எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 17, 2021

பல்சுவைக் கதம்பம்!


அம்மா, அப்பா யார் கல்யாணமோ, நினைவில் இல்லை, என் கல்யாணத்தில் இந்த ஃபோட்டோ எடுக்கலை, அப்புறமா ஐந்து வருஷம் கழிச்சு அண்ணா கல்யாணமோ பத்து வருஷம் கழிச்சுத் தம்பி கல்யாணமோ நினைவில் இல்லை. எங்க குடும்ப வாட்சப் குழுமத்தின் லோகோ!  ரேவதி அவங்க அம்மா, அப்பா ஃபோட்டோவைப்  போடும்போதெல்லாம் நினைச்சுப்பேன். ஆனால் பதிவுகள் எழுதும்போது நினைவில் வராது. இன்னிக்கு என்னமோ அதிசயமா காலரியில் இந்தப்படம் தானாகவே சேமிப்பில் இருந்தது. உடனே டவுன்லோட் பண்ணிட்டேன். 






 இது ஹூஸ்டனில் பையர் வீட்டுக்கு எதிரே! தெருக்கள் நான்கு சந்திக்கும் இடம். இங்கே வலப்பக்கத்துத் தெருவும் எதிரே உள்ள தெருவும் மட்டும் இருக்கிறது. மரங்கள் ஆரம்பிப்பதில் இருந்து கீழே கொஞ்சம் வரைகோடாகத் தெரியும் எல்லையிலிருந்து பையர் வீட்டுப் பகுதி ஆரம்பம். அங்கிருந்து உள்ளே தெரியும் முக்கியக் கதவு வரை பனி விழுந்திருக்கிறது. போன வருஷம் ஃபெப்ரவரியில் அங்கே தான் இருந்தோம். உறைநிலைக்குச் சென்றாலும் இப்படி மைனஸில் எல்லாம் போகலை. தண்ணீர் வராது எனக் குழாயை மட்டும் சொட்டுச் சொட்டாக விழும்படி பண்ணி வைப்பாங்க. மற்றபடி தண்ணீர் எல்லாம் வந்தது. இப்போத் தண்ணீர், மின்சாரம், இணையம் எதுவும் இல்லை. எப்படியோ டாட்டா சேமிப்பில் பையர் கூப்பிட்டு 2 நிமிஷங்கள் பேசுவார். பெண் வாட்சப்பில் செய்தி கொடுப்பாள். அவ்வளவே! குட்டிக் குஞ்சுலு என்ன செய்யறதுனு புரியலை. பையரிடம் கேட்டோம். அவருக்குச் சரியாப் புரியலை போல! ஒண்ணும் சொல்லலை. நாங்க மெம்பிஸில் இருந்தப்போ 2,3 தரம் இந்த மாதிரிப் பனி மழை பார்த்திருக்கோம். இங்கே விட மெம்பிஸில் அதிகமாக இருக்கும். 

***********************************************************************************

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரே வேலை, வேலை, வேலை மும்முரம். திங்களன்று அண்ணா குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர் வந்தாங்க. தம்பி வற்புறுத்திச் சொன்னதால் காடரிங் சாப்பாடு ஏற்பாடு செய்தோம். மதுரைக்காரங்களாம். ஆனால் எங்களுக்குத் தெரியலை யார் என்பது. சமையல் உண்மையாகவே நன்றாக இருந்தது. இரவு இட்லி, சட்னி, சாம்பார் கேட்டிருந்தோம். அதுவும் நம்மைப் போலவே துணி போட்டு வார்த்திருந்தாங்க. மிருதுவாக நன்றாக இருந்தது. சாம்பாரும் ஓட்டலில் வைக்கும் சாம்பார் மாதிரி வைச்சிருந்தாங்க. ஆனால் இரண்டு பேருக்குக் கொடுக்க மாட்டாங்களாம். குறைந்தது பத்துப்பேராவது இருந்தால் நல்லது. அக்கம்பக்கம் வீடுகளில் வாங்கிப்பாங்கன்னாக் கொடுக்கிறோம் என்றார்கள். நாம தான் அலையறோம்னா எல்லோருமா? இஃகி,இஃகி,இஃகி! அதிர்ஷ்டம் அம்புடுதேன்னு விட்டுட்டோம்.

