வர வர எழுதுவதில் மனம் பதிவது இல்லை. ஏனோ தெரியலை. கணினியில் உட்காரும் நேரமும் குறைஞ்சிருக்கு. வழக்கம் போல் இம்முறையும் வயிறு சரியாக நாட்கள் எடுத்து விட்டன. அதோடு வீட்டிலும் வேலைப் பளு அதிகம். குட்டிக் குஞ்சுலுவும் அவ பெற்றோருடன் நைஜீரியாவுக்குப் போய்ச் சேர்ந்து அவங்க இருக்கப் போகும் ஊருக்கும் போய்ச் சேர்ந்து விட்டனர். குஞ்சுலு முகத்தில் இனம் தெரியாத சோகம் இருப்பதாய் எனக்கும் அவருக்கும் தெரிகிறது. ஆனால் பையர் அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார். அவங்க மூன்று பேரும் கம்பெனியின் விருந்தினர் விடுதியில் பதினைந்து நாட்கள் க்வாரன்டைனில் இருக்காங்க. அது முடிஞ்சு கொரோனா பரிசோதனை எல்லாம் ஆகிப் பின்னர் தாற்காலிக வீட்டிற்குப் போகணும். இன்னமும் சாமான்கள் எல்லாம் வந்து சேரவில்லை. குஞ்சுலு ஏற்கெனவே சாப்பிடாது. இங்கே அதுக்கு எல்லாம் பிடிக்கணும். நாங்க பார்க்கையில் விளையாடிக் கொண்டிருந்தது. தானாகவே விளையாடிக்கும். நல்லவேளையா அதோடப் பத்துப் பதினைந்து பேபீஸ்களில் முக்கியமான சில பேபீஸ் கூடவே வந்து சேர்ந்து விட்டன. இல்லைனா ஏங்கிப் போயிருக்கும். எல்லா பேபீஸும் படுக்கையில் அதோடு படுத்துக்கொள்ளணும். இப்போ நாலைந்து பேபீஸ் மட்டும் தான் இருக்கின்றன.
அம்பேரிக்காவில் சென்ட்ரலைஸ்ட் ஏசி. வீடு முழுக்க எப்போதும் இருக்கும். இங்கே நம்ம ஊர் மாதிரி ஸ்ப்லிட் ஏசி எல்லா அறைகளிலும் போட்டிருக்காங்க. பையர் இப்போவே வியர்க்கிறது என்றார். அங்கேயும் இந்தியாவுக்கும் நாலரை மணி நேரம் வித்தியாசம். இப்போ இங்கே மாலை ஆறு மணி எனில் அங்கே மதியம் ஒன்றரை மணி. மாலை நான்கு மணிக்குப் பையர் கூப்பிட்டால் அங்கே நண்பகலுக்கு அரை மணி முன்னதாக பதினொன்றரை ஆகிறது. ஒரு விதத்தில் வசதி. இன்னொரு விதத்தில் வசதி இல்லை. நாளையிலிருந்து பையருக்கு அலுவலக வேலையை இந்த விருந்தினர் விடுதியில் இருந்தே செய்யும்படி இருக்கும். அப்போ அவருக்கு வர முடியாது. அவங்க இரவு ஆரம்பிக்கையில் நமக்கு நடு இரவு ஆகி இருக்கும். நம்ம காலைஆறு மணி எனில் அவங்களுக்கு நடு இரவு ஒன்றரை மணி. ஆகவே பையருக்கு அலுவலகம் விடுமுறை என்றால் தான் குழந்தையைப் பார்க்க முடியும். அம்பேரிக்காவில் எனில் ராத்திரி படுக்கும்போது எப்படியும் பார்த்துடலாம். இது கொஞ்சம் கஷ்டம் தான்.
********************************************************************************
கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதிலும் கணவன், மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும், பெண் பெற்றோரைக் கொல்வதும், மகன் பெற்றோரைக் கொல்வதுமாக அதிகரித்து வருகின்றன கொலைகள். எல்லாம் பணத்தாசை/ குடியில் ஆசை! மக்களுக்குப் பணத்தின் தேவை இருக்க வேண்டும் தான். ஆசையும் இருக்கத்தான் செய்யும். அதுக்காகப் பெற்றோரைக் கொல்லும் அளவுக்கா? அதுவும் குடித்துவிட்டு! என்னவோ தமிழகம் ஒருக்காலும் திருந்தப் போவதில்லை. வீண் பெருமை பேசிக்க மட்டும் பேசிப்பாங்க! நாங்கள் தனித் தமிழர்கள் என்று!
