எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 10, 2006

84. பவானியைப் பார்த்தேன்.

முந்தா நாள் சுருட்டப்பள்ளி போய்விட்டுத் திரும்பும்வழியில் எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவர் பக்கத்தில் ரெட் ஹில்ஸ் வழியாகப் போனால் பெரிய பாளையம் போய்ப் பவானி அம்மனைப் பார்க்கலாம் என்று கேட்டார். வீட்டில் போய் ஒண்ணும் வெட்டி முறிக்கப் போவது இல்லை. அன்று பெண்ணோட chatting-ம் இருக்காது. போனால் இவர் வழக்கம்போல் ரிமோட்டும் கையுமாகத் தான் உட்காருவார். ஆகவே போகலாம் என்று சொன்னோம். சுருட்டப்பள்ளியில் இருந்து சற்று வடகிழக்கே பிரியும் பாதையில் சில கிலோமீட்டர் போனதும் பெரிய பாளையம் கோவில் வருகிறது. அநேகமாக இந்தக் கோவிலுக்கு இதுவரை போகாத சென்னை வாசிகள் கிடையாது என்று டிரைவர் சொன்னார். சரி, நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவோம் என்று இருவரும் முடிவு செய்து போனோம். சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைடஹ்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேDஉம் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று புரியவில்லை.

மொத்தத்தில் ரேணுகா தேவி மாதிரி இருக்கிறாள், பவானி அம்மனும். அங்கு தரிசனம் முடிந்ததும் டிரைவர் அங்கே பக்கத்தில் இன்னொரு சிவன் கோவில் இருப்பதாகவும் அதன் கோபுரம் லிங்க உருவில் இருக்கும் என்றும் கோவில் மிக அழகாக இருக்கும் என்றும் கூறினார். உடனே அங்கே போகலாம் என்று சொன்னோம். பெரிய பாளையத்தில் இருந்து 10 அல்லது 15 கி.மீ. தூரத்தில் தாமரைப்பாக்கம் என்னும் சிறு ஊர் இருக்கிறது. அங்கே போய் ஒரு வாசலில் நிறுத்தினார் வண்டியை. வேண்டுமானால் உள்ளே கூட வரலாம் என்றார். வேண்டாம் என்று சொல்லி விட்டு நாங்கள் இறங்கினோம். பார்த்தால் ஏதோ ஆசிரமம் மாதிரி இருந்தது. பாதை கொஞ்சம் கரடு முரடு தான்.வழி நெடுக ஏதோ சின்னச் சின்ன போஸ்டர்கள் ஏதோ எழுதப்பட்டிருந்தன. என்னவென்று நெருங்கிப் பார்த்தால் ஸ்வாமி சின்மயானந்தாவின் பொன்மொழிகள். அப்போதான் புரிந்தது ஸ்வாமி சின்மயானந்தாவின் ஆசிரமம் இங்கே எங்கேயோ இருப்பதாகக் கேள்விப்பட்டது. பொன்மொழிகள் எல்லாம் மிகவும் கருத்துச் செறிந்தவையாக இருந்தன. ஸ்வாமிகளின் கருத்துக்கு அபிப்பிராயம் சொல்ல நாம் யார்? இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த 2 வாசகங்கள்.
"YOUTH ARE NOT USELESS
THEY ARE USED LESS"

