எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 26, 2006

97.கிழக்கும் மேற்கும்-2

இந்த ப்ளாக்கர் வேதாளம் மறுபடிமுருங்கை மரம் ஏறிவிட்டது. வலைப்பக்கம் திறக்கவேமுடியவில்லை. tools.superhit.inவழியா வந்தால் வலைப்பக்கம் பார்த்துப் படிக்க மட்டும் வருகிறது. கடந்த இரண்டு நாளாserver வேறே down. பாதியில்
போய் விடுகிறது. எப்போ வருதுனுதெரியறது இல்லை. நேத்திக்கு Tata Indicom Broadband

Serviceவேறே வரவே இல்லை.Consumer Service-க்கு ஃபோன் செய்து கேட்டால் "All the

executives are busy. Please try after sometime."னு ஒரேஅலட்டல். எல்லாருக்கும்
வலைப்பக்கம் நேரடியாகத் திறக்க முடியுதுங்கறாங்க. எனக்கு மட்டும் இன்னும் வரவே இல்லை. நான்வலை உலகில் ரொம்பப் பிரசித்திஅடைஞ்சிருக்கிறதைப் பார்த்து யாரோ சதி செய்யறாங்கனு

நினைக்கிறேன். இதிலே இந்தஅம்பி வேறே எல்லாம் "சீன் காட்டறீங்க"னு சொல்றார்..

எல்லாம் மொக்கைப் பதிவு போடறவயித்தெரிச்சல். அதிலேயும் இந்தஜல்லிக்கட்டுப் போட்டியை வேறேரத்து செய்துட்டேனா, அதான்,அதோட இல்லை, என்கணவருக்கு சப்போர்ட் வேறே.

இந்த ப்ளாக்கர் தகராறே இந்த"கிழக்கும் மேற்கும்" பதிவுபோட்டதும் தான் ஆரம்பிச்சது.

அப்படிப் பார்க்கறச்சே இவங்க எல்லாம் சேர்ந்து என் எழுத்துசூரிய ஒளி போல பிரகாசித்து

வருவதைத் தடைசெய்யறாங்களோனு தோணுது.இவர் ஒருத்தர், நான் எதுசெய்தாலும், அதுக்கு நேர் மாறாசெய்வார்.

காலையில் பாருங்க, மிக்ஸியில் அரைத்து விட்டுக் கொஞ்ச நேரம்,என்ன ஒரு நிமிஷம் இருக்கும், வேறு வேலையாப் போனேன்.அரைத்தது போதுமானு பார்த்துட்டுத் திருப்பி

அரைக்கணும்னு மெயின் ஸ்விட்சை அணைக்காமல் வைத்திருந்தேன். திரும்ப வந்து

பார்த்துவிட்டு அரைச்சதுபோதாதுனு மிக்ஸியைப் போட்டசுத்தலை. என்னடா இது

மின்சாரம் கூடப் போகலியே,லைட் எரியுது ஃபான் சுத்துதுனுநினைச்சுக் கொண்டே

மறுபடிமறுபடி பார்க்கறேன். சுத்தவே இல்லை. சரி என்று அவரைக் கூப்பிட்டு மிக்ஸி என்னவோ ஆச்சுஎன்று சொல்ல இந்தச் சமயம்கரெக்ட்டா வந்துடுவார். பார்த்து

விட்டு, உடனேயே பதிலே சொல்லாமல் ஸ்விட்சைப் போட்டு விட்டுப் போகிறார். என்னத்தைச்

சொல்லறது?

