எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 10, 2018

ஆடு பாம்பே!

ராஜஸ்தானிலும் குஜராத்திலும் நாங்களும் சுப்புக்குட்டிகளோடு குடித்தனம் நடத்தினோம். (நாங்க வைச்சச் செல்லப் பெயர் சுப்புக்குட்டி)  முருகனுக்குப் பிடித்தவராச்சே! அதான் சுப்புக்குட்டி!  எங்க குழந்தைங்களுக்கு விளையாட பொம்மையே வாங்கிக் கொடுத்தது இல்லை. இவங்க தான் விளையாட்டுக் காட்டுவாங்க. போதாதுக்கு எலிகள்!

பழகிப் போச்சு! சென்னையில் அம்பத்தூர் வீட்டிலும் வித விதமாய் வரும். வாழை இலை நறுக்கப் போனால் பச்சைக்கலரில் தொங்கும். வாழை இலை சுருட்டிட்டு இருக்குனு தொடப் போனால் தலையைத் தூக்கும். அப்பாடா! நீயானு ஓட்டமா ஓடி வருவேன். தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும் ட்யூப் மாதிரிப் பழுப்பு நிறத்திலே சுருட்டிக் கொண்டு கிடக்கும்ங்க! ஒரு தரம் கவனமில்லாமல் தூக்கப் போயிட்டேன். வேலை செய்யும் பெண் அலறவே என்னடா இதுனு முழித்துக் கொண்டேன். இம்மாதிரி நிறைய இருக்கு. இப்போதான் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சுவாரசியம் இன்றிக் கழிகிறது! :)''


ம்ம்ம்ம்ம், அம்பத்தூரில் இருந்தோம். அங்கே! இப்போவும் உண்டு. எங்க வீட்டுக் கொல்லைப் பக்கம் பெரிய புற்றே இருந்தது. பின்னால் வீடு கட்டினவங்க அதை இடிச்சுட்டாங்க! அதுங்க அப்புறமா எங்கே போகும்?   வாழ்வாதாரம் இல்லையே! போராட்டமா பண்ணுங்க? பாவம், இல்லையோ! சமையலறைகுக் கூடச் சில, பல சமயம் வரும். மழை நீரோடு கலந்து வீட்டுக்குள்ளே வந்திருக்கு. அதெல்லாம் நம்ம ஹீரோ, போடா, கண்ணு, முத்துனு சொல்லிச் செல்லமா வெளியே அனுப்புவார். \  தோட்டம் இருந்தால் நிச்சயம் இருக்கும். சட்டை உரித்துப் போட்டிருப்பதைப் பார்த்தால் டிசைன் டிசைனாக அழகாய் இருக்கும். ஆனால் இவர் தொடக்கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லுவார். சட்டையிலும் விஷம் இருக்குமாம்.

கட்டுவிரியனும் அழகாய் இருக்கும். ஆனால் கடிச்சால் தான் உடலில் கட்டுக் கட்டாக ஏற்படும் என்றார்கள். கொம்பேறி மூக்கன் என்றொரு ரகம். அவர் கடிச்சுட்டுக் குதிச்சு மரத்தின் மேலே ஏறிடுவார். அவரைக் கொன்றால் உடனே எரிக்கணும். இல்லைனா அவர் யாரைக் கடிச்சாரோ அவர் இறந்துவிட்டால் அவர் உடல் எரியும் வரை இங்கே கொம்பேறி மூக்கனார் உயிரை விட மாட்டாராம். ஆகவே அவரைக் கண்டால் யாரையானும்  ,  கடிக்கும் முன்னே அடிச்சுக் கையோடு எரிச்சுடுவாங்க. ஒரு முறை எங்க வீட்டுப் பவளமல்லி மரத்தில் இருந்து பின்னர் பக்கத்துவீட்டுப் பையர்கள் பாம்பாட்டியை அழைத்து வந்து அதை அடிக்கவோ அல்லது பிடித்துப் போகவோ செய்தார்கள்.

இவங்களைப் பத்திப் படிச்சதோடு அல்லாமல் பெரியவங்க சொல்றதும் தான் நான் பகிர்ந்திருக்கேன்

 பின்னே இல்லையோ? என்னிக்கோ ஒண்ணைப் பார்த்தாத் தான் பயப்படணும். அவங்களும் எங்க கூடவே வந்து படுப்பாங்க ஜாம்நகர் வீட்டிலே! அப்போ என்ன பண்ணறது? :) ராத்திரி படுக்கைக்குப் பக்கத்திலே கந்தசஷ்டி கவசமும், கம்பும் தயாரா இருக்கும்.

