கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!கார்த்திகை பதிவு. இங்கே சென்று பார்க்கவும்.
ஒரு பழமொழி சொல்லுவாங்க, ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம் ; அதிலேயும் அக்லி புக்லி என்பார்கள். இல்லைனா ஏற்கெனவே துர்க்குணி, இப்போ அதிலும் கர்ப்பிணி என்பார்கள். அந்த மாதிரி நமக்கு ஏற்கெனவே உடம்பில் இல்லாத வியாதிகளே இல்லை எனலாம். அப்படி இருக்கையில் வியாழனன்று இரவு சாப்பிட்ட உணவால் வெள்ளியன்று காலை எழுந்திருக்கவே முடியலை. அப்படி ஒண்ணும் பெரிசாச் சாப்பிட்டுடலை. சாபுதானா கிச்சடி. எப்போவும் பண்ணுவது தான். அடிக்கடி சாப்பிட்டது/ சாப்பிடும் உணவு தான். இப்போ ஒத்துக்காமல் போனதுக்குக் காரணம் இந்த ஜவ்வரிசி நைலான் ஜவ்வரிசி. எப்போதும் போல் காலம்பரவே ஆழாக்குக்குக் குறைவாக ஜவ்வரிசி எடுத்து நனைத்து வைத்தாச்சு. சாயந்திரமாக, வேர்க்கடலை மைக்ரோவேவில் போட்டு வறுத்துச் சுத்தம் செய்து பொடி தயார் செய்து, உருளைக்கிழங்கைத் துருவித் தண்ணீரில் போட்டுனு எல்லாம் தயார் செய்து கொண்டு முறைப்படித்தான் பண்ணினேன். ஆனால் ஊறிய ஜவ்வரிசியில் மைதாமாவுப் பசை கிளறிய மறுநாள் ஒரு ஊசல் வாசனை வருமே அதுபோல் வந்தது. சரினு அதைக் கொட்டி இருக்கணும். இத்தனைக்கும் வெயில் கூடச் சுள்ளென்றெல்லாம் அடிக்கலை. எப்படி ஊசி இருக்கும்னு நினைச்சு, அதை மறுபடி சுத்தம் செய்து உப்புமாப் பண்ணிச் சாப்பிட்டாச்சு. அதனால் எல்லாம் வாசனை போகலை. அப்படியே இருந்தது. அதோடு தான் சாப்பிட்டோம். அதான் தப்பு. அன்னிக்கு (வியாழனன்று) இரவு படுத்ததும் தூங்கிட்டேன்.
இரண்டு, இரண்டரை மணி போல விழிப்பு வந்தது. வயிறு ஒரு மாதிரியாக உணர்ந்தேன். கல்லைப் போட்டாற்போல் கனமாக இருந்தது. ஜவ்வரிசியைச் சாப்பிட்டேனா கற்களாய்ச் சாப்பிட்டுவிட்டேனோ என எண்ணும்படி ஆயிற்று. என்ன செய்யறதுனு புரியலை. கழிவறை போகலாம்னு போனால் திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. கூடவே வாந்தியும் அப்போதில் இருந்து ஆரம்பித்துக் காலை சுமார் ஐந்தரை மணி வரை தொடர்ந்தது. இன்னிக்குத் திருக்கார்த்திகை ஆச்சே. விளக்குகள் ஏத்தணுமேனு மனசு பரபரத்தது. ஆனால் உடல் சொன்னபடி கேட்கலை. ஆனாலும் எழுந்து கொண்டு வாசலில் கோலமெல்லாம் போட்டு விளக்குகளை ஊற வைத்துக் காஃபி, கஞ்சி கடமை முடித்துக் கொண்டு குளித்துவிட்டுப் பின்னர் வயிற்றைக் காயப் போடுவோம் என நினைத்துக் காஃபி ஒரே தரம் தவிர்த்து பின்னர் குடிக்காமல் அடுத்தடுத்து வந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னோட வழக்கமான குடிநீரான சுக்கு, மிளகு, சோம்பு, ஜீரகம், லவங்கம், பட்டை, ஏலக்காய் சேர்த்துத் தட்டிப் போட்டக் குடி நீரைத் தயாரித்துக் கொண்டு அவ்வப்போது குடித்துக் கொண்டேன். மதியமும் வெகு குறைவாக உணவு எடுத்துக் கொண்டேன். மாத்திரை சாப்பிடணுமே அதுக்காக மட்டும். பின்னர் பொரியைப் பாகு செலுத்தி வைத்துக் கொண்டேன். காலையிலேயே வடைக்கு அரைத்து வைத்தாச்சு. மாமியார் வீட்டில் அப்பம் பண்ணுவதில்லை.
