எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 27, 2006

98. சமாதான உடன்படிக்கை

ஜல்லிக்கட்டுப் போட்டி

அசின் பற்றிக் கனவு காணும்உரிமை யாருக்கு என்பதில் அம்பிக்கும், கார்த்திக்குக்கும்

இருந்து வந்த தகராறும்,அதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியும், அம்பி

கையூட்டுக் கொடுத்து வேதாவின்மூலம் அதை ரத்து செய்யவைத்ததும் எல்லாரும் அறிந்ததே.

இப்போது கார்த்திக்குடன்எதிர்பாராமல் சமாதானமாகப் போய் விட்ட அம்பி தலைவியை

அவமதித்து விட்டதாகத் தலைவி எண்ணியதால் அவரிடம் வருத்தம் தெரிவித்தார்.

கறுப்புக் கொடி

தலைவி பங்களூர் வரும் சமயம் அம்பியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கறுப்புகொடிப்

போராட்டம் தடை செய்யப்பட்டது.அதற்குப் பதிலாகப் பூரண கும்ப மரியாதையுடன், மலர்மாலை, மலர்க்கிரீடம், பொன்னாடை,மற்றும் பணமுடிப்பு தருவதாக் அம்பி ஒத்துக் கொண்டார்.பொன்னாடை மற்றும் பணமுடிப்புக்கு ஆகும் பொருள் திரட்டும் பொறுப்பை நாகை சிவா ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அவருக்குக் கார்த்திக், மின்னல் தாத்தா, நன்மனம், வேதா,

சின்னக்குட்டி மற்றும் பல நாளாகத் தலை காட்டாமல் இருக்கும் மனசு ஆகியோர்
ஏற்றிருக்கிறார்கள்.

போஸ்டர் இல்லை

தலைவி அம்பிக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டும் போராட்டம்தொடங்க இருந்ததும் அவரால்

தாயுள்ளத்துடன் நிராகரிக்கப் பட்டது. ஆகவே அம்பி கொடுக்கும் சமாதான உடன்

படிக்கையை நிபந்தனை ஏதும் இன்றித் தலைவி ஏற்பார் என்று

எதிர்பார்க்கப் படுகிறது. தொண்டர் படை (அரிக்காது, பயப்படாதீங்க), திரண்டு வந்து தலைவியை ஆதரிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

24 comments:

 1. //பூரண கும்ப மரியாதையுடன், மலர்மாலை, மலர்க்கிரீடம், பொன்னாடை,மற்றும் பணமுடிப்பு தருவதாக் அம்பி ஒத்துக் கொண்டார்.//
  he hee, ella varaverpum "porumaiyin sigaram" saambu maamuvuku thaan!
  ungalukku special varaverppu irukku! neenga vaanga bnglrekku! :)

  ReplyDelete
 2. அம்பி, துரோகி, தலைவியை வைத்துத் தான் தலைவரையே தெரியும். தெனாவட்டா இதிலே? நானும் பார்த்துக்கறேன், பங்களூரிலே வந்து.
  "பொறுமையின் சிகரமா" நடக்கட்டும், நடக்கட்டும்.

  ReplyDelete
 3. அக்கா சௌக்யமா? ரொம்ப நாள் ஆச்சே அதான் வந்து ஒரு வணக்கம் வச்சுட்டுப் போலாம்ன்னு வந்தேன். வந்துப் பார்த்தா இங்கேப் போட்டுத் தாக்கிட்டு இருக்கீங்களே... கலக்குங்க:)

  ReplyDelete
 4. தொண்டர் படை திரண்டு வந்து தலைவியை ஆதரிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது
  //

  அம்மா எவ்வழியோ தொண்டனும் அவ்வழிதான் எதிர்த்து பேச எவ்வழியும் இல்லை எப்பொதுமே !!!

  எத்தனை நாளைக்குதான் அக்கா என்பது ??

  (அரசியல் பின்னுட்டம் அல்ல)

  ReplyDelete
 5. கீதா, என்னமோ எழுதி இருக்கீங்க தெரியது ஆனா என்னனு தான் தெரியல. என்ன பத்தி ஏதும் சொல்லி இருக்கிங்களா என்ன, அப்படினா கொஞ்சம் விளக்கமாக சொல்லவும். இல்லாட்டி விடுங்க பரவாயில்லை

  ReplyDelete
 6. இத்தனை நாளாக தமிழ்நாட்டில் குடிக்கொண்டிருந்த சங்கத்தின் நிரந்தர தலைவலி பெங்களூர் போவது மட்டுமில்லாமல், அங்கே குடிக்கொண்டிருக்கும் பெங்களூரின் நிரந்தர தலைவலி மற்றும் கலியுக நாரதரைச் சந்திக்கப் போவதால், பெங்களூர் வாசிகள் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தலைவலியும், டைகர் பாமுமாக அலையப் போவதாக தெரிகிறது.

  ReplyDelete
 7. //தொண்டர் படை திரண்டு வந்து தலைவியை ஆதரிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது//

  ஆமா ஆமா எல்லோரும் வாங்க...எலோருக்கும் தலைவி செலவில் பிரியாணி பொட்டலம்,வாட்டர் பாக்கட் கொடுக்க போறாங்க... :-)

  ReplyDelete
 8. சீக்கிரம் இன்னும் 2 மொக்கை போஸ்ட் போட்டு 100 அடிச்சிட்டு ஊருக்கு போங்க...நாங்களும் வேற வழி இல்லாம சென்சுரி போட்ட செந்தமிழ்ச்செல்வி,தங்க தலைவி வாழ்க னு சொல்லீட்டு போறோம்(all times) :-)

  ReplyDelete
 9. அம்பி நீ எதற்கும் குண்டர் படையுடன் தயரா இரு.
  பங்களூர்லே ஏற்கனவே டிராபிக் ஜாம். இவுங்க வந்தா கேட்கனுமா/

  ReplyDelete
 10. ahaa.. enna ingiye neenga rendu perum sandaiyum arambichchuteengala.. paaththuppa bgl kadaiyadaippu nadaththida pOranga..unga sandiyela..

