எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 21, 2021

அமேசானில் விற்கும் விராட்டிகள்! வேணுமா?

 அர்னாப் கோஸ்வாமியின் ஊழல் வெளி வந்திருக்கிறது. பொதுவாகவே அவரை எனக்குப் பிடிக்காது. நம்ம ரங்க்ஸ் அவருடைய சானலைப் போட்டாலே நான் காதைப் பொத்திக் கொண்டு நகர்ந்துடுவேன். அல்லது ஒலியைக் குறைக்கச் சொல்லுவேன். காதே செவிடாகிவிடும்படியான கத்தல். இப்படி ஆர்ப்பாட்டமான கத்தல்/கூச்சல் இருந்தாலே விஷயம் ஒன்றும் இருக்காது என்பதை இப்போது தெள்ளத்தெளிவாய்க் காட்டி விட்டார். அரசை ஏமாற்ற எப்படி மனசு வந்தது? இவர் மற்றவரின் ஊழல்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறாராம். தன் முதுகைத் தேய்த்துக் குளிக்காமல் பிறர் முதுகு அழுக்கைப் பற்றிச் சொல்ல வந்துட்டார். 

*********************************************************************************** எதிர்க்கட்சிக்காரங்க எதுக்காகக் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் பிரதமர் போட்டுக்கொண்டிருக்கணும்னு சொல்றாங்கனு புரியலை. ஆனால்  அது சரிதானோ என்று எனக்குள்ளும் அந்த எண்ணம் உண்டு. முதலில் பிரதமர், குடியரசுத் தலைவர், நிதி மந்திரி, உள்  துறை மந்திரி, பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோர் போட்டுக் கொண்டு மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்திருக்கலாமோ என நினைத்துக் கொண்டேன். இந்த ஊசி போட்டுக் கொண்டதில் ஓரிருவர் தவிர்த்து (அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமேனு நினைக்கிறேன்.) மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதற்குள்ளாக எல்லோரும் அவங்க அவங்க விருப்பப்படி இதற்கு ஆதரவு/எதிர்ப்புனு கருத்துத் தெரிவிக்க ஆரம்பிச்சாச்சு! நார்வேயில் இந்தத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட 20க்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்து விட்டார்கள். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்திருக்கின்றன. அந்த வகையில் நம் நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இந்த அலர்ஜி பாதிப்பு இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் மருந்து நல்ல மருந்து என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கே கல்யாணங்கள், விழாக்கள் எல்லாம் முழு அளவில் நடக்க ஆரம்பிச்சாச்சு. இந்த வருஷம் தைத்தேருக்கு நம்பெருமாள் ஆரம்ப நாளில் இருந்து வீதி  உலா வரவும் ஆரம்பிச்சாச்சு. கூட்டம் எப்படினு தெரியலை. நாங்க போகப் போறதில்லை. சும்மாவே பையர் தினம் இரண்டு வேளையும் எச்சரிக்கைக் குரல் கொடுத்துட்டே இருக்கார். எதுக்கு வம்பு! :(

***********************************************************************************

அமேசானில் விராட்டி விற்பதைப் பற்றி ஓரிருவர் சொல்லிக் கேட்டது உண்டு. ஆனால் உண்மையாகவே விற்பதையும் விராட்டியின் படங்களையும், இந்தியாவின் புனிதமான பசுக்களின் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்னும் விளம்பரத்தையும் முகநூலில் பார்க்க நேர்ந்தது. என்னவோ போங்க! எதைத் தான் விளம்பரம் கொடுத்து விற்பது என்று இல்லை. ஏற்கெனவே வேப்பங்குச்சி/கருவேலங்குச்சி எல்லாம் பல் தேய்க்க அமேசான் மூலம் வந்துவிட்டதாய்ச் சொன்னார்கள். இப்போ இது. நமக்கும் அமேசானுக்கும் ரொம்ப தூரம். எதுவும் வாங்கறதே இல்லை. ஆனால் நம்ம ஏடிஎம் கொடுத்த பரிசுகள் எல்லாம் அமேசான் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவைனு நினைக்கிறேன். புடைவை மட்டும் தான் மதுரா பொட்டிக்! 


