எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 17, 2019

தேவராய சுவாமிகளின் கவசங்கள் ஆறு!

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏலென்றால் ஏலாய்!
ஒரு நாளும் என் நோவறியா இடும்பை கூர் என்
வயிறே உன்னோடு வாழ்தல் அரிது! (பெரிது)

இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கேன். 3 நாட்களாக எல்லாப் பாடும் பட்டாச்சு! ஒரு வழியா இன்னிக்குக் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்திருக்கேன். திரும்பத் திரும்ப இதை எழுத வேண்டாம்னு தான் இருந்தேன். ஆனால் அதையே சொல்லும்படி ஆகிறது. :( இத்தனைக்கும் நான் சமைச்ச சாப்பாடுதான்! :)))) எங்க வீட்டுக்கு வரவங்க பயப்படும்படி ஆயிடப் போகிறது. சாதாரணமான தினசரிச் சமையல் தான்! அதிகப்படி ஏதும் இல்லை. ஆனாலும் வயிறு என்னமோ வக்கரித்துக் கொள்கிறது. காரணம் ஏதும் வேண்டாம் அதுக்கு! இரண்டு நாட்கள் முழுப்பட்டினி போட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. கணினிக்கும் இரண்டு நாட்களாக வரவே இல்லை. மொபைலில் கூட வாட்சப்பெல்லாம் பார்க்கலையேனு என் தம்பி தொலைபேசிக் கேட்டார். நேத்திக்கு மத்தியானமாத் தான் பார்த்தேன். இரண்டு நாளும் படுக்கை தான்! நம்மவர் என்ன சாப்பிட்டார், என்ன செய்தார்னு எதுவும் தெரியாது! :(

இதைப் பற்றி நினைக்கையில் தான் நேற்று முருகனுக்கு உப்பில்லா விரதம் இருந்த நாட்கள் எல்லாம் நினைவில் வந்தன. அது மாதிரி வாரம் ஒரு நாள் உப்பில்லா விரதம் இருக்கணும்னு நினைத்துக் கொண்டேன். அப்போ கந்த சஷ்டி கவசம் நினைவில் வந்தது. அதைச் சொல்லும்போதே மற்றக் கவசங்களையும் தேடினால் என்னனு நினைத்தேன். நினைத்ததும் சஷ்டி கவசங்கள்னு தேடினால் கைமேல் வந்து நின்றன அனைத்துக் கவசங்களும். இத்தனை வருஷமாக இந்தத் தளத்துக்குப் பல முறை போயிருக்கேன். இந்தக் கவசங்கள் கண்களில் பட்டதே இல்லை. இப்போ ஒரே தேடலில் அனைத்தும் வந்து விட்டன. கௌமாரம். இணையதளத்தில் தேவராய சுவாமிகள் எழுதிய ஆறுபடை வீடுகளின் கவசங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நாம் அன்றாடம் சொல்லுவது திருச்செந்தூர்க் கவசம். மற்றக் கவசங்களும் அங்கே இருக்கின்றன. தேவையானவர்கள் படித்துப் பயனுறலாம்.
கவசங்கள் ஆறு

முறையே பரங்குன்றத்தில் ஆரம்பித்து, திருச்செந்தூர், ஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடும் குமரன்,  பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகள். நாம் வழக்கத்தில் வைத்திருக்கும் படைவீடுகளில் ஒரு சில வேறுபடுகின்றன. அதைக் குறித்து ஆராய வேண்டும். தற்சமயம் கவசங்கள் கிடைத்து விட்டன என்பதே மகிழ்ச்சியைத் தருகிறது.  திருமதி ரேவதி சங்கரன் எம்பி 3 ஆடியோவாகப் பதிந்துள்ளார். அதை இன்னமும் கேட்கவில்லை.

முதலில் வரும் நேரிசை வெண்பாவான
"துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம்
நெஞ்சிற்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை!"

என்பதுவும்,

"அமரர்  இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி!"
என்பதுவும் ஆறிலும் முதலில் வருகின்றன. அதன் பின்னர் கவசங்கள். தேவைப்படுவோர் படித்து இன்புறலாம். குமரன் அருளைப் பெறலாம். 

49 comments:

  1. வணக்கம்..