  ReplyDelete
 11. Geetha, ennanga ungalukku wallposter thane adikanum.. bangalore pona vudan parunga.. unga poster palapalakkum

  ReplyDelete
 12. ennoda postla ungalukku adichcha poster-ai parunga, geetha

  ReplyDelete
 13. ஹி,ஹி,ஹி, தேவ், சங்கத்தோட நிரந்தரத் தலைவலியா இருந்துக்கிட்டு இந்த அளவு கூடத் தெரியலைன்ன எப்படி? அதான், அது சரி, குழந்தை நல்லா இருக்கா? நான் சுற்றுப்பயணம் போகிறபோது கூட்டி வாங்க, நல்ல தமிழ்ப்பெயராச் சூட்டிடலாம்.

  ReplyDelete
 14. ஹி,ஹி,ஹி,ஹி, மின்னல் தாத்தா, பரவாயில்லை, தமிழ்ப்பண்பாடு, பெண்களை அம்மானு கூப்பிடறது தான், அது சின்னவங்களா இருந்தா கூட, ஹி,ஹி,ஹி,ஹி, நான் ஒண்ணும் கண்டுக்கலை.

  ReplyDelete
 15. சிவா,
  தமிழ் நாட்டில் இருந்துவிட்டுத் தமிழ் புரியலையா? இருங்க, இருங்க இன்னிக்குப் பதிவைப் பாருங்க, அப்புறம் புரியும்.

  ReplyDelete
 16. ஹி,ஹி,ஹி,ஹி, வேதா, இதெல்லாம் சொல்லக்கூடாது. தலைவி சங்கத்துக் களப்பணி ஆற்றப் போகிறார்கள் என்பதை அறியாது பேசும் மடந்தையே, சற்று யோசி, தலைவியின் தியாக உள்ளத்தை.அம்பி வேண்டுமானால் நாரதர் என்பது சரி. அவரே ஒத்துக் கொண்ட ஒரு விஷயம்.

  ReplyDelete
 17. ச்யாம்,
  என்ன இது? சங்கப்பணி ஆற்றும் தலைவிக்கு வேண்டும் உதவிகளைச் செய்யாமல் தலைவியே செலவு செய்ய விடுவதா? உங்களை டாலரில் தலைவியின் பயணச் செலவுக்கு அனுப்பும்படி தலைமை அலுவலகம் கட்டளை இடுகிறது.

  ReplyDelete
 18. தி.ரா.ச. சார்,
  அம்பியே போதுமே! :-) தொண்டர் படை, சீச்சீ குண்டர் படை வேறே எதுக்கு? ரொம்ப அரிக்கும் சார்.

  ReplyDelete
 19. புதுசாப் பீட்டர் விடற கார்த்திக்கே, உங்க போஸ்டைப் பார்த்துட்டு அப்புறம் பதில் சொல்றேன்.

  ReplyDelete
 20. //அங்கே குடிக்கொண்டிருக்கும் பெங்களூரின் நிரந்தர தலைவலி மற்றும் கலியுக நாரதரைச்//

  nan chennai varum pothu irukku ungalukkum rivittu!
  பெங்களூரின் நிரந்தர தலைவலி nu nee ammuvai thaane sollaraa? he hee :)
  @geetha, ammu is another blogger in bnglre, vedakku Aaruyir thozhi.

  ReplyDelete
 21. அம்பி,
  சரியான நாரதர்னு நிரூபிச்சாச்சு, ஹி,ஹி,ஹி, ரொம்பச் சிரிப்பா வருது, அப்புறமா வந்து பார்த்துக்கறேன், என்ன நடக்குதுன்னு. ஹி,ஹி,ஹி,ஹி,

  ReplyDelete
 22. @அம்பி
  //பெங்களூரின் நிரந்தர தலைவலி nu nee ammuvai thaane sollaraa? he hee :)//
  ஆஹா, இன்னொரு விவகாரத்த கொளுத்திப் போட்டாச்சா? இதுக்கெல்லாம் நடுங்க மாட்டா இந்த வேதா, அம்முவ பத்தி என்ன நினைச்சுட்டீங்க, அவ ஒன்னும் உங்க சிஷ்யக் கோ(கே)டிகள் மாதிரி இல்லை.


  @கீதா,
  என்ன இதுக்கே இப்படி சொல்டீங்க? இப்படியெல்லாம் சொல்லிட்டா நான் பேசாம இருந்துடுவேனா, உங்களுக்கு இருக்கு சுற்றுப்பயணம் போயிட்டு வாங்க, வேப்பிலை அடிக்கறேன்(உங்க சங்கத்துல நீங்க ஊருக்கு போறதனால, கொஞ்ச நாளைக்கு விடுதலைன்னு சந்தோஷப்பட்டு விழா எடுக்கப் போறாங்கன்னு கேள்விப்பட்டேன்)

  ReplyDelete
 23. வேதா,
  நற நற நற நற நற நற நற

  ReplyDelete
 24. I like it! Keep up the good work. Thanks for sharing this wonderful site with us.
  »

  ReplyDelete