எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 05, 2007

தனிமையும், இனிமையும்????????

போன பதிவிலே நான் எழுதினதுக்கு தி.ரா.ச. சார், சங்கர் மற்றும் அம்பி
மட்டும்தான் பதில் கொடுத்திருக்காங்க. எல்லாருக்கும் வேலை அதிகமா இருக்குப் போல் இருக்கு, யாரும் வரலை. அதான் பதிலும் இல்லை. இருந்தாலும் நான் எழுத வேண்டியதை எழுதிடறேன். முடிவு அவங்க
அவங்க யோசித்து எடுக்கவேண்டியது.

என்னைப் பொறுத்தவரை ஒரு அண்ணன், ஒரு தம்பியோடு பிறந்திருந்தாலும்,நாங்கள் இருந்த வீடும் சரி, பக்கத்திலேயே பெரியப்பா வீடு இருந்ததும், உள்ளூரிலேயே தாத்தா வீடு அமைந்ததும் ஒரு காரணமோ என்னவோ சொந்த, பந்தங்கள் இல்லாமல் எந்தப் பண்டிகையும் நடக்காது. கல்யாணம் ஆகி வந்தும் மாமியார் வீட்டில் நபர்கள் அதிகம் ஆதலால் ஓரளவு வீடு கலகலப்பாகவே இருக்கும். வருவோரும், போவோருமாக
இருக்கும். ஒவ்வொரு தீபாவளிக்கும் துணி எடுக்கிறது என்றால் நாங்கள் 2 பேரும் ஒரு 3 மாசம் முன்னாலேயே திட்டம் போட்டு வச்சுக்க வேண்டும். எங்கே எடுக்கிறது? பணத்துக்கு என்ன செய்யறது? பணம் கடனானால்
எப்படித் திருப்பறது? அல்லது கடையிலேயே கடனுக்கு வாங்கினால்
எப்போ வாங்கறது? எப்போ கொடுக்கிறதுன்னு எல்லாமே யோசிக்கணும்.

அதிர்ஷ்டம் இருந்தால் 150ரூ.க்குப் புடவை எடுக்க முடியும். அதிர்ஷ்டம்
இல்லையெனில் வெறும் 60ரூ. காட்டன் புடவையிலேயே திருப்தி அடைந்தது உண்டு. ரொம்பவே அதிர்ஷ்டம் அடிக்கும்போது அரசு அலுவலர்க்குக்
கொடுக்கும் விண்ணப்பங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸ் போய்ப்பட்டுப்
புடவையும் கிடைக்கும், எப்போவாவது. சில சமயம் எங்க எல்லாருக்கும் துணி எடுத்து முடிச்சிருப்போம். திடீர்னு வெளி ஊரிலே இருக்கிற நாத்தனார் தன்னோட குழந்தைங்களோட தீபாவளிக்கு வருவாங்க. அப்போ அவங்களுக்கும் குறைந்த பட்ச விலையிலாவது துணி வாங்க வேண்டி
இருக்கும். அப்புறம் நாம வாங்கறது அவங்களுக்குப் பிடிக்கணும்னு அதிலே
எத்தனையோ இருந்தது. அப்புறம் இந்தப் பலகாரங்கள், எங்க வீட்டில் மாமியார் இருக்கும்போது அவங்க துணையுடன் நானும், இல்லாவிட்டால் நான் தனியாகவேயும் பலகாரங்கள் 4 நாள் முன்னதாகவே ஆரம்பித்துச் செய்வோம். பட்டாசு என்றால் கேட்கவே வேண்டாம் அம்மா வீட்டில் இருந்தவரை அண்ணன், தம்பியோடு போட்டி போட்டுப் பட்டாசுப் பங்கு வாங்கி வச்சுப்பேன். வெடிக்கவும் வெடிப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம்
பெண்ணும், பையனும் எல்லாரும் வாங்கிக் கொடுக்கும் பட்டாசுடன் நாங்கள் வாங்கும் பட்டாசையும் சேர்த்து வெடிப்பார்கள்.

இந்தப் பட்டாசு அவங்களுக்கு வாங்கிக் கொடுக்கிறதுக்காக என்னோட கணவர் அலுவலகத்தில் ஒரு 3 மாதம் முன்னேயே சொல்லி வைத்து வாங்குவோம். தவணை முறையில் பணம் செலுத்தலாமே! அதனால்தான்! இருந்தாலும் தீபாவளி கொண்டாடினோம். சந்தோஷமாகவே, நம்பிக்கையுடன், நாளை நமதே என்ற நினைவுடன் கொண்டாடி இருக்கோம். இப்படித் தான் பொங்கலும் நடக்கும். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போகும்போது சமயத்தில் முன்பதிவு கிடைத்திருக்காமல் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்காரக் கூட இடம் இல்லாமல் குழந்தைகளை வைத்துக்
கொண்டு மூட்டை, முடிச்சுக்களையும் தொலைக்காமல் கொண்டு போய்ச்
சேர்த்திருக்கிறோம். அப்போது எல்லாம் இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. பொங்கலும், பொங்கலாகவே இருந்தது. அடுத்த பொங்கல் இன்னும்சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை இருந்தது.

வட மாநிலங்களில் இருக்கும்போது மார்ச் மாதத்தில் வரும் ஹோலி பண்டிகைக்கு யார் கலந்து கொள்வது? யார் உள்ளே ஒளிந்து கொள்வது என்று ஒரு கூட்டு ஆலோசனை நடத்துவோம். வீட்டில் எல்லாரும் உள்ளே
ஒளிந்து கொள்வோம், வெளியே ஒருத்தர் போய்ப் பூட்டி விட்டுப் பின் வழியே
வரலாம் என்றெல்லாம் பேசிக் கொள்வோம். என்ன? எல்லாம் இந்தக்
கலருக்குப் பயந்து தான். ச்யாமும், கார்த்திக்கும், அம்பியும், மணிப்ரகாஷும்,
சிவாவும் பார்க்கிற கலர் இல்லை இது. ஹோலி விளையாடத் தூவி விடும்
பொடியின் கலர். குறைந்தது 10 நாளைக்குப் போகாது. இதுக்கு நடுவேயே
என் பையன் பீச்சாங்குழல் தயார் செய்து வைத்துக் கொள்வான். அது பாட்டு அது, எங்களோட கூட்டு ஆலோசனை பாட்டுத் தனியாக இருக்கும். அப்படியும் ஒரு முறை ஏமாந்த எங்கள் நண்பர் குழாம் மறுமுறை ஏமாறாமல் நாங்கள் வீட்டைப் பூட்டும் முன்னேயே வந்து வீடு பூராவும் வண்ணங்களை வாரி இறைத்து எங்களையும் கலர் கலராக்கிவிட்டுச் சிரித்துக் கொண்டு வெற்றி நடை போட்டதுண்டு. அப்போவெல்லாம் பண்டிகைகள் கொண்டாடப் பட்டன.