நான் சீரியல் பார்க்கறதே"சிதம்பர ரகசியம்" மட்டும் தான்.அதுதான் கொஞ்சம்

இருக்கிறதிலேயேபரவாயில்லைங்கற ரகம். அதனாலும் எனக்கு இயல்பாவே

thriller and comedy தான்பிடிக்கும்ங்கிறதாலேயும் மற்றசீரியல் அவ்வளவா

பிடிக்கிறதில்லை. புதன்கிழமை "சிதம்பர ரகசியம்" பார்க்க சகலவிதமான் முன்னேற்பாடுகளுடன்

உட்காருவேன். சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, சமையல் அறை சுத்தம் செய்து முடித்து விட்டு

வந்தால், சரியாக இருக்குமென்றுஎல்லாம் முடித்து விடுவேன். வந்து உட்கார்ந்தால் உடனே மின்சாரம்போயிடும். ராத்திரி சரியாக 9 மணிக்கு வரும். அல்லது மின்சாரம் போகலைன்னால் யாராவது ஃபோன் செய்வார்கள்.சாதரணமாக ஃபோன் வந்தால் விழுந்தடித்துக் கொண்டு எடுக்க

வருவார். இப்போ வரவே மாட்டார்.அப்படித் தப்பித் தவறி ஃபோனைஎடுத்து விட்டால் என் கணவர் ஃபோனில் பேசும் போது பார்க்க வேண்டுமே! "நாகா" சிதம்பரரகசியத்தில் கொடுக்கும்

சஸ்பென்ஸ் எல்லாம் தோற்று விடும். எல்லாம் மோனோசிலபிளில் தான் பேசுவார். ம், அல்லது சரி,இதுக்கு மேலே வார்த்தை வராது. பேசுவது யார் என்று லேசில் கண்டு பிடிக்க முடியாது. நமக்குஇங்கே மண்டை காயும்.சமயத்தில் "அடடா, அப்படியா," என்றும் வார்த்தைகள் வரும்.

என்னவோ,ஏதோ என்று மனம்பதைக்கும். ஃபோனில் எங்க பெண்ணாயிருந்தால் உடனேயே, "இந்தா, உன் பெண் பேசுகிறாள். அவளுக்கு அம்மாகிட்டே தான்

பேசணுமாம்." என்று கொடுத்து விடுவார். தட்ட முடியுமா? மற்ற நேரத்தில் அவர் பெண், சீரியல் பார்க்கும்போது என் பெண்ணாகி விடுவாள். நான் தான் தாயுள்ளம் கொண்டவள் ஆச்சே? அதுவும்எங்க பொண்ணு எங்க வீட்டின் முடிசூடா ராணி. ஆனால் அதை

ஒத்துக்க மாட்டாள். எங்களோடபரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை அவள் தம்பிக்கு நாங்கள் எழுதி

வச்சுட்டதா நினைச்சுப்பாள். சாம்ராஜ்யமே இல்லைனாலும்நம்பறதில்லை,. தம்பிக்காரன்

வழியே தனி வழி. சரியா நான் யோகா அல்லது தியானம் பண்ணும் சமயம் டெலிபதியில்

பார்த்து விட்டு ஃபோன் செய்பவன்.என்னைப் பத்திய மற்ற புகார்களுக்கு அக்காவுடன் பாசம்

மிகுந்த தம்பியாக ஒத்துப்போகிறவன். சாம்ராஜ்யம் பற்றி மட்டும் வாய் திறக்காத மெளனி.

அப்பாவுக்குச் சரியான பிள்ளை. நான் தியானம் செய்யும்போது சும்மாவே சில சமயம் "இட்லிக்குச் சட்னி போதுமா? சாம்பார் வேணுமா? இனிமேல் போய் சாம்பார் வைக்க நேரம்இருக்குமா?" என்றெல்லாம் தோணும். (துளசி, நான் தியானம் பண்ணறேன்னு பெருமூச்சு

விட்டீங்களே,)இந்தக் கூத்து எல்லாம் முடிந்து நான் டி.வி. பார்க்க வந்தால் அதற்குள் சீரியல்

முடிந்திருக்கும். "என்ன நடந்தது?" என்று இவரிடம் கேட்டோமானால் உடனே அவர் "அதான் அந்த அபி இருக்காளே, அவள் தேவயானிக்குப் புருஷனா நடிக்கிறாரே அவர் வீட்டில்

