எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 04, 2007

226. வலைப்பதிவர் சந்திப்பு தோல்வி?

இன்று தலைவி(வலி) வீட்டில் நடைபெறுவதாய் இருந்த வலைப்பதிவர் சந்திப்புத் தோல்வியில் முடிந்ததாய் அம்பி மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாய்த் தெரிகிறது. இன்று காலை சுமார் 11-15 மணி அளவில் தலைவிக்கு வந்த தொலைபேசியை ஒட்டுக் கேட்டதில் தெரிய வந்த செய்திகள் வருமாறு:

1. திடீரென அம்பியிடம் இருந்து தொலைபேசி வரவும் திடுக்கிட்டார் தலைவி. இதில் ஏதோ சூது என்பதையும் அறிவு நிறைந்த தலைவி உணர்ந்திட்டார்.

2.ஆகவே அம்பி மாட்டிய வலையில் தலைவி விழவில்லை. தப்பி விட்டார். அம்பி கேட்ட கேள்விகள் என்னும் வளையத்துக்குள் புகுந்த தலைவியை, அபிமன்யூ புகுந்த சக்ரவியூகத்தில் இருந்து வெளிவரத் தெரியாமல் திண்டாடியது போல் திண்டாடுவார் என நினைத்துக் கேள்விகள் மேல் கேள்விகள் போட்டுத் திக்கு முக்காட வைக்க வேண்டும் என நினைத்து அம்பியும், குண்டர் படைத் தலைவரும் (பாவம், ரொம்பவே சாது, எல்லாம் இந்த அம்பியாலே தான்.) தொடுத்த கேள்விக் கணைகளைத் தலைவி வெற்றிகரமாய்க் கையாண்டார்.

3.வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றியும் அதற்கு அம்பிக்கு அழைப்பு விடுக்கப் பட்டதையும், அம்பி அதை நிராகரிப்பார் எனத் தலைவி ஏற்கெனவே சரியான காரணங்களுடன் நிரூபித்ததையும் அனைவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி இருந்தும், அம்பி தலைவியிடம் தனக்கு அழைப்பு வந்ததையே தான் இப்போது தான் பார்த்ததாய் ஒரு பொய் சொன்னார். இருந்தும் தாயுள்ளம் கொண்ட தலைவி அதைப் பெருந்தன்மையுடன் மன்னித்தார்.

4. அம்பி திரும்பத் திரும்ப கண்ணபிரான் ரவிசங்கர் கே.ஆர்.எஸ். வந்திருக்கிறாரா என்றும், தி.ரா.ச. அவர்கள் வந்திருக்கிறாரா என்றும் தலைவியிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்தும் தலைவி உள்ளது உள்ளபடியே உரைத்தார் என்பது கவனிக்கத் தகுந்தது. அதற்குத் தலைவியுடன் அனைவரும் ஒத்துழைத்தனர். இம்மாதிரியான ஒத்துழைப்பைப் பார்த்துத் தலைவி நெகிழ்ந்து போய் நாத் தழு தழுக்கப் பேச்சு வராமல் போனார்.

இப்போத் தான் வருதுங்கோவ் கிளைமாக்ஸே:

தலைவிக்குத் தொலைபேசிய 1/2 மணி நேரத்துக்கு அப்பால் அம்பி தி.ரா.ச. வுக்கும் தொலைபேசியதாகத் தெரிய வந்தது. கண்ணியம் மிக்க அந்தப் பெரியவர் தலைவியிடம் அனுமதி கேட்டு விட்டே அம்பியிடம் பேசினார் என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒன்று. அம்பி அவரைத் திரும்பத் திரும்ப எங்கிருக்கிறீர்கள் என்று கேள்விகளால் துளைத்தெடுத்ததைக் கண்டு தலைவி ஆச்சரியமடைந்தார். வெண்டைக்காய்ப் பொறியலும், வத்தல் குழம்பும் வைத்துப் பயிற்சி எடுக்குமாறு தங்கமணி கூறியதையும் விட்டு விட்டு இம்மாதிரி தி.ரா.ச. வையும், தலைவியையும் அம்பி கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தது பற்றி அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர். தி.ரா.ச.வுடன் அம்பி பேசி வலைப்பதிவர் சந்திப்பு நடக்கவில்லை என உறுதி செய்து கொண்டு நிம்மதியாகத் தொலைபேசியை வைத்ததும் பிறகு ஒரு 4 மணி நேரங்களுக்கு சந்திப்பு எந்த இடையூறும் இல்லாமல் நடந்து முடிந்தது.

