எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 15, 2022

பொழுதை எப்படிப் போக்கிக் கொண்டிருக்கேன்?

பார்க்கணும்னு நினைச்சுட்டிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே இருக்கு. எதையும் பார்க்க உட்கார மனசு வரலை. ஆனால் இப்போதைய படங்களில் சில படங்களின் விமரிசனங்கள் பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றன. அவற்றில் காஷ்மீரி ஃபைல்ஸ் முதலிடத்திலும் Thursday படம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. எப்படியாவது பார்த்தாகணும் என்னும் பட்டியலில் இவை.  அதைத் தவிரவும் ஒரு சில மலையாளப்படங்கள் நன்றாக இருப்பதாக விமரிசனங்களில் படிச்சேன். தமிழ்ப்பட விமரிசனங்கள் அதிகம் காண முடியலை என்பதோடு வந்திருக்கும் ஒரு சிலவும் வழக்கமான அண்ணன்/தங்கை/பாசம்/இத்யாதி, இத்யாதி தான்!  தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த "கர்மா" தொடரே இன்னமும் முழுதாகப் பார்க்கலை. அது என்னமோ இப்போல்லாம் கணினியில் உட்கார முடியாத ஒரு போக்கு! உட்கார்ந்தால் சில நேரங்களில் உடனே மனம் சலிக்க ஆரம்பிக்கிறது. கட்டுப்படுத்திக் கொண்டு தொடருவேன். ஆனால் செய்ய நினைத்த வேலையைச் செய்யாமல் வேறே ஏதோ ஏதோ படிப்பது இல்லைனா புத்தகங்கள் படிப்பதுனு புத்தி மாறிவிடுகிறது.

அப்படி சமீபத்தில் நான் படித்த சில புத்தகங்கள் :இன்னொரு பெண் மனம்" சுஜாதா? நினைவில் இல்லை. ராஜம் கிருஷ்ணனின் "மலர்கள்" எத்தனாவது தரம்? சுமார் இருபது முறை படிச்சிருப்பேனோ?  இது ராஜ் தொலைக்காட்சியிலோ என்னமோ சுஜிதாவைக் கதாநாயகியாகப் போட்டுத் தொடராக வந்து கொண்டிருந்தது. ஆவலுடன் பார்க்க உட்கார்ந்தால் முதல் காட்சியே கொலை! கதைப்படி பதினைந்து வயதுப் பெண்ணான சித்ரா கள்ளம்/கபடு அற்றவள். அம்மா இல்லாமல் அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டு இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்காமல் இருக்க (அவ்வப்போது விசாரித்தாலும்) மாமன் வீட்டில் வளருகிறாள். மாமிக்கோ அகம்பாவம், கர்வம், அகங்காரம். சின்னப் பெண் என்னும் நினைவே இல்லாமல் கடுமையாக நடத்துகிறாள். அன்பில்லாமல் மனம் குன்றிப்போன சித்ரா படும் கஷ்டங்கள் தான் முக்கியக் கரு. எவ்வாறு அவள் மாமியால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறாள்/ அவள் வாழ்க்கையில் அதிலும் பள்ளி வாழ்க்கையில் ஓர் சம்பவம் நேரிட்டிருந்ததால் அவள் மனதில் ஏற்பட்ட பாதிப்பு. அதனால் தடைப்பட்ட திருமணம். பின்னர் அவள் எப்படி இதிலிருந்து மீண்டு வெளியே வருகிறாள், அதுவும் யாரால் என்பதுமே கதை!

