எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 11, 2007

ஒரு மொக்கையான உதவி!!!!!!!!!

தொண்டர் படைக்கும், குண்டர் படைக்கும், சிஷ்ய கேடிகளுக்கும், சீச்சீ, சிஷ்ய
கோடிகளுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். என்னோட "ஆன்மீகப்
பயணம்" பதிவிலே போட்டு இருக்கிற கைலை யாத்திரைக் கட்டுரைகளைத்
தொகுத்து pdf document with pictures போட்டு விட்டு குழுமத்திற்கு
அனுப்பினேன். ஹிஹிஹி, தகவல் மிகவும் நீளமாக உள்ளது என்று திரும்பி வந்து விட்டது. 1MBயை விட அதிகமாய் இருக்கிறது. 1620K இருக்கிறது. சில
படங்களை ரொம்பவே வருத்தத்துடன் எடுத்து விட்டு மறுபடி கொடுத்தேன். அதே தான் பதில். என்ன செய்யலாம்? எடிட் எல்லாம் செய்தால் என்னோட
இலக்கியக் குறிப்புக்கள் எல்லாம் போயிடுமே? தணிக்கை வேலை
வேண்டாம்னு பார்க்கிறேன். தணிக்கை செய்தால் அப்புறம் அதிலே ஒண்ணுமே இல்லையே?


ம்ம்ம்ம், யாரது அங்கே மந்திரி? தலைவி வந்தா நீ எந்திரி!!!!!! எங்கே தலைவியின் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள்? முக்கியமானவங்க எல்லாம் ஆணி, கடப்பாரை பிடுங்கறாங்க. ரொம்பக் கத்திக் கூப்பிட்டால் நம்ம தலையிலேயே விழுந்தாலும் விழும். :D ம்ம்ம்ம்ம்ம், யாரங்கே? ஒரு அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுங்க! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்.....இந்த வெட்டிப் பந்தாவுக்குக் குறைச்சல் இல்லை) ஹிஹிஹி, அது முணுமுணுத்தது என்னோட அண்ணா பையன், துபாயில் எனக்குக் கோயில் கட்ட
ஆரம்பிச்சுட்டுப் பணம் எல்லாம் வசூல் செய்துட்டுக் கோயிலே கட்டாமல்
அதுக்குள்ளே இந்தியா வந்துட்டான். என்ன அவசரமோ? கோயில் கட்டறது அதுவும் எனக்குக் கோயில் கட்டறது எவ்வளவு முக்கியம்? இப்போ பாருங்க, அங்கே யாருமே பொறுப்பானவங்களே இல்லை! :D

அவனை வச்சுக்கிட்டுத் தான் இந்த வேலை நடந்தது. வேலையை முடிச்சுட்டு நாங்க அனுப்பிச்ச மெயில், குயில் எல்லாம் திரும்பி வந்ததும் ஆள் சொல்லிக்காமலேயே கிளம்பிப் போயிட்டான். தேடிட்டு இருக்கேன். :)))))))))) அவனும் "திருதிரு"ன்னு முழிக்கிறான்,
என்ன செய்யறதுன்னு? யாருக்காவது தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்க! அட, அந்தப் பையனை இல்லைங்க,.அவன் வந்துடுவான், எங்கே போகப் போறான்? நான் விட்டால் தானே? இதை எப்படிப் போடறதுன்னு! 2 பாகமாப் பிரிச்சுப் போடலாமா? அது சரியா வருமா? மொத்தம் 33 அத்தியாயம் வருது. 16
அத்தியாயம் ஒரு தொகுப்பாகவும் மீதி 17 அடுத்த தொகுப்பாயும் போட முடியுமா? அதை ஏத்துக்குமா? விவரம் தேவை!

18 comments:

 1. கீதா படங்கள்தான் பிரச்சனை என்று தோன்றுகிறது. ஆனால் ஓரளவு தொடர்ந்து படித்தவள் என்ற
  முறையில் சொல்கிறேன். கொஞ்சம் எடிட் செய்யலாம்.

  ReplyDelete
 2. இப்போதுதான் தெரிகிறது! 11,12 ஆம் வகுப்புகளில் மூன்றில் ஒரு பங்காக சுருக்கி வரைக என்ற பகுதியை எதற்காக வைத்திருக்கிறார்கள் என்று!

