இன்று அகில உலக அன்னையர் தினம் என கூகிள் சொல்கிறது. எங்கு பார்த்தாலும் அன்னையர் தின வாழ்த்துகள். சிறப்புச் செய்திகள். எல்லா தினங்களையும் போலவே இன்றைய தினமும் இப்படியான செய்திகளில் ஆரம்பித்து முடிந்து நாளை மற்றொரு நாளாய்ப் பிறந்துவிடும். பின்னர் அடுத்த அன்னையர் தினத்தில் தான் இந்த தினத்தை நினைப்போம். இல்லையா? எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை. ஆனால் தாய் என்பதை மறக்க இயலுமா?
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்புத் தான். அதனால் தான் இப்போதைய பெண்கள் வலியில்லாப் பிரசவமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ? தெரியலை! போகட்டும். பிரசவம் அவங்க சொந்த விஷயம் என்பதால் நாம் அவங்க விருப்பத்திலே தலையிட முடியாது. ஆனால் குழந்தை வளர்ப்பு? அது சமூகத்தைப் பாதிக்காமல் இருக்கணுமே! இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பில் கவனம் மிகத் தேவையாய் இருக்கிறது. ஏனெனில் சுற்றுச் சூழல் மாசு என்பது இயற்கையில் மட்டுமில்லாமல் மனித மனங்களில் கூட மாசு அடைந்திருக்கிறது. பெண்கள் எங்கே பார்த்தாலும் தவறான உறவுகளில் ஈடுபடுதல், திருமணம் ஆனாலும் வேறு ஆண்களின் வசப்படுதல், பெண்களைத் துன்புறுத்தி இவற்றில் இன்பம் காணும் ஆண்கள், கட்டாயப்படுத்தப்படும் இளம் சிறுமிகள், உயிர் இழப்புகள், பலரால் பாலியல் உறவில் கட்டாயமாய் ஈடுபடுத்தப்படும் இளம்பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என தினசரிகளில் தினம் ஒன்றாகச் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?
அடிப்படைக் கலாசாரமே விரிசல் கண்டு அஸ்திவாரமே ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது தான். நேற்றைய தினசரியில் ஒரு செய்தி படித்தேன். ஒரு எஃப்.எம். ரேடியோவின் ரேடியோ ஜாக்கி ஒருவர். 35 இல் இருந்து 40 வயதுக்குள்ளாக. திருமணம் ஆகிக் குழந்தையும் பெற்றவர். இவர் ரேடியோவில் பேசும்போது இவர் குரலில் தெரிந்த கவர்ச்சியான இனிமையில் மயங்கிய ஒரு சிறுமி (16 வயதுக்கு உட்பட்டவள்) பள்ளி மாணவி, தொடர்ந்து இவரிடம் பேசி வந்திருக்கிறாள். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பெண் பின்னர் திடீரென ஒரு நாள் அந்த அலுவலகத்துக்கே வந்துவிட்டாள். வந்தவள் அந்த ரேடியோ ஜாக்கியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறாள். அந்தப் பெண்ணோ 16 வயதுக்கு உட்பட்டவள். அதோடு ரேடியோ ஜாக்கியோ திருமணம் ஆனவர். அவர் தொழிலை அவர் செய்திருக்கிறார். நிலைமை விபரீதம் ஆகத் தன் மனைவியையும், குழந்தையையும் வீட்டிலிருந்து வரவழைத்து அந்தப் பெண்ணிடம் காட்டி தான் திருமணம் ஆனவன் என்றும் சொல்லி இருக்கிறார்.
