நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் இருக்கிறது. எங்கேயோ திக்குத் தெரியாத காட்டில் சுத்திட்டு வந்தாப்போல் எண்ணம். பத்துநாட்களாகக் கடைசி மைத்துனரின் வருஷ ஆப்திக வேலைகள் நெட்டி வாங்கிற்று. அவருக்கு வெளியில் போல் வாங்கவேண்டிய வேலைகள் எனில் எனக்கு வீட்டிற்குள்ளேயே செய்ய வேண்டியவை. இந்தச் சூட்டோடு சூடாகக் கண் மருத்துவரிடமும் போய் அறுவை சிகிச்சை செய்து கொள்ளத் தேதி கேட்டால் அவங்க இன்னும் முத்தட்டும், ஆறு மாசமாவது ஆகணும்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஒரு வழியாக அந்தப் பிரச்னை தீர்ந்தது என்றால் பெரிய மைத்துனரும் ஓரகத்தியும் மும்பையில் இருந்ததால் அவங்க ஆப்திகத்துக்கு வருவாங்களா இல்லையானு கவலை/ பிரச்னை. குடும்பப் புரோகிதரிடம் கேட்டுக் கொண்டு அப்படி அவங்க வர முடியாத பக்ஷத்தில் நாங்களே செய்வதற்கு இயலுமா எனக் கேட்டுச் சொல்லச் சொன்னோம். அவரும் தர்ம சாஸ்திரப் புத்தகங்கள்/ தன்னோட குரு எனக் கேட்டுவிட்டு பெரிய மைத்துனர் அனுமதி கொடுக்கணும், சாஸ்திர ரீதியாக எனச் சொன்னார்.
மும்பையில் ஊரடங்கு வரப் போவதாகச் சொன்னதால் அவரால் அங்கிருந்து கிளம்ப முடியுமா என்பதே பிரச்னையாக இருந்தது. ஆகவே அவரிடம் எதுக்கும் இருக்கட்டும் என வாட்சப், ஸ்கைப் மூலமாக இங்கிருந்து புரோகிதர் சொல்லி அங்கே மும்பையில் மைத்துனர் அனுமதி கொடுக்குமாறு ஓர் ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டாலும் எப்படியேனும் தான் கிளம்பி வரப் பார்ப்பதாகவும் உறுதி அளித்தார். நல்லவேளையாகப் போன ஞாயிறன்று அவங்க சென்னைக்குக் கிளம்பி வந்து பின்னர் சனியன்று இங்கே ஶ்ரீரங்கமும் வந்து விட்டார்கள். மற்ற நாத்தனார்களால் வர இயலவில்லை. வந்த வரைக்கும் போதும். இவர் தானே முக்கியம் என நாங்களும் பேசாமல் இருந்துட்டோம். சமையலுக்கும் மாமி கிடைத்து மூன்று நாட்கள் காரியங்களும் நல்லபடியாக நடந்து முடிந்தன. வந்தவங்களும் திரும்பச் சென்னை போய் விட்டார்கள். இந்தச் சமயம் பார்த்து மும்பை ஊரடங்கு அறிவிப்பால் அனைவரும் மும்பையிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கிறார்களாம். மைத்துனரின் பிள்ளை அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இனி எப்போது மும்பை போக முடியும்னு தெரியலை.
நேற்று சுபம் முடிந்து அனைவரும் கிளம்பிப் போனதும் நாலரைக்கு மேல் நாங்க ஓட்டுச்சாவடிக்குப் போய் எங்க கடமையையும் ஆத்திவிட்டு வந்தோம். கூட்டமே இல்லை. மக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டக் கையுறையை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டுச் சுத்தம்/சுகாதாரம் பேணி இருந்தார்கள். நம் மக்களுக்கு இந்தப் பழக்கம் போகவே போகாது. வாய் கிழியப் பேசுவார்கள். அங்கிருந்தவர்களும் இது குறித்த சிந்தனை இல்லாமலேயே இருந்தார்கள். நான் ஓட்டுப் போட்டு முடிஞ்சதும் போட்டவர் பெயர் வருதானு பார்த்துட்டு இருந்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெளியே இருந்து ஒரு தேர்தல் அதிகாரி அம்மா, வெளியே வாம்மானு கத்தினார். ஆனாலும் நான் பார்த்துட்டுத் தானே வந்தேன். அப்புறமா எங்கானும் மாறிடுச்சுனா ஒரு ஓட்டு வீணாகிடாதோ? இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது தான்! :) இங்கேயும் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு எனச் சொன்னார்கள். இன்று வரை எதுவும் தெரியலை. ஆனால் மஹாராஷ்ட்ராவில் இருந்து சென்னை வர ஈ பாஸ் தேவை. மைத்துனர் பிள்ளை பாஸ் எடுத்துக் கொண்டே வந்திருக்கார். வெளி மாநிலங்கள் எனில் ஈ பாஸ் தேவை போல. பெருகி வருகிறது கொரோனா! விரைவில் அடங்கும் எனச் சொன்னாலும் கவலையும், பயமுமாகத் தான் இருக்கு.
