எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 12, 2008

அனுபவம் புதுமை -5- மதுரைக்குப் போகாதேடி

//அபி அப்பா said...
அது "மங்கள விளாஸ்" நாகேஸ்வரன் வடக்குவீதி(டைமண்டு தியேட்டர் எதிர்புரம்)அதுல கல்லாவுல உக்காந்துருக்குர கனேசய்யர்தான் அம்சமா பிள்ளையார் மாதிரியே இருப்பார். மத்தபடி ஒட்டடை எல்லாம் சரிதான்.

21 February, 2007 //

அபி அப்பா said...
நாகேஸ்வரன் சந்னதியிலே தேடினா எப்படி கிடைக்கும். 3 வது வீடு பஞ்சாமய்யர் வீடு! அதுவும் வித்தாச்சு! கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருந்தது அந்த ஹோட்டல்!

மேலும் மங்கள விலாஸ் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் டைமண்ட் தியேட்டர் எதிரே இருக்கிறது!

09 February, 2008

அபி அப்பா, நல்லா மாட்டினீங்க என் கிட்டே, மங்கள விலாஸ் முதலில் நீங்க சொல்ற நாகேஸ்வரன் வடக்கு வீதியிலே எந்த ஓட்டலும் இல்லை. மங்களவிலாஸ் கும்பேஸ்வரர் சன்னதியிலே இருக்கு. இது நீங்க போன வருஷம் சொன்னது! க்ர்ர்ர்ர்ர்ர்., இப்போ என்னடான்னா நாகேஸ்வரன் தெற்கு வீதினு சொல்றீங்க! அதான் பழநி தேன் நிலவு போனது எல்லாம் மறந்துடுச்சு போலிருக்கு! மங்களவிலாஸ் கும்பேஸ்வரர் சன்னதியில் ஒரு வயசான தாத்தா உட்கார்ந்திருக்கார். அவர் மட்டும் தான் எப்போவும் இருக்கார். யாரும் அங்கே போய்ச் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை! :D நான் சொல்றது கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருக்கு, ஒரு பழைய ஓட்டு வீடு, எப்போ இடிஞ்சு விழும்னு பயம்மா இருக்கும். பஞ்சாபகேச ஐயரின் வாரிசுகள் யாராலேயோ நடத்தப் படுவதாய்ச் சொன்னார்கள். டைமண்ட் தியேட்டர் சுற்று வட்டாரத்தில் ஒரு "மீனாட்சி பவன்" என்பதைத் தவிர வேறே ஏதும் இல்லை. மீனாட்சி பவன் போகாதீங்கனு எல்லாருமே சொல்லிட்டாங்க. உங்க பேச்சைக் கேட்டுட்டு அலைஞ்சது என் தப்பு போங்க! கோபிக்குத் தெரிஞ்சிருக்கு, எனக்குத் தெரியலை! :P

புதுகைத் தென்றல், நீங்க சொல்ற லட்சுமி விலாஸ் பஸ் ஸ்டாண்டிலே இருக்கிறது பழைய ஓனர் இல்லை, அவர் இப்போ அம்பத்தூரிலே தான் இருக்கார். வயசு ஆயிடுச்சு, ஷுகரும் அதிகமா இருக்கு, மூன்று பையன்களும் சம்பாதிக்கிறாங்கனு வித்துட்டு சென்னை வந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சு, ஆனால் நாங்க மறுநாள் காலை அங்கே அதே பேரிலே இருக்கும் ஓட்டலில் தான் காலை ஆகாரம் எடுத்துக்கிட்டோம். பரவாயில்லை. நீங்க ஊர்ப்பக்கம் போய் ரொம்ப நாளாச்சுனு நினைக்கிறேன்.

