இந்த முறை இரண்டாம் சுற்று கொரோனா புதிய விதத்தில் தாக்குவதோடு இல்லாமல் பலரையும் கொள்ளை கொண்டு போகிறது. எங்கள் உறவின் சுற்று வட்டங்களிலேயே இள வயதுக்காரர்கள் சிலர் இந்தப் புதிய கொரோனா தாக்கத்தில் உயிர் இழந்து விட்டனர். எங்க சுற்றத்தில் ஓர் இளைஞன் இன்று காலை கொரோனா தாக்குதலில் உயிர் இழந்து விட்டார். அதைத் தவிரவும் அம்பத்தூரில் சிநேகிதர் ஒருவரும், பெண்களூரில் தெரிந்த ஓர் பெண்மணியும் இறந்துவிட்டார்கள். அனைவருக்குமே 55 வயதுக்குக் கீழே! அதிலும் அம்பத்தூரில் இருந்த பெண்ணிற்கு லேசாகக் காய்ச்சல் வந்து அந்தப் பெண் உதவி கலெக்டர் என்பதால் தானே கிங் இன்ஸ்டிட்யூட் போய் மருத்துவமனையின் உள் நோயாளியாகச் சேர்ந்து கொரோனா சோதனைக்குக் கொடுத்து அது பாசிடிவ் என வரும் முன்னரே செத்து விட்டார். என்ன கொடுமை இது! ஒண்ணும் புரியலை. ஒரு வாரமா மனசே சரியில்லை. இத்தனை நாட்கள் வீட்டில் ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதானும் வேலை இருந்து கொண்டே இருந்தது. அது பரவாயில்லை போல இருக்கு! இப்போதைய நிலைமையை நினைத்தால் ஒண்ணும் சொல்லுவதற்கு இல்லை. மனசு நிறைய வேதனை தான் மிச்சம்.
இறந்த அந்தப் பையருக்கு 80 வயதில் வயது முதிர்ந்த தாய் இருக்கிறார். மிகவும் முடியாதவர். அழக்கூடத் தெம்பில்லாமல் உட்கார்ந்திருக்காராம். இந்த வயதில் புத்திர சோகம்! உலகில் எத்தனையோ கொடிய நோய்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது உலகை ஆட்டிப் படைப்பது போல் வேறே ஏதும் ஆட்டிப்படைக்கவில்லை. இதிலிருந்து நமக்கு எப்போது விடிவு? மனச்சோர்வு தான் அதிகம் ஆகிறது. யாரைக் குற்றம் சொல்லுவது? பாதுகாக்கும் ஏற்பாடுகளைப் புறக்கணித்து நமக்கு நாமே தேடிக்கொண்ட வினை இது!
என்ன சொல்ரதுன்னும் தெரில .செய்திகளை பார்க்கவும் கண் மறுக்குது .பயம்மா இருக்கு .இளவயதினருக்கே வருதுன்னா அது மிகவும் வீரியம் வாய்ந்த வகை என்று நினைக்கிறேன் .எல்லாம் மக்கள் பொறுப்பற்றத்தன்மையினால்தானே .தயவுசெய்து கவனமா இருங்க எதற்கும் வெளில போகாமல் பொருட்களை ஆன்லைனில் வாங்கி யூஸ் பண்ணுங்க பத்திரமா இருங்க . .
ReplyDeleteவாங்க ஏஞ்சல். தினம் தினம் தொலைபேசியை எடுக்கவோ/கேட்கவோ இப்போது அச்சமாக இருக்கிறது. இத்தனை கொடுமையான நோயையோ, மரணங்களையோ இதற்கு முன்னர் பார்த்திருக்கவே மாட்டோம். :(
Deleteபத்து வயது கூட நிரம்பாத குழந்தைக்கு கொரொனா தொற்று என்று வாட்சப் செய்தி வருகிறதே? நம்பலாமா?
