எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 20, 2020

இந்த நாள் என்ன நாள்? என்னுடைய நாள்!

கொரோனாவின் தாக்கத்தினால் கொஞ்சம் அலுப்புத் தட்டிய வாழ்க்கையில் ருசியூட்ட வந்தது இன்றைய காலைப் பொழுது. இன்னிக்கு என்னமோ காலம்பர எழுந்துக்கவே நேரம் ஆகிவிட்டது. ஐந்தரைக்கு எழுந்த நம்ம ரங்க்ஸ் என்னை எழுப்பினார் என்றால் பார்த்துக்குங்க! அடடானு நினைச்சுட்டுக் காலைக்கடன்களை முடிக்கக் குளியலறைக்குள் சென்றால், குழாயைத் திறந்தால் தண்ணீர் ஒரே சிவப்பும்  கருப்புமாகக் கொட்டிற்று. கழிவறையில் நீர் திறந்தால் அந்தத் தொட்டியில் இருந்து கருஞ்சிவப்பு நிற நீர். வாஷ் பேசினில் கேட்கவே வேண்டாம். சரி, இந்தப் பக்கத்துக் குழாயில் ஏதேனும் பிரச்னை இருக்கு போலனு நினைச்சு அரை மணி நேரம் எல்லாக் குழாய்களிலும்  நீரைத் திறந்துவிட்டபின்னர் என் வேலைகளை முடித்துக் கொண்டு வந்தால் நம்ம ரங்க்ஸுக்கும் அதே பிரச்னை. இன்னொரு குளியலறையில்! சரினு மூன்றாவது குளியலறைக்குழாயைத் திறந்தால்! ஆஹா, வண்ணமயமான நீர் கொட்டோ கொட்டுனு கொட்டுது! எல்லாக்குழாய்களையும் சுமார் அரைமணி நேரமாவது திறந்து வைக்கணும்னு திறந்து வைச்சோம். அதுக்கப்புறமாத் தான் காபி போட ஜலமே  எடுக்க முடிஞ்சது.

இது எல்லாவற்றையும் முடித்துக் கொண்டுக்கஞ்சி வைத்துக் காபியும் போட்டுக் குடித்துவிட்டு கணினியில் உட்கார்ந்தால் பாஸ்வேர்ட் போட்டு உள்ளே நுழைந்து க்ரோமில் வேலை செய்யக்  க்ரோமைத் திறந்தால், "சுத்துது! சுத்துது! சுத்துது! பாரு அங்கே!" சுற்றிக்கொண்டே இருக்கு! எதுவுமே வரலை. சரினு க்ரோமை மூடலாம்னு பார்த்தால் மூட முடியலை. அந்த வெள்ளைப் பக்கம் மட்டுமே இருக்கு! எக்ஸ்ப்ளோரருக்கும் போக முடியலை.  டாகுமென்ட்ஸைத் திறக்க முடியலை. படங்கள் இருக்கும் பக்கங்கள் வரலை. ஒரே களேபரம்! அந்த வெள்ளைப் பக்கம் மட்டும் மவுசின் சுற்றும் ஆரோவோடு இருக்கு ஸ்திரமாக! அணையவே இல்லை சரினு கைகளால் ஸ்விட்சை அணைத்துக் கணினியை மூடிட்டு மறுபடி, மறுபடி, மறுபடி, மறுபடி போட்டால் அதே தான் நிலைமை. எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆஹா! இன்னிக்குச் சுவையூட்ட இப்படி ஒரு பிரச்னையா என நினைத்துக் கொண்டு, பழைய மடிக்கணினியை (ரொம்பச் சமத்து அது) எடுத்து வைத்துக் கொண்டு பெயருக்குச் சிலவற்றைப் பார்த்துட்டு அப்புறம் உட்கார்ந்தால் நேரம் ஆயிடும்னு மூடி வைச்சுட்டு வேலையைப் பார்க்கப் போயிட்டேன்.

