எழுதலாமா வேண்டாமானு ரொம்ப யோசிச்சு எழுதுகிறேன். இன்னிக்குக் காலம்பரக் கண் மருத்துவரைப் போய்ப் பார்க்கணும்னு சமைச்சு வைச்சுட்டுக் கிளம்பினோம். பத்தரை மணி ஆகி விட்டது. கூட்டம் தான். ஆனாலும் போனதும் உடனே அங்கே உதவிக்கு இருக்கும் பெண்கள் கண்ணைச் சோதித்துப் பார்த்துவிட்டு அவங்க கருத்தை எழுதிட்டு மருத்துவரைப் பார்க்கக் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்தோம். மருத்துவர் பார்த்துட்டுக் காடராக்ட் இன்னும் அவ்வளவு பெரிசாக வரலை. உங்களுக்குக் கண் எப்படித் தெரியுது? என்று கேட்டார். கண்ணாடி போட்டால் கொஞ்சம் பரவாயில்லை என்றும் சில சமயங்களில் கண்ணாடி போட்டாலும் பிரதிபலிப்பு./கண்ணுக்குள் வெளிச்சம், பூச்சி பறத்தல் என இருப்பதைச் சொன்னேன். சரி, ரெடினாவையும் பார்த்துடறேன். டைலேட்டர் போட்டுக் கொண்டு அரை மணி கழிச்சுப் பார்க்கலாம்னு சொன்னார். அதே போல் டைலேட்டர் போட்டுக் கொண்டு அரை மணிக்கும் மேல் (இரண்டு தரம் போட்டுட்டாங்க. ஒரே எரிச்சல் தாங்கலை!) காத்திருந்து பின்னர் போனதுக்கு ரெடினாவில் ஒண்ணும் பிரச்னை இல்லை. காடராக்ட் மிஸ்ட் போலத் தான் இருக்கு இப்போ. போன முறைக்கு இந்த முறை ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. பவர் தான் மாற்றம் கண்டிருக்குனு சொல்லிட்டு அவங்களுக்கு நேரே மீண்டும் கண்ணில் அழுத்தம், பவர் சோதனை எனப் பண்ணிப் பார்த்தார்.
பின்னர் கண்ணிற்கு இப்போது உடனடியாக அறுவை சிகிச்சை தேவை இல்லை. ஒரு மாதத்திற்கு விடமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, கண்ணில் சொட்டு மருந்தும் விட்டுக் கொள்ளுங்கள். அதோடு பவர் வேறே மாற்றம் கண்டிருப்பதால் வேறே கண்ணாடிக்கு எழுதித் தரேன்னு சொல்லிட்டார். அறுவை சிகிச்சை இப்போதைக்கு வேண்டாம். நான் சொல்றேன், எப்போப் பண்ணணும்னு! அப்போப் பண்ணிக் கொண்டால் போதும்னு சொல்லிட்டார். உள்ளூர சந்தோஷம் தான். வீட்டில் பல பிரச்னைகள். தீர்வு காணப் பிரார்த்தனைகள்/ முயற்சிகள். அதோடு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு மாதம் சமைக்க முடியாது என்றும் சொல்கின்றனர். ஒரு நாள்//இரண்டு நாள்னாப் பரவாயில்லை. ஒரு மாசம் வாங்கிச் சாப்பிட்டால் ஒத்துக்கணுமே இரண்டு பேருக்கும் என்று அது வேறு கவலை! எல்லோருமே வயதான்வர்கள். யாரை உதவிக்குனு கூப்பிட முடியும்! அதோடு வேறு சில பொதுவில் சொல்லிக் கொள்ள முடியாத கஷ்டங்கள்! சொல்லப் போனால் நான் மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது பட்ட கஷ்டத்தை விடக் கஷ்டம் இப்போது இருக்காது. 40 வருடங்கள் முன்னர் இப்போதைப் போல் லேசர் சிகிச்சை எல்லாம் இல்லை. அறுவை சிகிச்சை ஆகி உணர்வு வர ஆரம்பித்ததும் வலி வரும் பாருங்க! அந்த மாதிரி வலியை ஆயுளில் அதன் பின்னர் யாரும் பார்த்திருக்க மாட்டாங்க! அப்படி ஒரு வலி! ஒன்றரை நாட்கள் இருந்தது. அதை விட இதில் பெரிதாக வலி எல்லாம் இருக்கப் போவதில்லை.
