உக்ரைனுடனான ரஷியப் போர் நிற்க வேண்டும் என்பதும் அமைதி நிலவ வேண்டும் என்பதுமே அனைவரின் பிரார்த்தனையும். கர்நாடகா வாழ் மருத்துவ இளைஞரின் இறப்புக்கு அஞ்சலிகள். பெற்றோருக்கு ஆறுதல்கள். சும்மா இப்படிச் சொல்லிக்கலாமே தவிர்த்துப் பெற்றோரின் நிலைமையை நினைக்க நினைக்க வேதனை அதிகம் ஆகிறது. காயம் பட்டிருக்கும் இன்னொருஇளைஞர் முற்றிலும் குணமாகித் தன் உற்றாரை/பெற்றோரைச் சேர்ந்திடவும் பிரார்த்தனைகள்.
போருக்கு முன்னாலேயே ரஷியா உக்ரேனைச் சுற்றிப் படைகளைக் குவிக்கத் தொடங்கும்போதே மத்திய அரசு பல முறை அறிவுறுத்தியும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வராமல் இருந்த மாணவர்கள்! என்ன நினைத்து அங்கேயே தங்கினார்களோ தெரியவில்லை. குடிநீர், ஒருவேளை உணவுக்குக் கூடத்தட்டுப்பாடு. மீதம் இருக்கும் இந்திய மாணவ/மாணவிகளாவது விரைவில் தங்கள் பெற்றோரை அடையப் பிரார்த்தனைகள். என்ன பிரச்னைன்னா இப்போ மேற்குப் பகுதி தவிர்த்து மற்றப் பக்கம் எல்லாம் மூடிவிட்டார்கள். :( இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். அதில் சிலர் மிகவும் உள்ளடங்கி இருக்கும் ஒரு நகரில் மாட்டிக் கொண்டு வெளியேற வழி தெரியாமல் தவிக்கின்றனர். ஏவுகணைத் தாக்குதலில் உணவு வாங்கச் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் பலத்த காயம். இன்னொருவர் தப்பி விட்டார். :( பிரதமர் மற்றவர்களைக் காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினார்/நடத்திக் கொண்டிருக்கிறார். இந்திய தூதரகம் மாணவர்களை/இந்தியர்களை இருப்பிடத்தை விட்டு வெளியே வராதீர்கள் என எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.
இதுவே தமிழ்நாட்டு மாணவர் எனில் இத்தனை நேரம் அல்லோலகல்லோலப் பட்டிருக்கும். மோதி தான் திட்டம் போட்டு உக்ரேனியர்களிடமும்/ரஷியர்களிடமும் சொல்லி அந்த மாணவனைக் கொன்றதாக எல்லா சானல்களிலும் வாத/விவாதங்கள் ஆரம்பித்திருக்கும். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கின்றது எனப் பல்லைக் கடித்துக் கொண்டு அரசியல்வாதிகள் முழக்கம் இடுவார்கள். இறந்த மாணவன் குடும்பத்திற்குக் குறைந்த பட்சமாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கும். இப்போதும் தமிழக அரசு சார்பில் தமிழ் மாணவர்கள் மீட்புக்குழு என ஒன்றை நியமித்து அவர்களை உக்ரேன் சென்று தமிழ் மாணவர்களைக் கண்டு பிடித்துக் காப்பாற்றிப் பாதுகாத்துத் தமிழகம் சேர்க்கச் சொல்லி தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு இல்லாமல் பிரதமருக்குக் கடிதங்களுக்கு மேல் கடிதங்கள். ட்விட்டரில் செய்திகள். தில்லியில் போய்த் தங்கி இருக்கும் குழுவினரோ நாங்க இங்கே வந்ததால் தான் மத்திய அரசு தமிழ் மாணவர்களை மீட்கத் தொடங்கி இருக்கிறது என்று சொல்கின்றனர். தினசரிகளிலேயே இது வந்திருக்கிறது. பிரதமரும் மத்திய அரசும் உக்ரேனில் படிக்கும் தமிழ் மாணவர்களை மட்டும் கண்டறிந்து அவர்களை மீட்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பது போல் ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. அத்தனை ஆயிரம் மாணவர்களில் தமிழ் மாணவர்களை மத்திய அரசு எப்படிக் கண்டு பிடிக்கும்? அல்லது போயிருக்கும் குழுவினருக்குத் தான் தெரியுமா? அனைவரையும் பார்த்திருக்காங்களா?