இப்போ அப்படி இல்லை. துணிகள் வாரி இறைக்கப் படுகின்றன. நினைத்தால் எல்லாரும் புதுத்துணி, பட்டுப் புடவை என்று எடுக்க முடிகிறது. இப்போவெல்லாம் எங்க 2 பேருக்கு என்ன பலகாரம் செய்யறது? எனக்கு
எண்ணைப்புகை ஒத்துக் கொள்ளாது. அவருக்கு எண்ணைப் பலகாரம் ஒத்துக்
கொள்ளாது. ஆகவே பேருக்கு ஏதோ எண்ணை வைத்து ஒரே ஒரு பலகாரம்
ஏதாவது செய்யறோம். பட்டாசா? மூச்! எனக்கு மத்தாப்புப் புகை, பட்டாசுப் புகை ஒத்துக் கொள்ளாது. தீபாவளி அன்று வெளியேயே கிளம்ப மாட்டேன். இதிலே வீட்டில் என்னத்தை வெடிச்சு? எங்க வீட்டு ராமர் முன்னாலே பெரிசாக் கோலம் போட்டு எல்லாருக்கும் வாங்கிய துணிகள் ஒரு அடுக்காக வைக்கிறது உண்டு. பக்கத்தில் எல்லாப் பலகார வகைகளும் வைத்துவிட்டுக் கூடவே தீபாவளி மருந்தும் வைப்போம்.

எல்லாருக்கும் என்னோட மாமனார் துணி எடுத்துச் சந்தனம், குங்குமம் வைத்து ஆசிகள் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு அப்புறம் மாமியார் செய்து வராங்க. இதிலே என்னோட புடவை நாத்தனாருக்கும், அவங்க புடவை
எனக்கும் மாறி வந்து அப்புறம் கேட்டுட்டுப் புடவையை மாத்திக்குவோம்
சிரிப்புடனும், கொண்டாட்டத்துடனும். எங்க மாமியார், மாமனாரை வணங்க வரும் கூட்டத்திற்கும் குறைவிருக்காது. எல்லாருக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் எடுத்து வைக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும். பத்து வருடம் முன் வரையிலும் தூர்தர்ஷன் மட்டும் தான். நல்ல நாடகமாய் வரும். இதிலே வரவங்க, போறவங்க வேறே. சமையலும் செய்யணும். டி.வியிலும் . ஒரு கண்ணும், வரவங்களைக் கவனிக்கிறதும்,
நடுவே சமைத்து எல்லாருக்கும் சாப்பாடு போடுகிறதுமாய் ஒரே அமர்க்களமாய் இருக்கும்.

இப்போவும் எங்க ராமருக்கு முன்னாலே பெரிசாத் தான் கோலம் போடறேன். புடவை, வேஷ்டி, பலகாரம் எல்லாம் வைக்கிறேன். என்னோட ஒரே ஒரு
புடவை மட்டும்,சில சமயம் ஒன்று வைக்கக் கூடாது என்று 2 புடவை. வேலை செய்யும் அம்மா கூடப் புடவை வேணாம்னு சொல்லிப் பணம் வாங்கிட்டுப் போயிடுவாங்க. அதனால் அவங்க புடவையும் வராது. இப்போ மாமியாரும் என்னோட மைத்துனர் கூட இருக்கிறாங்க. அதனால் என் கணவர் எழுந்து வந்து புடைவையைக் கொடுத்ததும் கட்டிப்பேன். அதுவும் இப்போவெல்லாம் காலை 2மணி, 3 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறதில்லை.
நான் மட்டும் பட்டாசு வெடிக்க ஆரம்பிக்கிறதுக்குள் கோலம் போடணும் என்று சீக்கிரம் எழுந்து கோலம் போட்டு விட்டு உள்ளே வந்து விடுவேன். இப்போ எங்களை வணங்கவும் யாரும் இல்லை. சிலபேர் எங்களைவிடப் பெரியவங்க. இன்றைய இளைய தலைமுறைக்கோ டி.வி. பார்ப்பதும், பட்டாசு வெடிப்பதையும் தவிர மிச்ச நேரம் கைத் தொலைபேசியில் பேசுவதில் சென்று விடுகிறது. பொங்கல் அன்று நான் மட்டும் ராமருக்கு முன்
அரிசிப்பானையில் பால்விட்டுப் பொங்கல் வைக்கிறேன், மறுநாள் தனியாகக் கனுப்பிடி வைக்கிறேன். எல்லாம் யாருக்கு? புரியவில்லை! இழந்தது யார்? எதை? புரியவில்லை? டாலரிலே முகம் பார்க்க முடியுமா?


கீழே பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை" பாட்டில் இருந்து சில வரிகளும் அதன் தமிழாக்கமும். பையனிடம் இருந்து அப்பாவுக்குக் கடிதம் வருகிறது. பையன் வெளிநாட்டில் இருக்கிறான். அப்பா பார்க்கிறார்:
"ஊப்பர் மேரா நாம் லிகா ஹை!
அந்தர் ஸே பேனாம் லிகா ஹை!"
(கடிதத்தின் மேலே என்னவோ என்னோட பேர் எழுதிஇருக்கு! ஆனால் என்னோட உள்ளுக்குள்ளே?)
""ஓ, பரதேஸ் ஜானேவாலே! (வெளிநாடு போய்விட்டவனே!)

சாத் சமந்தர் பார் கயா ஹை
ஹம்கோ ஜிந்தா மார் கயா ஹை
ஃகூனி கே ரிஷ்தே தோட் கயா ஹை

கடல் தாண்டிப் போயிருக்கிறாய், ஆனால் என்னை உயிரோடு சாகடித்து விட்டாய். ரத்த பாசத்தையும், ரத்த உறவையும் உடைத்து விட்டாய்!

ஸூனி ஹோ கயி ஷஹர் கி கலியான்
நகரின் தெருக்கள் எல்லாம் சூன்யமாகி விட்டது.

தேரே பினா ஜப் ஆயி திவாலி
தீப் நஹின் ஜல் கயி தில்
நீ இல்லாத தீபாவளி வந்தப்போ, இங்கே தீபம் ஏற்றவில்லை, என்னோட மனசே தீபமாய் எரிந்தது!