"வெளியே விழுந்தால் அது வீழ்ச்சி,
உனக்குள் விழுந்தால் அது எழுச்சி."
இவை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தன. கொஞ்ச தூரம் போனதும் ஒரு இடத்தில் வரிசை நின்று கொண்டிருந்தது. தரிசனம் செய்யவா என்று கேட்டதற்கு "இல்லை, பிரசாதம் தருகிறார்கள். தரிசனம் இலவசம். மேலே போய்ப் பார்க்கலாம்." என்று சொன்னார்கள். கீழே ஒரு பெரிய அறை இருந்தது. அதற்குள் போய்ப் பார்த்தால் அது "தியானக் கூடம்". ஒரு பெண் தியானம் செய்து கொண்டிருந்தாள், அவள் அருகில் போகும்போது எனக்குள் மெல்லிய அதிர்வுகளை உணர்ந்தேன். அந்தப் பெண் தியானத்தில் மூழ்கி விட்டாள் என்று புரிந்தது. கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தோம். ஆதிசிவனின் வெவ்வேறு ரூபங்கள் படங்களாக வரையப்பட்டுத் தொங்கின. சின்மயாநந்த ஸ்வாமிகளின் படம் நடுநாயகமாக இருந்தது. பின் அங்கிருந்து படிக்கட்டுகளின் வழியாக மேலே போனோம். முதல் மாடியில் அருமை நண்பர் விநாயகர் சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்தார். அவரைத் தரிசனம் செய்து கொண்டுப் பின் படி ஏறும் போதே ஸஹஸ்ர லிங்க வடிவத்தில் ஒரு பெரிய கோபுரம் தெரிந்தது. அதனுள் ஒரு வாயில். உள்ளே நுழைந்தால் நேரே தரிசனம். ஆனால் இயற்கையான ஒளியில். சற்றும் செயற்கையான ஒளி இல்லை. குளிரொளி தரும் சில விளக்குகள் கீழே உட்கார்ந்திருந்த பக்தர்களுக்கு மட்டும் போதுமான வெளிச்சம் தந்தது. சன்னதியில் வெறும் நெய்த் தீபங்களின் ஒளிதான். மேலே பாதரச லிங்கம்.(திருமுலை வாயிலிலும் உள்ளது). கீழே லிங்கம். பிரதோஷம் ஆகையால் சர்வ அலங்காரத்துடன் காட்சி கொடுத்தார். நேரே எதிரே நந்திஎம்பெருமான்,. அவருக்கும் அபிஷேஹ ஆராதனைகள் நடந்து இருக்கிறது. நாங்கள் போன சமயம் அர்ச்சனையோ சஹஸ்ரநாமமோ முடிந்து தீப ஆராதனை நடந்தது. மிகவும் நல்ல திவ்ய தரிசனம். பிரசாதம் பெற்றுக் கொண்டு கீழே வந்தோம். ஆசிரம வாசிகள் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசி, வெல்லம் சேர்த்தும், பாலும் பிரசாதம் கொடுக்கிறார்கள். இன்னொரு இடத்தில் கேசரியும், பஞ்சாமிர்தமும் கொடுக்கிறார்கள். நாங்கள் போன சமயம் தீர்ந்து விட்டது. பஞ்சாமிர்தம் மட்டும் கிடைத்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறது. மிகவும் அமைதியான சூழலில் ஆசிரமம் நன்கு பராமரிக்கப் படுகிறது.
****************
சுருட்டப்பள்ளியிலும் சரி, அக்கம்பக்கத்து ஊர்களிலும் சரி, டீ, காஃபி குடிப்பவர்களுக்கு நல்ல ஓட்டல் கிடையாது. டீக்கடை ஒன்று சுருட்டப்பள்ளிக் கோவில் வளாகத்தில் இருக்கிறது. கழிப்பறை வசதியும் பெண்களுக்கு மட்டும்தான். நிர்வாகம் கவனிக்க வேண்டும். சாப்பாடு எல்லாம் கையில் கொண்டு போக வேண்டும்.இல்லாவிட்டால் அந்தப்பக்கம் புத்தூரிலும், இந்தப்பக்கம் திருவள்ளூரிலும் தான் ஹோட்டல். வெளி ஊரில் இருந்து வந்தால் கஷ்டம்தான்.

19 comments:

 1. ஆகா அருமையான நாள் தான் தங்களுக்கு.

  நல்ல வாசகங்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 2. ஆஹா, சென்னையில் இப்படி சில கோவில்கள் இருப்பது இது வரை தெரியாமல் போய் விட்டதே. அதனால என்ன, நம்க்கு சேர்த்து தான் கீதாக்கா வேண்டி இருப்பாங்க..
  என்னக்கா, நான் சொல்வது சரிதானே

  ReplyDelete
 3. நல்லா எழுதியிருக்கீங்க. இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி

  http://www.desipundit.com/2006/07/10/bakthiroundup/

  ReplyDelete
 4. என்னங்க கீதா, என்னோட பதிவுக்கு வந்தே ரொம்ப நாளச்சு..

  ReplyDelete
 5. பரணீதரனின் (மெரீனா) ஆலயதரிசனம் படிப்பதுபோல் இருக்கிறது.நல்ல பயனுள்ள தகவல்கள்,பார்க்கவேண்டிய இடம்,ஹோட்டல் வசதி போன்ற உபயோகமான தகவல்கள்.அடுத்த தடவை திருத்தணி போகும்போது நிச்சயம் போகவேண்டும்.இங்கே இருக்கிற திருமுல்லைவாயிலே பார்க்க இன்னும் நேரம் வரவில்லை.அம்மாதான் அருள் செய்யவேண்டும் தி ரா ச

  ReplyDelete
 6. யக்கா இந்த ரெண்டு மூனு பதிவுல ஒரே பக்தி மேட்டரா இருக்கு...எனக்கே அப்பிடியே சாமி ஆடனும் போல தோனுது... :-)

  ReplyDelete
 7. வாங்க நன்மனம்,
  ரொம்ப நாளாச்சு வந்து. உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 8. //தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேDஉம் வரம் கேட்கச் சொல்கிறார்.
  தங்லீஷ்ல எழுதறது யாருங்க? நானா? :)

