எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 16, 2007

நெல்லைத் தமிழ், தொல்லைத் தமிழ் இல்லை!!!!

அம்பி புத்தகத்தை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டார். அதனாலே என்னாலே "தாமிரபரணி" பத்தி இப்போ எழுத முடியாது. புத்தகம் வாங்க வேறே முயற்சி செய்துட்டு இருக்கேன் அம்பி :P. ஆகவே நீங்க அனுப்பவே வேணாம். :P. போகட்டும். இப்போத் திருநெல்வேலித் தமிழைப் பத்திக் கொஞ்சம் சொல்லணும். ஹிஹிஹி, அது நாளைக்கு முடிஞ்சாச் சொல்றேன். இப்போ திசை மாறி அடிக்கிறது காற்று!!!!


திருநெல்வேலியில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் பலர் இருந்திருக்கின்றனர். வ.உ.சி., பாரதியார், ரசிகமணி டி.கே.சி., தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், அவரோட தம்பி தொ.மு.சிதம்பர ரகுநாதன் என்று இந்தக் கால மனிதர்களுக்குச் சற்றும் அறிமுகம் இல்லாத நபர்கள். இதிலே ரசிகமணி குறிப்பிடத் தக்கவர். திருக்குற்றாலத்தில் இருந்து கொண்டு தமிழ்த் தொண்டாற்றிய பெரியவர். அவருடைய "வட்டத் தொட்டி" என்னும் தமிழ்ப்பேரவையில் அந்தக் காலங்களில் கலந்து கொள்ளாதவர்களே கிடையாது என்று சொல்வார்கள். "குற்றால முனிவர்" என்று கல்கி அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ரசிகமணியின் வீடு திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் இருந்து சற்றேத் தள்ளி இருந்தது என்று சொன்னார்கள். தற்சமயம் போய்ப் பார்க்க முடியவில்லை. இவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிட முடியாதது.


இவரின் வீட்டிற்கு வராத அறிஞர்களும், நண்பர்களும் இல்லை என்று சொல்லும் வண்ணம் எந்நேரமும் பலதரப்பட்டவர்களும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதிலே மூதறிஞர் ராஜாஜி, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், தொ.மு.சிதம்பர ரகுநாதன், நீதிபதி எஸ்.மகராஜன் போன்றவர்கள் தவிர அரசு அலுவலர்களில் இருந்து, பல்வேறு கட்சிக்காரர்கள், பல்வேறு மதத்தவர்களும் வந்து இவரின் ஆலோசனையைப் பெற்றுச் சென்றார்கள். திரு தொண்டைமான் அவர்கள் ரசிகமணியைத் தன் குருவாகவே ஏற்றுக் கொண்டவர். தமிழ் மொழியைப் பற்றிய பேச்சைப் பேசுவதே அகெளரவம் என்று நினைத்த ஒரு காலத்தில் நிறையத் தமிழறிஞர்களையும், தமிழ்க் கவிஞர்களையும் பாராட்டிப் பேசியதோடு அல்லாமல் தமிழில் எல்லாம் முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் திரு டி.கே.சி. அவர்கள். மிகத் துணிச்சலோடு அவர் கம்பராமாயாணத்தை நன்கு ஆழ்ந்து படித்து கம்பன் பாடாத பாடல்கள் பல இடைச்செருகலாய் இருப்பதைக் கண்டு பிடித்து அவற்றை நீக்கினார் எத்தனையோ எதிர்ப்புக்களுக்கிடையே!


கம்பராமாயணம் என்றாலே பயந்து நடுங்கி ஓடிய ஒரு காலக்கட்டத்தில் கம்பராமாயணத்தைப் புதுப்பித்து வெளியிட்டதோடல்லாமல் அன்றைய இளைஞர்கள் பலரையும் அதில் கலந்து கொள்ள வைத்து ஊருக்கு ஊர் கம்பராமாயணப் பிரசங்கம், கம்பராமாயணப் பட்டி மன்றங்கள், கம்பன் திருநாள் என்று கம்பன் பிறந்த தேரழுந்தூரிலும், கம்பர் அமரர் ஆன நாட்டரசன் கோட்டையிலும் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தார். பொருள் தெரியாமல் பாடிக் கொண்டிருந்த இசைக்கு மாற்று உருவம் கொடுத்ததோடு அல்லாமல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களைத் தமிழிசை இயக்கம் ஆரம்பிக்கும்படிச் செய்து கலை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். பண்ணும், பரதமும் இன்று எல்லாத் தரப்பினருக்கும் போய்ச் சேர்ந்தது என்றால் அது திரு ரசிகமணி டி.கே.சி.அவர்களாலேயே!