தி.ரா.ச. அவர்கள் காலையிலே மாநகர ரெயில் மூலம் அம்பத்தூருக்கு 9-30 மணிக்கே வந்து சேர்ந்தார். பாலராஜனின் வண்டி தகராறு செய்த காரணத்தால் கண்ணனும், பாலராஜன், கீதாவும் சற்றே தாமதமாக வந்தார்கள். மதுமிதா இன்றுதான் ஊரில் இருந்து வருவதால் அவரால் காலையில் வரமுடியாது எனத் தெரிவித்து விட்டார். ராகவன் என்ற ஜிராவும் திருச்செந்தூர் போய்விட்டார். மற்றும் இருவர் ஊருக்குப் போய்விட்டனர். வேதாவும் கடைசி நிமிடத்தில் வர முடியவில்லை. கண்ணனும், பாலராஜனும் புகைப்படங்கள் எடுத்தனர். எடுத்துக் கொண்டனர். வெகு நேரம் பலதரப்பட்ட விஷயங்களையும் பேசிவிட்டுப் பின் மனமில்லாமல் கண்ணன் எழுந்திருக்க மற்றவர்களும் பின் தொடர்ந்தனர். இருந்தும் எல்லாரும் சந்திப்பின் மகத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டபடியால் அவரவருக்கு வேண்டிய தகவல்களைக்கேட்டுப் பெற்றதும் சந்திப்பும் சரி இன்றைய பொழுதும் சரி, நல்லபடியாய் கழிந்தது.

அம்பிக்கு எல்லாரும் வந்ததைச் சொல்லவேண்டாம் எனத் தலைவி கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அனைவரும் அம்பி தொலைபேசும்போது கொஞ்சம் அடக்கியே வாசித்தனர். இருந்தும் பாம்புக் காது அம்பி என்ன சத்தம்? என்ன சத்தம்? என்று இருவரையும் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார். ஆகவே எனக்குத் தெரியும் எல்லாரும் வந்தாங்க என்று சமாளிப்புச் செய்யலாம். ஆனால் அந்தச் சமாளிப்பு இங்கே செல்லாது. ஹூஊஊஊஊஊஉம்! அம்பி! அம்பி! சரியான ஆப்பு வச்சிருக்கேனே உங்களுக்கு!

11 comments:

 1. ஹா, ஹா, ஹா, அம்பி? இது எப்படி இருக்கூஊஊஊஊஊஊஊஊ?
  இந்தத் தகவல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? :P

  ReplyDelete
 2. மெயில் கொடுக்காமலே ஏன் அம்பி மெயில் கொடுத்ததாய்ப் பொய் சொன்னீங்க? ரொம்பவே மோசம். உங்க மெயிலும் வரலை, குயிலும் வரலை. நீங்க சோதனை பண்ணின தொலைபேசியைத் தவிர.

  ReplyDelete
 3. அம்பி நீ சுத்தமோசம். தங்கத்தலவியைப்பற்றி எப்பொழுதும் தவறான தகவல்களையே அளித்துள்ளாய்.
  ஆஹா என்ன ஒரு பெருந்தன்மையான மனிதர்கள் தலவியும் அவர்தம் ரங்கமணியும்.என்ன ஒரு உபசரிப்பு,அதுவும் அந்தக்கேசரி இருக்கே வேண்டாம் அம்பி நீ அப்பறம் அழுதுடுவே!

  பாய்ஸ் லேஅவுட் இட்லிகடையிலுருந்து வந்த இட்லி அல்ல வீட்டிலேயெ அன்போடு செய்தது.சரி விடு அம்பிக்கு குடுப்பினை இல்லை.

  குதிரை ஏறி பதாளத்தைப் பார்த்து பயந்த வேதாளம்கூட பக்கத்தில் இருக்கும் "வில்லி' வாக்கத்திலிருந்தும் வரவில்லை.

  5 மணிநேர சாதனையாளர்கள் மீட்டிங்கில் உலகத்தை/இந்தியாவை ஆட்டும் பல பிரச்சனைகளைப் பற்றி முடிவு எடுக்கப்பட்டது. என்னை இந்தக்கூட்டத்திற்கு வரமுடியாமல்
  அம்பி செய்த சதி செயலை தலைவி முறியடித்தவிதமே அலாதி.

  தலைவி வாழ்க

  ReplyDelete
 4. haa, haa, haa, AMBI, AAPPU AMBI, just see what Mr.TRC wrote. Ha, Ha, Ha, everybody is supporting me only. not you. understand? he he he he he!

  ReplyDelete
 5. //மதுமிதா இன்றுதான் ஊரில் இருந்து வருவதால் அவரால் காலையில் வரமுடியாது எனத் தெரிவித்து விட்டார். //

  நல்ல வேளை அவர்கள் தப்பி விட்டனர்.

  ராகவன் என்ற ஜிராவும் திருச்செந்தூர் போய்விட்டார். மற்றும் இருவர் ஊருக்குப் போய்விட்டனர்.//

  ராகவனை, என் அய்யன் முருகன் மறுபடியும் காப்பாற்றி விட்டான்! :)


  //வேதாவும் கடைசி நிமிடத்தில் வர முடியவில்லை.//
  இதிலிருந்தே தெரியவில்லையா வேதா உங்கள் கட்சி இல்லை, எங்கள் ஒற்றர் படையின் ஒரு அங்கம் என்று!

