முன்னைப் போல் பதிவு அடிக்கடி போட முடியவில்லை. முன்னர் ஒரு தரம் வந்த அதே Eye floaters கண் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சோர்வு, அலுப்பு! கடந்த 2 வருடங்களாகப் பிரச்னை இல்லை. இப்போ திடீர்னு கண்ணில் கட்டி கிளம்பிக் கூடவே இந்தப் பிரச்னையும் வந்திருக்கிறது.
eye floaters
இந்த ஊரடங்கினால் மக்கள் படும்பாடு ஒரு பக்கம் எனில் மக்கள் படுத்தும் பாடு அதைவிட மோசமாக இருக்கிறது. கொரோனா தாக்குதல் இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியிலும் ஒருத்தர் நோயால் பாதிப்பு எனத் தகவல். சென்னை பற்றிச் சொல்லவே வேண்டாம். சென்னையில் இருப்பவர்கள் படித்தவர்களா இல்லையா என்றே சந்தேகமாக இருக்கிறது. அரசும் கொஞ்சமானும் கடுமை காட்டலாமோ எனத் தோன்றுகிறது. இதனால் கஷ்டப்படப் போகிறவர்கள் சுகாதாரத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தாம். அவர்கள் எவ்வளவு சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு பணி ஆற்றுகிறார்கள் என்பதை இன்னமும் தமிழ்நாட்டில் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.
சென்னை தி.நகரில் இருக்கும் உறவினர்களுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வாங்கக் கடைகளுக்குச் சென்றால் எப்போதும் கூட்டமும் வரிசை நீளமாகவும் இருப்பதாகச் சொல்லுகின்றனர். மக்கள் ஊரடங்கினால் உள்ளேயே இருக்க மாட்டார்கள் போல! இதிலே ஸ்விகி, ஜொமோடோ மூலம் உணவு அளிப்பவர்களில் சிலருக்குக் கொரோனா பாதிப்பு என்கிறார்கள். ஆகவே உணவையும் வாங்குவதில் மிகவும் யோசிக்க வேண்டும். சிவப்பு மாவட்டமாகச் சென்னை நீடித்து வருகிறது. கூடவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற அண்மை மாவட்டங்களும்! திருச்சி ஆரஞ்சு மாவட்டமாக இருக்கிறது. இன்னும் பதினைந்து நாட்களில் பசுமை மாவட்டமாக மாறிவிடும் என உறுதி கொடுக்கின்றனர். இங்கே மக்கள் நடத்தை கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். அதிகம் கூட்டம் கூடுவதில்லை. அதோடு தள்ளுவண்டிகளில் காய்கள், பழங்கள் வருகின்றன. பூக்கள் வருவதில்லை. அது ஒரு குறைதான். காபிப் பொடி விநியோகம் செய்பவர் இரண்டாம் முறையாகக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அது ஒன்றுக்குத் தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.
அம்பேரிக்காவில் உணவகங்கள் திறந்திருப்பதாகப் பையரும் பெண்ணும் சொன்னார்கள். காய்கள், பழங்கள் இணையம் மூலம் தேவையைக் கூறி வீட்டிற்குக் கொண்டு வந்து தருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்னை என்னவெனில் நாம் கேட்கும் அளவை விட அநேகமாகக் கூடுதலாக இருப்பது. எங்க பெண் வெள்ளைப் பூஷணிக்காய்ச் சின்னதாக ஒன்று கேட்டிருக்கிறாள். அவங்க அனுப்பியதோ பெரிய பறங்கிக்காய்! என்ன செய்வது என்று தெரியவில்லை என்றாள். கூட்டு, கறி, துவையல், பச்சடி, சாம்பார், குழம்பு எனப்பண்ணிவிட்டு முடிந்தால் அல்வா, பாயசம் பண்ணலாம். அப்படியும் மிகுந்தால் அடையில் போடு என்று சொன்னேன்.பறங்கிக்காய் வாரம் கொண்டாடினாள். இன்று அப்புவின் பிறந்த நாள். காலை வீடியோ அழைப்பில் கூப்பிட்டுப் பேசினோம். மீண்டும் இரவு (அவங்களுக்கு அப்போத் தானே மே 2) கூப்பிடுவதாய்ச் சொல்லி இருக்காங்க. குட்டிக் குஞ்சுலுவையும் பார்த்துச் சில நாட்கள் ஆகின்றன.
பேருந்துகளை 50 சதம் பயணிகளோடு இயக்கலாம் என்கின்றனர்.நம் மக்கள் கேட்பார்களா? குறைந்தது 200 சதம் பயணிகளாவது பயணிப்பார்களே!அதை நினைச்சால் இப்போவே திக், திக் என்றிருக்கிறது. இந்த நோய்க்கு மருந்தே இல்லை என ஒரு சாராரும், மருந்து கண்டு பிடிச்சாச்சு என இன்னொரு சாராரும், எத்தனை மருந்து கண்டுபிடித்தாலும் இது திரும்பத் திரும்ப வரும் என ஒரு சாராரும் சொல்லுகின்றனர். யாருக்கும் எதுவும் நிச்சயமாகச் சொல்லத் தெரியலை. எங்கிருந்து வந்திருந்தாலும் இது எப்போது போகும் என்னும் எண்ணமே அனைவரிடமும் உள்ளது! இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது எப்போது என்னும் எண்ணம் அனைவரிடமும் உள்ளது. அது அதிகமாய் உள்ளவர்களால் தான் ஊரடங்குச் சட்டமும் மீறப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. அதோடு நோய்த் தொற்று அறிகுறி இல்லாமலேயே கொரோனா தாக்கும் என்று வேறு சொல்கின்றனர். எல்லாவற்றுக்கும் அரசைக் குறை கூறும் மக்கள் நாம் அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோமா என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எங்க உறவினர் ஒருவர் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கே வந்து மாட்டிக்கொண்டு திரும்பும் வழி தெரியாமல் விழிக்கிறார்.