ஜாம்நகரில் இருந்தப்போ ராத்திரி சாப்பாடு நேரம். பொண்ணு தொலைக்காட்சி பார்த்துட்டே துணியை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தாள். பெண் சாப்பிட்டு நம்ம ரங்க்ஸும் சாப்பிட்டுட்டார். பையரை அழைத்தேன். அவர் பள்ளிப் பாடங்களில் பிசி. வரேன் என்றாரா சரினு தட்டைப் போட்டுத் தண்ணீர் எடுத்து வைக்கலாம்னு பானையிலே இருந்து தண்ணீரை எடுக்கப் போனேன். பானைக்கு அடியில் வயர் மாதிரிச் சுருளாய் இருக்கவே பெண் தான் அயர்ன் பண்ணிவிட்டு அயர்ன் பாக்ஸிலிருந்த கறுப்பு+வெள்ளை வயர் இணைப்பை எடுத்திருக்கானு நினைச்சுட்டு ஏண்டி இதை எடுத்தே? எனக்கேட்டுக் கொண்டே கையை நீட்டினேனோ இல்லையோ! புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு நான் அலறிய அலறலில் அது பயந்துடுச்சு போல! எங்கேயோ போய் ஒளிஞ்சுக்கப் பார்த்தது! நல்ல வேளையா ரங்க்ஸ் வீட்டில் இருந்தாரா, பெரிய கம்பை எடுத்து அதை மெல்ல மெல்லத் தள்ளிக் கொண்டு வாசல் வரை போய்க் கொண்டு விட்டார். எனக்கு இருந்த பயத்தில் இருந்த இடத்திலிருந்து நகரக் கூடத் தோன்றவில்லை. பின்னர் சொன்னார் அது மட்டும் கடிச்சிருந்தால் கட்டுக்கட்டாக உடம்பில் தடங்கள் வரும் என்றும் உடனே இறந்து விடுவார்கள் என்றும் சொன்னார். ஏதோ அந்த பெரிய சுப்புக்குட்டியை எப்போவுமே சஷ்டி கவசம் மூலமா நினைச்சுக்கறதாலே இந்தச் சின்ன சுப்புக்குட்டியிடமிருந்து நம்மைக் காப்பாத்திட்டார் போல!

ஹிஹி, எல்லாமே பதிவாப் போட்டிருப்பதால் நினைவில் இருக்கு! அதோடு இவங்க இல்லாமல் இப்போக் கொஞ்சம் ரசிக்க ஏதும் இல்லாமல் இருக்கே!

ஜிஎம்பி சார் பாம்புகளோடான அனுபவம் பத்திக் கேட்டிருந்தார் ஒரு முறை நினைவில் இருந்தவரை சொல்லி இருக்கேன். இப்போல்லாம் பார்க்கிறதே இல்லை! :)))) திகிலூட்டும் அனுபவங்கள் எல்லாம் இருக்கு. ஆனால் சரியா நினைப்பில் வரலை!. 

65 comments:

 1. ஆத்தாடி சாதாரணமாக பாம்புகளோடு புழக்கத்தில் இருந்து இருக்கின்றீர்களே...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! குளியலறைக் குழாயில் சுற்றிக் கொண்டு போகாமல் அடம் பிடிச்சார் நல்லவர் ஒருத்தர்! அவரைப் போக வைக்கிரதுக்குள்ளே! :)

   Delete
 2. அடேங்கப்பா... நான் என்னவோ ஏதோன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்...

  அதுங்களோட சகஜமா இருந்தும் அதுங்களே பயப்படுற அளவுக்கு சத்தம் போட்டுருக்கீங்க!...

  ஆனாலும் ரொம்பவும் தைரியம் தான்!...

  சரி.. இவ்விடத்தில எப்படி!?..

  இவ் விடமா!...

  இல்லீங்க.. நீங்க எப்படி..ன்னேன்!..

  நானா.. காலுக்குக் கீழே கம்பளிப்பூச்சி போனாலும்.. சரி அதெல்லாம் இப்போ எதுக்கு!..
  ஆனாலும், நாகராஜா தலையை பயப்படாம தொடுவேன்!...

  (அதான் கோயிலுக்குக் கோயில் சிலை வெச்சிருக்காங்களே!..)

  சுப்புகுட்டிகளோட நடமாட்டத்தைக் குறைக்கிறதுக்கு எளிமையான வழிகள் எல்லாம் இருக்கு..
  ஆனா - அந்த வழி முறைகளுக்கு அவங்க பயப்படமாட்டாங்க..ங்கறது தான் விசேஷம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை சார், இவ் "விடம்" இல்லை! ஆனாலும் அதுங்களை இப்போல்லாம் பார்க்கக் கூட முடியலை! :) அம்பத்தூர் தெருக்களில் சர்வ சகஜமாக நடமாடுவாங்க! வண்டியில் அடிபட்டு இறந்தும் போவாங்க! அதான் வருத்தமா இருக்கும்.

   Delete
 3. கந்த சஷ்டியை ஓவராக சொல்கிறீர்களோ? அதுதான் பாம்புகள் உங்களை நோக்கிப் படை எடுக்கிறதோ?

