நேற்றைய காராவடையே இன்னமும் போணி ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மிச்ச மாவை இந்த வெயில் காலத்தில் எத்தனை நாட்கள் வைப்பது? அதான் அதில் பஜியா போடலாம்னு தீர்மானிச்சுட்டேன் நேத்திக்கே! இந்த பஜியா என்பது வேறே ஒண்ணும் இல்லை. நம்ம தூள் பஜ்ஜி தான். வட மாநிலங்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம், குடமிளகாய், வெந்தயக்கீரை, பாலக் போன்றவற்றை நறுக்கி பஜ்ஜிக்கு மாவு கரைப்பது போல் காரம், உப்பு, பெருங்காயம் போட்டுக் கடலைமாவைக் கரைத்து அதில் நறுக்கிய இந்தக் காய்களைச் சேர்த்துப் போடுவார்கள். சில சமயங்களில் வெறும் கீரையில் மட்டுமே போடுவதும் உண்டு. ஆனாலும் இந்த உ.கி., வெங்காயம் போட்டுப் பண்ணும் பஜியா நம்மவருக்கு ரொம்பப் பிடிக்கும். இதைக் காலை ஆகாரத்துக்கே அதிகம் பண்ணுவார்கள். சில கடைகளில் நாள் முழுவதுமே கிடைக்கும். காரட்டைத் துருவி அதைக் கடுகு தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி, காரப்பொடி, உப்புப் போட்டு லேசாக வதக்கி வைத்துக்கொள்வார்கள். அதில் கொத்துமல்லியை நறுக்கி தாராளமாகத் தூவுவார்கள். வெங்காயமும் பொடியாக நறுக்கித் தனியாக வைத்துக் கொள்வார்கள். இந்த பஜியா குறைந்த பக்ஷம் நூறு கிராமில் இருந்து வாங்கிக்கலாம். பஜியா மேல் காரட், வெங்காயம் தூவித் தருவார்கள்.
காரட், வெங்காயம் எல்லாம் துருவாமல் வெறும் பஜியாவாகவே போடலாம்னு நினைச்சேன். மாவில் முதலில் கருகப்பிலை, கொஞ்சம் போல் உப்பு, (நேற்றைய மாவு இல்லையா) பெருங்காயம், அரைத் தேக்கரண்டி காரப் பொடி போட்டுக் கொத்துமல்லி நறுக்கிப் போட்டு ஒரு சின்ன பச்சை மிளகாயும் போட்டேன். குடமிளகாய் இல்லை என்பதோடு அவருக்குப் பிடிக்காது. பின்னர் உருளைக்கிழங்கு ஒன்றும் வெங்காயம் ஒன்றும் நடுத்தரமானது. சீவல் கட்டையில் சீவி வைத்துக்கொண்டு உருளைக்கிழங்கை மட்டும் நன்கு அலசிப் போட்டு, வெங்காயத்தையும் போட்டேன்.
உ.கி.யை நன்கு அலசிப் போட வேண்டும்.
கலந்த மாவு
பஜியா நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபடங்களும் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அரசு.
Deleteஆஹா கடைசி படத்திலுள்ள பஜியா ஸூப்பர்.
ReplyDeleteஹாஹா, கில்லர்ஜி, எடுத்துக்குங்க.
Deleteபஜியா... பார்க்க நன்றாக இருக்கு. ஆனா, தட்டில் போட்ட பஜியாவை போட்டோ எடுக்க நேரமில்லாத அளவு நல்ல பசி போலிருக்கு.
ReplyDeleteவாங்க நெல்லைத் தமிழரே, எல்லோருக்கும் கடைசிப் படத்தில் பஜியா தெரியும்போது உங்களுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். எனக்கு இன்னிக்கும் கடைசிப்படமும் அதில் உள்ள பஜியாவும் தெரிகிறது.
