எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 17, 2020

ஐம்பெரும் விழா வருது!

அப்பாடானு இருக்கு. அரை மணி நேரமாக மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. சாயந்திரமே மழை ஆரம்பிக்க முயற்சி செய்து காற்று கோபமாக வந்து விரட்டி விட்டது. பின்னர் இப்போதும் நடந்த சண்டையில் கடைசியில் வருணன் தான் ஜெயித்தார். கதவுகள் எல்லாம் அடித்துக்கொண்டன.  எதற்கும் மசியவில்லை வருணனார்.  இரண்டு நாட்களாக இடைவிடாத வேலைகள், வேலைகள்! இன்னிக்குக் குடியிருப்பில் உள்ள பாதுகாவலர்களுக்குச் சாப்பாடு கொடுக்கும் முறை எங்களுடையது. ஆகவே நேற்றே அதற்காக இட்லி மாவெல்லாம் தயார் செய்து, சமையல் என்ன பண்ணுவதுனு யோசிச்சுக் கடைசியில் சாம்பார், ரசம்னு வேண்டாம்னு புளியஞ்சாதம், தயிர் சாதம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சாயந்திரம் குட்டிக் குஞ்சுலுவைப் பார்த்தோம். இன்னிக்கும் குஞ்சுலு வந்தது.

இன்னிக்குக்கல்யாண நாள் ஆங்கிலத் தேதிப்படி. இந்த சார்வரி வருஷத்தில் வைகாசி மாதம் மே 14 ஆம் தேதியே வந்துட்டதாலே நேத்திக்கே வைகாசி 3 ஆம் தேதி வந்துவிட்டது. ரேவதி முகநூலில் பதிவே போட்டுவிட்டார். அப்புறமாச் சொன்னேன், இன்னிக்குத் தான் ஆங்கிலத் தேதினு. நமக்கெல்லாம் தமிழ்த் தேதி தானே! ஆகவே நான் அதையும் கொண்டாடி, இன்னிக்கும் கொண்டாடிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஏற்கெனவே நமக்குப் பிறந்த நாளே 3 வரும். பாஸ்போர்ட், எஸ்,எஸ்,எல்,சி, சான்றிதழ் ஆகியவற்றில் உள்ள பிறந்த நாள் போனமாதமே வந்து அலுவல் முறையில் தொடர்புள்ளவர்கள் வாழ்த்துகளும் சொல்லியாச்சு! அதைத் தவிரவும் ஆங்கிலத் தேதி, தமிழ் நக்ஷத்திரப் பிறந்த நாள்னு 3 ஆயிடும். முப்பெரும் விழா முன்னாடி எல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்தேன். எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நவரத்தினம் எல்லாமும் தம்பிகளைக் கொடுக்கச் சொல்வேன். இம்முறை கல்யாண நாள் இரண்டு தரம் வந்திருக்கிறதாலே ஐம்பெரும் விழாவாக் கொண்டாடிடலாம்னு எண்ணம்.

தம்பிகள், தங்கைகள், அக்காக்கள், பெரியவங்க எல்லோரும் அவங்க அவங்க கொடுக்கும் சீரை ஐந்து முறை கொடுத்துவிடவும். இன்னும் ஒரே வாரம் தான். காத்துண்டு இருக்கேன். இன்னிக்கு ஜவ்வரிசி, கடலைப்பருப்புப் போட்டு வெல்லப் பாயசம் பண்ணினேன். பண்ணும்போது படம் எடுக்க முடியலை! சாயங்காலம் எடுக்கலாம்னா சுத்தமா மறந்துட்டேன். பாதுகாவலருக்குத் தம்பளரில் ஊற்றிக் கொடுத்துட்டேன். அவங்கல்லாம் நல்லா இருக்கு என்றார்கள். நம்ம நெல்லைக்கு மட்டும் சந்தேகம். எப்படி இருக்குமோனு. ரொம்பவே நல்லா இருக்கும். வெல்லம் போட்டிருக்காப்போல் தெரியவே தெரியாது. தேங்காய்ப் பால் ஊற்றினால் இன்னும் நன்றாக இருக்கும். நான் இன்னிக்குப் பசும்பால் தான் ஊற்றினேன். தேங்காய்ப் பால் எடுக்கச் சோம்பல்! நெல்லை அடுத்து எப்போ ஸ்ரீரங்கம் வராரோ அன்னிக்கு இந்தப் பாயசம் தான் பண்ணணும்னு இருக்கேன்.