  நான் தாளவாடியில் இருந்தபோது நாகப் பாம்புகள் சர்வ சாதாரணம். பள்ளியில் மலைப்பாம்புகளும் நாகப்பாம்புகளும் அவ்வப்போது விசிட் விடும் (அது மலை, காட்டுப் பகுதி என்பதால்). சென்னையில் எங்கள் வீட்டில் பெரும்பாலும் ஏகப்பட்ட பச்சைப் பாம்புகளும் அவ்வப்போது நாகப்பாம்பும் மாமரங்கள், பூச்செடிகள் இருந்தபோது இருக்கும். மழை பெய்தால், 10-15 பச்சைப் பாம்பு, ஓடிக்கொண்டே இருக்கும்.

  ஆனாலும், பாம்பென்றால் திகில்தான்.

  ReplyDelete
  Replies
  1. ///நெ.த.10 May, 2018
   கந்த சஷ்டியை ஓவராக சொல்கிறீர்களோ? //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்தக் கந்த சஷ்டி விஷயத்தில என்னைவிட அதிகம் சொன்னவர்கள் ஆருமே இருக்க முடியாது:). குழந்தையில் இருந்தே வெள்ளிக்கிழமை இரவெனில்.. எல்லோரும் சுவாமி அறையில வந்திருக்கோணும்.. ஆளுக்கொரு தேவாரம் சொல்லோணும்.. பின்பு அப்பா தேவாரம் சொல்லிப்போட்டு.. கந்தசஷ்டி பாடுவார்ர்... அதுமுடியும்வரை தூங்கீஈஈஈஈ விழுந்தூஊஊஊஉ விழுந்து இருப்போம்[அப்போது சிரிக்கக்கூடாது, அம்மா மடியிலும் சாயக்கூடாது ஸ்ரெயிட்டா இருக்கோணும் ஹையோ ஹையோ.:)].. முடிவில் திருநீறு பூசுவார்ர்..[அதில் ஒரு வரி வருமெல்லோ கடசியில்.. அவ்வரியில் நிறுத்திப் பூசி விடுவார்] அதன் பின்பே எழுந்து போக அனுமதி கர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதனால மனதில பாடமாகி.. பின்பு நாட்டுப் பிரச்சனை முழுக்க கையில் கந்தசஷ்டிப் புத்தகமும் மனதில் சொல்லிக்கொண்டுமே திரிவேன் எப்பவும்..

   Delete
  2. நானும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் சொல்கிறேன்!!

   Delete
  3. ஹா ஹா ஹா அப்போ நெ.த சொன்னது கரீட்டாத்தான் இருக்கும்போல:).. ஆனா கடவுளே எங்களிடத்தில் பாஆஆஆஆஆஆஆஆ....பூஊஊஊஊஊஊஉ கள் இல்லையாம்.. :)

   Delete
  4. நெ.த. சுமார் ஏழு, எட்டு வயசிலிருந்து தமிழ் நன்றாகப் படிக்க ஆரம்பிச்சதிலே இருந்து சொல்லிட்டு இருக்கேன் கந்த சஷ்டி கவசத்தை! அப்போலே இருந்து எனக்கு எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றி வருவது இந்தக் கவசம் தான்! இத்தனைக்கும் கல்யாணம் ஆகி வந்தவுடன் மாமியார் இதற்கு ஆட்சேபம் எல்லாம் தெரிவிச்சார். சொல்லக் கூடாதுனு 144 தடை உத்தரவு. மனசுக்குள்ளே சொல்லுவதை யாரால் தடுக்க முடியும்? கடைசியில் அவங்களையே சொல்ல வைச்சாச்சு! :)

   Delete
  5. அதிரடி, எங்க வீட்டிலேயும் சாயந்திரம் விளக்கு ஏற்றியதும் ஸ்லோகங்கள் சொல்லணும். அப்பாவோ, அம்மாவோ சொல்லித் தருவாங்க தெரியாதவற்றை மட்டும். மற்றவை நாங்களாகச் சொல்லுவோம்.

   Delete
  6. ஶ்ரீராம், நல்லது தானே!

   Delete
 4. நான் தான் கிராமத்தில் நிறையநாட்கள் வாழ்ந்ததால் பாம்பனுபவங்கள் உள்ளவன் என நினைத்திருந்தேன். நீங்கள் நகரத்தில் இருந்துகொண்டே நிறைய விளையாடியிருக்கிறீர்களே.

  பெரிசானவுடன் குட்டிக்குஞ்சுலுக்கு சொல்ல நிறைய கதைகள் இருக்கும் உங்களிடத்தில். ஆனால் அது உங்களுக்கு சொல்ல ஆரம்பிச்சுடுமே !