அவர் ஒரு பாடலைப் பற்றிச் சொல்லும் முன் ஒரு முன்னுரை கொடுத்து விட்டுப் பாட்டின் பொருள் சொல்லிவிட்டுப் பாடலை நிறுத்தி நிறுத்தி மிக அழகாய்ப் பாடுவாராம். அவர் பாடலைப் பாடி முடிக்கும்போதே கேட்பவருக்கு மனப்பாடம் ஆகிவிடுமாம். ஆவேசமு, ஆரவாரமும், அடுக்குச் சொற்களும் இல்லாமல் எளிமையாக அதே சமயம் அமைதியும், ஆழமும் நிறைந்து அவர் பேசுவது பற்றிச் சொல்லும்போது தொண்டைமான் இவ்வாறு குறிப்பிடுகிறார்: திரு ரசிகமணி தமிழ்க்கவிதையப் பற்றிப் பேசும் போது அவருடைய நா பேசாது., வாய் பேசும், அவருடைய அடர்ந்த நெற்றிப் புருவம் பேசும், செழித்து வளர்ந்துள்ள அவருடைய மீசை பேசும், எல்லாவற்றுக்கும் மேல் அவருடைய இதயமே நம்முடைய இதயத்தோடு பேசி விஷயத்தை விளங்க வைக்கிறதோடல்லாமல் நம்மை அதில் தேர்ச்சி பெற்றவர்களாக்கி விடும்.
திரு ரசிகமணி அவர்களின் விருந்தோம்பல் பற்றியும் அவருடைய வீட்டுத் தோசை பற்றியும் திரு ராஜாஜி அவர்களும், திரு கல்கி அவர்களும் பழைய கல்கி வார இதழ்களில் எழுதி இருக்கிறார்கள். விருந்தோம்பலில் சிறந்த இலக்கியம் படைத்தவர் அவர் என்று அனுபவித்தவர்கள் பலரும் சொல்கிறார்கள்.வரும் விருந்தினர்களுக்கு உணவும் அளித்துத் தமிழும் அளித்தார் என்றால் என்ன சொல்வது? அவரின் மறைவின் போது கவிமணி சொன்னது இது தான்:"

அன்னைபோல் என்னை அருவியில் நீராட்டி
இன்னமுதும் பக்கத்து இருந்தூட்டி என்னோடு
தங்கு தங்கு என்று சொன்ன தங்கக் குணத்தானை
எங்கு நான் காண்பேன் இனி"
என்று பாடி இருக்கிறார். அவ்வளவு பிரசித்தி பெற்ற அவர் வீட்டுத் தோசையை உண்ட இளம் கவிஞர் ஒருவர் கூறினாராம்:
"அண்ணி சுட்ட தோசையை
ஆசையோடு தின்றவர்
எண்ணிலாதார் அல்லவோஅதில்
யானும் ஒருவன் அல்லனோ!"
என்று. அவ்வலவு இலக்கிய அந்தஸ்து பெற்ற அந்தத் தோசையைப் படைத்த அவர் மனைவியின் பெருமையையும் சொல்ல அளவிடற்கரியது.

31 comments:

 1. வாழ்க டி.கே.சியின் புகழ்!!!

  ஆமாம்! நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், அந்தக்காலத்தில் திருநெல்வேலி பக்கத்துக்காரர்களது தோசை பற்றி, அதுவும் பெருமாள் புறப்பாட்டின் போது அவர்கள் மடியில் தோசையுடன் பெருமாள் பின் செல்வார்கள் என்று...இது உண்மையா?.

  ReplyDelete
 2. நம்ம பக்கத்துப் பேச்சைப் பத்தியா அடுத்த பதிவு போடப்போறீக? வெரசா போடுங்க. காத்துக்கிட்டு இருக்கோம்ல!

  ReplyDelete
 3. ஆமாம் அதாரு எங்கூரு தமிழைத் தொல்லை தமிழுன்னு சொன்னவன்? பேரை மட்டும் சொல்லுங்க. போயி ஒரு கை பாத்துறலாம். ஏலேய் அருவாளைத் தீட்டுங்கல. அதுக்கு ஜோலி வந்திருச்சு!