75 comments:

 1. //எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நவரத்தினமா//

  அப்பா கண்ணைக் கட்டுதே... இன்கம்டாக்ஸ் ஆபீஸுக்கு யாரும் சொல்லிட போறாங்க...

  குஞ்சுலு சென்னையில்தானே இருக்கிறது ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! இதெல்லாம் ரொம்ப ஜகஜமே! நீங்க பழைய பதிவுகளைப்படிச்சுப் பாருங்க! குஞ்சுலு இன்னமும் சென்னையில் தான் இருக்கு! கடந்த இரண்டு நாட்களாகப் பார்த்தோம்.
   இன்னும் அம்பேரிக்கா திரும்ப நேரம் வரலை! :(

   Delete
  2. மன்னிக்கவும் திருமணநாள் வாழ்த்துகள் சொல்ல மறந்து விட்டேன்.

   குஞ்சுலு சென்னை தெரியும் நீங்களும் சென்னை போய் விட்டீர்களா ?

   Delete
  3. பரவாயில்லை கில்லர்ஜி! அதனால் என்ன? அதான் இப்போச் சொல்லிட்டீங்களே! நாங்களும் சென்னை போக முடியாது. குஞ்சுலுவும் இங்கே வர முடியாது! ஈ பாஸ் எங்களுக்குக் கொடுக்கவே மாட்டாங்க! :( வாட்சப் தயவிலும், ஸ்கைப் தயவிலும் தான் பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்கு முடிஞ்சப்போ நாங்க கூப்பிடுவோம். குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருந்தால் அதைக் காட்ட அநேகமாக மருமகள் கூப்பிடுவார். நேற்றுத் திருமண நாளுக்காக வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டபோது குழந்தையும் நன்றாக விளையாடியதையும் பார்க்க முடிந்தது. இப்போதைக்கு எங்களுக்கு அது தான் பெரிய பரிசு!

   Delete
 2. அன்பு கீதாமா,சாம்பசிவம் சார்
  இருவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்.
  அக்காவிடமிருந்து ஐந்து நாட்களுக்கும்

  ஐந்து வித புடவைகள், ஐந்து வித வளையல்கள், ஐந்து நெக்லஸ்,
  எல்லாம் சீராக அனுப்புகிறேன். ஃபெடக்ஸில் வரும்:)

  இன்னும் நிறைய பிறந்த நாட்களும், திருமண நாட்களும் வரவேண்டும்.
  என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, இதான் அக்கா என்பது! உங்களால் இந்த வருஷம் எனக்கு இரண்டு திருமண நாள் கொண்டாட்டம். ஆகவே எதிர் சீருக்கு நானும் உங்களுக்கு அனுப்பிடறேன்.

   Delete
  2. ஐந்தவித சீர் பட்சணம் அனுப்பலையா வல்லிம்மா...

   Delete
  3. அதானே! ஐந்து வித சீர் பக்ஷணமும் வரணுமே! :)))) நெல்லை, நீங்க அனுப்பிடுங்க! கடையில் எல்லாம் வாங்கக் கூடாது! வீட்டில் பண்ணி அனுப்புங்க! :)))))

   Delete
 3. ஆஆஆஆ கீசாக்கா புதுப் போஸ்ட்.. இன்று கல்யாண நாளோ ஆவ்வ்வ்வ் கலப்புப் பாயசம் பண்ணி மாமாவைப் பேய்க் காட்டிப் போட்டீங்கள்.. ஐந்துவகைப் பலகாரம் செய்திருக்கலாமெல்லோ..

  இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கீசாக்கா... இன்னும் பலப்பல ஆண்டுகள் கொண்டாடி மகிழோணும் என ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிஞ்சு, வாழ்த்துக்கு நன்றி. ஐந்துவிதப் பலகாரம் செய்தால் சாப்பிட ஆள் வேணுமே!

   Delete
 4. இங்கும் மழை ஆரம்பித்து விட்டது, விடும்போல தெரியவில்லை.. அடுட்த்ஹு 10 நாட்களுக்கு மழை என்றே வானிலை அறிக்கை சொல்லுது, என் பயிர்கள்தான் என்னாகுமோ எனப் பயமாக இருக்கு.. இன்று வெளியே இறங்கி அவர்களைப் பார்க்கவே இல்லை நான், குளிரும் மழையும், ஹீட்டர் போட்டிருக்கிறோம் வீட்டுக்கு..