தண்ணீர்ப் பிரச்னை எதனால் என்பதைப் பால் வாங்கக் கீழே போன நம்மவர் விசாரித்து வந்தார். முதலில் நாங்கள் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தவர்கள் கடைசியாக இருக்கும் அழுக்கு ஜலத்தோடு தொட்டியை நிரப்பிட்டாங்க போலனு நினைச்சோம். ஆனால் இது தானியங்கியாகத் தண்ணீர் மேலே ஏறும் அமைப்புக் கொண்டது. அது ஏதோ சரியா வேலை செய்யாமல் தண்ணீரே ஏறவில்லை. சுத்தமாய்க் காலி! காலை நாலரைக்கு எழுந்த எதிர்க் குடியிருப்புக்காரங்க தண்ணீர் வரலைனு பார்த்துட்டுக் கீழே பாதுகாவலருக்குத் தகவல் கொடுக்க அவர் வந்து தொட்டியை எல்லாம் சோதித்துவிட்டுத் தண்ணீரே இல்லை எனக் கைகளால் மோட்டாரை இயக்கித் தண்ணீரை ஏற்றி இருக்கார். கடைசி வரைக்கும் போன தண்ணீர் அடியில் இருந்த அழுக்குகளை எல்லாம் இழுத்துக்கொண்டு வந்து ஒரு வழி பண்ணிவிட்டது.

கணினிக்கு சுமார் ஒன்பதரை, பத்து மணி அளவில் மருத்துவரை அழைத்தேன். பதினோரு மணிக்கு மேல் வந்து பார்ப்பதாகச் சொன்னார். இப்போத் தான் அரை மணி முன்னால் வந்துவிட்டுப் போனார். கணினி சரியாக மூடவில்லை என்பதால் அவர் நான் எப்போதும் ஹைபர்நேட்டில் வைத்திருப்பதாக நினைத்துவிட்டார். அப்படி இல்லை, இன்னிக்கு மூடலை என்று சொன்னேன். அப்புறமும் அவருக்கு நம்பிக்கை வரலை. கணினியில் சேர்ந்திருந்த வேண்டாதவற்றை நீக்கிக் கணினியைச் சரி செய்துவிட்டு என்னையே கணினியை மூடி மறுபடி திறக்கச் சொன்னார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  பதினைந்து வருஷங்களுக்கும் மேலாகக் கணினியோடு உறவு பூண்ட எனக்கா இந்த சோதனைனு மனசுக்குள் நினைத்துக் கொண்டு அவர் சொன்னதைச் செய்து காட்டினேன். அதுக்கப்புறமா அவருக்கு அரை மனசா எனக்குக் கணினியை அணைத்து வைக்கத் தெரிஞ்சிருக்குனு புரிந்து கொள்ள முடிந்தது போலும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போக் கணினி சரியா இருக்கு.

மொத்தத்தில் இந்த நாள் எனது நாள்! Today is Myday. God made my day! 

55 comments:

 1. எப்படியோ எல்லா நாட்களும் நம்முடைய நாட்கள் ஆகட்டும்!...

  நலமும் வளமும் ஒருங்கே விளையட்டும்...

  ReplyDelete
  Replies
  1. இது போல நம்நாட்கள் இருக்கக் கூடாது நீங்கள் எங்கோ த்வறு செய்து விட்டு கட்வுள் உங்கள் நாளை உண்டாக்கினார் என்பது சரியா

   Delete
  2. வாங்க துரை, நலமே விளையட்டும்.

   Delete
  3. எங்கே தவறு செய்யப்பட்டது ஐயா? காலை எழுந்ததும் காலைக்கடன்களைக் கழிக்கப் போனதிலா? கணினி திறக்காமல் இருந்ததிலா? பார்க்கும் பார்வையைக் கொஞ்சம் மாத்திக்கோங்க. உங்க பதிவிலே நீங்கள் ஓர் ஆருடம் எனக் கடவுள் நம்பிக்கையைச் சொல்கிறீர்கள்! மற்றவர் பதிவிலே அதைத் தவறு என்கிறீர்கள்?

   Delete
  4. //அவனுக்கு தெரியாததா ஒன்பது அவதாrரங்கள் எடுத்து அவனியை ரட்சித்தவனுக்கு தெரியாதா உலகை அழிய விடமாட்டான் உலகு அழியும் குறிகள் எல்லாம் காட்டுகிறான் அனாத ரட்சகன் அல்லவா கடைசி நேரத்தில்வருவான்.//இது தான் அனைவரும் நினைப்பது. ஆனால் நீங்கள் வித்தியாசமாக நினைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். இதுவும் உங்கள் கடவுள் நம்பிக்கையைத் தானே சுட்டிக் காட்டுகிறது! மற்றவர் நம்பக் கூடாதா? :))))))

   Delete
  5. அதை ஒரு அங்கதக் கருத்தாகக் கொள்ள வேண்டும் நேராகஎழுதினால்பலர் மனதும் புண்படலாம்

   Delete
 2. தினமும் கணினி நலம் தரட்டும் வாழ்க நலம்.