  ReplyDelete
  Replies
  1. ஏகாந்தன் சார், எங்க புக்ககத்திலும் நம்ம ரங்க்ஸ் சம்பந்தப்பட்ட பாம்புக்கதைகள் நிறையவே உண்டு. கிராமத்து வீட்டில் சமையலறை நிலையில் மேலே கை வைத்துக் கொண்டிருந்த ரங்க்ஸ் என்னமோ சில்க் மாதிரி இருக்கேனு அண்ணாந்து பார்த்தால் ஆறடி நீளத்துக்கு ஒருத்தர் பள்ளி கொண்டிருக்கார். அவங்க அம்மா சமைச்சுட்டு இருந்தவங்க அலற, நம்ம ரங்க்ஸ் ஒரு கம்பால் அவரைத் தூக்கி வெளியே விட்டார் என்பார்கள். அவரோட உண்மையான பெயரே பெரிய சுப்பு என்பதாலோ என்னமோ தெரியலை ஒண்ணும் செய்யலை. இம்மாதிரி நிறையச் சொல்லுவாங்க. நானும் கல்யாணம் ஆகிப் போன ஒரே வாரத்தில் தோட்டத்து வீட்டுக் கிணற்றில் பெரிய நல்லவர் விழுந்து இறந்திருந்ததைக் கண்டு திகைச்சுப் போயிருக்கேன். கோசூரில் அண்ணாவுடன் இருந்தப்போ இவங்களை நிறையப் பார்த்திருந்தாலும் வீட்டுக்கெல்லாம் வர மாட்டாங்க! எல்லாம் ராஜஸ்தான், குஜராத் போய்த் தான்!

   Delete
 5. Replies
  1. வருகைக்கு நன்றி நாகேந்திர பாரதி!

   Delete
 6. எனக்கும் பாம்புகளோடு நிறைய அனுபவம் உண்டு. சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். ஒருமுறை இரண்டு மூன்று பாம்புக்குட்டிகளை அவசரத்தில் கையில் கிடைத்த ஸ்பிரிட் ஊற்றி எரித்து விட்டார் நண்பர். மறுநாள் அந்த இடத்தில் ஏகப்பட்ட குட்டிகள். சாரைப்பாம்புக குட்டிகளாம்.

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ அருவருக்குதே:). இது கேள்விப்பட்டிருக்கிறேன்..

   Delete
  2. நீங்க எழுதினதும் படிச்சுப்பதில் கொடுத்திருக்கேஶ்ரீராம். சாரைப்பாம்புகள் குறித்த இந்தத் தகவலும் சொல்லுவார்கள். கேட்டிருக்கேன்.

   Delete
  3. என்ன தகவல் சாரைப் பாம்பு பற்றி?

   Delete
  4. சாரையும், நாகமும் ஒன்றுடன் ஒன்று இணையாது. அதோடுஒரு சாரையைக் கொன்றால் மறுநாளேக் குட்டிகள் தேடி வந்துவிடும் வாசனையை வைத்து என்பார்கள். இது நேரில் பார்த்தது எல்லாம் இல்லை. சொல்லிக் கேள்வி. பொதுவாக சாரைப்பாம்பு கடித்தால் விஷம் இல்லை என்றாலும் பயத்திலேயே பலருக்கும் உயிர் போய்விடும் என்பார்கள்.

   Delete
  5. என் பாட்டி வீட்டில் (அம்மா வழி) நாகநாத ஸ்வாமி தான் குலதெய்வம் என்பதால் பெயரில் "நாக" என்று வரும்படி வைப்பார்கள். நாகலட்சுமி, நாகசாமி இப்படி! வாழ்மும் பாம்பின் குட்டியை யாரோ இருப்பது தெரியாமல் அடுப்பை எரித்துக் கொன்று விட்டதாகவும் சொல்வார்கள்.

   Delete
 7. என் அக்கா விளக்கு வைத்த பிறகு பாம்பு என்று சொல்லக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதை அப்படியே கடைப்பிடிப்பார். "பின்ன என்ன சொல்றது?" என்று கேட்டபோது "கயிற என்று சொல்" என்று சொன்னார்கள் என்று இரவு பாடம் படிக்கும் பொது "கயிறுகளில் பலவகை உண்டு. நாக கயிறு, கட்டுவிரியக் கயிறு.." என்று படிப்பார்!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) இரவில் பாம்பு வந்திருந்தா.. கயிறு கயிறு எனக் கத்தியிருப்பா.. நீங்களும் கயிறுதானே என விட்டிருப்பீங்க:))

   Delete
  2. ஆமாம், நாங்க பொதுவாக மாரியம்மன் குலதெய்வம் என்பதால் அவள் வருகை என்போம். அல்லது நல்லவர் வந்திருக்கார் என்போம். முன்னெல்லாம் போல இப்போதெல்லாம் கடைப்பிடிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

   Delete
 8. அடுக்கி வைத்திருந்த செங்கற்கள் நடுவே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நாகக்குட்டியை போட்டோ எடுத்து முக நூலிலும், துரத்தித் துரத்தி எடுத்த வீடியோவை எங்கள் தளத்திலும் பகிர்ந்திருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அனுமாரை விட வீரராக இருப்பார்போலும்:)

   Delete
  2. இந்த விடியோவும் முக நூலில் பகிர்ந்திருந்தேன்!