நீங்களும் இப்போது நைஜீரியாவில் இருப்பதைப் போல மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள் எண்ணங்கள் அவ்விடம் தான் உங்களுக்கு இருக்கிறது அவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள் உங்களுக்குத்தான் அட்ஜஸ்ட் செய்ய நேரம் பிடிக்கும் இது நம் பாசப்பிணைப்பு எல்லாம் கடவுள் புண்ணியத்தில் சரியாகிவிடும் கவலைப்படாதீர்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் அன்புடன்
ReplyDeleteஉண்மை தான் அம்மா. மனசு பூராவும் அங்கே தான் இருக்கு! அவங்க அட்ஜஸ்ட் செய்து கொண்டு தானே ஆகணும். எப்படியும் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் இருப்பாங்க போல! நானும் என்பாட்டைப் பார்த்துக்கொள்ளணும். பாதிக் கவலை இதான்! :)
Deleteஎனக்கும் இப்படி விட்டேற்றியா இருந்தது கொஞ்ச காலம் பிறகு நானே எழும்பிட்டேன் உண்மையில் பதிவு எழுதுவதும் வாசிப்பதும் மனசை லேசாக்குது .நீங்களும் இயன்றவரை பதிவிடுங்க.. குட்டிகுஞ்சுலுவின் சோகம் பற்றி சொல்லும்போது எங்கப்பா அம்மா நினைவு வருது .முந்தி ஊருக்கு போயிட்டு திரும்பும்போதெல்லாம் சொல்வாங்க //குழந்தை மனசில் எதோ கவலை இருக்குன்னு //இது தாத்தா பாட்டிகளுக்கேயுரிய உள்ளுணர்வா ?
ReplyDelete.குழந்தை சீக்கிரம் பழகணும்னு பிரார்த்திப்போம் புது இடத்துக்கு .நீங்க அதிகமா யோசிக்காதிங்க அதுவும்( ஸ்ட்ரெஸ் ) வயிறு உபாதைகள அதிகரிக்கும்
நானும் எழும்பிடறேன் ஏஞ்சல். உங்கள் வார்த்தைகள், காமாட்சி அம்மா வார்த்தைகள் ஊக்கத்தைத் தருகின்றன. குட்டிக் குஞ்சுலுவுக்கு இடம் மாறினாலே பிடிக்கிறதில்லை. ஆனாலும் என்ன பண்ணுவது? போன வருடம் இந்த நாட்களில் சென்னை வாசம்! இந்த வருடம் நைஜீரியாவில் இருக்கு! வயிறு உபாதைகள் மன அழுத்தத்தினால் தான் என்பதை நானும் உணர்ந்திருக்கேன்! வெளியே வரணும்/ வந்துடறேன்.
Deleteஇந்த பேராசை பணம் பெண் மோகம் கொலை கொள்ளைலாம் நம்மூர் னு இல்லை எல்லா இடத்திலும் நடக்குதுக்கா .நான் பெரும்பாலும் ஒரு முதல் வரியிலேயே கடந்துடுவேன் இப்படிப்பட்ட செய்திகளை
ReplyDeleteஇங்கே என்னமோ நிறைய இருக்காப்போல் இருக்கு எனக்கு! தினசரியைப் பார்த்தாலே இப்படியான விஷயங்கள்/செய்திகள்.
Deleteபையருக்கும் அவர் குடும்பத்திற்கும் புது இடம் நல்லா செட் ஆகட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎப்படியும் நம்ம ஊரைவிட வெயில் குறைவுதான் இருக்கும். குழந்தையும் விரைவில் செட்டில் ஆகிவிடும். ஆரம்பத்தில் பயணம் அலைச்சல், செட்டில் ஆகாதது போன்றவற்றால் முகத்தில் களைப்பு தெரியும்.
வாங்க நெல்லை. விரைவில் செட்டில் ஆகணும்னு பிரார்த்திப்போம். சின்ன வயசு! அவங்களுக்குப் புது இடம் ஆர்வத்துடன் விரைவில் பிடிச்சுப் போகும் என நம்புகிறேன். குஞ்சுலுவும் பள்ளிக்குப் போகணும்னு சொல்லிக் கொண்டு இருக்கு! போனால் சரியாகி விடலாம்.