***********************************************************************************

நெல்லைத் தமிழர் தக்காளிக் கூட்டுப் பாசிப்பருப்புப் போட்டுப் பண்ணும் செய்முறை கேட்டிருந்தாராம். எங்கே/எப்போ/எதிலேனு நினைவில் இல்லை.  குழுமத்தின் வாட்சப்பில் கேட்டிருந்தார் ஏன் எழுதலைனு! இப்போக் கொடுக்கிறேன்.

சாப்பாட்டுக்குத் தொட்டுக்கப் பண்ணுவதெனில் கால் கிலோ தக்காளிக்கு அரைக்கரண்டி பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளிகளை நன்கு அலம்பித்துண்டங்களாக நறுக்கி ஓர் அடிகனமான பாத்திரத்தில் அல்லது கல்சட்டி அல்லது வாணலியில் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். தக்காளி சீக்கிரமே குழைந்து விடும். அப்போது வெந்த பருப்பைச் சேர்க்கவும். பருப்பு அதிகமாய்த் தெரிந்தால் தனியாய் எடுத்து வைக்கவும். கூட்டின் சுவையைக் கெடுத்து விடும். ஒரு மிளகாய் வற்றலோடு தேங்காய்த் துருவலும் ஜீரகமும் சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கூட்டில் கலக்கவும். தேவையானால் கொஞ்சமாக அரிசி மாவு கரைத்து விடவும். பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயத்தோடு தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்த கூட்டுக்கு வெங்காயத்தை முதலில் வதக்கிக் கொண்டு அதில் தக்காளியைச் சேர்த்து வேகவிடவும். தக்காளி வெந்ததும் மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்துக்கொண்டு  வெந்த பருப்பைக் கலந்து அரைத்து விட்டதையும் கலந்து ஒரு கொதி விட்டுப்பின்னர் தாளிக்கவும்.

இரண்டு நாட்களாக உள்ளங்கையிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரை வலி! தலை பின்னிக்கவோ, சாதம் பிசைந்து சாப்பிடவோ முடியலை. வலி நிவாரண மாத்திரைகள் போட்டுக் கொண்டு இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் உள்ளங்கை வலி இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாமல் வயிறு தொந்திரவு வேறே! அதனால் அதிகம் இணையத்துக்கு வர முடியலை. 

51 comments:

  1. கதம்பம் நன்று.

    கைவலி - கவனமாக இருங்கள். இணையம் பக்கம் அப்புறம் வரலாம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கைவலி அடிக்கடி வரும். இம்முறை வேலைகள் கொஞ்சம் அதிகம்! :( நன்றிப்பா.

      Delete
  2. கதம்பம் நன்று.
    பனி படர்ந்த படம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. முதல் படம் அழகு....படத்தைப் பார்த்து ஒருவரின் குணாதிசயத்தைச் சொல்லிவிட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. என்ன விஷயம் நெல்லை? உங்கள் மனதில் பட்டதைச் சொல்லுங்கள்.

      Delete
    2. படம் பார்த்துச் சொல்லலாமே.... கீசாக்கா நெல்லைத்தமிழனின் படத்தைப் போடச் சொல்லுங்கோ:), நான் குணாதிசயம் சொல்றேன்:))

      Delete
  4. தக்காளிக்கூட்டு.... சீரகம் வாசனை சாப்பிட்ட நினைவு இல்லை. அது இல்லாமல் செய்தால் சரியாக வருமா? செய்துபார்க்கிறேன். (அனேகமா வெங்காயம் போடுவேன்...ஆனால் வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்). செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எங்க அப்பா மாதிரி! பல விஷயங்களில்! அவருக்கும் ஜீரக வாசனையே பிடிக்காது. இஃகி,இஃகி,இஃகி. ஜீரகம் இல்லாமல் செய்தால் பச்சை மிளகாயுடன் தேங்காய் வைத்து அரைத்துச் செய்து பாருங்கள் வெங்காயம் சேர்த்தால் நாங்க சப்பாத்திக்கு மட்டும் பண்ணுவோம். சாப்பாடுக்குத் தொட்டுக்கப் பண்ணுவதில்லை. இங்கே எங்க பழைய காடரர் பீட்ரூட்+வெங்காயம், கத்திரிக்காய்+வெங்காயம், முட்டைக்கோஸ்+வெங்காயம், உருளைக்கிழங்கு+வெங்காயம் போட்டுக் கூட்டுப் பண்ணிச் சாப்பாட்டுக்குக் கொடுப்பார். அதுக்காகவே அவரை நிறுத்தினோம்.

