எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 05, 2021

ஜெயிக்கப் போவது யாரு? வாயுவா? வருணனா?

ஈசானிய மூலையில் நன்கு கறுத்து மேகங்கள் திரண்டிருக்கின்றன. வாயு பகவான் அதைக் கலைக்கப் பார்க்கிறார். அசோகா மரம் முடிந்த வரை வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. நம்ம வீட்டு ஜன்னலில் வந்து மோதுகிறது. முன்னே இந்த வீட்டுக்கு வந்த புதுசில் அதைக் காமிராவில் வீடியோவாக எடுத்துப் போட்டிருந்தேன். அது இப்போது வேலை செய்யவில்லை. மொபைலில் எடுத்தால் சரியாக வருவதில்லை. நேற்றுக்  கொஞ்சம் தொடர்ச்சியாகச் சிறு தூற்றல் விடாமல் இருந்ததால் பூமி கொஞ்சம் குளிர்ந்து விட்டது. ஆகவே எப்போதும் போல் சூடு/வியர்வை இல்லை.  இப்போ மழை வரும் வரும் என பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் காற்றுக் கலைக்கப் பார்க்கிறது. யார் ஜெயிப்பார்கள் எனத் தெரியவில்லை.  வருண பகவான் ஜெயிப்பாரோ எனத் தோன்றுகிறது.

கூடை.காம் என்றொரு தளத்தில் கீரை வகைகள், காய்கறிகள் பசுமையுடன் கொடுப்பதாகவும் வீட்டிற்குக் கொண்டு வருவார்கள் என்றும் விளம்பரம் முகநூலில் பார்த்துவிட்டு அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டு நேற்றுக் காய்கள்/கீரை வகைகள் தேவை எனச் சொன்னோம். அவங்க அலுவலகமும் இங்கேயே தான் அம்மாமண்டபம் சாலையில் இருக்காம். ஆனால் காய்கள் எல்லாமே அரைக்கிலோ வாங்கணுமாம். அரசாங்க உத்தரவு என்கிறார்கள். இப்படி எல்லாம் அரசாங்கம் கட்டாயப்படுத்த முடியுமா தெரியலை. எனக்கு அரைக்கிலோ கொத்தவரை நான்கு நாட்களுக்கு வரும். முற்றலாகக் கொடுத்திருக்கிறார்கள். முருங்கைக்கீரை இல்லையாம். முளைக்கீரை வந்தது. மேலேயே வதங்கினாற்போல் இருந்தது. உள்ளேயும் அழுகல் நிறைய. நான் கீரைக்கட்டைப் பிரித்து உதறிவிட்டு ஆய்ந்து புழு, பூச்சி, மற்றக் கீரைகள், புல் போன்றவற்றைப் பார்த்து அகற்றி விட்டே நறுக்குவேன். ஒரு கட்டுக்கீரையில் கழித்தது போகக் கொஞ்சம் தான் இருந்தது. ஆனால் மசித்ததும் சாப்பிடுகையில் ருசியாக இருந்தது.

உருளைக்கிழங்கு/வெங்காயம் ஒரு கிலோ தான் கொடுப்பார்களாம். அரைக்கிலோ சொன்னால் ஒரு கிலோ கொடுத்திருக்கிறார்கள். இனிமேல் அங்கே வாங்குவதில்லை. கடைகள் திறந்ததும் நம்ம வழக்கமான பழமுதிர்ச்சோலையிலேயே வாங்கிக்கலாம்னு முடிவு எடுத்துட்டோம். அங்கே ஐந்து ரூபாய்க்குப் பச்சை மிளகாய், ஐந்து ரூபாய்க்குக் கருகப்பிலை, கொத்துமல்லி கொடுப்பார்கள். அதைத் தவிர நிறையக் கொத்துமல்லி இருந்தால் காய்களுடன் கொசுறுவாகவும் வரும். கால் கிலோ கொத்தவரை, அவரை, பீன்ஸ் வாங்கலாம். கால் கிலோ பாகற்காய் வாங்கிக்கலாம். இங்கே எல்லாம் ஒரு பதினைந்து நாட்களுக்கு வரும்படி கொடுத்துட்டாங்க. இதை வைத்து நான் ஒரு சின்னக் கல்யாணத்துக்கே சமைச்சுடுவேன்! 

ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். முக்கியமாய் எலக்ட்ரிஷியன், மெகானிக்குகள் போன்ற சுயச் சார்புத் தொழிலாளிகள் வேலை செய்யலாம் என்று சொல்லி இருப்பது ஒரு பெரிய நிம்மதி. தெரிந்த ஒரு குடியிருப்பு வளாகத்தில் இரு லிஃப்டுகளும் வீணாகிக் கம்பெனியில் ஏஎம்சி இருப்பதால் கம்பெனி மெகானிக்கைக் கூப்பிட்டும் அவரும் கம்பெனி அடையாள அட்டையோடு வந்தும் போலீஸ் திருப்பி அனுப்பி விட்டது. மத்தியானமா மறுபடி அவர் முயன்றிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் போய் மாலை ஆறுமணி வரை உட்கார்த்தி வைத்துவிட்டார்களாம். பாவம், அதன் பிறகு வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இனி இந்தத் தொந்திரவு இருக்காது. 

குட்டிக்குஞ்சுலுவைப் பார்த்து ஒரு வாரம் ஆகிறது. பையருக்கு வேலையில் மும்முரம். மருமகளுக்குக் குழந்தையைப் பள்ளியில் கொண்டு விட்டால் வீட்டில் வேலைகள் சரியாக இருக்கும். மாலை அவர்தான் போய்க் குழந்தையை அழைத்து வரணும். அதோடு இல்லாமல் நல்ல பால் கிடைக்காமல் குழந்தை ரொம்பவே இளைத்துவிட்டாள். சாமான்கள் வாங்கவும் அவர்கள் போக முடியாது. யாரிடமாவது சொல்லித் தான் வாங்கணும். சில சமயங்கள் சரியாக வரும்/பல சமயங்கள் சரியாக வருவதில்லை. இன்னமும் கப்பலில் அனுப்பிய சாமான்கள் அங்கே போய்ச் சேரவில்லை. விமானத்தில் இவர்களோடு பயணம் செய்த சாமான்களே போன மாதம் தான் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது. இம்மாதிரி ஒரு கடினமான வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்கள். போகப் போகச் சரியாகலாம். இந்தியாவில் இருந்துட்டு வெளிநாடு அம்பேரிக்காவானால் கூடக் கஷ்டமாக இருக்கும். அம்பேரிக்காவில் சுமார் 20 வருடங்களாக இருந்துட்டு இப்போ இந்த ஊர் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. அம்பேரிக்காவில் எல்லாக் காய்களும் கிடைக்கும். முக்கியமாய்க் குழந்தைக்குப் பால்! இவங்களுக்குத் தயிருக்கும் பிரச்னையாய்த் தான் இருக்கு.  குழந்தைக்கும் தயிர் ரொம்பப் பிடிக்கும். இப்படி ஒரு ஊருக்குப் போயிருக்காங்களேனு வருத்தப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? 

42 comments:

  1. மழை... ஆஹா... நல்லாத்தான் இருக்கு க்ளைமேட்!

    மற்ற விஷயங்கள் குறித்த பகிர்வும் நன்று.

