ஆயிற்று! இன்னும் ஒரே மாதம் தான். அப்புறமாக் குட்டிக் குஞ்சுலு அவ அப்பா, அம்மாவுடன் நைஜீரியாவுக்குப் போய்விடும். அதன் பின்னர் இப்போ வரமாதிரி வரமுடியுமானு தெரியலை. நேரம் எப்படினு முதல்லே தெரிஞ்சுக்கணும். இப்போ அம்பேரிக்காவுக்கும் நைஜீரியாவுக்கும் கிட்டத்தட்டப் பத்துமணி நேரம் என்பதால் பையர் தினம் அதிகாலை/நடு இரவு(?) இரண்டு, இரண்டரைக்கு எழுந்து அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கார் கடந்த நாலைந்து மாதங்களாக. நைஜீரியாவுக்கே செல்லும்படி அலுவலகத்திலிருந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தாச்சு. இவங்களும் வீட்டைக் காலி செய்துவிட்டு வாடகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக்கிளம்பணும். கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம். எங்களை விட எங்க பெண்ணுக்கு! அவள் கல்யாணம் ஆனதுமே அம்பேரிக்கா போய்விட்டாள். பின்னாலேயே இரண்டு/மூன்று வருஷங்களில் பையரும் போய்விட்டார். பெண் அப்போதெல்லாம் பாஸ்டன் பின்னர் மெம்பிஸ் என இருந்தாலும் ஒரே நாடு என்று கொஞ்சம் ஆறுதல் இருந்தது. பையர் போனதில் இருந்து ஹூஸ்டன் தான். அவர் எண்ணெய் சம்பந்தப்பட்டப் படிப்பு/வேலையும் அது குறித்து. ஆகவே ஹூஸ்டனை விட்டு வெளியே போகவில்லை. இப்போத் தான் வேறே நாடு. அதுவும் ஆப்ரிக்கா. இங்கே அம்பேரிக்காவில் உள்ள வசதிகள் எதுவும் அங்கே கிடைக்காது. இந்தியர்களும் குறைவாகவே இருப்பார்கள். நம்மால் எதுவும் செய்ய முடியாது என்னும்போது வருந்துவதைத் தவிர்த்து வேறே வழி இல்லை. அங்கே நல்லபடியாகப் போய் சௌகரியமாக இருந்தால் போதும். அதற்காகப் பிரார்த்தித்துக் கொள்ளுவது ஒன்றே நம்மால் முடிந்தது.
***********************************************************************************
"காதலர் தினம்" நெருங்குகிறது. அதற்கான பரிசுகள் பற்றிய விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் என வந்து கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் பொருந்தாக் காதல்கள்/ஏமாற்றுதல்/அதைப் பழிவாங்கும் கொலைகள் எனச் செய்திகள்! இப்போதெல்லாம் யாரும் யாரையும் தாக்க அஞ்சுவதில்லை. பொது இடத்தில் ஒரு பெண்ணைக் கோடரி கொண்டு தாக்க ஒருத்தர் யத்தனிக்கிறார். யாரும் அவரைத் தடுக்கவில்லை. அதை வீடியோவாக எடுத்துப் போடுகின்றனர். காதலி வேறு எவரையோ திருமணம் செய்யப் போவதால் அவளையும் அவள் தாயையும் தீ வைத்துக் கொளுத்திவிட்டுத் தன்னையும் எரித்துக்கொள்ளும் காதலன். இதனால் காதலுக்குப் பெருமை சேர்ந்து விட்டதா என்ன? இதெல்லாம் "காதல்" என்பதோடு சேர்த்தி இல்லை. இது முழுக்க முழுக்கக் "காமம்" பொருந்தாக் "காமம்". காதல் என்பது எதன் மீதும் யார் மீதும் வரலாம். படிப்பைக் காதலிக்கலாம். சங்கீதத்தைக் காதலிக்கலாம். நடனத்தைக் காதலிக்கலாம். இறைவனைக் காதலிக்கலாம். உருகலாம். கண்ணீர் மல்கி அந்த அனுபவத்தை ரசிக்கலாம். மனிதர்களையும் காதலிக்கலாம். தப்பே இல்லை. ஆனால் அந்தக் காதல் ஒருத்தரை அழிப்பதிலா போய் முடியணும்? காதல் என்றால் வாழ வைக்கணும். தான் காதலித்த பெண்ணோ/பையரோ எங்கேயானும் சுகமாக வாழ்ந்தால் போதும் என்னும் பெருந்தன்மையான நினைப்பு வரணும்.