சரி இவங்க போய் அங்கே என்ன செய்வார்கள்? சுமார் நான்கு நாடுகள் எல்லை நாடுகள். அந்த அந்த நாட்டு வெளியுறவுத் துறையுடன் பேசி அவங்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும். போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரேன், ரஷியா. இவர்கள் அனைவரின் நாட்டு வெளியுறவு அமைச்சர்களோடு பேசியாக வேண்டும். உக்ரேனில் இருந்து எல்லைப் பகுதிகளுக்கு வரும் மாணவ/மாணவிகளுக்குப் பாதுகாப்புடன் மட்டும் இன்றி உணவு, குடிநீர் போன்ற நிவாரணப் பொருட்களும் வழங்கி அருகே இருக்கும் எல்லை நாட்டின் மூலம் பாதுகாப்பாக தில்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தனை இருக்கு இதிலே இந்த அழகிலே நம் தமிழகக் குழுவினர் தமிழக மாணவர்களை மட்டும் கண்டுபிடித்து அவங்களை இவங்க காப்பாற்றிக் கூட்டி வரவேண்டும். இவங்களுக்கு என்ன திட்டம்/எப்படி அணுகுவது/என்ன செய்வத/யாரிடம் பேசுவது/என்ன மொழியில் பேசணும்/எப்படி எல்லை தாண்டி மாணவர்களைக் கொண்டு வருவது என்பதற்கான திட்டம் ஏதானும் இருக்கா? சரி, அப்படியே தமிழக மாணவர்களைக் காப்பாற்றி விடுகிறார்கள் என்றாலும் மற்ற மாணவர்கள்? அவங்க எப்படி வேணாலும் போகட்டுமா? அவங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஏற்பாடு செய்து கூட்டி வரணும். தமிழக மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து இவங்க கூட்டி வருவாங்களா? அதிலும் எல்லை நாடுகளுக்கு அவங்க இருக்கும் இடங்களில் இருந்து காப்பாற்றி அழைத்து வர வேண்டும். உள்ளூர்ப் பயணத்திற்கு என்ன ஏற்பாடு செய்வார்கள்? அது பற்றி யாரிடம் பேசுவார்கள்? அதன் பிறகும் இந்தியா வந்தடைய என்ன ஏற்பாட்டுடன் சென்றிருக்கின்றனர்? எதிலே அழைத்து வருவார்கள்? மத்திய அரசின் விமான சேவை மூலம் தானே? அல்லது உக்ரேனில் இருந்து தமிழக மாணவர்களைக் கூட்டி வர என இவங்க ஏதானும் தனியார் விமானங்களை ஏற்பாடு செய்திருக்காங்களா? அந்த விமானங்கள் உக்ரேனுக்கோ அதன் எல்லை நாடுகளுக்கோ வர முடியுமா? வான் வழி அடைக்கப்பட்டிருக்கிறது.