*********************************************************************************

ஒரு வழியா பைடன் அம்பேரிக்க அதிபராகப்பதவிப் பிரமாணம் செய்து கொண்டு விட்டார். ட்ரம்ப் சின்னக் குழந்தை மாதிரி அழுது கொண்டே வீட்டைக் காலி செய்திருப்பார் போல! கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுக்கு இங்கே அவர் அம்மாவின் சொந்த ஊரில் ஏகக் கொண்டாட்டம். இனிப்புகள் பரிமாற்றம். பட்டாசுகள் வெடித்துக் கோலாகலமான கொண்டாட்டம். அவங்க அம்மாவின் அப்பாவோட குலதெய்வமான சாஸ்தாவுக்கு அடிச்சது யோகம். அபிஷேஹ ஆராதனைகள். கமலாவின் அம்மாவுக்கோ அல்லது அவர் கணவருக்கோ குலதெய்வமெல்லாம் இல்லை. ஆனாலும் நம் மக்கள் விடலையே!  என் தலையிலேயே  நான் அடிச்சுக்கொண்டேன். அந்தக் கமலா பெயர் தான் தமிழ்ப் பெயர்(சம்ஸ்கிருதத்திலும் கமலம்/கமலா தான் தாமரைக்கு)மற்றபடி அவங்களுக்கும் தமிழ் மொழிக்கும்/அவங்க தமிழர் என்பதற்கும் ஸ்நானப்பிராப்தி கூட இல்லை. அதோடு அவங்க அப்படி ஒண்ணும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிச்சவங்களாயும் சொல்லலை. ஆனாலும் நம் மக்களுக்கு உள்ள வெளிநாட்டு மோகம் இதை எல்லாம் மறக்கடிச்சு அவங்களுக்காகப் பிரார்த்தனைகள் எல்லாம் செய்துக்கற அளவுக்குப் போய்விட்டது. நல்லவேளையா யாரும் மொட்டை போட்டுக்கலைனு நினைக்கிறேன்.  திரைப்பட நடிகையர், நடிகர்களுக்குப் பின்னர் நம் மக்களின் ஆதர்சம் வெளிநாட்டினர் தான். 

37 comments:

  1. தலைப்பில் "Amazon" பாத்ததும் என்னமோ ஏதோனு ஓடி வந்தேன். ஆமா மாமி, கொஞ்ச நாளாவே இந்த வரட்டி அங்க விக்கப்படுது. ச்சே ச்சீ அப்படினு நம்மளை ஒதுக்க சொல்லிட்டு, இப்ப விக்கரான் கார்ப்பரேட்காரன். உப்பு இருக்கா பல்பொடி விளம்பர கதை தான் இதுவும்

    தடுப்பூசி போட்டுக்க கொஞ்சம் பயமா தான் இருக்கு, பாப்போம். அந்த அர்நாப் அண்ணாத்தய பார்த்து இப்ப இங்கேயும் கத்தி பழகி இருக்காங்க, நாம மட்டும் கொறச்சலா என்னனு

    நேத்து நைட்டு கண் முழிச்சு பைடன் பதவியேற்றது பாத்தேன், ஒரு காலத்துல பக்கத்தூரு ஆச்சே, அந்த விட்ட குறை 😀

    ReplyDelete
    Replies
    1. வாங்க, ஏடிஎம். தடுப்பு ஊசி போட்டுக்க எங்களுக்கும் கொஞ்சம் யோசனை தான்! அர்நாப் கத்தற கத்தல் தாங்காது! நாங்கல்லாம் தூங்கிட்டோம் பைடன் பதவி ஏற்பைப் பார்க்கலை. என்னவோ போங்க! ஒரே தலை சுத்தல்!

      Delete
  2. எது வாங்கணும்னாலும் அமேசான் மிக நல்லது. சரியில்லைனா உடனே ரிட்டர்ன் செய்துடலாம். அவங்களைவிடக் குறைவாக உள்ளூரில் கிடைப்பதில்லை. நடக்காமலேயே வீட்டிற்கே பொருள் வந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லையாரே, நாங்க அங்கே எதுவும் வாங்கினதே இல்லை! வாங்கினாத்தானே திருப்பிக் கொடுக்கறதுக்கு! உள்ளூரில் விராட்டி விலை குறைவாகக் கிடைக்கத் தான் செய்கிறது. நாங்க பால்காரர் கிட்டே சொல்லி வாங்கிடுவோம். நாங்களும் நடக்காமலேயே வீட்டிற்கே கொண்டு வந்து தந்துடுவார்.