    புதிய ஊரில், விரைவில் எல்லாம் சரியாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், முதல் முதல் வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. //கடைகள் திறந்ததும் நம்ம வழக்கமான பழமுதிர்ச்சோலையிலேயே வாங்கிக்கலாம்னு முடிவு எடுத்துட்டோம்//

    காய்கறி வாங்குவதற்காக மதுரை அழகர்கோவில் பழமுதிர்ச்சோலை போவீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! கில்லர்ஜி! காய்கள்/பழங்கள் மட்டும் விற்கும் அங்காடிகளைப் பழமுதிர்ச்சோலை என்கிறார்கள். சென்னையிலும் இப்படிப்பட்ட கடைகள் உண்டு.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    முதலில் எழுதிய மழை குறித்த வர்ணனை படிக்க நன்றாக இருந்தது. அழகாக எழுதியுள்ளீர்கள். ஒருவரிடம் (வாயு பகவான், வருண பகவான்) மற்றொருவர் தோற்பதும் ஜெயிப்பதும் எப்போதும் நடப்பதுதானே..! வருண பகவான் ஜெயித்தால் நமக்கு நல்லது.வெயிலின் வெப்பம் அடங்கி சற்று இதமாக இருக்கும். நேற்று இங்கு எங்கள் பகுதியில் மதியம் நல்ல வெயிலோடு உறவாடியபடி கிட்டத்தட்ட அரை மணி நேரம் விடாமல் மழையும் பெய்தது. பார்க்க நன்றாக இருந்தது. பின் இரவு வரை தொடர் மழைதான். இன்று வாயுபகவான் வென்று விட்டார்.

    காய்கறிகள் ஆன்லைனில் வாங்குவது நன்றாக இல்லைதான்..இங்கு வந்த வெண்டை ஒரே முத்தல். கொத்தமல்லி கட்டு அழுகலோடுதான் வந்திறங்கியது. என்ன செய்வது...? வெளியில் சென்று வாங்க பயமாக உள்ளது. இந்த காலம் கடக்கும் என்ற நம்பிக்கையோடுதான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். எப்போதோ என்ற கவலையும் இடையிடையே தவிர்க்க முடியாமல் வருகிறது.

    தங்கள் மகன் வசிக்கும் இடத்தில் உள்ள பிரச்சனைகள் வருத்தத்தை தருகிறது. அனைத்தும் விரைவில் சரியாகி, தங்கள் பேத்திக்கு நல்ல உணவு கிடைக்க நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. மனசு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறதா? மழை என்றால் எல்லோருக்குமே பிடிக்குமே! இங்கே 2, 3 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்வதால் சூடு குறைந்து விட்டது. நீங்க இருப்பது "பெண்"களூர் தானே! அங்கெல்லாம் பருவமழை தொடங்கி இருக்குமே! ஆயிற்று! இப்போது தளர்வுகள் கொடுத்திருப்பதால் நாங்கள் வழக்கமாக வாங்கும் கடை திறந்து விடுவார்கள். ஆனாலும் இப்போதுள்ளவை இன்னும் 15 நாட்களுக்கு வந்துடும். மகனுக்கு சௌகரியமான வாழ்க்கை அமைய நாங்களும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கோம்.

      Delete
  4. விரைவில் புதிய ஊர் அவங்க எல்லாருக்கும் செட்டிலாயிடும். கவலைப்படாதீங்க. இவ்வளவு நாளா இன்னும் சாமான்கள் வந்து சேரவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லையாரே! கப்பலில் அனுப்பியவை இந்த மாதம் வரலாம் என்கிறார்கள். விமானத்தில் அவங்களோடு பயணித்தவையே இப்போத் தான் போய்ச் சேர்ந்திருக்கு!

      Delete
  5. இங்க அனேகமா தினமும் மழை பெய்கிறது. கிடைத்த நேரத்தில் அவசர அவசரமாக புதிய புதிய அடுக்குமாடிகளுக்கான கன்ஸ்ட்ரக்‌ஷன் நடந்துகொண்டிருப்பதால் சப்தம் குறைவதற்காக பால்கனி கதவை அடைத்துக்கொள்ளவேண்டியிருக்கு.

    மழை பெய்யும்போது பாலகனியில் காற்றையும் சாரலையும் அனுபவிக்க முடியுது.