Deleteஇரண்டு சம்பந்தமில்லாத சப்ஜெக்டை வைத்து இடுகை எழுதுவது உங்களுக்குத்தான் இயலும்.
ReplyDeleteகொலை என்பதெல்லாம் எதற்கும் பிரயோசனமில்லாத வேலை. அதைச் செய்தவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக அழிந்துவிடும் என்பதைத் தவிர வேறு என்ன பிரயோசனம் அதில் இருக்கிறது?
ஹாஹாஹா, அதை ஏன் கேட்கறீங்க நெல்லை! எழுத நினைச்சது மகளிர் தினம் பற்றி. எழுதியது குஞ்சுலுவைப் பற்றியும் தினசரிச் செய்திகளும். காலையில் கில்லர்ஜி பதிவில் அம்மாவை மதிக்காத/ஆதரிக்காத பிள்ளை பற்றிப் படிச்சேனா? உடனே தினமலர்ச் செய்தியிலும் இப்படி வந்திருந்ததா? அதே மனசில் சுற்றிக் கொண்டு பதிவிலும் எழுதி இருக்கேன். :)))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் மகனும், அவர் குடும்பமும், நைஜீரியா இடத்துக்கு ஒத்து வந்து நல்லபடியாக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் இளையவர்கள். அதனால் சீக்கிரம் இடமாற்றத்தை ஜீரணித்துக் கொண்டு விடுவார்கள். நீங்கள் கவலைப்பட்டு உடம்பை பலவீனபடுத்திக் கொள்ளாமல் இருங்கள். பேத்திக்கும் அங்குள்ள நிலைமை பழகி விட்டால் கலகலப்பாகி விடுவாள். தைரியமாயிருங்கள். பொதுவாக இன்றைய காலகட்டங்கள் நம் வாரிசுகளை நம்மை விட்டு இப்படி பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது.
இப்போதெல்லாம் மக்களுக்கு பணத்தின் மீது ஆசைகள் நிறைய வந்து விட்டது. அதிலும் குறுக்கு வழியில் சீக்கிரமாக பணத்தை அடைந்து வேண்டியதை பெற விரும்புகிறார்கள். அதன் விளைவு நியாயம், சத்தியமெல்லாம் காற்றோடு கலந்து விட்டது. அதனால் பழி வாங்கும் குணங்கள் பெருகி விட்டன. முடிவு உயிரை பறிப்பதுதான் என்றாகி விட்டது. என்ன செய்வது? ஒருவர் தலையெழுத்தை அந்த பிரம்மனாலும் மாற்ற முடியாதே...! பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. நைஜீரியா ஒத்துக்கொண்டு தானே ஆகணும். இன்னும் சில வருடங்கள் அங்கே தான். என்னன்னா சரியான சாப்பாடு கிடைப்பதாய்த் தெரியலை. இங்கே நாம் சாப்பிடும்போதெல்லாம் அது நினைவில் வந்துடும். :( அப்புறமாச் சாப்பிடவே தோணாது.
Deleteஅது உண்மை சகோதரி. அதுதான் பெற்ற பாசம். அங்கு அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என எண்ணியவுடன் ஒரு வாய் சாப்பாடோ இல்லை, அன்றைக்கு நன்றாக அமைந்த பல வகைகளோ கூட உள்ளே செல்லாது. மனம் வருத்தப்படும் போது அது எப்படி சாத்தியமாகும்? அவர்களுக்கும் நல்ல உணவாக அங்கு கிடைக்க நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Deleteமகன் குடும்பம் நைஜீரியா கொஞ்சனாளில் பழகி விடும். வேலை நிமித்தம் போனால் பழகிதானே ஆக வேண்டும்.
ReplyDeleteபேத்திக்கும் இன்னும் கொஞ்ச நாளில் பழ்கி விடும்.
நமக்கு தான் ஏதாவது கவலைகளை மனதில் ஏற்றிக் கொண்டு சிரமபடுவோம்.(குடும்பம், சமூகம் என்று)
இறைவனிடம் எல்லாம் நல்லபடியாக இருக்க பிரார்த்தனை செய்வோம். வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது.
"வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "என்று காலை எழுந்தவுடன் ஒரு நாளுக்கு 10 முறை சொல்ல சொல்வார்கள் எங்கள் மன்றத்தில் அதை செய்வோம்.