  ReplyDelete
 4. மடியில் தோசையோடு போவாங்களா இல்லையா தெரியலை, மதுரையம்பதி! ஆனால் பெருமாள் கோவில்களில் தோசைப் பிரசாதம் நல்லா இருக்கும். முக்கியமா மதுரை அழகர் கோவில் தோசை வாங்கிச் சாப்பிட்டிருக்கீங்களா? :)))))))

  ReplyDelete
 5. ஹிஹிஹி, இ.கொ. என்ன அவசரம்? இந்தப் பதிவே அதுக்குத் தான் ஆரம்பிச்சேன். எழுத ஆரம்பிச்சா வேறே எங்கேயோ போகுது.

  ReplyDelete
 6. ஹிஹிஹி, நான் இல்லை, அது, பயமா இருக்கு, அரிவாளைத் தூக்காதீங்க! :P

  ReplyDelete
 7. இந்தப் பதிவை படித்தவுடன் மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிரது மேடம்.. மெல்லத் தமிழினி சாகும் என்று எவனோ ஒருவன் சொன்னதை முறைத்து, உரைத்தாரே பாரதியார், அப்படி பல பேர் இன்னும் இருந்திருக்கிறார்கள் என்று படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி..

  ReplyDelete
 8. மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எப்படி? எங்களுக்கு படிக்க சற்று நேரம் தரக் கூடாதா.. இதோ இந்த பின்னூட்டத்தைகூட ஆணி புடுங்கின கை வலிச்சாலும் தலைவிக்காக எழுதிகிட்டு இருக்குஏன் :-)

  ReplyDelete
 9. //"அண்ணி சுட்ட தோசையை
  ஆசையோடு தின்றவர்
  எண்ணிலாதார் அல்லவோஅதில்
  யானும் ஒருவன் அல்லனோ!"//


  அட அட அடடே! சும்மா பாக்குறதை எல்லாம் அப்படியே கவிதையா வடிக்கிறதுல நம்ம தமிழாளுகளுக்கு சொல்லியா தரணும் மேடம்!

  ReplyDelete
 10. இன்னும் நிறையத் தமிழறிஞர்கள் இருக்காங்க, முடிஞ்சா ஒருத்தர் ஒருத்தரா வெளிக் கொணரப் பார்க்கிறேன். பொறுமையாப் படிக்கிறதுக்கு நன்றி.

  அடுக்கடுக்கா எங்கே போடறேன்? ஹிஹிஹி, உங்களுக்கு விஷயமே தெரியாது! அதான் கேட்கிறீங்க! இதிலே சிலது முன்னேயே எழுதி வச்சு இருந்தேன். அதை நேத்துப் போடப் பார்த்தால் முடியலை, அப்புறம் எனக்காக உ.பி.ச. போட்டாங்க. அதிலே குற்றாலம் வந்துடுச்சு. சரி, இதுவும் இருக்கட்டும், உங்களை எல்லாம் ஒரு வழி பண்ணலாம்னு இதையும் போட்டேன்.

  அதான் தோசை பத்தி எல்லாம் எழுதி இருக்கேனே? :D

  ReplyDelete
 11. indhu enna bayangara informative post-a....neenga thamizh semmozhi iyakathula irukeengala :)

  ReplyDelete
 12. ஹிஹிஹி, கார்த்திக், உங்களுக்குக் கொடுத்த பின்னூட்டத்தில் உங்க பேரைப் போட மறந்திருக்கேன், பரணியோட பின்னூட்டத்துக்கு மேலே உங்களுக்குத் தான் அது. படிச்சுக்குங்க!:-)

  @பரணி, நான் தமிழ்ச் செம்மொழி இயக்கத்திலே இல்லை, அதனாலே தான் அந்தக் கால தமிழ் அறிஞர்களைப் பத்தி எழுத முடியுது! :-)

  ReplyDelete
 13. //இலவசக்கொத்தனார் said...
  ஆமாம் அதாரு எங்கூரு தமிழைத் தொல்லை தமிழுன்னு சொன்னவன்? பேரை மட்டும் சொல்லுங்க. போயி ஒரு கை பாத்துறலாம். ஏலேய் அருவாளைத் தீட்டுங்கல. அதுக்கு ஜோலி வந்திருச்சு!//

  எல மொக்கச்சாமி, பட்டறைல இருந்த எடுத்து வரச் சொன்ன அருவாவ எங்கல... நம்மூரு பாஷைய எவனோ ஏசிப்புட்டானாம்.. கொத்தனார் தலமைல இன்னைக்கு கலவரம்தான்...