  ReplyDelete
  Replies
  1. ஆயிற்று அதுக்கும் நான்கு வயசு. அம்பேரிக்கா எனில் தூக்கி எறிந்துவிடுவார்கள். நான் இதற்கு முன்னர் வாங்கினவற்றைக் கூடத் தூக்கி எறிய மனமில்லாமல் வைச்சிருக்கேன்.

   Delete
  2. நான்கு வயசா?  என் கணினிக்கு அதைவிட வயசு அதிகம்.  ஆனால் அவ்வப்போது சில பார்ட்ஸ் மாற்றியதுண்டு!

   Delete
  3. ம்ம்ம்ம் ஸ்ரீராம், என்னுடைய கணினிக்கு வயது ரொம்ப அதிகம். பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆயிற்று. ஆனாலும் விடாமல் வைத்திருந்தேன். அம்பேரிக்கா போகும் முன்னர் தான் கொடுத்தேன். அதுக்குத் தான் பணம் கொடுக்காமல் இழுத்தடித்துவிட்டுப் பின்னர் கொடுத்தார் இதே கணினி மருத்துவர்.

   Delete
  4. இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மடிக்கணினிக்குப் பத்து வயசு. இன்னொன்றிற்குத் தான் நாலு வயசு. அது தான் ரொம்பப்படுத்தல்.

   Delete
 3. இந்த நாள் எனது நாள்....பொறுமையை சோதித்து இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதுவும் காலை எழுந்ததும் எழுந்திருக்காததுமாகத் தண்ணீர் காட்டிய வேலை! :))))

   Delete
 4. சில நாட்கள் இப்படித்தான்! :)

  நலமே விளையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்தடுத்து இம்மாதிரித் தனி வீடுகளிலும் வேலை காட்டும். முடிவில் எல்லாம் நலமே!

   Delete
 5. நான் கருத்துரை போட்டு இருந்தேனே ?

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணு தான் வந்திருக்கு கில்லர்ஜி! அதைப் போட்டுட்டேன். வேறே இல்லை. :(

   Delete
 6. குழாய்த் தண்ணீர், சிவப்பு நிறம் - எங்க பேய்க்கதையோ இல்லை கனவில் பேய்களைக் கண்டதா என யோசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, சொப்பனம் எல்லாம் நினைவிலேயே வரதில்லை. முந்தாநாள் கூடக் கத்தினேன் என்றார். அதிகாலை மூன்றரை மணிக்கு. அவருக்கு விழிப்பு வந்துவிட்டதாம். நான் ஜாலியாகக் கத்திட்டு ஜாலியாகத் தூங்கி இருக்கேன். ஐந்து மணிக்குத் தான் எழுந்தேன். :)))))

   Delete
  2. ஜாலியா கத்திட்டு ஜாலியா தூங்கினீங்களா !! அவ்வ்வ்வ் ஆனாலும் பாவம் அவர் :)

   Delete
  3. இஃகி,இஃகி, ஏஞ்சல், ஒரு வகையில் நினைவுக்கு வராததும் நல்லது தானே!

   Delete
 7. இந்த கணிணி மருத்துவர்தான் உங்களுக்கு ரூபாய் பாக்கிவைத்து பல மாதங்கள் கழித்துத் தந்தவரா?

  எப்படியோ..உங்களுக்கு இடுகை போட விஷயம் கிடைத்ததே...

  ReplyDelete
  Replies
  1. அட! ஆமாம், அந்தக் கணினி மருத்துவரே தான்! எப்பூடி? கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்களே! எப்பூடி? இடுகை போடுவதா இல்லை. அப்புறமா எழுதி வைப்போம்னு எழுதினேன். எனக்கே பிடிச்சுப் போய் வெளியிட்டு விட்டேன். :))))))

   Delete
  2. அடக் கடவுளே. எப்படி எல்லாம் சோதனை வரது.
   எழுந்ததும் தண்ணீர் இப்படி தண்ணி காட்டினால்
   அடுத்தாப்புல என்ன செய்யறது.
   நல்ல வேளை கணினிக்காரராவது வந்தாரே.