      Delete
  3. பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டால், மருத்துவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை கொடுத்துக்கொண்டு சுயநலமாக இருந்தார்னு பேசுவாங்க.

    பேசறவங்களைப் பற்றிக் கவலைப்படலாமா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பேசுவாங்க தான்! ஆனாலும் மற்ற சாதாரண மக்களுக்கு மனதளவில் ஒரு தைரியம் வருமேனு தான் சொன்னேன். அரசியல்வாதிகள் என்ன செய்தாலும் பேசத்தான் செய்வாங்க!

      Delete
  4. அர்னாப் கோஸ்வாமி...கொஞ்சம் விட்டால் டிவியிலிருந்து ஹாலுக்கே குதித்துவிடுவார் என்று தோன்றும். சின்ன விஷயங்களை எடுத்துக்கொண்டு அதீதமாகப் பேசுகிறார்னும் தோணும். ஆனால் அடிப்படையில் பாஜக அரசு ஆதரவாளர்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, ஆரம்பத்தில் அவர் வேறே ஒரு சானலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் இருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது! அவர் சொல்லுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் காட்டுக் கத்தல் கத்துவார்! :( பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அவர் நல்லவராகி விடுவாரா என்ன?

      Delete
    2. ஒருமுறை ஒரு வீடியோ சுற்றி வந்தது.  ஏதோ ஒரு பேட்டியில் ஒருவர் இந்தியா முர்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்ல, பேசிக் கொண்டிருந்ததை நிறுத்திய அர்னாப் அவரை உடனே அரங்கை விட்டு வெளியேறச் சொன்னார்.

      Delete
    3. தேசப்பற்று பற்றிப் பேச்சே இல்லை. அரசை ஏமாற்றிச் சானல்களில் தில்லுமுல்லு செய்திருப்பதாய்ச் சொல்கின்றனர். இப்போ 2 நாட்களாய்ப் பேச்சே காணோம்.

      Delete
  5. சாணியானாலும் இந்தியப் பசுவின்
    சாணியே சாணி!.. - என்று தலையில் வைத்துக் கொண்டாடும் காலம் வந்து விட்டதோ!...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஆமாம் துரை!

      Delete
  6. எருமைச் சாணி எதற்கும் ஆகாது.. அது அதிகம் தின்பது கோரைகளையே...
    கோரையை மேய்ந்து விட்டு கழிந்து வைக்கும்..

    பசுக்களோ காளைகளோ - கரும்புத் தோகை, சோளத்தட்டை முதலானவற்றைத் தின்றாலும் பிரயோஜனம் இல்லை..

    வைக்கோலைத் தின்றால் தான் சாணம்.. அதிலிருந்து தான் வறட்டி, சாம்பல், விபூதி - எல்லாம்...

    ஆனால் இப்போது இயந்திர அறுவடை முறையில் வைக்கோல் தூள் தூளாகி கூளமாகி விடுகின்றதே...

    ReplyDelete
    Replies
    1. இங்கெல்லாம் இன்னமும் வைக்கோலைப் பார்க்க முடிகிறது. மாடுகளும் மேயப் போகின்றன. எங்க பால்காரர் மாட்டுக்குப் பச்சைப்புல் அறுத்து வந்து போடுகிறார். ஒரு மாதம் முன்னர் மேயப் போன இடத்தில் பாம்பு கடித்து வெள்ளிக்கிழமையும் அதுவுமா ஒரு பசுமாடு இறந்து விட்டது. ஆகவே மேய்வதற்குக் கிட்டே ஆள் இருந்தால் மட்டும் அனுப்புகிறார். புல்லை அவரே அறுத்து வந்து போட்டுவிடுகிறார்.

      Delete
    2. விடியற்காலையிலே படித்தேன்... வெள்ளிக்கிழமையதுவுமாய் பசுவைப் பறி கொடுப்பதென்றால்.. மனம் வருந்துகின்றது..

