நாம தான் வியர்டுனு நினைச்சால், நம்ம கணினிகளும் கூட அப்படித்தான் இருக்கு. டெல் மடிக்கணினியில் அது கீழே விழுந்ததில் இருந்தே பிரச்னைகள் இருந்தாலும் ஒரு மாதிரியா ஓடிட்டு இருந்தது. இப்போ அதுக்கு பாட்டரி மாத்தணும்னு சொன்னதாலே அதையும் மாத்திட்டோம். அதுக்கப்புறமாத் திடீர்னு ஒரு நாள் மவுஸ் வேலை செய்யலை. மவுஸின் பாட்டரியையும் மாற்றினால் அப்படியும் வேலை செய்யலை. மவுஸ் தான் வீணாயிடுச்சோனு நினைச்சால் கணினியில் >>>>>>>>>>>>>>>>>>> இப்படியே தொடர்ந்து வந்து எல்லா இடங்களையும் தானாக நிரப்பிக்கொண்டு ஓட ஆரம்பிச்சுடுத்து. சரினு வேறே மவுஸ் வாங்கி வந்து அதை ஒருவழியாக வேலை செய்யறது எப்படினு கண்டுபிடிச்சுக் கொஞ்ச நாட்கள் ஓட்டினால் அது ஓடியது. போன வாரம் வரைக்கும். மறுபடி மவுஸ் வேலை செய்யவில்லையேனு நினைச்சால் அதே பழைய பிரச்னை. கணினியில் தானாகவே எல்லா இடங்களிலும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இப்படியே வந்து நிரப்பிக் கொள்கிறது. சரினு கணினியை மூட நினைச்சால் ஷட் டவுன் பண்ணும் ஐகானிலும் ஏதோ ஒரு பக்கம் திறந்து ஷட் டவுன் பண்ணவே முடியாமல் இப்படியே >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> வர என்னென்னவோ செய்து ஒரு வழியாக் கணினியை மூடினேன்.
இன்னொரு கணினி தோஷிபா சுமாராக வேலை செய்தாலும் பதினோரு வருடங்கள் ஆனதாலே என்னமோ அப்பப்போ கொஞ்சம் தகராறு பண்ணிக்கும். இரண்டு மடிக்கணினிகளுமே ஜிமெயில் திறப்பது என்றால் பிடிவாதமாக மறுத்துவிடும். cannot sync. error 105 என்றே வரும். திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்ப முயற்சி செய்ததும் ஒரு முறை போனால் போகுது இணைந்து தொலைக்கும். இது இரு கணினிகளிலுமே இருக்கு. தினம் தினம் போராட்டம் தான். ஒவ்வொரு முறையும் ஜிமெயில் திறப்பதற்குள்ளாக என்பாடு உன்பாடு என்றாகி விடுகிறது. இந்த அழகில் தான் இதோடு குடித்தனம் பண்ணிண்டு இருக்கேன். என்னத்தைச் சொல்லுவது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தான் என்ன? யாரானும் தொ.நு.நி. இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா! எப்படியும் இன்னிக்குக் கணினி மருத்துவரைக் கூப்பிடப் போறேன். டெல் மடிக்கணினியை ஒரு வாரமா எடுக்கவே இல்லையே. அதை எப்படியானும் சரி பண்ணணும். என்ன செய்யலாம்?
//நாமதான் வியர்டு// - அடடா... என் பெண் என்னை அப்போ அப்போ இப்படித்தான் சொல்லுவா. நமக்கும் ஒரு கம்பெனி இருக்கு போலிருக்கு
ReplyDeleteஹாஹாஹா! தம்பி வாசுதேவன் முன்னெல்லாம் என்னை வியர்டு என்றே சொல்லுவார். :))) அது ஒரு காலம். பதிவெல்லாம் மொக்கைகளாக இருந்த காலம்!
Deleteபேசாம க.ம கூப்பிட்டு காசு கொடுத்துச் சரி பண்ணிடுங்க. போன்ல இதுக்கெல்லாம் தீர்வு வராது. இத்தனைக்கும் நீங்க தூசு சேராம ரொம்ப சுத்தமா வச்சுக்கற ஆளாச்சே...
ReplyDeleteஎனக்கும் வாழ்க்கையில் முதல் முறையாக என் மடிக்கணிணியின் பேட்டரி அவுட். ஆனாலும் 6 மாதமாக அதனை மாற்றாமல் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். நானும் பொருட்களை பத்திரமா வச்சுப்பேன்.
கூப்பிட்டாச்சு. வருவார். தூசு, தும்பு எதுவும் இல்லை. அதுக்குனு ப்ரஷ் வைச்சுச் சுத்தம் செய்துடுவேன். பாட்டரி அவுட் ஆனாலும் சார்ஜில் போட்டுக்கொண்டு வேலை செய்தேன். இப்போ நினைச்சுப் பார்த்தால் அது தப்போனு தோணுது!