இருக்காள் இல்லையா? அப்போமாதவி வந்து சோமுவுக்குப் ஃபோன் செய்து," என்று

ஆரம்பிப்பார். "என்ன உளறல் இது? அபி "கோலங்கள்" சீரியலில் வராள். அது இப்போதான்

ஆரம்பிக்குது. அதுக்குள்ளே வேறே என்னவோ கதை சொல்றீங்களே? சிதம்பர ரகசியம்

என்ன ஆச்சு?" என்று கேட்டால்உடனே அதிலே ஒரு பொண்ணு வருவாளே என்று ஆரம்பிப்பார்."அதிலே ஒரு பொண்ணூ என்ன 9 பொண்ணு வரா. உங்களுக்கு

இத்தனை சீரியல் பார்த்தும் உருப்படியா ஒரு கதை சொல்லத்தெரியலை." என்று சொன்னால்

"உன்னை யார் இவ்வளவு நேரம்பேசச் சொன்னது? " என்பார். அப்போ "நீங்க சிதம்பர ரகசியம்

கதை சொல்ல மாட்டீங்க? னு கேட்டால் சாவ காசமாக " நான் வந்து "என் தோழி, என் மனைவி, என் காதலி" சீரியலும் பார்த்தேனா, ஆனந்தத்தில் அபிராமியா வருவாளே ஒருத்தி

அவள் இதிலும் வராளே" என்று ஆரம்பிப்பார். மூன்றாவது உலக மகா யுத்தம்ஆரம்பிக்கும் .நான் இதிலேயே களைத்துப் போய்ப் படுக்கப் போய் விடுவேன்.

இப்படித்தான் ஞாயிற்றுக் கிழமை சீரியல் முடிந்திருக்கிறது. எந்த நேரம் என்று இரண்டு பேரும்

வாக்குவாதம் பண்ணிக் கொண்டதில் கடைசியில் முடிவே பார்க்கலை. யாராவது பார்த்தவங்க

சொல்லுங்களேன், ப்ளீஸ். :D
**************

ப்ளாக்கர் செய்யும் அட்டகாசத்தைக் கண்காணிக்க ஒரு நிபுணனையும், நிபுணியையும்

வரவழைத்தேன். இரண்டு பேரும் திகைத்துப் போய்ப் பேச்சே வரவில்லை. "இந்த மாதிரி மாஜிக் எல்லாம் எங்கே கத்துக்கிட்டீங்க"னு ஒரே ஆச்சரியம் போங்க. இரண்டு
பேரும் பின்னங்கால் பிடரியில் பட ஓடினாங்க. அப்புறம் வரவே இல்லை. நிபுணன் எங்க அண்ணா பையன். இரண்டு வருஷம் கழிச்சு நெதர்லாண்ட்ஸில் இருந்து

வந்திருக்கான். இப்போ சீக்கிரமே போகணும்னு சொல்லறானாம்.அண்ணாவுக்கு

வருத்தம். நிபுணி, இந்த வருஷம் தான் பாஸ் செய்து campus selection ஆனது பத்திச் சொல்ல வந்தாள். "இப்போ படிச்சதேமறந்துட்டேன்" என்று சொல்கிறாள் என்று அவங்க

வீட்டில் புகார். என்ன செய்யலாம்?
:D

இந்த ஒரு போஸ்ட் போட நான் பட்ட பாடு இருக்கே, சொல்ல முடியலை போங்க. நேத்திக்கு எழுத முடியலைனு இன்னிக்கு எழுதி சேமித்து வைத்துப் பின் திறந்தால் எக்ஸ்ப்ளோரர் ஒரே அடம். வரவே இல்லை. சரினு நெருப்பு நரியில் போய்க் கொடுக்கலாம்னு நினைச்சா அது என்னவோ ரொம்ப லேட் செய்யவே திருப்பிப் போடலாம்னு தட்டினேன் பாருங்க, சுத்தம் எல்லாம் அவுட். மறுபடி எழுதினால் வெளியே போயிட்டேன். சரினு மறுபடி சேமிப்பில் போட்டு விட்டு வந்து பார்த்தால் எல்லாம் புதுக் கவிதை வடிவம். சரி பண்ணிப் போடுகிறேன். வந்தால் என்னோட அதிர்ஷ்டம், வராட்டி உங்கள் எல்லாருக்கும் அதிர்ஷ்டம்/ யாருக்குன்னு பார்க்கலாம்.

