எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 12, 2007

ஆன்மீக வழியில் பெண்கள்??!!!!

"உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூற்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை
நாடுகள்யாவுஞ்சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுதலார் நங்கள்
பாரததேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்."

இது பாரதியின் புதுமைப்பெண் பற்றிய கவிதைத்தொகுப்பில் உள்ள ஒரு பாடல்.பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்றே நாம் சொல்கிறோம். பெண்கள் வேதகாலம் தொட்டே பெரும் ஞானிகளாயும்,அறிவாளிகளாயும்தான் இருந்து வந்திருக்கிறார்கள். இதற்குப் பல ரிஷிபத்தினிகளை உதாரணம் காட்டலாம். தவத்தாலும், ஒழுக்கத்தாலும் சிறந்த அனசூயை அந்த கங்கையையே தான்
நினைத்த இடத்துக்குக் கொண்டு வந்தாள். அருந்ததியோ வசிஷ்டரின் பாதம் பணிந்து நடந்து அவருடன் நிலையான நட்சத்திரப்பதவி பெற்றாள். இன்னும் இலக்கியங்களில் இடம் பெற்ற பெண்களும் உண்டு. காவியங்களில் இடம் பெற்ற பெண்களும் உண்டு. இப்படி எல்லா வகையிலும் பெண்கள் சிறந்து இருந்திருக்கிறார்கள். வீரத்திலும் தமிழ் நாட்டு மங்கையர் சிறந்தவர்கள். இதற்கு எல்லாம் காரணமே அவர்கள் கடைப்பிடித்த ஆன்மீக வழி தான்.

ஆன்மீகம் என்றாலே ஏதோ குறிப்பிட்ட மதம்சார்ந்ததாய்க் காணப் படும் இன்றைய காலகட்டத்தில் இது முரணாகத் தான் தோன்றும். ஆனால் ஆன்மீகம் இல்லாத பெண்களே இல்லை. இன்றைக்குப் பல வீடுகளில் விவாக ரத்து என்பது கேட்டுக் கொண்டிருக்கிறோம்.அதற்குக் காரணம் சகிப்புத் தன்மை இல்லாமை. ஆன்மீகம் சார்ந்த கல்வி கற்பவர்களோ அதை வென்று அதிலிருந்து மீண்டு வெளியே வருவார்கள். இல்லறத்துக்கு ஆதாரமாக இருப்பவள் பெண். இனிக்கும் இல்லறத்தில் ஆன்மீகம் அனுபவிப்பதோ வெகு எளிது.

இல்லறத்தையும் கைவிடாமல், மனதையும் பக்குவப் படுத்தி ஆன்மீக வழியில் திருப்பி அந்த அந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து வீட்டைக் கோயிலாக மாற்றுவது பெண்ணே! அதற்காக அதிகம் சிரமப்படவே வேண்டாம். தினமும் காலையில் விளக்கேற்றி வைத்துக் கடவுளை நினைத்து அல்லது அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்து அந்த வேளை உணவை உண்ணும்போது அது வெறும் "சாதம்" ஆக இல்லாமல் "பிரசாதம்" ஆகிறது. அதனுடைய மஹிமையே தனி தானே அல்லவா?

மேலும் இல்லறத்தில் மனைவியின் பணி வேர் போன்றது.வேரானது எவ்வாறு பூமிக்குள் மறைந்து நின்று மரத்தைத் தாங்குகிறதோ, அது போல் பெண்ணானவள் தன் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவள். குடும்பம் வளரமெளனமாகவும் அதே சமயம் மறைமுகமாகவும் வேண்டியது செய்ய வேண்டும். அத்தகைய சக்தியை அவளுக்குத் தருவது ஆன்மீகம் ஒன்றுதான். இந்த ஆன்மீகத்தால் உயர்ந்த பெண்மணிகள் என்று பார்த்தால் ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

ஒளவையார்,காரைக்காலம்மையார், திலகவதியார், பாண்டியன் மனைவி பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி, அகஸ்திய முனிவரின்மனைவி லோபா முத்திரா, மண்டன மிஸ்ரரின் மனைவி சரஸவாணி,தியாகைய்யரின் மனைவி, அன்னைசாரதாமணி தேவி, பக்த மீரா, ஆண்டாள், திருநீலகண்டரின் மனைவி, மராட்டி மன்னன் சிவாஜியின் (எங்கேயாவது சிஷ்யகேடிங்க, சீச்சீ, சிஷ்யகோடிங்க "ரஜினி சிவாஜி"ன்னு நினைச்சுக்கும்,அதான் டிஸ்கி) என்று இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்தப்பெண்கள் யாவரும் தம் தம் பக்தியைப் பரம்பரைச் சொத்து ஆக்கிக் காத்து அதை நம்மிடம் தந்திருக்கிறார்கள்.

