எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 04, 2019

அப்பாடா! ஒரு வழியா முடிச்சுட்டேனே!

இன்னைக்கு மின்சாரம் போயிடும்னு நேற்றே மொபைல் மூலம் செய்தி வந்ததால் காலை ஒன்பது மணிக்குள்ளாக இன்றைய சமையலுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டேன். வறுத்தல், அரைத்தல் எல்லாமும் ஒன்பது மணிக்குள் முடித்துக் கொண்டேன். ஆனால் பாருங்க! மின்சாரமே போகலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வேறே ஏரியாவுக்குப் போல. எனக்குத் தப்பா வந்திருக்குனு நினைக்கிறேன். எதிர்பாராமல் ஒரு நாள் மின்வெட்டை அமல் செய்வாங்க! ஆனாலும் வீட்டு அன்றாட வேலைகள் முடிந்ததும் கணினிக்கு வரலை! காலைத் தொங்கப் போட்டு உட்கார முடியாததால் போய்ப் படுத்துட்டேன். இப்போத்தான் ஒன்றே முக்காலுக்குப் பின்னர் எழுந்து வந்தேன். சுருக்கமாய்ப்பார்த்துட்டு ராகு கால விளக்கு ஏற்றப் போகணும்!
*********************************************************************************

கடைசியாய்ப் பார்த்தது

நாங்கள் அறைக்குப் போய்ப் படுத்தோம். ஆனாலும் தூக்கம் ஏனோ வரவே இல்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் அந்த ஆட்டோக்காரர் வந்து அழைத்துச் செல்வதாய்க் கூறி இருந்தார்.  ஆனாலும் விழித்திருந்தோம். கொஞ்சம் நேரம் எழுந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் கண் அசருமோ என்னும் நேரம் மணி பார்க்க நாலரை எனத் தெரிந்தது. உடனே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு குளித்து முடித்துத் தயாராகிக் கீழே வந்தோம். இருட்டுப் பிரியவில்லை. மணி ஐந்து தானே! அந்த உள் அறையில் ஓட்டல்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் முதல்நாள் முன்பணமாகக் கொடுத்த தொகையில் 250 ரூ வரை அவர் கொடுக்கணும். எழுந்துப்பாரோ இல்லையோ என நினைக்கையில் வேறொரு இளைஞர் எழுந்து வந்தார். நம்ம ரங்க்ஸ் அவரிடம் சாவியைக் கொடுக்க அவரும் வாங்கிக் கொண்டு போய் முன் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு அறையைச் சோதிக்கக் கிளம்பினார். ஆட்டோக் காரருக்குத் தொலைபேசியதில் தொலைபேசியை அவர் எடுக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு நம்ம ரங்க்ஸே வெளியே போய் ஆட்டோ பிடிக்கலாம் எனக் கிளம்பினார். எனக்குக் கொஞ்சம் கவலை தான்.ஆனால்சிறிது நேரத்தில் ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.

எனக்கு ஏறுவது தான்சிரமமாக இருந்தது. எப்படியோ கொஞ்சம் பாறைக்கருகே போய் நிறுத்திக் கொண்டு அதன் மேலேறி நானும் ஆட்டோவில் ஏறிக் கொண்டேன்.அவரும் ஏறினதும் ஆட்டோக்காரர் விபரங்களைக் கேட்டுக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றார். அங்கே போனால் அந்த ட்ராவல்ஸ்காரங்க பேருந்து இருக்கும் இடமோ, கிளம்பும் இடமோ தெரியவில்லை. அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துச் சிலரிடம் கேட்டுவிட்டுப் பின்னர் முதல்நாள் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொலைபேசிக் கேட்டதில் அவர் சொன்னது எங்களுக்குப் புரியவில்லை. ஆட்டோக்காரரிடமே கொடுத்தோம்.  அவர் கேட்டுவிட்டு எங்களை ஆட்டோவிலேயே அமரச் சொல்லி இன்னும் சிறிது தூரம் சென்று நெடுஞ்சாலைக்கு வந்து அங்கிருந்த ஓர் இன்ஸ்டிட்யூட் எதிரே வந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கருகே எங்களை இறக்கி விட்டார். பேருந்து இங்கே தான் வரும் எனவும், இன்னும் அரை மணியில் வந்துவிடும் எனவும் சொல்லிவிட்டுக் காசை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார். அவ்வளவு அதிகாலையில் அங்கும் இங்கும் அலைந்துவிட்டு அவர் இறக்கிவிட்டுக் கிளம்பினாலும் 50 ரூ தான் வாங்கிக் கொண்டார்.