  ReplyDelete
  Replies
  1. நேற்றுப் பெய்த மழையால் இங்கே சூடு தணிந்திருக்கிறது. காற்றும் சுகமாக வீசுகிறது. அங்கே உங்களுக்கு அதுக்குள்ளே கோடை முடிஞ்சுடுத்தா? மழை, பனி? குழந்தை மாதிரி வளர்த்த செடிகள் பத்திரமாய் இருக்கட்டும். இறைவன் காப்பாற்றுவான்.

   Delete
 5. முதலில் உங்கள் அன்புத் தம்பிகளின் சீர்வரிசை வரட்ட்டும்:)) பின்புதான் நாங்கள் மிச்சம் மிகுதி பார்த்துத் தர இருக்கிறோம்..

  ஜவ்வரிசி கடலைப்பருப்பு எனில், ஒன்று ஜவ்வரிசிப் பாயாசம் என்று சொல்லோணும் இல்லை க.பருப்புப் பாயாசம் என்று சொல்லோணும்.. இதென்ன இது வெல்லப் பாயாசம் கர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பிங்க யாரும் வாயையே திறக்கலைனா அண்ணன்மார்கள் கண்டுக்கவே இல்லை. என்ன போங்க! நீங்களானும் அந்தப் பச்சைக்கல் நெக்லஸை அனுப்பி வைச்சுடுங்க. கீழே அஞ்சுவும் சொல்லிட்டார் அது எனக்குத் தான் என்று!

   Delete
  2. பாருங்கோ கீசாக்கா.. உங்களுக்கும் அதிராவைப்போல சூடு:) சொரணை:) மானம்:) ரோசம்:) எல்லாமுமே இருக்கெனக் காட்டுங்கோ கீசாக்கா:))..அ தாவது அண்ணன், தம்பிகள் எல்லோரோடும் இங்கின காஆஆஆஆஆஆஅ போட்டிடுங்கோ:)) ஹா ஹா ஹா..

   பச்சைக்கல் நெக்லஸ் தரமாட்ட்டேன் எனச் சொல்லவே மாட்டேன் இப்போ:), ஆனா என்ன சொல்லுங்கோ.. அதிராவுக்கு மனம் இருக்கு, ஆனா கொரோனாவால அனுப்ப முடியாதெல்லோ இப்போ:)) ஹா ஹா ஹா:)

   Delete
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அந்தப் பச்சைக்கல் நெக்லஸ் வரலைனால் நான் காவிரியில் விழுந்துடுவேன். (ஒரே சூடா இருக்குமே, மணல், பரவாயில்லை அதனால், அதிரா என்ன ஸ்கொட்லாந்திலிருந்து பார்க்கவா போறார்?) ஆகையால் உடனே அனுப்பி வைங்க! ஆமாம், சொல்லிட்டேன். மோதிரமும் கூடவே!

   Delete
 6. நெல்லைத்தமிழன் ஸ்ரீரங்க ட்றிப்பைக் கான்சல் பண்ணிட்டாராம்:))

  உங்கட பாயாசம் பார்த்த எபெக்ட்டாக இருக்குமோ?:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி, பிஞ்சு, இன்னிக்கு எங்கள் ப்ளாகிலே நான் போட்டிருக்கும் கமென்டைப் பார்த்துட்டு நெல்லை தான் ஸ்ரீரங்கம் வரதையே என்கிட்டே சொல்ல மாட்டாரே! எப்பூடி இருக்கு இது?

   Delete
  2. பாயசம் ஒரு முறை செய்து பாருங்க பிஞ்சு, நன்றாகவே இருக்கும், அதிலும் தேங்காய்ப் பால் விட்டால் அருமை!

   Delete
  3. ஹா ஹா... நான் எப்போதுமே பிரயாணம் பற்றி முன்கூட்டியே சொல்ல மாட்டேன், தடங்கல் வந்துடும்னு.

   எங்க பாண்டிய மலை நாடு யாத்திரை ஶ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரி ந்தியில் ஸ்நானத்துடன் ஆரம்பித்தது. உங்க வளாக முகப்பை போட்டோ எடுத்தேன். அப்போ நீங்க அம்பேரிக்காவில்.

   Delete
  4. நாங்களும் கூடியவரை சொல்லாமல் தான் பயணம் செய்வோம். எப்போவானும் சொல்வேன்.