திடீரென வான் வழி அடைக்கப்பட்டதாலேயே முதலில் சென்ற விமானம் தரை இறங்க முடியாமல் திரும்பியது என்பதாவது இவங்க யாருக்கேனும் தெரியுமா? வெளிநாட்டுத் தூதரக அலுவலகம் மூலம் பேச்சு வார்த்தை நடத்துவது மத்திய அரசு. மத்திய அரசின் விமான சேவையின் மூலமே மாணவர்கள் வந்தாக வேண்டும். இவங்களுக்கு எல்லாம் போர் நடக்கும் பிராந்தியத்திற்குச் செல்ல அனுமதி வழங்க வேண்டியதும் மத்திய அரசே! போர்ப் பிராந்தியத்திற்கு இவர்களை எந்த அரசாவது துணிந்து அனுப்பி வைக்க அனுமதி கொடுக்குமா? அப்புறமா இவங்களுக்கு ஏதானும் நேர்ந்தால் அதுக்குப் பொறுப்பை யார் ஏற்பது? மத்திய அரசு தானே? மற்ற மாநிலங்களில் எந்த அரசாவது கொஞ்சமும் யோசனையில்லாமல் இப்படி எல்லாம் செய்திருக்கிறதா? அல்லது இனியாவது செய்யுமா? ஏற்கெனவே மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பல மாணவர்கள் திரும்பியும் வந்திருக்கிறார்கள். இன்னமும் யாரேனும் இருந்தால் அவர்களையும் கொண்டு வரப் பல்வேறு முயற்சிகளை வெளியுறவு அமைச்சகமும் மத்திய அரசும் செய்து தான் வருகிறது. இதிலே "நீட்" தேர்வு எழுதித் தேர்ச்சி பெற முடியாமலேயே அவங்க வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்கப் போனாங்க என்றும் அதற்கும் மத்திய அரசே காரணம் என்றும் இந்த நேரத்தில் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். சூழ்நிலையின் முக்கியத்துவமோ ஒவ்வொரு மாணவனின் உயிரும் அருமை என்பதோ யாருக்கும் புரியவில்லை.
தமிழக மாணவர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியர்கள் அங்கே இருப்பவர்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இவங்க என்னமோ இவங்க போனதால் தான் மாணவர்கள் மீட்கப் படுவதாக ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார்கள். இவங்க தான் போனாங்கன்னா இங்கே தலைமைச் செயலாளராக இருப்பவராவது அரசுக்கு ஆலோசனை கூறி இருக்கணும். கூடச் சென்ற நான்கு ஐஏ.எஸ் அதிகாரிகளாவது நிலைமையைப் புரிய வைச்சிருக்கணும். இதெல்லாம் இவங்க உக்ரேன் போய்ச் செய்ய முடியற வேலைகள் அல்ல என அதிகாரிகள் நிலைமையை எடுத்துச் சொல்லி இருக்கணும். அண்டை மாநிலங்களுடனான தண்ணீர்ப் பிரச்னைகளையே நம்மால் தனித்துத் தீர்த்துக் கொள்ள முடியலை. இன்னும் எத்தனையோ பிரச்னைகள் நம்மால் தனித்துத் தீர்க்க முடியாதவை உள்ளன. மத்திய அரசின் தலையீடு இல்லாமல் தீர்க்க முடியாதவை அவை எல்லாம்.
உக்ரேனின் உள்நாட்டில் சிமி என்னும் ஊரில் தங்கி இருந்த இந்தியர்களை ரஷியாவின் உதவியுடன் பதினாறு பேருந்துகளில் மீட்டு வந்திருக்கின்றனர். இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க ரஷியா போர் நிறுத்தம் செய்ததால் இது சாத்தியமாயிற்று. நிலைமையைப் புரிந்து கொண்டு இந்த நேரம் மத்திய அரசின் எல்லா முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். இன்று உக்ரேன் அதிபர்/பிரதமர் தான் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருக்கிறார். இனி போகப் போகப் பார்க்கலாம். எப்படியோ மக்களுக்கு நன்மை விளைந்தால் சரி. போர் நின்று மக்கள் அமைதியாக வாழ வேண்டும்.
