எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 14, 2006

88. ஒரு ஒத்தி வைப்பு.

ஒண்ணும் இல்லைங்க. நம்ம அம்பிக்கும் கார்த்திக் முத்துராஜனுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். எதிலேனு கேக்கறீங்களா? அசினைப் பத்தி யார் கனவு காணறதுனு. இந்த கோபாலன் ராமசுப்பு இருக்காரே அவர் ஏதோ சமரசம் செஞ்சு பார்த்திருக்கார். ஒண்ணும் நடக்கலை. இரண்டு பேரும் ஒத்துக்கலை. நான் முதலில் ஒரு சின்ன ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் இப்போ அசின் கல்யாணத்துக்கு இன்னும் 3 அல்லது 4 வருஷம் போகும்னு சொல்லிட்டதாலே அந்த ஜல்லிக்கட்டை ஒத்தி வைக்கிறேன்.

மறு தேதி குறிப்பிடாமல் எல்லாம் ஒத்தி வைக்கலை. நம்ம சென்னையின் நீர்வளத்தைப் பத்திக் கிண்டல் அடிக்கும் அம்பி சென்னையின் நீர்வளத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும் இல்லையா? அதனாலே நவம்பர் 15 தேதிக்கு மேல் நல்ல மழை பெய்யும் நேரமாப் பார்த்து அதிகம் தண்ணீர் தேங்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதி, இடம் முடிவு செய்யப்படும். நம்ம வேதா சென்னை வாசிங்கறதாலே அவங்க தலைமை தாங்க அன்புடன் இசைந்துள்ளார். அவங்க தலை மேலே நடை பெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அலை கடலெனத் திரண்டு வராதீர். மழையில் நனைஞ்சு உடம்புக்கு வரும். அவங்க அவங்க வீட்டிலேயே இருந்து மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாட்டுக்குக் கொம்பு சீவவும், அதன் உடம்பில் விளக்கெண்ணை தடவவும், மூடிய டெண்டர்கள் கோரப்படுகின்றன. ஜாஸ்தி கமிஷன் யார் தராங்களோ அவங்களுக்கு ஆர்டர் தரப்படும். இல்லாட்டி பின்னூட்டங்கள் என்னோட பதிவிலே கொடுத்து வந்தாலே போதும்.

(இப்படியெல்லாம் கேட்டுப் பின்னூட்டம் வாங்கணுமா? கேவலம், கேவலம்) இது யாருனு பார்க்கறீங்களா? என்னோட மனசாட்சி, அப்போ அப்போ வந்து தொல்லை கொடுக்கும், தமிழ் சினிமா வில்லன் மாதிரி.

36 comments:

 1. இந்தச் சின்னப் பதிவு வெளியிட நேரம் ஆகும்னு சொல்லுது இந்த ப்ளாக்கர். இதவிடப் பெரிய பதிவா போட்டால் உடனே files published 100% அப்படினு வருதே அது எப்படி? ஒண்ணுமே புரியலை!

  ReplyDelete
 2. //அதன் உடம்பில் விளக்கெண்ணை தடவவும்//

  இதுக்கு ஒரு அனுபவசாலி இருக்கார்..சங்கத்தி சிங்கம் ஜொள்ளுபாண்டி..அவருடைய பிளாக் படிச்சிருப்பீங்கனு நினைக்கறேன்...

  ஜல்லிகட்ட ஒத்தி வச்சு அஸினோட வாழ்க்கைல மண்ண போட்டுட்டீங்களே...

  ReplyDelete
 3. //
  இல்லாட்டி பின்னூட்டங்கள் என்னோட பதிவிலே கொடுத்து வந்தாலே போதும்.
  //

  பின்னுட்டம் போடுறேன் ஒழுங்கா டென்டர் நம்ம கையில வரனும் ........:))

  ReplyDelete
 4. //
  சின்னப் பதிவு வெளியிட நேரம் ஆகும்னு சொல்லுது இந்த ப்ளாக்கர். இதவிடப் பெரிய பதிவா போட்டால் உடனே files published 100% அப்படினு வருதே அது எப்படி? ஒண்ணுமே புரியலை!

  //

  ஜாஸ்தி கமிஷன் தந்தால் புரிய வைக்கிறேன்...
  ::))

  ReplyDelete
 5. போன பதிவுல சொன்னத நிறைவேத்தியாச்சி !!!!!!!!!!!!

  (பேருதான் அனானி ஆனால் கொடுத்த வாக்க காப்பாத்துவான் இந்த மின்னல்)

  ReplyDelete
 6. யக்கா, கீதாக்கா இப்படி என்னை மாட்டி உட்டீங்களே, ஏற்கனவே இங்க அசினுக்காகப் பயங்கரமா அடிச்சிக்கிறாங்க(கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவங்க). இதுல என் தலை மேல ஜல்லிக்கட்டு வேறயா? ஒரேடியா எனக்கு சமாதி தான்:(

  ReplyDelete
 7. ஹி... ஹி....