இதிலே சித்ராவின் மாமா பிள்ளையாக வரும் மாது என்னும் கதாபாத்திரத்துக்கும் சித்ராவுக்கும் அண்ணன்/தங்கை உறவு தான் கதைப்படி. ஆனால் தொலைக்காட்சித் தொடரில் சித்ரா மாமா பிள்ளையைத் தான் திருமணம் செய்து கொண்டு மாமா வீட்டில் கோலோச்சுவதற்காகத் திட்டம் தீட்டுவதாகவும் அதற்காக ஒவ்வொரு காயாக நகர்த்துவதாகவும் காட்டி அப்பாவிப் பெண்ணான சித்ராவை சூழ்ச்சி நிறைந்த கதாநாயகியாகக் காட்டி! 2,3 நாட்கள் பார்த்துட்டு அப்புறம் ராஜ் தொலைக்காட்சிக்கே கும்பிடு போட்டுவிட்டேன். அப்போது திருமதி ராஜம் கிருஷ்ணன் உயிருடன் இருந்தாலும் உடல்/மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதைப் பற்றி அவருக்குத் தெரியலை என நினைக்கிறேன். உளவியல் ரீதியான ஒரு கதையை சூழ்ச்சி செய்யும் பெண்ணின் கதையாக மாற்றி விட்டார்கள். என்ன இருந்தாலும் இதிலே நம் அண்டை மாநிலமான கன்னடக்காரங்க, வடக்கே பாலிவுட்காரங்க இவங்க எடுக்கும்போது வரும்  (originality) சுயத்தை இழக்காமல் உள்ளதை உள்ளபடி எடுக்கும் திறமை தமிழ்ப்படங்களிலே வருவது கஷ்டம். இதற்கு உதாரணம் "சூரரைப் போற்று!" மற்றும்  "ஜெய்பீம்!" கதாநாயகருக்காக மாற்றப்பட்டவை அவை. 

இதைத் தவிரவும் வேறு சில புத்தகங்களும் படிச்சேன். நடுவில் ஆர்க்கி/ஆர்ச்சி காமிக்ஸையும் ஒரு ரிவிஷன் கொடுத்துக் கொண்டேன். தெய்வத்தின் குரல், உ.வே.சா.வின் நினைவு மஞ்சரி ஆகியவையும் அதில் உண்டு. அது போக மிச்சப் பொழுதில் நம்ம ரங்க்ஸ் ஒவ்வொரு யூ ட்யூபாக ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துச் சொல்லும் உணவுகள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்1 :) என்ன செய்யறது! எதுவோ சொல்வாங்களே! அது போல ஆச்சு நம்ம நிலைமை! பே.வா.பு.ஏ. என்பது தான்! இஃகி,இஃகி,இஃகி! இதை எழுதும் போது கமலா ஹரிஹரன் நினைவு வருது. அவங்களைத் தான் இன்னமும் காணவே இல்லை. நான் இப்படிச் சுருக்கெழுத்தில் எழுதுவதை அவங்க ரொம்ப ரசிப்பாங்க.  இப்போக் காணவே இல்லை. :( விரைவில் திரும்பி வந்து கருத்துரை கொடுக்கவும், பதிவுகள் கொடுக்கவும் பிரார்த்திக்கிறேன்.  சரி, சரி, விஷயத்துக்கு வரேன்.

அப்படி ஒரு யூ ட்யூப் சானலைப் பார்த்து நான் போன வாரம் வெள்ளியன்று பண்ணிய ஓர் உணவு சீராளம். சேச்சே, "சீராளன்" எல்லாம் இல்லைங்க. சிறுத்தொண்டரின் மகன் அவன்.  சிவபெருமான் வந்து பிள்ளைக்கறி கேட்டதும் சிறுத்தொண்டர் தன் மகனை வெட்டிச் சமைத்துப் போட்டார் இல்லையா? அது இல்லை இது! நல்லவேளையாகக் கடைசியில் "ன்" என முடியாமல் "ம்" என முடிஞ்சது. பிழைச்சோம்.  இது சீராளம். அதாவது இதில் எல்லாச் சாமான்களும் சம அளவில் சீராகச் சேர்க்கப்படுவதாக அந்த யூ ட்யூபில் வந்த பாட்டி சொல்கிறார். ஐயங்கார்ப் பாட்டி. கனகமோ என்னமோ பெயர். நம்மவர் எங்கே இருந்து இதை எல்லாம் தேடிக் கண்டு பிடிக்கிறாரோ தெரியலை. நான் எப்போவானும் பார்ப்பது ராகேஷ் ரகுநாதன் அல்லது வெங்கடேஷ் பட். தப்பினால் ஹெப்பார்"ஸ் கிச்சன். எல்லாமே என்னிக்கோ நினைச்சுண்டு  பார்ப்பேன்.   சரி, சரி, சீராளக்கதைக்கு வருவோமா!

இந்த சீராளத்துக்குத் தேவையான பொருட்கள் அரிசி, துபருப்பு, கபருப்பு, பாசிப்பருப்பு ஆகியவை மட்டும். உபருப்பு வேண்டாமாம். ஆனால் எனக்குப் பண்ணினதும் உபருப்புப் போட்டிருக்கணுமோ எனத் தோன்றியது. அதை அப்புறமாச் சொல்றேன்.

