எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 22, 2006

91. ஒரு அதிரடி நடவடிக்கை

வலை உலக நண்பர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. இதனால் தெரிவித்துக் கொள்ளப்படுவது என்னவென்றால், வருகிற நவம்பர் மாதம் கொட்டுகிற மழையில் நம்ம அம்பிக்கும் (Brutus), கார்த்திக் முத்து ராஜனுக்கும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிரந்தரமாக ரத்து செய்யப் பட்டது. இதைப் பற்றி நம் வலை உலகச் செய்தி சேகரிப்பாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால்:
************

சதி அம்பலம், வேதாவின் துரோகம்.

ஜல்லிக்கட்டுப் போட்டி

வலை உலகில் பிரசித்தி பெற்று இருக்கும் கீதா சாம்பசிவம் அந்த வலை உலகில் எப்போதாவது மொக்கைப் பதிவு எழுதும் அம்பிக்கும், முடிஞ்ச போது நல்ல பதிவு எழுதும் கார்த்திக்குக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி வைத்து விட்டு அதை நவம்பரில் கொட்டுகிற மழையில் வைத்தால் தான் நல்லது என்று தீர்மானித்தது நாம் அனவரும் அறிந்ததே.

அசினைப் பற்றிய கனவு

முன்னதாக அம்பிக்கும், கார்த்திக்குக்கும் இருந்து வந்த அசினைப் பற்றி யார் கனவு காண்பது என்ற விஷயத்தில், நடுவர் கோபாலன் ராமசுப்பு அவர்கள் அம்பி, அசினுக்குத் தம்பி என்று தீர்மானித்ததும் அதை அம்பி ஏற்றுக் கொள்ளாததும் நேயர்கள் அனைவரும் அறிந்ததே. அதனால் தவிர்க்க முடியாமல் தலைவி (நான் தான்) இந்த அறிவிப்பைச் செய்தார் என்பதும் நீங்கள் அறிந்த விஷயமே. வேதாவின் தலை மேல் ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்திருக்கும் வேளையில் வேதா அவங்க தலைவியான கீதாவின் மனம் புண்படும் வகையில்:-) அவரைப் பற்றி வயசானவர் என்று கூறி ஒரு பதிவு எழுதியதைப் பார்க்கும்போது இந்தச் செய்தியில் அம்பியும் சம்மந்தப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று அம்பி கீதாவிற்கு மெயில் அனுப்பி அதைப் பார்க்கச் சொல்லித் தூண்டியதில் அவர் மிகுந்த மனக்கிலேசம் அடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. தன் தலைமேல் நடக்கவிருக்கும் ஒரு விஷயம் பற்றித் தெரிந்து கொண்டும் கூட, அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பைச் சுமந்து கொண்டும் கூட, வேதா அம்பியுடன் சேர்ந்து கொண்டு இந்தச் சதியைச் செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அம்பி வேதாவின் வலைப் பக்கத்தில் பின்னூட்டத்தில் தான் ஒரு பாட்டில் தேன் குடித்த மாதிரி இருக்கிறது என்று சொன்னதில் இருந்து இது அம்பியும் வேதாவும் சேர்ந்து செய்த சதி என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. (ஹி,ஹி,ஹி,ஹி, அந்தத் தேன் பாட்டிலை எடுத்துட்டு விளக்கெண்ணெய் பாட்டிலை வச்சுட்டேன். அம்பி இனிமேல் ஒரு பத்து நாள் வலைப்பக்கம் வரமுடியாது. ஹி,ஹி,ஹி,ஹி,). நாகை சிவா மற்றும் கார்த்திக் முத்துராஜன் இருவரும் மெளனமாக இருப்பதும் சந்தேகத்திற்கு அறிகுறிதான். புதரகம் சென்றதும் பொன்ஸ் மறைத்து வைத்த பொற்குவியலில் இருந்து நாகை சிவா எல்லாருக்கும் கையூட்டுக் கொடுத்து விஷயம் வெளியே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.(இன்னொரு Brutus). வ.வா.சங்கத்தின் கணக்கு, வழக்கு மற்றும் நாகை சிவாவால் செய்யப்பட்ட செலவு இதைப் பற்றி ஆராய ஒரு விசாரணக் கமிஷன் போட வேண்டும் என்று வலை உலக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் தலைவி, தாயுள்ளத்தோடு அவர்கள் தலைவியின் பதிவில் பின்னூட்டம் இட்டால் போதும், அதை விடப் பெரிய தண்டனை எதுவும் இல்லை என்று தெரிவித்து விட்டார்.