   Delete
  3. எங்களுக்கும் காட்டலாமெல்லோ:))

   Delete
  4. முகநூலில் பார்த்ததில்லை. ஆனால் எங்கள் ப்ளாகில் பார்த்திருக்கேன்.

   Delete
 9. ஒருமுறை எங்கள் மோட்டார் ரூமில் ஒரு பாம்பார் புகுந்துகொண்டு வெளியே வராமல் அடம் பிடிக்க, சாம்பிராணி வத்தியை ஏற்றி உள்ளே வைத்து, புகைமூட்டம் உண்டாக்கி அதை வெளியே வரவழைத்தேன். இதையும் முன்னர் பகிர்ந்திருந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ என்னா வீரம் என்னா வீரம்.. இது நண்பன் நஞ்சு குடிச்சதை விட மோசமாக இருக்கும் போல இருக்கே ஜாமீஈஈஈஈஈஈ ஹா ஹா ஹா...

   Delete
  2. ராஜஸ்தானில் தொட்டிமுற்றத்துத் தண்ணீர் போகும் வழியாகச் சமையலறைக்குள்ளேயே நுழைந்திருக்கார் ஒரு நல்லவர். சின்னக் குட்டி! அப்போத் தெரியாத்தனமா சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு ராணுவ வீரரை அழைக்க அவர் வந்து அதைப் பிடித்து அடித்துக் கொன்று விட்டார். ரொம்பக் கஷ்டமா இருக்கவே சுமார் ஒரு மாசம் வரை அதைப் புதைத்த இடத்தில் சந்தனம், குங்குமம் வைத்துப் பால் விட்டுக் கொண்டிருந்தேன். பெண்ணும் , பையரும் சிறு குழந்தைகள் அப்போ!

   Delete
 10. மஞ்சள் நிறத்திலும், கருப்பு நிறத்திலும், தங்க நிறத்திலும் மிக நீளமான பாம்புகளை மிக் அருகில் பார்த்திருக்கிறேன் - எங்கள் காம்பவுண்டில்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க எங்கயோ போயிட்டீங்க ஸ்ரீராம்ம்.. அதுசரி யூம்ம்ம்ம் பண்ணி பார்த்தனீங்களோ மிக அருகில்:) ஹா ஹா ஹா:).. இப்பவும் அப்படிப் பார்க்க முடியுமோ:)?...

   எனக்கொரு நாட்டார் பாடல் நினைவுக்கு வருது...

   “எட்ட்டு நாளாய்ச் செத்துக் கிடந்த சாரப்பாம்மை..
   எட்டி நின்று தொட்டுப் போட்டேன் சந்த மாமா”... ஹா ஹா ஹா..

   Delete
  2. ஓ... அதிரா கதை விடறேன்னு நினைச்சுட்டீங்க... புகை போட்ட அனுபவத்தைப் பதிவாகவே எழுதி இருந்தேன். அதே போல இந்த மஞ்சள், கருப்பு நிற பாம்புகளை படம் எடுப்பதற்குள் ஓடி விடுகின்றன. எனவே எடுக்கவில்லை. இந்த சீசனில் வந்தால் படம் எடுக்கிறேன், வெளியிடுகிறேன்!!! இந்த வெயிலுக்கு எல்லாம் இப்போதுதான் வெளிவரும்!

   Delete
  3. ஓ மை கடவுளே.. ஸ்ரீராமைக் காப்பாத்துங்கோ ஆண்டவரே:)) ஹா ஹா ஹா... வேணாம் நான் நம்புறேன்.. விபரீத செயல்களில் இறங்காதீங்கோ.. நிலைமை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது..

   Delete
  4. மஞ்சள் நிறம் வழலைப்பாம்பு என்பார்கள். அம்பத்தூர் வீட்டில் நிறையவே காண முடியும். இத்தனைக்கும் அங்கே சிறியாநங்கை, பெரியா நங்கை எல்லாமும் வளர்த்தோம்.

   Delete
  5. @அதிரா... எனக்கென்னவோ ஸ்ரீராம் சொல்வது நமக்கானது இல்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை அவர் வீட்டு எதிரிலுள்ள மரத்தடியில் ஒதுங்குவோரை பயமுறுத்துவதற்காக இருக்குமோ?

   @ஸ்ரீராம் - நீங்கள் சொல்வது சாதா விஷமில்லாப் பாம்புகளா இல்லை நல்ல பாம்பா?
   //இந்த சீசனில் வந்தால் படம் எடுக்கிறேன்// - பொதுவா பாம்புதானே படம் எடுக்கும். இங்கு நீங்கள் எடுக்கறேன் என்று சொல்லியிருக்கீங்க :-)

   Delete
 11. //இப்போதான் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சுவாரசியம் இன்றிக் கழிகிறது! :)''//


  அவ்வ்வ் :) என்ன ஒரு கவலை அக்காக்கு :)
  இந்த பா பூசை தவிர எல்லாத்தையும் சேர்த்துப்பேன் .என்னமோ ஒருபயம் .ஆனா ராமநாராயணன் படத்தில் பார்த்து கொஞ்சம் பயம் குறைஞ்சு :)
  பொங்கல் நேரத்தில் வீடு வீடா கொண்டுபோய் காட்டுவாங்க பாம்பாட்டிங்க .பாவமாயிருக்கும் .