அங்கே இருந்த நடைமேடையில் கீழே காலைத் தொங்கப் போட்டு உட்காரும்படி இருந்ததால் அங்கேயே நான் உட்கார்ந்து விட்டேன். இவரோ நிலைகொள்ளாமல் அலைந்தார். எதிரே ஒரு தேநீர்க்கடை திறக்க என்னிடம் தேநீர் வேண்டுமா எனக் கேட்டார். நான் எதுவுமே வேண்டாம் எனச் சொல்லி விட்டேன். அவர் மட்டும் போய்த் தேநீர் குடித்துவிட்டுப் பேருந்தைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்தார். இங்கே தான் தினமும் அந்தப் பேருந்து நிற்கும் எனவும் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடும் எனவும் சொன்னார்கள் என்றார். ஆனாலும் எனக்குள் அங்கே வேறே யாருமே இல்லாததால் பேருந்து கிளம்பும் இடம்,எத்தனை பேர் இருப்பார்கள் என்னும் சந்தேகங்கள் எல்லாம் தோன்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஓர் கல்லூரி மாணவர் தன் தந்தையுடன் வந்தார். ஹோலியை ஒட்டிய விடுமுறைக்கு வந்துவிட்டுப் புனே கல்லூரிக்குத் திரும்பச் செல்வதாகத் தெரிந்தது. அதன் பின்னர் ஒருத்தர் வந்தார். அவர் அந்தப் பேருந்தில் வரும் பால் பாக்கெட்டுகளை எடுத்துப் போக வந்திருந்தார். பேருந்து கிளம்பும் இடத்தின் அருகேயே பால் பண்ணை இருப்பதாகவும். அங்கிருந்து வரும் பாலை இங்கே இறக்கித் தான் வியாபாரம் செய்வதாகவும் இது தான் நிரந்தரத் தொழில் எனவும் சொன்னார். அதன் பின்னரும் இன்னும் 2,3 நபர்கள் வந்தனர்.

ஒரு வழியாகப் பேருந்தும் வந்தது. வோல்வோ பேருந்து தான் ஆனாலும் ஏசி இல்லை. கதவு திறந்ததும் முதலில் அவர் பாலை இறக்கிக் கொள்ளட்டும் என்றனர். அதன் பின்னர் நாங்கள் ஏறினோம். எங்கள் இருவருக்கும் ஓட்டுநரின் இருக்கைக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்த இருவரை இடம் மாறி உட்காரச் சொல்லிவிட்டு அங்கே அமர வைத்தார் அதன் பின்னர் அனைவரும் ஏறி அமர்ந்ததும் பேருந்து கிளம்பியது. நல்ல நீண்ட நெடுஞ்சாலை. அருமையாகப் போட்டிருந்தனர். வண்டி வழுக்கிக் கொண்டு போயிற்று. நடுவில் எட்டரை மணி சுமாருக்கு ஓர் சுமாரான ஓட்டலில் தேநீருக்கு நிறுத்தினார்கள். நான் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். கழிவறை மட்டும் பயன்படுத்திவிட்டுத் திரும்பினேன். அங்கே ஒரே தண்ணீர் மயம்! வழுக்கல். ரொம்பக் கவனமாகப் போக வேண்டி இருந்தது. அதன் பின்னர் ஒன்றரை மணி நேரத்தில் புனே வந்து விட்டது. நம்மவருக்குத் தான் புனே தெரியுமே. இறங்க வேண்டிய இடம் வந்ததும் சொன்னார். சாமான்களை இறக்கிக் கொடுத்தார்கள். நாங்களும் இறங்கினோம். சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளாம். ஒரே கோலாகலம் எங்கு பார்த்தாலும்! எனக்கு நம்ம ஊர் கரிகால் சோழனும், ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும், மகேந்திர பல்லவனும், நரசிம்ம பல்லவனும் நினைவில் வந்தார்கள். அவர்கள் பிறந்த நாளெல்லாம் எப்போ வரும்? அதெல்லாம் வேண்டாம்! குறைந்த பட்சமாக நம்மை அந்நியப் படையெடுப்பில் இருந்து காப்பாற்றி ஶ்ரீரங்கம் ரங்கநாதரை மீட்டுக் கொடுத்த கம்பண்ண  உடையாரின் பிறந்த தினம்? ம்ஹூம்! சுத்தம் நமக்கு அதெல்லாம் தெரியவே தெரியாது!

