நல்ல செய்தி! கணினிப் பிரச்னையைச் சரி பண்ணியாச்சு. டெல் கம்பெனியுடைய மெகானிக்கையே கூப்பிட்டேன். அவரும் வீட்டிலே வந்து தான் செய்வேன், பரவாயில்லையா என்று கேட்டார். நமக்கு அதானே வேணும்! சரினு சொல்லி நேத்திக்கு வந்து செய்து கொடுத்திருக்கார். ஓ.எஸ். மாத்த வேண்டாம், பிரச்னை அதில் இல்லைனு சொல்லிட்டு இணையம் இணைப்புக் கொடுத்த "நெட் வொர்க் செட்டிங்க்ஸ்" பொதுவான செட்டிங்க்ஸ் எல்லாவற்றையும் பார்த்துப் பலதை நீக்கி சிலதைச் சேர்த்துப் பின்னர் மீண்டும் இணைய இணைப்புக் கொடுத்து அது சரியா இருக்கானும் சோதிச்சுப் பார்த்து, கணினியே எல்லாத் தேர்வுகளிலும் பாஸ்னு சொன்னதும் என்னை இயக்கிப் பார்க்கச் சொன்னார். சரியாக இருந்தது. அவரும் இயக்கிக்காட்டினார். ஒரு வாரம் பார்த்து விட்டுப் பின்னர் மீண்டும் பிரச்னை வந்தால் சொல்லும்படியும் அப்போது உள்ளேயும் பிரிச்சுப் பார்த்துடலாம்னும் சொல்லி இருக்கார். இன்னைக்குக் கணினி வேலை முழுவதும் இந்தப் புதிய கணினியில் தான். பழசையும் சரி பண்ணித் தரேன்னு சொல்லி இருக்கார்.
ஆனால் இந்த இ கலப்பை தான் மறுபடி மறுபடி தகராறு. பார்க்கலாம். ஒரு வாரம். சரியா வரலைனா மருத்துவர் அடுத்து வரச்சே என்னனு கேட்டுக்கணும். இணையம் தானே பிரச்னை பண்ணிட்டு இருந்தது. அது சரியாகி விட்டது! கொஞ்சம் நிம்மதி! முன்னால் வந்த மருத்துவர் ஓ.எஸ். மாத்தணும்னு சொன்னதோடு இல்லாமல் இணைய இணைப்புக்கு பென் ட்ரைவ் மாதிரி ஒரு டிவைஸ் போடணும்னு வேறே சொன்னார். இரண்டும் சேர்ந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் அதுவும் எனக்காக என்றார். வின்டோஸ் 7 போட்டுக் கொடுக்க சாதாரணமாக ஆயிரம் வரை வாங்குவாங்களாம். எனக்காகக் குறைச்சுண்டேன் என்றார். ஆனால் இப்போது 300 ரூ சர்வீஸ் சார்ஜ் கொடுத்ததிலேயே சரியாகி இருக்கு. பார்ப்போம். ஓ.எஸ். அவர் போடுவதாகச் சொன்னது வின்டோஸ் 7 பிரிமியம்! அது பைரேடட் வெர்ஷன் வேறே! முன்னால் சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஒருத்தர் போட்டுக் கொடுத்துப் பிரச்னை வந்ததால் பயம்! :))))
ஆனால் இந்த இ கலப்பை தான் மறுபடி மறுபடி தகராறு. பார்க்கலாம். ஒரு வாரம். சரியா வரலைனா மருத்துவர் அடுத்து வரச்சே என்னனு கேட்டுக்கணும். இணையம் தானே பிரச்னை பண்ணிட்டு இருந்தது. அது சரியாகி விட்டது! கொஞ்சம் நிம்மதி! முன்னால் வந்த மருத்துவர் ஓ.எஸ். மாத்தணும்னு சொன்னதோடு இல்லாமல் இணைய இணைப்புக்கு பென் ட்ரைவ் மாதிரி ஒரு டிவைஸ் போடணும்னு வேறே சொன்னார். இரண்டும் சேர்ந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் அதுவும் எனக்காக என்றார். வின்டோஸ் 7 போட்டுக் கொடுக்க சாதாரணமாக ஆயிரம் வரை வாங்குவாங்களாம். எனக்காகக் குறைச்சுண்டேன் என்றார். ஆனால் இப்போது 300 ரூ சர்வீஸ் சார்ஜ் கொடுத்ததிலேயே சரியாகி இருக்கு. பார்ப்போம். ஓ.எஸ். அவர் போடுவதாகச் சொன்னது வின்டோஸ் 7 பிரிமியம்! அது பைரேடட் வெர்ஷன் வேறே! முன்னால் சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஒருத்தர் போட்டுக் கொடுத்துப் பிரச்னை வந்ததால் பயம்! :))))
எப்படியோ பிரச்னை நீங்கி கணினி நன்றாக இயங்கட்டும்...