      Delete
  5. ரெண்டு பேருக்கு காடரருக்கு கொடுக்க முடியும், ஆனால் டெலிவரி செய்வதுதான் கட்டுப்படியாகாது. அதனால்தான் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.

    என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை... காடரர் சாப்பாடு சூப்பர்னு எழுதிட்டாங்களே

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, காடரர் வீடு பக்கத்தில் இருப்பதால் மாமா நான் வந்து வாங்கிக்கறேன்னு கூடச் சொன்னார். அவங்க 2 பேர் எனில் எங்களுக்குக் கொடுக்க/சமைக்கக் கஷ்டம் என்கிறார்கள். அதோடு சாப்பாடு உண்மையிலேயே நன்றாக இருந்தது. சாம்பாரில் மாவு கரைத்துவிட்ட வாசனை வரலை. ரசம் ரசமாக இருந்தது. கறி, கூட்டும் அப்படியே! உப்பு, காரம் குறைவு என்றாலும் எங்களுக்கு அது போதும். ஊறுகாயும் துண்டம் மாங்காய் ஊறுகாய் அருமை. அவ்வளவு ஏன்? மோர் கூடக் கரைத்துத் தண்ணீரை விட்டுக் கொடுக்காமல் நல்ல திக்கான மோராக இருந்தது. பருப்பு, நெய், அப்பளம் எல்லாமும் தாராளமாக இருந்தது.

      Delete
  6. இந்த மாதிரி பனித்தரைகளோடு கூடிய படங்களைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பவே சந்தோஷம் அதிகமாயிடும். எப்போதுதான் இந்த மாதிரி இடங்களில் இருக்கப்போகிறோம்னு தோணும்.

    ஆனால் அங்க உள்ள கஷ்டங்கள் இன்னும் பிடிபடலை.

    ReplyDelete
    Replies
    1. சுமார் 3 நாட்கள் கழித்து இன்னிக்குத் தான் பையர், பெண்ணைப் பார்த்தோம். அதுவும் பெண்ணோடு பேசும்போது மறுபடி மின்சாரம் போய்விட்டது. இணையமும் இன்னமும் முழு அளவில் செயல்படவில்லை. நல்லவேளையாக மற்ற இடங்களில் இருக்கிறாப்போல் மின்சார அடுப்பு இல்லை இருவருக்குமே காஸ் அடுப்பு. தீப்பெட்டி மூலம் பற்ற வைத்துக் கொண்டு சாப்பாடு செய்து சூடு பண்ணிச் சாப்பிடவோ, தேநீர், காஃபி போடவோ முடிகிறது. அதுவும் காஸ் ஆட்டோ இக்னிஷன் என்பதால் பெண்ணுக்கு முதலில் தெரியலை, தீப்பெட்டி மூலம் எரிய வைக்கலாம் என்பது. பின்னர் பக்கத்தில் உள்ளவங்க யாரோ சொல்லித் தீப்பெட்டி மூலம் பற்ற வைத்துச் சாப்பாடு செய்திருக்காங்க.

      Delete
  7. பழைய படங்கள் எப்பவும் ஸ்பெஷல் தான்.

    Houstonல snow எல்லாம் அநியாயம், கால நிலை எல்லாம் எல்லா பக்கமும் மாறிடுச்சு மாமி. குட்டி பொண்ணுக்கு தான் கஷ்டம் யாரையும் பாக்காம

    கை வலி மொதல்லையே பாத்துக்கோங்க, அதிகமாகிட போகுது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏடிஎம், வலி நிவாரண மாத்திரைகள் பலன் கொடுக்கின்றன. இன்னிக்குப் பரவாயில்லை. இது போல் அடிக்கடி வரும். இந்த முறை கொஞ்சம் அதிகம். ஹூஸ்டனில் எப்போவோ பனி பெய்யும் என்றாலும் இம்முறை ரொம்பவே மோசம். இன்றிரவும் மறுபடி இன்னொரு பனி மழை இருக்காம்.