Delete@அப்பாதுரை, பத்தொன்பது நாள் குழந்தை கொரோனாவினால் இறந்ததாகச் செய்தி! :(
Deleteவேகம் கொண்டு ஆடுகிறது. பயமாய் இருக்கிறது. பணிக்குச் சென்று வரவே அச்சமாக இருக்கிறது.
ReplyDeleteஆமாம் ஶ்ரீராம், உங்களைப் போன்ற வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்னும் பணியாளர்களுக்கு ரொம்பவே கஷ்டம் தான்! :( கடமையையும் புறக்கணிக்க முடியாது.
Deleteஒரு எண்பது வயது முதியவர் தான் வாழ்ந்து முடித்து விட்டதாகவும், எல்லாவற்றையும் பார்த்து விட்டதாகவும், தனக்கு பதில் ஒரு இளைஞருக்கு அந்தத் படுக்கையைக் கொடுக்க வேண்டி தான் வெளியேறுவதாக சொல்லி இருக்கும் ஆங்கிலச் செய்தித்தாள் செய்தி எங்கள் குடும்பத்தில் பகிரப்பட்டு விவாதப்பொருளானது.
ReplyDeleteஆமாம், நானும் கேள்விப் பட்டேன்.
Deleteஅது fake செய்தி. அந்த ஆஸ்பத்திரியில் எமெர்ஜென்சிக்கு என்று 4-5 படுக்கைகள் எப்போதுமே இருக்குமாம்.
Delete@நெல்லை! ஓஹோ!
Deleteசுகுமார் மகன் ஏற்கெனவே படும் பாட்டில் இப்போது அவருக்கே பாசிட்டிவ் வரும் சூழல். டெஸ்ட் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பார்த்துக்கொள்ள ஆள் கிடையாது. ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடையாது. என்ன ஆகுமோ என்கிற கவலை வாட்டுகிறது.
ReplyDeleteகவலையாகத் தான் இருக்கிறது. இப்போதெல்லாம் யாரும் வீட்டுக்கு வந்தாலே அச்சப்பட வேண்டி இருக்கிறது. இங்கே அநேகமான காடரிங்காரர்கள் தங்கள் சேவையை முழுக்க முழுக்க நிறுத்திவிட்டார்கள். இதனால் பாதிக்கப்படப் போகிறவர்களை நினைத்தால் ஒரு பக்கம் கவலையாயும் இருக்கு.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஅம்பத்தூர் சமாசாரம் பயம் கொடுக்கிறது. உங்க சகோதரர்களைப் பத்திரமாக
இருக்கச் சொல்லுங்கள்.
இந்தப் புது வைரஸ்
பயங்கரமாக இருக்கிறது.
மாஸ்க், கை கழுவுதல் எல்லோரும் செய்து கொண்டு இருந்திருந்தால்
எத்தனையோ தப்பி இருக்கலாம்.
நம் ஊர்க் கூட்டத்தைப் பார்த்தால்
கொஞ்சம் மனம் பேதலிக்கிறது.
இறைவன் துணை.
வாங்க வல்லி, அண்ணா, மன்னி இப்போது அம்பத்தூர் வீட்டில் இல்லை.கே.கே.நகரில் பெண் வீட்டில் தங்கி இருக்காங்க. நம் ஊர்க்கூட்டம் எதற்கும் அசைந்து கொடுக்காதது. என்ன சொன்னாலும் அலட்சியம் தான். :(
Deleteபாதுகாக்கும் ஏற்பாடுகளைப் புறக்கணித்து நாமே தேடிக்கொண்ட வினை இது - ஓரளவு உண்மைதான்.
ReplyDeleteஆனால் ரொம்பவே பாதுகாப்பாக இருந்தவங்களுக்கும் வந்திருக்கே. அதுதான் ரொம்பவே கவலையை உண்டாக்குது.