பின்னர் மாக்கோலத்துக்கு அரைத்துக் கோலம் போடப் போனால் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வாசல் வராந்தாவிலும் நிலைப்படியிலும் மட்டும் கோலம் போட்டுவிட்டு விளக்குகள் வைக்கும் பலகைக்கு மட்டும் எப்படியோ போட்டு முடித்தேன். அதுக்குள்ளே ஓய்வு எடுத்துக்கொண்டு எழுந்து வந்த ரங்க்ஸிடம் விளக்குகளுக்குத் திரி போட்டுச் சந்தனம்,குங்குமம் வைக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். அவரும் செய்து கொடுத்தார். மெல்ல மெல்ல மணியும் நான்கரை ஆகிவிட்டது. பின்னர் மறுபடி உடல் சுத்தம் செய்து கொண்டு புடைவை மாற்றிக்கொண்டு நிவேதனப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு தேங்காயும் உடைத்து வைத்துக் கொண்டு நாலைந்து விளக்குகளை ஏற்றினேன். மற்றவை அவர் ஏற்றினார். வாசலில் ஒன்றிரண்டு விளக்குகளை மட்டும் கொண்டு வைத்தேன். மற்றவற்றை எல்லாம் நான் சொல்லச் சொல்ல அவரே வைத்தார். இப்படியாக ஒரு மாதிரியாகக் கார்த்திகைக் கொண்டாட்டம் முடிந்தது. எப்படியோ இதையும் ஒப்பேத்திட்டேன். இன்னிக்குத் தான் வயிறு சரியாச்சு. அதான் பதிவுக்கும் தாமதம்.
வீட்டு வாசலில் விளக்குகள். அதிகம் வைக்கவில்லை. இந்த வருஷம் குறைத்து விட்டோம். முடியலை இருவருக்குமே! :)
ReplyDeleteஇந்த வயதிலும் உடம்புக்கு முடியவில்லை என்றாலும் சம்பிராதாய சடங்குகளை விடாமல் செய்கிறீர்கள் என்பதை நினைத்து பார்க்கும் போதே ஆச்சிரியமாக இருக்கிறது... பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் & பிரார்த்தனைகள்
வாங்க தமிழரே, இப்போத் தான் உங்களைக் கொஞ்ச நாட்களாய்ப் பார்க்கவே முடியலைனு நினைத்துக் கொண்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்போ நான் என்னமோ செய்கிறேன். எனக்கப்புறமா? அதான் மில்லியன் டாலர் கேள்வி! பிள்ளையும் மருமகளும் எங்கோ இருக்காங்க. அங்கே இதெல்லாம் செய்ய முடியுமா என்பதே சந்தேகம். அம்பேரிக்காவில் எல்லாமும் பின்பற்ற முடிந்தது. இங்கே நைஜீரியாவில் 3 வருஷங்கள். எல்லாம் கடவுள் செயல். அவனுக்கு வேண்டியதை அவனே நடத்திப்பான். பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றி.
Deleteஇயன்றவரை செய்யுங்கள் இறைவன் அறிவான்....
ReplyDeleteஉண்மை கில்லர்ஜி! அவனுக்கு மிஞ்சி எதுவும் எவரும் இல்லை.
Deleteஎப்படியோ...குறைவில்லாமல் திருக்கார்த்திகைக் கொண்டாட்டத்தை அவன் நடத்திக்கொண்டான்.
ReplyDeleteஎப்படியாவது எதிலும் குறைவைக்காமல் எப்போதும் செய்யும்படி உடல்நிலை நன்றாக இருக்கணும் உங்க இரண்டு பேருக்கும் எனப் ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.
பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழரே! எல்லாம் அவன் செயல்.
Deleteதங்களுக்குத் தெரியாததில்லை.. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் அக்கா..
ReplyDeleteஜாவா அரிசி, ஜாம்பிய அரிசி - இதையெல்லாம் விட்டு விட்டு உடலுக்கு ஒத்துக் கொள்வதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்..
நலமே வாழ்க..
வாங்க துரை, வயிறு லங்கணம் போட்டவுடன் சரியாகி விடுகிறது. என்றாலும் விடாமல் எல்லா மருந்து சாமான்களையும் தட்டிப் போட்டு வெந்நீர் குடித்துக் கொண்டு இருக்கேன். கனிவான விசாரணைக்கு மிக்க நன்றி.
Deleteஎனது தளத்திற்கு வந்து ஆறுதல் வார்த்தைகள் கூறிய அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் சளித் தொல்லை இருக்கின்றது..மற்றபடிக்கு நலமே..
உங்கள் உடல் நலத்தை நல்ல மருத்துவரிடம் காட்டி முழு உடல்பரிசோதனை செய்து கொண்டால் நலமோ எனத் தோன்றுகிறது. உங்களுக்கே தெரிந்திருக்கும் என்றாலும் இதுவும் என் வேண்டுகோள். அடிக்கடி உடல்நலமில்லாமல் போகிறது. கவனமாக இருக்கவும்.