    ஒருவேளை இது உங்க ஊரில் பெய்யவேண்டிய மழையோ?

    ReplyDelete
    Replies
    1. இங்கே 3 நாட்களாக மாலை வேளையில் தொடர்ந்து நல்ல மழை. அதிலும் முந்தாநாளும் நேற்றும் தொடர்ந்து விடாமல் பெய்தது. பால்கனியில் காற்றால் /சாரலால் நனைந்து விடுகிறது. இங்கே இப்போது புதிய கட்டிட வேலைகள் ஏதும் நடப்பதாய்த் தெரியலை. கடுமையான ஊரடங்கைக் கடைப்பிடித்தார்கள்.

      Delete
  6. இந்த முறை தென்மேற்குப் பருவமழை சீக்கிரமே செட் ஆகிவிட்டது என்றார்கள். மே 20 ஆம் தேதியே ஒரு பெருமழையைப் பார்த்தோம்.  அப்புறம் இங்கு ஒன்றும் மழையைக் காணோம் என்றாலும் பெரிய அனல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். ஜூன் ஒன்றாம் தேதி ஆரம்பிக்க வேண்டிய பருவமழை கேரளாவில் 3 ஆம் தேதி தான் ஆரம்பித்தது. ஆனாலும் சாதகமாக இருப்பதாகவே சொல்கிறார்கள். சென்னையில் சிலர் சூடு அதிகமாய் இருப்பதாய்ச் சொல்கின்றனர். நீங்க அனல் இல்லை என்கிறீர்கள்.

      Delete
    2. அனலோ, வெக்கையோ பத்து நாட்களுக்குமுன் இருந்த அளவு இல்லை என்றேன்.  அதெப்படி இல்லாமலேயே போகும்!  

      Delete
    3. ஶ்ரீராம், பூமி குளிர மழை பொழிந்தால் அனல் இருக்காது. உங்களுக்குப் புரியலையோ? அல்லது சென்னையை விட்டு வேறெங்கும் செல்லாததாலோ? சென்னையில் 365 நாட்களும் வெயிலும், புழுக்கமும் தானே!

      Delete
  7. அரைகுறைத் தூறல்களுக்கு பூமி எப்படி நனையும்?  சூட்டைத்தானே கிளப்பி விடும்?

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், நீங்க புரிஞ்சுக்கலை/அல்லது நான் புரியறாப்போல் சொல்லலை. அரைகுறைத் தூறல்கள் எனில் சிறிது நேரம் தூறிவிட்டு நின்று விடும். இது விடாமல் தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்கும் மேல் தூறிக் கொண்டிருந்தது. செடி,கொடிகளுக்கும் பயிர்களுக்கும் இப்படிப் பெய்தால் நன்மை என்பார்கள். அதோடு நீரும் பூமியில் போய் இறங்கும்.

      Delete
  8. கடைகளில் நாம் சென்று பார்த்து வாங்குவது போல தரமாக இல்லை ஆன்லைனில் வாங்கும் காய்கறிகள்.  இங்கு சூப்பர்டெய்லி என்று ஒரு ஆப் இருக்கிறது அதுவும் இந்த லட்சணம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரில் நமக்கெல்லாம் நேரில் போய்ப் பார்த்து வாங்கும் திருப்தி இல்லை தான். அம்பேரிக்காவில் எங்க பெண்ணே அப்படித் தான் சொல்கிறாள். இங்கே கேட்கவே வேண்டாம்.

      Delete
    2. ஒரு தடவை சூப்பரா ஆன்லைன்ல காய்/பழம் வந்ததே என்று அடுத்த முறை வாங்கினால், வெண்டைல 70 சதவிகிதம் மரம். வெங்காயம், உருளை சுமாராத்தான் அனுப்புவாங்க. நாம பொறுக்கி வாங்குவதுபோல இருக்காது. சில நேரங்கள்ல, கீரைலாம் ரொம்ப நல்லாவே அனுப்புவாங்க.