கீழே இறங்கினதுமே வந்த ஓர் ஆட்டோக்காரரிடம் நாங்க போக வேண்டிய இடமும் ஓட்டல் பெயரும் சொன்னோம். அந்தப் பெயரிலேயே இரண்டு ஓட்டல் இருந்ததால் கேட்டுக் கொண்டு சரியான ஓட்டலில் போய் நிறுத்தினார். நாங்க இறங்கும்போதே அங்கிருந்த மானேஜர் (முன்னர் இருந்த அதே மானேஜர் தான்! இவருக்கு மட்டும் மாற்று ஆளே வரவே இல்லை!) ஊழியர்களைக் கூப்பிட்டு நாங்க வந்துவிட்டதைச் சொல்லிவிட்டு அறையைச் சுத்தம் செய்யச் சொல்லி மராத்தியில் சொன்னார். ஏற்கெனவே சொல்லி இருப்பார் போல! அந்தப் பையர்கள் நாங்க மாலை தான் வரப்போறோம்னு போக்குக் காட்டி இருக்காங்க! உடனடியாகத் தங்க இடம் வேண்டுமெனில் மாடியில் முதல் தளம் போகலாம் என்றார் மானேஜர். லிஃப்ட் இருந்தது தான். ஆனாலும் வேண்டாம்னு சொல்லிட்டோம். பத்து நிமிஷத்தில் அறை தயாரானதும் அறைக்குப் போகும்போதே நல்ல காஃபியாக இரண்டு வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனோம். 

பத்து நிமிஷத்தில் பாட் காஃபி வந்தது. எத்தனை வருடங்கள்! பாட்காஃபி, பாட்தேநீர் அருந்தி! என நினைத்துக் கொண்டேன். முன்னெல்லாம் பயணங்களில் முதல்வகுப்பில் ஆர்டர் எடுக்கும்போதே பாட் காஃபியா எனக் கேட்டுக் கொண்டு கொண்டு வருவார்கள். தேநீரும் அப்படித்தான். குறைந்தது நான்கு நபர்கள் தாராளமாய்க் குடிக்கும்படி இருக்கும் அந்தக் காஃபியும், தேநீரும். சுவையும் நன்றாக இருக்கும்.  கடைசியாய் இமாலயப் பயணம் செய்தபோது திருக்கயிலைப் பயணத்தின் முடிவில் நேபாள் ஓட்டலில் குடித்தது.  அதன் பின்னர் ஷிர்டியில் உட்லண்ட்ஸில்  குடித்தோமோ? நினைவில் இல்லை.  ஆவலுடன் காஃபியை எடுத்துக் கொண்டு குடித்தோம்! முதல்நாள் இரவில் பெயருக்குச் சாப்பிட்டது தானே! காலையிலிருந்து ஒரு மடக்குத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. அந்தக் காஃபி தேவாமிர்தமாய் இறங்கிற்று. கொஞ்சம் மிச்சம் இருந்தது. குளித்துவிட்டு வந்து குடிக்கலாம் எனவைத்துவிட்டு ஒவ்வொருவராய்ப் போய்க் குளித்துவிட்டு வந்தோம். மிச்சம் காஃபியையும் குடித்தோம். ஓட்டல் மானேஜரிடம் சாப்பாடு சாப்பிட எங்கே செல்லலாம் எனக் கேட்டோம். இருபது வருஷங்கள் முன்னால் உள்ள ஓட்டல்கள் தான் நம்மவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவற்றில் சில ராஸ்தாப்பேட்டையில் இன்னமும் இருக்கு எனப் பின்னர் அறிந்தோம்.ஆனாலும் முதலில் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. பின்னர் மானேஜர் சொன்ன ஓட்டலுக்குச் சென்றோம்.தென்னிந்திய உணவும் உண்டு எனச்சொல்லி இருந்தார்.  ஆனால் அங்கே தென்னிந்திய உணவு இல்லை.

வேறே வழி இல்லாமல் சப்பாத்தி, சப்ஜி காரம் இல்லாமல் சொன்னோம். காரம் போட வேண்டாம் என்றதும் அந்த சமையல்காரர் மிளகாய்ப் பொடி போடாமல் பச்சை மிளகாயிலேயே தாளித்திருந்தார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பின்னர் வழக்கம்போல் சாஸ் எனப்படும் மசாலா மோர் அருந்திவிட்டுக் கிளம்பினோம். இந்த ஓட்டலில் கை கழுவ ஃபிங்கர் பௌல்ஸ் கொடுத்தார்கள்! எங்களுக்குத் தானா, எல்லோருக்குமா தெரியலை! ஓட்டலுக்கு வந்து ஓய்வு எடுத்தோம். ஓட்டல் மானேஜர் ஓட்டல் மூலமாகவே உணவு வரவழைத்துக் கொடுப்பதாகவும் சொல்லி இருந்தார். அநேகமாக அது ஸ்விகி என நினைக்கிறேன். ஆகவே மாலை காஃபி வரவழைத்துச் சாப்பிட்டதும் வெளியே எங்கும் போகாமல் அறையிலேயே தங்கி இருக்கத் தீர்மானித்து ஓட்டல் ஊழியரிடம் தென்னிந்திய இட்லி, தோசை கிடைக்குமா என விசாரித்ததற்கு அவர் தங்களிடம் இருந்த பட்டியலைப் பார்த்துவிட்டுத் தயிர்சாதம் தான் கிடைக்கும் என்றும் 125 ரூ ஒருத்தருக்கு என்றும் சொன்னார். சரினு அதையே வரவழைத்துத் தரச் சொன்னோம். ஏழரை மணிக்கு வரும் என்றார்கள்.