      இன்னிரு விஷயம் நாகத்துக்கு ஒரு நாளைக்கு 13 தத்து - கண்டம் என்று படித்திருக்கிறேன்.. அவற்றுள் ஒன்று பசுவின் குளம்படி...

      அதையும் மீறி கடித்து வைப்பதென்றால் - விதி தான்...

      வைக்கோல் போரில் பாம்புகளைக் கண்டு விட்டால் தாட்.. பூட்.. என்று குதித்து களேபரம் செய்து விடும் மாடுகள்...

      மாட்டுப் பண்ணைகளில் கின்னி வகைக் கோழிகளை வளர்ப்பது பாம்புகளை விரட்டத் தான்..

      Delete
    3. இங்கே உள்ள ஆண்டவன் ஸ்வாமிகள் ஆசிரம கோசாலையின் பசுக்களை வெளியேயே அனுப்புவதில்லை. பால் என்னமோ நன்றாக இருந்தாலும் சுவையில் மாறுபாடு கட்டாயம் தெரியும்! வெள்ளிக்கிழமையன்று பசு இறந்தது ஒரு மாபெரும் துயரம் தான் அந்தப் பால்காரருக்கு! :(

      Delete
  7. அர்னாப்பின் என்ன ஊழல் வெளிவந்து விட்டது என்று புரியவில்லை.  செய்தி பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஊழலும் கிடையாது ஸ்ரீராம்.... இப்போ இருக்கும் மஹாராஷ்டிரா அரசு அர்னாபை பழிவாங்கத் துடிக்கிறது. நம்ம ஊர்ல உள்ள தொலைக்காட்சிகள் செய்யாத ஊழலா? அதனைப் பார்க்கும்போது (இதனைப் பற்றி விரிவாக எழுதலாம்..அரசியலாகிவிடும்) அர்னாப், இங்க கருணாநிதிட்ட நிறைய கற்றுக்கொண்டிருக்கலாம்னு தோணும்.

      Delete
    2. மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத் துறைக்குச் செலுத்த வேண்டிய பணத்தில் மோசடி என்று சொல்கின்றனர். அதன் நமபகத்தன்மை பற்றித் தெரியவில்லை.

      Delete
  8. தடுப்பூசி பற்றி விவாதம் எங்கள் குடும்ப க்ரூப்பிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.  யு கே டாக்டர் ஒருவர் என்ன தடுப்பூசியானாலும் போட்டுக்கொள்வதே நலம் என்கிறார்.  நமக்கு வேறு வழி இல்லை என்கிறார்.  சில பக்க விளைவுகள் அவரவர்களைப் பொறுத்து இருக்கலாம்.  ஆனால் போட்டுக்கொள்வதே நலம் என்று சொல்கிறார்.  இரண்டாம் அலை கொரோனா இந்தியாவில் இந்த ஏப்ரல் மே மாதங்களில் தெரியலாம் என்கிறார்.  முதல் அலை இப்படிதான் இரண்டு மூன்று மாத இடைவெளிகளில் இந்தியாவில் தெரிந்தது என்கிறார்.  இதற்குத் தடுப்பு மூன்றே மூன்று எளிய வழிகள்.  மாஸ்க், கைசுத்தப்படுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளி.  இதை இந்திய மக்கள் உட்பட யாருமே ஒழுங்காய்க் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் சோகம்.

    பொதுவாகவே நம் நாட்டிலும் இந்தப் புது முயற்சி வந்தாலும் அதை எதிர்க்கும் ஒரு சாரார் இருப்பார்கள்.  அவர்கள் இன்னமும் பயமுறுத்துகிறார்கள்.

    ReplyDelete
  9. இன்னொரு டாக்டருக்குப் படிக்கும் உறவினப் பையர் கோவாக்சினை விட கோவிஷீல்டு நல்லது என்கிறார்.  கொசக்சினில் கொரோனா வைரஸே இருக்கிறது என்பது போலவும், கோவிஷீல்டில் அப்படி இலை என்பது போலவும் சொல்லி இருக்கிறார்.  வாந்தி, லேசான மயக்கம், உடல்வலி சிலசமயம் காய்ச்சல் போன்றவை பக்கவிளைவுகளாக இருக்கின்றன என்றார்.

