Coffee with Geetha 1
Coffee with Geetha
படங்களுக்கு நன்றி கூகிளார்
மேற்கண்ட சுட்டிகளில் காஃபி பற்றிய அனுபவங்களை எழுதி இருக்கேன். ஸ்ரீராம், அதிரடி எல்லாம் படிச்சிருக்காங்க. என்றாலும் மறுபடி போய்ப் பாருங்க. நெல்லைத்தமிழர் காஃபி பாட் பற்றிக் கேட்டதும் சும்மா விளையாட்டுக்குக் கேட்கிறார் என்றே நினைச்சேன். அவருக்குத் தெரியலை என்பதைப் புரிந்து கொண்டதும் படங்கள் தேடினேன். சரியாக் கிடைக்கலை. கிடைச்ச வரை போட்டிருக்கேன்.
ரயிலில் முதல் வகுப்பில் போனாலோ அல்லது ஏதேனும் பெரிய உணவங்கங்களிலோ காஃபி கேட்டால் தனித்தனியாக வட்டை/டபரா, தம்பளரில் கொடுக்க மாட்டாங்க! ஒரு பெரிய ட்ரேயில் காஃபி டிகாக்ஷன் தனியாக, பால் தனியாக, சர்க்கரை ஒரு கிண்ணத்தில் நான்கு(குறைந்த பட்சம்) ஸ்பூன்கள், நான்கு கப்/சாசர்கள் உள்படக் கொண்டு வந்து வைப்பாங்க. பல சமயங்களிலும் டிகாக்ஷன் இருக்கும் ஜக்கில் மேலே ஒரு சின்ன வடிகட்டி போன்ற கிண்ணத்தில் பொடியைப் போட்டுக் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி இருப்பாங்க. டிகாஷன் சொட்டுச் சொட்டாகக் கீழே உள்ள ஜக்கில் இறங்கும். பால் அதைவிடக் கொதிக்கும் பதத்தில் இருக்கும். இன்னும் சிலர் பொடியைப் போட்டு வெந்நீரை விடாமல் ஜக்கில் கொதிக்கும் டிகாஷன் மட்டும் வைப்பார்கள். நாம் நமக்கு ஏற்றபடி டிகாஷன் எடுத்துக் கொண்டு கொதிக்கும் பாலை ஊற்றிச் சர்க்கரை நமக்குத் தேவையான அளவு போட்டுக் கொண்டு குடிக்கவேண்டும்.
இந்தப் பாட் காஃபி குறைந்தது நான்கு நபர்கள் தாராளமாய்க் குடிக்கும்படி இருக்கும். தேநீர் என்றாலும் அதே முறை தான். சமயங்களில் ஜக்கில் கீழேயே பொடியைப் போட்டு( நம் ஊரில் போடுவது போல் டஸ்ட் இல்லை! நல்ல பெரிய இலைகள் கொண்ட தேயிலைகள்) வெந்நீரை ஊற்றி இருப்பார்கள். அது ஊறித் தேநீர் தயாராகப் பத்து நிமிஷமாவது ஆகும். பெரும்பாலும் ஜக்கில் தேநீர் ஊற்றும் முனையில் வடிகட்டி இருக்கும் என்பதால் தேநீரை அப்படியே ஊற்றலாம். இலைகள் பெரிது என்பதால் அவை வெளியே வராது. அதுவே டஸ்ட் என்றல் இம்முறை சரியாக வராது. ஆனால் பெரிய ஓட்டல்களில் மற்ற இடங்களில் தேயிலைகளே போட்டுத் தேநீர் தயாரித்துக் கொடுப்பாங்க!அதை ஒரு முறை குடித்துப் பார்த்தால் நாம் குடிப்பது தேநீரே இல்லை என்பது புரிந்து விடும்.
ஜக்கின் மேல் பாகத்தில் தேயிலையைப் போட்டு வெந்நீர் ஊற்றிக் கொடுக்கும் வகையில் தேநீருக்கு மட்டும் இருக்காது. ஏனெனில் வெந்நீரில் தேயிலை ஊற வேண்டும் என்பதால் ஜக்கிலேயே நேரடியாகப் போட்டுத் தான் கொடுப்பார்கள். நன்கு ஊற ஊறத் தேநீரின் சுவை அதிகமாக இருக்கும். பல சமயங்களிலும் காஃபிக்கு காஃபி ப்ரூயர் Coffee Brewer எனப்படும் ஜக்கை அப்படியே வைப்பதும் உண்டு. அதிலும் மேலே பொடி போட்டு வெந்நீர் ஊற்றி இருப்பார்கள்.