மருத்துவர்கள் வேறே இப்போதெல்லாம் அவசரம் என்றால் தவிரப் பார்ப்பதில்லை. நோயாளிகளைத் தொட்டுப் பரிசோதனை செய்ய வேண்டுமே! அதே போல் ரத்தம் எடுப்பதற்கும் யாரும் வருவதில்லை. எல்லோருக்கும் கொரோனா பயம். ஆண்டவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. முக்கியமாகச் சென்னை மக்களுக்கு நல்ல புத்தி வரப் பிரார்த்திக்கிறோம். நிலைமையின் தீவிரம் அவர்களுக்கும் புரியும்படி ஆண்டவன் அருள வேண்டும்.
உண்மையிலேயே மக்களுக்கு இதன் சீரியஸ்தன்மை புரியவில்லை இறைவன்தான் காக்கணும்.
ReplyDeleteஅரசை குறை சொல்கின்றார்கள் (ஸ்டாலின், கமல்ஹாசன் போன்றோர்) அவர்களை ஒருநாள் முதல்வர் ஆக்கினால் தெரியும்.
குஞ்சுலு தற்பொழுது எங்கே ?
குஞ்சுலு போன வாரமே அம்பேரிக்கா போயிருக்கணும். ஆனால் விமான சேவை இல்லை என்பதால் போகலை. எங்கேயுமே போக முடியாமல் மடிப்பாக்கத்தில் அவங்க தாத்தா வீட்டில் அம்மாவோடு இருக்கு.
Deleteஅதுதான் சந்தேகத்தில் கேட்டேன் நலமுடன் இருக்கட்டும்.
Deleteஎங்கள் குடும்ப மரணத்துக்கு துபாயிலிருந்து வந்த குடும்பம் போகமுடியவில்லை. இதுவும் வருத்தம்.
இதில் சௌதிக்கு ஒருவன் போய் விட்டான் அதுவும் வருத்தம்.
நிறையப் பேர் இப்படி வந்த இடத்தில் வேறு வழியில்லாமல் தங்கும்படி ஆகி இருக்கிறது. என்ன செய்ய முடியும்!
Delete//அரசைக் குறை சொல்கிறார்கள்// - ரொம்ப சுலபமான வேலை குறை சொல்வதுதான். ஹா ஹா. எப்படி நடந்துக்கணும், என்ன செய்யணும் என்பதற்கு இவங்கள்ட பதில் இருக்காது. அதனால் இவங்க சொல்றதைப் புறம் தள்ளணும். நான் பார்த்தவரை ஓரளவு, அரசுகள் சிறப்பாகவே இதனைக் கையாள்கின்றன.
Deleteஇந்தச் சமயத்தில், துக்க சம்பவங்கள், பயணம் போன்றவை மிகக் கடினம்.
அந்த விஷயத்தில் எங்களை எங்க குலதெய்வம் மாரியம்மன் தான் காப்பாற்றி அருளினாள். _/\_
Delete// அதோடு நோய்த் தொற்று அறிகுறி இல்லாமலேயே கொரோனா தாக்கும் என்று வேறு சொல்கின்றனர். //
ReplyDeleteஇது தான் இன்றைக்கு அதிக ஆபத்து... ஆனால், உறுதியான தகவல் இல்லை...
குணமடைந்து வீடு திருப்பியவர்களுக்கும் மீண்டும் தாக்குவதாக சொல்கிறார்கள்... அதாவது ரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல், அங்கங்கே கட்டியாகிறது என்று... இதற்கு ஆதாரத்துடன் காணொளியாக புலனத்தில் அனுப்புகிறார்கள்...
இவைகளை விட பசிப்பிணி தீவிரமடைந்து நிலைமை வேறுவிதமாக மாறும் அச்சமும் உள்ளது...
வாங்க திரு தனபாலன். நீங்க சொல்வது உண்மை தான். குணமடைந்தாலும் சில நாட்கள் தனிமைச் சிறையில் இருக்கவேண்டும் என்கின்றனர். பசிப்பிணிக்கு நிறையப் பேர் அன்னதானம் செய்கின்றனர். ஆனாலும் பெரும்பாலானவர்கள் உணவுக்குக் கஷ்டப்படுவதாகவே சொல்கின்றனர்.
Deleteநம் மக்கள் பலருக்கும் சூழலின் தீவிரம் புரியவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறையினர், என பலரும் இவர்களின் செயலால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புரிதல் என்றைக்கு வருமோ?
ReplyDeleteஉங்கள் பார்வைக் கோளாறு சரியாக எனது பிரார்த்தனைகள்.
நன்றி வெங்கட். பலருடைய சிரமங்களையும் புரிந்து கொள்ளாமல் மக்கள் இப்படிப் பொறுப்பற்றவர்களாக இருக்கும் நிலை என்று மாறுமோ? கண்களுக்குக் கூடியவரை ஓய்வு கொடுத்து வருகிறேன்.