ReplyDeleteகஜினிக்கு....
அடடே...
கணினிக்கு நல்வாழ்த்துகள்...
ஹெஹெஹெ பாதி தான் எழுதினேன். பப்ளிஷ் ஆயிருக்கு! :)))))வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteமறுபடிக்கு -
ReplyDeleteஇந்தப் பக்கம் ஏணிய வெச்சி ஏறி - அந்தப் பக்கம் குதிக்க வேண்டியிருக்காதே!...
அது தெரியலை! இன்னிக்கு நேரே உள்ளே நுழைஞ்சாச்சு! :))))
Deleteநிம்மதி நிலைத்து நிற்க வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி, நன்றி.
Deleteஆஹா ! கணினி சரியாகிடுச்சா .சந்தோஷம் .
ReplyDeleteஎனக்கு கலப்பை nhm எதுவுமே சரிவரலை .கூகிள் மெயிலில் எழுத்து காப்பி பேஸ்ட் தான் எப்பவுமே வசதி .
/ பென் ட்ரைவ் மாதிரி ஒரு டிவைஸ் போடணும்னு வேறே சொன்னார். ///wireless receiver dongle ???
போன மாசம் லாப் டாப் கலாட்டா பண்ணி புதுசு வாங்கினோம் .கடைசியில் பழசெ நல்லா வேலை செய்யுது :) சும்மா ஒரு பராசெட்டமால் தான் டாக்டர் குடுத்தார் :)
வாங்க ஏஞ்சல், அப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் இப்போ இணையம் நல்லா வருது அது போடாமலேயே! என்.எச்.எம். பக்கம் போனாலே என்னோட கணினி அலறுது. அதனால் அதை முயற்சிக்கலை! :))))
Deleteஏஞ்சல் ஓல்ட் இஸ் கோல்ட் என்பது போல் பழசு நலலவே இருக்கிறது புதிய மாடல்கள் பல வசதிகளுடன் வந்தாலும்...
Deleteகீதா
என்னோட பழைய லாப்டாப்பும் நல்லாவே வேலை செய்யுது! ஒண்ணும் பிரச்னை இல்லை!
Delete///நல்ல செய்தி! கணினிப் பிரச்னையைச் சரி பண்ணியாச்சு.//
ReplyDeleteஇது நாட்டுக்கு நல்ல சேதி இல்லையே:))..
இனியும்.. எங்கள் புளொக்கில் கீசாக்கா முதலாவதாக வராட்டில் காவேரியில் தள்ளிடுவேன்ன்ன்:))
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, காவிரியிலே இப்போத் தள்ளுங்க. தண்ணியே இல்லை! :)))))
Deleteஅதிரா கீதாக்கா இப்போ போட்டிக்கே வருவதில்லை...!!! பாவம் தள்ளி விடாதீங்க ஹெலியில் போய் இறக்கிவிடுங்க...உங்களிடம் இருக்கிறதே அந்த ஹெலி!!!
Deleteகீதா
அடுத்த இரண்டு நாளைக்கு இருக்க மாட்டேன்.
Deleteகணினி சரியானதில் மகிழ்ச்சி. ஓ எஸ் போட்டுத்தர சாதாரணமாக 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை வாங்குவார்கள். அதுவும் கூட மற்ற வேலைகளுடன் சேர்த்துச் செய்தால் சிலர் அதற்கு காசு வாங்க மாட்டார்கள். ஒரிஜினல் வெர்ஷன் ஓ எஸ் வைத்திருப்பவர்கள் மிகச் சிலரே. கலப்பையை விட்டு வெளியே வரமுடியாதா?
