hariki
---------- Forwarded message ----------
அன்பர்களே,
கம்ப ராமாயண உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் தொடங்கப்பட்டு சில நாள் தொடராமல் நின்று இப்போது மீண்டும் தொடர்கின்றது.
பாற்கடலை நக்கிக் குடிக்க முயன்ற பூனையைப்போல் இந்தக் காரியத்தைத் தொடங்கியிருக்கிறேன் என்று கம்பனே சொல்லிக் கொள்ளும்போது, அற்பத் திறனும் அதிலும் அற்பமான அறிவும் படைத்த நானும் இந்தக் கடலுக்குள் என்னை அமிழ்த்திக் கொள்கிறேன், ஆசைபற்றி அறையலுற்றேன். காரியம் பெரிது. திறன் சிறிது.
எண்ணிக்கையில் 10,500 செய்யுள் உள்ள கம்ப ராமாயணம் முழுமையையும் உரை எழுதி மொழி பெயர்க்கவும் செய்யவேண்டும் என்ற ஆசையும் அதிகப்பாடல்களையும் சேர்த்து 12,500 பாடல்களையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற பேராசையும் உண்டு. இந்தப் பணியில் எனக்குக் கைகொடுக்க என்னோடு இணைகிறார், மதுரபாரதி.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சனி, ஞாயிறுதோறும் ஒன்றுகூடி, ஒன்றாக வாசித்து நாங்கள் இருவரும் கம்ப ராமாயணம் முழுவதையும் ஓதி முடித்ததைப் போல, இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் இந்தப் பணியும் நிறைவடைய பெரியவர்களின் ஆசியையும், மற்றவர்களின் வாழ்த்தையும், முருகன் உறுதுணையையும் நாடுகிறேன்.
கம்ப ராமாயண உரை, மொழிபெயர்ப்பு, இதர தொடர்புள்ள விஷயங்களில் என்ன ஐயங்கள் எழுகின்றனவோ, என்னென்ன ஆலோசனைகள் தோன்றுகின்றனவோ அவற்றையெல்லாம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
நன்றி கீதா.
ReplyDeleteமுன்பு மரத்தடி.காமில் வந்த நிகழ்வா இது.
கலக்குங்க:)
ReplyDeleteநல்ல தகவல். ஹரி-அமரபாரதி ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள். கம்பனின் கவி மழையில் நனைவதற்கு காத்திருக்கிறோம்.
ReplyDelete