வாங்க நெல்லை! பாதுகாப்பாக இருந்திருந்தாலும் வீட்டிற்கு வந்து/போகும் நபர்களால் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். என்னனு சொல்ல முடியும்! :(
Deleteஅதே கீதாக்கா...அக்கா நீங்கள் இருவரும் கவனமாக இருங்க. வீட்டிற்கு உதவிக்கு வருபவர் வரும் போது நீங்கள் இருவரும் தள்ளியே இருங்க...மாஸ்க் போட்டுக்கோங்க....உணவு கொண்டு வருபவரை க்ரில் பக்கம் வைத்துவிட்டுப் போகச் சொல்லுங்க....வெளியில் போவதை தவிருங்கள்.
Deleteஅதுவும் முதல் டோஸ் போட்டாச்சு இல்லையா...ரொம்ப கவனமா இருங்க இரண்டாவது போட்டப்புறமும் ஒரு மாதம் குறிப்பாக முதல் 15 நாள் ரொம்பக் கவனமா இருங்க கீதாக்கா அண்ட் மாமா
கீதா
வாங்க தி/கீதா, கவனமாகத் தான் இருக்கோம். நேற்றில் இருந்து காய்/இலை/பழம்/பூ வாங்கப் போய்க் கொண்டிருந்தார். அதையும் வேண்டாம்னு சொல்லியாச்சு. கவனமாகவே இருக்கோம்.
Deleteஇங்கேயே பழமுதிர்ச்சோலையில் தொலைபேசியில் சொன்னால் காய், கனிகளை வீட்டுக்குக் கொண்டு வந்து தராங்க. அப்படித் தான் வாங்கறோம் இப்போ!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவை படிக்கையில் மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது..!! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த கொரானா காலகட்டம் எப்படியெல்லாம் மக்களை ஆட்டி வைக்கிறது. நீங்கள் குறிப்பிட்டவர்களை எண்ணும் போது மனது மிகவும் வேதனையடைகிறது. கடவுள்தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும். கஸ்டமோ, நஷ்டமோ அவனிடந்தான் முறையிட வேண்டும். வேறு வழி...?
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அனைவருமே நன்கு தெரிந்த/அறிந்தவர்கள். சுறுசுறுப்பானவர்கள். பழக இனிமையானவர்கள்! கொரோனா பலி வாங்கி விட்டது! :(
Deleteஇரண்டாவது அலையின் தாக்கம் அதிகம் தான். நாள்தோறும் கேட்கும் செய்திகள் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஎன் பேத்தியின் நடன குரு கொரோனாவிற்கு பலியாகி விட்டார், அவர் பொறுப்பில் வயதான தாய் தந்தை இருந்தார்கள் அவர்களின் கதி!. சிறு வயது மரணங்கள் மனச்சோர்வைதரும் தான் கேட்கும் போது.
வாங்க கோமதி, நீங்க சொல்வதுபோல் இளவயதுக்காரங்க இறந்துவிட்டால், பெற்றோரின் கதி என்னவாகும்? நினைக்கவே கவலையும் வேதனையும் தான். எனக்கு இந்தச் செய்திகள் எல்லாம் மிகுந்த மனச்சோர்வைக் கொடுத்து விடுகின்றன.
Deleteஆஆஆஆஅ ஒவ்வொன்றைக் கேட்க வாசிக்க வாசிக்க கதி கலங்குது. கடவுளே எல்லாரும் நல்லாருக்கணும்
Deleteகீதா
அதே! அதே! தி/கீதா! அதான் பிரார்த்தனை!
Delete
ReplyDeleteஆண்டவனுக்கு கண்ணில்லை என்பதை விட மனிதன் தன் அறிவை பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை
உண்மைதான் மதுரைத் தமிழரே! அதையே தான் நானும் சொல்லி இருக்கேன். மக்கள் திருந்தணும்.
Deleteகவனம் கவனம் கவனம்..
ReplyDeleteநிலவரம் மிகவும் கவலை தருகிறது.
கவனமாக இருங்கள்.
