஹஸ்பண்டுக்கு!!! ஆரோக்கியமாக மகிழ்வுடன் வாழ்ந்திடவும் எங்கள் பிரார்த்தனைகள்...

      ஆ! இது ஆரு அதிரடி அண்ணினு சொல்றது....அதிரடி நெல்லையை விட ........ஹிஹிஹி

      கீதா

      Delete
    11. நெல்லைத்தமிழன் நினைச்சேன்ன் தண்ணிக்கதை வருமென:)... நீங்க வேணுமெண்டால் தண்ணிக்கு ஹஸ்பண்டா இருங்கோ:).. ஆனா அவ எங்களுக்கு அண்ணிதான்:).. ஹா ஹா ஹா.

      Delete
  10. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிப்பாடுங்கள் குறைஏதும் இருக்காது நான் ஒரு முறை கூறி இருக்கிறேன் என் எச் எம் ரைட்டர் நன்கு வேலை செய்கிறதுஎன்று கலப்பையைக்கட்டிக் கொண்டு அழவேண்டுமா, என் எச் எம் ரைட்டர் இலவசம் காசு செலவில்லை

    ReplyDelete
    Replies
    1. ஜிஎம்பி ஐயா, ஏற்கெனவே ஒரு முறை உங்களுக்கோ அல்லது யாருக்கோ, என் எச் எம் ரைட்டரை என்னோட ஆன்டி வைரஸ் ஒத்துக்கலை, அந்தத் தளத்துக்கே செல்ல விடலை என்று கூறி இருந்தேன், நீங்க பார்க்கலை போல! இ கலப்பையும் இலவசம் தான்! இந்தக் கணினி மூலம் தட்டச்சுவதில் பிரச்னை இல்லை. எல்லோருமே இ கலப்பை எதிர்ப்பாளர்கள் போல! :)))))

      Delete
  11. First... Welcome home Ne.tha.
    கீதா மா. இதே உற்சாக்த்தோடு இன்னும் பல வைர வைடூரியங்கள், வஸ்திர கலாக்கள்
    பெற்று நீடூழி வாழணும் மாமாவும் நீங்களும்.

    அனைவரையும் அணைத்துச் செல்லும் இந்த அரிய குணம் எல்லோருக்கும் வாய்க்காது.
    அரங்கன் அருள் சூழ்ந்து நின்று காப்பாற்றுவான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி. அரங்கன் அருள் இல்லை எனில் நாமெல்லாம் எங்கே!

      Delete
    2. நான் கேட்கணும்னு நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்கு சந்திரகலா சூர்யகலா இனிப்புகள் தெரியும். இது என்ன புதுசா 'வஸ்திரகலா'?

      Delete
    3. ஹாஹாஹா, நெ.த. உங்க மனைவி ரொம்பவே அப்பாவி போல! வஸ்த்ரகலா என்பது ஒரு பட்டுச்சேலை. விலை உயர்ந்தது சுமார் பத்து வருஷங்கள் முன்னர் அது தான்பிரபலம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போலேருந்து சொல்லியும் இன்னும் யாரும் வாங்கிக் கொடுக்கலை பாருங்க! என்ன ஒரு 50,000/-க்குள் தான் இருக்கும். :)))))))))

      Delete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள். கோவிந்தன் அருளட்டும் எப்போதும்.

    குறையொன்றுமில்லை என்று சொல்பவர்கள் குறைவு நாட்டில். இருந்தாலும் நீங்கள் கணினியை இவ்வளவு குறை சொல்லியிருக்கக்கூடாது. அதுவும் இந்தக்காலத்தில்கூட, ஈ-கலப்பை, ஊ- கலப்பை என்று வைத்துக்கொண்டு ஏதோ உழுதுகொண்டுதானே இருக்கிறது.. உங்கள்மீது இன்னின்ன குறை என்று என்னிக்காவது யாரிடமாவது அது வாயைத் திறந்திருக்கிறதா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏகாந்தன். இ கலப்பை மீது ஏன் எல்லோருக்கும் இத்தனை கோபம்! அது சரிதான், அது ஒரு நாளும் என்னைக் குற்றம் சொன்னதில்லை! :))))))

      Delete
  13. அட பிறந்த நாள் ஆ...

    எனது வாழ்த்துக்களும்..அம்மா...என்றும் அரங்கன் துணை இருக்கட்டும்..


    கணிணி க்கு எனக்கு network not found ன்னு அடிக்கடி வரும்..you tube பார்த்து ரெகவர் பண்ணுவேன்..

    அது மாதரி இங்க பிரச்சனைக்கு வீடியோ எதுவும் இருக்கான்னு பார்த்து சரி பண்ணுங்க..