அந்தப் பெண் அதற்கும் அசையாமல் போகவே அந்த அலுவலகத்தினர் மனநல மருத்துவர் ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணிடம் பேசியதில் வீட்டில் தாய் இல்லாமல் வளர்ந்த அந்தப் பெண்ணுக்குத் தந்தையின் போக்குப் பிடிக்காமல் இப்படி ஆறுதல் தேடிக் கொண்டதாகத் தெரிய வந்திருக்கிறது. பின்னர் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுக்குப் புரிய வைத்து வீட்டில் கொண்டு சேர்த்திருக்கின்றனர். இதனால் ரேடியோ ஜாக்கியின் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை என்றாலும் அடிப்படை சரியில்லை என்பது தெரிகிறதல்லவா? உணவுப் பழக்கத்திலிருந்து எல்லாவற்றிலும் இப்போது மாறி வருகிறது. மெல்ல, மெல்லப் பாரம்பரிய உணவுகள் மாறி வருகின்றன. கிராமங்களில் கூட கலாசாரம் மாறித் தான் வருகிறது. மேல்நாட்டுக் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தான் நாகரிகம் என்னும் போக்கும், எண்ணமும் பரவி வருகிறது.
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப் படுவது, திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் தவறான உறவை நியாயப்படுத்துதல், பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் திருமணம் ஆன பெண்கள் கூட ஆண்களிடம் மயங்குவார்கள் எனக் காட்டுவது, பல்வேறு வகையான முரண்பாடுகள் உள்ள சமூகம் என இருப்பதால் பெண்கள் தங்களுக்குத் தோன்றியதைத் தாங்கள் செய்யலாம் எனநினைக்கின்றனரோ! அதோடு பொருளாதார சுதந்திரம் என்பதும் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். விதிவிலக்கான பெண்கள் இருக்கலாம். ஆனாலும் பெண்கள் தங்களுக்குத் தோன்றியபடி எல்லாம் நடந்து கொண்டால் அது நிச்சயம் சமூகத்தைப் பாதிக்கும்.
ஆகவே குழந்தை வளர்ப்பில் கண்டிப்புக் காட்டுங்கள் அன்னையரே! உங்கள் விருப்பத்தைக் குழந்தையிடம் திணிக்காத அதே சமயம் குழந்தையின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள். உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள். நம் நாட்டுக் கலாசாரம், உணவு முறை, பின்னணி, உறவு முறை ஆகியவற்றை இயன்ற அளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். மேல்நாட்டு உணவு முறை தேவை இல்லை என்றே சொல்வேன். ஆனால் வேறு வழி இல்லை எனில் குழந்தைக்கு அது செய்யும் நற்செயல்களுக்கு ஒரு பரிசாக என்றோ ஓர் நாள் வாங்கிக் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும். அதிகமான சீஸ் நிறைந்த பிட்சாவை இந்த சீதோஷ்ணத்தில் நம் குழந்தைகளாலோ, நம்மாலோ செரிக்க இயலாது. உடல் நலத்திற்கும் கேடு. சிறு வயதிலேயே குண்டாகிவிடுவார்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் செல்லமே அவர்களுக்கு முக்கிய எதிரி என்பதை மறவாதீர்கள். நம் நாட்டு உணவு முறை, உடைமுறை, நடைமுறை ஆகியவற்றைப் பழக்கப்படுத்துங்கள். நல்லதொரு குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை வளர வாழ்த்துகள்.
எல்லாவற்றிலும் இந்தியனாகவே இருப்போம். மறைந்து வரும் கலாசாரத்தை மீட்டெடுப்போம்.
அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
மீள் பதிவு. 2014 ஆம் வருஷம் பகிர்ந்தது!

அருமையாக சொல்லி இருக்கின்றீர் ஒவ்வொரு வரிகளிலும் 100% உடன்படுகிறேன்.
ReplyDeleteஇனி வரும் காலங்களில் சமூகம் எந்தநிலைக்கு போகும் என்று ஓரளவு கணிக்க முடிகிறது.
அந்தக்கணிப்பு மிகவும் கீழிறங்கி, கேவலநிலைக்கு போவதுதான் வேதனை.
இன்றைய குழந்தைகளை கட்டுப்படுத்துவது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இத்தனைக்கும் ஒரு குழந்தைதான்.
நிச்சயமாக இனி வரும் காலம் குழந்தை பெறாமல் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்வோம் என்ற முடிவுக்கு வருவது உறுதி.
மறுபுறம் இருபாலருக்கும் மலட்டுத்தனம் பெருகி வருவது வேறு விடயம்.