ஆனாலும் சந்தோஷம் தான். இப்போது அறுவை சிகிச்சை இல்லைனதும். அதை முகநூலில் போட்டேனா! ஏப்ரல் ஃபூல்னு சிலரும், பயந்து கொண்டு நானாக அறுவை சிகிச்சைக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சிலரும் சொல்றாங்க. சொல்றவங்களோட கருத்து அது! அதை என்னால் மாத்த முடியாது. கண் என்னோடது. அதற்குப் பிரச்னைன்னா கஷ்டப் படப் போவதும் நான் தானே! ஆகவே அறுவை சிகிச்சையை வேண்டாம்னு பயந்து கொண்டு சொல்லவெல்லாம் இல்லை. அப்படி நினைப்பவர்கள் நினைச்சுக்கட்டும். :)))))))) வேறே என்ன சொல்லுவது? அவரவர் கருத்து அவரவருக்கு. இப்போதைக்குக் குறைந்த பட்சமாக ஆறு மாசம் அறுவை சிகிச்சை என்பது இல்லை. நடுவில் பிரச்னை வந்தால் உடனே வரச் சொல்லி இருக்காங்க. பிரச்னை இல்லாமல் இருக்கட்டும்னு பிரார்த்தித்துக் கொண்டிருக்கேன்.
ஆஹா அப்ப நிஜமாவே டாக்டர் தான் வேண்டாம்னாரா, sorry தெரியல.எல்லாம் நன்மைக்கே ❤️
ReplyDeleteநன்றி ஏடிஎம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவை இப்போதுதான் பார்த்தேன். அப்பாடா...! இப்போதைக்கு அறுவை சிகிச்சை வேண்டாம் என உங்கள் கண் மருத்துவர் சொன்னது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதுக்கே இத்தனை பரிசோதனைகள் எடுத்து செய்திருக்கின்றனரே.! அந்த நேரத்தில் மனதை தைரியமாக வைத்திருந்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எந்த பிரச்சனையுமின்றி அவர் சொல்லும் நேரத்தில் கண் சிகிச்சை நலமாக நடந்திட வேண்டும். அதுவரையில் உங்கள் கண்களுக்கு எந்த உபத்திரவம் வராமல் நீங்கள் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நமக்கு தைரியம் இல்லையென சொல்கிறவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். நம் உடம்பு நலன், இதர பிரச்சனைகள் நமக்குத்தான் தெரியும். அதனால் கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கள். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, புரிதலுக்கு நன்றி. எப்படியும் இப்போதைக்குக் குடும்ப விஷயங்களில் முழு கவனமும் செலுத்த முடியும். அதுவே ஓர் பெரிய ஆறுதல். நாம் இருக்கும்வரை இவற்றைப் பார்த்துக்கொண்டும், பதில் சொல்லிக் கொண்டும் தானே இருக்கணும். ரொம்ப நன்றி.
Deleteஅறுவை சிகிச்சை வேண்டாம்னு மருத்துவர்கள் சொன்னது உங்களுக்கு பெரிய relief ஆக இருந்திருக்கும் .அவரவர் இடத்தில இருந்தாதான் அவங்களோட பிரச்சினைகள் தெரியும் .சில விஷயங்கள் பொதுவில் தவிர்ப்பது நல்லதுதான்க்கா ..ஹாஹாஹா ஏப்ரல் fool னு நினைச்சாங்களா :) இன்னிக்கு .உறவினர் மகனுக்கு வேலை கிடைச்சின்னு அண்ணி சொன்னாங்க போனில் .அதை இன்னிக்குதானே சொல்லணும் மற்ற நாத்தனார் அதை ஏப்ரல் foolnu நினைச்சி நல்லவேளை அவங்க சொல்லும்போது நானா மறந்தே போனேன் இன்று ஏப்ரல் 1 என்பதை
ReplyDeleteதாற்காலிகம் தான் ஏஞ்சல். ஆனால் அதுக்கே எல்லோரும் நான் என்னமோ பயந்துண்டு அறுவை சிகிச்சையே வேண்டாம்னு சொல்லிட்டதாச் சொல்லிட்டு இருக்காங்க. அது அவங்க கருத்து. ஏப்ரல் ஒன்றாம் தேதி என்பதெல்லாம் பள்ளி, அலுவலக நாட்களோடு போய் விட்டன. இப்போல்லாம் நினைவில் வரதில்லை.