  // அதெல்லாம் நம்ம ஹீரோ, போடா, கண்ணு, முத்துனு சொல்லிச் செல்லமா வெளியே அனுப்புவார். \ //

  ஹாஹா சூப்பர் .எங்கம்மா எலி காக்கா கிட்ட இப்படி பேசுவாங்க .ஆனா பாம்புங்ககிட்ட இப்படிஅன்பா பேசறது இப்போதான் கேள்விப்படறேன் .
  இப்போதைக்கு என் ப்ரெண்ட்ஸ் பைரவர்கள் புறாஸ் வாத்து குருவி பூனைஸ் எலி இவ்ளோதான் :)
  அக்கா யூ கன்டின்யூ :) படங்கள் ஏதும் எடுக்கலியா சுப்புக்குட்டி நினைவா ?

  ReplyDelete
  Replies
  1. அஞ்சூஊஊஊஊஊஊஊ அந்த ஜின்ஞரைக் கொஞ்சம் கீசாக்காவுக்கு குடுங்கோ.. அவ பால் எல்லாம் ஒழுங்கா குடுத்து குண்டுப்பையனாக்கி திருப்பித் தருவாஅ:)

   Delete
  2. அதிலே பாருங்க ஏஞ்சலின், அப்போல்லாம் நான் இம்புட்டுப் பெரிய எழுத்தாளியாவேன்னு எனக்கே தெரியாமல் போச்சு! அதான் படம் ஏதும் எடுக்கலை. கையிலே காமிரா வந்ததும் உடனேயே காடுகளை விட்டுக் கிளம்பியாச்சே! இங்கே ஒண்ணுமே கண்ணிலே படலை! நிறையத் தட்டாம்பூச்சிகள், பட்டுப்பூச்சிகள், வண்ணாத்திப் பூச்சிகள் வரும். படம் எடுக்க விடாது! சுத்திட்டே இருக்கும்! ஓட்டமா ஓடிடும். நான் பறவைகளோட எல்லாம் பேசுவேன். அதுங்க தான் திரும்பப் பேசாதுங்க! :))))

   Delete
 12. ///அதான் சுப்புக்குட்டி! எங்க குழந்தைங்களுக்கு விளையாட பொம்மையே வாங்கிக் கொடுத்தது இல்லை. இவங்க தான் விளையாட்டுக் காட்டுவாங்க. போதாதுக்கு எலிகள்!///

  என்ன கீசாக்கா இவ்ளோ சிம்பிளாச் சொல்லிக்கொண்டு போறீங்க.. ஏதோ நீங்க செய்த புண்ணியம் யாருக்கும் எதுவும் ஆகியிருக்கவில்லை...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹாஹா அதிரடி, நமக்கும் மேலே ஒருவனடா! நாலும் தெரிந்த தலைவனடா! எதுக்குப் பயப்படணும்? தலையிலே எழுதி இருப்பது தான் நடக்க வேண்டிய நேரத்திலே நடக்கும்! :))))

   Delete
 13. /// இம்மாதிரி நிறைய இருக்கு. இப்போதான் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சுவாரசியம் இன்றிக் கழிகிறது! :)''//

  ஹையோ ஹையோ.. அப்போ நான் அஞ்சுவுக்கு குடுத்த ஜின்ஞரை[பாஆஆஆஆம்புக்குட்டி] உங்களுக்கு அனுப்பச் சொல்லட்டோ?:).. நீங்க வளருங்கோ சுவாஆஆஆஆஆஆஆஆஆஆரஷ்யமா இருக்கும் ..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுங்க தானா வரணும். அதான் சுவாரசியம்!

   Delete
 14. ///கட்டுவிரியனும் அழகாய் இருக்கும். ஆனால் கடிச்சால் தான் உடலில் கட்டுக் கட்டாக ஏற்படும் என்றார்கள். கொம்பேறி மூக்கன் என்றொரு ரகம். //

  ஹையோ ஆண்டவா இப்பெயர்கள் நானும் அறிஞ்சிருக்கிறேன்.. பார்த்ததில்லை. இவை பொல்லாத விசப்பாம்புகளாமே.. கடிச்சால் உடனே மரணம் என்பார்கள்.. எனக்க்க்கு புழுக்களுக்கு மேல் கூசும் அருவருக்கும்.. ஆனா பாம்புக்கும் அப்படி எல்லாம் இல்லை ஆனா கை கால் ரைப் அடிக்கும் ஹையோ ஹையோ.. எங்கள் வளவுக்கும் வந்திருக்கு அது சாதாரண சாரைப்பாம்பு.. கோடரிப் பாம்பு.