    ReplyDelete
  10. அமேசானில் அல்லது ஆன்லைனில் பல மாதங்கள் முன்னதாகவே விராட்டி விற்கத்தொடங்கி விட்டார்கள்.   அதில் அபிடித்தீர்களா?  கேக் எந்தப்பதால் அடஹி ஒருவர் சுவைத்துப் பார்த்து அபிப்ராயம் சொல்லி இருப்பது போல சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!  உண்மையோ, ஜோக்கோ!

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தடவை அப்பா ச்ராத்தத்துக்கு விராட்டி வாங்க பக்கத்தில் கடைகளுக்குச் சென்றிருந்தேன். அதில் வாழை இலை விற்கும் கடையில் இருந்த ஒருவர், விராட்டியைப் போய் கடையில் வாங்கணுமா, சாணியை எடுத்து சுவத்தில் ஒரு அப்பு அப்பினால் சாயந்தரமே விராட்டி ரெடி என்று சொன்னார். அப்புறம் ஒரு கடையில் அழகாக, அதிரச ஷேப்புப்போல ஓரங்கள் அழகாக கட் பண்ணியிருந்த விராட்டி 5 கொண்ட பாக்கெட் 60-70 ரூபாய்க்கு வாங்கினேன்.

      இருந்தாலும் பாதபூஜை போன்ற சமயங்களில் சாணிதான் பெட்டர், விராட்டியைவிட என்பது என் எண்ணம்.

      Delete
    2. விராட்டியை அப்படி ஒண்ணும் சீக்கிரம் காய்ந்துவிடாது நெல்லை. முன்னெல்லாம் தெருக்களில் மாடுகளின் நடமாட்டம் இருக்கையில் கையில் கூடைகளை ஏந்திக்கொண்டு பெண்கள் வருவார்கள். போட்டி போட்டுக் கொண்டு சாணியை அள்ளிக் கூடையில் போட்டுக் கொண்டு போவார்கள். இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை.

      Delete
  11. கமலா ஹாரிஸ் அபத்தமெல்லாம் நல்லவேளையாக என் கண்ணில் படவில்லை!

    ReplyDelete
    Replies
    1. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டார்களே! செய்திகளில் பார்க்கலையா?

      Delete
  12. அன்பு கீதாமா,
    எப்பவுமே அர்னாப் பிடிக்காது. எங்கேயோ மலைக் கோட்டான் மாதிரி ஒருகுரல்!

    நான் நிம்மதியாக இருக்கிறேன். இவை காதில் விழுவதில்லை.
    கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவர் தலைவராக வந்தது
    நலமே. அந்தப் பெண் இந்த ஊர்ல பிறந்தது.

    அது இந்த ஊர் மாதிரிதான் பேசும். அரசியலில் பிழைக்க வேண்டுமே.
    ஆனாலும் ஒரு பெண் இந்த நிலைமைக்கு
    உயர்ந்ததைப் பாராட்டாலும். நம்மூர் இதில் எல்லாம் முன்னோடி.

    விராட்டி பார்த்தே ரொம்ப நாட்களாச்சு!!!
    துரை அழகாகச் சொல்லி இருக்கிறார்.
    நாங்கள் இருக்கும் போது சாலை முழுவதும் வைக்கோல்
    பரத்தி இருப்பார்கள்.
    காரின் ஆக்சிலில் மாட்டி கார் நின்று விடும்:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், முன்னெல்லாம் சாலைகளில் நெல்லைக் கூடக் கொட்டி வைத்திருப்பார்கள். வைக்கோல்களும் பரந்து கிடக்கும். இப்போதெல்லாம் துண்டுகள் ஆகிவிடுவதால் மாடுகளுக்கு வைக்கோலே இல்லை.

      Delete
  13. விராட்டி - மூன்று நான்கு வருடங்களாகவே கிடைக்கிறது அமேசானில். தில்லியில் Gகோஷாலாக்களில் சொல்லி வைத்து வாங்குவார்கள். தில்லியின் ஹரியானா/உத்திரப் பிரதேச எல்லைகளில் சில கிராமங்கள் இருப்பதால் அங்கேயிருந்தும் கிடைத்து விடுகிறது - பெரும்பாலும் எருமைச் சாணி விராட்டிகள் தான். பசுஞ்சாணி விராட்டி வேண்டுமென்று சொல்லி வாங்க வேண்டும்.