   Delete
 7. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கீதாக்கா :) அந்த பச்சை கல் மோதிரமும் நெக்லஸும் எனது பரிசாக ஸ்கொட்லாந்திலிருந்து விரைவில் உங்களை வந்து சேரும் :) 

  ReplyDelete
  Replies
  1. தாங்கீஸ், தாங்கீஸ் அஞ்சு! எனக்கே எனக்குனு நானும் சொல்லிட்டேன். வாழ்த்துக்கு நன்றி,

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  3. ஹாஹாஹா, அஞ்சு, பிஞ்சைத் தூண்டி விட்டுச் சீக்கிரமா அனுப்பி வைக்கச் சொல்லுங்க! :))))

   Delete
 8. இனிய பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், பிறந்த நாளைக்கு முன் கூட்டிய வாழ்த்துகளா? நன்றி.

   Delete
 9. குடியிருப்புக் காவலர்களுக்கு முறை வைத்து உணவு? நல்ல வழக்கம். புளியோதரையா? ஆ....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம், இங்கே 52 குடியிருப்புகள் ஒன்றிரண்டு பேர் தவிர்த்து அனைவரும் இருப்பதால் கடந்த 50 நாட்களாக ஒரு நாளைக்கு ஒருத்தர் என முறை வைத்துக் கொடுத்து வந்தோம். நேற்று எங்கள் முறை, சார்ஜ் இல்லை,

   Delete
  2. பாதியிலேயே கணினி சார்ஜ் தீர்ந்து போய் அப்புறம் வரமுடியலை. ஆமாம் புளியோதரை தான்! உங்களை நினைத்துக் கொண்டேன். என்னிடம் எப்போவுமே புளிக்காய்ச்சல் இருக்கும். பண்ணி வைத்துக் கொள்வேன். அது கை கொடுத்தது நேற்று.

   Delete
 10. சென்னையில் மழை வரும் என்றார்கள். ஊஹூம்.. ஒன்றையும் காணோம்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், இங்கே காலம்பரத்திலே இருந்து மழை வராப்போல் மோடம் போட்டுக்கொண்டிருந்தது. இப்போத் தான் பனிரண்டு மணிக்கப்புறமா சாவகாசமா சூரியனார் விஜயம்! காற்று வந்துவிட்டதால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கிறது. இல்லைனா கோபத்தில் சுட்டெரித்துவிடுவார்.

   Delete
 11. கல்யாண நாள் எல்லாம் கொண்டாடுகிறீர்கள் போல. அதான் பாயசம்!. 48 வருஷம் ஆச்சா? எங்களுக்கு நாளை 19ந் தேதி கல்யாணநாள் (ஆங்கில முறைப்படி). 44 வருஷம் நிறையும். 

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஏன்? நாங்கள் கொண்டாடக் கூடாதா? பொதுவாக எங்களுக்குள் மட்டும் தான் கொண்டாடிக் கொண்டிருந்தோம். குழந்தைகள் பெரியவங்க ஆனபின்னர் அவங்க வாழ்த்துச் சொல்லும்போது சில சமயங்களில் இணையம் மூலம் சொல்வதால் பலருக்கும் தெரிய வருகிறது. அவ்வளவு தான்.

   Delete
 12. உண்மையில் ரொம்ப கில்டியா பீல் பண்றேன். நீங்க எங்க திருமண நாள் முதல் கொண்டு வாழ்த்தறீங்க . என்னால் நினைவு வைத்து கொள்ள இயலவில்லை. மன்னிக்கவும். தாமதமான வாழ்த்துகள். உண்மையா சொல்லனும்னா என் பிறந்த நாளே சில சமயம் மறந்து போய்டும் :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, அதனால் என்ன எல்கே? ஐந்து வகைப் புடைவை, ஐந்துவகை நகை அனுப்பி வைச்சுடுங்க! போதும்! :))))))

   இப்போக் கொஞ்சம் தீவிரமா, உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் நீங்க நினைவு வைத்துக் கொண்டால் தான் ஆச்சரியம். அதனால் என்ன? இப்போ வாழ்த்தியாச்சே! அது போதும்.

   Delete
 13. இனிய வாழ்த்துகள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு தனபாலன்.

   Delete
 14. மண நாள் வாழ்த்துகள்மா...

  ReplyDelete
 15. திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  இங்கு நேற்று காற்று பயங்கரம், இடியும், மின்னலும் மிக அதிகம், ஆனால் மழை இல்லை ஏமாற்றி போய் விட்டது அத்தனை கரு மேகங்களும்.
  ரங்கனுக்கு இப்போது மழை ஒத்துக் கொள்கிறது போல! அதனால் மழை அடிக்கடி பெய்கிறது.