ஏழரைக்குத் தயிர்சாதம் வந்தது. பெரிய பொட்டலம்! ஒருத்தரால் சாப்பிட முடியாது போல் இருந்தது. உள்ளே மிகப் பெரிய மோர்மிளகாய்! குடமிளகாயையே மோர் மிளகாயாகப் போட்டு அதையே வறுத்து வைத்திருக்கின்றனர். ஊறுகாயும் இருந்தது. முடிந்தவரை சாப்பிட்டோம். சாதம் நன்றாகவே இருந்தது. மறுநாள் விமானத்தில் ஊருக்குக் கிளம்பணும். ஆகவே பெட்டி, படுக்கையைத் தயார் செய்து கொண்டோம். காலை எழுந்ததும் குளித்துத் தயாராகி இட்லி, தோசை கிடைக்குமிடம் தேடிச் சென்றோம். அந்த நேரம் ஒரே ஒரு ஓட்டல் திறந்திருந்தது. அன்று ஞாயிறு வேறே! கன்னடக்காரர்களால் நடத்தப்படும் ஓட்டல்! தோசையும், இட்லியும் சாப்பிட்டோம். மதியம் பனிரண்டு மணி இருபது நிமிடங்களுக்கு விமானம்.சென்னை போகும்போது இரண்டு மணி ஆகிவிடும். அங்கே என்ன கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும். ஓட்டலில் இருந்து மறுபடி லாட்ஜுக்குத் திரும்பிய ஆட்டோவையே விமான நிலையம் வரை கொண்டுவிடப் பேசிக் கொண்டோம். சரியாகப் பதினோரு மணிக்கு வருவதாக அவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

அதன்படி அவர் வந்ததும் விமானநிலையம் போய்ச் சேர்ந்தோம். தொகை சரியாகவே வாங்கிக் கொண்டார். விமானம் கொஞ்சம் தாமதம் எனச் செய்தி மொபைலுக்கு வந்திருந்தது. ஆகவே பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு நுழைவாயிலுக்குச் சென்று காத்திருந்தோம். அங்கே தேநீர் 40 ரூபாய்க்கும் காஃபி 50 ரூபாய்க்கும் சமோசா 30 ரூபாய்க்கும் விற்பதாகப் போட்டிருந்தார்கள்.வாங்கிக் கொள்ளலாம் எனில் அது சரியாக வருமா என்னும் சந்தேகம். வேண்டாம்னு விட்டோம். எவ்வளவு பெரிய தவறு என்பது சென்னை போய்த் தான் தெரிந்தது. மதியம் விமானத்தில் ஏறிச் சென்னை வந்ததும் மறுபடி திருச்சி போக வேண்டி நாங்க செல்லவேண்டிய வாயிலில் உள்ள பாதுகாப்புச் சோதனைக்குச் சென்று அதை முடித்துக் கொண்டோம். திருச்சி விமானமும் ஏழு மணிக்குத் தான் கிளம்பும் என்றார்கள். இன்னமும் மூன்று மணி நேரம் இருக்கே, பசி தாங்கணுமே எனச் சுற்றும் முற்றும் பார்த்தோம். நாங்கள் இருந்த பனிரண்டாம் நுழைவாயிலுக்கருகே இருந்த ஓர் ரெஸ்டாரன்டில் ப்ரெட் இருக்கவே அதைப் போய்ப் பார்த்தோம். அது ப்ரெட் பிட்சாவாம். 125 ரூ ஒரு பீஸ் என்றார்.குடிக்க என்ன இருக்குனு பார்த்தால் காஃபி விலையில் காஃபி எஸ்டேட்டே வாங்கலாம்னு நினைச்சோம். பின்னர் அவர் ரொம்பவே பிகு செய்துவிட்டு எங்களுக்கு டிப் டீ இருக்குனு சொன்னார். அதை வாங்கிக்கலாம்னு வாங்கிக் கொண்டால்! பகவானெ! அதுவும் ஒருத்தருக்கு 110 ரூபாய்! ஙே!!!!!!!!!!!!!!!!!!! வேறே வழி இல்லை. இருவர் கையிலும் தேநீர்த்தம்பளர். வாங்கிய அந்தப் பிட்சா ப்ரெட்சகிக்கவில்லை. தூக்கிப் போட்டுவிட்டுத் தேநீரைக் குடித்தோம்.