உண்மையான காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது. ஒருவர் இதயத்தில் நினைப்பது மற்றவர் இதயத்தில்/மனதில்(?) எதிரொலிக்கும். இரு மனங்களும் இணைந்து செயல்படும். உடலும் அதன் தேவைகளும் அங்கே முக்கியத்துவம் பெறாது. இப்போதெல்லாம் பெரும்பாலான காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடைவதற்குக் காரணமே அங்கே மனங்கள் இணையாமல் வெறும் உடல்ரீதியான ஆவலை/பற்றைக் காதல் என்று நினைப்பது தான்.
**********************************************************************************
ஆஹா! நாங்க சுத்தத் தமிழர்கள்! எங்களோட மொ"லி" தமி"ல்". நாங்கள் பின்பற்றுவது தமிலரின் தனிப்பட்ட பாரம்பரியங்களான "செண்டை மேளம்" சாப்பாட்டில் வடநாட்டு உணவுகள், கல்யாணத்தில் வடமாநிலத்தின் ஆடை வகைகள், சம்பிரதாயங்கள், இப்போல்லாம் எங்க கல்யாணங்களில் "மெஹந்தி" இல்லாமல் நடத்தமாட்டோம் தெரியுமா? நாங்க அணிவதும் வடமாநில உடைகள் தான்! ஆடுவதும் பஞ்சாபி பாங்க்ரா! "பல்லே! பல்லே!" என்று ஆடிப்பாடுவோம். இல்லைனா குஜராத்தி "டான்டியா" ஆடுவோம்! அழிந்து வரும் பாரம்பரியத் தமிழ்நாட்டுக் கலையான நாதஸ்வரத்தை மறந்து கூட ஆதரிக்க மாட்டோம். எங்களை என்னனு நினைச்சீங்க? சுத்தத் தமிழர்களாக்கும் நாங்க! எங்களுக்கு ஹிந்தி மொழியும் "வட"மொழியும் தேவை இல்லை. வடமொழின்னா வடக்கே இருந்து வந்ததுனு சொல்லுவோம். வட விருக்ஷத்தின் கீழ் போதிக்கப்பட்டதால் வடமொழி என்னும் பெயர் வந்தது என்பதைச் சுத்தமா மறப்போம் அல்லது மறைப்போம். (வட வ்ருக்ஷம்=அரசமரம்) வடக்கே இருந்து வரும் மொழி எங்களுக்குத் தேவை இல்லை. ஆனால் அவங்களைப் போல் நாங்க ஒருத்தருக்கொருத்தர் "ஜி" போட்டுத் தான் பேசிப்போம். இது எங்கள் தனி உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஹிந்தியா கற்றுக்கொள்ளச் சொல்றீங்க? நாங்க வடக்கே இருந்து வரும் தொழிலாளர்களை வேலை செய்யச் சொல்லுவோம். நாங்க படுத்துக்கொண்டு சுகம் காண்போம். எங்களுக்கு டாஸ்மாக்கும் இலவச அரிசியும் நூறுநாள் சம்பளமும் போதும். அதற்கு மேல் தேவை இல்லை. பேராசைப்பட மாட்டோம். டாஸ்மாக்கை மட்டும் அரசு மூடிவிடாமல் பார்த்துப்போம். மற்ற எங்கள் உரிமைகளை வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விட்டுக் கொடுப்போம். அவங்க உணவு, உடை, கல்யாண சம்பிரதாயங்களை விடாமல் கடைப்பிடித்துத் தமிழனின் தனித்தன்மையைப் பாதுகாப்போம். நாங்க சுத்தத் தமிழர்கள்!