ரஜினிகாந்துக்கு "தாதா சாஹேப் பால்கே" விருது கொடுத்திருக்காங்களாம். ஒரே அமர்க்களம். இதிலே சிலருக்கு ரஜினி தமிழர் இல்லைனும், (எனக்கும்) அதனால் நாம் குதிக்க வேண்டாம் எனவும் கருத்து. பொதுவாக ரஜினி தமிழ்ப்படங்கள் மூலமே பிரபலம் ஆனதால் அவருக்கு விருது கொடுத்திருப்பது தமிழ்த் திரைப்பட உலகையே கௌரவிச்ச மாதிரித் தான். இன்னும் சிலருக்குக் கமலஹாசன் /உல(க்)கை நாயகருக்குக் கொடுக்கலைனு வருத்தமாம். இப்போ அவர் தேர்தலில் நிற்பதால் இப்போ விருது கொடுத்தால்/அறிவித்தால் சரிப்படாது என நினைச்சிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒரு வழியாக மிரட்டிக் கொண்டிருந்த இரண்டு பிரச்னைகளுக்கு அதுவாகவே தீர்வு கிடைச்சிருக்கு. இதான் இறைவன் கருணை என்பது. இனி அடுத்தடுத்து வரும் பிரச்னைகளுக்கும் இப்படியே தீர்வைக் கொடுப்பான் என நம்புகிறேன்.
எங்க பெண்ணிற்கு ஒரு மாசமாக வயிற்றில் பிரச்னை. வாயுக் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்வதில்லை. மோர் குடித்தால் கூட ஜீரணம் ஆகாததோடு ஏப்பமாக வருகிறது. என்ன செய்யறதுனு புரியலை. அவளை இங்கே வா, வந்து மருத்துவம் பார்த்துக்கலாம்னா வர மாட்டேன்னு சொல்லிட்டா. நாங்க போகலாம்னா நேரடியாக விமானம் இருக்கானு தெரியலை. அவ இப்போ வராதீங்க என்கிறாள். என்ன செய்யறதுனே புரியாமல் ஒரே குழப்பம் ஒரு மாசமாக. விரைவில் இந்தப் பிரச்னையும் தீரணும்னு பிரார்த்தித்துக் கொண்டு இருக்கோம்.
அனைத்தும் நல்லபடியாக நடக்க பிரார்த்தனைகள்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஎப்படியோ நல்ல படியாக சிராத்த காரியங்கள்
தங்கள் தீவிர முயற்சியினாலும் அக்கறையாலும்
நல்ல படியாக நடந்தேறி இருக்கின்றன.
ஆத்மா திருப்தியடையும் போது குடும்பத்துக்கும்
நன்மைகள் நிகழும்.
யாரோ எதையோ விருது பெற்றால் நமக்காவதேன்ன அம்மா.
தங்கள் மகள் ஜீரணக் கோளாறு சீக்கிரம் சரியாக வேண்டும்.
மலைக் கோட்டைப் பிள்ளையாரும், சமயபுரத்தம்மாவும்
காப்பாற்றுவார்கள்.
நீங்களே நிறைய மருந்துகள் சொல்லி இருப்பீர்கள்.
குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால்
முதல் வேதனை நமக்குத்தான்.
இறைவன் மிகக் கருணையானவன்.
ராம மந்திரம் காக்கும் அம்மா. கவலை வேண்டாம்.
வாங்க வல்லி. மகளின் ஜீரணக்கோளாறு சரியானால் போதும். எல்லா உம்மாச்சிங்களையும் வேண்டிக் கொண்டாச்சு. உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteஓ... ரொம்ப பிஸியாக இருந்ததால்தான் இணைய வரவு குறைந்துவிட்டதா? எல்லாம் நல்லபடியாக நடந்ததில் சந்தோஷம்.