வாங்க அப்பாதுரை! இறந்தது சாருவின் தம்பி சுரேஷ்! :( சாருவின் அம்மா துடிக்கிறார். :(
Deleteஇங்கும் அவ்வாறே... மனம் முழுக்க ரணமும் பலவித குழப்பங்களும்...
ReplyDeleteஆமாம் திரு தனபாலன். குழப்பங்களும், கவலைகளுமே நிறைந்ததாக வாழ்க்கை மாறி விட்டது! :(
Deleteகீதாக்கா மனிதர்களுக்குத்தான் புத்தியில்லை. ஆண்டவன் கொடுத்ததை பாதுக்காக்க வேண்டியது நம் கடமை இல்லையா?
ReplyDeleteஇளைஞர்கள் பலரும் சுற்றி வருகிறார்கள் எஞ்சாய்மென்ட் என்ற பெயரில் அதுவும் இந்தவ் வேளையில். என்ன சொல்ல?
ரொம்ப வேதனையாக இருக்கிறது கீதாக்க உங்கள் இந்தப் பதிவை வாசித்ததும் ஏனென்றால் கணினி, மொபைலில் கூட நான் செய்தி பார்ப்பதே இல்லை. மனம் தைரியம் பெறவில்லை. அதுவும் சிறியவர்கள் இறப்பது பெரியவர் அதுவும் வயது முதிர்ந்த அம்மா ஹையோ...என்ன சொல்ல?
நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். இது கண்ணிற்குத் தெரியாமல் உலகையே ஆட்டிப் படைக்கிறது.
கீதா
ஆமாம், தி/கீதா. உலகையே ஆட்டிப் படைக்கிறது. விதம் விதமாக! என்ன செய்தால் போய்த் தொலையும் என்பதே புரியலை! ஒரே கவலையாயும் மீண்டும் நல்ல நாட்கள் வராதா என ஏக்கமாயும் இருக்கு.
Deleteஇறைவன்/கடவுள் என்ற பெயரை கான்செப்டை விடுங்கள்,,நமக்கு மிஞ்சி ஒரு சக்தி என்ற பொருளில் கூட அர்த்தம் செய்துகொள்ளாமல் நம்பாதவர்கள் இருக்கிறார்கள் அது போல கொரோனாவையும் நம்பாதவர்கள் பலர் ...இது இயற்கையாக விளைந்ததோ இல்லை உருவாக்கப்பட்டு விடப்பட்டதோ அந்த விவாதம் அவசியமில்லை ஏனென்றால் பயனில்லை.
ReplyDeleteபகலில் நட்சத்திரம் தெரிவதில்லை என்பதால் வானில் நட்சத்திரமே இல்லை என்று சொல்ல முடியுமா அது போலத்தான் இறைவனும் என்று ராமகிருஷ்ணர் சொன்னது போல கொரோனா கண்ணிற்குத் தெரியவில்லை என்பதால் கொரோனா இல்லை கட்டுக்கதை, உடான்ஸ், அரசியல் என்று சொல்லி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளாமல் கேரியராக இருந்து பரப்புபவர்கள் இருக்கும் போது என்ன சொல்ல?
அது போல படித்தவர்களே தங்களுக்குக் கொரோனா என்று தெரிந்தும் வெளியில் சென்று வருபவர்களை பரப்புபவர்களை என்ன சொல்லுவீங்க? கும்பமேளா, தேர்தல் கூட்டத்தைத் திட்டனவ்ர்களே இப்படிச் செய்யும் போது..? என்ன சொல்ல முடியும்?
கீதா
ஆமாம், கொரோனா ஒன்று இல்லை எனச் சொல்லுபவர்கள் சொல்லிக் கொண்டு தான் இருக்காங்க. இத்தனை சாவுக்கு அவங்கல்லாம் என்ன சொல்லப் போறாங்களோ! நீங்க சொல்வதும் சரியே! படிச்சவங்க தான் அதிகம் ஊர் சுத்தறாங்க எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல்.
