எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 27, 2007

உற்சாகம், கும்மாளம், கொண்டாட்டம்!!!!!!!

ம்ம்ம்ம், ஒரு வாரத்துக்கு மேலே நான் எழுதறது எனக்கு பப்ளிஷ் கொடுக்க முடியாமல் இருந்தது. நான் எழுதி, அதை உ.பி.ச.வுக்கு அனுப்பி அவங்க உடனேயே போடுவாங்க. இப்போ என்னன்னா நேரம் நெருங்கிட்டே இருக்கா? ஒரே டென்ஷன். சாமான்கள் வாங்கறதும், வீட்டைச் சுத்தம் செய்து எல்லாவற்றையும் ஒதுங்க வைக்கிறதுமே ஒரே ஆணி மயமா இருக்கு. இதுக்கு நடுவிலே நான் ப்ளாக் பார்க்கிறதே பெரிய விஷயமா இருக்கு, இப்போ 4 நாளா என்னோட இணைப்பும் முடிஞ்சு புதுப்பிக்கக் காத்துட்டிருக்கு. ஆனால் புதுப்பிக்கவில்லை. இன்னிக்கு ஸ்ரீராமநவமிக்கு எங்க வீட்டு ராமரையும், வடுவூர் ராமரையும் போட்டு எழுத இருந்த பதிவு எழுத முடியலை. என்னோட கணினி இருந்தால் ராத்திரி ஆஃப்லைனில் கூட எழுதி வச்சுட்டுப் பின் பப்ளிஷ் கொடுக்க அனுப்ப முடியும். இங்கே என்னோட அண்ணா வீட்டில் இருந்து கொடுக்க வேண்டி இருக்கு. அதனால் தினமும் உங்களுக்கு என்னோட போஸ்ட் தொந்திரவு இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியாய் இருக்கலாம். அப்புறம் புதரகம் போனதும் அங்கே ஜெட்லாக் முழிப்பு எல்லாம் முடிஞ்சு, நான் வியர்டா ஆனதும் வந்து எழுத ஆரம்பிக்கணும். அங்கேயும் வேலை நேரத்தைப் பொறுத்துத் தான் அமையும். ஆகவே எல்லாரும் ஜாலியாக் கைதட்டிட்டு உற்சாகமாய்க் கொண்டாடுங்கள்.

நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது!! ஏன், எனக்கே தெரியாது!! ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்தே தீருவேன்!!!!!

இது நான் ஒரு முறை சொன்னா ஆயிரம் முறை சொன்னமாதிரி!!!!! எல்லாம் ரஜினி வாய்ஸில் படிச்சுக்குங்க.

அப்புறம் புதரகவாசிகள் எல்லாம் ச்யாம், கார்த்திக், மணிப்ரகாஷ், கோபிநாத், பரணி, ஜி-Z, இன்னும் யார் எல்லாம் இருக்கீங்களோ எல்லாரும் வரவேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்கும்படி மேலிடத்தின் கட்டளை!!!!!!! :D ச்யாம், உண்ணாவிரதத்துக்கு ஒளிஞ்சுட்ட மாதிரி ஒளிஞ்சுக்கப் போறார். அபி அப்பா கலெக்ட் பண்ணிக் கொடுத்த பணத்தை என்ன செஞ்சீங்க கோபிநாத்? பரணி, அலுத்துக்காம சாப்பாட்டு விஷயத்தைக் கவனிங்க. கார்த்திக், என்ன தலைவர் நீங்க? தொண்டர்களை வழி நடத்துங்க!!!!! ஹிஹிஹி, திடீர்னு வந்து பார்ப்பேன். சரியா?

17 comments:

 1. //தினமும் உங்களுக்கு என்னோட போஸ்ட் தொந்திரவு இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியாய் இருக்கலாம்//

  அது எத்தனை நாளுக்கு அந்த நிம்மதி தங்கும்??? :)

  ReplyDelete
 2. வந்த செட்டில் ஆன உடனே ஒரு பின்னூட்டம் தட்டி விடுங்க, உங்க இடம் போன் நம்பர் எல்லம் குடுத்து. நான் போன் பண்ணிப் பேசறேன். என்ன செய்ய இந்த நிம்மதி இல்லாம இருக்கறது பழகிப் போச்சு. அதனால படிக்க முடியலைன்னா பேசித் தீர்த்துக்கலாம். :)

  ReplyDelete
 3. so ,for some days atleast we can enjoy the peace.Thats a good news.;P

  enjoy your journey.Be safe.