  பேத்தி துர்கா எப்படி இருக்கிறாள்? நலமா நிறைய நேரம் பாட்டியுடன் பேசினாளா? அதுதான் கல்யாண நாளில் அருமையான பரிசு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! மிக்க நன்றி. நேற்று இங்கே ஓரளவு சுமாரான மழை. அப்புறமும் தூற்றல் இருந்தது. காலம்பரப் பார்த்தால் மழை வரும்போல் இருந்தது. பின்னர் பதினோரு மணிக்குப் பின்னர் வெயில் வந்துவிட்டது. துர்கா நன்றாக விளையாடுகிறாள். அவள் விளையாட்டுக்களை நாங்கள் விளையாடிக்காட்டினோம். ரொம்ப சந்தோஷம் அவளுக்கு. எங்களை நேரிடையாகப் பார்க்காமல் கோணங்கள் உள்ள அட்டை வழியாகப் பார்த்துக் கொண்டாள். கோபமாம், நேருக்கு நேர் பார்க்க மாட்டாளாம்! :))))

   Delete
  2. குழந்தை விளையாடியது மகிழ்ச்சி. ஊருக்கு வர முடியாத சூழ்நிலைதான் வருத்தம் தருகிறது.

   நிலமை சரியாகி ஊருக்கு போகும் முன்பாவது நீங்களோ அல்லது அவர்களோ வந்து பார்த்துக் கொண்டால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

   Delete
  3. ஆமாம்,என்றாலும் சென்னை செல்ல எங்களுக்கு அனுமதியோ அவங்களுக்கு இங்கே வர அனுமதியோ கிடைப்பதும் கடினம் தான்! :(

   Delete
 16. இனிய நல்வாழ்த்துக்கள்.
  ஐம்பெரும் விழா சிறப்புற வாழ்த்துகள். பிளேன் ஓடினால் விழாவுக்கு நாங்களும் வந்திடுவோம் :))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, அதனால் என்ன! சிறப்பு விமானம் விடச் சொன்னால் வந்துடலாம்! :))))

   Delete
 17. கீதா, சாம்பசிவம் மாமா இருவருக்கும் திருமண வாழ்த்துகள். விரைவில் மாமா வெளியே சென்று வித வித காய்கள் வாங்கும்படியாக வைரஸ் பிரச்சனை முடியணும்னு வேண்டிக்கறேன். உங்களிருவரிடமும் பேசணும் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, விதவிதமான காய்கள் தொந்திரவு இல்லாமல் இப்போத் தான் நிம்மதியாக இருக்கேன் நீங்க வந்து தூண்டி விடறீங்களா? பேசுங்க, பேசுங்க! காலம்பர எனில் பத்து மணிக்கு அப்புறம். ஏன்னா அதுக்கு முன்னாடி பிள்ளை, பெண் கூப்பிடுவாங்க! ஏழு மணியிலிருந்து ஒன்பதரைக்குள் இரண்டு பேரும் எப்போ வேணாக் கூப்பிடுவாங்க. இந்தக் கொரோனா வந்தப்புறம் தினம் 2 தரமாவது கூப்பிட்டு எப்படி இருக்கீங்க என்று கேட்பாங்க! மத்தியானம் எனில் பனிரண்டு மணிக்குப் பின்னர் எப்போ வேணாக் கூப்பிடலாம். நான் முழித்துக் கொண்டிருப்பேன். மாமா ஒன்றரைக்குப் படுத்தால் 3 மணி வரை படுத்துக்கொண்டிருப்பார்.

   Delete
 18. நேற்று இரவு இங்கு தூறல். அறை கொஞ்சம் வெக்கையாக சில நாட்கள் இருந்ததால், இரவு தூறல் இருந்தபோதும் பால்கனியில் படுத்துவிட்டேன். இங்கு மழைக்காலம் தொடங்கும்போது எஞ்சாயபிள் ஆக இருக்கும்னு நினைக்கிறேன்.

  மே மாதம் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நாங்க வருஷத்தின் எல்லா மாசங்களிலும் "பெண்"களூர் வந்திருக்கோம். சூடெல்லாம் தெரிந்ததில்லை. கோவை சிநேகிதி ஒருத்தர் கூடக் கோவை இப்போ ரொம்பச் சூடாகி விட்டது என்றார். மழைக்காலம் மேற்குப் பகுதிகளில் நன்றாகவே இருக்கும். நாங்க ஊட்டி மழையை நன்கு அனுபவித்திருக்கோம்.

   Delete
  2. நெல்லை இங்கு மழைக்காலம் சூப்பரா இருக்கும்.