  ReplyDelete
 3. ennaku light-a puriyala....excuse me pls :(

  ReplyDelete
 4. இரண்டு பகுதிகளாக பிரித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
 5. mokkaiku ellam naanga help panradhu illai. uruppadiya kettalum panna mattom!! mothathula help kilp ellam aagura velaiya?? :))

  ReplyDelete
 6. thani thani padhiva padikkum podhu perisa theriyalai. ana ellathaiyum onnu serkum podhu kandippa sila parts edit panlam. u can still convey the details, i guess.

  ReplyDelete
 7. o adhu thaan usha sollitangla?! :( i second her then!

  ReplyDelete
 8. மேடம், நமக்கு முன்னாடி எத்தனை ஆணிகள்னு உங்களுக்கே தெரியும்.. அதனால இதுல என்னால உள்ள வர முடியவில்லை. மன்னிக்கவும் :-)

  ReplyDelete
 9. ஆமாம்! அந்த கைலையில் காப்பி கேட்ட கதை எல்லாம் வெட்டி விடலாம்! :))))

  ஒரு வேளை அத படிச்சுட்டு மொக்கை!னு முடிவு பண்ணிட்டாங்களோ என்னவோ? :)

  ReplyDelete
 10. //அந்த கைலையில் காப்பி கேட்ட கதை எல்லாம் வெட்டி விடலாம்//

  ரைட்டு...அப்படியே மசால் வடை சூடா இல்லனு சொல்லி இருப்பீங்களே அது மாதிரி மேட்டரையும் தூக்கிடலாம் :-)

  ReplyDelete
 11. படங்கள resize பண்ணி பாருங்க...

  ReplyDelete
 12. ம்ம்ம்ம், உருப்படியாய் யோசனை சொன்ன:-) உஷா, ஜீவா, போர்க்கொடி, ச்யாம் ஆகியவர்களுக்கு நன்றி. உஷாவின் யோசனை பரிசீலனையில் இருக்கிறது. இதை ரொம்பவே வேண்டாம்னு சொல்றது என்னோட கணவர்தான். பார்க்கலாம். ஏதாவது செய்யணும். இல்லாட்டி முடியாது. அநேகமாய் ஜீவாவின் யோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

  ReplyDelete
 13. படங்கள் போட்டது பதிவில் இல்லை. டாகுமெண்ட்டில் தான் நிறையப் போட்டேன். அதுவும் எடுத்தாச்சு. அப்படியும் தொந்திரவுன்னு வந்தா என்ன செய்யறது?

  ReplyDelete
 14. "பெரிய" உதவின்னு சொல்றதுக்கு "மொக்கை"னு போட்டேனா, இந்த அம்பி வந்து ஒரு மொக்கைப் பின்னூட்டம் கொடுத்துட்டுப் போயிருக்கார். நறநறநற

  ReplyDelete
 15. கீதா,

  I will help you, if possible. I know little bit of Graphic Work. I will do my best. Can you send me that documents (in Word or PDF or any format, which is avaliable) to my mail id vichumsc@yahoo.com ?

  ReplyDelete
 16. சின்னதா இருக்கற பதிவை பெருசா ஆக்கச் சொன்னா மொக்கையாகப் பதிவுகளைப் பெருசாகப் போடுவது எப்படின்னு சொல்லித் தரலாம். பெருசா இருக்கற பதிவை சின்னதாக்கறதா? அபச்சாரம். அபச்சாரம்! :))

  ReplyDelete
 17. சின்னதா இருக்கற பதிவை பெருசா மாத்தணுமுன்னா மொக்கையாகப் பெரிய பதிவுகள் போடுவதெப்படின்னு களத்தில் இறங்கலாம்.

  பெரிய பதிவை சின்னதாக்கறதா? நோ! நெவர்! :)

  ReplyDelete
 18. விசு, நீங்க கேட்டதை அனுப்பி இருக்கேன், பாருங்க.

  இ.கொ. மாட்டேன்னு சொல்றதுக்கு 2 பின்னூட்டமா? நறநறநற, அதுவும் 1/2 மணி நேரத்துக்குள்ளே, முதலில் கொடுத்ததை மறந்துட்டீங்க போல் இருக்கு? :-)

  ReplyDelete