  ReplyDelete
 4. haiya jolly! :)

  appada nalla velai namma pera podala, naama oru velaiyum paaka vendaam, jollyo jolly!! :D

  ReplyDelete
 5. உண்ணாவிரதம் நமக்கு புடிக்காத ஒன்னு...காந்தி சொன்ன மாதிரி அகிம்சை வழில தான் எது பண்ணாலும் பண்ணனும்...உண்ணாவிரதம் இருந்து பசில துடிச்சா காந்திக்கு புடிக்காது..அதுனால தான் எஸ்கேப்பு :-)

  ReplyDelete
 6. உங்கள வரவேற்கரதுக்கு தான் பிரியானி விருந்து உண்டே..அதுனால அங்க எல்லாம் கண்டிப்பா இருப்போம் :-)

  ReplyDelete
 7. yaar ange...adikara adiyil thaarai thappataigal kizhindhu thonga vendaame....thodangattum yerpaadugal.....

  indha sound podungala :)

  ReplyDelete
 8. ஓ.. நாமதான் கொஞ்சம் லேட்டா.. தோ படிச்சிட்டு வந்துட்டேன் மேடம்

  ReplyDelete
 9. /கார்த்திக், என்ன தலைவர் நீங்க? தொண்டர்களை வழி நடத்துங்க!!!!! //

  எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க.. ஓடி ஒளிஞ்சுக்க இல்லை.. வாண வேடிக்கை பட்டாசெல்லாம் போட்டு அமர்களப்படுத்த தான் மேடம்

  ReplyDelete
 10. கொஞ்சம் கொஞ்சமா ரெடியாகுறீங்க போல.. அமெரிக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறதுங்க மேடம் :-)

  ReplyDelete
 11. //என்னோட போஸ்ட் தொந்திரவு இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியாய் இருக்கலாம். //

  அது எத்தனை நாளுக்கு, no, no weeks or even monthsku அந்த நிம்மதி தங்கும்??? :)

  ReplyDelete
 12. அப்பாடி, கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கு.....

  ReplyDelete
 13. //அதனால படிக்க முடியலைன்னா பேசித் தீர்த்துக்கலாம். :)//

  கொத்ஸுக்கு உள்குத்து வச்சு பேசுவதே பொழைப்பா போச்சு:-)

  கோபிதம்பி, பணத்தோட எஸ்கேப்!!

  ReplyDelete
 14. வரவேற்புக் கமிட்டியில் இல்லேனாலும்,
  ஓரமா நின்னு உங்அளை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்:-0
  பத்திரமா வந்து சேருங்க.
  போன் செயுங்க.
  கொத்ஸ் பாத்தீங்களா. இந்தியாலெருந்து வரவங்களோட பேசுவாராம்.
  இங்கேயெ இருக்கிறவங்க கிட்ட பேச மாட்டாராம்.
  காலம்டா.

  ReplyDelete
 15. அப்பாடா............

  எப்ப கிளம்புறீங்க.... ஒரு மெயில் தட்டி விட்டுட்டு போங்க...

  மனசு ரொம்பவே லேசனா மாதிரி இருக்கு... ஏன்னே தெரியல....

  இந்தியா நன்றாக இருப்பதை நினைத்தா? தெரியலையே

  ReplyDelete
 16. \\அபி அப்பா said...
  //அதனால படிக்க முடியலைன்னா பேசித் தீர்த்துக்கலாம். :)//

  கொத்ஸுக்கு உள்குத்து வச்சு பேசுவதே பொழைப்பா போச்சு:-)

  கோபிதம்பி, பணத்தோட எஸ்கேப்!!\\

  அபி அப்பா நான் ஒன்னும் எஸ்கேப் ஆகவில்லை. எங்கள் தலைவி எங்களுக்கு இந்த மாதிரி எஸ்கேப் எல்லாம் சொல்லி கொடுக்கவில்லை. ஏதோ கொஞ்சம் லேட்டு....

  ReplyDelete
 17. \\அபி அப்பா கலெக்ட் பண்ணிக் கொடுத்த பணத்தை என்ன செஞ்சீங்க கோபிநாத்?\\

  யாரு இவரா....அய்யோ தலைவி அவரு இன்னும் அபிக்கே அந்த 4 கோடியை கொடுக்கவில்லை...நமக்கா கொடுக்க போறாரு.

  ReplyDelete