18 comments:

  1. //இந்த ப்ளாக்கர் தகராறே இந்த"கிழக்கும் மேற்கும்" பதிவுபோட்டதும் தான் ஆரம்பிச்சது. //

    he hee, kadavulukee therinju irukku saambu maama nallavar! vallavar! appaavi!nu. evloo carefullaa mixie switch ellam off panni irukkaar. atha paraatta vazhiya kanoom!
    epdi epdi? phonela avar epdi pesuvaar!nu enakkum theriyum. summa reelu vuda kudaathu! gr..rr

    but sema comedyaaa irunthathu intha poshtuu. :D

    ReplyDelete
  2. post number 94 ku apromaa 97 aa?
    (already 94 nu rendu postu pottachu, athu vera vishyam!)

    sari, sari,vayasaana marathi varathu sagajam thaane! palla kadikka padathu! unga vayasu thaan 16 Aache! athaa thaan mentioned.

    enna veda, syam, karthik naan solrathu correct thaane? ("narayana! narayana!") :)

    ReplyDelete
  3. எங்களுக்குத்தான் அதிருஷ்டம் இல்லையின்னு தெரியுமே உங்க பதிவுக்கு வரும்போதே.ஆமாம் ஒரு மெகா சீரியலுக்கு உண்டான மெடிரியல் இருக்கு போல.இதிலெ சீரியல் பாக்கலையின்னு வருத்தம் வேறு.ஆண்டவா காப்பாத்து.

    ReplyDelete
  4. உங்க வலைப் பிரச்னை இப்ப காஷ்மீர் பிரச்னை மாதிரி பழைய செய்தியாகி விட்டது. அதனால் அத பத்தி எதுவும் சொல்ல விரும்பல:)

    இந்த சிதம்பர ரகசியத்தில் அவர்கள் செய்த மருந்து விஷம் என தெரிந்து விடுவதால் எல்லோரும் சேர்ந்து அந்த ஓலையில் வேறு என்ன குறிப்பிட்டுள்ளது என்பதை ஆராய்கின்றனர். அப்பொழுது சோமு, ஆகாஷ் சொன்னது போல் அதிலுள்ள கோட் பைனரி கோட் இல்லை என்று கண்டுப்பிடிக்கிறான். பின் வேறு விதமாக
    அதை டீகோட் செய்தால் ஒரு வாக்கியம் கிடைக்கிறது. அதன் படி அவர்கள் ஏற்கனவே செய்த மருந்தை திரும்பி அடுப்பில் கொதிக்க வைத்து அதில் அந்த மருந்தை யார் உட்கொள்ளப் போகிறார்களோ அவர்களின் ரத்த சம்பந்தம் உள்ளவர்களின் குருதியைச் சேர்த்து முழு நிலவின் ஒளி படும் படி செய்தால் மருந்து தங்க நிறத்தில் கிடைக்கும் எனத் தெரிகிறது. அதன் படி மருந்தை செய்ய முற்படுகின்றனர். அப்பொழுது ஆர்த்தியின் அப்பா தன் கையைக் கத்தியால் கீறி ரத்தத்தைச் சேர்க்க மருந்து கிடைக்கிறது. ஆனால் இதைப் பார்த்ததும் எடிட்டர் பயந்து ஓடி விடுகிறார்(அவருக்கு ரத்தத்தைக் கண்டு பயப்படுகிற போபியா) பின் மருந்து கிடைத்த செய்தி அறிந்தவுடன் திரும்பி அந்த இடத்திற்கு வருகிறார். அப்பொழுது அங்கு ஏற்கனவே வந்திருந்த துளசியின் கணவன் விஷ்ணு எடிட்டரிடம் அவர் ரத்தத்தைச் சேர்த்தால் தான் துளசிக்கு மருந்து கிடைக்குமென கூறி அவரின் ரத்தத்தை விட சொல்கிறார். ஆனால் ரத்தத்தைக் கண்டதால் மிகவும் பயந்து விட்டிருந்த எடிட்டர் துப்பாக்கியை எடுத்து முகிலனையும், விஷ்ணுவையும் ரத்தம் குடுக்குமாறு மிரட்ட, விஷ்ணுவோ அவரைத் தடுக்க பார்க்க எடிட்டர் கோபத்தில் விஷ்ணுவைச் சுட்டு விடுகிறார். இதைக் கண்டு கோபம் கொள்ளும் துளசி அவள் அப்பாவைக் கத்தியால் குத்தி கொன்று விடுகிறாள். அப்பொழுது அவர் உடம்பிலிருந்து வழிகிற ரத்தம் மருந்தில் விழுந்து துளசியின் மருந்தும் கிடைத்துவிடுகிறது. இருவரும் குணமாகி விடுகின்றனர். சோமு, ஆர்த்தியை திருமணம் செய்து கொள்கிறா. ஆகாஷ் அபிராமியை திருமணம் செய்து கொள்கிறான்.