**********************************************************************************
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆரம்பத்தில் இருந்தே ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுத்து வந்திருக்கின்றன. இது இப்போதைய எதிர்க்கட்சி மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தப்போவும் நடந்தவை தான். ஆனால் அவங்கல்லாம் இப்போ என்னமோ புதுசாக் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஹிந்தி, சம்ஸ்கிருதம் திணிக்கப்பட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். எங்க குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து +2 வரை கேந்திரியவித்யாலயா பள்ளி தான். ஒரே பாடத்திட்டம். ஒரே மாதிரியான விடுமுறைகள் இந்தியாமுழுவதும் இப்படி இருப்பதால் கல்வி ஆண்டில் வருடத்தின் எந்தமாதமும் எந்த நாளும் மாற்றல் கிடைத்தவர்கள் தங்கள் குழந்தைகளைக் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க முடியும். எங்கள் பெண்ணை சிகந்திராபாதில் செப்டெம்பர் மாதமும், சென்னை பட்டாபிராம் கேந்திரிய வித்யாலயாவில் ஜனவரி மாதமும் சேர்த்திருக்கோம். இந்த வசதி அடிக்கடி மாற்றல் ஆகிறவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது என்பதோடு ராணுவ வீரர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஏற்படுத்தப்பட்டது. ஆகவே அந்த அந்த மாநில மொழிகளைக் கற்கக் குறைந்த பட்சமாக 20 பேர் இருந்தால் தொகுப்பூதியம் கொடுத்து ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களை நியமிப்பார்கள். இது புதுசும் இல்லை. சுமார் அறுபது ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்றே. இப்போ இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இதைக் குறித்தத் தெளிவான அறிவு இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. மோதியை எப்படியானும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது. இந்த அரசின் வெளிப்படைத் தன்மையால் இவை எல்லாம் வெளியே வருகின்றன. இத்தனை வருடங்களாக யாருக்கும் தெரியவில்லை.
பையரின் நைஜீரியப் பயணமும், அங்கு தொடரும் வாழ்க்கையும் நன்றாக அமையட்டும்.
ReplyDeleteஇனிமேல் மதியம்தான் குகுவிடம் அரட்டை அடிக்க நேரம் கிடைக்கும், இல்லைனா ஞாயிறு இரவு 8 மணிக்கு.
எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும்.
அப்படியா நெல்லை? மதியம் எனில் பிரச்னை இல்லை. பார்ப்போம். எங்களுக்குக் கொஞ்சம் இல்லை ரொம்பவே கவலை. பெண்ணுக்கு வருத்தத்தில் உடம்பே சரியில்லாமல் இருக்கு! :(
Delete"காதலர் தினம்" - ஹா ஹா
ReplyDeleteதமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் - இதெல்லாம் நிறைய மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கு. வகிடில் குங்குமம் இட்டுக்கொள்வதும் தமிழ் கலாச்சாரம் இல்லை என்றே நினைக்கிறேன். தமிழரின் பாவாடை சட்டையை, தாவணியை விட வட இந்திய உடையே பெண்களுக்குப் பாதுகாப்பானது, தமிழரின் கலாச்சார உடை நல்லதில்லை என்று தமிழர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
ஶ்ரீமந்தம் அல்லது சாந்திக்கல்யாணம் எப்போவோ சரியா நினைவில்லை. தி.வா.வைக் கேட்டால் தெரியும். அப்போப் பெண்ணின் வகிட்டில் முள்ளால் கீறிவிட்டு (ஶ்ரீமந்தம் தான்) பின்னர் கணவன் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைப்பது உண்டு. அதே போல் கல்யாணம் ஆனதுமே வகிட்டில் கணவன் குங்குமம் வைக்கச் சொல்லுவார்கள். அதாவது அன்றே சேஷ ஹோமம் நடந்தால்.அம்பிகையின் நெற்றிச் சிந்தூரத்தைப் பற்றிய வர்ணனைகள் படிச்சதில்லையா? நெற்றி வகிட்டுக் குங்குமம் இருந்தாலே போதும், நெற்றியில் இல்லைனா பரவாயில்லை என யாரோ சொல்லிப் படிச்சிருக்கேன்/கேட்டிருக்கேன்.