  ReplyDelete
 14. எல்லாம் சொன்னீங்களே கீதா மேடம்.. சங்கம் வைத்து தமிழ் வளர்க்க அரும்பாடுபட்ட, திருநெல்வேலி சிங்கம் இந்த ஜி ய மென்ஷன் பண்ண மறந்திட்டீங்களே.... ;))))

  ReplyDelete
 15. ////இலவசக்கொத்தனார் said...
  ஆமாம் அதாரு எங்கூரு தமிழைத் தொல்லை தமிழுன்னு சொன்னவன்? பேரை மட்டும் சொல்லுங்க. போயி ஒரு கை பாத்துறலாம். ஏலேய் அருவாளைத் தீட்டுங்கல. அதுக்கு ஜோலி வந்திருச்சு!//

  எல மொக்கச்சாமி, பட்டறைல இருந்த எடுத்து வரச் சொன்ன அருவாவ எங்கல... நம்மூரு பாஷைய எவனோ ஏசிப்புட்டானாம்.. கொத்தனார் தலமைல இன்னைக்கு கலவரம்தான்... //

  சொன்னது நாந்தேன். நம்ம பசங்களே ரெடியாவுங்கப்பா. கொத்ஸ், ஜி எல்லாத்தையும் ஒரு வழி பண்ணாம வுடக்கூடாது. தஞ்சைன்னா சும்மாவா:-))

  ReplyDelete
 16. ஜி-Z, என்ன பேருங்க இது? ஏதாவது ஒரு ஆங்கில எழுத்துப் பத்தாது? சரி, நீங்களும் நெல்லைதான்னு பாசத்தைக் காட்டினாப் போதுமா? கொஞ்சமாவது தகவல்கள்கொடுக்க வேணாம்? இந்த லட்சணத்திலே உங்களை நான் "தமிழறிஞர்"னு வேறே சொல்லணுமாக்கும்? ம்ம்ம்ம்ம்.,.,.,. நான் என்னையே ஹிஹிஹி, நான் "தமிழ் அறிஞி"னு சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து வந்து கூடச் சொல்லிக்கலை! போயும் போயும் உங்களைச் சொல்வேனா? சரி, சரி, தாயுள்ளத்தோடு மன்னிச்சுத் தொலைக்கிறேன், (அப்புறம் நாளைக்குப் பின்னூட்டம் வரலைன்னா என்ன செய்யறது? ஹிஹிஹி).
  ரகசியமா ஒரு கேள்வி: அறிஞருக்குப் பெண்பால் "அறிஞி" தானா? வேறே ஏதாவதா? :)))))))))))))

  ReplyDelete
 17. வாங்க அபி அப்பா, நீங்க மட்டும் வந்தாப் போதாது! அபி அம்மா, அபி பாப்பா, டைகர் எல்லாரோடயும் வாங்க, அப்போத் தான் களை கட்டும்!!! :))))))))))))

  ReplyDelete
 18. பெருமாள் கோவில் தோசை ருசி. அழகர்கோவில் தோசை அதைவிட ருசி.
  இப்போ கொஞ்சம் மாறிவிட்டது. இருந்தாலும் எங்க மதுரையாச்ச்செ. எல்லாமே நல்லாத்தானிருக்கும்.
  டி.கே.சி புகழ் பாடும் இன்னொருத்தர் கி.ராசநாராயணன் ஐய்யா.
  அவர் உடல்நோய் கண்டபோது கூடவே இருந்திருக்கிறார்.
  நம்ம ஊரு பெருமை சொல்லி மாளாது.கீதா
  நீங்க எழுதற அத்தனை எழுத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 19. \\
  மு.கார்த்திகேயன் said...
  மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எப்படி? எங்களுக்கு படிக்க சற்று நேரம் தரக் கூடாதா.. இதோ இந்த பின்னூட்டத்தைகூட ஆணி புடுங்கின கை வலிச்சாலும் தலைவிக்காக எழுதிகிட்டு இருக்குஏன் :-)\\\

  தலைவி, தலைவர் சொல்லறது உண்மை தான்....கொஞ்சம் கேப் விடகூடாதா!!!!

  ReplyDelete
 20. எல்லாரும் "கேப்" விடணும், "கேப்" விடணும்னு எந்த வேளையிலே சொன்னீங்களோ தெரியலை, போஸ்டே போட முடியலை, We are sorry, we are unable to complete your request.
  The following errors were found:
  Security Token: Sorry, your request could not be processed, Please try again அப்படின்னே செய்தி வந்துட்டு இருக்கு!!!!!!! இப்போ எல்லாருக்கும் சந்தோஷம் தானே? எல்லாம் என் Head Letter!!!!!!! :(((((((((

  ReplyDelete
 21. Too many posts to read and understand.Very very informative.
  Thanks (adikkadi sollittae irukkanum..avalo thanks sollanum)
  again for sharing with us.

  so nice to read the comments in the Nellai bashai.:D

  ReplyDelete
 22. Dosai nu parthadhum pasikudhu.Breakfast saapda poren.
  Will mail you soon.take care Maami.