Deleteபாட்டரி 10% வந்த உடன், திரும்ப 100% சார்ஜ் பண்ணிட்டு பிறகு உபயோகிக்கணும். இல்லைனா பேட்டரி வீக் ஆகும். நான் இதில் ரொம்ப கவனமாக இருப்பேன். ஆனால் சென்னைலயும் இங்கயும் டக் டக்குனு கரண்ட் போனதோ இல்லை ஃப்ளக்சுவேஷனாலோ பேட்டரி அவுட் ஆயிடுச்சு.
Deleteவாங்க நெல்லை, மீள்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. நான் பாட்டரி 10% வரும்வரைக்கும் எல்லாம் வேலை செய்தது இல்லை. பாட்டரி வீக் என்றால் மட்டுமே சார்ஜில் போட்டுவிட்டு வேலை செய்திருக்கேன், அதுவும் அவசரத்துக்கு!
Deleteஇந்த வீடியோ பார்த்து அதன் படி செய்து பாருங்க https://www.youtube.com/watch?v=c0ZjdBCbULc
ReplyDeleteநன்றி தமிழரே! பார்த்துவிட்டு என்னால் இயன்றால் செய்தும் பார்க்கிறேன்.
Deleteஎனது மகளுக்கு வாங்கிக் கொடுத்தது Dell with original W@10 தான்... (அதற்கான விலை கொடுத்தது அதிகம் தான்...) எவ்வித பிரச்சனையும் இல்லை...
ReplyDeleteஆனால் update... அதுவே நாம் ஏற்றுக் கொண்ட விருப்பம் பொறுத்து... நாம் அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும்; இல்லையெனில் இம்சை தான்... ஒரு வருடம் ஆன பின்பும் நம் கைவசம் (settings) வைத்துக் கொள்ள வேண்டும்... இல்லை என்றால், கணினி மருத்துவர் வந்து சில நடிப்புகள் நடந்தே நடித்து விட்டு, அதே settings-ல் மிகப்பெரிய மாற்றம் செய்வதாக செய்து, மிகப்பெரிய பணத்தை கறந்து விடலாம்...! கவனம்...
நன்றி... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com
நன்றி திரு தனபாலன். என்னுடையதும் வின்டோஸ் 10 பதிப்பிக்கப்பட்ட டெல் மடிக்கணினி. அம்பேரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் வாங்கியது. அங்கேயே ஆறு மாதம் பயன்படுத்தினப்போப் பிரச்னை ஏதும் இல்லை. திரும்ப இந்தியா வரும்போது ட்ராலியில் கணினிப் பையை நம்மவர் வைச்சுட்டுக் கூடவே தான் சென்றார். போர்ட்டர் இழுத்துச் சென்ற வேகத்தில் குறிப்பாய் அந்தப் பை மட்டும் கீழே விழுந்து தொலைத்தது. அதிலிருந்து தான் பிரச்னைகளே ஆரம்பம். இங்கே எவராலும் இயலவில்லை எனில் கட்டாயமாய் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். மீண்டும் நன்றி. வணக்கம்.
Deleteபிரச்னை மௌஸிலா, கீ போர்டிலா என்று பாருங்கள்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், முதலில் மவுஸ் என நினைச்சுத் தான் மாமா புதுசு வாங்கினார். கொஞ்ச நாட்கள் ஓடின. இப்போ மறுபடியும் பிரச்னை! பார்ப்போம். எல்லாம் என்னை மாதிரி ஆயிரம் பிரச்னைகளோடு ஓடுகின்றன.
Deleteஓ எஸ் ரீ இன்ஸ்டால் செய்தால் பிரச்னை தீரலாம். கீ போர்டில் குறிப்பிட்ட பட்டனின் இடையில் சிறுகுப்பை மாட்டிக்கொண்டு அது அழுந்திய நிலையில் இருக்கலாம். மொபைலிலும் ஓபன் செய்திருந்தீர்கள் என்றால் அது சிங்க்ரனைஸ் ஆகாமல் இருக்கலாம்!