Deleteஆமாம்...எண்ணெய்லாம் வெளில கிடைக்குதா? நான் கோல்ட் வின்னர் மட்டும்தான் வாங்குவேன் (மற்றபடி ந, க, தே எண்ணெய்கள்தான்). இடையில் ஸ்டாக் இல்லை, நாளை மறுநாள் வாங்க என்று சொன்னதால் இன்னொரு பிராண்ட் (நல்லா செக் பண்ணினேன். 100% சூர்யகாந்தி எண்ணெயான்னு. இல்லைனா 30% சூ.கா.எண்ணெய், மிகுதி ப்ரான் ஆயில், பாமாயில்னு மாத்தறாங்க.)
ReplyDeleteஎண்ணெய் கிடைக்காமல் என்ன? நாங்க எப்போவும் வாங்கும் செக்கு எண்ணெய் கூடக் கிடைக்கிறது. அது கொஞ்சம் தூரமாக இருப்பதால் நாங்க கீழேயே வாங்கிக்கறோம். ஒரு கிலோ கடலை எண்ணெய் வாங்கினால் போதும், எனக்குச் சுமார்40 நாட்கள் வந்துடும் நல்லெண்ணெய் தான் செலவு. சமையல் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தான். அதுவும் மாசம் ஒன்றரைக்கிலோவுக்குள் ஆகும். இப்போதைக்குக் கவலை இல்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றும் பஜியா வாசனையும் வந்து உடன் வந்து விட்டேன். படங்கள் பகிர்வு இரண்டும் அருமை. பஜியா நல்ல கலராக வந்துள்ளது. இன்றும் இங்கு காலையிலிருந்தே சின்னக் குழந்தைகள் முதற் கொண்டு பஜ்ஜி போடு, போண்டா போடு என ஒரே நச்சரிப்பு. நான்தான் நாளை நாளை என தள்ளி வைத்திருக்கிறேன்.இன்று நீங்கள் அதே பஜ்ஜியையே உங்கள் தயாரிப்பாக போட்டு விட்டீர்கள். இன்றும் நான் மட்டும் வந்து பஜ்ஜியை எடுத்துக் கொண்டேன். அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. நான் அதிகம் எண்ணெயில் பொரிக்கும் தின்பண்டங்கள் அதிகம் பண்ணுவது இல்லை. இந்த மாதிரி எப்போவானும் தான். குழந்தைகள் இருந்தால், அவங்க கேட்டால் பண்ணிக் கொடுக்கலாம். இளவயது, விரைவில் ஜீரணித்துவிடும். இது பத்தே நிமிஷத்தில் தயார் செய்துடலாம். அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டே சாமான்களைப் போட்டு மாவைத் தயார் செய்து உடனே போட்டு எடுத்துடலாம்.
Deleteஇந்த திப்பிச பலகாரம் நன்றாகவே இருக்கிறது!
ReplyDeleteவாங்க மனோ, பாராட்டுக்கு நன்றி.
Deleteபஜியா இங்கே நிறைய கிடைக்கிறது. பெரும்பாலும் கடைகளில் இவற்றைச் சாப்பிடுவது இல்லை.
ReplyDeleteசுற்றுலா போனால் ஆட்டோ ஓட்டுநர், அல்லது வண்டி ஓட்டுநரைக் கேட்டுக்கொண்டு நல்ல கடையாகச் சென்று வாங்கிச் சாப்பிடுவோம். ராஜஸ்தான், குஜராத்தில் வாடிக்கையான கடை உண்டு. :))))) வீட்டிலும் அவ்வப்போது பண்ணுவேன்.
Deleteதிப்பிசமாக காத்திருந்து திப்பிசமாகச் செய்யாமல் உடனே செய்ய வேண்டும் என்றால் கடலை மாவில் மட்டும் கரைத்தால் நன்றாய் இருக்காதோ? கொஞ்சம் உ. மாவும் வேண்டுமோ..
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், அதெல்லாம் உளுத்தமாவு தேவை இல்லை. பஜ்ஜிக்குக் கரைக்கிறாப்போல் கரைத்துக் கொண்டு உ.கி. வெங்காயத்தை நீளமாகச் சீவிக் கொண்டு அதில் கலந்து கொள்ள வேண்டும். கூடவே குடமிளகாய் இருந்தால் சேர்க்கலாம். இல்லைனா பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, வேறு கீரைகள் இருந்தால் அவை, கத்திரிக்காய் எனில் அதுவும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். பஜ்ஜி போடும் எல்லாம் காய்களும் நன்றாக இருக்கும்.