இதிலே மீண்டு வந்த சிலருக்குப் பயணம் சுகமாக இல்லை, வானிலே பறக்கும்போது ஒரே சப்தம், குலுக்கல் , பொழுதுபோக்குக்குத் திரைப்படங்கள் எதுவும் காட்டவே இல்லை குடிக்கவும்/சாப்பிடவும் எதுவும் தரலை என்னும் குறை! வந்ததும் ஒரு ரோஜாப்பூவைக் கொடுக்கின்றனர். இதை வைத்து என்ன செய்வது? எங்க சொந்த ஊருக்கு நாங்க எப்படிப் போவது என்றெல்லாம் குறை. அட மாணவர்களே! நீங்கள் வந்தது நம் ராணுவப்படை விமானங்கள். சௌகரியக்குறைவு, சத்தம் போடுகிறது என்றும் ஆட்டமாய் ஆடுகிறது என்றும் நீங்கள் சொல்லும் இந்த விமானங்களில் தாம் நம் ராணுவ வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போர் புரிகின்றனர். உங்களை மீட்கவும் இப்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போர்ச் சூழலில் மீட்க வந்திருக்கின்றனர். அதற்கான நன்றியுணர்வு இல்லை எனினும் குறை/குற்றம் சொல்லாமலாவது இருக்கலாமே! அதெல்லாம் இருக்க மாட்டாங்க. எப்படிக் குறைகள்/குற்றங்கள் கண்டு பிடிக்கலாம்னு அதே யோசனையில் இருக்கிறவங்க மாறுவதாவது!
எப்படி வேணாலும் போகட்டும். உக்ரேன் - ரஷியாப் போர் முற்றிலும் நின்று எங்கும் அமைதி நிலவிடப் பிரார்த்தனைகள். இதனால் விலைவாசி மட்டுமில்லாமல் எல்லாமே எகிறி விட்டது. :(
கீதாக்கா உக்ரைனின் கிழக்குப் பகுதியில் சிக்கிக் கொண்ட மாணவ மாணவிகள் - அதிலும் கூட ஓரிருவர் முதலிலேயே - கேரளத்து மாணவர், மாணவிகள் சிலர் ஏஜன்டிடம் பேசி பிரயாண ஏற்பாடுகள் செய்து கொண்டு கிளம்பி மேற்கு எல்லைகளுக்கு வந்து கேரளத்திற்கு வந்தடைந்துவிட்டன்ர். சிலர் முடிவு செய்ய தாமதித்ததினால் சிக்கிக் கொண்டதாக அவர்களே சொல்லியும் இருக்கின்றனர்.
ReplyDeleteபிற பகுதி மாணவ மாணவிகள் எல்லாரும் பாதுகாப்பாக வந்ததாகவும் தூதரகம் சொன்னது போல நம் தேசியக் கொடியைத் தாங்கி வந்தால் பிரச்சனை இருக்காது என்றதும் கடைசி நிமிடத்தில் கடைகளுக்கு அவசரமாகச் சென்று திரைச்சீலை துணிகள் வாங்கி வந்து பெயின்டும் வாங்கி வந்து டக்கென்று கொடி தயாரித்து தை பேருந்திலும் ஒட்டி கையிலும் பிடித்துக் கொண்டு வந்த போதுவெகு எளிதாக எல்லா செக் போஸ்டும் க்டந்து வந்து பாதுகாப்பாக வந்து எல்லை நாடுகளுக்குள் வந்ததும் நம் தூதரக அதிகாரிகள் சாப்பாடு தண்ணீர எல்லாம் வழங்கி பாதுகாப்பாக வந்து சேர்ந்ததாகச் சொல்லியிருந்தாங்களே. அது போல நம் கொடி சில பாகிஸ்தான் துருக்கி நாட்டு மாணவர்களுக்கும் பாதுகாப்பாக வர உதவியதாகவும் கூடச் சொல்லியிருந்தார்கள்.
அப்படி இருக்க இந்தப் புலம்பல் ஏன் சிலர் மட்டும்? உயிருடன் வருவதே பெரிய காரியம் இங்கு பெற்றோர் தவித்திருக்க இதில் வேறு என்ன வசதிகள் எதிர்பாக்க முடியும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படியான புகார்கள். இதென்னா ஜாலி உலாவா? கடைசி பேச் சிமி மாணவ மாணவிகள் அவர்களும் பாதுகாப்பாக வந்து சேர்ந்துவிட்டனர்.
பாகிஸ்தான் துருக்கி எல்லாம் அவர்கள் தூதரகம், நாட்டு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் இந்தியா எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று பேசியதாக காணொளிகளில் பார்த்தேன்.