தலைமை

ஆனால் இது பற்றிய உண்மை நிலவரத்தை ஆராய தி.ரா.ச. தலைமையில் மின்னல் தாத்தா, சின்னக்குட்டி, நன்மனம், பெருசு, தம்பி ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்ப்பித்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிகிறது.
வ.வா. சங்கம்

வ.வா. சங்கத்தின் ஒப்பற்ற தலைவர் கைப்புள்ள அதன் மகளிர் அணியின் நிரந்தரத் தலைவலி கீதா சாம்பசிவத்தை ஆதரிப்பதும் தெரிந்ததே. ஆகவே இந்தக் கோணத்திலும் புலனாய்வு செய்யப்படுகிறது. தலைவர் "கைப்புள்ள' என்பதால் அசின் பற்றியும் 9தாரா பற்றியும் எதுவும் அறிந்திருக்கவில்லை. இது பற்றி அறிந்த தலைவி அவருக்கு இலவச ட்யூஷன் எடுத்தும் அவர் புரிந்து கொள்ளாததால் "கோவை சரளா" "கைப்பொண்ணு" போன்ற பெயர்களைக் கேட்டால் பயந்து நடுங்குவதாலும் தலைவரைக் கண்டு உண்மை நிலவரம் தெரிந்து கொள்ள முடியவில்லை.

நாளை சனிக்கிழமை

மறுநாள் சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு (என்ன ஒரு கண்டுபிடிப்பு) என்று இரண்டு நாள் விடுமுறை வருவதால், அந்தச் சமயம் தான் ஒளிந்து கொள்ள வசதி என்று அம்பி வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகப் பார்க்க முடிகிறது. யார் என்ன செய்தாலும் தலைவியின் வயதைக் கூட்டவோ, குறைப்பதோ தலைவியின் சொந்த இஷ்டம் என்பதும் அதில் யாரும் தலையிட முடியாது என்பதும் எல்லாரும் அறிந்த உண்மை.
வழக்கு

நாளை மறுநாள் திங்கள் அன்று வழக்குக் கோர்ட்டுக்கு வரும் என்றும், அம்பி கைது செய்யப் படுவாரா? அல்லது சரண் அடைவாரா என்றும் வலை உலகப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

28 comments:

 1. //ஆனால் இது பற்றிய உண்மை நிலவரத்தை ஆராய தி.ரா.ச. தலைமையில் மின்னல் தாத்தா, சின்னக்குட்டி, நன்மனம், பெருசு, தம்பி ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது.//

  குழுனா "Commission" அதான தலைவி அவர்களே!!!

  அப்ப அந்த கமிசனுக்கு எவ்வளவு கமிசன்னு டிஜைட் பண்ணியாச்சா!!

  அது சரி

  //நாளை சனிக்கிழமை

  மறுநாள் சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு...//

  இது எந்த ஊர்லனு சொன்னா கொஞ்சம் காலம் இருந்துட்டு வரலாம் :-)

  ReplyDelete
 2. ஹி,ஹி,ஹி,ஹி, நன்மனம்,
  சின்னப் பொண்ணுன்னாத் தப்புச் செய்யாதா என்ன? அதான் கவனிக்கலை தப்பு நடந்து போச்சு, அதனால் என்ன? பரவாயில்லைனு விட்டுட்டுப் போங்க!