இப்போ பகலா இருந்ததாலே எங்க டிரைவருக்குத் தடுமாற்றம் ஏதும் இல்லை, நாங்களும் வழியிலே கேட்டுக்கிட்டே போனோம். போகும் வழியிலேயே அழகர் கோயில் வருவதால் முதலில் அங்கே போயிட்டுப் பின்னர் மதுரை போக எண்ணம். மதுரை போனதும் அறை எடுத்துக் கொண்டு, சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் பின்னர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு சாயங்காலமாய்த் திருப்பரங்குன்றம், மீனாட்சி கோயில் போக எண்ணம். ஆனால் மீனாட்சி வேறே விதமாய் எண்ணி இருக்கிறாள். அழகர் கோயில் போகும் வழியின் அழகைச் சொல்லி முடியாது. படங்கள் தேடறேன். கிடைக்குதானு பார்க்கலாம்.

17 comments:

  1. "அ" என்பது "ஆ" என்று வந்திருக்கு, திருத்தப் போனால் ப்ளாகருக்குக் கோவம் வருது, நாளைக்குத் திருத்தறேன், திவா, அதுக்குள்ளே மெயில் கொடுக்காதீங்க! :))))))))))

    ReplyDelete
  2. ஆகா!, நம்ம ஊர் புராணமா...சரி, சரி....

    ReplyDelete
  3. ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்துட்டீங்க..அழகர் கோவில் போற வழில புதுசா ஒரு கோவில் வந்துருக்காமே பாத்தீங்களா....பெரிய அளவில் கோவில் முகப்பில் சிலையெல்லாம் வச்சுருக்கதாச் சொன்னாங்க...

    ReplyDelete
  4. @மெளலி, புராணத்தைக் கேட்டால் அப்புறம் கோவிக்கப் போறீங்க!

    @பாசமலர், நான் எழுதப் போறது உங்களுக்கே அதிர்ச்சியைக் கொடுக்கும் போங்க, நீங்க சொல்ற கோயிலைப் பார்த்தேன், ஆனால் அது புதுசுனு புரிஞ்சுக்கலை! :(

    ReplyDelete
  5. @திவா, திருத்திட்டேன்! :))))))

    ReplyDelete
  6. \\ உங்க பேச்சைக் கேட்டுட்டு அலைஞ்சது என் தப்பு போங்க! கோபிக்குத் தெரிஞ்சிருக்கு, எனக்குத் தெரியலை! :P\\

    நான் எல்லாம் எப்படி அலைஞ்சிருக்கேன் தெரியுமா தலைவி..ம்ம்ம்ம்...நீங்க எவ்வளவே பராவியில்லை..;)

    ReplyDelete
  7. //@திவா, திருத்திட்டேன்! :))))))//
    அதானே பாத்தேன். முதல் பின்னூட்டத்தை பாத்திட்டு கண்ணுல விளக்கெண்ணை விட்டுகிட்டு தேடினேன். ஒண்ணும் அகப்படலை!

    அதென்ன எப்ப பாத்தாலும் படங்கள் தேடிக்கிட்டே இருக்கீங்க? ஆசாமி முழுக்க பார்மெட் பண்ணிட்டாரா? இருக்கற படங்கள் மொத்தமா ஒரு டிவிடி கொள்ளும்னா எழுதி வச்சுடுங்களேன்.

    ReplyDelete
  8. nice

    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  9. வந்துட்டேன்! வந்துட்டேன்!! படிச்சுட்டேன் படிச்சுட்டேன்!! கொஞ்சம் வேலை பார்த்துட்டு பின்ன வந்து பதில் சொல்றேன்!!!இப்போதைக்கு ஜூட்!!!

    ReplyDelete
  10. //அதென்ன எப்ப பாத்தாலும் படங்கள் தேடிக்கிட்டே இருக்கீங்க? //

    திவா, இப்படியெல்லாம் தலை (வலி/வி) கேள்வி கேட்க கூடாதுன்னு உங்களுக்கு யாரும் சொல்லையா?. :-). படங்கள் மட்டும் தனி போஸ்டா போடுவாங்க. :)

    இல்லென்னா கூகிள் இமெஜஸ் லிங்க் குடுப்பாங்க...