Deleteஅறுவை சிகிச்சை ஒத்திப் போடப்பட்டத்திருப்பபது மகிழ்ச்சி. நானும் முகநூலில் பார்த்தேன். நீங்கள் அப்பாவிக்குக் கொடுத்திருந்த விளக்கத்தையும் படித்தேன். நான் ஏப்ரல் ஃபூல் என்றெல்லாம் நினைக்கவில்லை. இதில் எல்லாம் விளையாடுவார்களா என்ன!
ReplyDeleteஹாஹாஹா, ஶ்ரீராம், நான் எப்போவுமே விளையாட்டுத்தனமாக இருப்பதால் அப்படி நினைச்சிருக்காங்க. அதனால் என்ன? பரவாயில்லை.
Deleteஎப்படியோ அறுவை சிகிச்சை இப்போதைக்கு இல்லை என்பது யாராய் இருந்தாலும் சிறு மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும். உங்கள் பிரச்னைகள் சீக்கிரம் நல்லபடியாய் முடிய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், இப்போதைக்குக் கொஞ்சம் சந்தோஷம் தான். பிரச்னைகள் தீரத்தான் நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteகண் சிகித்சை வேண்டாம்னு சொல்லணும்னால்
அவர் மிக நல்ல வைத்தியர்.
எனக்கு கண் சதை முற்றாதபோதே
அறுவை சிகித்சை செய்து விட்டார்கள்
சென்னை கிளினிக்கில்.
சிங்கம் ஒரு கண்ணில் மட்டும் செய்துகொண்டு இன்னோரு கண்ணுக்கு
மாட்டேன் என்று விட்டார்.
அவருக்குத் தான் அது தேவையாக
இருந்தது.
இந்த மட்டும் தள்ளிப் போட்டார்களே. நிம்மதிதான்.
எல்லாப்
பிரச்சினைகளும் தீர இறைவன் மனம் வைக்கட்டும்.
என்ன செய்யலாம் சொல்லுங்கள் நம்மால்
முடிந்தது அவனைத் தொழுவது ஒன்று தான்.
தைரியமாக இருங்கள்.
வாங்க ரேவதி. என் நாத்தனாருக்கும் கண்ணில் காடராக்ட் சதையை லேசாகத் தெரிந்த உடனேயே அறுவை சிகிச்சை செய்து விட்டார்கள். அதுவும் இரண்டு கண்களுக்கும் பதினைந்தே நாட்கள்.பிரபலமான ஐ கேரில். அப்போதே கிட்டத்தட்ட 2 லட்சம்! நான் சொல்லுவது பதினைந்து வருடங்கள் முன்னர். நான் இணையத்துக்கு வந்த புதுசிலே செய்து கொண்டார்கள். அதிலே கவுன்சலிங் செய்தவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்யலைன்னாக் கண்ணுக்குள்ளேயே வெடிச்சுடும்னு சொல்லி இருக்காங்க.
Deleteபிரச்சனைலாம் வராது. கவலைப்படாதீங்க. கண் அறுவைச் சிகிச்சைலாம் தேவையில்லை என்று சொன்னது ரொம்பவே சந்தோஷம்.
ReplyDeleteஇரு பறவைகள் தனியா இருப்பது எப்போதுமே கஷ்டம்தான். அதிலும் ஏதேனும் உடல் நலம் சார்ந்த பிரச்சனைனா எப்படி சமாளிப்பது என்று. எந்தத் துன்பமும் அண்டாது. ப்ரார்த்தனைகள்
நெல்லை, தேவை இல்லைனு எல்லாம் சொல்லலை. காடார்க்ட் இன்னும் முற்றட்டும். 50 % மாவது இருக்கணும் என்கிறார். இப்போ ரொம்ப லேசாத் தான் இருக்காம். ஆகவே அவசரம் வேண்டாம் என்கிறார். இப்போதெல்லாம் தனிமை என்பது ரொம்பக் கஷ்டமானதா இருக்குக் கொரோனா லாக்டவுன் வந்தப்புறமா! இல்லைனா ஏதானும் கோயில்களுக்குப் போகலாம்.