வாங்க கோமதி! பழகித்தானே ஆகணும். நமக்குத் தான் கவலைகளுக்குக் காரணமே தேவை இல்லையே! தினம் தினம் லோகோ சமஸ்தோ சுகினோ பவந்து: என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கோம்.
Deleteநைஜீரியா சென்று சேர்ந்தது அறிந்து மகிழ்ச்சி. பேசுவதற்கு சரியான நேரம் அமையும். கவலை வேண்டாம்.
ReplyDeleteதமிழகம் - ஒன்றும் சொல்வதற்கில்லை. பல இடங்களில் இப்படித்தான் இருக்கிறது - மனிதர்களின் ஆசைகள் அளவிடமுடியாமல் அதிகரித்துக் கிடக்கிறது.
வாங்க வெங்கட், நேரம் அமையணும். தமிழகத்தை இன்னும் எவ்வளவு கெடுக்கணுமோ, அவ்வளவு கெடுக்கப் போகிறார்கள். பெண்களுக்கு 1500 ரூபாயாம், வருடத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசமாம்! என்னத்தைச் சொல்லுவது? இன்னும் பல டாஸ்மாக் கடைகளைத் திறந்து இந்தச் செலவுகளை ஈடு கட்டுவாங்க. என்னோட வாக்கு இலவசம் எதுவும் கொடுக்காமல் மாநில நலன் பற்றிச் சிந்திக்கும் கட்சிக்கே போடணும்னு ஆசை தான்! :(
Deleteஇது போல் பகிர்ந்து கொண்டாலும் மன பாரம் குறையும்...
ReplyDeleteஉண்மைதான் திரு தனபாலன். நன்றி.
Deleteகு கு பள்ளியில் படித்து அங்கு அறிமுகமான நண்பர்களை பிரிந்தாலோ, பக்கத்து வீட்டு நண்பா நண்பிகளை பிரிந்தாலோ இனம் தெரியாத சோகம் இருக்கும். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை எனும்போது இனம் தெரியாத சோகம் என்பது உங்கள் எண்ணமாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். அவர்கள் நல்லபடி நைஜீரியா சென்றடைந்து விட்டனர் என்ற தகவல் மகிழ்ச்சி. அந்த ஊர் எப்படியாம்?
ReplyDeleteபிரசவம் நல்லபடியாக முடிஞ்சு சின்னக் குழந்தையுடன் தாய் வீடு வரும் பெண்களுடன் குழந்தையின் பிறந்த இடத்து மண்ணையும் ஒரு துணி/பேப்பரில் மூட்டை கட்டிக் கொண்டு வருவார்கள் ஶ்ரீராம். உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைனு நினைக்கிறேன். குழந்தையோடு தாயைக் கொண்டு விட்டதும் சில நாட்கள் குழந்தை அழுது தீர்த்துடும். அப்போப் பிறந்த இடத்து மண்ணைத் தான் குழந்தையின் நெற்றியில் பூசி, வயிற்றிலும் விபூதி மாதிரி இடச் சொல்லுவார்கள். என்னொட இரண்டு குழந்தைகளுக்கும் இதைச் செய்திருக்கேன். அந்த மாதிரித் தான் குஞ்சுலுவுக்கும்! பிறந்ததில் இருந்து பார்த்து வந்த இடத்தை திடீரெனக் காணோம் என்றால் அது மனசில் ஏக்கம் வராதா? அந்த ஊர் எப்படி என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியணும்.
Delete//உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைனு நினைக்கிறேன்.//
Deletegrrrrrr... தெரியும். தெரியாமல் இருக்குமா?
வேணும்னு தானே சொன்னேன்! இஃகி,இஃகி,இஃகி!
Deleteநேர வித்தியாசங்களால் ஏற்படும் குறைபாடுகள், குழப்பங்கள் சீக்கிரமே பழகி, நாமே அதற்குத் தகுந்தவாறு அடஜஸ்ட் ஆகிவிடுவோம். கவலைப் படாதீர்கள்.
ReplyDeleteசீக்கிரம் பழகணும்னு பிரார்த்திப்போம் ஸ்ரீராம்.
Deleteகொலைகள் அதிகமாவது இருக்கட்டும். இன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தி. ஒரு பெண் நான்கு பேர்களுடன் ஓடிப் போனாளாம். கணவனை சீட்டு குலுக்கித் தேர்ந்தெடுத்தாளாம்!