    ReplyDelete
  14. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிகிமா. இப்போல்லாம் ரொம்ப பிசி போல!:)

      Delete
  15. ////இன்னிக்கு என்னோட பிறந்த நாளைத் தொண்டர்களும், குண்டர்களும் அமோகமாக் கொண்டாடுவதை ///இதில குண்டர் என ஸ்ரீராமையோ சொல்றீங்க கீசாக்கா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவரை அபூடி எல்லாம் ஜொள்ளப்புடாதாக்கும்:)) பிறகு கீசாக்காவைத்தேடி சுப்புக்குட்டி வரும்:)).

    ரெண்டாம் தடவையாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    என் பரிசு வந்து கொண்டிருக்கு.. கிடைச்சதும் ஜொள்ளி அனுப்பிடுங்கோ:))

    ReplyDelete
    Replies
    1. // இதில குண்டர் என ஸ்ரீராமையோ சொல்றீங்க கீசாக்கா?:) //

      எதிர்பார்த்தேன்!!!! அதிரா கேட்கும் முன் நானே கேட்டுடணும்னு நினைச்சேன். சரி சொசெசூ வேணாம்னு விட்டேன்.

      :))

      Delete
    2. அதிலே பாருங்க அதிரடி, நான் இணையத்துக்கு வந்தப்போ இந்த இணைய உலகில் ஈடு, இணையற்ற ஒரே மாபெரும் தலைவியாக இருந்தேனா! அப்போ எனக்குத் தொண்டர்கள் பலரும் இருந்ததோடு அல்லாமல் எதிரிகளை நசுக்க, குண்டர் படையும் இருந்தது. அதுக்குத் தலைவராகத் தக்குடு என்பவர் இருந்தார். இந்தத் தக்குடுவோட அண்ணன் அம்பி என்பவருக்கும் எனக்கும் ஏழாம்பொருத்தம்! அவர் டாம் எனில் நான் ஜெரி! ஹிஹிஹி, ஆகையால் தம்பியையே குண்டர் படைத் தலைவர் ஆக்கினேன். உபிச எல்லாம் இருந்தாங்க! இப்போப் பாருங்க அவங்க யாருமே இருக்கும் இடம் தெரியலை! ( அப்போ என் பிறந்த நாளுக்குப் போஸ்டர் எல்லாம் ஒட்டுவாங்க. பல்லி மிட்டாய் வாங்கி விநியோகம் செய்வாங்க! முப்பெரும் விழா நடக்கும்! ம்ம்ம்ம்ம் இப்போ அதை எல்லாம் நினைச்சுப் பார்த்துக்கறதோடு சரி!

      Delete
    3. உங்க பரிசா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எதுவும் வந்து சேரலை அதிரடி, உடனடியாக அனுப்பி வைக்கவும்.:))

      Delete
    4. ஶ்ரீராம் ஹிஹிஹி, குண்டர் படைனு உங்களைச் சொல்லலை! :)))))

      Delete
    5. அதிரா கீசா வுக்கு சுப்புக் குட்டி எல்லாம் ஜுஜுபி யாக்கும்!!! ஹா ஹா ஹா ஹா ஹா அதோடயே அவங்க குடும்பமே நடத்தி அதோட பேரன் கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் பேத்தி எல்லாம் கூட வளர்த்து ஆளாக்கிடுவாங்களாக்கும்...ஹா ஹா

      கீதா

      Delete
    6. //எதிர்பார்த்தேன்!!!! அதிரா கேட்கும் முன் நானே கேட்டுடணும்னு நினைச்சேன். சரி சொசெசூ வேணாம்னு விட்டேன்.//

      ஹா ஹா ஹா டெலிபதி நல்லாத்தான் வேலை செய்து:))...

      //சொசெசூ //

      ஹா ஹா ஹா நாங்க விட்டாலும் ந.பி.ச விடாது பாருங்கோ .. அது சூனியம் வச்சே தீரும் ஹா ஹா ஹா:))

      Delete
    7. ///பல்லி மிட்டாய் வாங்கி விநியோகம் செய்வாங்க! முப்பெரும் விழா நடக்கும்! ம்ம்ம்ம்ம் இப்போ அதை எல்லாம் நினைச்சுப் பார்த்துக்கறதோடு சரி!///

      முதுமை.. கடந்த கால நினைவில வாழுமாமே கீசாக்கா:)) ஹையோ மீ நியூயோர்க்குக்கே ஓடிடுறேன்[கில்லர்ஜியின் நியோ:)].. அங்குதான் உண்ணாவிரதத்தில ஃபிரீஈஈஈஈஈய பிர்ராஆஆஆஆணி குடுக்கினம்:))

      Delete
    8. கீசாக்கா இதிலிருக்கும் வைரம் வைடூரியம் பவழம்:) அத்தனையும் உங்களுக்கே.... கவனம் பார்த்து கையில கடிச்சிடாமல் பிடுங்கி எடுங்கோ:))

      https://i.pinimg.com/736x/ba/d3/b8/bad3b876b84a0d302de0d65c9b2cd201--snake-jewelry-jewelry-box.jpg

      Delete
    9. அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    10. அக்காவ் அடுத்த வருஷம் பெர்த்டேவ உலகம்பூராவும் கொண்டாடிடுவோம் .ஐரோப்பிய ஏரியாவை நான் பொறுப்பெடுத்துக்கறேன் .இப்போ தேதி தெரிஞ்சிடுச்சு .