  ReplyDelete
 3. //வேதாவின் துரோகம்.//
  என்னது துரோகமா? என் தலை மேல ஜல்லிக்கட்டு நடத்தி என்னை தீர்த்துக் கட்ட செஞ்ச நீங்க போட்ட திட்டத்தை எப்படி முறியடிச்சேன் பாருங்க(ஜல்லிக்கட்டை ரத்து பண்ணிட்டீங்களே)
  இதுக்கு பேரு தான் போட்டு வாங்கற்து:)

  //அதை நிரூபிக்கும் வகையில் நேற்று அம்பி கீதாவிற்கு மெயில் அனுப்பி அதைப் பார்க்கச் சொல்லித் தூண்டியதில் அவர் மிகுந்த மனக்கிலேசம் அடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.//


  //அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பைச் சுமந்து கொண்டும் கூட,//
  அட நான் தீர்ப்பு சொல்றதா எப்ப ஒத்துண்டேன். மாடு யாரை முட்டும் என்பதைக் கூட நீங்கள் தான் தீர்மானிக்க போவதாக நீங்கள் அந்த பதிவில் சொல்லியபோதே எனக்கு தெரியும் இது நீங்கள் எனக்கு வைக்கப் போகும் ஆப்பு என்று(ஆனால் அதை எப்படி முறியடித்தேன் பாருங்கள்)

  ReplyDelete
 4. @அம்பி
  கைக் கொடுத்த தெய்வத்தின் காலை வாருவதாக நினைத்துக் கொண்டு நீங்கள் செய்த கலகம் நம் கீதாக்காவின் சதி திட்டம் வெளிவர ஒரு நாரதர் கலகமாக முடிந்ததால், நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள்(உனக்கு இருக்கு ஒரு நாள் ஆப்பு)

  ReplyDelete
 5. வலைப்பதிவு திறக்கப்பட்டு விட்டது என்று நாகை சிவா சொல்கிறார். ஆனால் இன்னும் வலைப்பக்கத்து நேரடியாக வர முடியவில்லையே? ஏன்? tools.superhit.in வழியாத்தான் வர முடியுது. எனக்கு மட்டும் இப்படியா? எல்லாருக்குமா? யாராவது தெளிவாக்குங்களேன்.

  ReplyDelete
 6. கதையை மாத்திய துரோகி வேதாவே, உங்களுக்கு இருக்கு எங்க சங்கத்தோட தளபதி சிபி கிளம்பிட்டார் போர் வாளோட, இருங்க வருவார், சங்கக் கண்மணியாம் தலைவியைக் காக்க! நீங்க போட்ட சதியை உங்க வாயாலேயே ஒத்துக்க வச்சுட்டேன் பார்த்தீங்களா? யார் யாருக்கு ஆப்பு வக்கப் போறாங்கனு பார்க்கலாம்.
  வெற்றி வேல், வீரவேல் (இது ஒண்ணு சும்மா சும்மா நினைவுக்கு வருது)

  ReplyDelete
 7. @அம்பி,
  வேதா மன்னிக்கலாம். ஒரு சாதா மன்னிக்கலாம். இந்த கீதா ஒரு நாளும் மன்னிக்க மாட்டாள். ஒருநாள் அந்த விளக்கெண்ணெயைக் கொடுத்தே தீருவாள்.

  ReplyDelete
 8. //நீங்க போட்ட சதியை உங்க வாயாலேயே ஒத்துக்க வச்சுட்டேன் பார்த்தீங்களா?//
  யார் ஆரம்பித்து வைத்தது? நீங்க தான், ஏதோ உங்கள மாதிரி பெரியவங்கள பார்த்து என்ன மாதிரி சின்ன பொண்ணு கத்துக்கிட்டா, இப்படி போர் முழக்கமிடறீங்க, உங்க சங்கத்து வாள் வந்தாலும் சரி தல வந்தாலும் சரி என்னைய ஒன்னும் பன்ண முடியாது:)

