எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 04, 2007

227. தனிமையிலே இனிமை காண முடியுமா?

இது ஒரு முக்கியமான கேள்வி. சமீபத்திலே முத்தமிழிலே சிநேகிதி ஒருத்தர் எழுதிய கவிதை ஒன்று கீழே தருகிறேன். அதைப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும். அவங்களோட இன்னொரு சிநேகிதர் வீட்டில் பெரிய பையன் அமெரிக்கா சென்று விட, இளைய மகன் தனிக்குடித்தனம் போய்விட்ட நிலையில் அவர்கள் பேத்தி தன் அம்மாவிடம் கேட்ட கேள்வி இது! இதைப் பற்றிய என்னோட கருத்து நாளை:


தாத்தா இல்லை முத்தா கொடுக்க
பாட்டி இல்லை கதைகள் சொல்ல
சித்தி இல்லை இனிய பாட்டுப் பாட
சித்தப்பா இல்லை காரம் ஆட

மாமா இல்லை என்னைத் தூக்க
மாமியும் இல்லை என்னைத் தாங்க
அத்தை மடி மெத்தையும் இல்லை-கூட
விளையாட ஒரு குழந்தையும்இல்லை

அடுத்த வீட்டில் யார்? தெரியவில்லை
ஒருவருக்கொருவர் பார்க்க நேரமும் இல்லை
தனிவீட்டிற்கு ஏன் வந்தோம் அம்மா?
பாட்டி வீட்டிற்கே போலாம் அம்மா?

இது சரியா? தப்பா? அவரவர் மன நிலையையும், சூழ்நிலையையும் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்ற பதில் தான் எல்லாராலும் எடுக்கப் படக் கூடியது. இதையும் தாண்டி சிந்திக்கிறவர்கள் இருக்காங்களான்னு பார்க்கவே இந்தக் கேள்வி.

7 comments:

  1. தாத்தா, பாட்டி சித்தப்பா, சித்தி,மாமி மாமா இல்லைன்ன என்ன டாலர் போருமே என் தங்கம் என்றாளாம் அம்மா

    ReplyDelete
  2. """அவரவர் மன நிலையையும், சூழ்நிலையையும் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்ற பதில் தான் எல்லாராலும் எடுக்கப் படக் கூடியது"""

    அதான்...அதேதான் :))

    ReplyDelete
  3. ம்ம்ம்ம், ரொம்பச் சரியாச் சொல்லி இருக்கீங்க சார், அடுத்தது என்னன்னு பார்ப்போம்.

    சங்கர், இன்றைய தலைமுறையோ, உங்க கண்ணோட்டத்திலே நீங்களும் சரிதான். நாளை பார்ப்போமா?

    ReplyDelete
  4. டாலர் தான் கடவுளடா!
    அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா!

    ReplyDelete
  5. mmmm.....Manushalum thevai..kasum thevai.Sometimes have to compromise between these two.But 20 years back,people values were different.Now they value others by looking into their bank balance.
    varutha padak koodiya vishayam.
    Maarum endra nambikkai vaipom.

    ReplyDelete
  6. வெறும் டாலர் மட்டுமே காரணாமா. என்னால் ஒத்துகொள்ள முடியவில்லை..


    எனக்கு தெரிந்து நிறைய காரணங்கள் இருக்கின்றன. எப்படி சொல்றதுனு தெரியல..

    ஆனா ஒன்னே ஒன்னு சகிப்புத்தன்மை இல்லாதுதான் முக்கியம்னு நினைக்கிறேன்


    ஆனா இப்படியே இன்னும் கொஞ்சம் காலம் போனதுனா

    சித்தி/சித்தப்பா மாமா/அத்தை அப்படினா என்னமா னு அதே குழந்தை அம்மா கிட்ட கேட்கும் நிலை தான் வரும்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  7. அம்பி, டாலர் போதுமா? கொஞ்ச நாள் கழிச்சும் இதே பதில் வருதான்னு பார்க்கணும்.

    எஸ்.கே.எம். உங்களோட நம்பிக்கை தான் எனக்கும் இருக்கு, அதனால் தான் என்னோட முடிவை நான் சொல்லவில்லை.

    மணிப்ரகாஷ், சகிப்புத் தன்மைன்னு எதைச் சொல்றீங்க? அதைக்கொஞ்சம் விளக்குங்க. எந்த இடத்தில், யாருக்கு, எப்போ வேணும்னு சொன்னால் நல்லா இருக்கும். மற்றபடி அனுசரித்தல் என்பது இருவருக்கும் தேவைன்னு சொன்னா ஒத்துக்கலாம்.
    அப்புறம் 4,5 குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு பையனோ, பெண்ணோ வெளிநாடு போவது என்பது அதிகம் பாதிக்காதோன்னு எனக்குத் தோணுது. ஆகவே அபிப்பிராயங்கள் கட்டாயம் மாறுபடும். இப்போ இந்த விஷயத்தில் என் கணவர் take it easy என்பார். எனக்கோ உள்ளூர வேதனை இருந்தாலும் வெளியே காட்டிக்கலை என்பேன். ஆகவே அவரவருக்கு என்று திடமான கருத்து இருக்கும், இல்லையா? அதைத் தான் நாம் நியாய்ப் படுத்துவோம். உங்க வாதத்தை ஒரு பதிவா முடிஞ்சப்போ போடுங்க.

    ReplyDelete