  //கண்ணனும், பாலராஜனும் புகைப்படங்கள் எடுத்தனர். எடுத்துக் கொண்டனர். //

  அந்த புகைப்படங்களை ஏன் வெளியிடவில்லை? ஆதாரம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் இந்த பாண்டியன் சபை ஏற்காது!

  நாட்டாமை பாஷையில் சொல்லனும்னா செல்லாது! செல்லாது!

  //பாய்ஸ் லேஅவுட் இட்லிகடையிலுருந்து வந்த இட்லி அல்ல வீட்டிலேயெ அன்போடு செய்தது.//
  வஞ்சப் புகழ்ச்சி அணியில் உங்களுக்கு நிகர் யரும் இல்லை சார்!


  //குதிரை ஏறி பதாளத்தைப் பார்த்து பயந்த வேதாளம்கூட பக்கத்தில் இருக்கும் "வில்லி' வாக்கத்திலிருந்தும் வரவில்லை.
  //
  நாம முன்னாடியே திட்டமிட்ட செயல் தானே அது! :)

  //ஹா, ஹா, ஹா, அம்பி? இது எப்படி இருக்கூஊஊஊஊஊஊஊஊ?
  //
  அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு! :)

  TRC சார் தவிர மற்ற அன்பர்கள் ஏன் பின்னூட்டம் இட வில்லை? இவவளவு பேசுபவர்கள் இதற்க்கு விளக்கம் குடுக்க வில்லையே ஏன்? :)

  ReplyDelete
 6. @ஆப்பு,

  படமெல்லாம் போட முடியாது. தி.ரா.ச. சார் மட்டும் பின்னூட்டம் கொடுத்திருக்கார்ன்னா அவர் மட்டும் தான் படிச்சிருக்கார்னு அர்த்தம். நான் வேறே இப்போ ஒண்ணும் எழுதலை, கண்ணன் எழுதட்டும்னு முதலில் சொல்லிட்டேன். அப்புறம் யோசித்ததில், கண்ணன் எழுதினா ரொம்ப soft ஆக எழுதிடுவார், நமக்கு வேண்டிய எஃபெக்ட் கிடைக்காதேன்னு நினைச்சேன், எழுதினேன். எல்லாரும் சாயங்காலம் 4 மணிக்குத்தான் போனாங்க. உங்க தொல்லைபேசி ஒரு முறை எனக்கும், ஒரு முறை தி.ரா.ச. சாருக்கும் வந்தப்போ எல்லாரும் உங்களைப் பத்தித் தான் பேசிட்டிருந்தோம். வேணுமானால் பாலராஜன்கீதா எறும்பு மெயில் ஐ.டி. கொடுக்கிறேன். கேட்டுக்குங்க. ரொம்பவே தவிக்கிறீங்க போல் இருக்கே?
  அங்கே தவிக்கிறவர்கள் தவிக்கட்டும், அது வேண்டிய தவிப்பு!

  கல்லிடையிலே போய் வத்தி வச்சேன். நேத்திக்கும் வச்சாச்சு, அப்பாடி நிம்மதியா இருக்கு இப்போத் தான். :)))))))))) இனிமேல் நல்லாத் தூக்கம் வரும்.

  ReplyDelete
 7. யாரும் விளக்கம் எல்லாம் கொடுக்க மாட்டாங்க, வேதா(ள்) யார் பக்கம்னு எனக்கு நல்லாத் தெரியும், இந்தச் சிண்டு முடியற வேலை எல்லாம் வேணாம்.

  ReplyDelete
 8. சார், சார், கும்பகோணம் போற அவசரத்திலே "கேசரி" வர்ணனையை விட்டுட்டீங்களே?

  ReplyDelete
 9. அது சரி, தொண்டர் படைக்கு என்ன ஆச்சு? ஏன் ஒருத்தர் கூட வரலை? தொலைபேசித் தகவல் அறிந்த துணை முதலமைச்சர் கூட ஏன் ஒண்ணும் எழுதலை? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:P

  ReplyDelete
 10. So this is how the periyavaL meeting nadandhadhu? :D :D :D

  ReplyDelete
 11. கேசரி வர்ணனையை விட்டு விட்டென் என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். நனோ மீதி கேசரியை விட்டு விட்டு வந்து விட்டேனே என்று வருத்தப் படுகிறேன்.கேசரியைப் பற்றி ரொம்ப விவரித்தால் அதற்காகவே உயிர்வாழும் சில "பேர்"அழுது விடுவார்கள். அப்பறம் அந்த மூஞ்சியைப் பார்த்தால் யு.ஸ் போயிருக்கும் தங்கமணியும் பயந்துவிடுவார். கல்யாணத்திற்குமின் இது தேவைதானா என்று தான் பாதியில் நிறுத்தினேன்.
  அம்பியின் பெரு மூச்சில் வரும் ஆவியில் மொத்த சாய் பிளாட்டில் பங்களூரில் இருப்பவர்கள் கேஸ் செலவே இல்லாமல் 2 நாட்கள் சமயல் செய்ததாக டுபுக்கு சிஷ்யை எனக்கு செய்தி அனுப்பியுள்ளார்கள்

  ReplyDelete