எல்லாம் சம அளவு எடுத்துக் கொண்டு களைந்து சுமார் 2,3 மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கணும். பின்ன்னர் அதில் தேவையான மிளகாய் வற்றல், உப்புச் சேர்த்துக் கொர, கொரவென அரைக்கணும். என்னவோ தெரியலை, பெருங்காயம் தேவையானால் சேர்க்கவும் என்றார்.  கொரகொரனு அரைச்சதும் (இதுவும் சரியா வரலை. கொஞ்சம் கூடத்தான் அரைக்க வேண்டி இருக்கு. அதுக்காக ரொம்பவே நைசா எல்லாம் இல்லை.) அரைச்சு மாவைப் புளிக்க வைக்கலாம். அல்லது கொஞ்சம் போல் புளித்த தயிர் சேர்க்கலாம். தயிரிலேயே ஊற வைத்தாலும் நல்லது என்றார் அந்தப் பாட்டி.  இப்போ அரைத்த விழுதை ஒரு வாயகன்ற பேசின்/தட்டு அல்லது குக்கரில் சாதம் வைக்கும்/பருப்பு வைக்கும் வாயகன்ற கிண்ணம் ஏதேனும் ஒன்றில்  பாத்திரத்தில் அடியில் எண்ணெய் தடவி விட்டு மாவைப் பரத்தலாகக் கொட்ட வேண்டும். பின்னர் இட்லித் தட்டில் அல்லது அலுமினியம் கடாயில் நீர் ஊற்றிக் கொண்டு கொதிக்க வைத்து அடியில் ஓர் ஸ்டான்டைப் போட்டுவிட்டு மாவு பரத்திய தட்டை அதன் மேல் வைச்சுட்டு ஓர் மூடியைப் போட்டு நன்கு மூடவும்.

சிறிது நேரத்தில் ஊறிவிடும். எல்லாம் உளுந்துக் கொழுக்கட்டைக்கு உளுந்துப் பூரணம் செய்யறதில்லையா? அதே மாதிரித் தான். வெந்ததை வெளியே எடுத்து ஆற வைக்கவும். அதைத் துண்டங்கள் போடவும். பின்னர் ஓர் கடாயில் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, பெருங்காயம் (நான் சேர்த்தேன். அரைக்கும்போதும்) கருகப்பிலை தாளித்துக் கொண்டு துண்டங்களாக நறுகிய சீராளத்தைப் போடவும். கொஞ்சம் வறுத்துக் கொண்டு மேலே இன்னும் நல்லெண்ணெய் ஊற்றித் தோசை மிளகாய்ப் பொடியை நன்கு பரவலாகத் தூவவும். (தும்மல் வந்தால் நகர்ந்து வந்து வாயை மூடிக் கொண்டு தும்மிக் கொள்ளவும்.) மிளகாய்ப் பொடி போட்டதும் நன்கு கிளறிஎல்லாம் சேரும் வரை வதக்கிக் கொண்டு இப்போது அதன் மேல் தேங்காய்த் துருவல், பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். எல்லாம் நம்ம டோக்ளாவுக்கு அண்ணன் தான் இது. டோக்ளாவும் ஒரு காலத்தில் அரைத்துத் தான் பண்ணியதாகச் சொல்வார்கள். 

இதை வேக விட்டு எடுத்துத் துண்டம் போடும்போது கொஞ்சம் தூள் வருகிறது. அதே போல் எண்ணெயில் வறுக்கும்போதும் தூள் வருகிறது. உளுந்து சேர்க்காததால் மாவு சேர்ந்துக்கலையோனு எனக்கு எண்ணம் . இன்னொரு முறை உளுந்தும் சேர்த்துப் பண்ணிப் பார்க்கணும். ஆனால் உளுந்தும் சமமாகப் போட்டால் சரியாக வராது. யோசிக்கணும் என்ன திப்பிசம் பண்ணலாம்னு. இது கொரகொரனு அரைப்பதால் துண்டங்கள் உதிர்கின்றனவோ என எனக்கு எண்ணம். படங்கள் எடுக்க முடியலை அன்னிக்கு.  கு.கு. ரன்னிங் ரேஸுக்குப் போன வீடியோ வந்ததாலே அதைப் பார்ப்பதும் உள்ளே வருவதுமாக இருந்ததில் படம் எடுக்கலை. ஏன்னா அந்த மொபைலில் தானே படங்கள் வந்திருந்தன.  அப்புறமாக் கு.கு.வைப் பார்க்க முடியாதே!



படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மாலை மலர்

கடைசியிலே பார்த்தா (ஆரம்பத்திலே இருந்து தான்.) எப்போவானும் திங்கறதுக்கு வேணும்னு கேட்டால் அம்மா வீட்டில் இட்லி மாவு இருந்தால் இட்லியாக வார்த்துக் கொண்டு அந்த  இட்லியை இப்படித் துண்டங்கள் போட்டு நல்லெண்ணெய் விட்டு தோசை மிளகாய்ப் பொடி போட்டு அம்மா வறுத்துச் சாயந்திரவேளைகளிலே தருவார். அது மாதிரித் தான் இதுவும்.  தாமதமாகத் தானே நமக்கெல்லாம் மூளையில் ஏறும்.


45 comments:

  1. தமிழில் மட்டும் நடிகர்களுக்காக கதை செய்யப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை கில்லர்ஜி!

      Delete
  2. பொழுது நல்லா போய் உள்ளது.
    நானும் சில படங்கள் பார்த்தேன்.
    கொஞ்சம் புத்தகம் வாசித்தேன் உங்களை போல

    கமலா ஹரிஹரனுக்கு மகன் வந்து இருக்கிறார் வெளி நாட்டில் இருந்து அதனால் அவர் ஊருக்கு திரும்புவரை இங்கு வர முடியாது என்று சொன்னாரே! வீட்டில் சில மாற்றங்கள் நடக்கிறது என்றார். பொழுது சரியாக இருப்பதாக சொன்னார்.

    சீராளம் நன்றாக இருக்கிறது.
    மகன் மாலை நேரம் காலை செய்த இடலிகளை துண்டம் போட்டு குடைமிளகாய், வெங்காயம் போட்டு மிள்காய் வற்றல் கிள்ளி போட்டும், இட்லி மிளகாய் பொடி போட்டும் தாளித்து தருவான்.

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னமும் எந்தப் படமும் பார்க்கலை. சேர்ந்தாற்போல் உட்காருவது முடியறதில்லை. :)))) கமலாவின் மகன் வந்திருக்கார் என்பதும் கேள்விப் பட்டேன். அதனால் இன்னமும் வரலையா? சரி, மகனோடு இனிமையான பொழுதகளாகக் கழியட்டும். நீங்க சொல்ற மாதிரி இட்லியைக் காய்கள் போட்டு நானும் பண்ணுவேன்.

      Delete
  3. /தாமதமாகத் தானே நமக்கெல்லாம் மூளையில் ஏறும்./

    இந்த ஒரு வரி பத்தி நிறையாப் பேசலாமே மதர். பேசுவோமா? :))))))

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரஓஓஓஓஓஓஓஓஓஓஓ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. பேசாமல் பேக் செய்தோமா/சாப்பிட்டோமானு இல்லாமல்! வம்பு! இ.கொ. இருக்கு உங்களுக்கு! :))))

      Delete
  4. காஷ்மீர் பைல்ஸ்  நானும் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  தர்ஸடே என்ன என்று தெரியவில்லை.  என் லிஸ்ட்டில் மகாராணி அடுத்தது!

    ReplyDelete
    Replies
    1. மஹாராணியும் பார்க்கணும்தான். தர்ஸ்டே பெண்கள் முக்கியமாய்க் குழந்தைகள் படும் பாலியல் துன்பம்.

      Delete
  5. கணினியில் உட்கார எனக்கு அதே மாதிரிதான் இருக்கிறது.  ப்ளஸ் கடுமையான கால்வலி.  எனவே குறைவாகத்தான் கணினியில் அமர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இப்போவும் மனசு என்னமோ போய்ப் படுத்துக்கோ என்கிறது. பிடிவாதமாய் உட்கார்ந்திருக்கேன். கால்வலியை உடனே கவனிங்க.