   எல்லா நாட்களும் இனிய நாட்களாகட்டும் கீதாமா.

   Delete
  3. வாங்க வல்லி, இது எங்களுக்கு அடிக்கடி நடக்கும் ஒன்று. அதாவது இந்தத் தண்ணீர் தண்ணிகாட்டுவது. மேல் மாடியில் கடைசியில் இருக்கோம் இல்லையா? எப்போத் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தாலும் முதலில் பாதிப்பு எங்களுக்குத் தான் வரும். ஆனால் இப்போத் தான் அடுத்தடுத்து ஒரே நாளில் சோதனைகள் வரவே பகிர்ந்தேன்.

   Delete
 8. எங்களுக்கு அதிகாலை வரும் தண்ணீர் கொஞ்சம் நாற்றம் அடிக்கும்.  அதைத் திறந்து கீழே விட்டு விட்டால் அப்புறம் சரியாய் இருக்கும்.  இது புது வீட்டுப் பிரச்னைகளில் ஒன்று!  கொஞ்சம் இரும்புச்சத்து கலந்த நீர்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், பொதுவாகச் சென்னையில் தண்ணீரே கெட்டுப் போய்ப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அம்பத்தூரில் எங்கள் வீட்டுக் கிணற்று நீரை அக்கம்பக்கம் எல்லாம் கொண்டு செல்வார்கள் குடிக்க நன்றாக இருக்கும் என்பதால். ஆனால் பின்னாட்களில் கெட்டுப் போய்விட்டது. போர்வெல் போட்டிருந்தோம். அந்தத் தண்ணீரும் சுமார் தான்.

   Delete
 9. எங்கள் கணினி மருத்துவர் அவரால் வர முடியவில்லை என்று அவர் நண்பர் ஒருவரை அனுப்புவதாகச் சொல்லி இருக்கிறார்.  அவர் இந்த சனி ஞாயிறில் வரக்கூடும்!  எனக்கும் வழி பிறக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. நல்லபடியாக ஞாயிறன்று வந்து சரி பண்ணித் தரப் பிரார்த்திக்கிறேன் ஸ்ரீராம். இவற்றோடு பழகிவிட்டோம். பல வேலைகளுக்குக் கணினி தேவையாக இருக்கிறது. நீங்களாவது மொபைல் மூலம் செய்கிறீர்கள். நான் மொபைலைப் பேசுவதற்கும் வாட்சப் பார்க்கவும் மட்டுமே வைச்சிருக்கேன்.

   Delete
 10. நலமாய் நாள் கடந்ததில் நல்லதுதான்.  எப்படியோ சரி ஆயிற்றே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம், காலை வேளையில் எழுந்ததில் இருந்து இப்படி அடுத்தடுத்து நடக்கவும் கொஞ்சம் கவலையாகத் தான் இருந்தது. பின்னர் இறை அருளால் எல்லாம் சரியானது.

   Delete
 11. ஆத்தாடி... எத்தனை தொல்லை...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க திரு தனபாலன். இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற அளவுக்குத் தொல்லைகள் அனுபவிச்சாச்சு! :))))

   Delete
 12. சில நாட்கள் இப்படித்தான் ஆகும். இன்னிக்கு காலையில் எழுந்தவுடன் கணினி ஆன் ஆகலை. அதை சரி பண்ணி உள்ள வந்தா வெப்சைட் எதோ பிரச்சனைன்னு க்ளையண்ட் மெசேஜ் . சர்வர்ல பிரச்சனை. அதுகூட போராடி சரி பண்ண சொல்லி சர்வர்காரனுக்கு மெயில் அனுப்பிட்டு , அப்பாவை ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயிடு வந்து சாயங்காலம் சரி ஆனது. முடியலை

  ReplyDelete
  Replies
  1. அதான் எல்கே. நாள் ஆரம்பம் சரியில்லையேனு வருந்தினாலும் பின்னால் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லாமல் போனால் சரி!

   Delete
 13. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. எந்த விஷயமாக இருந்தாலும், உங்களுக்கு எழுதுவதில் இருக்கும் திறமைக்கு முன் எல்லா விஷயங்களும் படிக்கும் எங்களுக்கு சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.