ஆனால் நாம்?அதைப் பாதுகாக்கிறோமா என்றால் இல்லை எனத் தான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் நம் பண்டிகைகள் எல்லாம் ஓரளவாவது வண்ணமயமாய்க் காட்சி அளிக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெண்கள் தான். ஏதோ ஒரு நைவேத்தியம் தயாரித்து அதை ஸ்வாமிக்குப் படைத்து உள்ளன்போடு வழிபட்டாலே போதுமே! கணவனதும், குழந்தைகளுடையதும் உடல், உள்ளம் மட்டுமில்லாமல் அவர்களின்ஆன்மாவையும் கடவுளின் காலடியில் செலுத்துவதற்கு ஒரு பெண்ணால் தான் முடியும். ஆகவே கல்வியோடு சேர்ந்தே ஆன்மீகமும் கற்பிக்கப் படவேண்டும்.இல்லறம் என்பதற்கு அர்த்தமேஇல்+அறம்= இல்வாழ்க்கையை அறவழியில்நடத்திச் செல்லுதல் என்று பொருள்.

மரம்வளர எப்படி ஒரு விதையைப் போட்டு வளர்க்கிறோமோ,அது போல் அறம் வளரநம் ஆன்மா வளர வேண்டும். ஆன்மாவளர உள்ளம் ஆன்மீகப் பாதையில்செல்ல வேண்டும். அதற்குப் பக்தி ஒன்றேபெண்களுக்குக் கை கொடுக்கும்.பெண்களைக் கண்டாலே அறம் நினைவுக்கு வர வேண்டும். நம்ம ஊர்களிலே தெய்வத்துக்குக் கூட "அறம் வளர்த்தநாயகி" என்று தான் பெயர் வைக்கிறோம்.சாப்பிடும்போது கூட மனதில் சாந்தியோடும், நிம்மதியோடும் தான் சாப்பிடவேண்டும். ஆனால் நாம்? தொலைக்காட்சிகளில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு,அதனோடு அழுது கொண்டு சாப்பிடுகிறோம். அதன் தாக்கமும் தான் இன்றையப் பெண்களிடம் நிறையவே உள்ளது. ஒலி அதிர்வுகள் அது எப்படிப்பட்டதாய் இருந்தாலும் மனதைப்பாதிப்பது அறிவியல் பூர்வமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அத்தகைய ஒலிஅதிர்வுகள் நம் காதில் விழுந்து கொண்டிருக்கும்போது நம் வேலையை நாம் செய்தோமானால் அவற்றின் பாதிப்பு கட்டாயம் நம் வேலையையும் பாதிக்கும்.

"ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!" என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.ஆனால் இன்று ஒரு பக்கம் சாதனைப்பெண்களுக்குப் பாராட்டு விழா என்று பத்திரிகைச் செய்திகள் வருகிறது. அதே பத்திரிகைகளில் முதல் இரவிலேயே கணவனைக் கொன்ற பெண்கள், காதலன் ஏமாற்றினால் கொன்ற பெண்கள்,காதலனிடமும், கணவனிடமும் ஏமாந்த பெண்கள் என்று பத்திரிகைகளில் செய்தியை முந்தித் தரும் ஒரு விஷயமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? குறைந்தபட்ச ஒழுக்கக் கல்வி கூடக் கற்பிக்கப்படாதது தான் என்பது என்னோட கருத்து.இதிலே எந்தப் பக்கதிலும் மதம் சார்பில்லை.

அரசியல்வாதிகள் அதைப்புரிந்து கொள்ள வேண்டும். 2 நாள் முன்னால் மஹாராஷ்ட்ராவில் புனே நகரில்நடந்த "போதை மருந்து விருந்து" ஒன்றில் அகப்பட்டவர்கள் பலர் இளம்பெண்கள்.ஏன் இந்த அவலநிலை? பெற்றோர் கவனிப்பு இல்லாமையும், முறையான ஆன்மீகம் தெரியாமையும் தான். பெற்றோர்அநேகர் இன்றைய நாட்களில் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் ஆக உள்ளார்கள். பெரும்பாலும் தனிக்குடித்தனம்தான். ஆகவே தனியாக விடப் படும் அந்தப் பெண்கள் சூழ்நிலை காரணமாயும்,தனிமை காரணமாயும் முறையான வழிகாட்டுதல் இன்றியும், எது உண்மையான சுகம் என்று சுகத்தின் அளவுகோல் தெரியாமலும் தவறானவழிகளில் ஈர்க்கப் படுகிறார்கள். சிறுவயதிலேயே ஆன்மீகக் கல்வி கற்பிக்கப் பட்டால் அவர்களுக்குள் ஒருதெளிவும், ஞானமும் ஏற்படும்.

"நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட
பார்வையும்திமிர்ந்த ஞானச் செருக்கும்" என்று பாரதி சொன்ன அந்த ஞானச் செருக்கு இது
தான். பகலும், இரவும் போலத் தான் ஆன்மீகமும், இல்லறமும். இல்லறத்தின் செழிப்புக்கு ஆன்மீகம் வழிகாட்டி. இது எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.கல்யாணத்தில் ஆரம்பிக்கும் இந்த ஆன்மீகம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தாயார், தகப்பனார், உறவின் முறைகள்,அக்கம்பக்கம், நட்பு வட்டம் என்று பெருகிக் கடைசியில் ஒரு முடிவில்லாமல்
பொது நலனாக மாற வாய்ப்புண்டு. அது தான் உண்மையான ஆன்மீகம். கட்டுப்பாட்டுடன் செயல்படும் இல்லறத்தில் தான் இது நிலைக்கும்.நைந்து போயிருக்கும் மனத்தையும்,உடலையும் ஒழுங்கு படுத்தி உணர்ச்சிகளைத் தன் வசப்படுத்த "யோகா","பிராணாயாமம்", போன்றவைகளைத் தேடிப்பிடித்துக் கற்றுக் கொள்ள வேண்டும். இவை மனதையும் ஒருமுகப் படுத்தி, வாழ்வின் லட்சியத்தில் வெற்றி அடையவும் வழிசெய்கிறது.கோபம் குறையும். கோபத்தால்எந்தப் பயனும் விளைவது இல்லை. மனஅமைதி கொடுக்கப் பிராணாயாமமும், உடல்வலுவைக் கொடுக்க யோகாவும் கட்டாயம் எல்லாப் பெண்களும் கற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று ஆகும். எத்தனையோ தீவிர நாத்திகர்கள் தம் தம் மனைவிமார்களின் ஆன்மீக வழியில் திரும்பி இருக்கிறார்கள். அதைப் பெருமையுடனும் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆகவே பெண்களை உயர்த்த ஒரே வழி அவர்கள் ஆன்மீகம்சார்ந்த கல்வியைச் சிறு வயதில் இருந்தேபெறுவது தான்.
"போற்றி, போற்றி, ஜெயஜெய போற்றி!
இப்புதுமைப் பெ ண்ணொளி வாழி
பல்லாண்டிங்கே!"மாற்றி வையம் புதுமையுறச் செய்துமனிதர் தம்மை அமரர்களாக்கவேஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை, நல்அருளினாலொரு கன்னிகையாகியேதேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்."

13 comments:

 1. உள்ளேன் அம்மா!

  பதிவுகள் எல்லாம் படித்து பின்னூட்டம் பிறகு.....

  ReplyDelete
 2. எல்லாம் சரி. நல்ல பதிவு. :)

  அதுக்காக இப்படி சைதாப்பேட்டை பொதுக்கூட்டம் மாதிரி பதிவு போடனுமா? :)

  சுருங்க சொல்லி விளங்க வைக்கனும். வேணும்னா ஒரு வாட்டி திருக்குறளை புரட்டி பாருங்க. ஒன்னே முக்கால் அடியில 1330 பிளாக் போட்டவர்.

  அப்புறம் எல்லாரும் மதுரையம்பதி, SKM, உட்பட அட்டென்டன்ஸ் மட்டும் தான் போடுவாங்க. ஆபிஸ்ல எவ்ளோ ரிஸ்க் எடுத்து நாங்க பதிவை படிக்க வேண்டி இருக்கு? அதெல்லாம் மனசுல வெச்சுக்க வேணாம்? :)

  ReplyDelete
 3. வாங்க, வாங்க, மதுரையம்பதி, மத்தியானம் வந்ததுமே பார்த்துட்டேன். அப்போ கொஞ்சம் வேலையா இருந்தேனா,அதான் உடனே விசாரிக்கலை. உங்களோட கமெண்ட் எல்லாம் நல்லபடியாய் வந்திருக்கு. ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா? ஊரெல்லாம் எப்படி இருக்கு? அப்புறம் நான் சொன்னேனே அதை எல்லாம் உங்க அப்பா கிட்டே விசாரிச்சீங்களா? வீட்டிலே எல்லாரும் செளக்கியம் தானே? ஹிஹிஹி, ஒரு சின்னப் பதிவு போட்டுட்டேன். :)))))