Deleteஉடம்பிற்கு தள்ளாத நிலையிலும் பண்டிகைகளை குறைவில்லாமல் கொண்டாடிய உங்களுடைய ஆர்வத்தையும், வில் பவரையும் போற்றுகிறேன்.
ReplyDeleteநன்றி பானுமதி. கனடாவிலும் கார்த்திகை சிறப்பாகக் கொண்டாடி இருப்பீர்கள். டெக்சாஸில் ஹூஸ்டனில் தீபாவளிக்கு ஆரம்பிச்சாக் கார்த்திகை வரை தீபங்கள் ஏற்றிக் கொண்டிருப்பார்கள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதிருக்கார்த்திகை பண்டிகை எப்படியோ நல்ல விதமாக நடைபெற்றதற்கு வாழ்த்துகள். படங்கள் நன்றாக உள்ளன. இவ்வளவு முடியாமையிலும் நீங்கள் சம்பிரதாயத்தை விடாமல், செய்து வழிபட்டதற்கு அந்த ஈசன் கண்டிப்பாக உங்களுக்கு துணையிருப்பார்.
ஏதோ சாஸ்திரத்திற்கு இப்படியாவது நம்மால் செய்ய முடியவில்லையென்றால், அப்புறம் அந்த வருத்தம் வேறு அடுத்த வருடம் வரை இருந்து கொண்டேயிருக்கும். (நானும் இப்போதெல்லாம் இப்படி நினைத்துக் கொண்டேதான், ஒவ்வொரு விஷேடங்களையும் ஒரு மனோ தைரியத்தை வரவழைத்து கொண்டு முடியாமல் செய்கிறேன்.) அன்றைய உடல் நிலையில் நீங்கள் விடாமல் விளக்கேற்றி ஒரு மனோபலத்துடன் பண்டிகையை கொண்டாடி விட்டீர்கள். அதற்கு இறைவனுக்கு மிக்க நன்றிகளை தெரிவிக்க வேண்டும். இந்த மழை குளிரில் உடல் நலனை கவனமாக பார்த்துக் கொள்ளவும். அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன். . நீங்கள் சுட்டி தந்திருப்பதை மதியம் வந்து படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நம்மால் முடிந்தவரை சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கலாமே என்பது தான் என் கருத்து. மனோபலம் ஒன்றைத்தான் இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருக்கேன். உங்கள் கனிவான விசாரணைக்கும் பிரர்த்தனைகளுக்கும் நன்றி. சுட்டியில் கொடுத்த பதிவை உங்களுக்கு நேரம் இருக்கையில் படியுங்கள். ஒண்ணும் அவசரமே இல்லை.
Deleteநல்லபடியாக திருக்கார்த்திகை பண்டிகை நிறைவு பெற்றது மகிழ்ச்சி. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஉடல் நலத்தில் கவனமாக இருங்க. சந்தேகமாக இருக்கும் உணவை சமைக்காமல் விட்டு இருக்கலாம், இவ்வளவு கஷ்டபட்டுவிட்டீர்கள்.
நம்மால் முடிந்தவரை பண்டிகைகளை செய்வோம். குழந்தைகள் நலத்திற்கு வேண்டிக் கொள்வோம்.
உடல் நலத்தோடு இருக்க பிரார்த்தனைகள்.
வாங்க கோமதி, இன்னிக்காவது உங்கள் வலைப்பக்கம் வரணும். நிறையப் பதிவுகள் காத்திருக்கின்றன. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஆம், நீங்க சொல்வது போல் வாசனை வந்ததுமே ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமாப் பண்ணி இருந்திருக்கலாம். தோணலை. களைஞ்சுட்டேனேனு நினைச்சேன். படுத்தி விட்டது 3 நாட்களாக.
கீதாக்கா குடோஸ்!! உடம்பு முடியாமல் தளர்ந்துபோனாலும் விடாது ஃபாலோ செய்வதற்கு வாழ்த்துகள். அக்கா முடிஞ்சதை செய்ங்க. இறைவனுக்குத் தெரியாதா என்ன!
ReplyDeleteஉங்கள் உடல் நலம் ஓகே ஆகிவிட்டதாக்கா? தண்ணீரில் மாட்டிக் கொண்டு அலைச்சல் வேறு இருந்ததே.
எனர்ஜி/சக்தி! இதுதான் வேண்டியது. அது உங்களுக்கு இருக்கிறாது அக்கா. அந்த "சக்தி" மேலும் உங்களுக்கு சக்தி தர பிரார்த்தனைகள்.
படங்கள் நன்றாக இருக்கின்றன. அதாவது விளக்குகள் கோலம் எல்லாம்.