தூனே பைஸே பஹுத் கமாயா!
இஸ் பைஸே னே தேஷ் சுடாயா!
நீ நிறையப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாய். இந்தப் பணம் தான் தேசத்தை விடுமாறு உன்னைச் செய்து விட்டது.

தேஷ் பராயா சோட் கே ஆஜா!
பஞ்சி பிஞ்சரா தோட் கே ஆஜா!
அந்தத் தேசம் நம்மளோடது இல்லை, வெளிநாடு விட்டு விட்டு வந்து விடு.உன்னைக் கட்டி வைத்திருக்கும் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வா!
பாட்டு இன்னும் இருக்கிறது. எனக்கு எழுத முடியவில்லை. கண்ணீர் வருகிறது. தவிர ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். ஆகவே யாராக இருந்தாலும் நன்கு யோசிக்கவேண்டும். இதுக்கு என்னோட முடிவையோ அல்லது அபிப்பிராயத்தையோ நான் வேண்டுமென்றே சொல்லவில்லை.

58 comments:

 1. //ச்யாமும், கார்த்திக்கும், அம்பியும், மணிப்ரகாஷும்,
  சிவாவும் பார்க்கிற கலர் இல்லை//

  ஆஹா.. எங்க மொத்த அமைச்சரவை மேல இப்படி ஒரு குற்றச்சாட்டா..
  இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

  ReplyDelete
 2. நல்ல நினைவலைகள் மேடம்.. நீங்க ஹோலிக்கு பயந்து மகா திட்டம் எல்லாம் போட்டது, சமீபத்தில் வந்த தீபாவளி படத்தின் காட்சிகளையே எனக்கு நினைவூட்டியது..

  ReplyDelete
 3. ஆமா.. அதென்ன இறுதியில் சில ஹிந்தி வார்த்தைகள்..
  எப்போ ஹிந்தி டீச்சரானீங்க மேடம்

  ReplyDelete
 4. // போன பதிவிலே நான் எழுதினதுக்கு தி.ரா.ச. சார், சங்கர் மற்றும் அம்பி
  மட்டும்தான் பதில் கொடுத்திருக்காங்க. //

  kavalai padaathengga.. ini naanum varren.. padikkiren.. comments poduren ;)

  ReplyDelete
 5. //சொந்த, பந்தங்கள் இல்லாமல் எந்தப் பண்டிகையும் நடக்காது. //

  engalukku apadithaanungga.. oru pandikai, functionnaa, veeddule nikkurathukke idam irukkaathu.. avvalavu aal vanthudunvaangge. ;-)

  ReplyDelete
 6. படிக்கலாம்னு ஆரம்பிச்சேன்.. அப்புறம்தான் நகர்த்திப் பார்த்தேன்.. ரொம்ப பெருசா இருக்குது..

  அதுனால, நான் அப்புறமா வந்து கும்மிட்டுப் போறேன் :))))

  ReplyDelete
 7. well said Maami.I love this song.
  very true.But yenna saiya? Idhaiyum vazhkai munnaetrathin parimana valarchi nu othukittu adhukku yetra madhiri namma manasai maathikanum. Thats all we can do.

  ReplyDelete
 8. வருகை பதிவு.நிறைய இருக்கு.. படிச்சுட்டு வரேன்..

  ReplyDelete
 9. ரொம்ம செண்டியாயிடுச்சு. எற்கனெவெ இங்க வெறிச்சோடிகிடக்கற ரொட்ட பார்த்து நான் பீலிங்கல இருக்கிரேன். இப்ப நீங்க வேற இப்படி செண்டியா..

  நீங்கள் சொன்ன கருத்துக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஆனால் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது...

  ReplyDelete
 10. //கடிதத்தின் மேலே என்னவோ என்னோட பேர் எழுதிஇருக்கு! ஆனால் என்னோட உள்ளுக்குள்ளே//

  இந்த ஒரு வரி போதும் எது தேவையென்று நிர்ணயிக்க..

  தேவைகளை நிர்ணயிக்கும் பக்குவம் யாரிடமும் இல்லாத போதுதான் பிரச்சினை எழுகிறது..

  கடல் தாண்டி பயணம் செய்யுவது தவறா?

  இல்லை. எனேனில் என்னை போன்றவர்களுக்கு(ஆமாம் ஒரு பெரிய குடும்பத்தில பிறந்தவனுக்கு) எல்லாம் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம் . என் ஆசை,கனவு நிறைவேற...

  நான் இப்போது கடல் தாண்டி வந்து இருக்கா விட்டால் என் ஆசை எப்போது நிறைவேறி இருக்கும். என் ஆசை நிறைவேறும் போது அதனை பார்த்து சிலிர்க்க ஆட்கள் இல்லாது போய் நான் தனித்து இருக்கலாம்.

  ஆனால் எத்துணை நாள்.எத்துணை காலம் பயணம் என்பதே பிரச்சினை...


  என்னமோ சொல்லனும்னு தோனுது..ஆனா முடியல..  ஏன்?எதுக்கு இது எல்லாம்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சு அதுக்கு விடைகாண முயற்சித்தோம்னா

  உலகம் வெறுமைதான்..


  ஆமாம் மேடம்.அகெய்ன் செண்டி போஸ்ட். நிறைய தாக்கங்கள்

  ReplyDelete
 11. //ச்யாமும், கார்த்திக்கும், அம்பியும், மணிப்ரகாஷும்,
  சிவாவும் பார்க்கிற கலர் இல்லை இது//

  எங்கனால கலர "கலரா" பார்க்கிற அருமையான உணர்வுகளா ஆண்டவன் குடுத்து இருக்கான்..அனுபவிக்கிறோம். அதுகெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.. இறைவன் கொடுத்த வரம்...

  ReplyDelete
 12. கீதா, கிட்டத்தட்ட என் நிலைமை தான் உங்களுக்கும்.

  வீடு கலகலப்பாக இருந்த நாட்களில் உடல் அலுப்புத் தட்டும். இப்போது வருவதற்கும் போவதற்கும் மனிதர்களும் குறைந்துவிட்டார்கள்.
  வாழ்க்கையே இதுதானே. தீபாவளியன்றோ, பொங்கலோ நான் கோவிலுக்குப் போகிறேனோ இல்லையோ வெளியில் கிளம்பிவிடுவேன்.என்னைவிட
  முதியவர்களைப் பார்க்கத்தான்.:-0)

  ReplyDelete
 13. ஹிஹிஹி, கார்த்திக், சும்மாக் கலர்னு எழுதிட்டு நீங்க வேறே நினைச்சுப்பீங்களேன்னு தான் விளக்கினேன். :)))))))))
  அது சரி, மத்த பதிவுகள் கண்ணிலே படலை? இதுக்கு மட்டும் பின்னூட்டமா? நிரந்தரத் தலை(வலி)வி, என்ற முறையில் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :-)

  அப்புறம் ஏற்கெனவேயெ ஹிந்தி பாடம் எடுத்திருக்கேனே, மறந்து போச்சா?