அன்னையர் தினம் ஒவ்வொரு நாட்டுக்கும் தேதி மாறுபடுகிறது.
இன்று மட்டும் வாழ்த்து சொல்வதில் பலனில்லை. வயதான அன்னையை தினம் பராமரித்தல் அவசியம்.
முந்தைய கருத்தை நீக்கி விடவும்.
ஆமாம், ஒரு குழந்தைக்கே பாடு! நானெல்லாம் இருபது வயது முடியாத நிலையில் குழந்தையை வளர்த்ததோடு அல்லாமல் மாமியார், மாமனார், மைத்துனர்கள், நாத்தனார் எல்லோருக்கும் சிசுருஷையும் பண்ண வேண்டி இருந்தது. அதைச் சொன்னால் இப்போதைய இளைஞர்கள் உனக்குப் பொறாமை என்பார்கள் என்னிடம்! :)))) என்னோட கருத்தே ஒரு குழந்தையைக் கூடச் சமாளிக்க முடியவில்லையே என்பதே! இத்தனைக்கும் அப்போதெல்லாம் மிக்சியோ, கிரைண்டரோ இல்லை. எல்லாம் கையால் அரைக்கவேண்டும். கிராமத்தில் விறகு அடுப்புச் சமையல்! :)))) மின்சாரம் இல்லை!
Deleteமலட்டுத் தனம் பெருகி வருவது சாப்பாடு முறையால் என நினைக்கிறேன். அதோடு பல பெண்களுக்கும் இப்போதெல்லாம் முப்பது வயது ஆகிவிடுகிறது திருமணத்தின்போது! பல பெண்களுக்கும் அந்த வயதிலேயே குழந்தை பெற்று வளர்க்கும் உடல் வலிமை இல்லாமல் போய் விடுகிறது!
Delete//மலட்டுத் தனம் பெருகி வருவது சாப்பாடு முறையால்//
Deleteஆமா அக்கா அதிகமான கோதுமை//refined oil preserved foods பல பிரச்சினைகளை பெண்களுக்கு உண்டாக்குது அது புரியாம நிறைய சேர்க்கிறாங்க .
நம்ம அரிசி உணவே போதும் ,ஒருகாலத்தில் இதுபற்றி நிறைய எழுதினேன் மறைமுகமா திட்டு விழ நிறுத்திட்டேன் :)
உண்மையை அறிய யாரும் விரும்புவதில்லை! நானும் சில விஷயங்களை எழுதிட்டு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். :)
Deleteவாழ்த்துகள் அம்மா...
ReplyDeleteபல மாதங்கள்/வருடங்கள் கழித்து வந்தமைக்கும், வாழ்த்துக்கும் நன்றி டிடி.
Deleteநியாயமான கருத்துகளுடன் நிறைவான பதிவு...
ReplyDeleteஅன்னையர் தின நல்வாழ்த்துகள்...
நன்றி சகோதரரே!
Deleteநல்லா எழுதியிருக்கீங்க. 'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்ற வரிகளையும் கடன் வாங்கியிருக்கீங்க.
ReplyDeleteகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்குதான் மிக அதிகம்.
வாங்க நெ.த. கடனெல்லாம் வாங்கலை! உண்மையில் யோசித்துத் தான் சொல்கிறேன். எல்லாப் பெண்களுக்குமே அன்னை என்னும் பதவி கிடைத்து விடுகிறதா? தாய் தான் குழந்தையின் குணநலன்கள் அமைய முக்கியக் காரணம் என்று நானும் நினைக்கிறேன்.
Deleteஅன்னையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் கோமதி அரசு!
Deleteஅன்னையராய் ஆவதற்கு என்பதை விட அன்னையராய் விளங்க என்றிருக்க வேண்டுமோ
ReplyDeleteதிருமணம் ஆகாமலேயே அன்னையாய் விளங்கலாம். ஆனால் அன்னையராக ஆவது என்பது நம் கைகளில் இல்லை. எனக்குத் தெரிந்து பல திருமணம் ஆன பெண்களுக்கு அன்னையராக ஆகும் பாக்கியம் கிடைக்காமலேயே போய் இருக்கிறது!
Deleteதிருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்று அன்னையாகலாம் ஆனால் அன்னையாய் விளங்குவதென்பது வேறு
Deleteஎனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை. //
ReplyDeleteஅக்கா ஹைஃபைவ் தட்டுங்க! எனக்கும் ஆர்வம் இல்லை என்னைப் பொருத்தவரை தினமுமே அன்னையர் தினம்.
கீதா
வாங்க தி/கீதா, பெயர் ஒற்றுமையின் காரணமோ என்னமோ! ஒத்துப் போகிறது! :)))))
Delete//எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை. // meeeee tooo:)
Deleteஎல்லா நாளும் அன்னையரை கொண்டாடணும் அதென்ன ஒரு நாள் மட்டும் .ஆக்சுவலா இதை ஆரம்பிச்சு வைச்சவரே இதை கொண்டாடுவதை நிறுத்தவும் போராட்டம் நடத்தினார் அமெரிக்காவில் .அன்னா ஜார்விஸ் ஆரம்பிச்சு அப்புறம் இது பிஸ்னஸ் போல மாறியதால் அவங்களுக்கே பிடிக்கலை ஒரு நாள் மட்டும் கிஃப்ட்ஸ் பூக்கள்னு கமர்ஷியல் கொண்டாட்டம் ஆவதில் எனக்கும் உடன்பாடில்லை
சரியே!
Deleteஆனால் குழந்தை வளர்ப்பு? அது சமூகத்தைப் பாதிக்காமல் இருக்கணுமே! இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பில் கவனம் மிகத் தேவையாய் இருக்கிறது. //
ReplyDeleteமிக மிகச் சரியே...
அக்கா சிசேரியன் பற்றி இப்போது என் தோழி மருத்துவர் சொன்னது...விழிப்புணர்வு வருகிறது என்று. இயற்கைப் பிரசவத்திற்குத்தான் பெரும்பான்மையான பெண்கள் விரும்புகிறார்கள் என்று. அவர் அரசு மருத்துவர். கில்லர்ஜிக்கும் இதே கருத்தைத்தான் நேற்று கொடுத்திருந்தேன்.
கீதா
இப்போது சரியாத் தெரியலை. ஆனால் பெரும்பாலான பெண்கள், நாள், நட்சத்திரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவதையே விரும்புகின்றனர்.
Deleteஆகவே குழந்தை வளர்ப்பில் கண்டிப்புக் காட்டுங்கள் அன்னையரே! உங்கள் விருப்பத்தைக் குழந்தையிடம் திணிக்காத அதே சமயம் குழந்தையின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள். உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள்.//
ReplyDeleteஅப்படியே டிட்டோ செய்கிறேன் அக்கா.
நல்ல கருத்துகள் கொண்ட பதிவு! ஆய கலைகள் 64 ல் குழந்தை வளர்ப்புதான் மிகவும் சவாலான கலை என்பேன் நான் அடிக்கடி.
அன்னையர் தின வாழ்த்துகள்
கீதா
குழந்தை வளர்ப்பது என்பது சாமானியமான வேலை அல்ல. மிகப்பொறுப்பு வாய்ந்தது! ஏனெனில் குழந்தை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தாய், தந்தையரின் செயல்பாடுகளாலேயே அமையும். முக்கியமாய்த் தாய்! அவள் எப்படிக் குழந்தையைக் கொண்டு வருகிறாள் என்பது தான் முக்கியமானது. குழந்தை பேசும்வரை ஒரு மாதிரிப் புரியக் கஷ்டப்பட்டால், பேச ஆரம்பித்ததும் வேறே மாதிரி. பெரியவனாய்/பெரியவளாய் ஆக ஆக அவங்களோட புரிதல் நம்மை ஆச்சரியப் பட வைக்கும்.