ReplyDeleteஶ்ரீராம், கீ போர்டில் குப்பை தேங்க விடுவதில்லை. ஆனாலும் எறும்புகள் எப்போவானும் வந்துடும். அதையும் மருந்து அடிச்சு அப்புறப்படுத்திடுவேன். மொபைலிலும் ஒரே ஒரு மெயில் கணக்குத் தான் திறப்பேன். அப்படி இருந்தாலும் அந்த ஒரு கணக்குக்கு மட்டும் தானே திறக்கக் கூடாது. எந்தக் கணக்குமே திறக்கமுடியாது. அதுவும் இரண்டு மடிக்கணினியிலும் அதே பிரச்னை தொடர்ந்து. அதோடு கின்டிலில் இருந்து எந்தப் புத்தகமும் இலவசமாகத் தரவிறக்கிக் கொண்டு ஆஃப்லைனில் படிக்க முடியலை. வெங்கட்டும் எவ்வளவோ முயன்றார். ம்ஹூம்! :(
Deleteஇங்கேயும் கணினி தொந்தரவு சொல்லியிருக்கிறேன் ப்ராப்ளத்தை அவர்களுக்கு நேரம் வேண்டும் எனக்கு சரி செய்து கொடுக்க டைப் செய்ய மிகவும் அழுத்தமா இருக்கிறது என்னவோ போகட்டும் இந்த எழுதுவது வேண்டாம் என்று தோன்றிவிட்டது பார்க்கலாம் அன்புடன்
ReplyDeleteவாங்க அம்மா . நமஸ்காரங்கள். இந்த எலக்ட்ரானிக் பொருட்களை எப்படிப் பராமரித்தாலும் பிரச்னை வரத்தான் செய்கிறது. கீ போர்டு அழுத்துக் கஷ்டமா இருக்கா? கை வலிக்குமே! பார்த்துக்கோங்க!
Deleteபிரச்சனைகள் தீரட்டும்.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteகணினியை சார்ஜில் வைத்திருக்கக் கூடாதுன்னு பேரன் சொன்னதும்,
தொடர்ந்து சர்ஜ் செய்வதைத் தவிர்க்கிறேன்.
தொடர்ந்து சார்ஜில் போட்டால் பாட்டரி வாழ்க்கை முடியும் என்று அவன் பயமுறுத்தியதால்
இப்போது எச்சரிக்கையாக இருக்கிறேன்,.
நிபுணர் வந்து சரிசெய்ததும் ,நிம்மதியாகும்.
வாங்க வல்லி. இங்கே கணினி மருத்துவர் மட்டுமில்லாமல் நம்மவரும் இதில் ரொம்பவே கவனம். சார்ஜில் தொடர்ந்தெல்லாம் போடுவதில்லை எப்போதுமே! வேலை செய்கையில் சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் போட்டுப்பேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகணினி மருத்துவர் வந்து பார்த்து தங்கள் கணினியின் நலத்தை நல்லபடியாக மீட்டெடுத்திருப்பார் என நினைக்கிறேன் அதில் இப்படி ஒவ்வொரு பிரச்சனையாக தொடர்ந்து வந்தால் சிரமந்தான்.
மடிக்கணினி பிரச்சனை குறித்து எனக்கேதும் சொல்லத் தெரியவில்லை. மடிக்கணினி என்ற அம்சம் இதுவரை என் பயன்பாட்டுக்கு வந்ததில்லை. ஆரம்பத்தில் டெஸ்க்டாப் உபயோகம் குழந்தைகள் கற்று தந்தனர். அதில் நன்றாக பயின்று வந்த காலகட்டத்தில், தற்சமயம் கைப்பேசியை உபயோகித்து வருகிறேன். தாங்களும், தங்கள் கணினியும் நலமுடன் இருப்பீர்கள் எனவும் நம்புகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. இல்லை. இன்னும் கணினி மருத்துவர் வரலை. அவரைப் பிடிக்கவே முடியலை. வெளியூரில் இருக்கார் போல! எனக்கு மொபைல் பேசவும், வாட்சப்பில் குழந்தைகளைப் பார்த்துப் பேசவும் தான். முன்னெல்லாம் ஸ்கைபில் வந்ததால் கணினியில் பார்ப்பேன். திரை பெரிதாக இருக்கேனு. இப்போல்லாம் ஸ்கைபில் வருவதில்லை.
Deleteகீசாக்கா புலம்புவதால் ஒன்றும் பயனில்லை... கணனி, ஃபோன் எல்லாம் இப்போ குறிப்பிட்ட காலம் வரைதான் ஒழுங்கா வேலை செய்யும், 4,5 வருடமானதும், ஸ்லோவாகவும், அப்பப்ப ஏதாவது கோளாறு ஏற்படவேண்டும் எனவும்தானாம் டிசைன் பண்ணுகிறார்கள் எல்லாம் வியாபார உக்தி.. முன்னையகாலங்களில் ஒரு ஃபோன், கார், பைக் எல்லாம் சாகும்வரை திருத்தித்திருத்திப் பாவிகலாம், இப்போ அப்படி இல்லை.
ReplyDeleteஅப்டேட் எனும் பெயரில், என்னவெல்லாமோ பண்ணிப் பழுதடையச் செய்து விடுகின்றனர்... அதனால... நான் முந்தி எல்லாம் 20 வருடம் வச்சிருந்தேன் 15 வருடம் வச்சிருந்தேன் என்ற கதையை எல்லாம் விட்டுப்போட்டு, ஒரு புதுக் கணணி வாங்குங்கோ...