  (வேற ஒன்னும் இல்ல அந்த டெண்டர் விஷயம்......)

  இது போதுமா டெண்டர் கவரே இல்லாம வேலை கிடைக்கிறதுக்கு.... :-)

  ReplyDelete
 8. syaam,
  ஜொள்ளுப் பாண்டியைப் பத்திச் சங்கத்து நிரந்தரத் தலைவலியான என் கிட்டேயே அறிமுகமா? திருநெல்வேலிக்கே அல்வாவா?

  ReplyDelete
 9. சொன்ன வாக்கைக் காப்பாத்தின மின்னல் தாத்தாவுக்கு,
  டெண்டர் இல்லை. தினமும் வாங்க, பார்க்கலாம்.

  ReplyDelete
 10. அதெல்லாம் ஒண்ணும் பயம் வேண்டாம் வேதா, நாங்க எல்லாம் எங்க வீட்டிலே பத்திரமா இருந்து கொண்டே பார்ப்போம், தக்க சமயத்தில் மாடு உங்களை முட்டுமா, அல்லது அம்பியையா, கார்த்திக்கையா என்ற முடிவு ஏகமனதாக எடுக்கப்படும். :-)

  ReplyDelete
 11. நன்மனம்,
  உளவுத்துறைக்கே கெட்ட பெயர் வந்துடும், பார்த்து நடந்துக்குங்க.

  ReplyDelete
 12. நன்மனம்,
  என்ன உங்களோட வலைப்பதிவை மூடிட்டீங்களா? எத்தனை முறை முயன்றாலும் வரமுடிய வில்லையே? profile not available அப்படினே வருது.

  ReplyDelete
 13. //ஜல்லிக்கட்டு நடக்கும் தேதி, இடம் முடிவு செய்யப்படும//

  //அவங்க தலை மேலே நடை பெறும்//

  அதான் இடத்தை முடிவு பண்ணிட்டீங்களே........

  ReplyDelete
 14. கீதா,

  மாட்டுக்குக் கொம்பு சீவவும், அதன் உடம்பில் விளக்கெண்ணை தடவவும்-


  மாடுகளுக்கு இது தான் கரெக்ட். இரண்டுபேர் 'ப்ளூரல்' போட்டியில் இருக்கிறார்கள்.

  மாட்டுக்கு என்று 'சிங்குலரில்' சொன்னால் அது இருவருக்கும் பொதுவான அஸினைக் குறிக்கும்படி ஆகிறதே! :-D

  என்னை மாதிரி தப்பா)1?) புரிஞ்சிட்டு ஜொள்ளுப்பாண்டி விளக்கெண்ணையோட ஓடி வந்திட்டு இருக்கிறார்.

  ஜொள்ளுப்பாண்டிக்கு கொம்புசீவின மாதிரி ஆயிடுச்சோ? :-)))

  ReplyDelete
 15. வந்தேனே ஏஏஏ.
  வந்த உடன் பின்னூட்டம் போட்டாச்சு.
  பின்னூட்டம் வரதான்னு பாக்க திருப்பி வருவேன்.

  ReplyDelete
 16. சின்னக்குட்டி,
  வேதா இன்னும் சரினு சொல்லலை, அதான், இல்லாட்டி உங்க தலை மேலே நடத்தறதா முடிவு.

  ReplyDelete
 17. ஹிரிஹிரன்,
  சிரிப்பு மூட்டினதுக்காகப் பேரை மாத்தினேன். ஹி,ஹி, ஹி, மன்னிச்சுக்குங்க, இன்னும் சிரித்து முடியலை. அப்புறம் பதில் எழுதறேன்.
  ஜொள்ளுப்பாண்டிக்கு எப்ப்வும் அவசரம். அசின்னு நினைச்சு வந்து மாடு முட்டிடப் போகுது, பார்த்துங்க.

  ReplyDelete
 18. வாங்க வாங்க, வள்ளி,
  உங்க ஏலோலம் காதிலே கேட்டது. அதான் அவசரமா வந்தேன். சரியா?

  ReplyDelete
 19. கீதா,

  ஜொள்ளுப்பாண்டி மாடே முட்டினாலும் கவலைப் படுற டைப்பா?

  போட்டிலே மாடுமுட்டி காயப்படட்டு ஆஸ்பத்திரியிலே ஐசியூ வரை போக நேர்ந்தாலும்... கண் முழிச்ச உடனே விளக்கெண்ணய் பாட்டிலுக்கு ஏதும் ஆகிடலயேன்னு தான் கவலை கொள்வார்.:-)))

  ReplyDelete
 20. ஜொள்ளுப் பாண்டி கிட்டே ஜொள்ளுங்க உங்க கருத்தை, நல்லா ஜொள்ளறீங்கனு சந்தோஷமா இருக்கும்.