Deleteநீங்க சொல்லுவது சல்வார், குர்த்தா உடை துப்பட்டாவுடன் கூடியது. ஆனால் கல்யாணங்களில் பெரும்பாலும் காக்ரா, சோளியே அணிகின்றனர். அல்லது லஹங்கா செட்! இவற்றையும் நம்ம பாவாடை, தாவணியையும் ஒப்பு நோக்கினால் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றே.
Deleteஅனைத்திலும் அரசியல் செய்ய நினைப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது.
ReplyDeleteஉண்மை முனைவரே!
Deleteகுகுவும் அவர் பெற்றோரும் நைஜீரியா சென்று நலமாக இருக்க உங்களுடன் இணைந்து நாங்களும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இருவரும் அமெரிக்காவிலேயே இருந்திருந்தாலும் இருவரும் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்திருக்கும். இல்லையா? அதுபோல நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், பெண்ணும் 2012 ஆம் ஆண்டில் இருந்து ஹூஸ்டனில் தான் இருக்கிறாள். அவள் பெரிய பெண்ணின் படிப்புக்காக இங்கே வந்தார்கள். மெம்பிஸில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இங்கேயே இப்போது அவங்களும் குடியேறியாச்சு. ஆகவே பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.
Deleteகாதல் என்பதற்கான பொருளே மாறிவிட்ட காலம். சுயநலமும், பேராசையும் உலகை ஆளும் காலம். ..
ReplyDeleteஆமாம், உண்மையான காதல் எனில் "எங்கிருந்தாலும் வாழ்க!" மாதிரித் தான் இருக்கணும். இப்போதைய உடல் ரீதியிலான காதலுக்குப் புனிதம் என்றொரு வார்த்தையே தெரியாது.
Deleteஹா... ஹா.. ஹா... தமிழரின் தனி உரிமைகள், உணர்வுகள் மாறிக்கொண்டு வருகின்றன.
ReplyDeleteஸ்ரீராம், தமிழர்கள் மாறியே பல்லாண்டுகள் ஆகிவிட்டன. கடைப்பிடிப்பது உணவு உண்பது எல்லாம் வடநாட்டுக் கலாசாரம், சொல்லுவது தனித்தமிழர் என்று.
Deleteநைஜீரியாவிற்கு செல்லவிருக்கும் குடும்பத்தினருக்கு இறைவன் என்றென்றும் உற்ற துணையாய் இருந்திட வேண்டிக் கொள்வோம்...
ReplyDeleteநன்றி துரை, இத்தகைய பிரார்த்தனைகளே இப்போது தேவை.
Deleteமகன் குடும்பத்தினர் நைஜீரியாவில் நலமாக இருக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
ReplyDeleteதற்காலிகம் தானே! மீண்டும் அமெரிக்கா வரலாம் இல்லையா?
அங்கு செட்டில் ஆன பின் நேரம் எல்லாம் சரியாக புரிந்தபின் உரையாடி மகிழுங்கள்.
நீங்கள் சொல்வது போல் நாம் அவர்கள் நலத்திற்கு பிரார்த்தனை செய்து கொண்டு மட்டுமே இருக்க முடியும் வேறு ஒன்று நம்மால் செய்ய முடியாதே!
நல்லபடியாக இருப்பார்கள் இறைவன் அருளால்.
வாங்க கோமதி, இது அலுலலக ரீதியாக அவங்களே அனுப்புவதால் குறைந்தது இரண்டு வருஷமாவது இருக்கும்படியாக அனுப்புவதாகப் பையர் சொன்னார். அதன் பிறகாவது திரும்பிவிட்டால் நலம். போகப் போகத்தான் தெரியும். அவங்க எல்லோருமே அமெரிக்கக்குடிமக்கள் என்பதால் திருப்பியும் அம்பேரிக்கா வந்து தான் ஆகணும். எப்போ என்பது தான் புரியலை.
Deleteஇந்த மாதிரி கண்றாவி தினங்களில் எல்லாம் நான் மனதைச் செலுத்துவதே இல்லை...