   கீதாக்கா இந்த முறை கொஞ்சம் வெயில் அதிகம்தான். சூடு தெரிந்தது. ஆனால் சமாளிக்க முடிகிறது

   நெல்லை இங்கு இரவு 10 மணிக்கு மேல் வெளியில் கூலாகிவிடுகிறது எனவே இரவு ஜன்னல் வழி நல்ல கூல் வருவதால் நன்றாக இருக்கிறது. சென்னையைக் கம்பேர் செய்யும் போது சமாளிக்க முடிகிறது.

   கீதா

   Delete
  3. பொதுவாகவே மழைக்காலம் அருமை என்றாலும் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை. அதான் மழையை அனுபவிக்க முடியலையேனு இருக்கும்.

   Delete
 19. நேற்று 6 1/2 மணிக்கு (மாலை), பாயசம் படம் எடுக்க நினைவுபடுத்தணும்னு நினைத்தேன்.

  இங்கு ஒரு தடவை செய்து பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. அட? நானே நினைத்துக் கொண்டு தான் இருந்தேன். பின்னர் மறந்து விட்டேன். ஏதேதோ தொலைபேசி அழைப்புகள்!அடுத்தடுத்த வேலைகள்னு நேற்று முழுவதும் வேலை மும்முரம்.

   Delete
 20. மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள் தங்கள் இருவருக்கும் இறைவன் என்றென்றும் நல்ல ஆரோக்கியத்தை நல்கிட இறைவனிடம் பிரார்த்தனைகள். இதுதானே நல்லதொரு சீர் இல்லையா! ஹெல்த் இஸ் வெல்த்

  இருந்தாலும், உங்கள் திருமணங்களில் அன்பளிப்பு கொடுக்கும் போது லட்சம்கட்டி வராகன் என்று சொல்வார்களாமே! கேள்விப்பட்டேன். அதையே நான் இங்கு உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்!

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன், ஆஹா! நீங்களும் இங்கே இவங்களைப் பார்த்துத் தேர்ந்து விட்டீர்களா? லக்ஷம் கட்டி வராஹன் என முடிச்சுட்டீங்க? :)))))))

   Delete
 21. உங்கள் பேத்தி இன்னும் அமெரிக்கா செல்ல முடியவில்லை இல்லையா தெரிந்து கொன்டேன். பேத்தியைப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கும். பேத்திக்கும் வாழ்த்துகள்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. பேத்தி எப்போ அமெரிக்கா திரும்பப் போகிறாள் என்பது தான் இப்போதைய முக்கியக் கவலை துளசிதரன். அமெரிக்கா போனாலும் ஸ்கைப் வழி, வாட்சப் வழி பார்த்துக்கொண்டு தான் இருந்தோம். பார்ப்போம். ஆனால் அலுவல் நாட்களில் அவர்களால் வர முடியாது. ஆகவே சனி,ஞாயிறு தினங்களில்.

   Delete
 22. கீதாக்கா மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள். மாமாவிடமும் சொல்லிடுங்க. நமஸ்காரங்களும்.

  பாயாஸம் நாவூறுதே.

  இங்கும் கொஞ்சம் மழை பெய்தது நேற்று. இரவு நன்றாக இருந்தது. இந்த முறை கொஞ்சம் வெயில் இங்கு கீதாக்கா. ஆனாலும் சமாளிக்க முடிகிறதுதான்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி தி/கீதா, பாயசம் நிஜம்மாகவே நன்றாக இருந்தது. இங்கே முந்தாநாள் பெய்த மழையோடு சரி. நேற்றுக் கொஞ்சம் வெயில் சூடு தணிந்திருந்தது. சேர்த்து வைத்து இன்று சூரியனார் காலை எட்டரையிலிருந்து காய்ச்சுகிறார். :(

   Delete
 23. என்னாச்சு கீதாக்கா அன்பளிப்பு மழை எதுவுமே இல்லை போல!!!

  நீங்களும் மாமாவும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்திட பிரார்த்தனைகள் கீதாக்கா.

  இன்று காலை போன கரன்ட் இப்ப கொஞ்சம் முன்னதான் வந்தது. ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் பிரச்சனை சரி செய்தாங்க. இல்லேனா கணினி காலேஜ் போய் வீட்டுக்கு வந்ததுமே வந்திருக்க முடியும்.