    மற்ற விஷயங்களும் படித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அமேசானில் விராட்டி கிடைப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். என்றாலும் இந்த விளம்பரத்தை இப்போது தான் பார்க்கிறேன். பசுஞ்சாணி விராட்டிகள் தான் ஹோமத்துக்குப் பயன்படும்.

      Delete
  14. //புனிதமான பசுக்களின் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டது//

    ஹா.. ஹா.. ஸூப்பர் அப்படீனாக்கா ஒரிஜினல் பொருள்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கில்லர்ஜி, அதில் சந்தேகமே இல்லை. அப்பா, அம்மா கூட இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் கிடைப்பார்கள்.

      Delete
  15. ஊர்க் கலைஞர்களில் சிலர் திரைப்படத்தில் ஓரிரு நிமிடங்கள் தலை காட்டி விட்டால் போதும் திரைப்படப்புகழ் என்று பெயருக்கு முன்னால் அடைமொழி சேர்த்துக் கொள்வார்கள்..

    அதுபோல கூடிய விரைவில் தெருக்களில் -
    அமேசான் புகழ் சாணியோ... சாணி!..
    என்று கூவிக் கொண்டு வரலாம்...

    கில்லர் ஜி அவர்கள் சொல்வது போல மார்க்கட்டு இழந்த ஜில்பான்ஸ் யாராவது நான் கியாரண்டி.. என்று தொ(ல்)லைக் காட்சியில் ஏவாரமும் பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லுவது நடந்தாலும் நடக்கும் துரை. எல்லாமும் எதிர்பார்க்க வேண்டியதே!

      Delete
  16. 1. Folks (so called Bakths)in India did yagam,poojai, homam etc., for Trump. Bursting fire cracker for Kamala is nothing compared to this. No point in blaming her. She has risen in the politics with so many odds. First woman, black and Indian origin VP. we have to appreciate.....not easy for anyone.

    2. In Norway the elderly persons died after taking Pfizer vaccine. they were extremely sick. Otherwise most are ok without any side reactions. In USA most politicians took the vaccine publicly to boost public confidence. Good approach in my opinion. I feel perhaps Indian Govt is not 'open' on their data.

    3. papers are silent on Arnab-- don't know why. He proved empty tins make more sound.

    Rajan

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தகவல்களுக்கு நன்றி திரு ராஜன்.

      Delete
  17. இந்த விரட்டிகள் 3 வருஷம் முந்தியே பார்த்திருக்கேன் :) pandemic ஆரம்பிச்ச போன வருஷமுதல் எல்லாம் அமேசான் ebay பிற ஆன்லைன் தளங்களில்தான் விற்பனை வாங்கல்  ஓடுது .இந்திய அரசியல் பற்றி பெரிசா தெரியாது ..
    தடுப்பூசி விஷயத்தில் நாட்டின் முக்கிய பதிவியில் இருப்போரை போடசொல்லக்காரணம் முன்மாதிரியாக மக்களுக்கு இருக்கணும் என்பதே .அப்போதானே மக்களும் தைரியமா முன்வருவர் .
    வேக்சின் முதல் டோஸ் போட்டாச்சு செகண்டுக்கு வெயிட்டிங் .கடும் அலர்ஜி இருப்போரை போடா அனுமதிப்பதில்லை .என்னிடமும் கேட்டாங்க anaphylactic பிரச்சினை இருக்கான்னு .இல்லைன்னு உறுதி செய்த்தபிறகே போட்டாங்க .போடுமுன்னும் .எனக்கு விருப்பமான்னு உறுதி செஞ்சாங்க ..நம் மக்களுக்கு //நம்ம ஊர் //பெருமை அதிகம் அதுதான் இப்படி வெளிப்படுத்து ஆனா பாருங்க  கமலா அவரின் தந்தை வழி ஆட்கள்இதை பெரிய விஷயமா எடுக்கவேயில்லை  .ஒரு பெண்ணாக அவரை மனதார பாராட்டணும் .

    ReplyDelete