இன்டிகோ க்கான பட முடிவு

ஏழு மணிக்கு விமானம் கிளம்பியது. ஏழரைக்குத் திருச்சி வந்து எட்டு மணிக்கு வெளியே வந்தால் அப்போப் பார்த்து என்னோட மொபைலில் ஜியோவும் அவுட்! பிஎஸ் என் எல்லும் அவுட். சரினு ரங்க்ஸோட மொபைல் மூலம் ரெட் டாக்சியைத் தொடர்பு கொள்ள நினைச்சால் சுத்தம்! மொபைலில் சார்ஜே இல்லை! அப்புறமா அங்கிருந்த வண்டி ஓட்டுநர்களிடம் பெரிய பேரங்கள் செய்து அறுநூறு ரூபாய்க்கு ஶ்ரீரங்கம் எங்க வீடு வந்து சேர்ந்தோம். ரெட் டாக்சியில் வந்தால் 200 ரூபாய்க்குள் தான்! நேரம்!

40 comments:

  1. எப்படியோ பயணம் சிறப்பாக முடிந்து வீடு வந்து விட்டது மகிழ்ச்சி.
    பொதுவாக வெளியூர் பயணத்தில் உணவுகளை குறைத்துக் கொள்வதே நல்லது

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, உணவு விஷயத்தில் நான் எப்போதுமே குறைத்துத் தான் எடுத்துக் கொள்வேன்.

      Delete
  2. பேசாம, தயிர் சாதப் பொட்டலமே இன்னொன்றும் வாங்கி எடுத்துச் சென்றிருக்கலாம். ஏர்போர்ட்டில் அர்த்தமில்லாத கொள்ளை. அவங்களுக்கே அடுக்குமான்னு தெரியலை. இத்தனைக்கும் 5* ஹோட்டல்லேர்ந்தெல்லாம் வராது. எல்லாம் சாதாரண ஹோட்டல்லேர்ந்துதான்.

    ReplyDelete
    Replies
    1. சரியாவே படிக்க மாட்டீங்க போல நெ.த. தயிர்சாதம் முதல்நாள் இரவுக்கு வாங்கிக் கொடுத்தாங்க! மறுநாளைக்கான மதிய உணவு பனிரண்டு மணிக்கு மேலே தான் வரவழைப்பாங்க! நாங்க பனிரண்டுக்கெல்லாம் விமான நிலையத்தில் இருக்கணும். எனக்குத் தெரிந்து சென்னை விமான நிலையம் தான் கொள்ளை! லக்னோ, தில்லி,அஹமதாபாத், புவனேஸ்வர் இங்கெல்லாம் கொள்ளை இல்லை.

      Delete
  3. அவசரத்துக்கு ஒரு பேட்டரி பேங்க் இல்லாமல் கிளம்பியிருக்கீங்களே...

    ReplyDelete
    Replies
    1. நெ.த. என்னோட செல்லுக்குத் தான் பவர் பாங்க் தேவைப்பட்டாப் பயன்படுத்தலாம். ஆனால் என்னோட செல்லை நான் அவ்வப்போது சார்ஜில் போட்டு வைச்சுடுவேன். அவரோட செல் பழைய மாடல்! அதுக்கு சார்ஜரை எடுத்துக் கொண்டே வர மாட்டார். ஒரு தரம் போட்டால் போதும்னு இருப்பார். அது நல்ல நேரம் பார்த்து உயிரை வாங்கி விட்டது. கடைசியில் பார்த்தால் என்னோட செல்லில் பிஎஸ் என் எல் ரோமிங்கில் போட்டதால் பைசா முழுவதும் செலவாகி விட்டது. ஜியோவில் வேறே ஏதோ பிரச்னை!

      Delete
  4. பாட் காப்பின்னா, பெரிய சட்டில தருவாங்களா?

    ஹோட்டல்லயோ இல்லை கடைகள்லயோ ஏதேனும் ஸ்வீட்ஸ், நம்கீன் வாங்கிக்கமாட்டீங்களா? இல்லை பிஸ்கெட்டாவது? அவசரத்துக்கு உபயோகப்படுமே

    ReplyDelete
    Replies
    1. //பாட் காப்பின்னா, பெரிய சட்டில தருவாங்களா?/// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜம்மா கேட்கறீங்களானு தெரியலை. அதனால் இதுக்கு பதில் இல்லை.