  இனிதான் எபி ல ரமாவின் பிஸிபேளா/சாம்பார்சாதம் சாப்பிடணும் ஆறிப் போயிருக்கும் ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதை ஏன் கேட்கறீங்க? வழக்கமா அன்பளிப்புக் கொடுக்கும் தம்பிங்க எல்லோரும் போய் ஒளிஞ்சுகொண்டாங்க போல! யாரையும் காணோம்! எல்லோரும் எங்கே போனாங்க? என்ன இருந்தாலும் முன்னாடி இருந்த தொண்டர் படை அசத்திடும்! இப்போ குண்டர் படை, தொண்டர் படை எல்லாம் கலைஞ்சும் போச்சு! :)))))

   Delete
 24. வணக்கம் சகோதரி

  முதலில் தங்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். நான் கடைசியில் தாமதமாக வந்து வாழ்த்து தெரிவிப்பதற்கு மிகவும் சங்கோஜமடைகிறேன். ஏதோ வேலைகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதால், காலையிலிருந்து கைப்பேசியை எடுக்கவே இயலவில்லை. இருந்தாலும் என் அன்பு நிறைந்த மனப்பூர்வமான வாழ்த்துக்களை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  ஐம்பெரும் விழாவை பற்றி அறிந்து கொண்டேன். மிகவும் சந்தோஷம். இவ் விழாக்கள் வருடாவருடம் நீங்கள் தவறாது கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டுமென இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  கடலை பருப்பு வெல்லம் சேர்ந்த பாயாசம் அமிர்தமாக வந்திருக்கும். எனக்கும் ரொம்ப பிடிக்கும். காவலாளிகளுக்கு நேற்றைய நல்ல நாளில் உணவு கொடுப்பதற்கான முறை உங்களுக்கு வந்ததில் மிகவும் சந்தோஷமடைந்தேன். இந்த மாதிரி, கல்யாணநாள். பிறந்த நாளில் வயிறார பிறருக்கு அன்னமிட்டால்,அந்த வாழ்த்துக்கு நிகர் வேறேது இல்லையா? உங்கள் பேத்தியை அடிக்கடி ஸ்கைப்பில் பார்க்க முடிவது பற்றியும் சந்தோஷம். அனைவரையும் கேட்டதாக கூறுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, எப்போ வந்தால் என்ன? வாழ்த்துகளுக்கு நன்றி உங்களுக்கு இருக்கும் வேலைப் பளுவின் நடுவில் நீங்க இவ்வளவு தூரம் வந்து கைபேசி மூலமாய்க் கருத்துகள் சொல்வதற்கு நன்றி. எனக்கெல்லாம் கணினியைத் திறந்து உட்காரவே சில நாட்கள் முடியவில்லை.

   நீங்க என்னோட ஆரம்பகாலப் பதிவுகளைப் படிச்சால் தொண்டர் படை எல்லாம் என்னோட பிறந்த நாளைக் கொண்டாடி இருப்பது தெரியும். ஆனால் பாருங்க, சாக்லேட் வாங்காமல், (கஞ்சப்பிசுநாறிங்க!) பல்லி மிட்டாய் வாங்கிக் கொடுப்பாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))) தற்செயலாக எங்க கல்யாண நாள் அன்று பாதுகாவலர்களுக்குச் சாப்பாடு போடும்படி அமைந்தது. 3 பேர் இருக்கிறார்கள். காலை, மதியத்திலிருந்து இரவு வரை ஒருத்தர், இரவுக்கு முழுமைக்கும் ஒருத்தர் என 3 பேர் மாற்றி மாற்றி வருவார்கள். அவர்களில் சிலர் குழந்தைகள் படிப்பு, பள்ளிச் செலவு, கல்லூரிச் செலவு என்றும் பணம் கொடுக்கிறோம். தீபாவளி எனில் இவர்கள் மூவரைச் சேர்த்துத் துப்புரவுத் தொழிலாளர்கள் மூன்று பேர். ஆக ஆறு பேர்களுக்கும் தீபாவளி போனஸ், தனியாகப் பணம்போட்டுக் கொடுப்பது எல்லாமும் உண்டு.

   Delete
 25. மங்கலகரமான கல்யாணநாள் நல்வாழ்த்துகள் அக்கா...

  ஆயுள் ஆரோக்கியம் எனும் ஐஸ்வர்யங்களை இறைவன் தந்தருள்வானாக...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி துரைத் தம்பி. உங்கள் உடல் நலம் இப்போது எப்படி உள்ளது?