  ReplyDelete
 14. ஆஹா, ஆஹா, பெயரிலேயே நட்புப் பாராட்டறீங்க, உங்க வரவை வேணாம்னு சொல்லுவாங்களா, வாங்க, வாங்க, ஜோதியிலே ஐக்கியமாகிடுங்க. அப்புறம் ஒரு விஷயம், இங்கே நான் மட்டும் தான் தலைவி, (போனாப் போகுதுன்னு முதலை அமைச்சருக்கு எல்லாம் ஒத்துக்கிட்டிருக்கேன். அப்புறம் தலைவியே வேணாம்னு சொல்லிட்டா என்ன செய்யறது? :D) ஹிஹிஹி, அடைப்புக்குறிக்குள்ளே என்னோட மனசாட்சி, கொஞ்சம் சத்தமாப் பேசும். நீங்க புதுசு இல்லையா? அதான் முன்னாலேயே எச்சரிக்கை கொடுக்கிறேன்.

  ReplyDelete
 15. ஜி-Z, இதுக்கே சோம்பல் பட்டா என்ன செய்யறது? ரொம்பவே மோசம் :(

  ReplyDelete
 16. எஸ்.கே.எம், உங்க உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.

  மணிப்ரகாஷ், உங்களுக்கான பதில் போன பதிவிலே விளக்கமாக் கொடுத்திருக்கேன். முடிஞ்சாப் படிச்சுட்டுப் பதில் கொடுங்க. நேரம் இருக்கும்போது. அலுவல் வேலையைக் கெடுத்துக் கொண்டு செய்ய வேண்டாம்.

  ReplyDelete
 17. அப்புறம் உங்க குழுவோட "கலர்" பார்க்கிற மஹிமையைப் புரிஞ்சிட்டுத் தான் குறிப்பா எழுதி இருக்கேன். :P

  ReplyDelete
 18. ம்ம்ம்ம், வல்லி, வெளியே போனாலும் துரத்தும் நினைவுகள்? அதை எங்கே போகச் சொல்லுவீங்க?

  ReplyDelete
 19. பணமும் வசதியும் இல்லாத நாட்களில் இருந்த மன அமைதியும் சந்தோஷமும் ஏன் பணமும் வசதியும் வந்த பிறகு வரமாட்டேன் என்கிறது.

  ReplyDelete
 20. தங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்து விட்டேன் கட்சியின் கூடுதல் பருப்பு சீசீ பொறுப்பு காரணமாக பின்னூட்டமிடுவதில் தாமதமாகிவிட்டது என மேலிடத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்:)

  ReplyDelete
 21. முக்கியமாக தங்கள் வீட்டில் நடந்த மாபெரும்(!) மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தமும் இது குறித்து நம் கலியுக நாரதரும், தன்னை உளவுத்துறையின் புலி என நினைத்துக்கொண்டிருக்கும் அம்பியின் அறைகூவல்களை காதில் போட்டுக் கொள்ள வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன்:)

  ReplyDelete
 22. தனிமை என்பது நாம் தனியாக இருப்பது மட்டுமல்ல, தனிமையாக உணர்வதும் கூட. சுற்றி எல்லாரும் இருந்தாலும் கூட தனிமை நம் மனதிலும் வியாபித்திருக்கலாம், யாருமே இல்லாத பொழுதிலும் தனிமை உணரப்படாமல் இருக்கலாம். எல்லாமே நம் மனதை பொறுத்தது தான்.

  ReplyDelete
 23. தி.ரா.ச.சார், அமைதிக்கும் சந்தோஷத்துக்கும் பணமும், வசதியும் தேவைன்னா சொல்ல வரீங்க? ம்ம்ம்ம், அப்படிச் சொல்ல முடியாதே?

  ReplyDelete
 24. வருக, வருக துணை முதலை அமைச்சரே! சீச்சீ, முதல் அமைச்சரே! உங்க வரவு தாமதமானதைத் தாயுள்ளத்தோடு மன்னித்தோம். உங்களுக்குப் பருப்பு ஜாஸ்தி ஹிஹிஹி, பொறுப்பு அதிகம்னு தெரியும், அதுக்காக இத்தனை நாளாவா பருப்பு வேகும்?

  ம்ம்ம்ம், நீங்க சொல்ற மாதிரி உளவுப் புலின்னு நினைச்சுட்டு இருக்கிறவரை நம்பவேணாம்னு நீங்க சொல்லியா எனக்குத் தெரியணும்? அதான் எப்போவோ தெரியுமே! :)))))))

  ம்ம்ம்ம், வேதா, நீங்க சொல்ற தனிமையை எப்பவும் நாம் உணர, அனுபவிக்க முடியும். சில சமயங்களில் அது தேவையும் கூட. நான் சொல்றது வேறே. திரும்பப் படிங்க, அல்லது உங்களுக்குப் புரியும்படியா நான் எழுதலையோ?

  ReplyDelete
 25. //தி.ரா.ச.சார், அமைதிக்கும் சந்தோஷத்துக்கும் பணமும், வசதியும் தேவைன்னா சொல்ல வரீங்க? ம்ம்ம்ம், அப்படிச் சொல்ல முடியாதே? //

  அதுவும் வேணும்!னு என் குரு நாதர் சொல்றார்.

  1)பணம் இருந்தா தான் கைலாசம் போயி காபி கேட்க முடியும். :)

  2)கம்யூட்டர் வாங்க முடியும்.

  3)பிளாக் எல்லாம் ஆரம்பிக்க முடியும்.

  4)மொக்கையும் போட முடியும். :p

  நம்ம வீட்டு சுவத்துல சாக்பீஸ்ல பிளாக் எழுதினா யாரு வந்து இப்படி பின்னூட்டம் குடுப்பா? :)

  வேதா சொல்ல்வது முற்றிலும் சத்யம். எல்லாம் நம்ம மனசுல தான் இருக்கு.
  ஒரு விஷயம் வேணும்னா அதற்குறிய விலையை குடுத்தே ஆக வேன்டும்.
  அமெரிக்கா போனா தான் எம்.ஸ் படிக்க முடியும். அம்பத்தூரில் இருந்தே படிக்க முடியுமோ?

  புத்திக்கு தெரியும், மனசுக்கு தெரியலையோ? :)

  கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையாம்!