ReplyDeleteஸ்ரீராம் நான் எழுத ஆரம்பிச்சதிலே இருந்து கலப்பை தான். பிரச்னையே கொடுத்ததில்லை. இப்போத் தான் என்னவோ பிரச்னை. ஷிஃப்ட் போடாமலேயே அதிலுள்ள எழுத்துக்கள் வரும். ஷிஃப்ட் போட்டால் வராது. ண, ணீ எல்லாம் சரியா வராது. ணீ தான் வரும். ணி வராது. இப்படி எத்தனையோ! ஆனால் உங்களுக்கு ஏன் கலப்பை பிடிக்கலை! :)))))ண போட்டால் அடுத்து வரும் எழுத்துக்கள் ௷௶ௐ இப்படி வரும்! ! போட முயற்சித்தால் 1 வரும்! @ போட்டால் 2 வரும். :))))))
Deleteஇவர் ஒரு முறை வந்தாலே (அதாவது கணினியின் பழைய மருத்துவர்) குறைந்த பட்சம் 200 வாங்குவார். ஓ.எஸ். போட்டாலும் சர்வீஸ் சார்ஜ் சேர்த்தே கொடுக்கணும்! ஆக ஓ.எஸ்.+ சர்வீஸ் சார்ஜ் குறைந்த பட்சமாக 900 வரை ஆகும். அதுவும் பைரேடட் வெர்ஷன் தான். போட்டுக்கோ எனத் தொந்திரவு செய்வார். நான் பிடிவாதமாக இருப்பதால் போடலை. அதைச் சொல்லவும் சொல்வாங்க. வேறே யாரும்னா நாங்க கேட்கவே மாட்டோம். நாங்களே போட்டுட்டுப் போயிட்டே இருப்போம் என்பார்கள்.
Deleteசெர்வீஸ் சார்ஜ் மட்டும் 300 ரூ கொடுத்தேன். கம்பெனி ஆள் என்பதால்! இல்லைனா இங்கே உள்ளவர்கள் 200 முதல் 250க்குள் வாங்கறாங்க!
Deleteநல்ல செய்திதான். இடுகையில் ஒரு தட்டச்சு மிஸ்டேக் தவிர வேறு இல்லை என்பதும் நல்ல செய்திதானே
ReplyDeleteவாங்க நெ.த. பார்த்துச் சரி பண்ணிட்டேன். :))))
Deleteகணினி கைகொடுக்காவிட்டால் சிக்கலே.
ReplyDeleteஆமாம், அதுவும் முக்கியமான சேமிப்புகள் எல்லாம் இருக்கும். மெயில்கள் வரும்!
Deleteஅப்பாடா. ஆஞ்சிக்கு ஒரு வடைமாலை சார்த்துங்கோ. அப்படியே கொஞ்சம் வடை மெயிலில் அனுப்புங்கோ.
ReplyDeleteவடை தட்டும்போது அனுப்பறேன் ஜேகே அண்ணா
Deleteகணினி சரியாகி விட்டது மகிழ்ச்சி.
ReplyDeleteநன்னி, நன்னி!
Deleteசங்கடங்கள் நீங்கினால் நல்லதுதானே
ReplyDeleteநன்னி, நன்னி!
Deleteகணினி சரியாயின் - தங்கள்
ReplyDeleteவலைப்பக்க வருகை பெருகுமே
நல்வரவாகுக!
நன்றி.
Deleteகணினி சரியாகிடுச்சா சூப்பர் கலக்குங்க!! மகிழ்ச்சி அக்கா
ReplyDeleteஆனா பாருங்க உங்கள் கணினி சரியானது கூடத் தெரியலை. இப்ப ஏதேச்சையாக உங்கள் பதிவு இருக்கானு பார்க்க வந்தப்புறம் தெரியுது. ப்ளாகர் காமிக்க மாட்டேங்குது...ஹூம்
கீதா
அட! தெரியாதா? எ.பி.ல சொன்ன நினைவு!
Deleteசென்னைப்பயணமா?
ReplyDeleteGood! good! அவர் கணினியை பிரித்து மேய்ந்து விட்டார். இனி நீங்கள் பிளாகை பிரித்து மேய வேண்டியதுதான்.
ReplyDeleteஹா ஹா ஹா:)) ஹையோ தெரியாமல் சிரிச்சிட்டேன்ன் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:) மீ வரல்ல இந்த வம்புக்கு:))
Delete