    முருகன் திருவருள் முன்னின்று காக்க..
    பத்தாண்டுகளுக்கு முன்பே ஆறு கவசங்களைப் பற்றியும் தெரிந்திருக்கிறேன்..

    அவற்றுள் இப்போது புழக்கத்தில் உள்ளது செந்தூருக்கான கவசம்..
    இது மட்டுமே எல்லாருக்காகவும் அனுக்ரகிக்கப்பட்டது என்பார்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, ஆமாம், எனக்கும் குழுமங்கள் வாயிலாகக் கவசங்கள் ஆறு இருப்பது தெரிந்திருந்தது. ஆனாலும் நேற்றுத் தான் கை வசப்பட்டுள்ளது. செந்தூர்க் கவசத்தைச் சொல்லாத நாளே இல்லை.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    நல்ல பயனுள்ள தேடலாகத் தேடி தந்திருக்கிறீர்கள்.கவசங்களை படித்து கவசமாக்குகிறோம்.மிகவும் நன்றி. தங்கள் உடல் நிலை தற்சமயம் எவ்வாறுள்ளது? அதுதான் தங்களை நேற்று எங்கும் காணவில்லையே எனப் பார்த்தேன். தங்கள் உடல் நிலை நன்றாக குணமடைய பிரார்த்திக்கிறேன். உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, என்னைத் தேடியதுக்கு நன்றி. எழுந்து உட்கார முடியாமல் இரு நாட்கள்! ஆகவே எதுவும் தெரிவிக்க முடியலை! நானே எழுந்து வந்து சொன்னால் தான் உண்டு! :))))) தற்சமயம் கொஞ்சம் பரவாயில்லை.

      Delete
  3. அதிகபடியான வெயிலால் இப்படி இருக்கிறதோ என்னமோ!
    உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
    திங்கள் கிழமை பதிவில் காணவில்லையோ!
    உறவினர் வருகை, அல்லது ஏதாவது கல்யாணம் போன்றவைகளால் காணவில்லை என்று நினைத்தேன்.
    கவசங்கள் பார்க்கிறேன். சிலது படிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, வெயில் தான் முக்கியக் காரணம்! தண்ணீராய்க் குடித்து வந்த எனக்கு திடீரெனத் தண்ணீர் ஒவ்வாமை ஏற்படவுமே வயிறு பிரச்னை எனப் புரிந்து விட்டது. இத்தனைக்கும் எளிமையான சமையலாகத் தான் சமைத்துச் சாப்பிட்டு வந்தோம். அதிலும் நான் புளி சேர்த்த குழம்பு, ரசம் தவிர்த்தே வந்தேன். ஊறுகாய்களும் தொடவில்லை!

      Delete
  4. முருகன் கவசங்கள் உங்களை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவசங்களை நேற்று ஒரு பார்த்தேன். மறுபடி இன்று படிக்க வேண்டும்.

      Delete
  5. நல்ல தகவல்....

    நீங்கள் விரைவில் நலம்பெற எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  6. தப்பா எடுத்துக்காதீங்க. உடனே தவறுகள்தான் கண்ணில் படுது.

    அவ்வையாரின் நல்வழி பாடலை, அடிகள் சரியா இருக்கும்படி எழுதலை. அதனால தளை தட்டும், வெண்பா சரியா வராது.

    ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
    இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
    என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
    உன்னோடு வாழ்தல் அரிது

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி. எனக்குத் தமிழ் இலக்கணம் தெரியாது!

      Delete
  7. என்ன... சாப்பாடு ஏன் ஒத்துக்கொள்ளவில்லை? உங்களுக்குத் தெரியுமே எது சரிப்படும், எது சரியா வராதுன்னு. ஏதேனும் புது மசாலா இல்லை காயா? அலர்ஜியா?

    தேவராய சுவாமிகள் என்று சொன்ன உடனேயே கந்த சஷ்டி கவசம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. செவ்வாய் தோறும் சொல்லணும்னு நினைப்பேன். ஆனால் அப்படி அமைவதில்லை. சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் தரிசனத்துக்கு வரிசையில் நின்றபோது சொன்னேன். அங்க அங்க சந்தேகம் வந்துடுத்து.

    ReplyDelete
    Replies
    1. நான் தினமும் சொல்கிறேன்!