      Delete
    3. இனிமேல் அந்தக் காய்க்காரனிடம் (கூடை.காம்) வாங்கப் போவதில்லை. கால் கிலோ கொடுக்க மாட்டாங்களாம். அரசு உத்தரவாம். அரசு இதில் எல்லாம் தலையிடுமா என்ன?

      Delete
  9. ஊரடங்குத் தளர்வு கவலையைதான் ஏற்படுத்துகிறது.  இன்னும் கொஞ்ச நாட்கள் அப்படியே  (இப்பவே ஒன்றும் அவ்வளவு கெடுபிடி எல்லாம் இல்லை) ஊரடங்கைத் தொடரலாம்.  அரசாங்கம் சொல்லும் கணக்குகள் வினோதம் - வழக்கம்போல.

    ReplyDelete
    Replies
    1. இங்கே கெடுபிடி இருந்தது. இந்தச் சிறு தொழிலாளர்கள் முக்கியமாய் ப்ளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெகானிக் போன்றோர் வெளியே வரவே முடியாமல் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டார்கள். மீறி வந்தாலும் திருப்பி அனுப்பிடுவாங்க/இல்லைனா காவல்நிலையத்தில் மாலை வரை உட்கார்த்தி வைச்சுட்டுப் பின் வீட்டுக்கு அனுப்புவாங்க.

      Delete
    2. நம்ம ஊர்ல இறப்பு எதையும் ரிப்போர்ட் செய்வதில்லை. தொலைக்காட்சிகளுக்கும் இதைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று மறைமுக உத்தரவுன்னு சொன்னாங்க.

      Delete
    3. அப்படித்தான் நாங்களும் கேள்விப் பட்டோம். எல்லாமே அவங்களோட ஆட்கள்.

      Delete
  10. அங்குபோய் இவ்வளவு கஷ்டமாயிருக்கிறது என்கிறீர்களே..    நைஜீரியாவிலிருந்து வேண்டாம் என்று சொல்லி யு எஸ் வந்து விட முடியாதா? 

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், எடுத்துக்கொண்ட வேலையைத் திட்டமிட்டபடி செய்து முடிக்கணுமே! அதிலும் எண்ணெய் வளம் சம்பந்தப்பட்ட வேலை! பாதியிலே திரும்பி வந்தால் பெயர் கெட்டுப் போவதோடு வேறு கம்பெனியிலும் வேலை கொடுக்க யோசிக்க மாட்டாங்களா? நைஜீரியாவில் ட்விட்டருக்குப் பதிலாக இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கும் "குக்கூ"வைச் செயலுக்குக் கொண்டு வரப் போகிறார்களாம். எங்க பையருக்கு இணைய இணைப்பே இல்லை. கம்பெனி வேலைக்கு இணைய இணைப்பு வேண்டும் என்பதால் மொபைல் டாட்டா மாதிரி ஏதோ கொடுத்திருக்கிறார்கள். அதில் தான் நேற்றுப் பத்து நிமிஷங்கள் பார்த்துக் கொண்டோம். இணையம் வரப் பத்து நாட்கள் ஆகுமாம். :(

      Delete
    2. இப்போச் சிறிது நேரம் முன்னால் குஞ்சுலு வந்தது. அவங்களுக்குக் காலை ஒன்பதரை மணி. 20 நிமிஷம் பார்த்துட்டு அவங்களுக்கு வேலை இருந்ததால் போதும்னு சொல்லிட்டோம். இரவு ஒரு வேளை வரலாம். அப்போ அவங்களுக்கு மாலை ஐந்து மணி எனில் நமக்கு இரவு ஒன்பதரை.