கீதாக்கா அட! முதல் இரு பகுதிகளை மிஸ் பண்ணியிருக்கேனோ வரேன் அதையும் படித்து, இப்பகுதியையும் படித்து விட்டு வருகிறென். ஆஜர் வைச்சாச்சு
ReplyDeleteகீதா
படிச்சுட்டு வாங்க. வீட்டுக்கு உறவினர் வந்திருப்பதாலும் யாரேனும் வருகை தருவதாலும் கணினியைத் திறப்பதும் மூடுவதுமாக 2 நாட்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. பின்னர் வரேன்.
Deleteநான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ வோ!!! ஹெ ஹெ ஹெ
ReplyDeleteகீதா
வாங்க தி/கீதா, நீங்க தான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்டு!
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteஹாஹாஹாஹா! வேணுங்கட்டிக்கு வேணும்! வெங்கலங்கட்டிக்கு வேணும்!
Deleteஇப்பொழுது டவரா செட்டு பார்ப்பதே அரிதாகி விட்டது.
ReplyDeleteகில்லர்ஜி.... 'கும்பகோணம் டிகிரி காபி' ன்னு நெடுஞ்சாலை முழுவதும் ஏகப்பட்ட கடைகள் இருக்கே. அவைகளில் டவரா செட்டில்தான் காபி கொடுக்கிறாங்க. டிரை பண்ணிப் பாருங்க, நீங்க டிரைவ் பண்ணி போகும்போது (அப்புறம் நல்லா இல்லைனு என்னைத் திட்டக்கூடாது)
Deleteவாங்க கில்லர்ஜி, மதுரையில் வடக்காவணி மூலவீதி, மேலாவணி மூலவீதியின் மூலையில் இருக்கும் கடையில் கேட்டால் வட்டை, டம்பளர் எனக் கேட்கவேண்டும். கொடுக்கின்றனர். காஃபியும் தரமாகவே இருக்கு! அதே போல் மேலச்சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி முனையில் உள்ள கோபு ஐயங்கார் கடையிலும் அதன் அருகே உள்ள காஃபிக்கடையிலும் வட்டைக் காஃபி உண்டு.
Deleteநெல்லைத்தமிழர் சொல்லி இருக்கும் கும்பகோணம் டிகிரிக் காஃபிக்குப் போகவே போகாதீங்க! அது டிகிரி காஃபி இல்லை. சிகரி காஃபி!
Deleteதேவகோட்டையில் நாராயணவிலாஸ் மிகப் பிரபலம். தற்போதும் இருக்கிறது ஆனால் அன்று குடித்தது போலில்லை.
ReplyDeleteதேவகோட்டைக்கு வந்தது இல்லை கில்லர்ஜி! வரணும் ஒரு முறையானும்!
Deleteஎங்கள் பிறந்த வீட்டில் டபராவை வட்டை என்றுதான் சொல்லுவது கீதாக்கா..
ReplyDeleteபழைய பதிவில் அதிரடி இருக்காங்களா என்ன?!!
தேநீர் என்றால் தேநீர் இலை போட்டு டீ போடும் அந்த டீ க்கு நிகர் எதுவும் இல்லை. எங்கள் வீட்டில் லீஃப் டீ தான். டஸ்ட் வாங்கியதில்லை அதுவும் திருவனந்தபுரத்தில் இருந்தவரை. அஸ்ஸாம் லீஃப் டி மற்றும் கடைகளில் கிடைக்கும் டஸ்ட் இப்போது இரண்டுமே இருக்கிறது வீட்டில்...
கீதா
பழைய பதிவில் அதிரடியின் கருத்தைப் பார்த்த நினைவு. தேநீர் இலை போட்டு ஊற வைச்சுக் குடிக்கும் தேநீர் தான் உண்மையான தேநீர். எங்களுக்கும் அசாமில் இருந்து சித்தி பிள்ளையும் ஷில்லாங்கிலிருந்து யாரோ நண்பரும், சிலோனிலிருந்தும் தேயிலைகள் வந்திருக்கின்றன. ஊறிய பின்னர் நீளமாக ஆகும் அந்தத் தேயிலைகள். ஊட்டியில் க்ரானூல்ஸில் தேநீர் நன்றாக இருக்கும், அரசு நடத்தும் கடையில் தான் வாங்கணும். இல்லைனா ஏமாற்றுதல் அதிகமா இருக்கும். கொடைக்கானலில் காஃபி பவுடரும் சரி, தேயிலைத்தூளும் சரி! சுத்தம்! வாங்கித் தூரத் தான் கொட்டணும்.