எப்படியோ ஒரு வழியாக போர் நிறுத்தம் வந்திருக்கிறது. இது தொடர்ந்து சமாதானப் பேச்சு முடிந்து எல்லாரும் மகிழ்வாக இருக்க வேண்டும். உலகம் மகிழ்வாக இருக்க வேண்டும்
கீதா
போர் நிறுத்தம் தொடர்ந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விடிவு பிறக்க வேண்டும். எல்லாம் நல்லபடி நடக்கணும். இன்றைய தினசரியில் கூட ஒரு மாணவி, இங்கே திருவெறும்பூரில் வசிப்பவர் உக்ரேனிலிருந்து தான் நலமாகத் திரும்பி வந்ததற்குத் தமிழக அரசின் முயற்சிகள் தான் காரணம் எனப் பேட்டி கொடுத்திருக்கார். தில்லிவரை வந்தது எப்படினு தெரியலை. உக்ரேனிலிருந்து தான் தில்லிக்கு வந்ததும் ராணுவ விமானத்தில் என்பதெல்லாம் தெரியலை. தில்லியிலிருந்து திருச்சி வந்தது மட்டுமே அவருக்குப் பெரிசாக நினைக்க முடிகிறது.
Deleteபோர் என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள். உலகத்தின் அமைதியே கெடுகிறதே.
ReplyDeleteஇனியேனும் போர் முழக்கம் இல்லாமல் நல்லது நடக்க வேண்டும். உக்ரைன் மக்கள் இயல்பு நிலைக்கு வர பல மாதங்கள் ஆகும். பொருளாதாரம் மீண்டும் இயல்பிற்கு வரவும் மாதங்கள் ஆகும்தான். அழிந்தவற்றை மீட்டெடுக்க வேண்டுமே.
கீதா
ஏற்கெனவே இங்கே மக்கள் அதீத விலைவாசி ஏற்றத்தால் காய்கள், பருப்பு வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். போர் நிற்கவில்லை எனில் இன்னமும் விலைவாசி ஏறும். :( ஏற்கெனவே ரூபாயின் மதிப்புக் குறைந்து விட்டது.
Deleteஎப்படியோ போர் நிறுத்தம் வேண்டும் அதுவே போதும்.
ReplyDeleteஉயிரோடு இந்தியா வந்து விட்டோம் இதற்கு காரணம் யார் ? என்ற நன்றியுணர்வு வேண்டும்.
விமானத்தில் டிவி இல்லை என்பது ஒரு பிரச்சனையா ?
வாங்க கில்லர்ஜி. அவர் நினைச்சிருப்பார் நாம் ஏர் இந்தியா மாதிரி சொகுசு விமானத்தில் போகப் போறோம்னு! இந்த அவஸ்தையில் தானே ராணுவ வீரர்களும் பயணிக்கின்றனர். அதுவும் நாமெல்லாம் வீட்டில் சுகமாகத் தூங்கவும்/சுகமாக வாழவும்.
Delete//அதற்கான நன்றியுணர்வு இல்லை எனினும் குறை/குற்றம் சொல்லாமலாவது இருக்கலாமே!..//
ReplyDeleteஇப்படியான நல்ல எண்ணங்களை விதைக்கத் தவறியது தான் இன்றைய கல்வி..
தலைவிதி எதுவோ அது போல் ஆகட்டும்.. நாம் நமது மனதைப் போட்டு குடைந்து கொள்ள வேண்டாம்!..
உண்மை. இந்த மனப்பான்மை வரணும்னு தான் நானும் பிரார்த்திக்கிறேன்.
Deleteஅன்பின் அக்கா..
ReplyDeleteசில தினங்களுக்கு முன் இந்த உக்குரைன் சண்டையைப் பற்றி தங்களது கருத்து ஒன்றை எபியில் கண்டதும் அதற்குப் பின்னூட்டம் இட்டிருந்தேன்..