      Delete
    2. என்ன காரணம்னு எங்க இருவருக்குமே புரியவில்லை. ஏனெனில் கடந்த இரு மாதங்களாகவே அதிகக் காரம், மசாலா(எப்போவுமே சேர்ப்பதில்லை. என்றாவது தான். அது கூட இப்போ இல்லை) சாப்பிடவில்லை. நேரம்! கந்த சஷ்டி கவசம் (திருச்செந்தூர்க் கவசம்) ஸ்ரீராமஜயம் ஜபம் இரண்டும் எப்போதும் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

      Delete
  8. //நிமலருள் கந்தர் சஷ்டி கவசம் தனை// - நிமலன் அருள் கந்த சஷ்டி கவசம் தனை என்றுதான் வரும் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை!

      Delete
    2. உங்களுக்குத் தெரிந்திருக்கும் கீதா சாம்பசிவம் மேடம்...ஆனால் என் மனதில் 'நிமலன் அருள்' என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.

      நிமலன் நிர்மலன் நீதி வாணவன் நீள்முடி அரங்கத்து அம்மான், திருக்கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்னதே என்பது ஆழ்வார் பாசுரம்.

      நிமலன் என்பதற்கு சுத்தமானவன் அல்லது 'கடவுள்' என்று அர்த்தம். நிமலன் அருள் கந்தர் சஷ்டி கவசம் என்பதிலிருந்து நிமலன் என்பவர் சிவன் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படிப் பொருள் கொள்வதால் (வலிந்து) நிமலன் என்பதை நிமலர் என்று மாற்றியிருப்பார்கள்.

      நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - இதிலும் நிமலன் என்பது 'நிர் மலன்' அதாவது குற்றங்கள் இல்லாதவன், பரிசுத்தமானவன் என்ற பொருளில்தான் வருகிறது.

      Delete
    3. பெரியவங்க சொல்றதை மறுக்கக்கூடாது. அதுனால முந்தின பின்னூட்டத்தை வாபஸ் வாங்கிக்கறேன்.

      Delete
    4. உங்க அளவுக்கு ஆராயஎனக்குத் தமிழ் சுத்தமாய்த் தெரியாது! பெரியவங்க சொல்லுவதை அப்படியே ஏற்கிறேன். எனக்கு நிமலரருள் என்று தான் பாடம்!

      Delete
  9. நிச்சயம் கவசங்களைப் பார்க்கிறேன். ஆமாம்.... திருச்செந்தூர், திருவேரகம் என்றெல்லாம் எழுதிவிட்டு திருப்பரங்குன்றம், திருஆவினன்குடி என்று எழுதலையே?

    ReplyDelete
    Replies
    1. //முறையே பரங்குன்றத்தில் ஆரம்பித்து, திருச்செந்தூர், ஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடும் குமரன், பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகள். // கவனித்துப் படிக்கவும்.

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 'திரு' என்ற அடைமொழி எங்கே என்பது என் கேள்வி.. இப்போ பூஞ்சதா?

      Delete
    3. அடைமொழி இல்லாவிட்டால் என்ன? புரியுமே!

      Delete
  10. இதுக்கு ஸ்ரீராம், 'முருகன் என் இஷ்ட தெய்வம்' என்று பின்னூட்டம் போடுவாரோ?

    ReplyDelete
    Replies
    1. அடடே... மிஸ் பண்ணிட்டேனே....!!

      Delete
    2. இருவருக்கும் நன்றி. முருகன் பலருக்கும் இஷ்ட தெய்வம்! மாயோன் மருகன் ஆயிற்றே!

      Delete
  11. கீதாக்கா உடல் நலம் இப்போ பரவாயில்லையா? எதனால இப்படி அடிக்கடி வருகிறது அக்கா?

    வெயில் ஒத்துக்கொள்ளவில்லையா? இல்லை மனதில் ஏதேனும் சுழற்றி சுழற்றி எண்ணங்கள் ? நம் மனமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுவதுண்டு வயிற்றில் பிரச்சனைக்கு.

    பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லைதான்...பார்த்துக் கொள்வதற்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, வெயிலும் காரணம், சமீபத்தில் வந்த உறவினர் வருகை! அவங்க பேச்சு! எல்லாமும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டது இரண்டு பேருக்குமே!