      மற்றபடி பிஸ்கட், கோலாப்பூர் சிறப்புப் பேடா, சூடா எல்லாம் வாங்கி இருந்தோம். பாக்கிங்கில் கார்கோவில் போட்ட பைக்குள் போய்விட்டது! :) சில சமயம் இப்படி ஆயிடும்!

      Delete
    2. எனக்குத் தெரியாது கீசா மேடம்... நான் காபி டீலாம் வாங்கினதே கிடையாது.. அபூர்வமா ஹோட்டல்ல டபரா டம்ளர்ல வாங்கியிருக்கேன். இது குல்ஃபி ஐஸ் தருவாங்களே அந்த மாதிரி களிமண் கப் மாதிரி இருக்குமா?

      Delete
    3. பேடா ன்னா, பூசணில செய்வதா இல்லை பால்ல செய்வதா? (B, Pலாம் போட்டு எழுதக்கூடாதா?). அது என்ன 'சூடா' - எழுத்துப் பிழையா?

      Delete
    4. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்க காஃபியே குடிச்சது இல்லையா? நான் இப்போத் தான் நிறுத்தி இருக்கீங்கனு நினைச்சேன். சரி! ஒரு பதிவாவே போட்டுடறேன். ஸ்ரீராம் வேறே கேட்டிருக்கார்.

      Delete
    5. Pபேடானா தெரியாதா? பாலில் செய்யப்படுவது. பூஷணியில் எல்லாம் செய்வது இல்லை. CHசூடா எனில் அவல் என்னும் பொதுவான அர்த்தம். போஹா என்றும் சொல்வார்கள். அந்த அவலைப் பொரித்து அதோடு வேர்க்கடலை, பொட்டுக்கடலை,கொப்பரைத் தேங்காய் கீறியது,முந்திரிப்பருப்பு, திராக்ஷை, பாதாம் (ஒரு சிலர் கார்ன் ஃப்ளக்ஸும் போடுவார்கள்/) எல்லாம் போட்டுக் காரத்திற்கு மி.பொடி போட்டு நெய்யில் வறுத்த பருப்புக்களோடு கருகப்பிலையும் போட்டு வைச்சிருப்பாங்க இதில் சூடா மட்டும் தனியாக இருந்தால் அவலோடு பேருக்குக் கொஞ்சம் பருப்பு வகைகள்! மஹாராஷ்ட்ராவில் லக்ஷ்மி நாராயண் சூடா என்றால் பிரபலம். ஹல்திராம் சோன் பப்டி மாதிரி!

      Delete
  5. பயணத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் விட்டலன் தரிசனம் நல்லபடியாக ஆச்சே!
    அது போதும்.

    ஆட்டோ மிக உயரமா? ஏறுவதில் சிரமம் என்று சொல்லி உள்ளீர்களே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, அநேகமா ஆட்டோக்கள் இப்போத் திருச்சியிலும் உயரமாகவே வருகின்றன. என்னால் காலைத் தூக்கி வைத்து ஏற முடியாது! கஷ்டம் தான்! :(

      Delete
  6. சடசடவென முடித்து விட்டீர்களோ... நானும் இதேபோல முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், விட்டலன் தரிசனத்துக்குப் பின்னர் எங்கேயும் போகலையே! விஷயம் இல்லை அதான்!

      Delete
  7. விமான நிலைய கொள்ளைகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். 110 ரூபாய் டிப் டீ அநியாயம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து சென்னையில் தான் ஆட்டோ, விமான நிலையக் கொள்ளை எல்லாம்.

      Delete
  8. பாட் காஃபி பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டீர்கள். எண்ணெய் போன்றவர்கள் எப்போது தெரிந்து கொள்வது!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா நீங்க அடிக்கடி பயணம் செய்யும்போதெல்லாம் ரயில் நிலையத்தில் எடுத்து வருவதைப் பார்த்திருக்கலாம். அதான் பாட் காஃபி, அல்லது பாட் தேநீர் எனத் தெரிந்திருக்காது.

      Delete
  9. புனேயில் வேறு எந்த இடமுமே பார்க்கவில்லையா? தயிர்சாதத்துக்கு குடைமிளகாய் என்றால் அந்தப் பெரிய குடைமிளகாயா?!!!