  ReplyDelete
 26. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் நானும் அனுபவித்திருப்பதால் உங்கள் எழுத்தில் வழியும் எண்ணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, கீதா அவர்களே.

  ஆனால், மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.. உங்கள் குழந்தைகள் வெளிநாட்டிற்கு நல்ல வேலையில் செல்லும் போது உங்களுக்கும் மகிழ்ச்சியாகத்தானே இருந்தது?

  வழி வழியாக வந்த பல பழக்க வழக்கங்கள் கடந்த 3 தலைமுறைகளில் முழுதுமாகப் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது என்பது காலம் நமக்குக் காட்டும் உண்மை.

  நாமும் நம் பெற்றோருக்கு இதே துன்பத்தைக் கொடுத்தோம்.

  என்ன, அப்போது டில்லியில் இருந்து சென்னைக்கும், அல்லது, சென்னையில் இருந்து சொந்த கிராமத்துக்கும் பண்டிகைக்கு முதல் நாள் வந்து சேருவோம். உடனே கிளம்பி விடுவோம்.

  இப்போது, 2 - 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் மக்கள் வருகிறார்கள் [அ] நாம் அங்கு போகிறோம்.

  அவ்வப்போதைக்கு அந்தந்த நினைவுகள் சுகமானவை.

  'சென்றதினி மீளாது மூடரே' என நமக்கெல்லாமாகத்தான் எழுதி வைத்தான் போல.
  'இன்று புதிதாய்ப் பிறப்போம்'!

  ReplyDelete
 27. அம்பி, இப்போ நான் என்ன எழுதினாலும் நீங்க நம்பப் போறதில்லை. ஆனால் உலகம் மாறி வருகிறது என்று எனக்குப் புரிகிறது.
  1. பணம் இருந்தாத் தான் கைலாசம் போகமுடியும். சரி, கைலாசம் போக நான் ஆசைப் பட்டு அது இல்லை என்றால் மனம் முறியாது. அது நிச்சயம்.அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால் நீங்கள் உலகத்தைப் பார்க்கும் பார்வை வேறு, அப்படியே என்னைப் புரிந்து கொண்டிருக்கும் கோணமும் வேறு.

  2. கம்ப்யூட்டர் இப்போத் தான் வாங்கினோம். அதுவும் பெண்ணும், பையனும் வராங்கன்னு அவங்க செளகரியத்துக்காக வாங்கினோம். அப்படியே விடக் கூடாது என்று தான் எழுதறேனே தவிர, ஒரு பேப்பரும் பேனாவும் போதும் நான் நினைப்பதை எழுத. அல்லது ஒரு டைரி போதும். பின்னூட்டம் வராது. அதனால் என்ன? இதுவும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள்.

  3.ப்ளாக் ஆரம்பிச்சுப் பல மாதம் நான் எழுதவே ஆரம்பிக்கவில்லை. அது தெரியுமா?

  4.எல்லாமே மொக்கைன்னு சொல்லிட்டு இருந்தா நீங்க சொல்றதுக்கு அர்த்தமே இல்லாமல் போயிடும்.

  5. நம்ம மனசுலே இருக்கிறதுன்னு வேதா சொன்னது வேறே. கூட்டத்துக்கு நடுவேயும் தனிமையைப் பத்திச் சொல்லி இருக்கா. அந்தத் தனிமை வேறே, நான் சொல்ற தனிமை வேறே, உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அவ்வளவு பக்குவம் இல்லை உங்களுக்கு. நான் யாரையும் எம்.எஸ். படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தவில்லை. அது என் மனதுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரிய வேண்டாம். எம்.எஸ். படிக்காமலேயே காம்பஸ் செலக்ஷனில் வேலை கிடைத்துப் போகிறவர்கள் நிறைய உண்டு. மற்றபடி கூழுக்கும் எனக்கு ஆசை இல்லை, மீசைக்கும் ஆசை இல்லை. சும்மா ஏதோ எதிர்வாதம் செய்யணும்னு செய்யக் கூடாது.

  ReplyDelete
 28. இல்லை எஸ்,கே, சார், நாங்க வெளிநாட்டுக்குப் போகச் சொல்லவில்லை. இரண்டு பேரையும் இஷ்டமே இல்லாமல் தான் அனுப்பினோம். அவங்களுக்கே நல்லாத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் எங்க சொந்த பந்தங்களுக்கே நல்லாத் தெரியும். நாங்க அவங்களோட சுய முடிவுகளில் குறுக்கிடுவது இல்லை. அவங்களா யோசித்து எடுத்த முடிவு இது. நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போவும் சரி, குஜராத்தில் இருந்தப்போவும் சரி, மாமனார்,மாமியாருக்கு வயசு ஆயிடுச்சுன்னு கூடவே தான் வச்சிருந்தோம். தனியா விடலை. இதுவும் எங்க பசங்களுக்குத் தெரியும். மற்றபடி நீங்க சொல்றது எனக்குப் புரியுது. என்றாலும் எல்லார் அபிப்பிராயமும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா? இப்பவும் எங்க மாமியார் தனியா இல்லை. கடைசிப் பிள்ளை கூடத் தான் இருக்கிறார். அந்த மாதிரி தனியா எல்லாம் விடக்கூடாதுங்கிறதிலே உறுதியா இருக்கோம்.

  ReplyDelete
 29. நான் சொன்னதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது உங்கள் பதிலில் இருந்து தெரியவர ஒரு நிம்மதி.

  நான் உங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
  பொதுவாக மாற்றங்கள் கடந்த 3 தலைமுறைகளாக வேகமாக நிகழ்ந்து வருகின்றன.... பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ!

  அது ஒரு அழகிய நிலாக்காலம் என நாம் அசை போடத்தான் முடியுமே தவிர, இக்கால சந்ததிகளுக்கு நம் உணர்வுகள் புரியப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

  இவர்கள் குழந்தைகளுக்கு இது கூடத் தெரியப்போவதில்லை என்பது இன்னும் கசப்பான உண்மை.

  இதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு செல்லப் பழகலாமே எனத்தான் சொன்னேன்.

  தவறெனில் மன்னிக்கவும்.

  ReplyDelete
 30. ஒவ்வொரு தடவையும் மகனும் மகளும் வந்துவிட்டுச் செல்லும்போது இதுதான் அவ்ர்களைப் பார்ப்பது கடைசியோ என்று அடிமனத்தில் ஏற்படும் ஒரு ஆதங்கம் இல்லாத தாயோ தந்தையோ உண்டா இல்லையா சொல்லுங்கள் மேடம்.