      Delete
  6. மகன் ஊரிலிருந்து வந்திருந்தாலும் கமலா அக்கா நடுவில் ஒருமுறை வந்த்து செல்லலாம் என்று எனக்கும் தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல! நேரம் கிடைக்கலையோ என்னமோ! நானெல்லாம் ஒரு அரைமணி/ஒரு மணியாவது உட்கார்ந்துடுவேன். :))))

      Delete
  7. சீராளமா?  எதுவும் செய்யும் மூடிலேயே இல்லை.  கொஞ்ச நாள் போகணும் எல்லாவற்றுக்கும்!  ஏனோ, எல்லாவற்றிலும் ஒரு சலிப்பு.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் மருமகள்கள் வந்து உங்கள் மனச்சோர்வைப் போக்கட்டும். உங்க வீட்டு தேவதை பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தீங்க. இன்னும் ஏதும் வரலை.

      Delete
  8. பொழுதுகள் இனிமையாக அமையட்டும்!..

    நலமே வாழ்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க தம்பி, நன்றி.

      Delete
  9. மனதை திடப்படுத்திக் கொண்டுதான் காஷ்மீர் ஃபைல்ஸ் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.‌
    சீராளன் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நினைவில் வைத்துக் கொண்டு வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி. அது சீராள"ன்" இல்லை. சீராளன் சிறுத்தொண்டரின் மகன். இது சாப்பிடும் தின்பண்டம் சீராள"ம்".

      Delete
  10. காஷ்மீர் ஃபைல்ஸ் பார்க்க நினைத்திருக்கும் படம். பார்க்க வேண்டும். படம் குறித்த சில செய்திகள் படித்திருக்கிறேன் - இங்கே காஷ்மீர் பகுதியிலிருந்து விலகி, இங்கேயே தங்கிவிட்ட சில நண்பர்களிடம் பேசித் தெரிந்து கொண்ட சில விஷயங்களும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. இங்கே தமிழகத்தில் சென்னையில் ஒரு திரை அரங்கில் போடுகிறார்கள். முகநூலில் அழைப்புகள் வந்த வண்ணம்.

      Delete
  11. சீராளம் ஏராளமாகப் பண்ணியிருக்கீங்க. மீந்ததை வைத்து என்ன திப்பிசம் பண்ணினீங்க?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அவ்வளவு அழகாக் கவனம். அந்தப் படம் இணையத்திலிருந்து சுட்டதுனு சொல்லி இருக்கேனே கவனிக்கலை. நான் கொஞ்சமாய்த் தான் நனைச்சேன். சாதம் கொஞ்சம் இருந்தது. இதைப் போட்டுத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுட்டோம். நிறையப் பண்ணி மிஞ்சும்படி மாவு அரைக்கவில்லை.

      Delete
  12. கமலா ஹரிஹரன் மேடம் வந்து நாளாகிவிட்டது.நன்றாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக இருக்கட்டும். பாவம், உடம்பும் குணமாக இருந்தால் இன்னும் நல்லது.

      Delete
  13. அக்கா காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வந்திருக்கிறது தெரிந்தது. நானும் பார்க்க நினைத்துள்ளேன். படம் பத்தியும் வாசித்தேன். மகன் வழி எனக்குத் தெரிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆனால் இப்போது அங்கில்லாதாவர்களிடம் சில அறிந்ததும் உண்டு. யாதோரமணி சகோவும் எழுதியிருக்கிறார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, ரமணி அவர்களின் வலைப்பக்கமும் பார்த்தேன். ஒரு வாரமாக முகநூலில் இதைப் பற்றிய விமரிசனங்கள் தான்.

      Delete
  14. சீராளம் நம் வீட்டில் பிடித்த ஒரு விஷயம். மகன் இருந்தப்ப செய்வேன் அவனுக்கு ஸ்பூன் போட்டுச் சாப்பிட வசதியாக இருக்கும் என்றும் வயிறு பசி அடங்கும் என்றும்...அவன் இங்கிருந்த போது க்ளினிக்கில் வேலை செய்த சமயத்தில். பெரும்பாலும் அங்கேயே தங்கிவிடுவான் என்பதால்.

    போன வாரம் அப்பா கேட்டார் என்று செய்து கொடுத்தேன். அக்கா, இது நம் அடை மாவு டோக்லாவாகி...அல்லது அடை இட்லி...அடை இட்லி மீந்தால் அது இட்லி துண்டும் போட்டு செய்வோமே அப்படித்தான். நம் வீட்டில் இதை அடை டோக்லா என்பான் மகன். இது போல காஞ்சிபுரம் இட்லி கூட அவனுக்காகத் துண்டு போட்டு இப்படிப் புரட்டிக் கொடுப்பதுண்டு.