Deleteகாஃபி பாட்/ரீ பாட் இப்போதும் இருக்கு வீட்டில் அம்பேரிக்காவில் இருந்து நண்பர் ஒருவர் வாங்கி வந்து அவர் பயன்படுத்தி சரியாக அவருக்கு வரவில்லை என்று எங்களிடம் கொடுத்திருந்தார். அதில் என்னவென்றால் அது பெர்குலேஷன் பாட். காஃபி டிக்காக்ஷனும் இறங்கிக் கொதிக்கும். அதன் சுவை மாறுகிறது என்று டீ லீஃப் போடுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம்...கண்ணாடி பாட்..பானையில் தண்ணீர் வேண்டிய அளவு விட்டு மேலே இருக்கும் கிண்ணத்தில் பொடி போட வேண்டும். இக்கிண்ணம் ஒரு மெலிய குழலுடன் அடியில் தண்ணீரில் மூழ்கும்படி இருக்கிறது. பாட்டை பளக் செய்து ஆண் செய்துவிட்டால் தண்ணீர் கொதித்து ஆவி மேலே உள்ள பொடிக்குப் போய் அதன் எசன்ஸை எடுத்துக் கொண்டு மீங்கும் கீழே வந்து இருகும் தண்ணிருடன் கலந்து விடுகிறது. அதுவும் சேர்ந்து கொதிக்கிறது என்னவோ டிக்காக்ஷன் அத்தனை நன்றாக இல்லை. எலக்ட்ரிக் பெர்ககலேட்டர்...காஃபி பாட்...
ReplyDeleteகீதா
பெர்குலேட்டர் காஃபி எங்களுக்கும் அவ்வளவு பிடிக்காது! ஆனால் அதில் தேநீர் சுவையாக இருக்கும். சமயங்களில் பழைய பயன்படுத்தாத பெர்குலேட்டரில் ஜீரக ரசம், மிளகு ரசம் வைத்தால் அருமையாக வாசனையுடன் இறங்கும். வர்ஜீனியா போயிருந்தப்போ ஓட்டல் அறையில் பழைய காஃபி மேக்கரில் அம்முறையில் ரசம் வைத்தேன். சாதம் ரைஸ் குக்கரில்.
Deleteஅட இதுக்குப் பேர்தான் காஃபி பாட்டா? இதைத்தான் எனக்கு நிறைய இடங்களில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்களே (4+* ஹோட்டல்களில்). ஆனா பாருங்க.. நான் எங்கேயும் இதனை உபயோகித்ததே இல்லை.
ReplyDeleteநெல்லைத்தமிழரே, உங்களுக்கும் ஶ்ரீராமும் தெரியாமல் இருக்காது என்பதை அறிந்ததாலேயே போட மாட்டேன் என்று சொன்னேன்.
Deleteதிருச்சி ரயில்வே ஸ்டேஷன், மேல் ரெஸ்டாரண்ட் போயிருக்கிறீர்களா.
ReplyDeleteநான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்.
காஃபி நிறையக் கொதிக்கும் சுவையான காஃபி.
நானும் இவரும் பல நாட்கள் அனுபவித்திருக்கிறோம்.,
அருமையான பதிவு கீதா மா.
வாங்க வல்லி, அங்கே மேலே அறை எடுத்து 2,3 முறை தங்கவும் செய்திருக்கோம். காலை காஃபி சூடாகக் கொடுப்பார்கள்! பேப்பரும் வரும்! எல்லாம் அறை எடுத்திருப்பவர்களுக்குச் செய்யும் சேவை! இப்போக் காஃபி எல்லாம் கொடுப்பதில்லை போல! திருச்சி ரயில் நிலையத்தில் அந்தக் காலங்களில் சுமார் 20 அல்லது 30 வருடங்கள் முன்னர் காஃபி டே வென்டிங் மிஷினும் இருந்தது. அதிலும் காஃபி நன்றாக இருக்கும்.
Deleteஓ...இதைத்தான் சொன்னீர்களா? நான் சிறிய சைஸ் மண்பானை போன்றெல்லாம் கற்பனைக்குப் போய்விட்டேன்!
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஶ்ரீராம், நான் தான் சொன்னேனே, உங்களுக்குத் தெரிந்திருக்கும் என!
Deleteகாஃபியும் அலுக்குமோ? சமீப காலங்களில் சில சமயங்களில் இபப்டியாவது காஃபியை குடித்தே ஆகவேண்டுமா என்று தோன்றுகிறது... ஆனால் மறுவேளை காஃபியைதான் தேடுகிறது மனம்.
ReplyDeleteகாஃபி பவுடர், பால் போன்றவற்றின் தரமும், குணமும் காஃபியின் சுவையை நிர்ணயிக்கிறது. சில சமயம் ஏதேனும் ஒன்றில் குறை இருந்தாலே காஃபி அலுத்துப் போகிறது.