  என்ன..! நீங்கள் பட்ட கஸடங்களை படித்தபின் மானசீகமாக நாங்களும் உணர்கிறோம். ஆனால், உங்களுக்குத்தான் முழுதுமாக சிரமம். காலை எழுந்தவுடன் இப்படி ஏதாவது பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் சற்று கடுப்பாத்தான் இருக்கும். இதை நானும் அனுபவித்து இருக்கிறேன். எப்படித்தான் சமாளித்தீர்களோ? இனி இந்த மாதிரி பிரச்சனைகள் உங்களுக்கு வராதிருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, ஆண்டவன் சோதனைகளைக் காட்டிவிட்டே நன்மைகளைத் தருவான். இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஓர் மழைக்காலத்தில் மின்சாரமும் இல்லாமல் போய், எரிவாயு அடுப்பிலும் வாயுக் கசிய ஆரம்பித்துத் தொலைபேசினால் வர சாயங்காலம் ஆகும் என்றார்கள். நல்லவேளையாகக் குமுட்டி அடுப்பு இருந்ததால் அதில் காலைக் காபியில் இருந்து எல்லாம் செய்தேன். இந்த அழகில் ஓர் விருந்தாளி வேறே.இங்கே தான் சாப்பிடுவேன் எனப் பிடிவாதம்! மத்தியானத்துக்கு மேலே மின்சாரம் வந்துவிட ரைஸ் குக்கரில் சாதம் வைக்க வசதியாக இருந்தது. மற்றவை குமுட்டி அடுப்பில்.

   Delete
 14. எங்களுக்கு தண்ணீர் தொட்டியில் முற்றிலும் காலியானம் மோட்டார் போட்டால் கறுப்புகலரில் தண்ணீர் வரும்.
  உங்களுக்கு சிவப்பு கலரில் வந்து இருக்கிறது.

  கணினி மருத்துவர் இந்தக் காலத்தில் வந்தாரே ! கை கொடுக்கும் கடவுள்தான்.

  சில நாட்கள் இப்படித்தான் பொழுதுகள் போகும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, கறுப்பு, கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் வரும்! தொட்டியைக் கழுவும்போது கடைசியில் அந்தக் கழிவுகளைத் தனியாகத் தண்ணீர் எடுத்துக் கழுவி அரை மணி நேரம் நல்ல நீர் நிரப்பி அதையும் குழாய் வழியே வெளியே விட்டபின்னர் தொட்டியை நிரப்பினால் இப்படிக் கறுப்பாகவோ, சிவப்பாகவோ வராது. அம்பத்தூர் வீட்டில் நாங்க இருவருமே மேலே உள்ள தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வோம். ஆள் வைத்தது இல்லை.

   Delete
 15. அட கஷ்டமே! நான் சென்னையில் இருந்த பொழுது கோடை காலம் என்றால் தினமும் இரவு படுத்துக்க கொள்ளும் முன் இரண்டு பாத் ரூம்களிலும் ஒரு பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைத்து விடுவேன். ஏனென்றால் வெயில் காலத்தில் மோட்டார் ரிப்பேராவது சகஜம். காலையில் எழுந்ததும் தண்ணீர் இல்லாமல் தவிக்க வேண்டாமே. எனக்கும் சென்ற வாரத்தில் ஒரு நாள் க்ரோம் நீங்கள் சொல்லியிருப்பது போலவே சதி செய்தது. திறக்கவும் இல்லை, மூடவும் முடியவில்லை. பிறகு  ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்து. பிறகு குரோம் ஐ மீண்டும் இன்ஸ்டால் செய்த பிறகு ஓகே.  

  ReplyDelete
  Replies
  1. பகல்வேளையில் தண்ணீர் சூடு ஏறிவிடும் என்பதால் காலை குளித்ததும் வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்வேன். இரவில் அதிகம் தேவை இல்லை. காலையில் தான் தண்ணீர் நன்றாக வருகிறதே என்னும் எண்ணம் தான். ஜாம்நகரில் இருந்தப்போ, ராஜஸ்தானில் இருந்தப்போ எல்லாம் கூடத் தண்ணீர்த் தொட்டிக் குளியலறையிலேயே இருந்ததால் அதிலே பிடித்துக் கொண்டுவிடுவேன். ஆனால் இங்கே தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த பின்னர் இப்படி வருகிறது/வந்து கொண்டிருக்கிறது. சொல்லிப் பார்த்துட்டோம். ஆனால் அதெல்லாம் பகல் வேளையில் என்பதால் சமாளித்துக் கொண்டு விட்டோம். இது காலை எழுந்ததும் என்பதால் பிரச்னை!