Deleteஅறுவை சிகிச்சை தள்ளிப்போவது உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே சந்தோஷமாகத்தானிருக்கும்! இருந்தாலும் அதை சந்தித்துதான் ஆக வேண்டும்.
ReplyDeleteபொதுவாய் அறுவை சிகிச்சையில் எந்த வலியும் இருக்காது. எதுவும் தெரியாது. அதற்கு முன் கண்ணோரத்தில் ஒரு ஊசி போடுவார்கள் மரத்துப்போவதற்கு. சில விநாடிகள் வலி கடுமையாக இருக்கும். அவ்வளவு தான் அப்புறம் எங்குமே வலி இருக்காது. கண்களில் ஒரே வண்ன மயமாகத்தெரியும். நான் இரு கண்களிலுமே காடராக்ட் பண்ணியிருக்கிறேன். ஒரு அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. காலை 9 மணிக்கு பண்ணினார்கள். மாலை மூன்று மணிக்கு டிஸ்சார்ஜ் பண்ணி விட்டார்கள். 10 நாட்களுக்குப்பின் சமையலும் செய்யலாம். டிவியும் பர்க்கலாம். இப்போதெல்லாம் காடராக்ட் அறுவை சிகிச்சை ரொம்பவும் சுலபமாகி விட்டது. நான் திருச்சியில் ஜோஸப் மருத்துவமனையில் தான் செய்து கொண்டேன். வெகு அபூர்வமாக சிலருக்கு மீண்டும் காடராக்ட் வளருமாம். அது எனக்கும் வளர்ந்திருக்கிறது. திரும்பவும் ஒரு லேசர் சிகிச்சையும் செய்தாக வேண்டும்.
வாங்க மனோ. வீடு இப்போதிருக்கும் சூழ்நிலையில் அறுவை சிகிச்சை தள்ளிப் போனது சந்தோஷமாகத் தான் இருக்கு! கொஞ்சம் "அப்பாடா!" என்றும் இருக்கு. வலிக்கெல்லாம் பயப்படலை. இப்போது வேண்டாம் என்பது மருத்துவர் முடிவு. மீண்டும் கேட்டதற்கு, "எனக்குத் தெரியும், எப்போப் பண்ணணும்னு!" என்று சொல்லி விட்டார்.
Deleteஎதுக்கும் பொடி வகைகள் பண்ணிவச்சுக்கோங்க. கீதா ரங்கன் அவர் பையனுக்குச் சொல்லித்தருவதுபோல, நீங்க மோர்க்குழம்பு, ரசம்..கூட்டு போன்றவைகளுக்கு இன்ஸ்டண்ட் பொடி தயார் பண்ணி வச்சிக்கிட்டீங்கன்னா, அவசரத்துக்கு மாமாவுக்கு உதவியாக இருக்கும். திப்பிசம் பண்ணறேன்னு அந்தப் பொடிவகைகளை நீங்க உபயோகித்து காலி பண்ணிடாதீங்க.
ReplyDeleteஅப்படி எல்லாம் தேவைப்படாது. அதோடு பொடிவகைகள் எல்லாம் நான் தான் சாப்பிடணும். மாமாவுக்குப் பொடியெல்லாம் பொடி விஷயம். பிடிக்காது.
DeleteDear Geethamma, take care of your eyes and health. Don't worry ma...
ReplyDeleteநன்றி வானம்பாடி!
Deleteநல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteஇப்போதைக்கு அறுவை சிகிட்சை தள்ளி போவது நல்லதுதான்.
ReplyDeleteஅதற்குள் உங்கள் கஷ்டங்கள் சரியாகி வழி செய்து விடுவார் இறைவன். நம்பிக்கையோடு இருங்கள்,
எல்லாம் நடக்க வேண்டிய நேரம் நலமாக நடக்கும்.
முக நூலிலும் படித்தேன். அறுவை சிகிச்சை சமயத்தில் உங்களுக்கு நல்ல கேடரர் அல்லது சமையல்காரர் கிடைக்கட்டும். அப்படியே அந்த மில்லட் ஐஸ் க்ரீம் பற்றியும் எழுதியிருக்கலாம்.
ReplyDelete