  ReplyDelete
 9. வேதா, வேதா,
  மறுபடி மறுபடி ஒரு சின்னப் பொண்ணைப் பார்த்துப் பெரியவங்கனு சொல்றதை நான் பார்த்தா என் சந்தேகம் இன்னும் அதிகம் ஆகிறது. ஏதோ பெரியவங்கனு பார்க்கிறேன்.:-)

  ReplyDelete
 10. என்னங்க இப்படி கிளம்பிட்டீங்க. தேவையில்லாம இந்த நல்லவனை, வல்லவனை உங்க பிரச்சனையில் இழுப்பது கொஞ்சம் கூட நல்லாயில்ல.

  //பொன்ஸ் மறைத்து வைத்த பொற்குவியலில் இருந்து நாகை சிவா எல்லாருக்கும் கையூட்டுக் கொடுத்து விஷயம் வெளியே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.//
  கையூட்டா...... ஹுக்கும் என்னத்த சொல்ல

  //வ.வா.சங்கத்தின் கணக்கு, வழக்கு மற்றும் நாகை சிவாவால் செய்யப்பட்ட செலவு இதைப் பற்றி ஆராய ஒரு விசாரணக் கமிஷன் போட வேண்டும்//
  இது வேறயா..... இந்த கமிஷமையாச்சும் சீக்கிரம் முடிங்கப்பா. 10 12 வருஷம் இழுக்காம

  ReplyDelete
 11. அப்படியே ஜெ. மாதிரியே பேசுறீங்களே... என்ன ஒரு 60 வயசு இருக்குமா?

  ReplyDelete
 12. //தலைவியின் வயதைக் கூட்டவோ, குறைப்பதோ தலைவியின் சொந்த இஷ்டம் என்பதும் அதில் யாரும் தலையிட முடியாது //

  இது என்ன நியாய விலைக்கடையா?.

  அசினெல்லாம் பழைய நாயகிங்க லிஸ்ட்ல சேத்தாச்சு. புதுசா வந்திருக்கும் பாவனாவிற்கு யாரும் போட்டி போட வேண்டாம் என்று வலையுலகத்தின் வயதானா வயதுவந்த
  கண்மணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
  ஏன்னா, எங்களுக்குள்ள ஒரு 'இது' ஓடிகிட்டு இருக்கு.

  அன்புடன்
  தம்பி

  ReplyDelete
 13. சிவா,
  இன்னும் தலைவர் கமிஷனைக் கூட்டவே ஒத்துக்கலை. நானே பயங்கரக் கடுப்பிலே இருக்கேன். நீங்க வேறே சீக்கிரம் முடிக்கச் சொன்னா எப்படி? அதெல்லாம் மெதுவாத்தான் நடக்கும்.

  ReplyDelete
 14. மனசு, மனசு, உங்க வேலையை விட்டுட்டு இது என்ன வேண்டாத வேலை? கொஞ்சம் கூட நல்லா இல்லை. எனக்கு 60 வயசாஆஆஆஆஆஆஆ? ஆ, அம்மா, மயக்கம் வருதே!

  ReplyDelete
 15. தம்பி,
  இந்த வயசிலேயே ஒரு "இது"வா? நடக்கட்டும், நடக்கட்டும், பெருந்தன்மையாக அம்பித் தாத்தாவும், கார்த்திக் மாமாவும் விட்டுக் கொடுப்பார்கள், தம்பிக்காக, இது தம்பிக்காக என்று பாடிக் கொண்டு.

  ReplyDelete
 16. கீதாக்கா
  நம்ம லெவலே வேறே.
  சும்மா எல்லாம் உயர் மட்டக்குழு , விசாரணை இதுக்கெல்லாம்
  வர முடியாது.
  ஒரு நிரந்தர தலைவலி சொல்றதாலெ கேக்கிறேன்.
  மீட்டிங்க்கு ஷகிரா(ஷகிலா இல்ல), ஜெசிக்கா ஆல்வா, ஜெ. லொ
  யாரவது ஒருத்தர் வருவாங்கதான.