   Delete
 16. எனக்கெல்லாம் விதவிதமா அனுபவம் வரும் :) எல்லாத்தையும் ஜாலியா எடுத்துப்பேன் .ஒரே நாளில் இரண்டு கடைகளுக்கு போய் இரண்டு இடத்திலும் தொம்முனு வழுக்கி விழுந்திருக்கேன் :) ரோபோ மாதிரி அடிக்கடி அபவ் டெர்ன் குடுக்க பார்த்துதான் இப்டி நடந்திருக்கு :) உங்க கணினி மருத்துவர்  கணினி ஷட்டவுன் பண்ண தெரியுதான்னு உங்களை டெஸ்ட் பண்ணாரா :) ஹாஹாஹா

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், இந்த இடிச்சுக்கறதிலேயும் கீழே விழறத்திலேயும், பாத்திரங்கள் கீழே விழுவதிலேயும் நம்மை மிஞ்ச ஆட்கள் உண்டானு நினைச்சுக் கொண்டிருக்கேனே! :)))))) அதென்னமோ தெரியாது, வலக்கால் சுண்டுவிரலில் மாற்றி மாற்றிச் சுவரில் இடித்து அது நிரந்தரமாக வீங்கியே இருக்குமோனு சந்தேகம் வந்துடுது. கொஞ்சம் சரியாகும், உடனே இடிச்சுப்பேன்! :))))) கீழே விழறது கேட்கவே வேண்டாம், வெளியூர் போனால் எங்கானும் விழுந்து எழுந்தால் தான் ஊருக்கே திரும்புவேன். அதெல்லாம் கணக்கு வைச்சுண்டால் கஷ்டம்னு அவரும் கண்டுக்க மாட்டார். நானும் கண்டுக்கறதே இல்லை.

   Delete
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்கள் இருவருக்கும் பலன்ஸ் போதாது என நினைக்கிறேன்.. யோகா செய்த கீசாக்காவுக்குமா பலன்ஸ் இல்லாமல் விழுகிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   விழுந்து விழுந்து வெளாடினம் போல இருக்கே:)).. கால் விரல்கள் எனக்கும் எப்போதாவது இடிபட்டு நோகும், ஆனா இங்கு எப்பவும் நான் வீட்டு ஷூ[குளிருக்குப்] போட்டிருப்பதால் கோடை காலங்களில் அடிபட்டிருக்குது.. மற்றும்படி தடக்கி விழுவதென்பது கடவுள் புண்ணியத்தில் இதுவரை இல்லை, நான் நன்றாக, ஒரு கால் விரல்களில் மட்டும்கூட, பலன்ஸ் பண்ணி நிற்பேன் தெரியுமோ:))

   Delete
  3. பாலன்ஸ் இல்லாமல் தான் விழுகிறேன். உயரமான படிகளில் ஏறும்போது பின்னாடி தள்ளும். அப்படியே விழுந்துடுவேன். பிடித்துக் கொண்டு சமாளிக்கப் பக்கத்தில் ஏதானும் இருந்தால் சமாளித்துக் கொண்டு ஏறிவிடுவேன். இது 2012 ஆம் ஆண்டில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் போனப்போ ஆரம்பிச்சது. அங்கே ஒவ்வொரு படிகளும் இரண்டு அடி உயரம்! மேலே ஏறுவதற்குள் உன்பாடு என்பாடு என்றாகி விட்டது. குனிந்து உட்கார்ந்து உட்கார்ந்து ஏறினேன்.

