எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 03, 2022

ஊறுகாய், ஊறுகாய், மஞ்சளில் ஊறுகாய்!




















 மஞ்சள்+எலுமிச்சை+இஞ்சி+மாங்காய் இஞ்சி(விரும்பினால்)+மாங்காய்+வேர்க்கடலை+ பச்சைப் பட்டாணி+பச்சை மிளகாய் சுமார் ஒரு பத்து. சிறிதாக இருந்தால் அடியில் குறுக்கே நறுக்கிச் சேர்க்கலாம். பெரிதாக இருந்தால் இரண்டாகக் கீறிப் போடலாம்.

உப்பு தேவையான அளவு

பெருங்காயத் தூள்  அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய்  அரைக்கிண்ணம்

மிளகாய்த் தூள்  3 டீஸ்பூன்

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

கடுகு, வெந்தயப் பொடி  ஒரு டேபிள் ஸ்பூன்





எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொண்டு ஒன்று சேர்த்து மேற்சொன்ன சாமான்களையும் சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறும் தேவையானால் 2 அல்லது 3 பெரிய பழங்களின் சாறைச் சேர்த்து அதன் தோலையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். எப்படி ஆனாலும் எலுமிச்சம்பழமும் போட்டால் நல்லது. ருசி நன்றாக இருக்கும். நல்லெண்ணெய்/கடுகு எண்ணெய் இரண்டுமே ஊறுகாய்க்கு ஏற்றது என்றாலும் நமக்கெல்லாம் நல்லெண்ணெய் தான் பிடிக்கும். இந்தப் படங்களிலே ஊறிய வேர்க்கடலையும் பச்சைப் பட்டாணியும் நன்றாகத் தெரியும். கொஞ்சம் சிவந்த நிறத்தில் தெரிவது தான் தோல் சீவிய பச்சை மஞ்சள். மாங்காய், எலுமிச்சைத் துண்டுகள், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாமும் தெரியும். 

இந்தப் பதிவைப் படங்கள் இணைத்து வெளியீடு செய்ய மத்தியானத்தில் இருந்து முயன்று மின்சாரத் தடை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஆகவே முன்னர் எழுதின சில விபரங்கள் சேமிப்பில் இல்லை. என்றாலும் எழுதினவரை கோர்வையாய் இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தை ஶ்ரீராமுக்குத் திங்கக்கிழமைக்குப் பதிவு அனுப்பினப்போ கொடுக்க மறந்துட்டேன். பின்னர் தரேன்னு சொல்லிட்டு அதுவும் மறந்துட்டேன். இப்போ அந்தப் பதிவில் மனோ சாமிநாதன் ஊறுகாய்ப் படம் எங்கேனு கேட்டு அவங்களிடம் உடனே அனுப்பறேன்னு சொல்லிட்டு என்னோட வயிறே பிரதானம்னு 2 நாட்கள் படுத்துட்டேன். நேற்றுத் தான் மறுபடி நினைவு வந்தது. இப்போப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். அந்தப் பதிவோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். 

22 comments:

  1. ஹையோ...    படம் செம கலர்புல்லா இருக்கு.  பார்க்கவே ஆசையா இருக்கு...

    ReplyDelete
  2. நாவூறும் ஊறுகாய் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி.

      Delete

  3. ஆஹா இது அந்த பட்டாணி கடலை ஊறுகாய் ரிசிப்பி... உங்க ரிசிப்பி பார்த்த மறுநாள் நான் ஊறுகாய் தயாரித்தேன் ஆனால் அதில் கடலை பட்டாணி சேர்க்க மறந்துட்டேன்.... அடுத்த தடவை தயாரிக்கும் போது ஞாபகத்தில் வைக்கனும்

    ReplyDelete
    Replies
    1. செய்ங்க, செய்ங்க! அந்தக்காரம், புளிப்பு சேர்ந்து நன்றாக ஊறினால் மிக ருசியாக இருக்கும்.

      Delete
  4. அருமையான படம். ஊறுகாய் நன்றாக இருக்கிறது.
    உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, கொஞ்ச நாட்களாகவே நித்யகண்டம், பூர்ணாயுசு தான்! :( இரண்டு நாட்களாகப் பரவாயில்லை.

      Delete
  5. கீதாக்கா ஊறுகாய் படம் வாவ்!!!! செமையா இருக்கு

    நான் கடலையும் பட்டாணியும் போட்டதில்லை மத்தபடி இது போட்டிருக்கேன். இந்த முறையும் பொங்கல்லப்ப வாங்கினதுல கொஞ்சம் இப்படியும் (நிக, ப போடாமல்) கொஞ்சம் நீர் நெல்லி போடுவது போலவும் நீர் நெல்லி போல்வும் போட்டேன். தீர்ந்து போச்சு. ஆமாம் பராத்தா, சப்பாத்திக்கு ரொம்ப நன்றாக இருக்கும்,

    இப்ப ஆரஞ்சு தோலை நீர் நெல்லி போல, ஊறுகாயாகவும் போட்டுவைத்திருக்கிறேன் கொஞ்சம் தான் இங்கு ஊறுகாய் செலவு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பக் கம்மி

    நீங்க திங்க வில் கொடுத்த பதிலுக்கு அங்கு சொல்ல முடியலை இங்கு...