நைலான் ஜவ்வரி விட மற்ற ஜவ்வரிதான் வ்யிற்றிற்கு எதுவும் செய்யாது இல்லையா? நல்ல பெரிசா வெள்ளையா இருக்குமே அதுதான் எளிதில் ஜீரணமாகும் இல்லையா...நீங்களும் அதில்தானே செய்வீங்க...பொதுவா வயிற்றுப் போக்கு நிற்க ஜவ்வரிக் கஞ்சி தான்/நைலான் ஜவ்வரிசிக் கஞ்சி கொடுப்பாங்க எங்க வீட்டில். அன்று உங்களுக்கு அப்படி ஒரு வேளை ரியாக்ட் செய்துவிட்டதோ?
இப்போது சரியாகிவிட்டது மகிழ்ச்சி கீதாக்கா...லங்கணம் பரம ஔஷதம்
கீதா
வாங்க தி/கீதா, எப்போவுமே ஆகாரம் எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன் என்றாலும் (இதனால் பலரும் கேலி செய்வார்கள்; சிரிப்பார்கள்; லட்சியம் செய்தது இல்லை) நேரம் சரியாக இல்லாதபோது என்னதான் கவனமாக இருந்தாலும் மாட்டிப்போமே. அதான்! இப்போச் சரியாகிவிட்டது ஆண்டனிடம் சக்தி ஒன்றையே கேட்கிறேன்.
Deleteஜவ்வரிசியில் பிரச்னை இருந்திருக்காது. நிலக்கடலை பிரச்னை செய்திருக்கும். எனக்கு எப்போதுமே கடலை ஆகாது!! அந்த நிலையிலும் விளக்கேற்றி நிறைவு செய்தது பாராட்டுக்குரியது.
ReplyDeleteமாமாவுக்கு ஜவ்வரிசி+வேர்க்கடலை இரண்டின் மீதும் சந்தேகம். கடலை எல்லாம் அடிக்கடி சாப்பிடுவோம். பச்சைக்கடலை வாங்கி வேக வைத்து, வறுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டிருக்கோம்/சாப்பிடுகிறோம். கடலை ஒத்துக்கும். இது ஜவ்வரிசியால் வந்ததுதான் என எண்ணம்.
Deleteசிலசமயங்களில் உணவு ஒவ்வாமை படுத்தி விடும். அண்ணன் மகன் திருமணத்தில் அந்த கலாட்டா சிலருக்கு ஏற்பட்டது தனிக்கதை!
ReplyDeleteஅப்படியா? திருமணம் நடந்து முடிந்தது பற்றி சந்தோஷம், பெண், மாப்பிள்ளையைக் குலதெய்வப் பிரசாதமாகப் பரிவட்டம் கட்டினப்போ எடுத்த ஃபோட்டோக்களை உங்க அண்ணா போட்டிருந்தார். பார்த்தேன். பெண், மாப்பிள்ளை ஜோடி நன்றாக இருக்கிறார்கள். அமைதியான சந்தோஷமான மணவாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள்.
Deleteஇப்போது முற்றிலும் குணமாகி விட்டதுதானே? வாந்தி வயிற்றுப்போக்கு உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.
ReplyDeleteஇரண்டு நாளாகப் பரவாயில்லை ஶ்ரீராம்.
Deletehttps://vimarisanam.com/2021/11/23/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/
ReplyDeleteவேறொரு ஐடிமூலம் இந்தக் கதை எனக்கு மெயிலில் வந்தது. படிச்சேன். சித்தப்பாவும் இதைக் குறித்துச் சொல்லி இருக்கார். அவரோட ஒரு அத்தை மதுரையில் இருந்தாங்க. அவங்க மூலமாகத் தான் சித்தப்பாவின் கல்யாணம் எங்க சித்தியோடு நிச்சயம் ஆனாது. விசித்திரம் என்னன்னா அந்த அத்தைக்கும் குழந்தைகள் இல்லை. தம்பி பிள்ளையைத் தான் (சித்தப்பாவின் சித்தப்பா பிள்ளை) ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டிருந்தார்.
Deleteஅன்புள்ள கீதாம்மா, கார்த்திகை தீபத்தின் ஒளி எங்கும் பரவி, நம் உள்ளங்கள் மகிழட்டும். உடம்பிற்கு முடியாமலும் இவ்வளவு செய்திருக்கிறீர்கள், நிச்சயம் உடல் ஆரோக்யத்தினை இறைவன் அருள்வார். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா.
ReplyDeleteவாங்க வானம்பாடி, நீண்ட நாட்கள் கழிச்சு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
Deleteகார்த்திகை தீபம் அழகாக இருக்கிறது.
ReplyDeleteஇந்த அளவில் பிரசாதங்கள் வைத்து வணங்கியதே மகிழ்ச்சி. நலமாக இருங்கள்.
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாதேவி.
Delete