    நான் உளுந்து கொஞ்சம் சேர்த்துக் கொள்வேன் கீதாக்கா. இல்லை என்றால் மென்னை அடைக்கிறது என்பான் மகன் அதுவும் அவன் உடனே சாப்பிட முடியாதே எப்போது டைம் கிடைக்குமோ அப்பத்தானே ....அதனால் உளுந்து சேர்த்தால் நன்றாகவே வரும்...பருப்பு டோக்லா!!!!!!! இதுக்குப் போய் ஏன் சீராளம் னு பெயரோ??!!!!ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் பெயரைக் கேள்விப் பட்டிருக்கேனே தவிரப் பார்த்ததும் இல்லை/பண்ணினதும் இல்லை/சாப்பிட்டதும் இல்லை. இது தான் முதல் முறை.

      Delete
  15. நன்றாக வந்திருக்கு அக்கா உங்களுக்கு. நானும் கொர கொர என்று ஆய்க்க மாட்டேன் பாம்பே ரவை பக்குவத்துக்கு அரைப்பதுண்டு. அது போல பாசிப்பருப்பு இட்லி அதுவும் இப்படிச் செய்வதுண்டு நீங்க சொல்லியிருப்பது போல டோக்லா தான்...நம்ம கற்பனைதானே அக்கா...

    ஆனால் எனக்கு இப்போது மனம் அத்தனை சுவாரசியமாக இல்லை. எதுவும் செய்வதில் ஒரு ஆர்வமில்லாமல் போகிறது.

    கமலாக்கா பிஸி போல...பாவம் அவங்க சீக்கிரம் வர வேண்டும். கமலாக்காவின் வணக்கம் சகோதரி/சகோதரரே பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாசிப்பருப்பு இட்லி இங்கே போணி ஆகலை. அதனால் விட்டுட்டேன். டோக்ளா நிறையச் செய்து கொண்டிருந்தேன். இப்போ என்னமோ அலுப்பு! :(

      Delete
  16. நீங்கள் தேங்காய் பூ போட்டு எடுத்துள்ளீர்கள்.

    சீராளம் நாங்கள் அரிசி போடாமல் உழுந்தும் சேர்த்து அரைத்து அவித்து துண்டங்கள் ஆக்கி ஆயிலில் வறுத்து எடுத்து வைத்து, ஆயிலில் கடுகு,வெங்காயம் காய்ந்தமிளகாய் ,கறிவேற்பிலை வதக்கி தேங்காய்பால் உப்பு , மிளகாய்பொடி ,மசாலாப்பொடி கலந்து கொதிக்க வறுத்த துண்டங்களை கொட்டி பிரட்டல் கறியாக எடுப்போம்.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு சுவையாக இருக்கும் போல. கொஞ்சமாகச் செய்து பார்க்கணும். நன்றி மாதேவி.

      Delete
  17. காலை வணக்கம் சகோதரி

    நலமா? எப்படியிருக்கிறீர்கள்? நானும் நலம் பெற்று வருகிறேன். நேற்று இரவு உங்கள் பதிவை படித்தேன். பதிவில் என்னை குறிப்பிட்டு உங்களின் அன்பான எண்ணங்களை குறிப்பிட்டிருந்தை கண்டதும் என் மனமும் உங்கள் அன்பை நினைத்து கலங்கி விட்டது. உங்கள் பதிவுக்கு வந்த கருத்துரைகளிலும் நீங்கள் அனைவரும் (சகோதரிகள் கோமதி அரசு, கீதாரெங்கன் சகோதரர்கள் ஸ்ரீராம், நெல்லைத் தமிழர்)
    என்னை நினைத்த வண்ணம் இருப்பதை கண்டதும் உங்கள் அனைவரின் அன்பை நினைத்து நான் மிகவும் சந்தோஷமடைந்து விட்டேன். இந்த அன்பான உறவுகளை தந்த இறைவனுக்கு எப்போதும் என் பணிவான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. உங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி.உடல் நலம் பூரணமாகக் குணமாகப் பிரார்த்தனைகள். உங்கள் பேரன்/பேத்திகளோடும் இனிமையான பொழுதாகக் கழியவும் பிரார்த்தனைகள். உங்களை நினைத்துக் கொண்டு தான் இருந்தோம். யாருமே மறக்கலை.

