இன்னைக்குப் போட வேறே படம் தேடிட்டு இருந்தப்போ இது கிடைச்சது. ஏற்கெனவே சட்டி பற்றிய கருத்துப் பகிர்வில் சீனாச் சட்டி பத்திக் குறிப்பிட்டிருந்தேன். அப்போ எடுத்து வைச்சுட்டுப் போடாமல் விட்டுட்டேன் போல. நான் போட நினைச்சது. ஹார்லிக்ஸுக்குக் கொடுக்கும் மைக்ரோவேவ் கிண்ணம். ஆனால் பாருங்க, இங்கே சாக்லேட் ஹார்லிக்ஸுக்குத் தான் அது கொடுக்கிறாங்களாம். அது கொடுத்திருந்தால் எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாகப் போட்டிப் படம் போட்டு போட்லினு பேரும் வைச்சிருக்கலாம். சான்ஸ் போச்சு! நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க. ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன். இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு! யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே! :))))
இங்கே இந்தச் சீனாச்சட்டியிலே பண்ணிட்டு இருந்தது வெண்டைக்காய்க் கறி. சப்பாத்திக்கு. இது தக்காளி, குடமிளகாய் சேர்த்துப் பண்ணினது. செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன். அங்கே போய்ப் பார்த்துக்குங்க. வெண்டைக்காயை முழுசாவும் பண்ணலாம். சப்பாத்திக்குத் தான். அதுக்கும் இந்தச் சட்டியிலே செய்தால் நல்லா வரும் என்பதோடு சீனாச் சட்டியிலே செய்தால் நிறமும் மாறாது ; உடலில் இரும்புச் சத்தும் சேரும். எண்ணெயும் அதிகம் தேவைப்படாது. இதிலே பருப்பு உசிலி செய்து பாருங்க. ஜூப்பரா இருக்கும். சின்ன உ.கி. ரோஸ்ட்டும் நல்லா வரும்.
பழைய சீனாச்சட்டியை இங்கே பார்க்கலாம்.
வெண்டைக்காய், குடமிளகாய், தக்காளி சேர்த்த கறி