   Delete
  4. @ பிஞ்சு ஞானி நீங்க ஞானியாச்சே அந்தரத்தில் பறப்பீங்க :) நான் கீதாக்காலாம் ஹியூமன்ஸ் :)))))))

   Delete
 17. ஆவ்வ்வ்வ்வ் கீசாக்கா ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டா:)) தண்ணிக்குப் புலம்பி ஒரு பந்தி, கணினிக்குப் புலம்பி ஒரு பந்தி.. நல்லவேளை கால் கை நோ எதுவுமிலை ஜாமீஈஈஈஈஈஈ:)).. அதுவும் இருந்திருந்தால் நாங்க இங்கிருந்த பாடில்லையாக்கும் இன்னும் ரெண்டு பந்தி நீண்டிருக்கும் ஹா ஹா ஹா... சரி சரி முறைக்கக்குடா கீசாக்கா:))

  பறவாயில்லையே உங்கட கன்னி சட்டுப்புட்டென திருத்தியாச்சு:)) ஸ்ரீராமின் கன்னி:) க்கு இன்னும் சுகம் வரவில்லைப்போலும்:))

  ReplyDelete
  Replies
  1. Breaking news : இந்தக் கணினி மருத்துவரும் வெளியூரில் மாட்டிக் கொண்டிருக்காராம்!!!

   Delete
  2. அடக் கஷ்டகாலமே! இப்போ என்ன செய்யப் போகிறீர்கள்? நான் அம்பத்தூரில் இருக்கும் எங்கள் கணினி மருத்துவர் ஸ்ரீகாந்தின் நம்பர் தேடிப் பார்த்துத் தரவா? பழைய மொபைலில் இருந்தது. அது காணாமல் போனதால் மாமா டயரியில் பார்க்கணும்.

   Delete
  3. தண்ணீருக்கு எல்லாம் புலம்பலை பிஞ்சு! வர தண்ணீர் ஒழுங்கா வரக்கூடாதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கால், கை நோவெல்லாம் சொல்லிச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சு! அதனால் இப்போ சொல்றதில்லை.

   Delete
  4. நம்பர் கிடைக்கலை! :(

   Delete
  5. வரவேண்டியவர் எங்கள் கணினி மருத்துவருடன் இணைந்து பணியாற்றுபவர். AMC போட்டிருக்கிறேன். எப்படியும் வந்து விடுகிறேன் என்று சொல்லி இப்போது அலைபேசினார்.

   Delete
  6. ஆஹா என் கணினி டாக்டரும் வெளிநாட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறாரே ஸ்ரீராம்!! அவர் எப்பொது வந்து எப்பொது என் வயதான கணினி என் கைக்குக் கிடைக்குமோ?!!!!!!

   கீதா

   Delete
 18. ஒரே நாளில் இத்தனை கஷ்டங்கள் அனுபவங்கள். இது உங்களுக்குச் சில பாடங்களையும் கற்றுத் தந்த்ருக்குமே

  எப்படியோ சரியாகிவிட்டதே.

  துளசிதரன்

  கீதாக்கா உங்களுக்குக் கணினி பயன்படுத்தி இத்தனை அனுபவம் இருக்கும் போதும் உங்களையே அவர் ஒத்துக் கொள்ள முடியாம போயிருக்கா ஆஆஆஆஅ இது கொஞ்சம் ஓவர் அல்லோ ஹா ஹா ஹா

  சென்னைல இப்படி தண்ணீர் வந்ததுண்டு. இங்கு வந்த பிறகுதான் நல்ல தண்ணீர் பார்க்க முடிகிறது. சென்னைல பல தடவை இப்படி ஒரு அரிய மணி நேரம் திறந்துவிட்டு த்தான் நல்ல த்ண்ணி வரும். ஆனால் பிடித்து வைத்துக் கொண்டு விடுவோம். குறிப்பா எங்கப்பா கரெக்ட்டா தண்ணீர் பிடித்து வைத்துவிடுவார் அதிலும் தெளிந்த நீரை எடுத்து வேறு பக்கெட்டில் மாற்றி கொஞ்சம் அழுக்கா இருப்பதை ஃப்ளஸ் செய்யவோ அல்லது பூந்தொட்டியிலோ விட்டு என்று பார்த்து என்னை வாஷிங்க் மெஷின் போடாதே என்று சொல்லிவிடுவார்.

  இங்கு தண்ணீர் நன்றாக இருப்பதால் பிரச்சனைகள் இல்லை. இப்போது கணினி கிடைக்கும் நேரம் சொற்பம் என்பதால் எனக்குப் பல வேலைகள் இதில் செய்ய முடிவதில்லை. பல கதைகள் பெண்டிங்க் முடிக்காமலேயே எழுதவும் மனம் லயிக்காமல் என்று...

  ஒருவழியாக உங்கள் பிரச்சனைகள் தீர்ந்ததே...ஹப்பா

  கீதா

  ReplyDelete