  ReplyDelete
 23. //அதனாலே என்னாலே "தாமிரபரணி" பத்தி இப்போ எழுத முடியாது//

  இதுக்கு எதுக்கு அம்பி புத்தகம் அனுப்பனும்...உங்க ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலயா.. :-)

  ReplyDelete
 24. //மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எப்படி? எங்களுக்கு படிக்க சற்று நேரம் தரக் கூடாதா.. இதோ இந்த பின்னூட்டத்தைகூட ஆணி புடுங்கின கை வலிச்சாலும் தலைவிக்காக எழுதிகிட்டு இருக்குஏன்//

  ரொம்ப சரியா சொன்னீங்க தல :-)

  ReplyDelete
 25. hihihi,போஸ்ட் எல்லாம் "ஆன்மீகப் பயணம்" பக்கத்திலே நல்லாப் போகுது. இந்தப் பக்கத்திலே தான் போகலை. அநேகமாய் இது "அம்பி குரூப்"போட "சதி வேலை"தான்னு நினைக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....,,,, அம்பி, உங்களாலே போஸ்ட் போட முடியலைன்னா இப்படியா சதி செய்யறது?
  @கார்த்திக், முதல்லே அம்பி கிட்டே இருந்து தகவல் துறையைப்பிடுங்குங்க. அவர் கிட்டே போனதிலே இருந்து எனக்கு போஸ்டே போட முடியலை! :))))))))

  ReplyDelete
 26. //அவ்வலவு இலக்கிய அந்தஸ்து பெற்ற அந்தத் தோசையைப் படைத்த அவர் மனைவியின் பெருமையையும் சொல்ல அளவிடற்கரியது.
  //
  யப்பா! சான்ஸ் கிடச்சா உடனே மகளீர் புகழ் பாடிருவீங்களே!
  அந்த தோசையை பொறுமையாக (சாம்பு மாமா மாதிரி) சாப்டாரே அவர் தான்யா மனுஷன்! :)

  //அநேகமாய் இது "அம்பி குரூப்"போட "சதி வேலை"தான்னு நினைக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....,,,, அம்பி, உங்களாலே போஸ்ட் போட முடியலைன்னா இப்படியா சதி செய்யறது?
  //
  ஆட தெரியாதவங்க தெரு கோணல்!னு சொன்னாங்களாம். :))

  ReplyDelete
 27. //We are sorry, we are unable to complete your request.
  The following errors were found:
  Security Token: Sorry, your request could not be processed, Please try again அப்படின்னே செய்தி வந்துட்டு இருக்கு//

  ஒரு வாரத்துக்கு இதே நிலை நீடிக்கட்டும் முருகா. :p
  press refresh button. hope this will solve your problem.

  ReplyDelete
 28. //சொன்னது நாந்தேன். நம்ம பசங்களே ரெடியாவுங்கப்பா. கொத்ஸ், ஜி எல்லாத்தையும் ஒரு வழி பண்ணாம வுடக்கூடாது. தஞ்சைன்னா சும்மாவா:-)) //

  அப்படி சொல்லுங்க தொல்ஸ்.... வாய்யா வாய்யா மோதி பாத்துடுவோம்.....

  ReplyDelete
 29. எங்க ஏரியா

  தமிழ் பிறந்த இடம் கிடையாது... தவழ

  வளர்ந்த இடமும் கிடையாது...

  கொஞ்சி விளையாடிய இடம்ய்யா... கொஞ்சி விளையாடிய இடம்....

  ReplyDelete
 30. ஆப்பு, refresh செய்யணும்னு கூடத் தெரியாமல் இருப்பேனா? எல்லாம் செய்துட்டுத் தான் இருக்கேன். ஆனால் பதிவு போடுவதில் தான் பிரச்னை. பின்னூட்டங்களை வெளியிடுவதிலோ, அல்லது அதற்குப் பதில் கொடுப்பதிலோ பிரச்னை வருவதே இல்லை!!!!!!!

  ReplyDelete
 31. தஞ்சை பெற்றெடுத்த கொஞ்சல்ஸ் ஆஃப் நாகை, வாங்க, வாங்க, என்ன இப்போத் தான் கண்ணிலே பட்டேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

  ReplyDelete