ReplyDeleteஒண்ணும் கேட்காதீங்க. முகநூலில் வரும் பெண்கள் படங்கள் கண்ணால் பார்க்க முடியாதபடிக்கு அசிங்கமாகவும், கொச்சையாகவும் இருக்கின்றன. இப்படி எல்லாமா படம் எடுக்கச் சொல்லிப் போட்டுப்பாங்க? இதிலே பெண்கள் தெய்வத்துக்குச் சமானம் என்றால் நம்புபவர்கள் யார்?
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteபையரும், குட்டிக் குஞ்சுலுவும்,மருமகளும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சரியாகி விடுவார்கள்.
மருமகளை அழைத்துப் பேசச் சொல்லுங்கள்.
குழந்தை எல்லோரையும் பார்த்தால் தெளிந்து விடுவாள்.
பள்ளிக்குச் செல்லட்டும். அதன் உலகம்
சந்தோஷமாக இருக்கும்.
நீங்களும் மனதைத் தேற்றிக் கொள்ளவும்.
இந்தத் தொற்று நாட்கள் என்னையும் பதம் பார்க்கிறதூ.
எதிலும் கவனம் வைப்பதில்
அமைதியே இல்லை.
ஒரு மூதாட்டி 75 வயதில் மானபங்கப் பட்டுக் கொலையும் செய்யப்
பட்டார் என்றால் அது என்ன மாதிரி
ஊராக இருக்கும்?
இனிமேல் செய்தியே படிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
எல்லாம் சரியாகட்டும் அம்மா.என் அன்பு.
மருமகள் பேசுகிறாள் வல்லி. நான் தான் அதைக் குறிப்பிடுவது இல்லை. அவளுக்கும் உள்ளூர எக்கம் இருக்குமே! மனதைத் தேற்றிக்கொள்ளத் தான் வேண்டும். நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் அதி பயங்கரமாக இருக்கே! எனக்கும் இப்போதெல்லாம் தினசரி படிக்கத் தோன்றுவது இல்லை.
Deleteகீசாக்கா இந்த வருடம் பிறந்ததிலிருந்து மார்ச் 15 வரை ஏதோ பல கிரகங்கள் ஒன்றுகூடுதாமே, அதனால ஆரைப் பார்த்தாலும் மன உழைச்சல், சுகயீனம் எனத்தான் சொல்கின்றனர், 15 ஆம் திகதிக்குப் பின் எல்லாம் நோர்மலாகிடும்.. நானும் ஜனவரியில் மிகவும் கஸ்டப்பட்டேன்...
ReplyDeleteமகன் குடும்பம் அருகில் வந்தது ஒரு வகையில் நல்லதே... அவசரம் எனில் ஓடி வந்திடலாம் இந்தியாவுக்கு... ஆனா இப்போ மூன்று குடும்பங்களும் மூன்று இடத்தில் இருப்பது கொஞ்சம் கஸ்டம்தான்[நீங்கள், மகள், மகன்].
வாங்க அதிரடி/செஃப்! என்ன கிரஹ சேர்க்கையோ! ஒண்ணும் புரியலை. நாங்களும் சீக்கிரம் பதினைந்தாம் தேதி வரணும்னு நினைக்கிறோம். ஒரு விதத்தில் மகன் குடும்பம் இங்கே வந்தது நல்லதே! சென்னைக்கு ஒன்பது மணி நேரம் தான் விமானப்பயணத்தில் ஆகும் என்கிறார்கள். இப்படி நாங்க பிரிஞ்சிருப்பது இது முதல் தரமும் அல்ல. மாமா ஊட்டியில் இருக்கும்போது என்னைக் கூடவே அழைத்துப் போகவில்லை. மாமா ஊட்டியில், மகள் பாஸ்டனில், மகன் பரோடாவில், நான் சென்னை/அம்பத்தூர் வீட்டில் என இரண்டு வருடங்கள் இருந்தோம். பின்னர் மகன் ஹூஸ்டன் போனார். பெண் மெம்பிஸ் வந்தாள். மாமாவும் ஊட்டியிலிருந்து மாற்றல் ஆகிச் சென்னை வந்தார்.
DeleteTiming Difference இருந்தா கஷ்டம் தான், அதுவும் குழந்தையோட செலவிடற நேரம் குறையும். Wish them the best. உண்மை தான், குடும்ப வன்முறைகள் அதிகரிச்சுட்டு தான் போகுது.இது எங்க போய் முடியுமோ தெரியல
ReplyDeleteஆமாம், ஏடிஎம். குழந்தையோடு செலவிடும் நேரம் குறையத்தான் செய்கிறது. குழந்தை பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டால் பார்ப்பதும் குறைந்துடும். போகப் போகத்தான் தெரியும்.
Deleteகுடும்ப வன்முறைகள் பற்றி ஒண்ணும் சொல்லுவதற்கில்லை. :(
அன்புள்ள கீதாம்மா, சிறிது நாட்கள் சென்றால் குழந்தைக்கு பழகிவிடும். மனதை தேற்றிக் கொள்ளுங்கள். அடிக்கடி குழந்தையிடம் பேசுங்கள்...
ReplyDeleteஎல்லாமுமாக விளங்கிய எங்கள் அன்பு பாட்டியை இழந்து தவிக்கின்றோம். மாசி மகத்தன்று, பௌர்ணமி நாளில் விளக்கேற்றிவிட்டு, அனைவரிடமும் தொலைபேசியில் உரையாடிவிட்டு, எந்த சலனமும் இல்லாமல் இறைவனடி சேர்ந்துவிட்டார். தனது 90வது வயதில், நிறை வாழ்வு வாழ்ந்து காற்றோடு காற்றாய் கலந்திட்டார். எங்கள் ஆதர்ஷ தெய்வமாய் விளங்கியவர், நொடிப்பொழுதில் எங்களை விட்டு சென்றுவிட்டார். எப்பொழுதும் புன்னகை புரிந்து, இனிமையாக பேசி, அனைவர்க்கும் அன்பாய் உணவு சமைத்து கொடுப்பவர். மனம் ஆறவில்லை அம்மா...என்னை திசைதிருப்பிக் கொள்ளவே வலைப்பக்கம் வந்தேன்.
நான் நியூஸ் பேப்பர் படிப்பதை நிறுத்தி வெகு நாள் ஆகிறது. அன்பு இருக்கும் இடத்தில் எப்படி கொலை செய்யும் எண்ணம் உதிக்கும்? அன்பில்லாதவர்கள் வாழும் இடத்தில் நாமும் வாழ்கின்றோம் என நினைக்கையில் பயமாக இருக்கிறது.
வாங்க வானம்பாடி. நீங்கள் சொல்வது சரியே. மனதைத் தேற்றிக் கொள்ளத் தான் வேண்டும். உங்கள் பாட்டியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அதிலும் இத்தனை அன்பார்ந்த பாட்டி! பிறருக்கென வாழாதவர்! மனம் வேதனையை எளிதில் தீர்க்க முடியாது. எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Deleteதினசரியை இத்தனை வருடங்கள் வாங்காமல் இருந்தோம். இப்போத் தான் தேர்தல் என்பதால் வாங்க ஆரம்பிச்சிருக்கார். நான் பார்ப்பதில்லை.
நைஜீரியாவில் வாழ்க்கை நல்லபடியாக தொடங்கட்டும் பிரார்த்தனைகள்.
ReplyDeleteகுஞ்சுலுவை வாரம் ஒரு தினமாவது காணலாம்தானே...
இதை படித்து விட்டேனே கருத்துரை இட மறந்து விட்டேன் போல...
வாங்க கில்லர்ஜி,அதனால் என்ன? தாமதமானாலும் நினைவு கொண்டு பதில் சொன்னதுக்கு நன்றி. குஞ்சுலுவை இன்றும் பார்த்தோம். வெள்ளி, சனி, ஞாயிறு நம்ம நேரப்படி மதிய நேரம் பார்க்கலாம். மற்ற நாட்களில் பையருக்கு அலுவலக வேலையும், மருமகளுக்கு வீட்டில் சாமான்களை உரிய இடத்தில் வைக்கும் வேலையும் சரியாக இருக்கும். அவங்க கையில் கொண்டு போன முக்கிய சாமான்களே இப்போத் தான் வந்து சேர்ந்திருக்கு. இன்னும் கன்டெயினரில் அனுப்பியது வர 3 மாசம் பிடிக்குமாம். அதன் பிறகு தான் கொஞ்சமானும் மூச்சு விட்டுக்க முடியும்!
Deleteகுழந்தைகள் விரைவில் இடமாற்றத்தை பழகிவிடுவார்கள். கவலை வேண்டாம்.
ReplyDelete