Deleteகண் பிரச்னை சீக்கிரம் சரியாக பிரார்த்தனைகள். எனக்கும் ஒரு வருடமாக கண்களில் பிரச்னை இருக்கிறது. ஏதோ திரை மறெப்பது போல.்்்். கண் மருத்துவரிடம் போனால் காடராக்ட் இல்லை என்கிறார்கள். பலரும் ஒழுங்காய் இருப்பதாகவே சொல்கிறார்கள். ஆனாலும் மறைக்கும். அதுவும் நான்கு மணி சுமாருக்கு அதிகமாகவே அலங்கலாய்த் தெரியும். Dry eyes என்றார் மருத்துவர்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம். உங்களுக்கு மாலைக்கண் நோயோ? சுந்தரமூர்த்திப் பெருமானின் பதிகம் தான் நானும் படிக்கிறேன். நீங்களும் படியுங்கள். அல்லது ஆடியோவில் கேளுங்கள். உங்கள் கண் பிரச்னையும் சரியாகப் பிரார்த்திக்கிறேன்.
Deleteநன்றி கீதா அக்கா... ஆறு மணிக்கு மேல் கண் தெரியாமல் எல்லாம் இல்லை. மருத்துவர் மாலைக்கண் நோயும் அல்ல என்று சொல்லி விட்டார்.
Delete// பலரும் ஒழுங்காய் இருப்பதாகவே சொல்கிறார்கள். ஆனாலும் மறைக்கும். //
Deleteபவரும் (power) என்றிருக்கவேண்டும். ஆட்டோகரெக்ஷன்.
:))
அப்படியா? மன்னியுங்கள் ஸ்ரீராம். மாலை என நினைச்சுட்டேன். :(
Deleteஸ்ரீராம்... 'மறைக்கிறது' என்றால், படலம் போல 4 மணிக்கு மேல இருக்கா?
Deleteஎனக்கு தண்ணீர் சரியாக உட்கொள்ளாமல் இருந்தால், மொபைல் பார்க்கும்போது கண் எரியும். தண்ணீர் ஒழுங்கா சாப்பிட ஆரம்பித்த பிறகு அந்தப் பிரச்சனை இருக்காது.
உங்களுக்கு விரைவில் சரியாகவேண்டும் (இப்போ டாக்டரிடம் கன்சல்ட் பண்ணக்கூட வாய்ப்பு இல்லையே)
சுமாராக நாலு மணிக்கு மேலாக மூணு எட்டு மாதிரி தெரியும். எட்டு மூணு மாதிரி.. ஐந்தா, ஆறா என்று ஞந்தேகம் வரும்.
Deleteஇந்தக்குழப்பம் இப்போவெல்லாம் எனக்கும் இருக்கு!
Deleteஉங்களுக்கு இப்போதான் இருக்கு. எனக்கு இப்பவே இருக்கு!!! :(
Delete:))))))) சமீபகாலங்களில் தான் இந்தப் பிரதிபலிப்புகள் இரண்டாகத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் தொடர்ந்து பார்த்தால் மறையும். சட்டெனக் கணினியைத் திறந்தால் அல்லது தொலைக்காட்சியைப் பார்த்தால் இரட்டை மயம். தினம் காலை 5 மணி தானா எனக் கவனித்துக் கொண்டே எழுந்திருக்கிறேன்.
Deleteஅப்பு பிறந்த நாளுக்கு உங்க வாழ்த்துகளையும் சொல்லுங்க. குட்டிக் குஞ்சுலு பாவம். உங்கள் மருமகள், பையரும் பாவம்
ReplyDeleteஸ்ரீராம், அப்புவுக்கு நேற்றே பிறந்த நாள் வாழ்த்துகளை வீடியோ அழைப்பில் சொல்லியாச்சு. கேக் வெட்டினாள். இப்போத் தான் பிறந்தாப்போல் இருக்கு! குட்டிக் குஞ்சுலுவுக்குக் கண்களில் ஏக்கம் தெரிகிறது. இத்தனை நாட்கள் அங்கே போய் ஒரு வாரம் ஆகி இருந்திருக்கும். தெய்வம் தான் வழி விடணும்.
Deleteஎங்க என்பது உங்க என்று வந்து விட்டது. மன்னிக்கவும்!
Deleteநான் புரிந்து கொண்டேன்.
Deleteநானும் நேற்று சில மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஸ்விக்கியில் வாங்கினேன். வாங்கிய உடன் அவற்றை வெதுவெதுப்பான உப்பு மஞ்சள் கலந்த நீரில் அலசி பதினைந்து நிமிடம் கழித்து எடுத்துத் துடைத்து காய வைத்து எடுத்து வைக்கிறோம். பால் பாக்கெட்டையும் தினமும் அப்படியே. கைகளையும் உடனே சுத்தம் செய்து விடுவோம்.
ReplyDeleteமளிகைப் பொருட்களை எப்படிச் சுத்தம் செய்து எடுக்கிறீர்கள்? காய்கள் எப்போதுமே அலம்பியே வைப்பதால் பிரச்னை இல்லை. பால் பாக்கெட்டுகளும் எப்போதுமே வாங்கியதும் அலம்பித் தான் வைப்போம்.
Deleteமளிகைப் பொருட்களை ப்ளாஸ்டிக் பாக்கெட்டுடன் அப்படியே வெது வெது மஞ்சளுப்பு நீரில் போட்டு விடுகிறோம்.
Delete???????????????
Delete// மளிகைப் பொருட்களை எப்படிச் சுத்தம் செய்து எடுக்கிறீர்கள் //
Deleteஎன்கிற உங்கள் கேள்விக்கான பதில்!
அது புரிஞ்சது. உள்ளே உள்ள பொருட்கள் நீரில் கொஞ்சமானும் நனையாமல் வருகிறதா? என்னதான் நன்றாகப் பாக்கிங் செய்திருந்தாலும் சில சமயங்களில் எங்கானும் சின்ன ஓட்டை இருந்து தண்ணீர் உள்ளே போய்விட்டால்?