      Delete
  12. முதல் பாடல் அறிமுகம் உண்டு அது போல சஷ்டிக் கவசம் தினமும் கேட்கிறேனே. அது போல ஷண்முகக் கவசமும்.

    உங்களுக்கு விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஷண்முக கவசம் வேறே! அது பாம்பன் ஸ்வாமிகள் எழுதியது அல்லவா? தேவராய ஸ்வாமிகளின் சஷ்டி கவசம் வேறே இல்லையா? இது ஆறுபடை வீடுகளையும் குறிப்பதோடு அல்லாமல் "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தை யோக ரீதியில் விளக்குகின்றது என்கிறார்கள். முதல் படை வீடான பரங்குன்றத்தில் "ச" என்னும் எழுத்து ஆரம்பிக்கிறது. அதன் பொருள் புரிந்து விட்டால் எல்லாமும் புரியும் பேராசிரியர் டி.என்.கணபதி அவர்கள் இது குறித்துப் பல விளக்கங்கள் எழுதி உள்ளார். புத்தகம் தேடிப் பார்க்கணும். இரண்டு நாட்களாக முருகன் நினைவு!

      Delete
  13. என்ன ஆச்சு அக்கா? காலைதான் வல்லிம்மா கவலைப்பட்டு வாட்ஸாப்பில் கேட்டார்கள். ஒன்றும் இருக்காது, வேறு வேலையில் பிஸியாக இருப்பார் என்று சொன்னேன். வயிற்றுக்கோளாறா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வழக்கமான பிரச்னை தான்! இந்த முறை எழுந்துக்க முடியலை! அதான் வித்தியாசம். இப்போப் பரவாயில்லை.

      Delete
  14. நானும் ஏதோ உங்கள் வீட்டில் விசேஷம் என்றே நினைத்திருந்தேன். உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். கவசங்களைப் பின்னர் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மெதுவாப் பாருங்க ஸ்ரீராம்.

      Delete
  15. அன்பு கீதா,எனக்கு ஷஷ்டி கவசமும், ஷண்முகக் கவசம் மட்டுமே
    தெரியும். மன்ம் அமைதி இல்லாமல் இருக்கும் போது உடலும் படுத்தும்.
    பத்திரமாக இருங்கள்.
    பெண்ணிடம் நேற்று தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
    கீதா வெளியூருக்குப் போனால் இப்படி எல்லாஅம் சமாளிப்பார் என்று,
    வீட்டுக்குள்ளயே தொந்தரவு வந்து விட்டதே.
    பாவம் அவரும் ரொம்பக் கவலைப்
    பட்டிருப்பாரே.

    ஏதாவது நீராகவும் மோராகவும் சாப்பிட்டு சமாளிக்கவும்.
    கவசம் காக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, உங்கள் அனைவரின் ஆதரவான வார்த்தைகளும் அன்பான நெஞ்சமும் எப்போதும் என்னை எல்லாக் கஷ்டங்களில் இருந்தும் கவசம் போல் காத்து வருகிறது. மன உளைச்சல் தான் காரணம். வேறே ஒன்றும் இல்லை! சரியாகி விட்டது! நன்றிம்மா!

      Delete
  16. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்

    //துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம்
    நெஞ்சிற்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
    நிஷ்டையும் கைகூடும்
    நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை//

    உண்மையில் இதைக்கேட்கும்போது சிலிர்த்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! எனக்கு எத்தனையோ ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியது இந்தக் கவசம் தான். பல சமயங்களில் காக்க, காக்க, கனகவேல் காக்க! என்னும்போது கண்ணீர் தாரையாய் வந்துடும்! வாய் திரும்பத் திரும்ப அதையே சொல்லும்!

      Delete
  17. உங்களை எ.பி.யில் பார்க்க முடியவில்லையே, உடம்பு சரியில்லையா? என்று ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடம்பை கவனித்து சரி செய்து கொண்டு சீக்கிரம் வாருங்கள். நீங்கள் இல்லாமல் வெறிச்சென்று இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, இந்த வாரம் "திங்கற"கிழமையில் உங்களோட செய்முறை போல! இன்னிக்குத் தான் பார்த்தேன். இலை அடை தானே! அங்கேயும் போய்க் கருத்துச் சொல்கிறேன். தேடியதுக்கும் காணாமல் வெறிச்சுனு இருக்குனு சொல்லுவதற்கும் நன்றி. இத்தகைய அன்பு இருப்பதால் தான் மனம் திரும்பத் திரும்ப இணையத்தையே சுற்றுகிறது!