ReplyDeleteநன்றி நெல்லையாரே!
Deleteரஜினிக்கு விருது கொடுத்ததில், எல்லோருக்கும் சந்தோஷம் வருவதில் ஆச்சர்யம் இல்லை. தேர்தல் சமயமாக இல்லாதிருந்தால், இவருக்கு ஏன் கொடுக்கலை, தமிழர், கன்னடர் என்றெல்லாம் பேசியிருப்பார்கள். தேர்தல் சமயமானதால், அரசியல்வாதிகள், தங்கள் வாக்குகளுக்கு பங்கம் ஏற்படுத்திக்க வேண்டாமென்று அமைதியாகிவிட்டார்கள்.
ReplyDeleteசிலர் 'தமிழர்' என்று குதிப்பதால்தான், நீங்க கொதிக்கிறீங்க போலிருக்கு
ஹாஹாஹாஹா! எனக்கு இந்த விஷயமே ரொம்ப தாமதமாத் தான் தெரியும். வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தேன். :)))))
Deleteஈ பாஸ் வைத்துக்கொள்வது எப்போதுமே நல்லது என்று நினைக்கிறேன். இரண்டாவது டோஸ், நான் சில வாரங்கள் கழித்துப் போட்டுக்கொள்ளணும். சர்டிஃபிகேட் வாங்கி வைத்துக்கொள்ளணும்.
ReplyDeleteஒவ்வொரு தடவை டெஸ்ட் எடுக்கணும்னா 1200 ரூபாய்னு நினைக்கிறேன்.
எங்கேயானும் போறதா இருந்தாத் தானே ஈ பாஸ், எறும்பு பாஸ் எல்லாம்! சும்மா எதுக்கு?
Deleteஒரு கதம்பம் மாதிரி எல்லாவற்றையும் கலந்துகட்டி எழுதி விட்டீர்கள். வருஷாப்தீகம் நல்லபடி முடிந்ததே.. அதுவே மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteஎன் அம்மாவின் திவசம் மார்ச் 27 அன்று நடந்தது. சென்ற வருடமும் அம்மா திவசம் செய்தோம். அப்பா திவசம் கொரோனாவால் விட்டுப்போச்சு. இந்த வருடம் அப்பா திவசம் விடக்கூடாது என்று தீர்மானம். சித்ரா பௌர்ணமி அன்று வரும்.
ReplyDeleteபோன வருஷக் கெடுபிடியிலேயே நாங்க பத்து நாள்க் காரியம் அதன் பின்னர் 11,12,13 ஆம் நாள் காரியங்கள் எல்லாவற்றையும் இறைவன் அருளால் கடந்தோம். இந்த வருஷமும் எல்லாம் அவன் அருளே! உங்கள் அப்பாவின் ஸ்ராத்தமும் நல்லபடி நடக்கப் பிரார்த்தனைகள்.
Deleteஅம்மா திவசம் அன்று ஒரு அறைக்கதவு தானாய் மூடிக்கொண்டு அரைமணிநேரம் திறக்க முடியாமல் அவஸ்தை. உள்ளே யாரும் இல்லை. எனவே திறப்பதில் இன்னும் சிரமம். அம்மாவுக்கு ஏதோ அதிருப்தி என்று தோன்றியது!
Deleteஅந்த அறையில் முக்கியமாய் எதுவும் இல்லை என்றால் அப்புறம் ஏன் மனதுக்கு வருத்தமாய் உணர வேண்டும்?
Deleteவாக்களித்த வைபவம் இங்கும் அமோகமாக நடந்தது. வாக்களித்து வந்து தலைமுழுகியாச்சு! அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொல்லைதான்/ அல்லது தொல்லை இல்லை!
ReplyDeleteஹிஹிஹி, ஶ்ரீராம், நான் வாக்களித்துவிட்டு வந்து படுத்துட்டேன். முதல்லே வாக்களிக்க வரலைனு சொல்லிட்டேன். அவ்வளவு அலுப்பு உடலில். பின்னர் மனசு மாறிப் போய் வாக்களித்து விட்டு வந்தேன்.
Deleteதாதா சாஹேப் பால்கே என்றில்லை, இந்த விருதுகளில் எல்லாம் என்ன இருக்கிறது!