Deleteபடங்கள் நன்றாய் வந்திருக்கின்றன. பார்க்க ஆவலாய் இருக்கிறது. உடனடி செய்முறை சொல்லுங்கள். மாலை செய்து விடுகிறோம்.
ReplyDeleteபார்த்த உடனே ஓடோடி வந்து சொல்லிட்டேன். செய்து சாப்பிட்டுவிட்டுப் படமும் போடுங்கள்.
Deleteஅதென்ன புதுசா கருகப்பிலை ??
ReplyDeleteகருகப்பிலை இம்மாதிரித் தூள் பஜ்ஜிக்கு நான் எப்போவுமே சேர்ப்பேன். கருகப்பிலையும் கொத்துமல்லியும் கடலைமாவோடு பொரிந்து கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். நான் கருகப்பிலையை ஒதுக்குவது இல்லை. அதனால் தானோ என்னமோ எனக்கு இன்னமும் அதிகமாய் நரை இல்லை. :))))) அதோடு நெல்லிக்காய் வேறே தினம் சாப்பிடுவேன்.
Deleteஇதுவும் நன்றாக உள்ளது...
ReplyDeleteவாங்க திரு தனபாலன். நன்றாகவே இருக்கும். முடிந்தால் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
Deleteகாராவடையை விட இது இன்னும்
ReplyDeleteஅழகா இருக்கு கீதாமா.
கருவேப்பிலைதான் எத்தனை அருமை;
அழகா விளக்கி , செய்தும் வைத்து விட்டீர்கள்.
பார்க்கப் படிக்கவும் கொடுத்து வைத்திருக்கோம்.
வல்லிம்மா.... நான் காராவடை பண்ணலாம்னு நினைத்திருக்கிறேன். வெளில மொறுமொறுப்பாகவும் உள்ள பஞ்சு மாதிரியும் வரலைன்னா கீசா மேடத்தை என்ன பண்ணலாம்? ஒரு ஐடியா கொடுங்க.
Deleteஇதில்கூட ஆலு சேர்க்காமல் இருந்தால் இன்னும் ருசியாக இருக்குமோ?
வாங்க வல்லி, கருகப்பிலை கடலைமாவோடு சேர்ந்து பொரிந்தால் சாப்பிட எனக்குப் பிடிக்கும். :)))) ஆதலால் சேர்ப்பேன். இதில் உருளைக்கிழங்கு சேர்க்காமல் மற்றக் காய்கள் அல்லது வெங்காயம் மட்டும் சேர்த்தும் பண்ணலாம். அதென்ன ஆலு? உருளைக்கிழங்குனு சொல்லுங்க நெ.த.
Deleteஇதை இங்கே குஜராத்தி பஞ்சாபியர் வெஜ் பஜ்ஜி னு சொல்வாங்க .எனக்கு கடையில் வாங்குறது பிடிக்கலை உப்பி வர சோடாமாவு போடறாங்க .நான் இதே உருளையுடன் ஸ்பினாச் இல்லைன்னா கேல் வெட்டி சேர்ப்பேன் ருசியும் நல்லா இருக்கும் .
ReplyDeleteநான் சமையல் சோடாவெல்லாம் வாங்கறதே இல்லை ஏஞ்சல்! ஆகவே இதெல்லாம் சேர்க்கமாட்டேன். கீரைகள் எதானாலும் இது மாதிரிப் பண்ணலாம். நன்றாகவே இருக்கும். பஜியானு சொல்லியே பார்த்திருக்கேன். ஒரு வேளை லண்டனில் இருப்பதால் ஆங்கிலப் பெயரில் சொல்றாங்க போல!
Deleteசூப்பர்.
ReplyDeleteநன்றி மாதேவி.
Delete