ReplyDeleteநாங்களும் இதை எல்லாம் கொண்டாடுவது இல்லை துரை. ஆனால் செய்திகள், மின் மடல்கள் வந்த வண்ணம்! :))))
Deleteதமிலன் என்று சொல்லிக் கொண்டு தமிழ் கலாச்சாரத்துக்கு சற்றும் பொருந்தாதவர்களும் குளிர் காய்கின்றனர்..
ReplyDeleteஎல்லாம் தலைகீழாய் மாற்றிவிட்டார்கள். நல்ல அருமையான தமிழ் இலக்கியங்களை ஒதுக்கிவிட்டு அதற்குப் பதிலாக இடதுசாரி சிந்தனைகளுடன் கூடிய கவிதை என்னும் உரைநடைகளைப் பாடங்களில் சேர்த்திருக்கிறார்கள். கேட்டால் அவை எல்லாம் மதம் சார்ந்தவையாம். என்னவோ, பாடத்திட்டமே சரியில்லை. மாணவர்கள் மட்டும் எப்படிச் சரியாய் இருப்பார்கள். சங்க இலக்கியங்களோ, ஐம்பெரும் காப்பியங்களோ, நம் பக்தி இலக்கியங்களோ படிக்காமல் ஒரு தமிழ்ப் படிப்பு.
Deleteதங்களது மகனுக்கு நைஜீரியாவில் நைஸ் வாழ்க்கை அமைய பிராத்தனைகள்.
ReplyDeleteதமிழரைக்குறித்த குறிப்புகளும் முரண்பட்ட செயல்களையும் நக்கலடித்த விதம் மறுப்பதற்கில்லை.
மக்களை குழப்பத்திலேயே வைத்திருக்க அரசியல்வாதிகள் செய்யும் உத்திகளில் இதுவும் ஒன்றே.
நன்றி கில்லர்ஜி. தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மணலை வாரிப் போட்டுக்கிறாங்க. என்ன பண்ணலாம்!
Deleteஇப்படி எல்லாமா, திருமணங்கள் மாறிவிட்டன.?
ReplyDeleteஆமாம் நானும் ஒரு திருமணத்தில் பார்த்தேன்.
அத்தனை சிறிய மண்டபத்தில் ஏதோ பந்தல் மாதிரி பிடித்தபடி
பெண்ணை நடத்தி வந்தார்கள்!!!
நம் பக்கத் திருமணத்துக்கு என்ன குறை வந்தது. ஏன் இப்படி
பண்பாட்டை மறக்கிறார்கள். மிக வருத்தமாக இருக்கிறது.
இப்போதைய திருமணங்களில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இல்லை ரேவதி. பெண்ணின் அம்மா/அப்பா, பிள்ளையின் அப்பா/அம்மா ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு மேடையில் ஆடிப்பாடுவதற்கே இப்போது முக்கியத்துவம். அதுவும் இப்போதைய வழக்கப்படி முதல்நாளே நடக்கும் திருமண வரவேற்பில்! கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் தங்கள் சிநேகித, சிநேகிதிகளுடன் இதைப் போலவே ஆடிப்பாடுகிறார்கள். ஒரே கூச்சல், எக்கச்சக்கமான பட்டாஸுகள் வெடிச்சத்தம், செண்டை மேளத்தின் உக்கிரமான சப்தம்! நம் மனதில் எந்தவிதமான அமைதியையும் தருவதில்லை. ஒரே படபடப்பு வருகிறது.
Deleteகாதலர் தினத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அன்று மட்டும் காதலித்தால் போதுமா என்ன
ReplyDeleteநாம் சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லையே!
Deleteகேந்திரிய வித்யாலயா மிகச் சிறந்த பள்ளி.
ReplyDeleteஅதை எல்லாம் எதிர்த்தால் ,
நல்ல பள்ளிக்கூடங்கள் அமைவதுதான் எப்படி.
எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக
எதிர்ப்பதே வழக்கமாகி விட்டது இப்போது.
நல்ல பதிவு கீதாமா.