ReplyDeleteதெரியாத, சாதாரண ஆட்களுக்கு எந்த விருதும் உத்வேகம் தரும். மற்றபடி கலைமாமாமணி, தாதா போன்ற எந்த விருதுகளாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
Deleteவருடாவருடம் திரையுலகுக்கான விருதுகள், ஒருவேளை, உருப்படியான வேலை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துமோ என்பது தெரியவில்லை.
அவரவருக்குக் கிடைக்கும் கௌரவம் என நினைப்பார்கள் இல்லையா?
Deleteஇதற்க்கெல்லாம் மதிப்பு போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. வெற்று சம்பிரதாயங்கள்!
Deleteஉண்மை.
Deleteஇந்த வயிற்றுப்பிரச்னை பற்றி சமீபத்தில் நான் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். நம்ப முடியாத சம்பவம். எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
ReplyDeleteஎழுதுங்கள். அதிலிருந்து ஏதேனும் தேறுமானு பார்க்கிறேன்.
Deleteஉங்களுக்கு அது உதவுவது சந்தேகம்தான்!!
Deleteம்ம்ம்ம்ம்ம்ம், பார்ப்போமே!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஉங்கள் கடைசி மைத்துனரின் வருஷாப்திக காரியங்கள் நல்லபடியாக உங்கள் பெரிய மைத்துனரும் உடன் வந்திருந்து நடந்ததற்கு சந்தோஷம். ஒரு வருட காலம் விரைவில் ஓடி விட்டது. போனவர்கள் போனாலும், அந்த மன பாரங்கள் கொஞ்சம் கூட குறையாத வருத்தத்திலும் நாட்கள் அதி வேகமாகத்தான் ஓடுகின்றன. என்ன செய்வது? வருத்தமாக உள்ளது.
இத்தனை பிஸியான வேலைகளிலும் நீங்கள் ஓட்டளித்து விட்டு வந்ததற்கு பாராட்டுக்கள். ஊரடங்கு ஒரு பக்கம், தடுப்பூசி ஒரு பக்கம். என்னவோ எதுவுமே இந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக பயங்களுடன் வாழ்ந்து பழக்கமாகி வருகிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு விருது கிடைத்திருப்பதற்கு மகிழ்ச்சி. அவருக்கும் கண்டிப்பாக மன மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
தங்கள் மகள் தற்சமயம் நலமாகி உள்ளார்களா? உடம்பு சௌகரிமில்லை என்றதும் எனக்கே ஒரு மாதிரி உள்ளது. பின்னே உங்களுக்கு அங்கு போய் அவரை பார்க்க வேண்டும் போல் இருக்காதா? இங்கிருந்து போகும் தூரமும் அதிகம். தற்சமயம் என்ன மருத்துவம் எடுத்துக் கொள்கிறார்? தங்கள் மகள் அதி விரைவில் பூரண நலமடைய நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். சரியாகி விடும். கவலைப்படாதீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம், வருஷாப்திகம் எப்படி நடக்குமோனு!ஒரு மாதிரியா அதையும் நடத்தி முடிச்சாச்சு! ரஜினிக்கு விருது கிடைச்சாலோ/கிடைக்காட்டியோ நமக்கு என்ன வந்தது? ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் ரொம்பவே அலட்டல். மகளுக்கு மெதுவாகக் குணம் ஆகும்னு நினைக்கிறேன்.
Deleteஉங்கள் மைத்துனரின் வருஷாபதிகம் நல்லபடியாக நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
ReplyDeleteவந்தவர்கள் எல்லோரும் நலமாக அவர்கள் இருப்பிடம் போனால்தான் நிம்மதி. மும்பைக்கு ஊர்டங்கு தளர்த்தினால் அல்லவா போகலாம்.
ஓட்டளித்து உங்கள் பேரை பார்த்து விட்டு வந்து விட்டீர்கள்.
மகளின் வயிற்று பிரச்சனைக்கு தேவாரம் நான்காம் திருமுறை பாடல் திரு அதிகைவீரட்டானம் பாடல் பாடி வேண்டிக் கொள்ளுங்கள். வயிற்று தொந்திரவு எது வந்தாலும் மாமனார் பாட சொல்வார்கள்.
கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்று ஆரம்பிக்கும் பாடல்.