  ReplyDelete
 4. அம்பி, முழநீளம் பின்னூட்டம் கொடுக்க முடியும், படிக்க நேரம் இல்லையா? அங்கே முத்தமிழில் என்னடான்னா ஒரு வார்த்தையிலே சொல்லறீங்கன்னு கேட்கிறதை, நீங்க இப்படி. உங்களுக்குத் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும், என்ன இன்னிக்குக் கணேசன் பக்கத்திலே இல்லையா? படிச்சுச் சொல்ல? :P

  ReplyDelete
 5. @அம்பி, மதுரையம்பதி இங்கே அட்டெண்டன்ஸ் போட்டாலும், எனக்கு விவரமாத் தனி மெயில் அனுப்பிச்சிருக்கார். அதனாலே நீங்க அவரோட பின்னூட்டத்தைப் பத்திக் கவலைப் படவேண்டாம். :P

  ReplyDelete
 6. naan thorandha udaneye kanla patta mudhal vaarthai edho "bodhai marundhu virundhu" nu. aiyo naan kuzhandaipa. enakku idhu ellam padikka koodadu nu amma sollirukka!

  ReplyDelete
 7. ஆஹா - மிக மிக பயனுள்ள பதிவு.
  பதிவில் நிறைய punch வரிகள் நிறைந்திருந்தன. மனதில் எளிதாக பதியும்படியாக இருந்தது.
  மனைவியோடு சேர்ந்து படித்து உறுதி கொண்டோம்!
  மிக்க நன்றி!

  ReplyDelete
 8. போர்க்கொடி, குழந்தையா? குழந்தை? ம்ம்ம்ம்ம்,. இருக்கட்டும், கவனிச்சுக்கறேன்.

  ம்ம்ம்ம்., ஜீவா, அப்படியா சொல்றீங்க? எனக்குத் தெரியலையே? ஆனால் எடிட் செய்யாமல் போட்டிருக்கேன். எடிட் செஞ்சிருக்கலாம்னு தோணுது. இது "பூங்கா"வின் பெண்கள் தினச் சிறப்பிதழுக்கு அவங்க கேட்டாங்கன்னு எழுதினேன். நேற்று அதில் வெளி வந்ததும் பதிவிலும் போட்டேன். ஆனால் இதுவே இன்னும் முடிக்கலை. :))))))))))))

  ReplyDelete
 9. அருமையான பதிவு தலைவி

  கொஞ்சம் பெரிய பதிவு தான் ;))

  ReplyDelete
 10. உண்மையில் பெண்கள் தினப் பதிவின் தொடர்ச்சி தான் இதுவும், அதிலே பாதி போட்டுட்டு இதிலே மீதியைப் போடலாம்னு நினைக்கிறதுக்குள்ளே, "பூங்கா"வில் இருந்து கேட்கவே அப்படியே அனுப்பி விட்டேன். அதான் கொஞ்சம் இல்லை, ரொம்பவே பெரிசாகி விட்டது. ஆனாலும் படித்துக் கருத்துச் சொன்னவங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 11. கீதா, நல்ல பதிவு. அர்த்தநாரீஸ்வரர் அன்ற அற்புதமான ஆன்மிக படிமத்தை, வடிவத்தை உருவாக்கியது இந்து மரபு. பெண்கள் ஆன்மிக வழியில் இயைவது எப்படி இயல்பான ஒன்று என்பதையும் அழகாக சுட்டியிருக்கிறீர்கள். உங்களது பட்டியலில் மாதா அம்ருதானந்தமயியை விட்டு விட்டீர்கள். உலகெங்கும் சென்று தெய்வீக அன்பை அம்மா வாரி வழங்கி வருகிறார்கள்..

  பல யோகா, பிராணாயாம பயிற்சி வகுப்புகளில் நிறைய பெண்களைப் பார்க்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் கூறியது போல இது மேன்மேலும் வளரவேண்டும்.

  வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
  வேண்டி வந்தோமென்று கும்மியடி
  சாதம் படைக்கவும் செய்திடுவோம் - தெய்வச்
  சாதி படைக்கவும் செய்திடுவோம்..
  - பாரதி

  ReplyDelete
 12. கடவுளை காணும் வழி

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/219

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/198

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/886

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/223

  ReplyDelete
 13. கடவுளை காணும் வழி

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/219

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/198

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/886

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/223

  ReplyDelete