ஆமாம், ரேவதி, இத்தனைக்கும் இப்போதைய எதிர்க்கட்சித்தலைவரின் தங்கை மகன் "ஆதித்யா" படிப்பது கேந்திரிய வித்யாலயாவில் தான். மாறன் சகோதரர்கள் இருவருமே ஹிந்தி, சம்ஸ்கிருதம் படித்தவர்களே! அதனால் தானே பெரியவர் அவர்களில் ஒருவரை மத்திய மந்திரி சபைக்கு அனுப்பினார். மாறன் சகோதரர்களில் அவர்களின் சகோதரி "அன்புக்கரசி" சம்ஸ்கிருதம் படித்தார். பரதநாட்டியம் கற்க ஆசைப்பட்ட அவருக்கு சம்ஸ்கிருதம் கற்கவேண்டும் என்று சொல்லவே அவரும் படித்தார். இவங்கல்லாம் படிக்கும்போது சாமானிய மக்கள் கற்கக் கூடாதா என்ன?
Deleteகூடாது..கூடாது...
Deleteசாமானிய மக்கள் அதெல்லாம் படிக்கவே கூடாது...
அதானே, அவங்களுக்கு விழிப்புணர்வு உண்மையாகவே ஏற்பட்டு விடுமே!
Deleteகுட்டிக் குஞ்சுலுவும் அவள் பெற்றோரும் என்றும் நலத்தோடு இருப்பார்கள்.
ReplyDeleteஎதிர்காலம் நன்றாக இருக்க இறைவன்
அருளவேண்டும்.
நம் மனசுக்குக் கவலை இல்லாமல் என்றுதான் இருப்போமோ.
நன்மைகளை விரும்புவோம்.
உங்கள் மகளின் மனம் தேறட்டும்.
குஞ்சுலுவும் அவள் பெற்றோரும் இரண்டு வருடங்களில் திரும்பி அம்பேரிக்கா வரப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கோம். வேறே என்ன செய்வது ரேவதி!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் மகன் குடும்பம் நைஜீரியாவுக்கு நல்லபடியாக குடி பெயர்ந்து சென்று நன்கு வாழ நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்கள் பேத்தியை அந்த ஊர் நேரத்துக்கு தகுந்தாற்போல் பார்த்துப் பேசி நீங்களும் சந்தோஷமடையவும் பிரார்த்தித்து கொள்கிறேன்.
காதலர் தினம் பற்றி தாங்கள் குறிப்பிட்டது உண்மையான விஷயங்கள். அன்பு மனம் சார்ந்துதான். இப்போது எந்த தினத்தைதான் கொண்டாடுவது என்றில்லை. இதில் இந்த காதலர் தினம் பிரபலமாகி விட்டது. காலத்துக்கேற்ற மாற்றங்களை சந்தித்துதானே ஆக வேண்டியுள்ளது.
தழிழர் பதிவும் அழகாக எழுதியுள்ளீர்கள். மெஹந்தி இல்லாத திருமணங்கள் இப்போது இல்லை என்ற கலாச்சாரங்கள் வியப்பூட்டுகின்றன. ஆதரித்துதான் ஆக வேண்டும். புதுமைகளை தமிழர்கள் என்றுமே விரும்புவர்.. தவிர எந்த திருமணமான பெண்ணும் குங்குமம் நெற்றியில் கூட இப்போது இட்டுக் கொள்வதில்லை. எப்போதும் ஸ்டிக்கர் பொட்டுதான். கடைகளுக்குப் போனால் அதற்கென்றே தனி இட விற்பனை இருக்கிறது. (சமயத்தில் வெறும் நெற்றியுடன் இருப்பதும் தற்போதைய நாகரீகம்)
பள்ளிகள் மாற்றல், மற்றும் பாடங்கள் பற்றியும் நன்றாக பகிர்ந்துள்ளீர்கள். கல்வி முறைகளும் மாறித்தான் வருகின்றன. ஒரு மொழியை கற்பதற்கு இத்தனை தடைகளா? கவனத்தில் கொள்ள வேண்டிய நல்ல
பதிவாக தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, இது கம்பெனியே அனுப்புவதால் மாற்ற இயலாது. போய்த்தான் ஆகணும். நல்லபடியாகச் சில வருஷங்களைக் கழித்துவிட்டுத் திரும்ப அம்பேரிக்கா வந்தால் போதும். கல்யாணக் கொண்டாட்டங்கள் எல்லாம் அளவுக்கு மீறி ஆடம்பரமாக ஆகிவிட்டன. சொன்னால் கேட்பவர் யாரும் இல்லை. ஒரு மொழியைக் கற்பதற்குத் தடைகளைக் கொண்டு வருவது அரசியல்கட்சிகளுக்குப் புதியது இல்லை. மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்வது தானே அவர்களுக்கு முக்கியமானது.