Deleteபதிவின் செய்திகள் மனதை அழுத்துகின்றன... மக்கட் பணியில் எல்லாவற்றுக்கும் உள் நோக்கம் பேசிக் கொண்டு திரிகின்றார்கள்.. ஏது சொல்லியும் கேட்பதில்லை... எதற்கும் அடங்குவதில்லை..தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்தது என்பார்கள்..
ReplyDeleteஇப்படியான மனிதர்கள் கொடுநோயை விடக் கொடுமையானவர்கள்...
மகாகவி இப்போது இருந்திருந்தால் மனம் நொந்து வாடியிருப்பார்...
கல்விச் சிறந்த தமிழ் நாடா இது!?...
வாங்க துரை! ஆமாம். மக்களுக்குக் குற்றம், குறை கண்டுபிடிக்கத் தெரிந்த அளவுக்கு நாம் எத்தனை நியாயமாக நடந்து கொண்டோம் என்பதே தெரியறதில்லை. என்ன சொன்னாலும் மாஸ்க் போடாமல் சத்தமாகக் கத்திக் கொண்டு/கூட்டத்தில் இடித்துக் கொண்டு.
Deleteரொம்பவும் வருத்தமாகவும் பயமாகவும் இருக்கிறது கீதா! கொஞ்சம் தாமதித்து மருத்துவ மனைக்கு சென்றவர்கள் எல்லாம் மரணமடைகிறார்கள். யாருக்காவது மூச்சு திணறுகிறது என்றாலே பயமாக இருக்கிறது.
ReplyDeleteஎன் சகோதரி மகனைப்பற்றி சொன்னேனல்லவா, அவரோடு அவர் மனைவியும் சேர்ந்தே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்களும் அங்கேயுள்ள என் கொழுந்தனாரும் சேர்ந்து தான் இந்த செலவுகளை ஏற்றுக்கொன்டிருக்கிறோம். இதுவரை, 8 லட்சம் ஆகி விட்டது. இத்தனை செலவு செய்ததற்கு பலன் கிடைக்க வேண்டுமே என்பது தான் இப்போதைய பயம். என் சகோதரி மகன் இன்னும் ஐ விட்டு வெளி வரவில்லை. இப்போது தான் நடக்கப்பழக்கி வருகிறார்கள். நடந்தால் இன்னும் சிறிது மூச்சு வாங்குகிறது. வீட்டில் 78 வயது அம்மா, 100 வயது பாட்டி, பத்தாவது படிக்கும் மகன் எல்லோருக்கும் சரியான பதில் எங்களுக்கு சொல்லத்தெரியவில்லை.
வாங்க மனோ! உங்க அக்கா மகன் விரைவில் பூரண குணம் அடைந்து வீட்டிற்கு வரப் பிரார்த்திக்கிறோம். கவலையும்/பயமும் கொண்ட இந்த நாட்கள் விரைவில் கடந்து அமைதியும்/மகிழ்ச்சியும் வந்தடையப் பிரார்த்திக்கிறோம். கணவன், மனைவி இருவருமே விரைவில் குணம் அடையப் பிரார்த்தனைகள்.
Deleteநிலைமை கட்டுக்கடங்காமல் போய்கிட்டு இருக்கு.கேக்கற எதுவும் நல்லதா இல்ல. இதுவும் கடந்து போகும் என நம்புவோம் 🙏
ReplyDeleteஒண்ணுமே புரியலை ஏடிஎம். கொரோனா மாதிரி எந்த வியாதியும் இப்படித் தொடர்ந்து இருந்து மனிதர்களைப் பாடாய்ப் படுத்தியது இல்லை. :( இரண்டாவது வருடமாக அனுபவிக்கிறோம். அந்தக் கடவுள் தான் இதை எல்லாம் சரியாக்கணும்.