  பாவனாவின் அண்ணன் தம்பி வாழ்க வாழ்க.

  ReplyDelete
 17. //இந்த வயசிலேயே ஒரு "இது"வா?//

  இந்த வயசுல வராம பின்ன
  எந்த வயசுல வரும்?
  இது வாலிப வயசு. :)

  ReplyDelete
 18. //
  தலைவர் "கைப்புள்ள' என்பதால் அசின் பற்றியும் 9தாரா பற்றியும் எதுவும் அறிந்திருக்கவில்லை
  //


  பேரு தான் கைபுள்ள மத்தபடி..............

  ReplyDelete
 19. பெரு(சு),
  இது வேறேயா? அது சரி, ஏன் மிச்சப் பேரை விட்டுட்டீங்க? வரிசையாப் போட்டுக்கலாம், என்னைக் கேட்டா உங்க லெவலுக்கு சோஃபியா லாரன், எலிசபெத டெய்லர் தான் சரி, இது எப்படி இருக்கு?

  ReplyDelete
 20. போனாப் போகுது தம்பி, அவங்களை எல்லாம் போட்டிக்கு வரச் சொல்லலை.

  ReplyDelete
 21. மின்னல் தாத்தா,
  உங்க பேரனைப் பத்தி நீங்களே இப்படிச் சொல்லலாமா? தப்பில்லை?

  ReplyDelete
 22. என்ன வேதா, ஒரு ஜல்லிக்கட்டு போட்டி பாக்கலாம்னு நினைச்சேன், இப்படி என் ஆசைல மண்ண அள்ளி போட்டுட்டீங்களே.......... :-((

  ReplyDelete
 23. என்னங்க கீதா..ஒரு நாலு நாளைக்கு வலைப்பக்கம் வரல.. அதுவும் இந்த பிளாக் பிரச்சினைனால..
  அதுகுள்ள இப்படி ஒரு அபாண்ட பழியா.. கடவுளே.. இதென்ன சோதனை.. ஏற்கனவே என் கனவு கன்னி,
  விருமாண்டி கைல கிடச்சதால மனசு வெம்பி, தூக்கம் வராம கிடக்குறேன்.. இதுல இந்த பழி வேறயா..

  ReplyDelete
 24. சின்னக்குட்டி,
  இப்போக்கூட ஒண்ணும் கெட்டுப் போகலை. நீங்க சரின்னா உங்க தலை மேலே நடத்தலாம். தவிர, உங்களைத் தான் விசாரணைக் குழுவில் போட்டிருக்கேனே! எவ்வளவு பெருமை வாய்ந்த பதவி! சும்மா காலரைத் தூக்கி விட்டுக்குங்க,அதை விட்டுட்டு இந்த சோப்ளாங்கி அம்பியோட ஜல்லிக்கட்டா முக்கியம். அம்பியைச் சரண் அடையச் செய்வதே நம்ம லட்சியம்.

  ReplyDelete
 25. ஹி,ஹி,ஹி, கார்த்திக் உங்க பின்னூட்டம் இப்போ தான் பார்த்தேன். நானும் கூடிய வரை உங்களை மாட்டி விட வேண்டாம்னுதான் பார்த்தேன். ஆனால் இந்த அம்பி ஒரே பிடிவாதம். கார்த்திக்கையும் சேர்த்துக் கொண்டால்தான் ஆச்சு. இல்லாட்டி ஆட்டத்துக்கு வரமாட்டேன் அப்படிங்கறார்.

  @அம்பி, உங்களுக்குத் தான் நாரதர் வேலை தெரியுமா? இப்போ பாருங்க, கார்த்திக்கைத் தூண்டி விட்டாச்சு!

  ReplyDelete
 26. I'm impressed with your site, very nice graphics!
  »

  ReplyDelete
 27. Hmm I love the idea behind this website, very unique.
  »

  ReplyDelete
 28. Very best site. Keep working. Will return in the near future.
  »

  ReplyDelete