    ReplyDelete
    Replies
    1. புனே தான் அவர் பத்து வருஷம் இருந்திருக்கார். 2010 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன், நாங்க ஔரங்காபாத் போனப்போ அஜந்தா, எல்லோரா, தேவகிரிக்கோட்டை எல்லாம் போயிட்டுப் புனே வந்து தான் சென்னை திரும்பினோம். அப்போப் புனேயில் எல்லா இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று காட்டி இருக்கார். எழுதியும் இருக்கேன்.

      Delete
    2. பெரிய குடைமிளகாயாகத் தான் இருந்தது. ஒன்றே ஒன்று தான் வைத்திருந்தார்கள்.

      Delete
  10. ஒவ்வொரு இடத்திலும் அந்த ஊர் ஆட்டோக்காரர்கள் பற்றிச் சொல்லி இருப்பது பொறாமையாய் இருக்கிறது. அதிலும் இன்று எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரரே....

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், இங்கேயும் எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் இப்போல்லாம் திரும்பிக் கூடப் பார்க்கிறதில்லை. முத்ரா திட்டம் மூலம் சொந்த ஆட்டோ வாங்கவும், பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வாங்கவும் பெருமளவு ஆலோசனைகள் சொன்னோம். எங்க வீட்டில் பயனின்றி இருக்கும் பல உபயோகமான வீட்டுப் பொருட்களை எல்லாம் கொடுத்து உதவி இருக்கோம். !!!!!!!!!!!!!!!!!! இன்னிக்கு அவர் பார்த்தால் கூடப் பேசுவதே இல்லை! :)))) இதுவும் ஒரு நேரம். எப்படியோ நல்லா இருந்தாச் சரி!

      Delete
  11. //அப்பாடா! ஒரு வழியா முடிச்சுட்டேனே!//

    எதை?:) அந்த உயரப்படியேறி இட்லி சாப்பிட்டிட்டாவோ கீசாக்கா கர்:) ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, ஒழுங்காவே படிக்கிறது இல்லை! இதிலே கேலி வேறேயா? அந்த உயரமான படிகளில் ஏறி குஜராத்தி தாலி சாப்பாடு தான் சாப்பிட இருந்தோம். இட்லி எல்லாம் இல்லை! :P

      Delete
  12. //முன் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு அறையைச் சோதிக்கக் கிளம்பினார்//
    ஓ ..இப்படியும் செய்துவிட்டோ போக அனுமதிப்பார்கள்?

    ReplyDelete
    Replies
    1. சில ஓட்டல்களில் நாம் இருக்கும்போதே வந்து சோதிப்பார்கள். அநேகமாக இம்மாதிரிச் சின்ன ஓட்டல்களில் தான் பெரிய ஓட்டல்களில் வைக்கும் சோப், ஷாம்பூ, பேஸ்ட், பிரஷ், செருப்பு போன்றவற்றை நாமே எடுத்துக்கலாம். ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதே போல் காஃபி, தேநீர், பால் போன்றவையும் எத்தனை முறை வேண்டுமானாலும் நிரப்பச் சொல்லலாம். சில ஓட்டல்களில் இம்மாதிரிச் சோதனைகளும் உண்டு.

      Delete
  13. //எதிரே ஒரு தேநீர்க்கடை திறக்க என்னிடம் தேநீர் வேண்டுமா எனக் கேட்டார். நான் எதுவுமே வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்.//

    அதிகாலையில் எப்பூடி தேனீர் வேண்டாம் எனச் சொல்ல மனம் வந்துது உங்களுக்கு?:). எனை எத்தனை மணிக்கு நித்திரையால எழுப்பித் தந்தாக்கூட குடிப்பேன் சந்தோசமாக...ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, நீண்ட பயணம், அதிலும் பேருந்துப் பயணம் எனில் நான் கூடியவரை காலி வயிறோடு தான் பயணம் மேற்கொள்வேன். இல்லைனா பிரச்னை தான்!

      Delete
  14. எப்ப பார்த்தாலும் ஓசை, இட்லி ஆம்பாறு எனத்தான் சாப்பிடுறீங்க கர்:)) ஏதாவது ஸ்பெஷலா வித்தியாசமாக சாப்பிடுறீங்களே இல்லையே...

    ReplyDelete
    Replies
    1. இல்லையே! சப்பாத்தி, நான், பராத்தா எனச் சாப்பிட்டிருக்கோமே! காலை வேளையில் இட்லி கிடைச்சால் வயிற்றை ஏதும் செய்யாது என்பதால் விமானப் பயணத்தின் முன்னால் இட்லி சாப்பிட்டோம். எண்ணெய்ப் பதார்த்தங்கள் அப்போல்லாம் சாப்பிட மாட்டோம். பயணத்தின் போது கவனமாகவே உணவு எடுத்துப்போம்.