Deleteஅக்கா இங்கும் சொல்ல விடுபட்ட ஒன்று நேற்றும் கில்லர்ஜியின் பதிவில் சொல்ல விடுபட்ட ஒன்று வலி பொறுக்க விருப்பமில்லாமல் சிசேரியன் என்பதை விட நாள் நேரம் பார்த்துக் குழந்தை பெறுதலுக்காகச் சிசேரியன் என்றுதான் சிசேரியன் விரும்புபவர்கள் செய்வது என்று என் தோழி சொன்னார். இதுவும் நான் அறிந்துள்ளேன். இதில் புரியாத ஒன்று. ஏற்கனவே அந்த மாபெரும் சக்தியால் குறிக்கப்பட்ட ஒன்றினை நாம் குறித்துப் பெற வைப்பதால் மாறிவிடுமா என்ன? எப்படி மாறும் மாற்ற முடியும். இவர்களுக்கு இது ஏன் உறைப்பதில்லை என்று தோன்றும்...
ReplyDeleteகீதா
எனக்கும் இது புரியாத ஒன்றே. அந்த நேரம் என அமைப்பதும் இறைவன் விருப்பமாய் இருக்கலாம் என மனதைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டி இருக்கு! :( எங்க குட்டிக் குஞ்சுலு பிறந்தப்போ மருமகள் ஒரு நாள் முழுவதும் வலியை அனுபவித்தாள். இயற்கைப் பிரசவத்துக்கு முடிந்தவரை முயன்றுவிட்டுக் கடைசியில் இனி தாமதிக்கக் கூடாது என்னும் சமயம் தான் அறுவை சிகிச்சை என முடிவு செய்யப்பட்டது. அப்போது சுமார் பனிரண்டு மணி நேரம் நாங்க எல்லோருமே கவலையுடன் தவித்துக் கொண்டிருந்தோம்.
Deleteகீசாக்காவுக்கும் மற்றும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்றாவது பெண்களைத் திட்டாமல் வாழ்த்துப் போட்டிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நல்ல பிரியாணியா சமைச்சுக் குடுத்திட்டு அடிக்கிறீங்க:))..
//அதனால் தான் இப்போதைய பெண்கள் வலியில்லாப் பிரசவமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ? ///
உங்களுக்குப் பொறாமை:)) அதிராவுக்கும் வலியில்லாப் பிரசவம் என நினைச்சு :)).. ஹா ஹா ஹா மீக்கும் பிரசவ வலி தெரியாதே:)... சாதாரண வயிற்றுக் குத்துக்கே ஊரைக் கூப்பிட்டிடுவேன்:)) அதில இது எனில் ஹையோ ஆண்டவர் எல்லோரையும் காப்பாற்ரி விட்டார் என் அலறலைக் கேட்க விடாமல்:)..
வாங்க அதிரடி, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
Deleteபிரசவ வலி அனுபவிச்சிருந்தாலும் குழந்தையைப் பார்த்ததும் வலி தெரியாது அல்லவா? அதிலும் நாம் பெற்ற குழந்தை! ஆனால் எனக்கு மூல நோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்து அறைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இனி உடம்பில் உணர்வுகள் தோன்றும் என மருத்துவர் சொல்லிவிட்டு, வலி இருக்கும், தாங்கிக்கணும் என்றும் எச்சரித்தார். ஆனால்! அது தாங்கக் கூடிய வலியா? உடல் நரம்பில் ஒரு பக்கத்தை வெட்டி எறிஞ்சிருக்காங்க! சாமானிய வலியா அது! 24 மணி நேரத்துக்கு உலுக்கி விட்டது. அன்னிக்கு நான் அலறிய அலறல். மருத்துவமனை வளாகமே கிடுகிடுத்துப் போச்சு!
இப்பொழுதெல்லாம் நோர்மல் டெலிவரிக்கே பெயின் கில்லர் கொடுத்து வலி தெரியாமல் பண்ணி விடுகிறார்களே.
Deleteபை பாஸ் சேர்ஜரி.. நெஞ்சைப்பிளந்து செய்தாலும் மறு நாளே எழும்பச் சொல்கிறார்களே... விஞ்ஞானம் எங்கயோ போய் விட்டதே...