Deleteநாங்க காய், பழம், பால் எல்லாம் சுத்தம் செய்கிறோம். மளிகைப் பொருட்கள்-packed - நான் மட்டும்தான் ஹேண்டில் செய்கிறேன். இதில் உள்ள ரிஸ்க், யாராவது அந்தப் பாக்கெட்டின் மேல் 10 மணி நேரத்துக்குள் தும்மியிருந்தால்தான். With God's grace, Lockdown ஆரம்பித்த அன்றுதான், பால், தயிர் தினமும் எங்கள் வீட்டிற்குப் போடுவதை ஒழுங்குபடுத்தினோம். கதவின் கைப்பிடியில் தொங்கவிட்டிருக்கும் பையில் கூப்பன்களைப் போட்டுவிடுவோம். ரொம்பவே உதவிகரமா இருக்கு.
Deleteசெய்தித்தாள்கள், மேகசின்களில் ரிஸ்க் இல்லையா? அல்லது அவைகளை நிறுத்திவிட்டீர்களா?
நாங்க பத்திரிகைகள் வாங்குவதை நிறுத்தி 20 வருஷங்களுக்கும் மேல் ஆகின்றன என்பதை லக்ஷத்திப் பத்தாம் முறையாகச் சொல்லுகிறேன் நெல்லை. தினசரியும் வாங்காமல் இருந்தோம். இப்போக் கொரோனா செய்திக்காகப் பத்து நாட்களாக வாங்கறோம். திருச்சிப் பதிப்பு தினமலர்.
Deleteமருத்துவத்துறையினர் படும் அவஸ்தைகள் பற்றி ஒன்று எழுதி வைத்துள்ளேன். ஃபேஸ்புக்கில் போட எண்ணம். விழிப்புணர்வு இல்லாத மக்கள். அரசு எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் அரசைக் குறை கூறிக்கொண்டு...
ReplyDeleteஉங்களைப்போன்றவர்களுக்கு இன்னும் நிறையவே அனுபவங்கள் இருக்கும். பதிவாகவே போடுங்கள்.
Deleteகணினி இல்லாமல் பெரிய தட்டச்சுகள் முடியவில்லை.
Deletemmmmmmm
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஇப்படி ஒரு விபரீதம் உலகத்தைத் தாக்க
என்னதான் கொடுமை நடந்ததோ.
பசிக்கொடுமையை நினைத்து தான் கவலையாக இருக்கிறது.
அப்புக்குப் பிறந்த நாளா. மனம் நிறை ஆசிகள்.
வருடங்கள் ஓடி விட்டன.
ஆமாம், வல்லி, உங்கள் சின்னப் பேரனும் அப்புவை விடச் சில மாதங்கள் தானே பெரியவன்? அவனுக்கும் 13 ஆகி இருக்குமே!
Deleteஅரசு எவ்வளவோ assure செய்தும் ஊர்சுற்றும், பொருட்களை வாங்கிக் குவிக்க ஓடும் மக்களின் attitudeதான் பெரும் பிரச்சனை.
ReplyDeleteசென்ற வருட ஆரம்பத்தில் அரசு 2000 ரூ கொடுக்கிறார்கள் என்று ரேஷன் கடையில் அரை மைல் நீளத்துக்கு அடையாறில் நின்ற கூட்டம் நினைவுக்கு வருகிறது. கோயம்பேடுக்குப் போன கூட்ட நெரிசலால் கொரோனா அதிகமானதுதான் மிச்சம்.
பெங்களூரில் அவ்வளவு கூட்டம் பார்க்கலை. ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் எனக்கு "பொருட்கள், பால் தயிர், காய்கறிகள்" கிடைக்குமா என்ற அச்சம் பிறகு போய்விட்டது. இவைகளுக்கு இங்கு குறைவில்லை. பதாமி/அல்ஃபோன்சா கிலோ 100-120க்கு வாங்க முடிந்தது.
ஆனால் லோயர் மிடில் கிளாசுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு அதிகப் பிரச்சனைகள் இருக்கும்.இறைவன் அவர்களைக் காப்பாற்றட்டும்.
வாங்க நெல்லைத் தமிழரே, மக்களின் இந்த மனோநிலைதான் எனக்குப் புரியவே இல்லை. ஏன் இப்படி நடந்துக்கணும்? அப்புறமா அரசைக் குற்றம் சொல்லணும்? கர்நாடகாவிலும் ஏதோ ஓர் ஊர்த் தேர்த்திருவிழாவில் மக்கள் கூட்டம் கூடியதை வீடியோவாகக் காட்டினார்கள்.
Deleteநான் மார்ச் 30ல் செல்லவேண்டிய 5 நாட்கள் மேல்கோட்டை வைரமுடி சேவை பயணம் கான்சல் செய்யப்பட்டது. வரும் 19, 12 நாட்கள் பத்ரி யாத்திரை கான்சல் செய்யப்பட்டு, செப்டம்பரில் போகலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். பெண்ணுக்கு சி.ஏ. தேர்வு, மூன்று முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. பையனுக்கு செமஸ்டர் பரீட்சை ரொம்பவே தள்ளிப்போட்டிருக்காங்க.
Deleteஊரடங்கைவிட எனக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் என்ன என்ன பிரச்சனை வருமோ என்ற கவலை மிகவும் அதிகமாக இருக்கு. (அப்போதுதான் ரிஸ்க் ரொம்பவே அதிகரிக்கும்)
ம்ம்ம்ம்,பலரும் இப்படிப் பிரயாணங்கள் தள்ளிப் போட்டிருப்பதைச் சொல்கின்றனர். எங்க வீட்டில் 2,3 கல்யாணங்கள், 2 உபநயனம் ஒரு பீமரத சாந்தி போன்றவை தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன. எப்போது என்றே தெரியவில்லை.