(அது அந்தப் பதிவுக்கு தொடர்பு உடையது அல்ல.. தவறு என்னுடையது..) கொஞ்சம் அனலாகத் தான் இருந்தது அது..
அந்தப் பின்னூட்டம் தங்களது பார்வையில் படவில்லை... யாராலும் கவனிக்கப்படாத - அது எதற்கு அங்கே என்று நீக்கி விட்டேன்..
இது வேறு - தங்களது பதிவைக் கண்டதும் நெஞ்சில் எழுந்தது.. இப்போது மணி விடியற்காலை 4:30..
பணம் பண்ணுவதற்கே அன்றி மற்றது எதற்கும் பயன்படாத கல்வியைக் கொண்டு என்ன சாதிப்பது?.. குறைந்த பட்ச மனிதாபிமானம் தன்னம்பிக்கை மரியாதை இதைக் கூட பயின்று கொள்ள இயலாத ஜடங்களால் என்ன பயன்?..
நாலரை வருடம் மருத்துவம் பயின்றவர்களால் பிறத்தியாருக்கு உபகாரமாக இருக்க இயலாதா?.. பிறரிடம் இன்சொல் பேச இயலாதா?.. வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை காட்ட இயலாதா?..
பிரண்டையைப் பெற்று இருந்தாலும் பெருத்த பயன் உண்டு.. கழுதையும் ஒதுங்க நினைக்காத குட்டிச் சுவர் போன்ற மனங்கள்..
அதுதான் அன்றைக்கு காணொளி ஒன்றில் பார்த்தோமே!..
வயதில் மூத்த ஒருவர் கை கூப்பி வணக்கம் சொல்லும் போது குறைந்தது ஒரு புன்னகையைக் கூட காட்டத் தெரியாத பிண்டங்களை...
எப்படியோ போகட்டும்..
இங்கே சில தினங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் என்று நிழல் விரித்திருந்த மரங்களை வெட்டித் தள்ளி விட்டார்கள்..
கூடு இழந்த பறவைகளுக்காகவும் நிழல் இழந்த கிழட்டு நாய்களுக்காகவும் மனம் வருந்துகின்றது...
மாணவர்கள் nothing as compared to the securities. பதில் மரியாதை செலுத்தத் தெரியாதவனெல்லாம் மனுஷனா?
Deleteஆமாம் துரை. லக்ஷம் லக்ஷமாகச் செலவு செய்து படிக்கிறவங்க கையிலே உக்ரேன் பணம் கூடவா இருக்காது? இங்கே தில்லி வந்ததும் அதை மாற்றிக்கொண்டிருக்கலாமே. அதை விடுத்துச் செலவுக்குப் பணம் இல்லை. அரசு அது செய்யலை/இது செய்யலைனு புகார் மட்டும் கூறுவார்கள். மரங்களை வெட்டுவது இப்போதெல்லாம் அதிகரித்து விட்டது. இங்கேயும் அப்படித் தான் பல நெருக்கமான தோப்புக்கள் எல்லாம் வீடுகளாக மாறுகின்றன. :(
Deleteமுதிர்ச்சி அற்ற அரசியல். மக்களை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்கிறார்கள். சிலர் அதை நம்பவும் செய்கிறார்கள் என்பது வேடிக்கை.
ReplyDeleteஇங்கே தான் தமிழக மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்களே ஶ்ரீராம். அவங்களுக்கெல்லாம் இலவசம் என்றாலே போதுமானது. அதோடு பாமர மக்களுக்கு இத்தனை தூரம் புரிதலும் இருக்காது. அவங்களை எளிதாக ஏமாற்றலாம். அதுக்காகத் தானே அவங்களுக்கு நவோதயா பள்ளி எல்லாம் வேண்டாம்னு கொண்டு வராமல் வைச்சிருக்காங்க.