DeleteHouston is extremely slow in Oil and Gas and Engineering related work. It is a good idea to go overseas for couple of years and return back (assuming your son in this area of work). you can say, 'it's a silver lining in the dark cloud'. This period shall pass.
ReplyDeleterajan
உங்கள் விளக்கமான கருத்துக்கு நன்றி. ஆமாம் எங்க பையர் எண்ணெய் சம்பந்தப்பட்ட படிப்புத் தான் படித்து வேலையிலும் இருக்கிறார்.
Deleteநைஜீரியா செல்லும் உங்கள் மகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். எல்லாம் நல்லபடியே நடக்கும்.
ReplyDeleteமற்ற விஷயங்களும் படித்தேன். ரசித்தேன்.
வாங்க வெங்கட், வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
Deleteகீதாம்மா, குட்டி பாப்பாவும், தங்கள் மகனும், மருமகளும் நலமாக இடம்பெயர்ந்து, நலமாயிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்கள் வீட்டிலும், நானும் எனது கணவரும் மட்டுமே இங்கு இருக்கிறோம் . என்னுடைய சகோதரி, மற்றும் என் கணவரின் உடன் பிறப்புகள் அனைவரும் அம்பேரிக்காவிலே .என்ன செய்ய? இவ்வளவு வருடங்கள் தெரியவில்லை. என் பெற்றோர்க்கும் , அவர் பெற்றோர்க்கும் நினைவெல்லாம் அங்கே தான்.
ReplyDeleteநாங்கள் சௌராஷ்ட்ரா மொழி பேசுபவர்கள். இங்கே இடம் பெயர்ந்து பல நூறு வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் நாட்டிலே வாழ்வதால், தமிழராகவே உணர்கிறோம்! மொழியின் பெயர் சொல்லி இன்னும் எத்தனை நாட்கள் பிரிவினை செய்வார்களோ தெரியவில்லை...
நீங்க இப்போ எங்கே இருக்கீங்க வானம்பாடி? எனக்கு இணையத்தில் ஒரு சில சௌராஷ்டிர நண்பர்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தனர். சிவகுமாரன் என்றொருவர், குமரன் என்றொருவர், கார்கில் சிவா என்றொருவர். எல்லோருமே மதுரைக்காரங்க. இவர்களில் குமரன் மட்டும் முகநூலிலும் அவ்வப்போது தொடர்பில் இருக்கார். அவருடைய தமிழ் எழுத்து, கவிதை எழுதும் ஆற்றல் எல்லாம் பார்த்து வியந்து கொண்டிருப்பேன். பெரியாழ்வாரையும், கண்ணனையும் யசோதையையும் பற்றி அழகாய் விவரித்து ரசித்து எழுதுவார். இப்போதெல்லாம் எழுதுகிறாரா தெரியலை.
Deleteஅன்புள்ள கீதாம்மா, என் பெயர் காயத்ரி சிவகுமார். நாங்கள் சேலத்தில் இருக்கின்றோம். மதுரையில் தூரத்து உறவினர்கள் உண்டு. நீங்கள் சொன்னதை போலவே தமிழ் பற்று கொண்டவர்கள் நிறைய பேர் எம் சமூகத்தில் உண்டு!
Deleteஇனிக் கீசாக்கா நைஜீரியாவையும் சுத்திப்பார்த்து எங்களுக்குப் படம் போடுங்கோ.. ஆனா ஒரே இடத்திலயே இருந்துகொண்டு ஒம்பேது படமெடுக்கக்குடா கர்ர்ர்ர்:))...
