எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 02, 2007

222. பாரதி மீண்டும் வருவான்

பாரதி பற்றிய கட்டுரைகளுக்கு நிறைய ஆதரவும், ஒரு சில கேலிகளும் இருந்தது. அநேகமாய் எல்லாருமே என்னை இன்னும் பாரதியைப்
பற்றி நிறைய எழுதச் சொல்கிறார்கள். ஆகவே பாரதியின் தாக்கம் இன்னும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் தான். இதுவரை இல்லாத புது வேகம் என்னோட எழுத்தில் என்று கார்த்திக்கும், இன்னும் சிலரும்(தனிப்பட்ட முறையில்) கூறி இருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. எழுத ஆரம்பிச்சதில் இருந்தே
பாரதியை மேற்கோள் காட்டி வந்தாலும் இப்போச் சில நாட்களாய்ச் சில
தகவல்களைப் படிக்கும்போது ஏற்பட்ட மனவருத்தம் ஜீவாவின் பதிவைப்
படித்ததும் வெளிவந்தது. உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கு இவ்வளவு விவாதமா என்று முத்தமிழில் சிலரும், பாரதியை இப்படிப் பேசலாமா என்று வேறு சிலரும் கேட்டார்கள். எல்லாருக்கும் நான் சொல்றது நாகை சிவா சொன்ன பதில் தான். கட்டாயம் விமரிசனம் இருக்கும். அந்த விமரிசனம் தப்பானது என்றால் நாம் நிரூபித்து விட்டுப் போகலாம் அவ்வளவு தானே!

பாரதி கண்ட கனவுகள் ஏதும் நனவாகவில்லை. பாரதி கண்ட சமூக
விடுதலையோ, பொருளாதார விடுதலையோ, பெண் விடுதலையோ
முழுமையாக ஏற்படவில்லை. மாதர் - தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! என்றான் பாரதி. இன்று தன்னைத் தானே இழிவு செய்து கொள்வதில் மாதர்கள் முன்னிலை வகிப்பதைத் தொலைக்காட்சித் தொடர்களில் அறிய முடிகிறது. ஆகவே மாதர் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்வதைத் தான் பாரதி கொளுத்தச் சொல்லி இருப்பான். என்னிடம்
இருக்கும் புத்தகங்களின் துணையால் அவற்றின் உண்மையை அவ்வப்போது எடுத்து உரைப்பேன். அவ்வளவு தான். இதனால் என்னுடைய உத்வேகம் தணிந்து விட்டதாய் யாரும் நினைக்க வேண்டாம். ஆன்மீகம் எழுத எத்தனையோ பேர் இருக்காங்க என்பது மணிப்ரகாஷ், கோபிநாத் போன்றவர்களின் வாதம். பாரதியைப் பற்றி என்னைவிடச்
சிறப்பாகவும், திறமையாகவும் பலர் (முக்கியமாக சீனி.விஸ்வநாதன்,
தொ.மு.சிதம்பர ரகுநாதன் போன்றோர்) எழுதி இருக்கிறார்கள். எழுதுகிறார்கள்.
எழுதுவார்கள். நீங்க எல்லாம் அம்மாதிரிப்புத்தகங்களைத் தேடித் தேடிப்
படித்தால் ஒரு மாதிரியாக உண்மை புரியும். பாரதியின் பாடல்கள் எழுதிய சம்பவங்கள் பல தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

புயற்காற்றைப் பற்றியும் அந்தக் காற்றில் பாரதிதாசன் மாட்டிக் கொண்டது
பற்றியும் பாரதி எழுதிய பாடல் உள்ளது. அரவிந்தரின் மனைவி மிருணாளினி தேவி மறைந்த போது எழுதிய பாடல், அரவிந்தரோடு செய்த ஆராய்ச்சிகள்
பற்றிய பாடல், காந்தியைப் பற்றி எழுதியது என்று ஒரு தொகுப்பே உள்ளது.
இவ்வளவையும் பற்றி என் வாழ்நாளில் எழுத என்னால் முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை! :D

பாரதிக்கு அவசரம். பாடிட்டுப் போயிட்டார். இளைய மகள் சகுந்தலா பாரதி உடல் நலமில்லாமல் இருந்த சமயம் பிலஹரி ராகத்தில் காளியை வேண்டிப் பாடிய பாட்டு உள்ளது. பாரதி அன்புடன் "பாப்பா" என்று அழைப்பார் அவரை. "பாப்பாப் பாடல்கள்' சகுந்தலா பாரதிக்காகப் பாடியவைதாம். பாரதியின் நண்பரான பத்தர் பையனின் உடலும், மனமும் சீர்பெறப் பாடியவை "வலிமையற்ற தோளினாய் போ, போ,போ," போன்ற பாடல்கள். பெண் தெய்வங்களான சரஸ்வதி, லட்சுமி, பராசக்தி போன்றோரை
நினைத்துப் பாடிய பாட்டுக்கள் அவர் வேறு பெண் மீது காதல் கொண்டு பாடியவை என்று சொல்லப் படுகின்றன. இம்மாதிரி எண்ணற்ற பாடல்களும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.