  ReplyDelete
 31. //இருந்தாலும் நான் எழுத வேண்டியதை எழுதிடறேன்
  //
  அடாது மழை பெஞ்சாலும்...என் கடன் பணி செய்து கிடப்பதேனு எழுதி தள்றீங்களே... :-)

  ReplyDelete
 32. //பொங்கலும், பொங்கலாகவே இருந்தது//

  இப்போ எல்லாம் பொங்கல், தீபாவளி எல்லாம் நாலு நடிகையோட பேட்டியோட முடிஞ்சுடுது :-)

  ReplyDelete
 33. //பாட்டு இன்னும் இருக்கிறது. எனக்கு எழுத முடியவில்லை//

  நீங்க மட்டும் இல்ல..நம்ம ஊர்ல இருக்கும் அனைத்த parents நிலமை இப்படி தான்...

  ஆனா மணி சொன்னது தான் எங்க நிலமை...

  ReplyDelete
 34. கீதா, பத்து ரூபாய் பணத்திலும் பட்டாசு வாங்கி சந்தோஷமாக இருந்த நாட்கள் உண்டு.

  அப்போது பணம் ச்னதோஷம் எல்லாவற்றுக்கும் அளவுகோல் இருந்தது.
  இப்போது எத்தனை பணம் இருந்தால் போதும் என்று கூடத் தெரியைல்லை. நாம் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டோம்.
  நம் பெற்றோர் நமக்குக் கொடுத்த சுதந்திரம் இப்போது பயன்படுகிறது.
  கடமையில் நாம் தவறவில்லை.
  அப்போதும் என் மாமியாரைப் பார்த்துக் கொண்ட அளவு என்னால் எங்க அம்மாவைக் கவனிக்க முடியாதது அறத துயரம்.
  இதே போல குழந்தைகளுக்கும் ஏதோ கம்பல்ஷன் இருக்கு.அவர்களாகத் திரும்பாத வரையில் நமக்கு ஏக்கம் இருக்கத்தான் செய்யும்.எஸ்.கே.சார் சொல்வது போல இது ஒரு சுழற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது.வேறு என்ன சொல்றதுனு தெரியலை.

  ReplyDelete
 35. தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன் எஸ்.கே. சார், என்னையே குறிப்பிட்டுச் சொல்லி இருந்தாக் கூட. அம்பிக்குக் கூட அவருக்கு இன்னும் exposure போதாதுன்னு தான் அப்படிப் பதில் கொடுத்திருக்கேன். அவரும் தப்பா எடுத்துக்கிறவர் இல்லை.
  ஆனாலும் இங்கேயே வேலையும், செளகரியங்களும் கிடைக்கும்போது, வெளிநாடு சென்று தான் அடைய முடியுமா என்பதே என் கேள்வி. மற்றபடி உங்களோட கருத்துக்களோடும், அதை அப்படியே எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடுதான். விசாலத்தின் கவிதை என்னை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது. :)))))))))))))

  ReplyDelete
 36. தி.ரா.ச.சார், எங்கே ஒவ்வொரு முறை வந்தாங்க? பெண்ணும் சரி, பையனும் சரி ஒரே முறை தான் வந்துட்டுப் போனாங்க. பெண் 7 வருஷத்துக்கு அப்புறமும், பையன் 4 வருஷத்துக்கு அப்புறமும். இப்போவாவது 1 வருஷமாக webcam facility-யில் பார்த்துக் கொள்கிறோம். அதுக்கும் முன்னாலே? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முக்கியமாக் கணினி வாங்கியதே அதுக்குத் தான்.! :((((((( எங்களாலேயும் ஒரு முறைதான் போக முடிந்தது.

  ReplyDelete
 37. ச்யாம், நான் கடவுளை வேண்டிக்கிறதே உங்களை மாதிரியான மனநிலை எனக்கும் கிடைக்கக்கூடாதா என்று தான். எவ்வளவு அழகாய் ஒவ்வொரு சூழ்நிலையையும் திறமையாகக் கையாளுகிறீர்கள்? Hats Off to you. May God Bless you and your family. Thank You for your wonderful comments. Of course you are writing true, but as a parent I wrote myside. Mani is also correct from his point of view. and also Karthik. Really, I laughed heartily at your first two comments, and was relieved very much. Thank you once again.

  ReplyDelete
 38. ரொம்பவே சரி, வல்லி நீங்க சொல்றதும். ஆனால் என்னாலே எங்க அப்பா, அம்மாவையும் கடைசிக்காலத்திலே கவனிச்சுக்க முடிந்தது. அது வரையில் எனக்கு ஆறுதல் தான். மற்றபடி குழந்தைகளுக்குக் கட்டாயம் என்பது எங்க குழந்தைகள் விஷயத்தில் எங்களால் ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான். வேறே என்ன செய்ய முடியும்? ஏற்றுக் கொள்ளாமலா இருக்கிறேன். ஒரு விதமான loud thinking னு வச்சுக்கலாம் இதை. அப்படியே இன்றைய இளைய தலைமுறையின் எண்ணங்களையும் தெரிஞ்சுக்கலாமே?

  ReplyDelete
 39. //அம்பிக்குக் கூட அவருக்கு இன்னும் exposure போதாதுன்னு தான் அப்படிப் பதில் கொடுத்திருக்கேன்.//

  உண்மை தான்! திரு நாவுக்கரசர் கூட சம்பந்தரை Exposure பத்தாது!னு தான் சொன்னாராம். :)

  தாழ் திறவாய்!னு பதிகம் பாடி கோவில் கதவு எல்லாம் திறந்த கதை உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே!

  என் மனதினில், வாக்கினில் குடி இருக்கும் என் அப்பன் முருகன் கூட, சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?னு அவ்வையை கேட்டாராம்.

  // அவரும் தப்பா எடுத்துக்கிறவர் இல்லை.
  //
  Thanks for Understanding me. :)

  Hope this will help U :)

  ஹே பார்த்தா! இந்த பூவுலகத்தில் எது மிகவும் அதிசயம் தெரியுமா? எதுவும் சாஸ்வதம் இல்லை!னு எல்லா மனிதரும் அறிவர். ஆனால் தினமும் தான் மட்டும் நிரந்தரம்! என்று தன்னை தானே ஏமாற்றிக் கொள்வர்.