      Delete
  11. மழை பெய்வது மகிழ்ச்சி, வெயிலின் கொடுமை குறையுமே!
    மகன் இருக்கும் ஊரில் குழந்தைக்கு தேவையானது கிடைக்கவில்லை என்று கேட்டும் துர்கா மெலிந்து இருக்கிறாள் என்று கேட்டு வருத்தமாய் இருக்கிறது. விரைவில் எல்லாம் கிடைக்க வேண்டும். சாமான்களும் இன்னும் போய் சேரவில்லை என்றால் கஷ்டம் தான். இணைய இணைப்பு நன்றாக இருந்தால் தானே குழந்தையுடன் பேச முடியும்.

    எவ்வளவு நாள் ஊரடங்கு போட முடியும்? எங்கள் வீட்டில் குடியிருப்பவர் சோபா செட் செய்பவர் அவர் தொடர்ந்து ஊரடங்கு காரணமாய் வருமானம் இல்லை அடுத்த மாதம் வாடகை தருகிறேன் என்கிறார். அவர் பாடே அப்படி என்றால் அவரிடம் வேலைப்பார்ப்பவர்கள் நிலை எப்படி இருக்கும்?

    ஏழை மக்கள் பிழைக்கவழி இல்லாமல் பசியுடன் வீட்டில் முடங்கும் நிலை மாற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. இரண்டு நாட்களாக 93/95 என இருந்தது வெயில். இன்னிக்குக் கொஞ்சம் அதிகமோனு நினைக்கிறேன். இன்னிக்குச் சீதோஷ்ண நிலையில் மழை வரும்னு போடலை. எங்க பையருக்கு இணைய இணைப்பு வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்கிறார்கள். இங்கேயும் சிறு தொழிலாளர்கள் பாடு திண்டாட்டம் தான். வேலை செய்யும் பெண்ணை நிறுத்தினாலும் நாங்க முழுச் சம்பளம் கொடுத்துட்டோம்.

      Delete
  12. இங்கே(பெங்களூரில்) தினசரி மழை. பகலில் புழுக்கம், அதிகாலையிலும், இரவிலும் ஜில்லென்று காற்று!
    ஆன்லைனில் கறிகாய்கள் அமைவது அதிர்ஷ்டம்தான்.
    உங்கள் மகனுக்கும்,மருமகளுக்கும் புது இடத்தில் எல்லா சௌகரியங்களும் விரைவில் கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அட???? பானுமதி! இவ்வளவு விரைவில்? அதான் இன்னிக்கு வெயில் அதிகமோ? இஃகி,இஃகி, இஃகி! இங்கே புழுக்கம் குறைஞ்சிருக்கு. காய்கள் ஓரளவு பரவாயில்லை ரகம். ஆனால் நாங்க வாடிக்கையாக வாங்கிய பத்மா காஃபிக்காரர்களின் பழமுதிர்ச் சோலையில் காய்கள் நல்ல தரமாகவும் புதுசாகவும் கிடைத்து வந்தது. நாளையிலிருந்து திறப்பார்கள். ஆனால் நமக்குத் தான் ஒரு கல்யாணத்துக்கு வேண்டிய காய்கள் இருக்கே! அதனால் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் தான்!

      Delete
    2. இந்த பகல் புழுக்கம் எப்போ போகும்னு தெரியலை. சிலசமயம் ஏசி போட்டுக்கலாமான்னு தோணுது.

      Delete
    3. பகல் நேரங்களில் நாங்க எப்போவுமே ஏசி போட்டுக்க மாட்டோம். சென்னையில் இருந்தப்போக் கூட! அதோடு இரவிலும் ஏசி 25 டிகிரி அல்லது 2 டிகிரியில் தான் வைப்பார். அதிகம் குறைவாக வைத்துக் கொண்டால் உடல் நலத்துக்குக் கேடு என வெளியில் எவ்வளவு இருக்கோ அதே அளவுக்கு ஏசியும் வைப்பார்.