கீதாக்கா இந்த அதிரடி உங்களுக்கு பேத்திகள் தின வாழ்த்து சொன்னாங்க எங்காப்லாகில் பார்க்கல்லியா ?? போய் பார்த்து விரட்டுங்க :)
Deleteநான் வந்திட்டேன் இனிமே அதிரடி என்ன எங்கே சொன்னாலும் உடனே வந்து போட்டு குடுத்திடறேன் :)))
ஏஞ்சல், உடல் நலம் இல்லையா? கையில் அடிபட்டிருப்பதாக அதிரடி சொல்லிட்டு இருக்காங்க! கவனமாக இருக்க வேண்டாமா? விரைவில் குணம் அடையப் பிரார்த்தனைகள்.
Deleteநான் எ.பி.க்குப் போயே பல நாட்கள் ஆயிடுச்சு! போகும்போது பார்க்கிறேன்.
Deleteஅருமையான அறிவுரைகளைக் கூறி இருக்கிறீர்கள். உண்மைதான். சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்குப் பெண்களின் பெருமையைச் சொல்லி வளர்க்க வேண்டும். கண்டிப்பு வேண்டும். அதுவும் அளவு கடக்காமல் இருக்கவேண்டும். கஷ்டம்தான் இந்தக் காலத்துத் தாயாய் இருப்பது!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்வது சரியே! ஆண், பெண் இருபாலாருக்கும் கனிவுடன் கூடிய கண்டிப்பான அறிவுரைகள் தேவை!
Deleteஅந்தக் காலத்தில் இது போல தொலைக்காட்சிகள் இல்லை, பொய்களை பரப்பும் உருப்படாத செய்தித் சேனல்கள் இல்லை. வாட்ஸாப் இல்லை. ஏன், கணினியும் இல்லை. குடும்பமாய் இருந்தோம். அருமையாய் வளர்ந்தோம்.
ReplyDeleteதொழில் நுட்ப வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு நிறுத்துகிறது என்பதை நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது. :(
Deleteஇங்கு கமெண்ட் போட ஒரு கவிதை மாதிரி ஒன்று எழுதினேன். அப்புறம் அதை முக நூலிலோ, எங்கள் தளத்தில் வியாழன் பதிவிலோ சேர்த்து விடலாம் என்று விட்டு விட்டேன்!
ReplyDelete:)))
வியாழன் பதிவிலே சொல்லி இருந்த நினைவு. அங்கேயும் சரியாய்ப் பார்க்காததால் நினைவில் இல்லை!
Deleteஅன்பு கீதா, நல்ல கருத்துகள். எங்கள் இரண்டாவது பேரனுக்கும் இரண்டு நாள் வலி பொறித்து அறுவை சிகித்சையே செய்தார்கள்.
ReplyDeleteஅதற்கப்புறம் உடல் பருமனைக் குறைக்க
பாடுபட வேண்டிய வந்தது.
அத்தனை குழந்தைகளும் அன்னை வளர்ப்பில் தான்.
அமோகமாக இருக்கட்டும் குழந்தைகள்.
நல்லவேளையாய் பெண், மாட்டுப் பெண் இருவருக்கும் உடல் பெருக்கவில்லை. ஆனால் வேறு பிரச்னைகள்! சமாளிச்சாச்சு! :)
Deleteஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றில்லை... ஒரு கணவன் தன் மனைவிக்கு எப்படி மரியாதை கொடுத்து எப்படி நடத்துகிறாரோ அப்படியேதான் அவர்களின் ஆண் பிள்ளைகளும் பழகிக் கொள்கின்றன... அருமையாக சில குழந்தைகளே.. அப்பா செய்த தவறை நானும் செய்ய மாட்டேன் என முடிவெடுக்கின்றன.