Deleteஉங்கள் கண் பிரச்சனை விரைவில் குணமாகட்டும். ப்ரார்த்தனைகள்.
ReplyDeleteநன்றி நெல்லைத் தமிழரே
Deleteசென்னையில் இருக்கும் குழந்தையை காணொளியில் கண்டு பேசினீர்களா? அவர்களுக்கும் விரைவில் பிரச்சனை தீர்ந்து அமெரிக்காவை சுமுகமாக அடைய ப்ரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநேரம் கிடைக்கையில் பேசுவோம் நெல்லைத் தமிழரே. இப்போதைக்கு அது தான் ஆறுதல்.
Deleteசென்னையின் அடர்த்தியான மக்கள் தொகை போல தமிழகத்தின் மற்ற ஊர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅதுவும் ஒரு காரணம் என்றாலும் மக்களிடையே காணப்படும் அலட்சியம்! என்ன ஆயிடும் என்னும் எண்ணம், மெத்தனம் அதிகம் எனத் தோன்றுகிறது.
Deleteநமக்கு பொதுவா 'இவர் என்ன சொல்றது நாம என்ன கேட்கறது' என்ற எண்ணம் அதிகம். அரசு பெரும்பாலான சமயங்களில் உதவிகரமாக இல்லாததும் காரணம்.
Deleteநம்பினோர் கெடுவதில்லை இதுநான்குமறை தீர்ப்பு
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteபலரும் சென்னை மக்களை குறை சொல்லி பல பதிவுகள் ( பேஸ்புக்கில் குறிப்பாய் ).
ReplyDelete1. மக்கள் நெருக்கம் அதிகம் இங்கே. அப்படி இருந்தும் இங்கே இருக்கும் மக்கள் தொகைக்கு நோய் தொற்று விகிதம் மிக குறைவு.
2. அதேபோல் இறப்பு விகிதம் மிக குறைவு
3. நோய் தொற்று குணமாகும் விகிதம் மிக அதிகம் இங்கேதான்
4. மாநிலத்தின் பிற பகுதிகளை போல் இங்கே பல இடங்களுக்கு நடமாடும் காய் வண்டிகள் வரவில்லை. ஒரு சில இடங்களில் மளிகை / காய் கடைக்காரர்கள் லாக் டவுன் சொன்னதுக்கு முதல் நாள் அடித்து பிடித்து சொந்த ஊருக்கு சென்று விட்டனர். எங்க தெருவிலே இரண்டு கடைக்காரர்கள் இப்படித்தான்
5. மக்களுக்கு கையில் காசு இல்லை. இனியும் கட்டுப்பாடுகள் அதிகமாய் இருந்தால் மக்கள் வெளியில் தடையை மீறி வந்து விடுவார்கள். எத்தனை நாள் அரசு இலவசங்களை கொடுத்து கொண்டே இருக்க முடியும் ?
6. இதற்கு மருந்து சோதனை எல்லாம் முதல் ஸ்டேஜில் உள்ளன. மார்க்கெட்டிற்கு வர பல மாதங்கள் ஆகும்.
7. என்று லாக் டவுன் முடிந்தாலும் அதற்கடுத்த நாளே தொற்று மிக அதிகமாகும். வேறு வழியில்லை. லாக் டவுன் நோய் தொற்றும் வேகத்தை குறைக்கும். அவ்வளவுதான்.
8. கவலையற்க . இறைவன் காப்பான்
எல்கே, எல்லாம் ஒத்துக்கறேன். ஆனாலும் மக்களுக்குக் கொஞ்சமானும் கவனம் தேவைனு தான் தோன்றுகிறது. அப்புறமா அரசைக் குறை கூறுகின்றனர். இந்த நோய் வந்தால்/யாருக்குமே வர வேண்டாம், வந்துவிட்டால் வீட்டில் உள்ளவங்க வந்து கவனிக்கக் கூட முடியாது! அதை எல்லாம் நினைக்கையிலேயே அடி வயிறு கலங்குகிறது. இவங்க எதையும் நினைக்காமல் சாதாரணமாக வருகிறார்கள்.
Deleteஇங்கே அரசால் கொடுக்கப்படும் காய்கறிகளோ, பழங்களோ, பூக்களோ, மளிகைப் பொருட்களோ வருவதில்லை. அதெல்லாம் இங்கிருந்து இன்னும் தள்ளி இருக்கும் இடங்களில் கொண்டு போய்க் கொடுக்கின்றனர். ஆட்டோ, குட்டி யானை என்னும் வான் ஆகியவற்றில் செல்கின்றன. எங்களுக்குப் பக்கத்தில் ஒரு அண்ணாச்சி கடையும், கீழேயே ஒரு வணிக வளாகமும் உள்ளது. குடியிருப்புப் பகுதியில் இருப்பதால் அதைத் திறந்து வைத்து வியாபாரம் செய்கின்றனர். காய்கறி அண்ணாச்சி கடையிலும் (விலை ஒன்றுக்கு இரண்டு வீதம் அதிகம்) வணிக வளாகத்திலும் தள்ளுவண்டிகளில் காய்கள் விற்பனை செய்பவர்களிடமும் வாங்குகிறோம்.
Deleteஉங்கள் உடல் நலனை பார்த்து கொள்ளவும். கண்ணுக்கு ஏதாவது மருந்து வாங்கினீர்களா ?
ReplyDeleteகண்களுக்கு அவங்களே மருந்து சொட்டு மருந்து கொடுத்திருக்காங்க. தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தணும்.