      Delete
    4. புழுக்கம்னு இல்லாட்டியும் வியர்வைக் கசகசப்பு, அனல் அடிப்பது இப்போது இங்கே இல்லை. மின் விசிறிக்காற்றே குளுமையாக வருகிறது.

      Delete
  13. இங்கு பங்க்ளூரில் மழை மாலை நன்றாகப் பெய்கிறது அக்கா.

    இங்கு காய்கள் பழங்கள் நன்றாகவே இருக்கு. இப்போ சந்தை எல்லாம் இல்லை...எனவே வீட்டருகே உள்ள கடைகளில். கூட்டம் அதிகம் இருக்காது அது போல வீட்டு வாசலில் தள்ளுவண்டியில் அல்லது ட்ரக்கில் ஸ்பீக்கர் போட்டு அது சொல்லிக் கொண்டே போகும்...வீட்டு வாசலிலேயே வாங்கிடலாம். காய்கள் நன்றாகவே இருக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நீங்களும் சீக்கிரமாவே வந்துட்டீங்க! காய்கள், பழங்கள் எப்போதுமே "பெண்"களூரில் நன்றாக இருக்கும். ரோஜாப்பூக்களும் அங்கே நன்றாக இருக்கும். இங்கேயும் ஸ்பீக்கர் போட்டுக் கொண்டு வண்டி வருகிறது. ஆனால் நிற்பதில்லை என்றார்கள். இன்னிக்கு அதிசயமாப் பூக்காரர் உள்ளே வந்து கார் பார்க்கிங்கில் கூவினார். நிற்கச் சொல்லி செக்யூரிடியிடம் சொல்லிட்டு மாமா போய் வாங்கி வந்தார். முல்லைப் பூ! இரண்டு முழம் வந்திருக்கு. பூக்காரங்க தொடுத்தால் 3 முழம் வரும். :)

      Delete
  14. நாகர்கோவிலில் கேரளத்திற்கு முன்பு மழை தொடங்கி, வங்காளவிரிகுடாவில் அழுத்தம் காரணமாக மழை கொட்டி ஊர் முழுவதும் தண்ணீர், வாய்க்கால்கள் எல்லாம் கரை உடைந்துவிடுமோ என்ற பயத்திலும், தெப்பக் குளம் மறுகால் பாய்ந்து ஊர் முழுவதும் தண்ணீர் வீட்டுப் படிகள் வரை. இப்போது தண்ணீர் வடிந்து விட்டது. மழையும் மிதமாகப் பெய்வதால்..

    நைஜீரியா வில் மகனுக்கு விரைவில் எல்லாம் சரியாகிவிடும் கீதாக்கா. குட்டிக் குஞ்சுலு எப்படிச் சமாளிக்கிறது? பால் தயிர் ஆன்லைனில் வேறு ப்ரான்ட் ஆர்டர் செய்ய முடியாதோ?

    எத்தியோப்பியாவிலும் கூட நம்மூர் மக்களுக்குப் பால் அத்தனை சரிப்படவில்லை. ஆனால் பழங்கள் காய்கள் எல்லாம் அத்தனை நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கேள்வி. நிலம் அத்தனை செழிப்பு என்று. நிலக்கடலை எல்லாம் ராஜ்மா பீன்ஸ் மாதிரி பெரிசாக இருக்கும். இப்போ எப்படி என்று தெரியவில்லை.

    நைஜீரியாவில் இணையம் பிரச்சனை... தண்ணீர் கிடைக்கிறதோ அக்கா? நல்ல த்ண்ணீர் கிடைப்பதும் கஷ்டம் என்று அறிந்திருக்கிறேன்.