திரு கார்த்திக் பிரபு பாரதி வாழ்ந்த வீட்டிலேயே வாழ்ந்துவிட்டுப் படம் எடுத்துப் போட்டிருக்கிறார். அவரும் தங்கம்மாள் பாரதியின் புத்தகங்களைப் படித்ததாய்ச் சொல்கிறார். தொலைந்து போனது போக என்னிடம் தற்சமயம் தங்கம்மாள் பாரதியின் ஒரே ஒரு புத்தகம்தான் உள்ளது. அதை ஒளியேற்றம் செய்யுமாறு கூறுகிறார்கள். கூடிய சீக்கிரம் அதைச் செய்ய முயலுகிறேன். மிகப் பழைய பதிப்பான இந்தப் புத்தகம் எனக்குத் தெரிந்து ஒரு பதிப்புத் தான் வந்திருக்கிறது என நினைக்கிறேன். வேறு புத்தகங்கள் இருந்தால் யாராவது தெரியப் படுத்தவும். என்னால் முடிந்த அளவு, தெரிந்த அளவு பாரதியை நான் புரிந்து கொண்ட மாதிரியில் அவ்வப்போது எழுதுகிறேன். ஆன்மீகமும் எழுதுவேன். அதை என்னால் நிறுத்த முடியாது. பாரதியின் கவிதைகளே
ஆன்மீகம் சார்ந்த இலக்கியமும் கூட. பக்தியும், இலக்கியமும் சேர்ந்து தான்
எழுதி இருக்கிறார். மரபு சார்ந்து இல்லாமல் சற்றே மரபை மீறி இருந்த காரணத்தினால் கூட அவர் இருந்த காலத்தில் அவரை யாரும் அங்கீகரிக்கவில்லையோ என்னவோ? எப்படி இருந்தாலும் அவருடைய தமிழ்த் தொண்டும், அவர் எழுதிய எழுத்தும் இன்றளவும் பிரமிக்க வைக்கிறது.

தனித் தனியாக எல்லாருக்கும் பதில் கூற முடியாமைக்கு நேரமின்மைதான் காரணம். வேறு காரணம் ஏதும் இல்லை. இதையே நான் தனியாகப் பதில் கூறியதாய் எடுத்துக் கொள்ளவும். என்னால் முடிந்த போது பாரதி பற்றிய கட்டுரைகளும் வரும். என்னிடம் அதிகமாய் நம்பிக்கை வைத்திருக்கும் உங்களை எல்லாம் ஏமாற்ற மாட்டேன். ஆகவே தெரிந்த போது, முடிந்த போது தெரிந்து அறிந்து கொண்டதைத் தருகிறேன்.

11 comments:

 1. anotehr good one. oru bharathi paatum pottu riukalaam!


  //இதனால் என்னுடைய உத்வேகம் தணிந்து விட்டதாய் யாரும் நினைக்க வேண்டாம்.//

  ada daaa! Ambatoorla ethavathu political meetingaa? :)

  ReplyDelete
 2. //என்னிடம் அதிகமாய் நம்பிக்கை வைத்திருக்கும் உங்களை எல்லாம் ஏமாற்ற மாட்டேன்.//

  ahaaa! sema comedy! :)))

  ReplyDelete
 3. ஹா, ஹா, ஹா, அம்பி, கல்லிடைக்குறிச்சியில் இருந்து வந்தாச்சா? உங்க அம்மா என்னோட பேசினதைப் பத்தி ஒண்ணுமே சொல்லி இருக்க மாட்டாங்களே! :P

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களுக்குச் சந்தோஷம் கொடுக்கிற பதிவும் வந்திருக்குப் பாருங்க! :-I

  ReplyDelete
 4. நல்லது. கீதா நிறைய எழுதுங்கள்.படிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. மேடம்,
  தாங்கள் தரும் சில தகவல்கள் மிக அரிதானது....நீங்கள் எழுதுங்கள் படிக்க நாங்க இருக்கிறோம்.

  ReplyDelete
 6. குலக்கோடன், உங்களோட வேதனை புரியுது, வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பிரார்த்தித்துக் கொள்கிறேன், எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும்.

  ReplyDelete
 7. வல்லி, முடிஞ்ச போது எழுதறேன், பாருங்கள்!

  மதுரையம்பதி, புதுசு ஒண்ணும் இல்லை. அவரோடு கடைசி வரை வாழ்ந்தவங்க தங்கம்மா பாரதியும், சகுந்தலா பாரதியும். இதிலே சகுந்தலா பாரதியை நான் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
 8. //ஆன்மீகம் எழுத எத்தனையோ பேர் இருக்காங்க என்பது மணிப்ரகாஷ், கோபிநாத் போன்றவர்களின் வாதம். //

  யெஸ். உங்க திருப்திக்காக எழுதறது ஆன்மீகம்

  எங்க திருப்திக்காக எழுதறது பாரதி.

  (இதுல எனக்கு பிடிச்சது உங்க மொக்கை பதிவுகள் என்பது எனக்கும் அம்பிக்கும் மட்டுமே தெரிந்த விசயம்)..

  சோ , பாரதியினை பற்றி எழுதுங்கள். தொண்டர்களின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்..

  அப்புறம், தொண்டர்களுக்காகவே வாழுபவர்கள் தலைவர்கள்

  உ.ம் தலைவர். மு.கா.
  "என்றும்"முதல்வர். சியாம்.

  ReplyDelete
 9. நன்றி தலைவி..நன்றி

  ReplyDelete
 10. கீதா நிறைய எழுதுங்கள்.படிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. இன்னமும் நிறைய பாரதி பதிவுகள் எழுதுங்கள். இளைய தலைமுறைக்கு பாரதி பற்றிய புரிதல் நிறைய தேவைப்படுகிறது.

  ReplyDelete