      Delete
  18. உடம்பு பற்றிகவலை வேண்டாம் கவலைப்படுவது பிரயோசனமில்லை கண்டர் சஷ்டி கவசம் மட்டும் தெரியும் சில வாசகங்கள் பொருள் இல்லாததுபோல் இருக்கும் உ-ம் ரரரர ரிரிரிரி

    ReplyDelete
    Replies
    1. கவலை எல்லாம் பட்டதே இல்லை ஐயா! என்னன்னா காஃபி போடக் கூட இம்முறை எழுந்துக்கலை! எப்போவும் காஃபி போட்டு சாதம் வைச்சு எல்லாம் பண்ணிடுவேன். இம்முறை முடியலை! எல்லாம் அவரே பார்த்துக்கறாப்போல் ஆச்சு! :(

      Delete
    2. //சில வாசகங்கள் பொருள் இல்லாததுபோல் இருக்கும் உ-ம் ரரரர ரிரிரிரி// அதன் உட்பொருள் புரிந்து விட்டால் "சரவணபவ" வின் உட்பொருளும் புரிந்து விடும். பின்னர் நாம் சாமானிய மனிதராக இருக்க மாட்டோம். ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையேயும் யோகத்தின் காரண, காரியங்கள் விளக்கப்பட்டு இருக்கிறது என என் தாத்தா சொல்லுவார். அதோடு மூலம் புரிந்தால் தான் மேலே போகலாம் என்பார். மேலே போனால் கந்தனைக் காணுவோம் என்றும் அது தான் குன்றுதோறாடும் குமரனின் கோலத்துக்குப் பொருள் எனவும் சொல்லுவார். "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி!" என்னும் பாடலின் பொருளிலும் இந்தக் "கந்தன்" என்னும் சொல்லின் பொருள் மறைந்திருப்பதாகச் சொல்லுவார். அவர் ஒரு யோகி! வேலை வழிபட்டு வந்தவர்! அதற்கான நியம, நிஷ்டைகளோடு செய்து வந்தார். ஆனால் எங்களில் யாருக்கும் அதைக் குறித்து விளக்கவில்லை! :(

      Delete
  19. சுட்டிக்கு சென்று எல்லா பாடல்களையும் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி! நான் முதல் இரு கவசங்கள் மட்டும் கேட்டேன். பின்னர் போகமுடியலை! போகணும்!

      Delete
  20. விரைவில் முழுமையாக பூரண குணமடைய வேண்டுகிறேன். வெய்யில் அதுவும் திருச்சியில் கொளுத்துகிறது என்கிறார்க்ள். கவனமாக இருங்கள். infection காற்றிலேயே பரவுகிறது. இப்போதெல்லாம் வியாதிகளுக்கு சரியான காரணம் கண்டு பிடிக்க முடிவதில்லை. infection அதிகமானாலே சர்க்கரையும் மேலே ஏறி விடும். என் அம்மா [101 வயது] அடிக்கடி சொல்வது, ' ல‌ங்கணம் பரம ஒளஷதம்!' அது போல சற்று வயிற்றைக் காயப்போட்டால் வயிறு சற்று சாந்தமாகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன். வெயில் அதிகம் தான்! ஆனால் ஏப்ரல், மே இரண்டு மாதங்களும் தான் ரொம்பவே கடுமையாக இருந்தது. எப்போவும் மே 20 தேதிக்குக் காற்று ஆரம்பிக்கும். இந்த வருஷம் மௌனம்! இப்போத் தான் பத்துப் பதினைந்து நாட்களாகக் காற்று ஆரம்பித்து வீசுகிறது, ஆகவே வெயில் அடித்தாலும் கடுமை தெரியவில்லை. கவனமாகவே இருந்து வருகிறேன். வயிறு அடிக்கடி காயும்! அதைக் கவனிப்பதே இல்லை! :)))))

      Delete
  21. தேவையானவர்கள் பகிர்ந்துகொள்ள, வாசிக்க கவசங்களைப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete