ஒரு வழியாய் நாங்களும் ஜோதியிலே ஐக்கியம் ஆயிட்டோம். கண் அறுவை சிகிச்சை இருக்குமோனு ஒரு கவலை/யோசனை! அடுத்து மைத்துனரின் ஆப்திகக் கவலைகள். திடீர்ப் பயணம் ஒண்ணு இருக்குமோனு இன்னொரு கவலை, வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகள் என ஒண்ணு மாத்தி ஒண்ணு பட்டியல் போட்டுக் கொண்டு வந்து விட்டன. கடைசியா நேற்று ப்ளம்பர் வந்து சமையலறைப்பக்கம் இருக்கும் செர்வீஸ் ஏரியாவின் குழாயைச் சரி பண்ணிட்டுப் போயிட்டார். இனி இப்போதைக்குக் கொஞ்ச நாட்கள் எந்த வேலையானாலும் போட்டு வைச்சுடலாம்னு முடிவு எடுத்து இன்னிக்கு அங்கே இங்கே விசாரித்து, அரசாங்க மருத்துவமனையில் ஒரு நாள் எடுக்கும் என்பதால் தனியார் மருத்துவமனைக்குப் போய்க் கோவி ஷீல்ட் ஊசி போட்டுக் கொண்டு வந்தாச்சு.
அங்கே போனதுமே பிபி, ஜூரம் இருக்கானு எல்லாம் சோதனைகள் செய்து ஆதார் கார்ட்/நம்பரோடு பெயரையும் எழுதிக் கொடுத்தவற்றையும் சரிபார்த்து, (அப்படியும் அவர் பெயரைப் பிடிவாதமாய் ஏ.சாம்பசிவம்னு எழுதி இருக்காங்க) பெயர் எழுதிப் பணம் கட்டியவுடன் பத்து இருபது நிமிஷங்களில் கூப்பிட்டு ஊசி போட்டார்கள். அந்த அறைக்குள்ளே ஏறணுமேனு கவலைப் பட்டுக்கொண்டே எழுந்தேன். ஹிஹிஹி, என்னைப் பார்த்ததுமே அந்தப் பெண்மணி, "நீங்க வரவேண்டாம்! அங்கே உட்காருங்க, நான் வந்து ஊசி போடறேன்!" என்று சொல்லி விட்டார். வந்து போட்டும் விட்டார். அப்புறமா அரை மணி அங்கே உட்கார்ந்து அடுத்த ஊசிக்கான தேதியைக் கேட்டுக் குறித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டோம். டோலோ 650 மாத்திரைகள் கொடுக்கலையானு என் தம்பி கேட்டார். அரசு மருத்துவமனையில் தான் அதெல்லாம் கொடுக்கிறாங்க போல! இங்கே எதுவும் தரவும் இல்லை. எந்தவிதமான நிபந்தனைகள் இருப்பதாகவும் சொல்லவில்லை. மாத்திரைகளும் கொடுக்கவில்லை. ஆகவே நாங்க அப்படித் தேவைன்னால் பக்கத்து மருந்துக்கடையிலே வாங்கிக்கலாம்னு முடிவு செய்துட்டோம்.
ஆக மொத்தத்திலே நாங்களும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டோம். எங்களுக்குப் போட்டிருப்பது கோவிஷீல்ட் என்று சொன்னார்கள். அடுத்தது மே மாதக் கடைசியிலே தான்! இப்போதைக்குக்கையிலே கொஞ்சம் கடுக்கிறது. இனி போகப் போகத் தான் தெரியும். இந்த ஊசியின் தாக்கம் என்னனு புரியும். அதோடு அரசு மருத்துவமனையில் தேநீர், ஜூஸ் எல்லாம் கொடுப்பதாகவும் சில/பலர் எழுதி இருந்தனர். இங்கே தண்ணி வேணுமானு கூடக் கேட்கலை. அரை மணி உட்கார்ந்துட்டுப் போங்கனு சொன்னதோடு சரி! வீட்டுக்கு வந்து தான் தண்ணியே குடிச்சோம். லேசாக் கைவலிக்கிறாப்போல்/கனத்தாற்போல் இருக்கு. இனிமேப் பார்க்கணும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். நலமே விளையட்டும். திருவரங்கம் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாத்திரைகள் எதுவும் தருவதில்லை. ஒரு நாள் கொஞ்சம் வலி இருக்கும். பிறகு சரியாகிவிடும். கவலை வேண்டாம். அடுத்த முறை போட்டுக் கொள்ளும்போது இதே COVISHIELD ஊசியே போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteநன்றி வெங்கட். மற்ற மருத்துவமனைகள் பற்றித் தெரியாது. இந்த மருத்துவமனையில் கோவிஷீல்ட்! ஆகவே நாங்களும் அதுவே போட்டுக் கொண்டோம். இனி அடுத்தது மே மாதம் தான்!
DeleteVery good! தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு பாராட்டுகள். ஊசி போட்டுக் கொண்ட தினத்தை விட அடுத்த நாள்தான் பாதிப்பு தெரியும். கவலை வேண்டாம். நான் முதல் ஊசியை சென்னையிலும், இரண்டாவது ஊசியை பெங்களூரிலும் போட்டுக் கொண்டேன். இரண்டுமே தனியார் மருத்துவமனைதான். எனக்கும் டோலா 650 போன்ற எதுவும் தரவில்லை. அரசு மருத்துவ மனைகளில் போட்டுக் கொண்டால்தான் மாட்திரைகள் தருகிறார்கள்.
ReplyDeleteவாங்க பானுமதி, உடனே வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. அரசு மருத்துவமனைகளில் டோலோ தருவதாக எல்லோருமே சொல்கிறார்கள். இங்கே பயங்கரக் கூட்டம். குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். அதுவும் நிற்க வேண்டும். என்னால் நிற்க முடியாது என்பதால் தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.
Deleteகைவலி இருக்கும் . மாத்திரை முடிந்தால் எடுத்துக் கொள்ளவும் நல்லதே நடக்கும். அன்பு கீதாமா நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன் தங்கை அபார்ட்மெண்ட் கோடி வீட்டில்
ஒருவருக்கு வந்துவிட்டதாகவும் அவர் தனிமைப் படுத்தப்
பட்டு இருப்பதாகவும் சொன்னாள்.அவள் இருப்பது அடைய வளஞ்சான் தெரு.
நீங்கள் ஊசி போட்டுக் கொண்டது நல்லது.
சௌக்கியமாக இருக்கவும்.
வாங்க வல்லி, கைவலி இருக்கு. இடப்பக்கம் படுக்க முடியலை. நல்லபடியாக ஒரு வாரம் போகணும். அது போதும்.நன்றி.
Deleteமூன்றாவது நாளுக்கு அப்புறம் ஒன்றுமே தெரியாது. அதனால ஒரு கவலையும் படவேண்டாம். மாமா மட்டும், கேடரரின் அருமையான சாப்பாடு இரண்டே நாட்களில் போய்விடுமே என்று கவலைப்படலாம்.
Delete@நெல்லைத்தமிழரே! நேற்று முழுவதும் எழுந்திருக்கவே முடியலை. நல்லவேளையாகக் காடரர் சாப்பாடு வந்ததால் சாப்பிட முடிந்தது. சாப்பிட்ட உடனே மறுபடி படுத்துட்டோம். இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இன்னிக்கு எந்தக் காடரரும் சாப்பாடு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே மாமா நான் சமைப்பதைத் தான் சாப்பிட்டாகணும்.
Deleteதடுப்பூசி போட்ட மறுநாள் படுத்தி எடுத்து விடும். சிலபேர் மட்டும்தான் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள். நானும் அனுபவித்தேன். இன்று பரவாயில்லை என்று சரியாகி விடும். நேற்றைய அனுபவ பயம் மட்டும் மனதில் இருந்து உடலை எச்சரிக்கை செய்யும்!
Deleteஆமாம்,இன்னிக்கு முழு ஊரடங்கு என்பதால் காடரிங் வேறே கொண்டு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டாங்க. மாமா அலைய வேண்டாம் என்பதால் நானே மணத்தக்காளிக் குழம்பு, மிளகு ரசம் வைத்து சாதம் வடித்து வெள்ளரி+தக்காளி+காரட்+வெங்காயம் போட்டு சாலட் செய்து விட்டேன். சாப்பிட்டும் ஆச்சு.
Deleteஅசதி இருந்தாலும் நேற்றளவு மோசம் இல்லை. நேத்திக்கெல்லாம் உட்காரவே முடியலை. மத்தியானம் முழுவதும் படுத்துக் கொண்டே பொழுதைக் கழித்தோம். எழுந்து உட்கார்ந்தால் தலை சுற்றல், உடம்பு அசதியில் ஆடுதல் எனப் படுத்தல்.
Deleteதடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு வாழ்த்துகள். நலமே விளைக!
ReplyDeleteநன்றி கில்லர்ஜி, நீங்களும் போட்டுக் கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். கவனமாக இருக்கவும்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதாங்களும் தடுப்பூசி போட்டு வந்தமைக்கு சந்தோஷம். தற்சமயம் கைவலி எப்படி உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வலிகள் குறைவு/அதிகம் என்கிறார்கள். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் அடுத்த வாரம் என பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு பல்வலி அதிகம் உள்ளது. கால் பாதம் இரண்டும் மரத்து போனது உணர்வு எப்போதும் உள்ளது. இதில் இந்த தடுப்பூசி என்ன செய்யுமோ என்ற எண்ணம் வந்தபடி உள்ளது ஆண்டவன் செயல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, விரைவில் நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள். எனக்கும் கால்வலி, பாதத்தில் வீக்கம் போன்றவை இருக்கின்றன. ஆனாலும் போட்டுக் கொண்டு வந்துவிட்டேன். இதுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லைனு என்னோட கருத்து. விரைவில் முடிவு எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.
Deleteகமலா அக்கா.. ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் மட்டுமே தங்கள் கேட்டுக்கொண்டு, அந்த மாத்திரையை இரண்டு நாட்கள் நிறுத்தி விட்டு ஊசி போட்டுக்கொள்ளவே வேண்டும். மற்றவர்கள் அனைவரும் போட்டுக்கொள்ளலாம். ஜுரத்துக்கு, வலி நிவாரணி என்று பாராசிட்டமால் க்ரூப் தவிர வேறெதுவும் எடுக்காதிருப்பது நலம்.
Deleteஆமாம், நாங்க போனப்போ ஒருத்தரை மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு சில சோதனைகள் செய்துவிட்டுப் பின்னர் ஊசி போட்டுக்கலாம்னு சொல்லி அனுப்பிட்டாங்க!
Deleteஊசி போட்டுக் கொண்டது நல்லது.
ReplyDeleteமறுநாள் கொஞ்சம் கை வலிக்கும், கனத்தாற்போல இருக்கும். சிலருக்கு உடல் அசதி இருக்கும்.
மருமகளுக்கு லேசா காய்ச்சலும் இருந்தது.
வாங்க கோமதி, இடக்கை வலி தான் அதிகமாத் தெரியுது. உடம்பும் சோர்ந்து தான் போகிறது. நாளைக்குள் சரியாயிடும்னு நினைக்கிறேன்.
Deleteநல்லது... ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏன் இவ்வளவு நேரமாகிவிட்டது?
ReplyDeleteமுதல் ஊசி தனியார் மருத்துவமனையிலும், இரண்டாவது ஊசி, இங்க வளாகத்துக்குள்ளேயும் போட்டுக்கொண்டோம். முதல் ஊசி போட்டு மறுநாள் கை வலித்தது, உடல் சோர்வா இருந்தது, நெஞ்சில் படபடப்பு வலி (1 நிமிடம்) ஐந்து ஆறு முறை வந்தது. இரண்டாவது ஊசிக்கு இரண்டாம் நாள் கை வலி கொஞ்சம் இருந்தது. கோவிஷீல்டுக்கு, தண்ணீர் அதிகம் குடிக்கணுமாம். (விவேக் எபிசோடுக்குப் பின் நான் அதிக தண்ணீர் குடித்தேன்)
பதிவின் ஆரம்பத்தைப் படியுங்கள் நெல்லை. தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள தாமதம் ஆனதின் காரணம் தெரிய வரும். எனக்கும்/அவருக்கும் உடல் சோர்வு, கைவலி இருக்கு. தண்ணீர் நிறையக் குடிக்கிறோம். எப்போதுமே தண்ணீர் நிறையக் குடிப்பதால் பிரச்னை இல்லை.
Deleteஅம்மாடி.. ஒருவழியா ஊசி போட்டுக்கொண்டாச்சா? நாளளது. பெரும்பாலும் ஊசி போட்டுக்கொடனதற்கு மறுநாள் ஒரு நாள் படுத்தும். நிறைய பேர்களுக்கு அதுவும் படுத்துவதில்லை. ஜுரம் அடிக்கிற மாதிரியே இருக்கும். பார்த்தால் நூறை ஒட்டி இருக்கும். களைப்பாக இருக்கும். ஜுரம் ஏறினால் மட்டும் டோலோ போடுங்கள். வலிமாத்திரை எதுவும் வேண்டாம். இரண்டு மூன்று நாட்களுக்கு நடைப்பயிற்சி உள்ளிட்ட கடின வேலைகள் எதுவும் செய்யக் கூடாது.
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், அதான் அடுத்தடுத்துப் பிரச்னைகள்/வேலைகள்/தொந்திரவுகள்/பயணப் பயமுறுத்தல்கள்னு இருந்து கொண்டே இருந்தது. அதோடு சமையலறையை ஒட்டிய செர்வீஸ் ஏரியாவின் குழாய் அடைத்துக்கொண்டு தண்ணீரெல்லாம் வழிந்து ஒரு வாரமாக ஒரே அமர்க்களம். ப்ளம்பர் வரத் தாமதம் ஆகிவிட்டது. ஒரு வழியாய் முந்தாநாள் முடிச்சுக் கொடுத்தார். அதான் நேத்திக்குப் போயிட்டு வந்துட்டோம்.
Deleteகீதாக்கா இந்திய குடிமகன்/ள் கடமை நிறைவேற்றிவிட்டீங்க இல்லையா..இங்கும் பல பிரச்சனைகள்...
Deleteஸ்ரீராம், கீதாக்கா இப்போது ஒருவழியாக இங்கும் போட ரெஜிஸ்டர் செய்தாச்சு. அரசு போடும் இடத்தில். கோவாக்சின்.
ஸ்ரீராம் ஏற்கனவெ எனக்கு சொல்லியிருந்தால் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, போட்டதும் என்னென்ன வரலாம் என்று.
மீண்டும் அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
நீங்களும் கவனமாக இருங்க அக்கா. மாமாவுக்கும்...சேர்த்து
கீதா
வாங்க தி/கீதா, அடுத்தடுத்து அலைந்து திரிந்து சாமான்கள் வாங்க வேண்டி இருந்ததாலும் ஒருவேளை திடீர்ப் பயணமாக தில்லி செல்ல வேண்டி இருக்குமோ என்பதாலும் ரொம்பவே யோசித்தோம். இப்போதைய நிலைமையில் தில்லிப் பயணம் எல்லாம் இல்லை. அதோடு முக்கியமான வேலைகள் முடித்துக் கொண்டு விட்டோம். ஆகவே நினைத்துக் கொண்டு கிளம்பிப் போய் ஊசியைப் போட்டுக் கொண்டு வந்துட்டோம். முன்பதிவோ, டோக்கனோ எதுவும் இல்லை.
Deleteகோவாக்சின் தட்டுப்பாடு போலும். அது நிறைய இடங்களில் கிடைக்கவில்லை. பேஸ்புக்கில் பாலாஜி வாசு ஸார் கூட எழுதி இருந்தார். அல்லது இரண்டும் இருந்து நீங்கள் உங்கள் தெரிவில் கோவிஷீல்ட் போட்டுக்கொண்டீர்களா?
ReplyDeleteதெரியலை ஶ்ரீராம். நாங்க போன மருத்துவமனையில் அனைவருக்கும் கோவிஷீல்ட் தான் போட்டுக் கொண்டு இருந்தார்கள். எங்கள் விருப்பம் எதுவும் அவங்களும் கேட்கலை/நாங்களும் கேட்டுக்கலை. ரசீது கொடுக்கையில் அடுத்த டோஸுக்கான தேதியும், இப்போது போட்ட ஊசியின் பெயரும் எழுதிக் கொடுத்ததால் கோவிஷீல்ட் என்பதைத் தெரிந்து கொண்டோம்.
Deleteஎன்னது.. அரசாங்க மருத்துவமனையில் ஜூஸ். டீ, டிஃபன் எல்லாம் கொடுக்கிறார்களா? எந்த ஊரில்? நல்லாக் கொடுப்பாங்களே...
ReplyDeleteஹிஹிஹி, சிலர் சொன்னாங்க. நானும் கேள்விப் பட்டேன் ஶ்ரீராம்.
Deleteகவனமாக இருங்கள்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteஅட? வேதா! ஆச்சரியம் தான். மாத்திரைகள் கைவசம் வைச்சிருக்கோம். கவலைப்பட வேண்டாம். கூடியவரை கவனமாகவே இருக்கோம். இன்னிக்குச் சாப்பாடு கூட காடரிங்கிலே சொல்லியாச்சு. 2,3 நாட்கள் அதிகம் அலட்டிக்க வேண்டாம்னு!
ReplyDeleteதடுப்பு ஊசி போட்டுக் கொண்டு மிகப் பெரிய சமுதாயக் கடமையை நிறைவேற்றி இருக்கின்றீர்கள்...
ReplyDeleteஎவ்வித நோவும் அண்டாதிருக்க இறைவன் அருள் புரிவான்...
வாங்க தம்பி. பிரார்த்தனைகளுக்கு நன்றி. வீட்டில் அடுத்தடுத்துக் கவனிக்க வேண்டிய வேலைகள்/பிரச்னைகள் இல்லை எனில் அறிவிப்பு வந்த உடனேயே போட்டுக் கொண்டிருப்போம். தாமதம் ஆகிவிட்டது. இதில் ஒரு நல்ல காலம் என்ன எனில் நாங்க போன வாரம் குலதெய்வம் கோயிலுக்கும் போயிட்டு வந்தது தான். இப்போக் கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதில்லைனு சொல்லிட்டாங்க. அதிலும் அந்த இறைவனின் அருளே காரணம்!
Deleteநான் தற்சமயம் மருத்துவ மனையைச் சார்ந்துள்ள சமையல் கூடத்தில் பணி புரிவதால் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதில் பிரச்னை இல்லை.. பட்டியலில் உள்ளபடி முதல் குழுவிற்கு போட்டாயிற்று..
ReplyDeleteவரிசைப்படி வருவதால் அடுத்த வாரம் ஆகலாம்... இறைவன் துணை...
விரைவில் உங்கள் பெயரும் வரிசையில் வந்து ஊசியைப்போட்டுக்கொண்டு நல்லபடியாக இருக்கப் பிரார்த்தனைகள்.
Deleteநம்பிக்கையை கைவிட வேண்டாம்.
ReplyDeleteஎனது பதிவுகள்
என் அழகான நாட்கள்!
https://inaiyaidhazh.blogspot.com/2021/04/en-azhagana-naatkal.html
நன்றி நிலோஷன், கட்டாயமாய் வந்து பார்க்கிறேன்.
Deleteகொரோனா ஊசியா? நலம் பெருகட்டும். சிறு வருத்தங்கள் என்றாலும் உடனே கவனித்து விடுங்கள். நாடும் வீடும் கொரோனாவில் இருந்து விடுபடட்டும்.
ReplyDeleteஎனது பதிவு
https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html
நன்றி சிகரம் பாரதி! கட்டாயமாய் உங்கள் பதிவுக்கும் வரவேண்டும்.
Deleteதடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் சின்ன சின்ன பாதிப்புகள் பெரிதாகாமல் பூரண நலம் பெறவும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி மனோ சாமிநாதன். விரைவில் உங்கள் உடலும் நலம் அடைந்து தடுப்பு ஊசியைப் போட்டுக்கொள்ளும்படி முன்னேற்றம் காணவேண்டும்.
Delete