உண்மையாகத்தான் சொல்கிறேன், பணத்தைப் பொத்திப் பொத்திச் சேர்த்து என்ன பண்ணப்போகிறோம், மனசுக்குப் பிடிச்சதை, தேவையானதை.. போனாப்போகுதென வாங்கி அனுபவிச்சிடோணும்.. ஊதாரித்தனமாக இருப்பதுதான் தப்பு..
முதல்ல நல்ல ஒரு மடிக்கணணி வாங்குங்கோ.. பழசைத்திருத்துவதெல்லாம் சரியே வராது.
வாங்க அன்னக்கிளி அதிரடி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteநோஓஓஓஓஓஓஓ உந்தக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கெல்லாம் பயப்பிடமாட்டேன் இந்தப் புலாலியூர்ப் பூஸானந்தா:)).. நீங்க கணணி வாங்கோணும் இல்லையோ புலம்புவதை நிறுத்தோணும் ஜொள்ளிட்டேன்ன்:))
Deleteஇஃகி,இஃகி,இஃகி, கீ போர்டை கழற்றிச் சுத்தம் செய்து திரும்ப மாட்டினதும் பிரச்னை சரியாகி விட்டது. ஏதோ அதில் பட்டிருக்கு. என்னனு புரியலை. ஏன்னா இந்தக் கணினியை ரொம்பப் பாதுகாப்பா வைப்போம். :( எப்படியோ சின்னப் பிரச்னை தான். ஆனால் ஹார்ட் டிஸ்கும் பிரச்னை கொடுப்பதால் கணினியில் ப்ரவுசர் திறக்க நேரம் ஆகிறது.
Deleteநான் சொல்லி இருந்தேன்!!!
Deletehehehehehe aamaa illa?
Deleteஅரண்மனைக் கிளி சொல்வது சரிதான்...
ReplyDeleteநவீன மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் வருடாந்திரத்துக்கும் அந்த ஒன்றையே வைத்துக் கொண்டிருந்தால் அந்தத் தயாரிப்பாளர்கள் எல்லாம் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ள வேண்டியது தான்... கணினியைப் பழுது பார்ப்பதற்கு வருபவர்களும் இயன்றவரை பாழடித்து விடுகின்றார்கள் என்பது எனது கருத்து.. நான் 2005 ல் மூன்று கணினி
புத்தம் புதிய ஜெராக்ஸ் மிஷினுடன் DTP Centre வைத்திருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள் சொல்லி மாளாது... குவைத்திலிருந்து எடுத்துச் சென்ற Scanner ஐ கண்ணெதிரில் நாசம் செய்தான் ஒரு பரிசோதனையாளன்...
அப்பூடிச் சொல்லுங்கோ துரை அண்ணன்...:)... கீசாக்கா துரை அண்ணனும் ஜொள்ளிட்டார் புதுசு வாங்கச் சொல்லி😍
Deleteவாங்க துரை. தாற்காலிகமாகப் பிரச்னை தீர்ந்து விட்டது. இனி குறைந்தது ஒரு மாதமாவது பார்த்த பின்னரே அடுத்து முடிவு எடுக்கணும். இப்போதைக்குப் புதுசெல்லாம் வாங்கலை. நம்ம கணினி மருத்துவரே அது வேண்டாம் என்கிறார்.
Deleteஅரண்மனைக்கிளி, இஃகி,இஃகி,இஃகி,இஃகி!
Deleteஎன்னுடைய ஒரு மடிக்கணிணியிலும் இதே பிரச்சனை. ம.க. சர்வீஸ் செய்பவரிடம் கேட்டதில்,இது ஹார்ட்வேர் பிரச்சனை. கீ போர்டில்தான் ப்ராப்ளம், மாற்ற வேண்டி இருக்கும் என்றார். ஊருக்குச் சென்றதும்தான் மாற்றனும்.
ReplyDeleteஇதே பிரச்னை தான் இங்கேயும் பானுமதி. ஹார்ட் டிஸ்க் கணினிகீழே விழுந்ததில் கொஞ்சம் வீணாகி இருக்கு. இல்லைனால் பிரச்னையே வந்திருக்காது. கீ போர்டில் ஏதோ கொட்டி இருக்குனு கணினி மருத்துவர் சொல்றார். எனக்குத் தெரிந்து அந்தக் கணினியில் காஃபி, தேநீர் கொட்டி இருக்க வாய்ப்பில்லை. என்னனு புரியலை இப்போதைக்குக் கீ போர்டு சரியாகிவிட்டது. சுத்தம் செய்து போட்டிருக்கிறார்.
Delete