  எதுவும் நம்முடையதில்லை, நாமும் எதையும் கொண்டு வரவில்லை. பின் ஏன் இந்த சலனம்? பந்த பாசங்கள் என்ற தளையிலிருந்து வெளி வருவாய்! ஏனேனில் ஆத்மாவுக்கு ஏதடா பந்தம், பாசம், சொந்தம் எல்லாம்?
  - கீதையில் கண்ணன்

  தாமரை இலைத்தண்ணீரை போல ஒட்டி ஒட்டாமல் இரு!
  - பாபா படத்தில் ரஜனி

  ReplyDelete
 40. அதுக்காக நான் சம்பந்தர்!னு எல்லாம் சொல்ல வரலை. அப்படி சொன்னா என் வீட்டுக்கு ஆட்டோ வரும்!னு எனக்கு நல்லா தெரியும். :)

  ReplyDelete
 41. புதி துணிமணி பற்றி நீங்கள் குறிப்பிட்டது உண்மை மேடம். நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை வருடதிற்கு மூன்று முறை புதுத் துணிகள். அப்போ ஒவ்வொரு முறையும் அந்த புதிய ஆடைகளைப் பார்க்கும் போது மனசுக்குள் பரவசம் இருக்கும். இப்போது நீங்கள் சொன்னது போல வாரியிறைக்கப்படுகின்றன.. ஆனால் அந்த பரவசம் மிஸ்ஸிங் :-(

  ReplyDelete
 42. மேடம், இதுவரை ஏனோ தெரியவில்லை.. காசு கொடுத்து பட்டாசுகள் வாங்கி வெடித்ததில்லை. நாங்களுஅம் கடை வைத்திருப்பதால் இலவசமாக சில பட்டாசுகள் வரும். அதோடு சரி.. அந்த ஆசை ஏனோ என்னை ஆட்படுத்தவில்லை..

  நல்ல பண்டிகை கால நினைவலைகள் மேடம்.. சொந்தங்கள் இல்லாத பண்டிகை வெறும் பண்டிகள் தான்.. அதிலே சந்தோசங்கள் இல்லை

  ReplyDelete
 43. அம்பி, கீதையைக் கூட "பாபா ரஜினி" சொல்லித் தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. எங்களுக்கு எல்லாம் அப்படி இல்லை!!!!!! :p
  நான் சொன்னதில் தப்பு ஒண்ணும் இல்லை. உங்களுக்கு இன்னும் exposure தேவை. அதுக்கும் நான் இப்போ எழுதி இருக்கிறதுக்கும் சம்மந்தம் ஏதும் இல்லை. நீங்க இன்னும் எல்லாத்தையும் literally thinking ஆசை இல்லை, விட்டு விடுன்னு சொன்னதுமே விடணும்னு நினைக்கிறீங்க. என்னைப்பொறுத்த வரை ஆசையே இருக்கக் கூடாதுங்கிற நிலையே ஒரு ஆசை தான். வரதை ஏத்துக்கணும்கிறது ஒண்ணுதான் எனக்கு ஒத்துப் போற விஷயம். இது வரை அப்படித்தான் இருந்தேன், இருக்கேன்,இறை அருளால் இருக்க வேண்டும். இது ஒரு ஆய்வுப் பதிவு. நினைவலைகளை யாரால் தடுக்க முடியும்? just try to understand.

  ReplyDelete
 44. ஒரு உபன்யாசகர் சொல்கிறார்.
  அம்மா என்பவளுக்குக் குழந்தைகள் பக்கத்தில் இல்லையென்றால்
  எதுவுமே நிரக்காதாம்.
  கணவனையும் சேர்த்துத்தான்.
  இது போலக் குழந்தைகளுக்கும் உண்டா என்று தெரியவில்லை.
  நீங்கள் இவ்வளவு படித்து இருக்கிறீர்கள். எண்ணங்களை வெளிகொணரவும் தெரிகிறது.

  இத்தனை நட்புகள். இந்த செல்வங்கள் தான் நமக்கு மிஞ்சும்.
  நம் பிள்ளைகளும் அம்மானு தேடி வரும்போது அணைத்துக் கொள்ளப் போவதும் நீங்கள் தான்.
  வருத்தப் பட வேண்டாம்.

  ReplyDelete
 45. கார்த்திக், உங்களோட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் கருத்து? அது மிஸ்ஸிங். அதைத் தான் நான் எதிர்பார்த்தேன். பரவாயில்லை. :)

  ReplyDelete
 46. நீங்க சொல்றது ரொம்பவே சரி வல்லி. அந்த உலகமாதாவே பிள்ளைகளான நம்மைக் காக்க அவளுடைய பெண்ணான "பாலா"வை அனுப்புகிறாள். அவளே தன் பெண்ணை விட்டுக் கொடுக்கிறாள், நம்மோட சந்தோஷத்துக்கு. நாம் நல்லா இருக்கிறதுக்கு. மனது என்னமோ ஆறுதல் அடையும், நீறு பூத்த நெருப்பைப் போல்.

  ReplyDelete
 47. @ஆப்பு அம்பி, ஆசைகளை எல்லாம் விட்டுட்டுத் தங்கமணிக்கு ஒரு 2 நாள் தொலைபேசாமல் இருங்க, பார்க்கலாம். உங்களால் முடியுதான்னு! இதிலே மத்தவங்களுக்கு உபதேசம்! :p

  ReplyDelete
 48. //ஆஹா.. எங்க மொத்த அமைச்சரவை மேல இப்படி ஒரு குற்றச்சாட்டா..
  இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. //

  இதை தான் வழிமொழிகிறேன். கலர் எல்லாத்தையும் கவிதை என்று மாத்தி எவ்வளவு நாள் ஆச்சு....

  ReplyDelete
 49. கலர் பத்தி பேசுவாங்க பாத்தா கலர் டராக் மாறி ரொம்ப சூடா விவாதம் நடக்குது. பொறுமையா படிச்சு நம்ம கருத்தையும் சொல்லுறேன்.

  ReplyDelete
 50. இத்தோட 50 இருக்கலாம் இல்ல தாண்டியும் இருக்கலாம்.

  சாப்பாத்தி ரெடியாச்சா?

  ReplyDelete
 51. சரியாப் போச்சு சிவா, படிச்சு உங்களோட பின்னூட்டத்தைக் கொடுங்கன்னு சொன்னா கலர் பத்தியே பேசறீங்க போங்க!:)))) சீக்கிரமாக் கல்யாணம் செய்துக்குங்க. சப்பாத்திக் கட்டையாலே அடியும் விழும்!!!! :P
  சப்பாத்தி எல்லாம் செய்து சாப்பிட்டும் ஆச்சு! :P

  ReplyDelete
 52. ஆஹா!ரொம்ப சூடா இருக்கீங்க எல்லோரும்.அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை.எனக்கு சரி எனத் தோன்றுவது மற்றவர்களுக்கு தவறாகத் தோனலாம்.இதற்கு பதில் ஒரு பெரிய போஸ்டே போட வேண்டியிருக்கும்.