      Delete
  8. பழைய படங்கள் எப்பவும் ஸ்பெஷல் தான்.

    Houstonல snow எல்லாம் அநியாயம், கால நிலை எல்லாம் எல்லா பக்கமும் மாறிடுச்சு மாமி. குட்டி பொண்ணுக்கு தான் கஷ்டம் யாரையும் பாக்காம

    கை வலி மொதல்லையே பாத்துக்கோங்க, அதிகமாகிட போகுது

    ReplyDelete
  9. அப்பா அம்மா படம் அருமை.   நீங்கள் அம்மா ஜாடையோ...    தனித்தனியாக எடுத்த போட்டோவை ஒட்டவைத்தது போல இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அப்பா வழிச் சொந்தங்கள் அப்பா ஜாடைனும் அம்மா வழிச் சொந்தங்கள் அம்மா ஜாடைனும் சொல்லுவாங்க. இந்தப் படம் அண்ணா/தம்பி யாருடைய கல்யாண ஆல்பத்தில் இருந்தோ எடுத்தது. சத்திரத்தில் தங்கி இருந்த அறை வாசலில் எடுத்த ஃபோட்டோ. அந்தச் சுவர் தெரிவதால் உங்களுக்குத் தனியாக எடுத்திருக்காப்போல் ஒரு எண்ணம். அம்மா அப்பாவுடன் நெருங்கி நிற்பதைக் கவனித்தால் புரியும். தனியாக எடுத்தது இல்லைனு!

      Delete
    2. நீங்கள் சொன்னதும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புரிகிறது, தெரிகிறது.

      Delete
    3. எங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். இந்தப் படம் எடுத்தது சித்தப்பா (அசோகமித்திரன்) என்னோட படம் ஒண்ணு ஒன்பது கஜம் புடைவை கட்டிக்கொண்டு போடுவேன். அதுவும் சித்தப்பா எடுத்தது தான்.

      Delete
  10. பனி பற்றி அனைவருமே எழுதுகிறார்கள்.  அதன் பாதிப்புகள், தண்ணீர் வராது, இணையம் வராது என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது.  கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம், நான் நெல்லையைத் தான் நினைச்சுப்பேன். அவர் பாட்டுக்கு அசட்டுத்தனமாகப் பனியில் நடக்கணும்னு எல்லாம் சொல்லுவார். அனுபவிச்சால் அதன் சிரமம் புரியும். பிள்ளைக்கு 3 நாட்களுக்குப் பின்னர் இன்னிக்கு மின்சாரம் வந்திருக்கு. பெண்ணுக்கு வந்துட்டுப் போய்விட்டது. கு.கு.வை 3 நாட்களுக்குப் பின்னர் இன்னிக்குப் பார்த்தோம்.

      Delete
    2. மேலதிகத் தகவல்களாக அவங்கல்லாம் குளிச்சே 3 நாட்கள் ஆகிவிட்டன என்றனர். சாப்பிட்டால் இயற்கை உபாதை இருக்கும் என்பதால் அதிகம் சாப்பாடு கூடச் சாப்பிடலை. இருக்கும் தண்ணீரை வைத்துக்கொண்டு குழந்தைக்கு மட்டும் சமாளிச்சாங்க! இன்னிக்குக் காலம்பரப் பேசினப்போ மிக மெலிதாகத் தண்ணீர் வருது என்றனர். ராத்திரி மறுபடி பனிப் புயல் இருப்பதால் அப்புறமா எப்படியோ!