Deleteஉங்கள் கண் விரைவில் நலமாகட்டும்.
ReplyDeleteபேரனுக்கு வாழ்த்துகள்.
வாங்க மாதேவி நன்றி. அப்பு பேத்தி! உங்கள் வாய் முஹூர்த்தம் பேரன் பிறக்கட்டும். :))))
Deleteசென்னைக்கு சிவப்புக் கலரே பொருத்தம். அப்படியிருக்கிறார்கள் அங்கு வாழ் மனிதர்கள். படித்திருந்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? புத்தியில்லாதவர்கள் போகுமிடம்தான் என்ன?
ReplyDeleteஒரு பக்கம் ராணுவமே முன்னெடுத்து மருத்துவர்களை அவர்தம் குழுக்களை மலர்தூவி நன்றி செலுத்துகிறது. வேறெந்த நாட்டிலாவது இப்படி ஒரு மரியாதை கிடைக்குமா? பொதுமக்கள் டிவி பார்த்துக் கைதட்டுகிறார்கள்.. ஆனால் ஊரடங்கைக் கொஞ்சம் தளர்த்தினால், ஓடிப்போய் நிற்கிறார்கள் கூட்டங்கூட்டமாய்..
இவ்வளவு டிவி-க்களில் விளக்கி, என்னென்னவோ காண்பித்து, எடுத்துச்சொல்லி என்ன ஏறியது மண்டையில்? என்னமாதிரி ஜனங்கள் இதுகள்? அவர்கள் நலனே அவர்களுக்குப் புரியவில்லையே.. அரசாங்கம் என்னதான் செய்வது? அராஜக எமர்ஜென்சியை அறிவித்து அடித்துத் துவைத்தால்தான் புத்தி வருமா? படியாத மாடு அடிவாங்கித்தானே ஆகவேண்டும்!
சென்னையில் தடுப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. ஆங்காங்கே நின்றிருந்த போலீஸ்காரர்கள் யாருமே இல்லை. பெயருக்கு எங்காவது ஒன்றிரண்டு பேர். அவர்களும் யாரையும் தடை செய்வதில்லை. சாலையில் கணிசமாக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நிறைய கடைகள் திறக்கப் பட்டுள்ளன.
Deleteவாங்க ஏகாந்தன். சற்றுமுன்னர் தொலைக்காட்சியில் பார்த்தப்போக் கூட ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்தோ கடைகள் திறப்போ இல்லை. ரங்கநாதன் தெருவில் திறந்த ஓரிரு கடைகளையும் மூடச் சொன்னதாகச் சொன்னார்கள்.என்னவோ ஒண்ணுமே புரியலை. பொதுவாக நம் மக்கள் முன் ஜாக்கிரதையாக இல்லாமல் பின்னர் அரசைக் குறை கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
Deleteஇப்போப் பாருங்க வெளிமாநில மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயில்வே 85 சதவீதம் கட்டணப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உள்ளது. மீதம் உள்ள 15 சதவீதத்தைத் தான் அந்த அந்த மாநிலத்தைக் கட்டச் சொல்லிக் கேட்டிருக்கிறது. ஆனால் செய்தித் தாள்களிலும் சரி, தொலைக்காட்சிகளிலும் சரி இவ்வளவு விபரங்கள் வரவில்லை. அரசு அந்த ஏழை மக்களைக் கட்டணம் செலுத்தும்படி நிர்ப்பந்தம் செய்வதாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உடனே நம்ம ஏழைப்பங்காளர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தாங்கள் பொறுப்பு ஏற்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியேனும் செய்யட்டும்.
Deleteகாங்கிரஸ் எதையாவது செய்வதாகச் சொன்னாலே போதும், எல்லா டிவி சேனல்களும் படத்தோடு பாய்ந்துகொண்டு பப்ளிசிட்டி தரும். எந்த மாநிலத்தில், எந்த ஏழையின் கையில் காங்கிரஸ் கட்சியின் பணம் வந்திருக்கிறது இதுவரையில். 60 வருட ஆட்சியில் ஏழைகளைத் தாராளமாக உற்பத்தி செய்து உலகசாதனை படைத்த கட்சியாயிற்றே.. இருந்தாலும் அவர்கள்தான் ஏதோ ஏழைகளைக் காப்பாற்றத் தூக்கமில்லாமல் தவிப்பது மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தக் கடும் முயற்சி செய்யும் காசுவாங்கி ஊடகங்கள். உண்மையில் நாட்டின் நலம்பற்றி சிந்திப்பவர்பற்றி, நலத்திட்டங்களை அமுல்படுத்தும் அரசைப்பற்றி அது மாநிலமோ, மத்தியோ - இருட்டடிப்புதான், அல்லது நக்கல், கேலிதான் எப்போதும். நாட்டு நடப்பு என்பது இங்கே, கொரோனா சமயத்திலும் இப்படித்தான்.
Deleteஆமாம், இதுதான் சமயம் அவங்க ஏழைப்பங்காளர்கள்னு காட்டிக்கொள்ள. 70 வருட ஆட்சியில் ஏழைகளை இன்னமும் ஏழையாகவே வைச்சிருக்கோம் என்னும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. எப்போதும் கேலி தான், கிண்டல் தான், குற்றம் கண்டுபிடிப்புத் தான்.
Deleteகண்ணுக்கு ஐ ட்ரொப்ஸ் வாங்கி விடுங்கோ கீசாக்கா, இப்போ போலன் அலர்ஜியாகவும் இருக்கலாம், சூட்டினாலும் ஏற்படலாம்.