      Delete
  18. வணக்கம் சகோதரி

    தங்கள் எண்ணங்களின் பதிவு அருமையாக உள்ளது. தினசரி கடமைகள் போக இடைப்பட்ட பொழுதை நீங்கள் விவரித்திருந்தது சுவாரஸ்யமாக இருந்தது.

    உங்கள் சுருக்கெழுத்து வார்த்தைகள் சுவாரஸ்யமானதுதான்.நானும் பிறந்த வீட்டில் இருக்கும் போது அண்ணா மன்னியுடன் எல்லாவற்றிற்கும் இப்படி பேசுவோம்..இன்றைய உங்கள் பதிவில் இருந்த வார்த்தைக்கும் அர்த்தம் விளங்கியது.:)

    சீராளம் செய்முறையை அழகாக நகைச்சுவையுடன் விளக்கியிருக்கிறீரகள். இறுதியில் தாங்கள் முற்றுப்புள்ளியாய் கூறியிருப்பது சரியானது.மிகவும் ரசித்தேன்.
    ரெசிபியின் செய்முறையை படம் எடுக்காதது பெரிய தப்பில்லை. என்ன வீட்டு வேலையிருந்தாலும், நம்மை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் பேத்தியின் ரன்னிங் செயல்களைப் பற்றிய வீடியோவை பார்க்காது இருக்க முடியுமா? முதலில் அதுதானே முக்கியம். உங்கள் பேத்தி,மகன்,மருமகள் அனைவரும் நலமாக உள்ளார்களா? அனைவரையும் நானும் விசாரித்ததாக கூறவும். நானும் இப்போதைக்கு இப்படி நடுநடுவே அனைவரின் பதிவுகளுக்கு வர முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, தினசரி கடமைகள் எப்போதும் உள்ளவை தானே. அது போக மிச்சம் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கணும். ஆனால் அப்படிப் போகிறதில்லை. ஏதோ வெட்டியாய்ப் போகிறது. குழந்தை மூன்றாம் இடத்தில் தான் வந்தாள். ஆகவே ஆறுதல் பரிசும் ஒரு சான்றிதழும் கொடுத்தார்கள். மற்றபடி அனைவரும் நலமாக இருக்கிறார்கள்.

      Delete
  19. பல வருடங்களாக சீராளம் செய்வதுண்டு. ஆனால் செய்முறை வேறு மாதிரி. பருப்புகளை [ துவரம்பருப்பு, கடலைப்பருப்பு] ஊற வைத்து இப்படித்தான் துண்டங்கள் செய்ய வேண்டும். கொஞ்சம் புளி ஊற வைத்துக்கொள்ள வேண்டும். சாம்பார்ப்பொடி போல ஒரு பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு, உ.ப தாளித்து கொஞ்சம் சி.வெங்காயம், தக்காளி வதக்கி புளி கரைத்து விட்டு, தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கெட்டிப்பட்டதும் இந்தத்துண்டங்களைப்போட்டு மல்லி கறிவேப்பிலையுடன் கிளறி சாப்பிட வேண்டியது தான். இதையே பருப்புகள் இல்லாமல் இட்லி துண்டங்களில் செய்தால் இட்லி சீராளம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! உங்கள் செய்முறையும் புதிதாக இருக்கிறது. இப்படியும் செய்யலாம் என்பதே இப்போத் தான் தெரிந்து கொண்டேன். இட்லியைத் துண்டங்கள் போட்டு நல்லெண்ணெயில் மிளகாய்ப்பொடி (இட்லிப்பொடி) சேர்த்து நன்றாக வறுத்து அம்மா கொடுத்திருக்கார். ஆனால் அதன் பெயரெல்லாம் அப்போவும் இப்போவும் இதைப் பார்க்கும் வரை தெரியாது, :))))

      Delete
  20. திடீரென்று ஒரு சூப்பர் மார்கெட்டில் பச்சை மஞ்சள் வாங்கினேன். அதை பத்திரமாக தஞ்சைக்கும் எடுத்து வந்திருக்கிறேன். நாலைந்து நாட்களில் பச்சை மஞ்சள் ஊறுகாய் செய்து விட்டு சொல்கிறேன். பச்சை வேர்க்கடலை தேடிப்பிடித்து வாங்கியதும் செய்ய வேண்டிய தான்!