Deleteதமிழ்நாட்டு மாணவர்களை காப்பாற்றும் நேரம் அங்கிருக்கும் யு பி மாணவரோ, மஹாராஷ்டிரா மாணவரோ தன்னையும் காப்பாற்றும்படி வேண்டினால் விட்டு விட்டு வந்து விடுவீர்களா என்று மத்திய ஊடகம் ஒன்றில் ஒரு திமுக பேச்சாளரிடம் கேட்கப்பட்டது. இன்னும் பல பதில் சொல்ல முடியாத கேள்விகள் இருந்தன. அவைகளுக்கு இவர் சிறுபிள்ளைத் தனமான பதில்கள் அளித்துக் கொண்டிருந்தார்!
ReplyDeleteஶ்ரீராம். ஆமாம் நாங்களும் ஒரு சில யூ ட்யூப் சானல்களில் இம்மாதிரிப் பிதற்றல்களைக் கேட்டோம். என்ன செய்வது? பொது அறிவு என்பதே இல்லை. இன்னிக்கு ஒருத்தர் கேட்கிறார். ஏன் தூத்துக்குடியில் போய்த் துறைமுகம் கட்டினாங்க? தஞ்சாவூரில் ஏன் இல்லை என்று. அங்கே கடல் இல்லையே என்றால் இருந்த கடலை யார் நாசம் பண்ணினாங்க என்று பாய்கிறார். அவ்வளவு புத்திசாலிகள்.
Deleteபோர் முற்றிலும் நின்று அமைதிநிலவிடப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஅனைவரும் பாதுகாப்பாக நலமோடு திரும்பி வர பிரார்த்தனைகள்.
நன்றி கோமதி.
Deleteபோர் நின்று அமைதி நிலவ வேண்டும்.
ReplyDeleteதமிழக மாணவர்கள், பெரும் பணக்காரர்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
நன்றி நெல்லையாரே!
Deleteபோர் நிறுத்தம் முடிவுக்கு வந்து அமைதி நிலவட்டும்.
ReplyDeleteவாங்க மாதேவி, எல்லோருடைய பிரார்த்தனையும் அது தான்.
Deleteபோர் நிறுத்தப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சு சுமூகமாக முடிந்து அமைதி நிலவ வேண்டும். போர் என்றால் உலகப் பொருளாதாரமே வீழ்ந்து அதில் அவதிக்குள்ளாகுபவர்கள் சாதாரண வெகுஜனங்கள். மீட்கப்பட்ட மாணவர்கள் மாணவியர்கள் இந்திய அரசிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். மற்ற நாடுகள் முனைந்து செயல்படுவதற்குள் நம் நாடு மாணவ மாணவியரை மீட்க செயல்பட்டு பாதுகாப்பாகவும் அனைவரையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இறந்த மாணவரும் அவருடனான இரு மாணவர்களும் ஏன் இப்படியான ஒரு சூழலில் வெளியில் சென்றார்களோ?
ReplyDeleteசமீபத்தில்தான் இந்த செர்னோபில் ட்ராஜெடி - பாடம் லிட்ரேச்சர் மாணவர்களுக்குப் படிப்பித்தேன். இப்போது உக்ரைனில் நியூக்ளியர் ரேடியேஷன் கசிந்து வருவதாகச் செய்தி வீடியோ வந்தது. செர்னோபில் நினைவுக்கு வருகிறது. அதுவும் அபாயம்தான். எல்லாவற்றிற்கும் முடிவுகாலம் வந்து அமைதி நிலவ வேண்டும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
துளசிதரன்
வாங்க துளசிதரன். எங்கே! பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் போரும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கு. இந்திய மாணவர்கள் அநேகமாக எல்லோருமே திரும்பி விட்டனர். அந்த உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்திருந்த கோவைப் பையர் கூடத் திரும்பி வரணும்னு சொல்றாராம். அவங்க பெற்றோர் விண்ணப்பம் கொடுத்திருக்காங்க. நல்லபடியாகத் திரும்பி வரட்டும்.
Deleteபோர் என்றைக்கும் தேவையில்லாத ஒன்று என்பதே என் கருத்து.
ReplyDeleteமாணவர்கள் மீட்பு - எல்லாவற்றிலும் அரசியல்..... வேதனை.
வாங்க வெங்கட், நன்றி.
Delete