ReplyDeleteமருத்துவமனையிலேயே கொடுத்திருக்காங்க, பிஞ்சு! அதையும் அடிக்கடி பயன்படுத்த வேண்டாம்னு சொல்றாங்க.
Deleteசென்னை நிலைமைதான் இப்போ மோசமடைந்து வருவதாக அறிகிறேன், அனைத்து நாடுகளிலும் கூடித்தானே குறைஞ்சு வருகிறது... எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும்.
ReplyDeleteஎங்களுக்கும் லொக்டவுன் தான் ஆனால் ஊரடங்கு இல்லை, அதனால பொருட்கள் வாங்கத் தடை இல்லை, எப்பவும் திறந்திருக்குது, போய் வரத்தான் பயமாக இருக்கிறது.
எங்க பொண்ணும் அதான் சொல்றா, பையரும் அதான் சொல்றார். எப்போவும் திறந்திருந்தாலும் நாங்க போவதில்லை என. இங்கே திருச்சி, ஸ்ரீரங்கத்திலும் நேற்றுக் கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டார்கள் என்று தினசரிகளில் சொல்லி இருக்கிறார்கள். அது என்னமோ, யாருக்கும் நிலைமையின் தீவிரம் புரியவில்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇந்த தொற்றின் பயம் எப்போதுதான் நம்மை விட்டு விலகப் போகிறதோ தெரியவில்லை. மக்களும் இதனால் உயிர் ஆபத்து அவ்வளவாக இல்லையென்ற தைரியத்தில், கொஞ்சம் பொறுப்புணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. சாமான்கள் கிடைத்தாலும் அன்றாடம் தினக்கூலி வேலைகள் செய்யும் ஏழை எளியவர்களின் திண்டாட்டங்கள் கொஞ்சம் பயங்களை உணெடு பண்ணுகிறது. இறைவன் இவர்களை நினைத்தாவது நோயின் கடுமையை குறைக்க ஏதேனும் வழி செய்யக் கூடாதா என்ற பரிதவிப்பு ஏற்படுகிறது.
தங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனால் தங்கள் மகன், குழந்தையும், மருமகளும் அங்கில்லாமல் தனியே இருப்பதுதான் கஸ்டம். விமான போக்குவரத்து சீராகத் தொடங்கி. பத்திரமாக அவர்கள் அங்கு சென்று சேர என்னுடைய பிரார்த்தனைகளும். தங்கள் மகள் வயிற்றுப்பேத்திக்கு என்னுடைய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு இரண்டு நாட்களாய் தொடரும் நெட் தொடர்பு இல்லாததால் எல்லா பதிவுக்கும் உடனே வர இயலவில்லை. கால் வலி வேறு. பகலெல்லாம் நின்று நின்று வேலைகளை செய்ததும் இரவானதும் இடது கால் ஒரே வலி. பாதங்கள் இரண்டும் மரத்து போன மாதிரி பிரச்சனை ரொம்ப நாளாகவே இருக்கிறது.
தங்கள் கண் பிரச்சனை விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். எனக்கும் நிறைய காலமாகவே இந்த மொபைலில் தட்டச்சு செய்து மீளும் போது கண்களுக்குள் ஒரு மாதிரி பூச்சிகள் பறக்கின்றன. வெள்ளெழுத்து வந்தால் கூட எழுத்துகள் தடுமாற்றத்துடனேதான் படிக்க எழுத முடியுமில்லையா? கடவுள்தான் அனைத்தையும் குணப்படுத்த வேண்டும். தங்கள் உடம்பையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, இங்கேயும் இணையம் போயிட்டுப் போயிட்டு வரும். மக்கள் கொஞ்சமும் கவலை இல்லாமல் தான் இருக்கிறார்கள். ஒரு வண்டியில் 3 பேர் பயணம் செய்கின்றனர். காவல்துறையின் எச்சரிக்கை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். மெதுவாய் வந்து பதில் கொடுங்கள் பரவாயில்லை. உங்கள் கால்வலிக்கு மருந்துகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையா? முடிஞ்சால் ஆயுர்வேதத்தில் வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்கள். குணம் தெரியும். உங்களுக்கும் கண்களில் பூச்சி பறக்கின்றனவா? உடனே வைத்தியரைப் பார்க்கணும். வெள்ளெழுத்து எல்லாம் 40 வயசுக்குள் இருப்பவர்களுக்குத் தான் வரும். நானெல்லாம் அப்போது வெள்ளெழுத்து என்பதே இல்லாமல் ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தேன். தையல் மிஷினில் தைப்பேன். இப்போத் தான் பத்துப் பதினைந்து வருஷங்களாகப் பிரச்னைகள். ஆஸ்த்மா மட்டும் எப்போதும் உண்டு. அதையும் சமாளித்துக் கொண்டு தான் வந்தேன்.
Deleteவணக்கம் சகோதரி
Deleteகால் வலிக்கு நீலகிரி தைலம், அயோடக்ஸ் என கிடைத்ததை பூசி வருகிறேன். அடிக்கடி வெந்நீர் விட்டு வருகிறேன்.சமயத்தில் சுக்கு (சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.) அரைத்தும் பூசுகிறேன். இப்போது ஆயுர்வேத மருந்து கடைகள் திறந்திருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. அதற்கு மெஜஸ்டிக் போகனும். அலோபதி டாக்டரிடம் போகவும் எப்போதுமே ஒரு வித பயம். இறைவன்தான் எனக்கு மருத்துவர். அதனால் சப்பிரமணியனிடம்,வேண்டிக் கொண்டே இருக்கிறேன்.வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே சுற்றிச்சுற்றி வருவதனால் அதிகம் வலி தெரிகிறதோ என்னவோ..!