மகளின் வயிற்று பிரசனை தீர பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
வாங்க கோமதி, அவள் தினமும் ஞானசம்பந்தரின் பதிகங்கள், ருண நிவாரண ஸ்லோகம் எல்லாமும் சொல்லுவாள். காசெட் போட்டுக் கேட்டுக் கொண்டே சொல்லுவாள். என்னமோ நேரம் சரியில்லை. இன்னமும் சரியாகவில்லை. நானும் நீங்கள் சொன்ன பதிகத்தைச் சொல்கிறேன். பிரார்த்தனைகளுக்கும் செய்திக்கும் மிக்க நன்றி.
Deleteமகளுக்கு இங்கிருந்து சித்த/ஆயுர்வேத/அல்லோபதி மருந்துகள் ஏதேனும் வாங்கி கூரியரில் அனுப்பலாம்.
ReplyDeleteJayakumar
வாங்க ஜேகே அண்ணா. ஆமாம், தெரியும். இப்போத் தான் என் சித்தி பிள்ளையிடம் அவளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அனுப்பினோம்.
Deleteநல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteபதிவின் வழி கலந்து கட்டி பல விஷயங்களைச் சொல்லி விட்டீர்கள். :) நன்று.
நன்றி வெங்கட்.
Deleteஅன்புள்ள கீதாம்மா, சிரார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிந்தது மகிழ்ச்சி. தங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியே நடக்கும். எவ்வளவு வேலையானாலும் நேரத்திற்கு சத்தான உணவும், வெய்யிலுக்கு ஏற்றார் போல குளிர்ச்சியான பழங்களும் , நீராகாரமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteநடிகர்களுக்கு விருது என்பது ஒரு செய்தி. நமக்கு அவ்வளவே போதும். அரசியல் செய்திகளும் இப்பொழுதெல்லாம் பார்ப்பதில்லை. ஜனநாயக கடமையை நம் ஒவ்வொருவரும் நிறைவேற்றிவிட்டதில் ஒரு திருப்தி. தங்கள் மகளின் வயிற்றுக் கோளாறு சரியாகி, எல்லோரும் எல்லா நலமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்கள் மகள் சொன்னது போல, நீண்ட தூர பயணத்தை இவ்வேளையில் தவிர்ப்பதே நல்லது அம்மா.
நன்றி வானம்பாடி. எனக்கு உடம்பு ஒண்ணும் இல்லை. இப்போப் பெண்ணுக்குத் தான் வயிற்றுக்கோளாறு. சீக்கிரம் சரியாகணும். ரஜினிக்கு விருது என்பதில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மகள் கஷ்டப்படுவதைப் பார்த்துப் போகணும்னு தோன்றுகிறது. அவள் தற்சமயம் வரவேண்டாம் என்கிறாள். எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும். மிக்க நன்றி.
Deleteவாட்ஸப்பில் ஆயிரம் செய்திகளை பகிர்ந்தாலும் இன்னும் விழிப்புணர்வை உணராமல் ஷேர் மட்டும் செய்யும் மக்கள் கூட்டம் குப்பையை ரோட்டில் வீசுவதில் வியப்பிலைக்கா
ReplyDeleteவாங்க ஏஞ்சல்! குப்பையோ குப்பை! கண்ணால் பார்க்கச் சகிக்கலை. நாம் கேட்டால் முறைக்கிறார்கள். :(
Deleteஅதற்குள் ஒரு வருடம் ஓடிடுச்சா ..வருஷ ஆப்திக விஷயங்கள் நல்லபடியா முடிசிருக்கீங்க அதுவும் இந்த கொரோன காலகட்டத்தில்.ஆபரேஷன் நடக்கும்போது நடக்கட்டும் .ஒரு விருதுக்கு இத்தனை அக்கப்போரா :) அவரை நான் ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன்க்கா .
ReplyDeleteஆமாம், அதுக்குள்ளே ஒரு வருஷம் ஓடி விட்டது தான். ஆபரேஷனைத் தள்ளித் தான் போட்டிருக்காங்க. இல்லைனு எல்லாம் சொல்லலை. ரஜினியை நான் ஓர் நடிகராய்க் கூடப் பார்ப்பதில்லை. தேடிப் பிடிச்செல்லாம் ரஜினி படம்/விஜய் படம்னு பார்ப்பதில்லை.