  ReplyDelete
 21. என்னங்க ஹரிஹரன்,
  உங்க வலைப்பூவை இறுக்கி மூடிட்டீங்க? இங்கே இருந்து போனால் உங்க profile மட்டும் வருது. உங்க வலைப்பக்கம் திறக்க முடியலை.

  ReplyDelete
 22. கீதா,

  சுட்டியதற்கு நன்றி. தற்போது எனது வலைப்பூ திறக்கக்ப்பட்டிருக்கிறது.

  போலியோட தொந்தரவால் சில பல மாற்றம் ப்ரொபைல்ல செய்தபோது வலைப்பூ டிஸ்பிளே டிஸேபிள் ஆகியிருக்கிறது.

  ReplyDelete
 23. கீதா மேடம்,

  அம்பியேல்லாம் Paris Hilton கூட Breakfast சாப்பிட்டு, அவ அசந்த நேரத்துல அசால்டா ஆஞ்சலீனா ஜீலிய பிக்கப்பன்ற தெறமசாலி. இப்படிப்பட்ட ஒருத்தரு அசினுக்காகவெல்லாம் சன்டை போட மாட்டார். அம்பி அசினின் தம்பி என்பது உங்களுக்குத் தெரியாதா?

  ReplyDelete
 24. Gopalan, Ramasubbu,
  Thanks for the news, I know Ambi is a Great man!!!!!!!!!!!!!!!!!!!who did not even think of Asin, Thrisha, 9Thara and so on. Bless Ambi.

  ReplyDelete
 25. @Ambi,
  Note the comment of Gopalan Ramasubbu, behave like a good brother to Asin. God bless you. Only the blog people will get disappointed .

  ReplyDelete
 26. என்னைப் பத்தி எழுதின ஒரு பதிவுக்கு இவ்ளோ மெதுவா ஆமை மாதிரி பின்னூட்டம் எழுதுறேன்னு தூக்கில் போடாமல் இருக்க வேண்டுகிறேன்..கீதா.. இந்த சனிக்கிழமை, த்ரிஷா என் கனவில் வந்ததை சொல்லியே ஆக வேண்டும்.. ஆனால் அதற்காக அசினை விட்டுத்தருவேன் என்று அம்பி, அசின் தம்பி தயவுசெய்து நினைக்க வேண்டாம்.. எத்தனை த்ரிஷாக்கள் வந்தாலும் நான் என்றும் அசின் நினைப்பில் தான்..

  ReplyDelete
 27. Gopal, eppaaa..eppavum en nenjula paalai vaththeenga thalaivaa... Naan mattum CM aana ungalukku beachla sila thaan ponga

  ReplyDelete
 28. என்னோட தலை மேலே நடத்தறதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபம் இல்லை.

  (சின்னகுட்டி, நவம்பர் மாசம் விடு ஜுட்)

  ReplyDelete
 29. ஆமா மேடம்! இந்த அசின்ங்கிறது யாரு? நான் கேள்வி பட்டதே இல்லையே?

  ReplyDelete
 30. //அசினுக்காகப் பயங்கரமா அடிச்சிக்கிறாங்க(கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவங்க)//

  வேதா!
  அப்பாஸையும் மாதவனையும் பாத்து "ஸோ க்யூட் நோ"ன்னு பொண்ணுங்க எல்லாம் சொல்லும் போது நாங்க கூட இப்பிடி தான் சொல்லுவோம்.
  :)

  ReplyDelete
 31. கைப்புள்ள,
  9தாரா ஆட்களுக்கு அசின் தெரியாம போகிறது சகஜம்தான்.

  ReplyDelete
 32. //9தாரா//

  சிவ சிவா...எனக்கு இவுங்கல்லாம் யாருன்னே தெரியாது.

  ReplyDelete
 33. எந்த சிவா? நாகை சிவாதானே? அவர் கூட 9தாரா கட்சிதான். கைப்புள்ள, உங்களுக்கு என்னமோ கோவை சரளாவையு,. கைப்பொண்ணையும்தான் தெரியும் கிறது மறந்து போச்சு. சாரி, சரளா கிட்டேயும் கைப்பொண்ணுகிட்டேயும் போய் இப்போவே வத்தி வச்சுட்டு வரேன்.
  (எங்கே போகவே முடியலை, ஒரு இடத்துக்கும்)

  ReplyDelete
 34. கைப்புள்ள,
  அப்புறம் மாதவனைப் பார்த்து "ஸோ க்யூட்" இல்லை "ச்சோஓஓஓக்யுட்பா'" என்று சொல்லணும், நான் சின்னப் பொண்ணு தான்னு நிரூபிச்சுட்டேனா?

  ReplyDelete
 35. //"ச்சோஓஓஓக்யுட்பா'" என்று சொல்லணும், நான் சின்னப் பொண்ணு தான்னு நிரூபிச்சுட்டேனா?//

  நிரூபிச்சிட்டீங்க. நான் ஒத்துக்கறேன்.
  :))))))))

  ReplyDelete