  சுருட்டபள்ளி நானும் போயிருக்கேன். நீங்க சொன்ன அந்த லிங்க வடிவ கோவிலுக்கும் போயிருக்கேன்.
  எங்க அண்ணன் டுபுக்கு உங்களுக்கு கீரிடம் எல்லம் வெச்சுட்டாரு போலிருக்கு! இன்னும் என்னோட ஒரு பதிவை கூட Desipanditல இணைக்க வில்லை தெரியுமா? :(
  (giving a child like innocent look)

  ReplyDelete
 9. சிவா விற்கு அந்த சிவனே அருள் செய்வாரே! நான் வேண்டிக் கொள்ளாமலா? நம்ம வலைப் பதிவர்கள் அத்தனை பேர் சார்பாகவும் பிரார்த்தித்துக் கொண்டேன்.
  "எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே."

  ReplyDelete
 10. டுபுக்கு,
  ரொம்ப நாளா இந்த டுபுக்கு நம்ம பதிவை desipunditல் சேர்க்க மாட்டேங்கறாரேனு வருத்தமா இருந்தது. ரொம்ப நன்றி. என் பதிவும் அதற்குத் தகுதி பெற்றதில். உங்கள் வரவுக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள். லண்டன் போனது பத்தி இப்போ நினைத்தாலும் சிரிப்பேன்.

  ReplyDelete
 11. கார்த்திக்,
  தப்பு இந்த இணையத்தோடது. இப்போ கூடப் பாருங்க, உங்க பதிவுக்கு மறுபடி வர முயற்சித்தால் this programme is not responding னு வந்துட்டது.

  ReplyDelete
 12. ரொம்ப நன்றி சார்,
  திருமுலைவாயிலில் உள்ள பாதரசலிங்கம் 20 வருடங்களுக்கு முன் வைத்தது. அப்போது ஊர்வலமாக எடுத்து வந்த போதும் தரிசனம் கிடைத்தது. இப்போ சின்மயா மிஷினில் அதை விடப் பெரிய பாதரச லிங்கம். மிகவும் அற்புதம்.

  ReplyDelete
 13. ச்யாம்,
  தினமும் கவனிச்சுக்கிட்டே வந்தீங்கன்னா சரியாகி விடும். சாமி எல்லாம் ஆடாது. வாங்க, தினமும் வாங்க.

  ReplyDelete
 14. நானே சென்று தரிசனம் செய்த உணர்வு.
  மிக அருமையான எழுத்துக்கள்.

  ReplyDelete
 15. அம்பி,
  இப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டா படிப்பது? என்னோட பதிவு Desipunditல் சேர்ந்தது பத்திப் பொறாமையா இருக்கா? சும்மா அசினைப் பத்தியே நினைச்சுட்டிருந்தா? :-)

  ReplyDelete
 16. வாங்க சின்னக்குட்டி,
  இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க? நான் கேட்டதுக்குப் பதிலே இல்லையே? இன்னொரு சின்னக்குட்டியும் நீங்க தானா? பார்த்த ஈழத்தமிழர் மாதிரி இருந்தது. நீங்க தமிழ் மணத்திலே இருக்கீங்களா?

  ReplyDelete
 17. கீதா,

  தாமரைப்பாக்கம் சின்மயா சிவலிங்கக் கோவில் நல்ல அமைதியான இடம்.

  சின்மயாவின் பொன்மொழிகள், சின்மயா மிஷனின்
  www.chinmayamission.org
  www.chyk.net

  இத்தளங்களில் நிறைய படிக்கக் கிடைக்கும்.

  சின்மயானந்தாவின் கேள்வி-பதில் மிகச்சுவையானது பல சந்தேகங்கள் தீர்க்கும். அவரது Kindle Life மாதிரியான புத்தகங்கள் என்னை நான் நல்ல முறையில் பயன்படுத்த உதவியது.

  சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டர் நல்ல இடம். ஒருமுறை போய்ப் பாருங்கள்.

  உடலளவில் மறைந்தாலும் சின்மயாவின் எழுத்துக்கள் இன்றும் நம் அறிவைச் சிந்திக்கும்படி செய்பவை.

  ReplyDelete
 18. ரொம்ப நன்றி ஹரிஹரன்,
  முதல் முறை வந்ததுக்கும் மிகவும் உபயோகமான தகவல்களுக்கும். முடிந்த போது வாருங்கள்.

  ReplyDelete
 19. வந்துகிட்டு தான் இருக்கேன், attendance கொடுக்கல அதான்.
  அந்த chinnakuddy நானல்ல, தமிழ் மணத்திலே இன்னும் சேரல.

  ReplyDelete