      Delete
    3. கேட்கவே கஷ்டமா இருக்கு.  நிலைமை சீக்கிரம் சரியாகவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

      Delete
  11. எங்கள் வீட்டுத் தெருமுனையில் ஒரு மெஸ் போல வந்துள்ளது.  பரவாயில்லாமல் சுமாராகச் செய்கிறார்கள்.  கல்தோசை 3 அறுபது ரூபாய் அலலது சப்பாத்தி 3 அறுபது ரூபாய் மூன்று பூரி அறுபது ரூபாய் என்று விலை வைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுபடி ஆகிறவிலையாக இருக்கு. பக்கத்தில் இருப்பதால் போய்ச் சூடாகவும் வாங்கி வரலாம். இங்கேயும் அப்படிச் சில மெஸ்கள் இருந்தாலும் ருசி! ம்ஹூம்! :)))))

      Delete
  12. கைவலி கவனம்.  எனக்கும் உள்ளங்கைகளை ஊன்ற முடியாமல் வலி இருக்கிறது.  இடது உள்ளங்கையின் பின்புறம் வலிக்கிறது.  இடதுகையை அசந்தர்ப்பமாக நீட்டினால், திருப்பினால் தோள்பட்டையில் வலி உயிர்போகிறது.  மருத்துவரைப் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், உடனே கவனியுங்கள். எனக்கு வலத்தோள்ப்பட்டையில் அடிக்கடி வலியும் வரும் என்பதோடு கரண்டியால் கிளறும்போதோ, பரிமாறும்போதோ சாப்பிடும்போதோ டக்கெனக் கீழே இறங்கும் கை தானாகவே. இப்படித் தான் அப்பளம் பொரிக்கையில் கையில் எண்ணெயைக் கொட்டிக் கொண்டேன் இரு முறைகள்.

      Delete
    2. ஶ்ரீராம்... ஏதோ பொசிஷனில் எனக்கு ரொம்பவே வலிக்கும். இடது கை யோகால மேல தூக்கும்போது வலி. யோகா கத்துக்கொடுக்க வரும் டாக்டர், கழுத்துப் பகுதில ஏதோ நரம்பு அழுத்தியிருக்கு, அதனாலத்தான் இடது கை வலி, 12 செஷனுக்கு வாங்க (3000 ரூ), சரி பண்ணிடலாம்னு சொல்லியிருக்கார். இன்னும் போகலை

      Delete
    3. ஓ...   கழுத்தோடு சம்பந்தப் படுத்துகிறார்களா?  இப்போது இடது உள்ளங்கையின் பின்புறம் வலிப்பதையும் அதனோடு சம்பந்தப்பப்படுத்திக் கவலையுறுகிறேன்.  ஆனால் மருத்துவரிடம் இன்னும் செல்லவில்லை.

      Delete
    4. ஸ்பான்டிலைடிஸ் இருந்தாலும் தோள் பட்டையில் ஆரம்பித்துக் கைவிரல்களின் நுனிவரை வலி தெறிக்கும், விறுவிறுனு இருக்கும். நீட்டி மடக்க முடியாது. ஒரு பக்கமாய் ஒருக்களித்துப் படுத்தால் காதுக்கருகே இருக்கும் நீர் இடம் மாறித் தலை சுற்றல், வாந்தி வரும். எழுந்திருக்கவே முடியாது.

      Delete
    5. //தலை சுற்றல், வாந்தி //

      இந்த அறிகுறிகள் இல்லை.  ஸ்பான்டிலைடிஸ் இலைன்னு நம்பறேன்.

      Delete
  13. கைவலியா என்னப்பா. வைத்தியர் என்ன சொன்னார்.
    அதுவும் இடது கை என்றால் இன்னும் கவனமா இருக்கணும். அப்புறம் வலைப்பக்கம் வரலாம்.

    மதுரை கேடரிங்க் பிடிச்ச்து நல்லது தான்.
    தினமும் வாங்கிக் கொள்ளுங்கள்.

    அம்மா அப்பா படம் அழகு.
    அதுவும் அம்மா உங்களைப் போலவே இருக்கிறார் .அதே கண்.
    ரொம்ப ரொம்ப அருமை.

    ஹ்யூஸ்டன் ஸ்னோ ரொம்ப அனியாயம். நிறைய இடத்தில்
    மின்சாரம் இல்லை.
    அதுவும் அங்கே அனுப்பின வாக்சின் கெடாமல்
    பாதுகாக்க வேண்டுமே.

    அங்கே ஸ்னோ விஷயத்தில் அனுபவம் இல்லை.
    பாவம்.