      Delete
    11. வாங்க ஏஞ்சல், வாங்க! ஐரோப்பா முழுசுக்கும் பொறுப்பா? சரி, சரி, எல்லாப் பரிசுகளையும் இங்கே ஶ்ரீரங்கத்தில் எங்க வீட்டு மொட்டை மாடியிலேயே போட்டுடுங்க! ஶ்ரீராம் வீட்டில் எல்லாம் வேண்டாம். ஏற்கெனவே அவர் கிட்டே அதிரடி நிறையக் கொடுத்து வைச்சிருக்காங்க! :))))

      Delete
  16. ஆஹா தானைத் தலைவினு சொன்னது சரியாத்தான் இருக்கு!!!! தொண்டர் குண்டர் எல்லாம்..ஹா ஹா ஹா...தக்குடு அம்பி பத்தி முன்னரே நீங்க சொன்னதும் நினைவிருக்கு....ஆனா கு ப த நு தெரியலை...பரவால்ல அக்கா இப்பக் கூட நீங்க தான் தானைத் தலைவி!!!

    பரிசு அனுப்பியாச்சு...வந்துருச்சானு சொல்லுங்க..!!!

    அக்காவ் எல்லா நாளும் பொறந்த நாள் தானே!! அதனால இன்னிக்கும் வாழ்த்துகள்!

    நானும் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடும் பழக்கமே இல்லைக்கா......மறந்தும் போகும் தேதி கூட.....அதுவும் இப்பல்லாம் அப்ளிக்கெஷன் ஃபில் பண்ணும் வாய்ப்பும் இல்லையே...அது பண்ணும் சூழல் வரை தேதி நினைவிருக்கணுமே...இப்ப சுத்தம்..மத்தவங்களுடைய தேதியும் நினைவில் இருப்பதில்லை...என் கஸின்ஸிடமிருந்து அவங்க பி நா. க நா, அவங்க குட்டிஸ் பி நா எல்லாத்துக்கும் நான் திட்டு வாங்குவேன்...ஹா ஹா ஹா ஹா...சிலர் என்ன பண்ணுவாங்கனா...குட்டீஸோஸ தேதிய கூட எனக்கு அனுப்பி வைப்பாங்க... அட்வான்ச் விஷஸ் அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்னு சொல்லிட்டு கரெக்டா அந்த நாள் மறந்தே போகும்...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, அதெல்லாம் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் நினைவில் வைச்சுப்பேன். கரெக்டா வாழ்த்துச் சொல்லிடுவேன். :))))

      Delete
    2. கீதா ரங்கன் -அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அஅரவணைப்பாக பள்ளியானே... துப்புடையாரை பாசுரம் எனக்கு மிகவும் பிடித்தது. வணங்குகிறேன்.

      Delete

  17. கொஞ்சம் லேட்டானாலும் வந்திட்டேன் விஷ் செய்ய .
    பிலேட்டட் பெர்த்டே விஷஸ் கீதாக்கா .
    கைகட்ட பிரிச்சி இப்போ கொஞ்சம் கொஞ்சமா டைப்பிங் செய்றேன் .
    இந்தாங்க லட்டூஸ் உங்களுக்கு

    https://i8.fnp.com/images/pr/m/tray-full-of-kesariya-motichoor-ladoo.jpg

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், வாங்க, ஹிஹிஹி, லட்டு எனக்குப் பிடிச்ச தின்பண்டம். அதோடு எங்க குட்டிக் குஞ்சுலு, பட்டுக் குஞ்சுலுவை எங்க பையர் "லட்டு" என்றே கூப்பிடுவார். ஆகவே பிடிக்கிறதுக்குக் கேட்கணுமா? :)))) நன்றி.

      Delete
  18. அக்கா என் பரிசு லட்டு பெட்டி கிடைச்சுதா ?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, மோதி சூர் லட்டு! நிறையச் சாப்பிட்டிருக்கேன். கல்கத்தாவில் ரொம்பவே பிரபலம். நம்ம ரங்க்ஸ் அங்கே வேலை விஷயமாப் போகும்போதெல்லாம் கல்கத்தா சேலைகளொடு இதையும் வாங்கி வந்துடுவார். :))))

      Delete