    சுபம்:)
    அப்பாடி ஒரு வழியா முடிச்சாங்கப்பா சீரியலை. இனிமே புதன்கிழமைகளில் போரடிக்கும். நான் பார்த்து வந்த ஒரே தொடர் இது தான்.

    ReplyDelete
  5. கிழக்கும் மேற்கும்-2

    முழுவதுமாக படித்ததிலிருந்து தெரிந்து கொண்டது கீதா அக்காவுக்கு வயசு 16 அல்ல......:)

    ReplyDelete
  6. மேலும் படித்ததிலிருந்து புதன் சிதம்பர ரகசியத்தில் ஆரம்பித்தது ஞயிற்று கிழமையில் முடிந்தது ஏனோ...??

    ReplyDelete
  7. //முடிந்திருக்கும். "என்ன நடந்தது?" என்று இவரிடம் கேட்டோமானால் உடனே அவர் "அதான் அந்த அபி இருக்காளே, அவள் தேவயானிக்குப் புருஷனா நடிக்கிறாரே அவர் வீட்டில்
    இருக்காள் இல்லையா? அப்போமாதவி வந்து சோமுவுக்குப் ஃபோன் செய்து," என்று ஆரம்பிப்பார். "என்ன உளறல் இது? அபி "கோலங்கள்" சீரியலில் வராள். அது இப்போதான்//

    ஹா ஹா! உங்க வீட்டுலயும் இதே கூத்தா? கடைசியா சென்னை போன போது எங்கம்மா ஒரே கம்ப்ளெயிண்டு. இப்பல்லாம் இந்த டிவி சீரியலை எல்லாம் அப்பா தான் ஜாஸ்தி பாக்குறாராம். நான் என்னிக்காச்சும் போய் கதை கேட்டா எங்கம்மா உங்க டாடியைக் கேளுன்னு சொல்லிடுவாங்க...நீங்க சொன்ன இதே மாதிரி தான் எங்க தோப்பனாரும் கதை சொல்லுவாரு
    :)

    ReplyDelete
  8. :D :D :D அம்பி, அம்பி, பங்களூருக்கு வந்து வச்சுக்கறேன் எல்லாத்துக்கும். male chauvnist!!!!!!!!!!! :-) என்னோட வயசு என்னன்னு மெயிலிலே ஒத்துண்டாச்சு. இனிமேல் மாத்தினா அவ்வளவுதான். என்னை மாதிரி ஒரு பெண் கிடைக்கும்படிப் பண்ணப் போறேன். :-)

    ReplyDelete
  9. அம்பி, நற, நற, நற, எனக்கு வயசு ஆயிடுச்சுனு மறுபடி கமெண்ட்டா?