  எங்களுக்கு சிறு வயதில் பெற்றோரைத் தவிர வேறு யாரும் எதுவும் வாங்கித் தந்ததில்லை.So we valued each and every small things,even for a small crayon. ஆனா இப்போ பாட்டி,தாத்தா,சித்தப்பா,மாமா,னு நம்ம பர்மிஷன் தேவையே படாம வாங்கித் தருவதால்,நிறையக் கிடைப்பதால் அதற்கு value இல்லாமல் போய் விடுகிறது.அதிகம் எடுத்துத் தராதீர்கள் எனப் பெரியவர்களை சொல்லப் போனாலோ, அது வேறேயே கோணத்தில் பார்க்கப் படுகிறது.காலத்தின் கோலம்.Have to adjust and compromise on each and everything.But youngsters are very smart and handling the competitive outside world very well.It is becoming more stressfull world for them.We have to support them.Ofcourse they do miss all this.It is oneway compromise for something better.என்னை பொறுத்தவரை, if possible I adjust,no complaints.If not, I try to avoid that kind of situations.Frictions I don't like.Thanks for allowing me to share my thoughts.If Iam wrong,please forgive me.

  ReplyDelete
 53. அப்புறம் அப்படியே இன்னொரு பட்டாசையும் கொளுத்தி போடுறேன்.,

  இப்போது எல்லாம் அம்மா/அப்பாக்கள் எல்லாம் மாறி வருகிறார்கள் என்றே நினைக்கிறென்.


  1. வெளி நாடு போன பையன் திரும்பி வர நினைத்தால் கூட அப்பா/அம்மா என்னப்பா வரதுனா வா ஆனா நாங்கதான் இப்படி கஷ்டபட்டே வாழ்ந்துட்டோம். கொஞ்சம் சேர்த்து வைச்சு நீயாச்சும் நிம்மதியா இருப்பா கடைசிகாலத்துலனு சொல்றவங்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

  2. பையன்/பொன்னு படிச்சுட்டு வெளிநாட்டில இருந்தா தான் பெருமைனு பெற்றோர்கள் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க..

  இது எதார்த்தமான உண்மைனுதான் நினைக்கிறேன் .

  ReplyDelete
 54. //மணிப்ரகாஷ், உங்களுக்கான பதில் போன பதிவிலே விளக்கமாக் கொடுத்திருக்கேன்//

  போன பதிவையும் படிச்சேன..

  confused.. :(

  ReplyDelete
 55. வணக்கம் தலைவி...

  \\எல்லாருக்கும் வேலை அதிகமா இருக்குப் போல் இருக்கு, யாரும் வரலை. \\

  உண்மை தான் தலைவி......அதுவேற இல்லாம பதவி வேற, மனு, ரெக்கமன்டேசன்னு ஒரே குஷ்டமப்பா..ச்சீச்சீ.....கஷ்டமப்பா...

  ReplyDelete
 56. \\எல்லாம் யாருக்கு? புரியவில்லை! இழந்தது யார்? எதை? புரியவில்லை? டாலரிலே முகம் பார்க்க முடியுமா?\\

  ஏற்கனவே மணி சொல்லிட்டாரு....அந்த கருத்துக்கு நானும் ஒத்துபோறேன். என் கனவுகள் எல்லாத்தையும் அடையவேண்டும் என்றால் நீங்கள் சொல்லியவை அனைத்தும் இழக்க தான் வேண்டும்.

  ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும்ன்னு மனசை திடப்படுத்திக் கொண்டு நாங்களும் காலத்தை கடந்து கொண்டு இருக்கிறேம் மேடம்...

  மணி சொன்னாது போல் எல்லாத்துக்கும் விடைகாண முயற்சி செய்தா உலகம் வெறுமைதான்...

  ReplyDelete
 57. சூடு ஒண்ணும் இல்லை எஸ்.கே.எம். ஒவ்வொருத்தர் கோணத்திலே இருந்து சொல்வதாலே அப்படித் தோணுது. இன்றைய இளைய தலைமுறையைப் பற்றிய உங்கள் மதிப்பீடு ஓரளவு சரியே என்றாலும் சிலர், மிகச் சிலர் அதைத் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள். அதுக்குக் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்கும் அப்பா, அம்மாவே காரணம்னு என்னோட கருத்து. என்னைப் பொறுத்த வரை எங்க பெண்ணுக்கும், பையனுக்கும் அந்த மாதிரி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் அப்பா, அம்மாவோ, சித்தப்பா, சித்தியோ, மாமா, மாமியோ, பாட்டி, தாத்தாவோ அமையவில்லை. அதனால் அவங்களுக்கு நீங்க சொல்ற value தெரியும். புரிஞ்சும் வச்சு இருக்காங்க. அந்த விஷயத்தில் இன்றளவும் அவங்க மாதிரிக் குழந்தைகள் கிடைக்காது என்றுதான் இன்னமும் பெயர் வாங்குகிறார்கள். என்னோட வருத்தமே கொஞ்ச நாள் இருந்துட்டுத் திரும்பலாம்னு முடிவு எடுங்கன்னு அவங்க கிட்டே நாங்க சொல்றதை புரிஞ்சுக்கணும்னு தான். மற்றபடி நீங்க சொல்றதிலே எந்தத் தப்போ, கோவமோ இல்லை. மன்னிப்பே கேட்க வேண்டாம். :))))))))))))))

  @மணி ப்ரகாஷ், முதலில் நீங்க புரியலை, குழப்பம்னு சொன்னதுக்கு வரேன். எது புரியலை? ஏன் புரியலை?
  அப்புறம் நீங்க சொல்றாப்பலே அப்பா,, அம்மாவையும் பார்த்தேன், பார்க்கிறேன், பார்க்கவும் பார்ப்பேன். அதனாலே இதிலே கொளுத்திப் போட ஒண்ணும் இல்லை. :)))))

  @கோபிநாத், இழப்பைத் தாற்காலிக இழப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்பது தான் என்னோட வேண்டுகோள். புரியுதா இப்போ? :)))))))))

  ReplyDelete
 58. கோஆப்டெக்ஸில் அரசு கூபானில் புடவை,ஆபீஸில் மொத்தமாக பட்டாஸ் வாங்கி...
  மாமியார் வீட்டில் எல்லோரும் சேர்ந்து பலகாரம்...இன்றைய தனிமை..நினைவலைகள் வட்டவட்டமாக விரிகிறது!!! ஜீரணித்துக்கொள்ளவேண்டியதுதான்!

  ReplyDelete