    மேலே சொன்னதுல எதை செய்யலாமுன்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க...அப்படித்தானே கீதாம்மா? :)

    ReplyDelete
  11. எவ்வளவே பராவியில்லை..;)

    @கோபி, அபி அப்பா பத்தி எழுதும்போதே இவ்வளவு தப்பு வருதே உங்களுக்கு, அவர் என்னடான்ன ஜூட் விட்டுட்டுப் போயிட்டார், இதுக்காக நான் 2 நாள் பழைய பதிவெல்லாம் தேடிக் கண்டு பிடிச்சு எடுத்துப் போட்டிருக்கேன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரட்டும் ஒரு கை இல்லை, 2,3 கை பார்த்துடலாம்! :P

    ReplyDelete
  12. ஹிஹிஹி, திவா, நீங்க பார்க்கிறதுக்குள்ளே திருத்தணும்னு நான் பட்ட கஷ்டம் எனக்குத் தானே தெரியும், நீங்க வரும்போதே விளக்கெண்ணெயும், கையுமா வருவீங்கனு தெரியுமே! ம்ம்ம்ம்ம்,, காலம் எல்லாம் அஜித் லெட்டர், நான் மிரட்டிட்டு இருந்தது போய் இப்போ நீங்க என்னை மிரட்ட ஆரம்பிச்சிருக்கீங்க, சிஷ்யகேடிகளுக்குத் தெரியவேணாம்! :P

    ReplyDelete
  13. @திவா,
    @மெளலி, படங்கள் எல்லாம் இருக்கு, பார்மட் பண்ணினதிலே வேறே எந்த ஃபைலில் இருக்குனு நானும் பார்க்கறேன், பார்க்கறேன் கண்ணிலே படமாட்டேங்குது! உங்களுக்குக் கிண்டலா இருக்கு இல்லை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @அபி அப்பா, அதெல்லாம் தப்பிச்சுக்க முடியாது, என் கேள்விக்கு நீங்க பதில் சொல்றவரை தினமும் பதிவிலே இதைப் போட்டுட்டே இருப்பேன், ஆமாம், சொல்லிட்டேன்! :P

    ReplyDelete
  14. ஓஹோ தலைவி கோயில் பயணமா? நடக்கட்டும் நடக்கட்டும். நம்பள ஸ்டாக் மார்க்கெட் புரட்டி எடுக்குது போங்க.

    ReplyDelete
  15. // சிஷ்யகேடிகளுக்குத் தெரியவேணாம்!//
    சரி சரி. அப்புறம்? கதையை சொல்லுங்க!

    // படங்கள் எல்லாம் இருக்கு, பார்மட் பண்ணினதிலே வேறே எந்த ஃபைலில் இருக்குனு நானும் பார்க்கறேன், பார்க்கறேன்//

    சரியா தலைப்பு போட்டு வச்சா பிரச்சினை இருக்காதே.
    எக்ஸ்பிதானே?
    start> find files> *.jpeg (அல்லது பிக்சர் பைல்ஸ்) poottu paathutungkaLEn.

    ReplyDelete
  16. அந்த பிரமாண்டமான சக்தி சிலை இருக்கும் கோயிலைப் பார்த்ததை ஒரு ரெண்டு வருசம் முன்பு பதிவாப் போட்டுருந்தேன். அப்பவும் ப்ளொக்கர் படம் போடவிடாமச் சொதப்பிருச்சு(-:

    ReplyDelete
  17. லட்சுமி விலாஸ் ஹோட்டல் மட்டும் இல்ல.. வேறு நல்ல ஹோட்டல்களும் இருக்கு.

    நான் ஒவ்வொரு வருடமும் இந்தியா வரும்போது புதுகை விஸிட் உண்டு.

    இதோ போனமாதம் 6 - 10 வரை புதுகையில் தான் இருந்தேன்.

    ஹோட்டல்கள் போவதும் வழக்கம்.

    எனக்கு விமானத்தில ஆகிற பிரச்சனைப் போல உங்களுக்கு எங்க ஊர்ல ஆயிருக்கு.....:)

    ReplyDelete