   Delete
 26. நீங்கள் திருமண நாளை தமிழ் தேதியில்தான் கொண்டாடுவீர்களா? நாங்களெல்லாம் ஆங்கிலத் தேதிதான். கடலைப்பருப்பு+ஜவ்வரிசி பாயசம் இதுவரை செய்ததில்லை. முயற்சிக்கிறேன். உங்கள் திருமண நாளுக்கு செல்போனில் வாழ்த்திய பிறகு இங்கு மழை தொடங்கியது. இடியுடன் கூடிய பலத்த மழை. நேற்று மூட்டமாக இருந்தது, இன்றும் அப்படிதான் இருக்கிறது. 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்ததுக்கு நன்றி. அநேகமாக வைகாசி 3 ஆம் தேதியும், மே பதினேழாம் தேதியும் சேர்ந்தே வரும். இப்படிச் சில வருடங்கள் மே பதினான்கு அன்றே வைகாசி மாசம் பிறந்துவிட்டால் தனித்தனியாக வருவது உண்டு. பொதுவாகப் பிறந்த நாளும் நக்ஷத்திரப்படி தான். ஆனால் ஆங்கிலத்தேதிக்குத் தான் எல்லோரும் வாழ்த்துகிறார்கள். ஜவ்வரிசிப் பாயசம்+கடலைப்பருப்புப் போடும்போது கடலைப்பருப்பு அரை வேக்காடு வெந்த பின்னர் ஜவ்வரிசியை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இல்லைனால் பாயசத்தில் ஜவ்வரிசி தெரியமால் போயிடும்.

   Delete
 27. ஜூன் மாதத்திலிருந்து மாவட்டங்களுக்கு இடையே பேருந்தில் பயணிக்கலாம் போலிருக்கிறது. ஆம்னி பஸ்கள் முன்பதிவை தொடங்கி விட்டன. எனவே ஐம்பெரும் விழாவிற்கு ஏற்பாடு தொடங்குங்கள். நாங்கள் ரெடி. 

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, அதுக்குள்ளே நக்ஷத்திரப் பிறந்த நாளும் முடிஞ்சுடும் போல! அதோடு ஐம்பெரும் விழாவிற்குத் தொண்டர்கள் தான் ஏற்பாடு பண்ணுவாங்க. நான் தலைவியே எப்பூடி? வல்லியும் வீடியோ காலில் அழைத்துப் பேசினார். போன கருத்திலே சொல்ல மறந்துட்டேன். :)

   Delete
 28. மூன்று நாட்களாய் வலைப்பக்கம் வர முடியவில்லை. இப்போது தான் பார்த்தேன் மே 17 உங்கள் கல்யாண நாள் என்று!
  தாமதமாகத்தான் சொல்கிறேன் என்றாலும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து வளங்களுடனும் நல்ல உடல் நலத்துடனும் நீங்களும் உங்கள் கணவரும் என்றும் மகிழ்வுடனிருக்க என் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ! எப்போச் சொன்னால் என்ன? வாழ்த்துகளுக்கு நன்றி. உடல் நலம் தான் இப்போதைய தேவை அனைவருக்குமே!

   Delete
 29. இந்தப் பதிவை நான் மே 24ஆம் தேதி படித்திருக்கக்கூடாதா? அன்றுதான் வைகாசி மாதம் 11ஆம் தேதி. அதில் ஒரு விசேஷம் பாருங்கள், 1976ஆம் வருடத்திலும் மே 24ஆம் தேதியும் வைகாசி 11ஆம் தேதியும் ஒரே நாளில்தான் வந்தன! அதாவது, இப்போது 44 வருடங்கள் ஆகிறது. ஹும்...விடுங்கள்! உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்! - இராய செல்லப்பா சென்னை (2020 மே 20)

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்லப்பா சார். வாழ்த்துகளுக்கு நன்றி. வைகாசி மூன்றாம் தேதி திருமண நாள் என்பதால் நான் ஏழு நாட்கள் மூத்தவள் ஆகிவிட்டேனோ? நீங்க என்னை விட இவ்வளவு இளையவர் எனத் தெரியாது. ஆனாலும் வயதில் மூத்தவர்களையும் வாழ்த்தி வணங்குவதே நம் பாரம்பரியம், அரசியல்வாதிகளைத் தவிர்த்து. முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளான ஆனானப்பட்ட ஈசனையே வாழ்த்திப் போற்றி வணங்குகிறோமே! சக மனிதர்களையும் எப்போதும் வாழ்த்தி வணங்கலாம். வாழ்த்த மட்டும் செய்யலாம்.

   Delete
 30. Mama mannikku thirumana nall vazhthukkal solla vayadhillai. Adhanal engaludaya namaskarangal

  ReplyDelete