    விசாரித்துக் கொண்டேன்.
    கு கு பார்க்க முடியவில்லையா:(

    வலி இல்லாமல் பகவான் காப்பாத்தட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, எனக்கு இருக்கும் ருமாடிச வலிக்கு இப்படி அடிக்கடி வரும் என்பதே மருத்துவர் சொல்லுவதும். அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஆகிறதாம். இப்போதும் அதே தான். வீரியம் அதிகம் உள்ள மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கக் கூடாது என்பதால் ரொம்பத் தாங்கலைனாத் தான் எடுத்துப்பேன். மற்றபடி எண்ணெய் தடவி நீவி விடுவதோடு சரி. இம்முறை ரொம்ப அதிகம் என்பதால் புலம்பும்படி ஆயிடுத்து! :)))) அம்மா இளமையில் இன்னும் நன்றாகவே இருப்பார். இருவருக்கும் ஜோடிப் பொருத்தமும் நன்றாக இருக்கும். ஜாதகப் பொருத்தமும் கூட! பத்துப் பொருத்தங்களும் அமைந்த ஒரே ஜாதகங்கள் எனத் தாத்தா (அம்மாவின் அப்பா) அடிக்கடி சொல்லுவார். ஆனால் அம்மா வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டார். என்றாலும் வெளியே தெரியாது.

      Delete
  14. அப்பா அம்மா, படம் நன்றாக இருக்கிறது.
    உங்கள் கண் ஆப்ரேஷன் எப்போது தள்ளி போடாதீர்கள் அதை முதலில் செய்து கொள்ளுங்கள்.
    தம்பி குடும்பம் வந்த போது செய்து இருக்கலாம் தானே!

    மதுரையிலும் சில பேர் நிறைய பேருக்கு சொன்னால் தான் சமைத்து தர முடியும் என்பார்கள்.

    ஒரு சாப்பாடு என்றாலும் கொண்டு வந்து தருவதாய் விளம்பரம் வருது. ஆனால் வாங்கி பார்க்கவில்லை.

    தக்காளிக்கூட்டு நன்றாக இருக்கிறது நாங்களும் இப்படி செய்வேன்.
    சில நேரம் துவரம்பருப்பு போட்டும் செய்வேன்.

    கைவலியை கவனிங்க . படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    இப்போது போய் இருக்கும் ஊர் அவர்களுக்கு செட் ஆகி விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, ஒரு சில முக்கியவேலைகள்! கண் அறுவை சிகிச்சை ஆனால் செய்ய முடியாது என்பதால் தான் தள்ளிப் போட்டோம். அண்ணா, தம்பி அவங்க குலதெய்வப் பிரார்த்தனைக்காக வந்தார்கள். இங்கெல்லாம் இப்போதுள்ள நிலைமையில் தங்கி இருந்து செய்ய முடியாது.கைவலி பழக்கம் தான் எனினும் இம்முறை தாங்கலை.பையர் மார்ச் மாதம் தான் நைஜீரியா கிளம்புகிறார். இப்போது இங்கே தான். வேலைகள் நடக்கின்றன.

      Delete
  15. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. தங்கள் அப்பா, அம்மாவின் படம் அழகாக உள்ளது. நீங்கள் அம்மாவின் சாயலாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த மாதிரி பழைய போட்டோக்களை பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பனி படர்ந்த இடங்கள் பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கின்றன. ஆனால் இந்த மாதிரி உறை நிலை குளிர் எல்லோர் உடம்பும் தாங்குமா என்பது சந்தேகம்தான். அதற்கும் நன்றாக பழக வேண்டும். பழகி விட்டால், இந்த சீதோஷணம் ஒத்து வராது.
    இதனால் இப்போது தங்கள் பேத்தியிடம் பேச முடியாமல் இருப்பதுதான் வருத்தமாக உள்ளது. நிலைமை சீக்கிரமாக சீரடைய வேண்டுவோம்.