    ReplyDelete
    Replies
    1. பச்சை மஞ்சள் தஞ்சையிலேயே கிடைத்தாலும் கிடைக்கும். பச்சை வேர்க்கடலை என்றால் மேல் தோலுடன் என நினைத்து விட்டீர்களோ? தோலை நீக்கி வறுக்காமல் காய வைத்தது எல்லா மளிகைக்கடைகளிலும் கிடைக்குமே! ஒண்ணும் பிரச்னை இல்லை. அல்லது பொரி வறுக்கும் கடைகளில் வறுக்காத வேர்க்கடலை எனக் கேட்டும் வாங்கலாம்.

      Delete
    2. வெளியில் கிடைக்கும் வறுக்காத கடலை வாங்கினால் ஊற வைத்து தானே ஊறுகாயில் சேர்க்க வேண்டும்?
      பச்சை வேர்க்கடலை வாங்கினால் மேல் தோலை உரித்து அப்படியே சேர்க்கலாம் தானே? அது இன்னும் சுவையாக இருக்குமென நினைத்தேன். ஆனால் மாங்காய் இஞ்சி இப்போ கிடைக்குமா என்று தெரியவில்லை! மாங்காய் கூட முற்றியதாய் கிடைக்க கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். இப்போது கிடைப்பது துண்டுகளாய் அரிந்து போட்டு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து உப்புடன் சேர்த்து பிசிறி சாப்பிடும் ரகம். அது பரவாயில்லையா?

      Delete
    3. ஊறவெல்லாம் வைக்க வேண்டாம். அப்படியே நன்கு கழுவி விட்டுச் சேர்க்கலாம். விரைவில் ஊறிடும். மாங்காய் இஞ்சி இங்கே எங்களுக்கும் கிடைக்கலை. அதனால் சேர்க்கலை இந்த வருஷம். மாங்காய் வருஷம் பூராவும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பதால் பிரச்னை இல்லை. உருண்டை மாங்காய்களிலேயே கொட்டை பிடித்து இருக்கும் சிலவற்றில். அவை சரியாக இருக்கும்.

      Delete
  21. அன்பின் கீதாமா,

    நலமுடன் இருங்கள்.
    உங்கள் பதிவைப் பார்க்காமலேயே விட்டு விட்டிருக்கிறேன்.

    மலர்கள் தொடர் வருகிறதா?
    இதென்ன அப்பட்டமாகத் தப்பாக எடுத்திருக்கிறார்களே.:(

    பாவம் ராஜம் கிருஷ்ணன். சித்ரா, மாது எல்லோரும் மனசுக்கு நெருங்கியவர்கள்.

    சீராளம் படிக்கவே ஜோராக இருக்கிறது.
    ஆமாம் உசிலிக்கு அரைத்து வேக விடுவதைப் போல
    ஆனால் மாறுதலாக எல்லாப்
    பருப்புகளும் இடம் பெறும் பண்டம்.

    கனகாப் பாட்டி ஆந்திராக் காரர். செய்முறை வேறு விதமாகத் தான்
    இருக்கும்.

    குட்டிக் குஞ்சுலு ரன்னிங்க் ரேஸ் பரிசு பெற்றது
    மிக மகிழ்ச்சி. நன்றாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. உடல் நலமாக இருக்கீங்களா? அதனால் என்ன! எப்போ நேரம் கிடைக்குமோ அப்போ வந்து படிச்சுக் கருத்துச் சொல்லுங்க. மலர்கள் தொலைக்காட்சித் தொடர் சுமார் பதினைந்து வருடங்களுக்கும் முன்னால் ராஜ் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்தது. ஓரிரண்டு தான் பார்த்திருப்பேன். பிடிக்கலை. கனகாப்பாட்டி ஆந்திராக்காரரா? அதான் காரமும்! குட்டிக் குஞ்சுலுவுக்கு இம்மாதிரி ரேஸ், ஓடுவது என்பதை விடப் puzzles போட்டு விடுவிப்பது தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒவ்வொண்ணா ஆர்வத்துடன் கண்டு பிடிக்கிறது.

      Delete