    பதிவு எழுதும்போது போஸ்ட் நம்பர் பார்க்காமல் notepad-ல் போட்டு copy. paste பண்ணறதாலே சரியாப் போடாமல் போகிறது. ஒண்ணு இனிமேல் நம்பரே போடக்கூடாது. அல்லது பார்த்துவிட்டுப் போடணும். சில சமயத்தில் edit செய்து போடறதுக்குள் இணைப்புப் போய் விடுகிறது. அதான் கஷ்டமாயிருக்கு.

    ReplyDelete
  10. பாவம் சார், நீங்க. காசிக்குப் போனாலும்ங்கிற கதையா உங்களை அறுக்கிறேன் ரொம்ப. ஒரு பத்து நாள் 30-ம் தேதியில் இருந்து ஜாலி போங்க. நீங்க கடவுளை வேண்டிக்கிட்டது தான் காப்பாத்திட்டார். :D

    வந்து விட மாட்டேனே! இன்னும் ஜாஸ்தி எழுத யோசனை பண்ணி வச்சிருக்கேன். கட்டாயம் வாங்க.

    ReplyDelete
  11. வேதா,
    முடிவு ரொம்ப சொதப்பலா இருக்கே, நல்ல வேளை பார்க்கலை. மத்தபடி ரொம்பப் பொறுப்பா என் மண்டைக் குடைச்சலைத் தீர்த்ததுக்கு நன்றி.நீங்க சொல்ற மாதிரி இந்த புதன்கிழமை மின்சாரமும் இருந்தது, யாரும் ஃபோனும் செய்யாமல் ஒரே போர். பொழுது வளர்ந்தது.

    ReplyDelete
  12. மின்னல் தாத்தா,
    Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr, என் வயசு என்றும் பதினாறு தான்.
    அது என்னமோ முடிவைப் போய் ஞாயிற்றுக் கிழமை வச்சுட்டாங்க, பார்க்கவே மறந்து போச்சு.

    ReplyDelete
  13. கைப்புள்ள,
    வாங்க, வாங்க, இதுதான் தலைமைங்கறது. சரியான சமயம் கைகொடுக்கிறதாலேயே உங்களைக் கைப்புள்ளனு சொல்றாங்களோ? உங்க வீட்டு லூட்டி மாதிரி எங்க வீட்டிலேயும் லூட்டி நடக்குது. வீட்டுக்கு வீடு லூட்டி. எனக்குப் பிடிச்ச இன்னொரு சீரியல்.

    ReplyDelete
  14. எங்க வீட்டில் சீரியஸா சீரியலை உள்ளேயே விடுவதில்லை. என்றாலும் வந்ததற்கு மின்னுகின்ற மின்னலின் வயதாராய்ச்சி திறனாய்வு முடிவு, கைப்புள்ளயின் விடுபட்ட கதை கேட்கும் படலத்திற்காக சிரிப்பான்கள் இரண்டு :-))) :-)))

    ReplyDelete
  15. அதெல்லாம் நம்பாதீங்க ஹரிஹரன், சும்மா கதை விடுறார் மின்னல் தாத்தா, நான் தாத்தானு கூப்பிடறேனா, அந்தக் கோபம். பின்னே 104 வயசு ஆனவரை எப்படிக் கூப்பிடுவது?

    கைப்புள்ள வீட்டுக் கலாட்டா எங்க வீட்டில் சகஜம்.

    ReplyDelete
  16. கிழக்கும் மேற்க்கை ஒரு தொடராகவே ஆரம்பித்த் வீட்டீர்களா. ஹும் நடத்துங்க.
    வேதா, இது உங்களுக்கே ஒவரா தெரியல. இந்த தொல்லை எல்லாம் இல்லாம நாங்க நிம்மதியா இருக்கோம் அதும் பிடிக்கலையா உங்களுக்கு.

    ReplyDelete
  17. Nice idea with this site its better than most of the rubbish I come across.
    »

    ReplyDelete
  18. I really enjoyed looking at your site, I found it very helpful indeed, keep up the good work.
    »

    ReplyDelete