Deleteஉங்க பொண்ணுக்கு சொன்ன பிரச்சினை எனக்கும் இருந்தது. It could be hyper acidity. I'm not a doctor, ஆனா இயற்கை தீர்வுகள் முயற்சித்து பார்ப்பதில் தப்பிலைனு நினைக்கிறேன். A naturopathy doctor told me this
ReplyDeleteRemedy 1:மாதுளம் பழம் ஜூஸ் வெறும் வயிற்றில் எடுக்க சொல்லுங்க. No water sugar added. Just blend the seeds, filter and drink. Ask her to do it daily for 2 weeks, can see good improvement
Remedy 2 : before sleep at night, நாலு சொட்டு நல்லெண்ணெய்ல கடுகு தாளித்து மோர்ல கொட்டி அப்படியே முழுங்க சொல்லுங்க. This will increase alkaline in body and get rid of acidity issue. மாத்திரை மருந்து எல்லாம் temporary தான், இதான் நிரந்தர தீர்வு.2 weeks இதை முயற்சி பண்ணி முடியலை என்றால் doctor பாக்கட்டும். Hope this helps
வாங்க ஏடிஎம், மாதுளை ஜூஸ் ஏற்கெனவே நான் பலமுறை சொல்லிட்டேன். திரும்பவும் சொல்லி இருக்கேன். இரவில் கடுகு தாளித்த மோர் குடிக்கச் சொல்வது மட்டும் புதுசு. அதையும் சொல்லி இருக்கேன். செய்து பார்க்கட்டும்!
Deleteஉங்கள் மகளின் பிரச்சினை சீக்கிரம் சரியாகிடும் .மருத்துவரிடம் கன்சல்ட் செய்து உணவு முறையில் மாற்றம் ஏதாச்சும் செய்யணுமான்னு விசாரிக்க சொல்லுங்க .ரொம்ப முக்கியம் மூன்று வேளையும் கொஞ்சமாச்சும் சாப்பிடணும் .
ReplyDeleteஉணவே இல்லை ஏஞ்சல்! வெறும் புழுங்கலரிசிக் கஞ்சி தான்! நீர்க்க! அதுவும் அரைத் தம்பளர் தான்! என்னவோ பிரச்னைகள்/கவலைகள்! விரைவில் ஆகாரம் சாப்பிடும்படியான நிலைமை ஏற்படணும்.
Deleteஇந்தப் பத்திரிகைகள் தலையில் வைத்துக் கொண்டு ரொம்பவும் ஆடியிருக்காவிட்டால் இன்னும் எத்தனையோ ஜென்மங்கள் ஆகியிருக்கும் ..
ReplyDeleteவாங்க துரை. உண்மை தான்!
Deleteதங்கள் மகளுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்றுக் கோளாறு விரைவில் குணமாகிட இறீவன் அருள் புரிவானாக..
ReplyDeleteமிக்க நன்றி துரை.
Deleteகீசாக்கா நீங்க தூங்கி எழும்பியதைப்போல தெரியல்லியே.. இன்னும் தூக்கத்திலதான் இருக்கிறீங்கள்!!:).
ReplyDeleteமகள் முதலில் டொக்டரிடம் போய் அனைத்து ரெஸ்ட்டுகளும் செய்தபின்னர் தான் ஹோமியோபதி வைத்தியமோ இல்லைக் கை வைத்தியமோ செய்வது நல்லது.
கவலைப்படாதீங்கோ, இக்காலத்தில் வயிற்றில் வாயுக்கோளாறு என்பது கொமனான ஒன்றுதான்... பெருங்காயக் கட்டியைக் கடிச்சு சுடுநீருடன் சாப்பிடச் சொல்லுங்கோ.. வாய்வு எனில் உடனே பலன் தெரியும், இது நான் செய்யும் மருந்து.. எல் ஜி பருங்காயக் கட்டிதான், கொஞ்சம் பெரிய துண்டாக கடிச்சுச் சாப்பிடுவேன், வயிறு இலேசாகிவிடும்.
வாங்க அதிரடி, எப்போவோ வரீங்க!ரொம்ப பிசி போல யூ ரியூபில்! :)))) மகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவரிடம் காட்டிப் பரிசோதனைகள் செய்து கொண்டு தான் இருக்கிறாள். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகும் என நம்புகிறேன்.
Deleteஅன்புள்ள கீதாம்மா, தங்களின் "அத்திமலைத் தேவன்" பதிவிற்காக காத்திருக்கின்றேன்.
ReplyDeleteம்ம்ம்ம்ம், சிலருக்குப் பிடித்தது; பலருக்குப் பிடிக்காதது.
Delete