ReplyDeleteஹாஹாஹா, அன்னக்கிளி, என்னைத்தேடுதே! நைஜீரியாவுக்குப் பையர் அழைத்து நானும் போனால் படம் எடுத்துப் போடறேன். அவங்க கூட்டிப் போகும் இடத்துக்குத் தானே நான் போகமுடியும்! :)))) அதோட நைஜீரியாவில் நிறையக் கெடுபிடி. அம்பேரிக்கா மாதிரிச் சுத்தல்லாம் முடியாது! அந்தக் குடியிருப்பை விட்டு வெளியே கடைகளுக்குப் போவது என்றாலும் கம்பெனி அனுமதித்திருக்கும் நேரத்தில் அவங்க அனுப்பும் பேருந்தில் தான் போயிட்டு வரணுமாம். நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் போக முடியாதாம். அதுவும் முழுப் பாதுகாப்போடு போகணுமாம்! இந்த அழகில் வெளியே போக ஆசை வரும்ங்கறீங்க?
Deleteகாதலும் நடக்குது, காதல் எனும் பெயரில கருமாந்திரமும் நடக்குது என்ன சொல்வது...
ReplyDeleteஇங்கே தமிழ்நாட்டில் காதல் என்றாலே உடல் மீதுள்ள ஆசை தான். காமத்தையே இங்கே காதல் என்கின்றனர். ஆனால் காமம் என்பதன் உண்மையான பொருளும் வேறே! இங்கே இப்போ உடல் ரீதியான ஆசையையே குறிக்குது.
Deleteஆஹா நாங்க டமிழர்கள்.. கீசாக்கா நீங்க டப்புப் பண்ணிட்டீங்க:) என்னிடம் கேட்டிருந்தால் லிங் தந்திருப்பேனே:)).. சவ்வரிசியை.. சாபுதானா வடை எண்டெல்லோ நெல்லைத்தமிழன் சொல்லிச் சுட்டுப் போட்டவர் அதை எழுத மறந்திட்டீங்களே:)).. ஆவ்வ்வ்வ் நல்லவேளை கரெக்ட்டா என் கண்ணில இப்போஸ்ட் பட்டது:) இல்லை எனில் பத்த வச்சிருக்க முடியாதே:))
ReplyDeleteநெல்லை தானே! அவர் அப்படித்தான்! அதை எழுதி மாளாது. தமிழர்னு பெயர் வைச்சுட்டு அவர் ஆங்கிலத்திலே இல்லையோ எழுதிட்டு இருக்கார்! :)))))
Deleteஇன்னொன்று சொல்ல மறந்திட்டேன், அம்பேரிக்காவை விட நைஜீரியாவில வசதிகள் குறைவெனினும்.. மக்கள் மிக நல்லவர்களாம்ம்.. நன்கு பழகுவார்களாம்.. அதிகம் மகிழ்ச்சியாக அங்கிருக்கலாம்...
ReplyDeleteஎன்னவோ போங்க அரண்மனைக்கிளி, எங்கிருந்தாலும் நல்லா இருந்தாச் சரி. அம்புடுதேன், நம்ம ஆசை!
Deleteநீங்கள் பதிவிட்ட அன்றே படித்து விட்டேன். இருந்தாலும் என் வழக்கதிற்கு மாறாக முதல் நாளே பின்னூட்டமிட்டு உங்களுக்கு அதிர்ச்சி அளிக்க விரும்பவில்லை. சமாளிக்கவில்லை, நிஜமாகவே அன்றே படிது விட்டேன்.
ReplyDeleteநைஜீரியா செல்லப் போகும் உங்கள் மகன் சிறப்பாக செயல்படுவார், கவலை வேண்டாம்.
என்ன நினைச்சீங்க எங்களை? - அடிப் பொளி கேட்டோ!
காதலர் தினம்.. என்னத்தை சொல்ல?
ஹஹாஹாஹாஹா! அதுவும் சரிதான். நிஜம்மாவே அதிர்ச்சி அடைஞ்சுட்டேன்னா என்ன செய்யறது? கருத்துக்கு நன்றி,
Delete