    கொண்டைக்கடலை நான் ஆவாக்காயோடும் வெஜிட்டபிள் ஊறுகாயில் போட்டதுண்டு. நன்றாக இருக்கும் ஊறி.

    அது போல ஆரஞ்சு தோல் ஊறுகாய்க்குக் கொஞ்சம் வெல்லம் போடுவேன்.

    மஞ்சள் கிழங்கை பொடியாக நறுக்கி புளிக்குழம்பு தான் போலப் போட்டுச் செய்வதுண்டு. நன்றாக இருக்கும்

    அங்க நீங்க கொடுத்திருக்கும் லிங்க் போய் பார்க்கிறேன் கீதாக்கா. அதை நோட் செய்துகொண்டு இருக்கிறேன்.

    நேரம் சரியா இருக்கு. வந்தா சின்ன கருத்தா போட்டுட்டுப் போயிடவும் முடியலை!!!! ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, ஆரஞ்சுத் தோல் குழம்பு, பச்சடி, துவையல் எல்லாம் பண்ணி இருக்கேன். நீர் நெல்லி போல் போட்டதில்லை. நாரத்தங்காயையும் முழுசாக நறுக்கிப் பச்சடி, குழம்பு பண்ணுவேன். ஆவக்காயில் என் அம்மா கொண்டைக்கடலை போடுவார். நான் இங்கே போட்டதில்லை. மாமாவுக்குப் பிடிக்கிறதில்லை என்பதால். நான் ஆவக்காய் ரசிகை அல்ல என்பதால் சும்மா வெந்தயம், கடுகுப்பொடி, மிளகாய்ப்பொடி உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி வைச்சுடுவேன்.

      Delete
  6. கீதாக்கா உங்கள் வயிறு ஏன் இப்படிப் படுத்துகிறது? இப்ப ஓகேவா? உங்கள் மகளுக்கும் படுத்துகிறது என்று சொல்லியிருந்த நினைவு. அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கிறது?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மகள் சுமார் ஒரு வருஷமாகக் கஷ்டப்படுகிறாள். கொரோனா ஆரம்ப கட்டத்தில் பால் நிறையச் சாப்பிட்டது, பால் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொண்டதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. ஆனால் ஆரம்பத்தில் பார்த்த மருத்துவர் தவறாக டயக்னைஸ் செய்து சிகிச்சை கொடுத்ததில் மருந்து ஒத்துக்கொள்ளாமல் பிரச்னை ஏற்பட்டுப் பின்னர் இந்திய /ஆந்திர மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக்கறா. இங்கே வரச் சொன்னோம். நல்லவேளை வரலை, நான் ஜூன் மாதமே படுத்துட்டேனே! செப்டெம்பர் வரை எனக்குப் படுத்தல். இப்போவும் டயட்டிங்கில் தான் இருக்கா. மிக மோசமாக எடை குறைந்திருக்கிறது. என்ன செய்ய முடியும்? அவளும் இங்கே வர முடியாது. நாங்களும் அங்கே போக முடியாது. போய்ப் படுத்துண்டால் அவங்களுக்குத் தானே கஷ்டம்.

      Delete
    2. Irritable bowl syndrome, GERD, Amebiasis இதிலே எந்தப் பெயர் வேணா வைச்சுக்குங்க. எனக்குக் கொஞ்சம் தண்ணீர் மாறினாலும் பிரச்னை வந்துடும். அதிலும் பிஸ்லேரி தண்ணீர் ஒத்துக்கவே ஒத்துக்காது. சமையல் எண்ணெய் சிலது ஒத்துக்காது. சுட்ட எண்ணெயும் சுத்தமாய் ஒத்துக்காது. பருப்பு வகைகள், கிழங்கு வகைகள் ஒத்துக்கறதில்லை.சே.கி. சே.கி இரண்டுமே சுத்தம்! ஆகவே வாங்கினால் சும்மாக் கொஞ்சம் போல் பயந்து பயந்து. பல சமயங்களிலும் இந்த வயிற்றுநோயோடு ஆஸ்த்மா தொந்திரவும் சேர்ந்து கொண்டு ஒரே கொண்டாட்டம் தான். இம்முறையும் அப்படித் தான் இருக்கு. :))))) எஞ்சாய் பண்ணட்டும்.

      Delete
  7. சூப்பராக இருக்கிறது. எனக்காக படத்தை வெளியிட்டதற்கு அன்பு நன்றி! கில்லர்ஜி சொல்லியிருப்பது போல உண்மையிலேயே நாவூறுது!!
    இந்த ஊறுகாய் எல்லாம் நன்றாக ஊறி உபயோகிக்க எத்தனை நாளாகும்?