    தக்காளி பா.ப.கூட்டு செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. நானும் நீங்கள் கூறியபடி தான் செய்வேன். இதனுடன் வெங்காயம் சேர்த்தால், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

    உள்ளங்கை வலி இப்போது எப்படி உள்ளது? வலி நிவாரண தைலம் தேய்த்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்கவும். வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்ய வேண்டாம். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு பூரண குணமடைய நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, இன்றைக்கு 3 நாட்கள் கழித்துக் குழந்தையைப் பார்த்தோம். அவளுக்கு இந்தப் பனியோ அதன் தாக்கமோ புரியாத வயது. விளையாடிக் கொண்டு இருக்கிறது. எங்களைப் பார்த்து தாத்தா/பாட்டினு சொல்லிட்டு டாட்டா காட்டிட்டுப் பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்துட்டு மறுபடி விளையாடப் போய் விட்டது. நான் அம்மா ஜாடைதான் எனப் பலரும் சொல்வாங்க. கைக்கு எண்ணெய் தடவிக்கிறேன். தக்காளிக்கூட்டு வெங்காயம் போடாமல் பண்ணியது கூட நாங்கல்லாம் சப்பாத்திக்குத் தொட்டுப்போம். எங்களுக்குப் பிடிக்கும். பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
  16. ஹூஸ்டனில் ஸ்நோ அதிகம் என்பதை இப்போதுதான் கேள்விபடுகின்றேன்..இதைவிட மோசமான ஸ்நோ பிரதேசமான மிக்ஸிகன் மாநிலத்திலும் நான் வசித்து இருக்கின்றேன் ஆனால் அங்கு கூட இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டதே இல்லை... இதுவும் கடந்து போகும் எல்லோரும் நலமாக இருக்க பிரார்த்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழரே, டெக்சாஸ் முழுவதுக்கும் இப்போக் கஷ்டமான நேரமாக இருக்கிறது. பெரிய பேத்தி ஆஸ்டினில் இருக்கிறாள். அங்கேயும் இதே பிரச்னைதான். விரைவில் சரியாகப் பிரார்த்திப்போம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
    2. Problem is not snow. In the freezing weather -10 C there was no power for many homes for almost 24-72 hours ! Frozen water pipes bursting and causing damages to homes.
      Rajan

      Delete
  17. பெற்றோர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. கீசாக்கா நீங்கள் உங்கட அம்மாவைப்போலவே இருக்கிறீங்க...

    இம்முறை எங்களிடத்தில் கடும் ஸ்னோ இல்லை, இனி வராது, மார்ச் வந்திட்டால் இலைகள் பூக்கள் வரத்தொடங்கிடும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அரண்மனை! நான் அம்மாவைப் போல என அம்மா வீட்டிலும் அப்பாவைப் போல என அப்பா வீட்டிலும் சொல்லுவாங்க. இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  19. கீதாக்கா நீங்க அப்படியே உங்கம்மா ஜாடை :)உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க முழங்கை வலி  பற்றி சொல்றேன் மருத்துவரிடம் போங்க முதலில் .பாசிப்பருப்பு தக்காளி கூட்டு நானும் இப்படித்தான் செய்வேன் தக்காளி அளவை குறைத்து அதுக்குப்பதில் பீர்க்கை கேரட்டும் சேர்ப்பதுண்டு .அம்பேரிக்கா பனிப்புயல் இம்முறை மோசம்னு கேள்விப்பட்டேன் எங்களுக்கு ஸ்னோ முடிஞ்சு மழை கொட்டிங் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல். முழங்க அவ்வப்போது வலிச்சுட்டுத் தான் இருக்கு. அதுவும் ராத்திரி வந்தாச்சுன்னா கொண்டாட்டம் தான். அங்கே பனி குறைந்துவிட்டது குறித்து சந்தோஷமாக இருக்கு.

      Delete
  20. எங்கள் இந்திஆசிரியர் ராமகிருஷ்ணனைப் புகைப் படத்தில் பார்த்த்தில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராதாகிருஷ்ணன். நானும் பல மதுரைக்கார நண்பர்களிடம் அதுவும் சேதுபதி உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களிடம் கேட்டிருக்கேன். யாருமே தெரியும்னு சொன்னதில்லை. நீங்க அடையாளம் தெரிந்து கொண்டு பெயர், பதவி முதற்கொண்டு சொன்னது சந்தோஷமா இருக்கு. எந்த வருஷம் படிச்சீங்க?

      Delete