உங்களுக்கும் கண்களுக்கு மேல் இரவு படுக்கும் போது விளக்கெண்ணெய் ஒரு சொட்டு எடுத்து தடவி படுத்துப் பாருங்களேன். இதை தொடர்ந்து செய்து வந்தால் சூட்டினால் ஏற்படும் கண் சம்பந்தபட்ட நோய்கள் குணமாகும். நானும் இப்படித்தான் பாட்டி வைத்தியங்களை பின்பற்றி வருகிறேன். இறைவன் அனைவரையும் நலமுடன் காக்கட்டும். ஆறுதலான பதிலுக்கு நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்க அலோபதி மருத்துவர் கால்வலிக்கு மருந்து ஏகப்பட்ட நிபந்தனைகளோடு கொடுப்பார். அதைப் போட்டுக்கொண்டால் உடனே வயிறும் தொந்திரவை ஆரம்பித்துவிடும். ஆகவே நான் போட்டுக்கொள்ளவே மாட்டேன். இப்போது ஆயுர்வேத மருந்து தான். ராஜஸ்தான் ஔஷதாலயாவின் Pain Nivaran Churan மருந்து தான் நான் சாப்பிடுகிறேன். ஆரம்பத்தில் இரண்டு வேளை சாப்பிட்டேன். இப்போது இரவு மட்டும் படுக்கும்போது சாப்பிடுகிறேன். குணம் தெரிகிறது. ஆனால் மருந்தை நிறுத்த முடியவில்லை. :(
Deleteகண்களில் கட்டி வந்த சமயம் விளக்கெண்ணெய் மட்டுமே தான் பயன்படுத்தினேன். அதுவும் அப்போது அம்பேரிக்காவில் இருந்தோம். ஆகவே மருத்துவரிடம் போக வேண்டாம்னு விளக்கெண்ணெய் தான். தினம் இரவு படுக்கும்போது கூட உள்ளங்கால்களில் விளக்கெண்ணெய் தடவிப்பேன்.
Deleteநியூயார்க்கிலும் நியூஜெர்சியிலும் இருக்கும் வெள்ளையினத்தவர்கள் ஊரடங்கு போன்றவற்றை மதிப்பதில்லை என்று செய்திகள் கூறுகின்றன. அதேபோல் தான் கலிபோர்னியாவிலும். எங்கு போனாலும் இந்தியர்கள் மட்டுமே சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்து நடக்கிறார்கள்.
ReplyDeleteசென்னையில் நிலைமை மோசமாகத்தான் இருக்கும். காரணம் சப்ளை குறைவு, டிமாண்டு அதிகம். ஜனத்தொகையும் அதிகம். கஷ்டம் என்னவென்றால், இளம் வயதினர் ஊரடங்கை மதிக்காமல் தங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்களே என்பதுதான்.
தங்கள் உடல்னலம் முன்னேற இறைவனை வேண்டுகிறேன்.
//எங்கு போனாலும் இந்தியர்கள் மட்டுமே சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்து நடக்கிறார்கள்// - இது உண்மை. இந்தியர்கள் தங்கள் குணத்தை தங்கள் நாட்டில் மட்டுமே காண்பிப்பார்கள். ஃப்ளைட் ஏறியாச்சுன்னா, அவங்க செல்லும் நாட்டுச் சட்டத்தை அட்சரம் பிசகாம பின்பற்றுவாங்க (இல்லைனா, முட்டிக்கு முட்டி தட்டிவிடுவாங்களே, இல்லை கஷ்டப்பட்டு சேமிக்கும் காசை, ஃபைன் என்ற பெயரில் கறந்துடுவாங்களே என்ற பயம்தான்..வேறு என்ன)
Deleteவாங்க செல்லப்பா சார், எங்க பெண்ணும், பிள்ளையும் கூட அமெரிக்காவில் மக்கள் கொரோனா தொற்றை அலட்சியம் செய்வது குறித்துச் சொல்கின்றனர். அவர்கள் அளவில் வீட்டிற்குள் இருந்து வருகிறார்கள். எனக்குக் கண்களில் பூச்சி பறப்பது தான் பிரச்னை. குறையும் என எதிர்பார்க்கிறேன்.
Deleteஉங்கள் கண்கள் இப்போது எப்படியிருக்கிறது? floaters அதிகமாய் இருக்கிறதா? அல்லது குறைந்து வருகிறதா? எனக்கும் சில வருடங்கள் முன் floaters வந்து மிகவும் பயமுறுத்தி விட்டது. மருத்துவர் ரெடீனா மட்டும் பாதிப்படையாமல் இருக்கிறதா என்று பரிசோதித்தார். அதில் எதுவும் பிரச்சினையில்லை என்பதைக்கண்டதும் இந்த தானாகவே மறைந்து விடும் என்று சொன்னர். எனக்கு ஒரு மாதத்தில் தானாகவே மறைந்தது. திருச்சியில் ophthalmologist யாரிடமும் செல்லவில்லையா?
ReplyDeleteவாங்க மனோ. கண்களில் பூச்சிகள் பறந்து கொண்டு தான் இருக்கின்றன. எனக்கும் ரெடினா பாதிப்பு இல்லை என்றார்கள். இங்கே வந்து தான் கண் மருத்துவரிடம் (எப்போதும் போகிறவர்) போய்க் காட்டினேன். பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்கிறார், ஆனால் கண்ணாடி போட்டுக் கொண்டாலும் சில சமயங்களில் ஈக்களின் இறகுகள் விரித்தாற்போல் தெரிகிறது. சில சமயம் பளிச்!
Delete