Deleteஎங்கள் வீட்டில் காஃபி பெர்கொலேட்டரில்தான்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா! காஃபி பெர்கோலேட்டர் எங்களுக்கு அவ்வளவாப் பிடிக்கிறதில்லை.
Deleteஆஆஆஆஅ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது? போஸ்ட் போட்டதே தெரியல்ல கண்ணுக்கு.
ReplyDeleteகாபி வித் கீதா என்றதும்.. கீதா கீதாக்காவைச் சந்திக்க போயிருக்கிறா என நினைச்சு செல்ஃபி பார்க்க ஓடி வந்தேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அங்கு ஸ்ரீராம் ஏமாத்திட்டார் இன்று, இங்கு கீசாக்கா ஏமாத்திப்போட்டா.. சே..சே.. நாளே சரியில்லைப்போலும்:))
ஹாஹாஹாஹாஹா! ஏமாறச் சொன்னதும் நானோ! ஏமாந்து நிற்பதும் நானோ! கீதா இங்கே ஒண்ணும் வரதாச் சொல்லலையே!
Deleteஓ இவ்வளவு வேலை இருக்கா...!?!
ReplyDeleteவாங்க டிடி, இதிலே நமக்கு ஒண்ணும் வேலை இல்லை. அவங்களே எல்லாம் போட்டுத் தயார் செய்து கொண்டு வந்து வைப்பாங்க! நமக்குத் தேவையான அளவில் நாமே கலந்துக்கலாம்///////1
Deleteஎங்கள் வீட்டில் இருக்கும் காஃபி பாட்டை உபயோகிக்கவேயில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரில் சுவை அலாதிதான். ஒரு முறை நட்ஸ் அண்ட் ஸ்பைஸிலிருந்து என் மகன் தேயிலை வாங்கி வந்தான், மிகவும் நன்றாக இருந்தது.
ReplyDeleteவாங்க பானுமதி! காஃபி வாசனை இழுத்துடுத்து போல! தேநீர் எங்களுக்கும் (லீஃப்) இலைத் தேநீர் தான் ரொம்பப் பிடிக்கும். ஊட்டியிலும், அஸ்ஸாமிலும் இலைத் தேநீர் ரொம்பவே நன்றாக இருக்கும். அந்த வாசனையோடு தேநீரைக் குடித்து விட்டால் பின்னால் இங்கே கொடுக்கும் தேநீரே ருசிக்காது!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகாஃபி கதை நன்றாக உள்ளது.பாட் காஃபி பற்றி அறிந்து கொண்டேன். காலையில் காஃபி குடிக்கவில்லையென்றால், தலைவலி நிச்சயம். மாலை கூட தவிர்த்து விடலாம். ஆனாலும், தவிர்ப்பதில்லை. தொட்டில் பழக்கமாக இந்த பில்டர் காஃபி பிடித்து கொண்டு விட்டது தேநீர் அவ்வளவாக விருப்பமில்லை.
சூடான காஃபியை டவராவில் விட்டு குடிக்கும் போது நன்றாக இருக்கும். டவராதான் பின்னர் சாஸராக உருமாறியது. நெ.தமிழர் சொல்வது போல், "நெடுஞ்சாலை கும்பகோணம் டிகிரி காபியில்" பித்தளை டவராசெட்தான் தருகிறார்கள். இப்போது ஒரளவு எல்லா காஃபி கடைகளிலும், டவராசெட் தலை காட்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நேற்று வருவதாக சொன்னவள் இன்று வந்துள்ளேன். நேற்று இரவு காற்று, மழையில் போன நெட் இணைப்பு இப்போதுதான் வந்துள்ளது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நான் ஆரம்பத்தில் காஃபி எல்லாம் குடிச்சதில்லை! கல்யாணம் ஆகி 2 ஆவது பிள்ளை பிறந்த பின்னரே பழக வேண்டி ஆயிற்று! மாலை இப்போதெல்லாம் அதிக வெயிலில் எதுவும் குடிக்கத் தேவை இருப்பதில்லை. முன்னெல்லாம் மத்தியானம் ஒரு மணிக்குத் தேநீர் குடிப்பதைப் பழக்கி வைச்சிருந்தேன். பின்னர் அதையும் நிறுத்தியாச்சு. ரொம்பவே காஃபி, தேநீர் மேல் விருப்பம் இல்லை. இருந்தால் குடிச்சு வைப்பேன். இல்லைனா இல்லை. :)))))
Deleteநீங்க தாமதமாக வந்தது பற்றிப் பரவாயில்லை. எனக்கும் உறவினர்கள் வருகையால் இரண்டு, மூன்று நாட்களாக வர முடியவில்லை. பழைய கதை, சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் பரிமாறிக்கொண்டிருந்ததில் சரியாப் போய் விட்டது!