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெஹெஹெ அதிரடியைப் பயமுறுத்தக் கடைசியா ஒரு வழி கிடைச்சுடுச்சே! ஜாலி, ஜாலி! இனிமே விட மாட்டோமுல்ல!

   Delete
  2. சாரைப் பாம்பும் மரம் ஏறும்

   Delete
 15. ஓ மை கடவுளே.. ஏதோ போன பிறவியில் செய்த புண்ணியம் நலமே காப்பாற்றப் பட்டிருக்கிறீங்க... எனக்கு இங்கு ஒரு சந்தோசம் என்ன தெரியுமோ.. ஸ்கொட்லாந்தில் பாம்புகளோ விசப் பூச்சிகளோ இல்லை.. தாங்.. வைரவா:)).

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா அதிரடி, உண்மையில் இம்மாதிரி சம்பவங்களே இறை நம்பிக்கையை மேலும் மேலும் ஆழமானதாக ஆக்குகிறது. எங்கோ ஒருவன் இருக்கிறான் என்பதும் நிச்சயம் ஆகிறது.

   Delete
 16. பாம்பு கதை படிக்க வரேன் கீதாக்கா...ஆஜர் வைச்சுட்டேன்...பாம்பு பிடிக்கும்...சரி எதுதான் பிடிக்காதுனு கேளுங்க..ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
 17. கீதாக்கா செம த்ரில்லிங்கான வாழ்க்கை...பாம்பார்களுடன். ரசித்தேன் பதிவை. எங்கள் ஊரில் இருந்தவரை நிறைய பாம்புகளுடன். குறிப்பாகா நல்லவரும், விரியனாரும் நிறைய. கட்டுவிரியன், எட்டடி விரியனார், என்று. அப்புறம் பச்சையும், சாரையும் நீர்க்கோலி எனப்படும் தண்ணீர் குட்டிகளும் கூடவே. விரியனார்கள் எல்லாம் போர்வையில் வந்து நம்முடன் படுப்பார்கள். கை தொட்டார் வழ வழ என்று இருக்கே என்று என் மாமி லைட்டைப் போடுங்கப்பா என்று சொல்லி லைட்டைப் போட்டால் எட்டடியார் சுகமாகப் படுத்துக் கொண்டிருந்தார். அப்படியே மாமியை அசையாமல் படுக்கச் சொல்லி நான் அவர் கால்மாட்டில் இருந்ததால் லைட் போட்டு இந்த வேலையைச் செய்தேன். போர்வையை எடுத்து அப்படியே மூடி வெளியில் கொண்டு விரித்து விட்டேன்...அவர் வயக்காட்டில் ஓடிப் போய்விட்டார். போஸ்ட் பாக்ஸில் சுருண்டு படுத்திருப்பார் நலல்வர். விறகு அடுப்பி ராத்திரி சாணி போட்டு மெழுகி இருந்தால் அந்த ஈரத்திற்கு வந்து படுத்துக் கொள்வார். விறகுகளுக்க்ஜிடையில் கண்டிப்பாக இருப்பார் அது போல தேங்காய் உரித்து குவித்திருக்கும் கதம்பையின் இடையிலும்...கலர் வித்தியாசமே தெரியாத அளவு இருப்பார்கள். குளம் ஆறு என்று நிறைய...அப்புறம் வெகு காலத்திற்குப் பிறகு பாண்டிச்சேரியில் ஒரே ஒரு முறை....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், மாமியார் வீட்டில் வெளியே வெந்நீர் அடுப்பை மூட்டும்போதும் சரி, உள்ளே சமையல் அடுப்பை மூட்டும்போதும் சரி பெரிய காடா விளக்கை ஏத்தி உள்ளே பார்த்துட்டுத் தான் மூட்டுவாங்க. அந்தக் கிராமங்களுக்கு எல்லாம் அப்போது மின்சாரம் கிடையாது. நான் கல்யாணம் ஆகிப் போய் ஏழு வருஷங்களுக்குப் பின்னர் எங்க பையர் பிறந்த வருஷம் தான் மின்சார இணைப்புக் கொடுத்தாங்க! ஆகவே காலையில் அடுப்பு மூட்டுவது என்பது தினசரி ஒரு த்ரில்லான அனுபவமா இருக்கும்.

   Delete
 18. என் கவலை எல்லாம் இந்தச் சரித்திரத்தை இந்த ராத்திரி வேளையில் படித்தேன் என்றீருக்கு. வாழ்க வளமுடன் கீதா. காக்க்க காக்க கதிர் வேல் காக்க.

  ReplyDelete
  Replies
  1. காக்க காக்க கனகவேல் காக்க என்றுதானே வந்திருக்கணும் வல்லிம்மா.....