    ReplyDelete
    Replies
    1. இதில் எலுமிச்சை, மாங்காய், பட்டாணி, வேர்க்கடலை ஆகியவற்றை நான்கு நாட்கள் முன்னரே உப்பு, பெருங்காயம் சேர்த்து ஊற வைச்சுடுங்க. உங்களுக்கு என்னிக்கு ஊறுகாய் தயாராகணுமோ அன்னிக்கு மஞ்சள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு நல்லெண்ணெயில் நன்கு வதக்கிச் சேருங்க. வதக்கும்போதே தேவையான உப்பைச் சேர்த்துடலாம். பின்னர் வதக்கியதை ஊறினவற்றோடு சேர்த்துக் கிளறிக் கொண்டு தேவையான மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, சர்க்கரை ஒரு மேஜைக்கரண்டி ஆகியவை சேர்த்துக் கிளறி நல்லெண்ணயைப் பொங்கக் காய்ச்சி ஆறியதும் சேர்த்துக் கிளறி விட்டு உடனே பயன்படுத்துங்க. எலுமிச்சை எல்லாம் முன்னரே ஊற் இருப்பதால் மற்றக் காய்களையும் வதக்கி இருப்பதால் உடனே சாப்பிடலாம். இங்கே காட்டிய படத்தில் உள்ள ஊறுகாயை நான் அப்படிப் போடவில்லை. எல்லாவற்றையும் நறுக்கிச் சேர்த்துத் தேவையான காரப்பொடி+உப்பு+பெருங்காயம்+சர்க்கரை சேர்த்து நல்லெண்ணையைக் காய்ச்சி ஊற்றி வெளியேவே நாலைந்து நாட்கள் வைத்து தினம் தினம் எடுத்துக் கிளறி விடணும். நான்கைந்து நாட்களிலே சாப்பிடத் தயாராகும்.

      Delete
  8. மறுபடியும் அழகாக, விரிவாக எழுதியிருக்கிறீர்கள். அன்பு நன்றி. வெளியேயே வைக்க சொல்லியிருக்கிறீர்கள். சும்மா வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கலாமா? அல்லது வெள்ளைத்துணியால் வேடு கட்டி வெய்யிலில் வைத்து எடுக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. நல்ல வெயில் கிடைத்தால் வெயிலில் வைக்கலாமே/பிடிக்கும் எனில். எங்க வீட்டில் அவருக்கு வெயில் வாசனை ஊறுகாயில் வருது என்பார். ஆகவே எந்த ஊறுகாயையும் வெயிலில் வைப்பதில்லை. என் பாட்டி (அம்மாவின் அம்மா) ஊறுகாய் போடுவதில் சிறந்தவர். அவர் வெயிலில் வைத்துத் தான் எடுப்பார். வேடு கட்டியும் வைக்கலாம்.

      Delete
  9. வயிற்றுப்பிரச்சினைகள் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு காலம் காலமாய் வருவது தான! ஆனால் உங்களுக்கு மிக அதிகமாய் இருக்கிறது. ஒரு நல்ல ஆயுர்வேத மருத்துவரைப் பார்க்கலாமே? நான் முன்பு குறிப்பிட்ட கோவை மருத்துவரைப் பார்க்கலாமே? என் சினேகிதியின் கணவருக்கு திடீரென்று கட்டுப்பாடில்லாமல் சிறுநீர் போவதும் ரத்தம் வெளிப்படுவதுமாக இருந்தது. அலோபதியில் பல லட்சங்கள் செலவாகும் என்று மருத்துவமனை சொன்னது. இவரிடம் சொன்னதில் தன் காய்கறி வைத்தியத்தால் சிறுநீரை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். ரத்தம் வருவதும் நின்று விட்டது.
    ஒரே சிரமம், நாவைக் கட்டுப்படுத்த வேண்டும். மிளகாயை அறவே நீக்கச்சொல்வார். நமக்குப்பிடித்த பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டும்.



    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ. எனக்குச் சர்க்கரை இப்போத் தான் ஒரு நாலைந்து வருஷமாக. அதிலும் போன வருஷம் தான் சராசரி அளவும் கூட ஆனது. காரணம் தெரியலை. ஆனால் என்னோட வயிற்றுத் தொந்திரவு நினைவு தெரிந்ததில் இருந்தே இருக்கு. வெளிச்சாப்பாடு சாப்பிட்டாலோ தண்ணீர் மாறினாலோ தொந்திரவு வந்துடும். அதோடு நான் ஆயுர்வேத மருத்துவரிடம் தான் காட்டி வருகிறேன் கரூர் வெங்கட்ரமணா வைத்தியசாலையின் வைத்தியர் திரு சுரேஷ் என்பவர். இப்போக் கொரோனா வந்ததில் இருந்து அவர் இங்கே வருவதில்லை. :(

      Delete
  10. நல்ல குறிப்பு. படமும் கலராக இருக்கிறது.

    ReplyDelete
  11. படமும் குறிப்பும் நன்று.

    ReplyDelete