ReplyDeleteஅப்பா நல்லவராக இருந்தாலும் பிள்ளைகளும் அப்படியே இருப்பார்கள் எனச் சொல்ல முடியவில்லை! அவரவர் அதிர்ஷ்டம் என்றே எடுத்துக்கணும்! :) ஆனால் சிறு பையனாக இருப்பதில் இருந்து வளர்ந்த பையனாக ஆகும் அந்தக் குறிப்பிட்ட பருவம்! ஆண்களின் வாழ்க்கையில் மிகுந்த கண்காணிப்புடன் கவனிக்க வேண்டிய பருவம். அந்தச் சமயம் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாகக் கவனிக்க வேண்டும். காதல் பற்றியும் தெளிவான சிந்தனையைக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் இந்த வயசில் படிப்புக்கே முக்கியத்துவம் என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.
Deleteஅன்னையர் தின வாழ்த்துக்கள் கீதாக்கா .மிகவும் அருமையான பதிவு .
ReplyDeleteபடிச்சிட்டே வரும்போது மனசில் பட்டது // எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப் படுவது, //
மிகவும் உண்மையான விஷயம் ..இந்த உணர்ச்சிவசப்படுதல் .இப்போல்லாம் கைக்குள் அதான் எல்லாமே வேகமா நடக்குது முந்திலம் யாரையாச்சும் திட்ட கடிதம் எழுத ஆரம்பிச்சி முடிக்குமுன்ன கோபம் போய் பேப்பரை கிழிச்சி போட்ருவோம் .இப்போ fb /ட்விட்டர் வாட்சாப் ஹ்ம்ம் என்ன சொல்ல தவறு செய்யாதவங்க யாருமில்லை தவறை மன்னிக்கும் குணம் மட்டும் எப்போ வரும் ?இந்த இன்ஸ்டன்ட் கோபக்காரங்களுக்கு . முந்திலாம் பேசுமுன்னே யோசிப்போம் ஆனா இப்போ ..
// பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் திருமணம் ஆன பெண்கள் கூட ஆண்களிடம் மயங்குவார்கள் எனக் காட்டுவது, //
எங்க சிட்டில வியர்வை நாற்றத்துக்கு ஒரு பையன் ஸ்ப்ரே அடிச்சே சீக்கிரம் மேலே போயிட்டார் :( அளவுக்கதிகமா ரூமில் கெமிக்கல்ஸ் அதை தொடர்ந்து சுவாசிச்சதால் மரணம் :(.
கெமிக்கல்சுக்கு எதுக்கு இவ்ளோ விளம்பரம் ?
நான் கியூட்டெக்ஸ் கூட போடா மாட்டேன் ஆனா அதிரடி நகத்தை நீளமா வளத்து கலர் பெயின்டிங் செஞ்சிருக்காங்க :)
// உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள். நம் நாட்டுக் கலாசாரம், உணவு முறை, பின்னணி, உறவு முறை ஆகியவற்றை இயன்ற அளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். //
எங்க வீட்ல ஜங்க் எப்பவாச்சும்தான் .பழகிவிட்டேன் மகளை நம்ம சமையலுக்கு .
நான் சொல்லுவதும் இதுவே. விஞ்ஞான வளர்ச்ச்சியில் முன்னேறியதன் பலன் இங்கே நடக்கும் ஒவ்வொன்றும் அமெரிக்கக் கண்டத்துக்கோ, ஆப்பிரிக்கக் கண்டத்துக்கோ உடனடியாகப் போய் விடுகிறது. அப்படி இருக்கையில் வெளிநாட்டில் வசிக்கும் பெண்கள் ஸ்கைப் போன்றவற்றின் உதவியால் பெற்றோரைத் தினம் தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால் உடனடியாக அவங்க பிரச்னைகளைச் சொல்லிடறாங்க. முன்னெல்லாம் யோசித்துக் கடிதம் எழுதும்போது அந்தப் பிரச்னையே முடிந்து போயிருக்கும்.
Deleteதவிர்க்க முடியாமல் வெளியே சாப்பிடும் நேரங்கள் தவிர்த்து நாங்க வெளிச்சாப்பாடை அதிகம் விரும்புவதில்லை. எங்கே போனாலும் அநேகமாய்ச் சாப்பாடு எடுத்துப் போய்விடுவோம். காஃபி உட்பட!
Delete