   Delete
  2. ஹாஹாஹாஹா வல்லி, உங்களை பயமுறுத்திட்டேனா! எப்படி வந்தால் என்ன? கூப்பிடுவது அவன் காதில் விழுந்தால் போதுமே!

   Delete
 19. என் பையன் வெட்னரி சேரும் முன் கிடைக்குமோ கிடைக்காதோ என்று மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் ஜீவாலஜி சேர்ந்திருந்தான். அந்தக் கல்லூரியின் பின் பக்கம் காடும், தண்ணீரும் என்று அடர்ந்து இருக்குமாம். அக்காட்டிற்குள் மகனும் அவனுக்கு அப்போது பழக்கமான இரு பையன்களும் சென்றிருக்கிறார்கள். காட்டுத் தேளை கையில் எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டானாம் மகன். அதே போன்று பாம்பையும் பிடித்தானாம். குட்டிப் பாம்பை உள்ளங்கையில் வைத்துக் கொண்டானாம்....அப்பையன்கள் சொல்லி வியந்தார்கள். என் மகனும் வீட்டிற்கு வந்து அதைச் சொல்லிச் சொல்லி ஒரு எக்ஸைட்மென்டில் இருந்தான்...நான் அவனைப் பயமுறுத்தவில்லை என்றாலும் கவனமாக இருக்கச் சொன்னேன்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். பரிசோதனை என்றாலும் கவனம் தேவை தான். கொஞ்சம் அசந்தாலும் ஆபத்து! இது செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவற்றிற்கும் பொருந்தும்!

   Delete
 20. வித்தியாசமான அனுபவம்.

  ReplyDelete
 21. இதுவே திகிலாகத்தான் இருக்கு, இன்னும் இதை விட திகில் அனுபவங்களா? என்னால் சினிமாவிலேயே பாம்பை பார்க்க முடியாது.

  எங்கள் அப்பா ஏனாத்தூர் கல்லூரி ஆரம்பித்த புதிதில் அதில் மானேஜராக இரண்டு வருடங்கள் இருந்தார். அங்கிருக்கும் நூலகம் அப்போதுதான் கட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பாவுக்கு அங்கு தங்குவதற்கு சிறிய வீடு கொடுத்திருந்தார்கள். சுற்றிலும் வயற்காடு. எனவே நிறைய பாம்பார் வருகை தருவார்கள். நீங்கள் சொன்னது போல பாத்ரூமில் குழாயில் சுற்றிக் கொண்டிருப்பார். என் அம்மாவுக்கு தைரியம் அதிகம். அவர்தான் கையில் கம்போடு சென்று விருந்தினரை வெளியே அனுப்பி விட்டு வருவார்.

  ஒரு முறை நான் விடுமுறைக்கு வந்திருந்த பொழுது காலையில் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா," அங்க பார் பாம்பு" என்று மெல்லிய குரலில் கூறினார். தலையை தூக்கி பார்க்கிறேன், என் தலைக்கு மேல் மரத்தில் படமெடுத்துக் கொண்டிருந்தது ஒரு கரு நாகம்.
  ReplyDelete
  Replies
  1. எங்க அம்பத்தூர் வீட்டிலும் குளியலறைக்குழாயில் சுற்றிக்கொண்டு! அப்போத் தான் பெரிய பேத்தி வாஷிங் மெஷின் வேலையை முடிச்சிருந்தாள். நல்லவேளையா அவள் உள்ளே கூடத்துப்பக்கம் போய்விட்டாள். அப்புறமா நான் காவல் நிற்க, நம்ம ரங்க்ஸ் ஒரு கம்பால் தட்டித் தட்டி அதை எழுப்பி வெளியே அனுப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆச்சு!

   Delete
 22. என் கண்ணில் பட பாம்புகளுக்கு மோட்சம் கொடுத்திருக்கிறேன் ஆனாலும் சிலர் பாம்பிக் கொல்வது பாவம் என்கின்றனர் ஒரு முறை சாலையில் நடந்து போகும்போதுவழிநடுவே ஒரு நீள பாம்பு போகிரவர்கச்ள் எல்லோரும்வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போதுஒருவர் வந்து அதன்வாலைப்பிடித்து ஒரு சுழற்று சுழற்றி வீசி எறிந்தார் என்ன ஆயிற்றோ தெரியாது என்ன ஆயிருக்கும் எங்கோ போய் விழுந்து செத்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. நாங்க கூடியவரை அடிப்பதில்லை. உள்ளே வந்து விட்டாலும் நம்மவரே வெளியே அனுப்பி விடுவார். வேறே யாரானும் வெளி மனிதர்கள் வந்தாலோ அல்லது அக்கம்பக்கம் வீட்டுச் சிறு பையர்கள் வந்தாலோ முதல்லே அடிச்சுட்டுத் தான் வேறே வேலையே பார்ப்பாங்க! இப்போத் தான் எதுவுமே இல்லையே! :)))))

   Delete