Deleteபயமே மூல காரணமோ என்னவோ
ReplyDeleteபயத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
Deleteபேப்பர் படிப்பதைக்கூட நிறுத்திவிட்டேன். மனது மிகவும் கஷ்டப்படுகிறது.அன்புடன்
ReplyDeleteஆம் அம்மா, உண்மைதான். தினசரியைப் புரட்டக் கூடக் கஷ்டமாக இருக்கு.
Deleteஇளைஞர்களை மோசமாக தாக்குகிறது என்பது அச்ச மூட்டுவதாக இருக்கிறது. ஸமஸ்த லோகா சுகினோ பவந்து என்று வேண்டலாம்.
ReplyDeleteஇனி அக்டோபரில் வரப்போகும் மூன்றாவது அலையில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆபத்து ஏற்படலாமாம். சிறிது நேரம் முன்னர் வந்த செய்தி! :(
Deleteஏற்கனவே கமெண்ட் போட்டுவிட்டதாக நினைத்து இங்கு மீண்டு வந்து தேடிப்பார்க்கிறேன் இன்று!
ReplyDeleteஎந்த மெடிக்கல் ப்ரச்னையோடு எந்த டெஸ்ட்டிற்கு யார் போனாலும், ’கொரோனா பாஸிட்டிவ்’ என ரிப்போர்ட் கொடுத்துவிடுவது நமது ‘மெடிக்கல் கல்ச்சர்’ ஆகிவருகிறது - டெல்லியில் குறிப்பாக, சில மருத்துவ நிலையங்களில் இதையெல்லாம் ஊர்ஜிதப்படுத்திவிட்டுத்தான் இதை எழுதுகிறேன். இந்தியாவில் எல்லோருக்கும் வியாதி.. கொரோனா வியாதி ... நாடே செத்துக்கொண்டிருக்கிறது என்று மருத்துவர்களையே விட்டுச் சொல்ல்ச் சொல்லிவிட்டால், எல்லோரும் நம்பிடுவான்க.. ஊசிப்போன நம்ப மருந்துகள் எல்லாம் நெறய விக்கும், பில்லியனில் டாலர் பண்ணலாம் என்கிற மேலைநாட்டு மருத்துவப் பெருவணிக லாபியின் குள்ளநரித் தந்திரங்களும் இந்த மெடிக்கல் ரிப்போர்ட்டுகளில் சேர்ந்திருக்கலாம்..
இதுபோன்ற, ஒட்டுமொத்த தேசநலன் சம்பந்தப்பட்ட விஷயங்களை, வெறும் புரளிகள் என அலட்சியப்படுத்தமுடியாது. இந்தியாவுக்குப் பிரதான எதிரிகள் என்பது, நமது அறிவுசீவிகளும், அவர்களைக் கண்மூடித்தனமாக நம்பும் கோமாளிகளும், அவர்களுக்குக் கொம்பு சீவிவிடும் வெளிநாட்டு ஓநாய்களும்தான் - பலவிஷயங்களில், என்பது இந்தக் காலகட்டத்தின் நிதர்சனங்களில் ஒன்று.
வாங்க ஏகாந்தன், நீங்க சொல்வதும் சரிதான். ஆனால் இந்த ஊசிகளை மோதி வெளிநாட்டுக்கு அனுப்பியதால் தான் உள்ளூரில் கிடைக்கலைனு சொல்பவர்கள் எல்லோருமே முதலில் ஊசி போட்டுக்கொள்ள மாட்டோம் என்று சொன்னவர்களே! அதோடு ஜெர்மன் போன்ற வெளிநாடுகளிலேயும் ஊசி போட்டுக்கொள்ளப் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கத் தான் வேண்டி இருக்கு! ஆனாலும் செய்தி சானல்கள் இந்தியாவின் கஷ்டத்தைத் தான் முன்னெடுத்துச் சொல்லி, "அரசின் தவறு/இயலாமை!" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
Delete