      Delete
    2. மதிய நேரம், அல்லது இரவு நேரம் எனில் உள்ளூர் உணவுகளே அதிகம் எடுத்துப்போம். காலை வேளையில் அவ்வளவு ஹெவியான ஆகாரம் வேண்டாம்னு ப்ரெட் டோஸ்ட், போஹா, இட்லி அல்லது தோசை அல்லது பூரி எனக் கொஞ்சம் லைட்டான ஆகாரங்கள்! அநேகமாகக் காலையில் பராத்தா சாப்பிட்டால் நான் மதிய உணவைத் தவிர்த்து விடுவேன். ஒருவேளையாவது ஆகாரம் இல்லாமல் வயிறு காலியாக இருக்கணும் எனக்கு! பழங்களோ, அல்லது நேரிடியாகப் பழங்களில் இருந்தே எடுக்கப்பட்ட பழச்சாறோ சாப்பிடுவேன். என் சாப்பாடு முறையே கொஞ்சம் விசித்திரம் தான். என் வயிற்றுக்கும் எனக்கும் அடிக்கடி நடக்கும் சண்டையில் அதற்குத் தேவையானதை நேரம் பார்த்துக் கொடுத்துடணும்.

      Delete
  15. அப்பாடி ஒரு வழியா பயணம் பூர்த்தியானதே.
    பூனே நல்ல ஊர்தான்.
    சிக்கி வாங்கவில்லையா.
    சென்னை மாரியாட் எல்லா ஹோட்டலிலும் பாட் காஃபி நன்றாகவே இருக்கும்.

    சென்னை சங்கீதா ஏர்போர்ட் ஹோட்டல் மஹா மட்டம்.
    உள்ளே 4000 கொடுத்து நாலு பேர் சாண்ட்விச் சாப்பிட்டோம்.

    விட்டல தரிசனம் முடிந்து திருச்சியிலும் பணம் செலவழித்தது வருத்தமே.

    நன்றாகவே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, சிக்கி இங்கே கோவில்பட்டி கடலைமிட்டாய்ப் பாக்கெட் வாங்கி 2,3 கொண்டு போயிருந்தோம். அங்கேயும் அதே ஏன் வாங்கணும்! மரியாடில் ஒரே முறை சாப்பிட்டோம்! அவ்வளவு ஒண்ணும் மனதைக் கவரவில்லை. ஏர்போர்ட் ஓட்டலில் சாப்பிட்டால் சொத்தை எழுதி வைக்கணும்! அவ்வளவு சொத்துக்கு எங்கே போறது? :))))))

      Delete
  16. வணக்கம் சகோதரி

    விரிவான பயண கட்டுரை. நல்லபடியாக விட்டலவன் தரிசனம் முடிந்த கையோடு ஊருக்கு நலமுடன் புறப்பட்டு வந்து சேர்ந்தீர்கள்.. பயண அலுப்புக்கள் தீர வீட்டுக்கு வந்ததும் உறங்கி, சற்று நிம்மதியாகவும், பயண அனுபவத்தை பற்றிய நினைவுகளோடும் இருக்கலாம். அந்த நினைவுகள் தரும் சுகம் பல நாட்களுக்கு நன்றாக இருக்கும். தங்களின் பயண கட்டுரை தங்களுடன் நாங்களும் பயணித்த உணர்வை தந்தது. என்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். வீட்டில் உறவுகள் வருகையால், நிறைய வேலைகள். இதோ தங்களின் அடுத்த பதிவையும் படித்துப் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, படித்து ரசித்ததுக்கு நன்றி. இங்கே எனக்கும் உறவினர்கள் வருகை! 2 நாட்களாக வர முடியவில்லை. அவங்க வேறே ஏதோ நான் கணினியில் எழுதுவேன் என்பதைச் சும்மாவானும் பெருமைக்குச் சொல்கிறேன்னு நினைச்சுட்டு ஒரே சிரிப்பு! சரினு எல்லாத்தையும் எடுத்தா காட்ட முடியும்னு விட்டுட்டேன்! சீரியல் பார்ப்பதைத் தவிர வேறே ஏதும் செய்ய மாட்டேன்னு நினைச்சுட்டு இருக்காங்க! :)))))) மனிதர்கள் பலவிதம்!

      Delete
  17. காபி, டீ விலையைப் பார்த்தால்... யம்மாடி...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, லக்னோ, தில்லி, மும்பையில் எல்லாம் காஃபி டே காஃபி 70 ரூபாய்க்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போ 2,3 வருஷங்களாகப் போகலை என்பதால் இப்போதைய நிலவரம் தெரியலை! சென்னையில் எப்போவுமே விலை அதிகம் தான்!

      Delete