    அக்கா, அங்கு எத்தனை வருடங்கள் ப்ராஜெக்ட்? அதுவரை தாக்குப் பிடிக்க வேண்டும் இல்லைய...குஞ்சுலுக்கு பள்ளி பிடித்திருக்கிறதா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாகர்கோயிலில் இப்போவும் நல்ல மழை! தினம் தினம் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். திற்பரப்பு அருவியை தினமும் பார்க்கிறோம். பையருக்கு பால், தயிர் ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் வருமானு தெரியலை. குஞ்சுலுவுக்குப் பள்ளி ரொம்பப் பிடிச்சிருக்கு. சனி,ஞாயிறில் கூடப் போவேன்னு அடம்பிடிக்கும். அநேகமாய் இரண்டு வருடங்கள் ப்ராஜெக்ட் என நினைக்கிறேன். அதில் ஆறு மாதம் போல் யு.எஸ்ஸில் போய்விட்டது. அதைக் கணக்கில் எடுத்துண்டால் இன்னும் ஒன்றரை வருஷம் தான்! எப்படியோ! தண்ணீர் வெளியில் தான் வாங்குகிறார்கள். குளிக்கும் தண்ணீர் கூட ஃபில்டரில் சுத்தம் செய்யப்பட்டே வருது என்று சொன்ன மாதிரி நினைவு. இங்கே நைஜீரியாவில் மாங்காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. பையர் நீ இருந்தால் ஊறுகாய் பிசினஸ் ஆரம்பித்திருக்கலாம் எனக் கேலி செய்வார்.

      Delete
  15. குட்டிக் குஞ்சுலுவுக்கு பாடல்,தயிர் கிடைக்காதது கஷ்டமே.

    இங்கும் லாக்டவுன் மறுவாரம் எப்படியோ தெரியவில்லை. மரக்கறிகள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, அமுல்யா கிடைச்சால் வாங்கி வைச்சுக்கச் சொன்னேன் பையரிடம். வரணுமே என்றார். எல்லோரும் வாங்குவதானால் கடையில் மொத்தமாக வாங்கி வைப்பாங்க! இவங்க மட்டும் எனில் கஷ்டம் தான்!

      Delete
  16. குட்டிக் குஞ்சுலுவுக்கு எல்லாம் பழகி
    உடம்பு தேற வேண்டும்.

    இணையம் நம்மூரில் தான் பழுது என்று நினைத்தேன். நம்மை விட உங்க பையன் இருக்கும் ஊர்
    மோசமாக இருக்கிறது.
    பாவம். சீக்கிரம் இந்த வருடம் கடந்து போகட்டும்.
    இந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டு விட்டேன்.

    இங்கும் கடையில் முன்பு போல் பொருட்கள்
    இல்லை. பாகற்காய், புடலை எல்லாம் கறுத்தே
    வருகின்றன.
    நாமோ காய்கறியை நம்பியே இருக்கிறோம்.
    என்னவ்..எப்ப சரியாகுமோ.
    மழை நன்றாகப் பெய்யட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, முன்னால் பிஎஸ் என் எல் வைச்சிருந்தப்போவும் இணையம் பிரச்னை எல்லாம் இல்லை. கணினி வாங்கிய புதுசில் 2005 ஆம் ஆண்டில் டாடா இன்டிகாம் காரங்களிடம் இணைப்பு வாங்கிட்டு ஒரு மூன்று/நான்கு வருடங்கள் அவதிப்பட்டேன். பின்னர் பிஎஸ் என் எல்லுக்கு மாறினேன். சென்னையிலும் பிரச்னை வந்ததில்லை. தெரிஞ்சவங்க என்பதால் உடனே வந்து கவனிப்பாங்க. இப்போத் தான் மொபைலுக்கு பிஎஸ் என் எல் இணைப்புப் பொருந்தலை என்பதால் தனியாரிடம் வாங்கி இருக்கோம். நாலைந்து வருடங்களாக! பிரச்னை எனில் உடனே வந்துடுவாங்க! நைஜீரியாவில் இந்தியாவின் சேவையை விட மோசமாகவே இருக்கு! சீக்கிரம் அங்கிருந்து வந்துட்டால் தேவலை என்றே பிரார்த்திக்கிறோம்.

      Delete